படலம் 43: தேவீ ஸ்தாபன விதி...
44 வது படலத்தில் தேவீஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் தேவியின் ஸ்தாபனம் லக்ஷண முறைப்படி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு பிம்பத்தை சிலை முதலான திரவ்யங்களால் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு கிராமம் முதலிய இடங்களிலோ சிவாலயத்திலோ, தேவீ ஸ்தாபனத்திற்கு உபயோகமான ஸ்தானங்கள் கூறப்படுகின்றன. பிறகு தேவியின் ஆலய நிர்மாண முறை கூறப்படுகிறது. பிறகு உருண்டை வடிவமாகவோ, நீண்ட வட்ட வடிவமாகவோ, சபையை போன்றோ, கோபுரத்துடன் போன்றதாகவோ ஆலயம் நிர்மாணிக்கவும். பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹ சுவர் செய்யும் முறை, இரண்டு தளம் முதலான வாசல், இடைவெளி அமைப்பு உள்ள சுவர்களை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் திக் தேவதை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தேவியின் வாஹனம் சிம்மத்தையோ விருஷபத்தையோ பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயபிரதிஷ்டையில் ஆலய சுவற்றின் தேவர்களின் எல்லா பிம்பங்களையும் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தேவி ஆலயத்தில் பிரகாரங்கள், பரிவார மண்டபங்கள் செய்யவும் என கூறி பரிவார விஷயத்தில் பலமுறை கூறப்படுகின்றது. பிறகு தேவியின் நிர்மால்ய தாரி என்கிற அசநீ தேவியை குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபீடத்தில் விசேஷமாக எல்லா அப்சர ஸ்திரீகளும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு தேவியின் லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு தேவியின் அளவு லிங்கத்தை அனுசரித்து அமைக்கவும் என கூறி அதில் அளவு முறை கூறப்படுகிறது. பிறகு தேவீ ஸ்வதந்திரமாக இருந்தால் தன்னுடைய ஆலய அளவினாலோ அல்லது அங்குல அளவினாலோ செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மார்த்த பூஜையில் வேறு அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அமைப்பை கூறும் விஷயத்தில் பல முறைகள் வர்ணிக்கப்படுகின்றன.
இங்கு ஒரு முகம், நான்கு கை, மூன்று கண், ஒரு முகம், இரண்டு கை, இரண்டு கண், ஒரு முகம், ஆறு கை, ஐந்து முகம், பத்து கை என்று நான்கு விதங்களாக ஆயுதத்துடன் விளக்கப்படுகின்றன. பிறகு தேவி ஈஸ்வரனுடன் சேர்ந்ததாகவோ அல்லது தனியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவி ஸ்வாமிக்கு கூறப்பட்ட அஸ்திரம் ஆசனம் இவைகளை உடையதாகவோ தேவனை ஆலிங்கனத்தில் ஈடுபட்டுள்ளதாகவோ ஸ்வாமியின் துடையில் அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவியை அமைக்கும் விஷயத்தில் சூத்திர பாதமுறை கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் விஷயத்தில் உயர அளவு முறை கூறப்படுகிறது. தேவிக்கு மனோன்மனீ, கவுரி இரண்டு பெயர் கூறி அவர்கள் விஷயத்தில் லக்ஷண பேதம் இல்லை என்கிறார். சதாசிவன் விஷயத்தில் தேவி பிம்பம் அமைக்கப்பட்டால் அது மனோன்மணி என்று தேவியின் பெயர் ஆகும். நடராஜமூர்த்தி ஆகிய மூர்த்தி விஷயத்தில் கவுரி என்று பெயர் கூறப்படுகிறது. தேவியின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் மனோன்மணி, கவுரி விஷயத்தில் மூலமந்திரம் கூறப்படுகிறது. முன்பு கூறியபடி பிரதிஷ்டா காலத்தை அறிந்து பிம்பத்தை மண்டபத்தில் உள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபித்து செய்ய வேண்டிய ரத்னநியாச முறை, நயனோன்மீலம் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய பூஜை, சில்பி பூஜையும் யஜமானனால் செய்யப்பட்டு ஆசார்யன் மண் முதலியவைகளால் பிம்பசுத்தி செய்து, கிராமப் பிரதட்சிணம் செய்து பிம்பத்தை ஜல கரைக்கு எடுத்துச் சென்று ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை குறிப்பிடப்படுகிறது. ஜலாதி வாச முறையில் பிம்பத்தை சுற்றிலும் வாமா முதலான சிக்திகளுடன் கூடிய கும்பங்களை ஸ்தாபிக்கவும் பிறகு சயனாதி வாசத்திற்கு மண்டப முறை சொல்லப்படுகிறது. பின்பு சில்பியைதிருப்தி செய்வித்த பிறகு பிராம்மண போஜனம், பசுஞ்சாணத்தால் மெழுகிடுதல், புண்யாஹ பிரோசிணம் வாஸ்த்து ஹோமம் செய்து மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலத்தில் சயனம் அமைக்கவும் என்று பூஜை முறை கூறப்படுகிறது.
பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து, முன்பு போல் ஸ்நபனாபிஷேகம் ரக்ஷõபந்தனம் முடித்து தேவியை, கிழக்கில் தலைவைத்ததாக சயனஸ்தாபனம் செய்யவும் என்று சயன அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தி சந்தனம், இவைகளால் பூஜிக்கவும், பிறகு தேவியின் சிரோபாகத்தில் பிரதான கடத்தை பிம்பலக்ஷண முறைப்படி பூஜிக்கவும். சந்தனாதிகளால் பூஜிக்கவும். அந்த கும்பத்தை சுற்றி எட்டு கடங்களை வாமாதி சக்திகளால் பூஜிக்கப்பட்டதாக ஸ்தாபித்து கந்தனாதிகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்படுகிறது. அங்கு தத்வதத்வேஸ்வரி, மூர்த்தி, மூர்த்தீஸ்வரி, நியாஸம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் ஹோமகர்மாவை ஆரம்பிக்கவும் என கூறி ஹோமமுறை, திரவ்ய நிரூபணம் செய்யும் விதமாகவும் மந்திரத்துடன் கூடியதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஹோம காலத்தில் வேதாத்யயனம் நான்கு திக்குகளிலும், ஆக்னேயாதி கோணங்களில் மந்திர ஜபங்கள் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முன்பு போல் கும்பத்தையும் பூஜித்து தேவியை எடுத்து ஆலயம் நுழைந்து ரத்னம் முதலியவைகளால் நிரம்பிய பிரம்மசிலையில் மூலமந்திரத்தை கூறி ஸ்தாபிக்கவும் பிறகு நல்ல முகூர்த்த லக்னத்தில் மந்திரந் நியாசம் செய்யவும். தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும். முடிவில் ஸ்நபனம், அதிகமாக நைவேத்யம் உத்ஸவம் முதலியவைகளை செய்யவும். பலவித ஸ்தோத்திரங்களால் நமஸ்கரித்து சந்திரனும் சூர்யனும் பூமியில் உள்ளவரை உங்களால், ஹே தேவி இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை படிக்கவும் என்று கூறப்படுகிறது. ஆசார்யன் முதலானவர்களுக்கு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள தட்சிணையை யஜமானன் கொடுக்க வேண்டும், நான்காவது கர்மாவை அறிந்த தேசிகன் கல்யாண கர்மாவை செய்யவும் என்று பிரதிஷ்டாவிதியில் பூஜை வரிசை கூறப்படுகிறது. இங்கு சலபிம்ப பக்ஷத்தில் அந்த பிம்பத்தை ஸ்நான வேதிகையிலேயே வைக்க அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்வதந்திரமானதும் ஸ்வாமியுடன் உள்ளதாகவும் இருக்கும் தேவியின் விஷயத்தில் கல்யாண கர்மா செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு தேவிபிரதிஷ்டையின் முறை, பயன் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு தேவியின் நித்யார்ச்சனை முதலியவைகள் கூறப்படுகிறது.
நித்யானுஷ்டானம் முடித்த ஆசார்யனுக்கு துவாரம், துவார பாலகர்பூஜை முன்னதாக தேவியின் ஆலயம் நுழையும் வரை விதிகள் கூறப்படுகிறது. பிறகு துவார பாலகர், துவார சக்தி இவைகளின் லக்ஷணம் இவைகளை குறிப்பிட்டு ஸ்வாமிக்கு கூறப்பட்ட துவார பாலகர்களையோ பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கதவின் வலது இடது, பாகத்தில் விமலன், சுபாகு இவர்களை பூஜித்து கர்பக்கிரஹ பிரவேசம் கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி முறை வர்ணிக்கப்படுகிறது. ஐந்து முகத்தை உடைய தேவியின் பூஜா விஷயத்தில் அஷ்டத் திரிம்சத்கலான் நியாம், பிரணவத்துடன் கூடியதாக செய்யவும். பிறகு ஒரு முகத்தை உடைய அம்பாளின் பூஜை விஷயத்தில் சசிநீ முதலான 31 கலான் நியாசத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அந்தர்யாக முறையும் கூறப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, திரவ்யசுத்தி, மந்திரசுத்தி முறையும் கூறப்படுகின்றன. பிறகு பிம்பசுத்தி முறை கூறப்படுகின்றன. பிறகு உலோக பிம்பம் சுதாபிம்பம், சித்ர பிம்ப விஷயத்தில் விசேஷ முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசன மூர்த்தியையும் ஆவாஹனம் முதலிய பத்து சமஸ்காரம் செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு தூப தீப நைவேத்யம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. ஆவரண அர்ச்சன முறையும் கூறப்படுகிறது. கர்ப ஆவரணம் கணங்களின் பூஜை லோகபால பூஜை, அஸ்திரங்கள் முதலியன ஆவரணங்கள் ஆகும் என்று பஞ்சாவரண பூஜை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பாவரணம் தென்கிழக்கு மூலையில் ஹ்ருதயத்தையும் ஈசான திசையில் சிரசையும் நிருதி திக்கில் சிகையையும், வாயு திக்கில் கவசத்தையும் மற்ற நான்கு திக்கில் அஸ்திரத்தையும் பூஜிக்கவும். அல்லது வாமாதி அஷ்ட சக்திகளை கிழக்கு முதலான திக்குகளில் பூஜிக்கவும்.
பிறகு மறுபடியும் மந்திர படனங்கள் நைவேத்யம் பலி ஹோமம் செய்யவும் என்று கிரியையின் வரிசை குறிப்பிடப் படுகின்றது. பிறகு நித்யோத்ஸவம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. நித்யோத் ஸவத்திற்காக பிம்பம் அமைக்கும் முறை லக்ஷணத்துடன் கூடியதாக கூறப்படுகிறது. தேவிக்கு ஒரு காலமோ இரண்டு காலமோ, மூன்று நான்கு, ஏழு, எட்டு காலமோ அல்லது எப்பொழுதுமோ பூஜை செய்யவும் என்று கூறப்படுகிறது. பிறகு வர்÷ஷாத்ஸவம் ஸ்னபநம் தமனாரோஹணம், பவித்ரோத்ஸவம், கிருத்திகா தீபம், ஸம்வத்ஸரோத்ஸவம் வஸந்தோத்ஸவம், டோலோத்ஸவம், மாஸோத்ஸவம், நவநைவேத்யம் ஆடிபூரகர்மா, முதலிய விதிகள், முறைப்படி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் சிம்மமோ, விருஷபமோ வரையவும் பூரம் என்கிற பூர்வ பல்குனி நட்சத்திரத்தில் தீர்த்த கர்மா செய்யவும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் தேவிக்கு உத்ஸவம் செய்யவும். தேவியின் உத்ஸவ விஷயத்தில், சக்கர அஸ்திர தேவி அஸ்திரம் இவைகளோ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி உத்ஸவ பிம்பம் அமைக்கவும். ரக்ஷõ பந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்திற்கு வெளியில் யாத்திரை செய்யக்கூடாது என்று என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. ஜீர்ணோத்தாரணம், பிராயச்சித்த விதி இவைகள் முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு தேவியின் பிரதிஷ்டா பாலாலயத்துடன் கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. முடிவில் தேவியால் அனுக்கிரகிக்கப்பட்ட அரசனுக்கு சர்வ வல்லமை தன்மை ஏற்படும் ஆகையால் தேவியின் முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்யவும். இவ்வாறு 44வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. தேவியின் பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையை உடையதாக கூறுகிறேன். கற்சிலை முதலான பொருள்களை சேகரித்து அவைகளால் பிம்ப உருவத்தை அமைக்க வேண்டும்.
2. கிராமம் முதலிய இடங்களிலும் சிவாலயத்திலும் எட்டுத் திசைகளிலும் அதனிடைவெளியிலும் அழகான விருப்பமுள்ள இடத்திலும் கவுரி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
3. மூன்று முழ அளவு முதல் ஐம்பது முழ அளவு வரை அகல நீள பரப்பளவு உடையதாகவும், உயர அளவுகளை முன்புள்ள அளவுப்படியுமாகவுள்ளதாகி தேவி ஆலயத்தை அமைக்க வேண்டும்.
4. குறுக்கு வட்ட வடிவமாகவோ, உகந்ததான அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். வட்ட வடிவமாக இருப்பின் உயரத்தை நான்கு பங்காக்க வேண்டும்.
5. கன அளவு, ஓர் அம்ச அதிகரிப்பாலும் ஆறுபாக அளவுகளால் கர்பக்ருஹம் அமைக்கவும். ஓர் அம்ச அளவு சுவர் என்பதாகவும், உயரத்தை மூன்று பாகமாகவோ பிரிக்க வேண்டும்.
6. இரண்டு பாக அளவினால் கர்பக்ருஹமும், ஓர் பாக அளவினால் சுவற்றையும் ஏற்படுத்தவும். நான்காக பிரிக்கப்பட்ட அகல அளவில் ஆறுபாக அளவிலோ கன அளவை அமைக்க வேண்டும்.
7. கர்பக்ருஹம் எட்டு பதங்களானதாக கூறப்பட்டு வேறொரு முறையும் கூறப்படுகிறது. பரப்பளவில் ஐந்தாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஆறு பங்குகளாலோ
8. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து பங்குகளாலோ கர்பக்ருஹம் சுற்றிலும் மீதமுள்ள ஓர் பாக அளவினால் சுவரும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
9. ஆறாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஓர் பாக முதலான அதிகரிப்பால் இரண்டு மடங்கு அளவினால் கர்பக்ருஹம், சுவற்றின் நீளம் முன்புள்ளபடி அமைத்துக் கொள்ள வேண்டும்.
10. பரப்பளவில் இவ்வாறாக இருபது பாக அளவாக கூறப்பட்டதில் அதனதன் இரண்டு மடங்கு அளவு வரை உயர அகல அளவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
11. இரண்டு தளமுதலான தளங்களையுடைய கோபுர வகை தளத்தில் பல எண்ணிக்கையால் இடைவெளி அழகையும், சுவரையும், கால்பாகம், அரை பாகம், முக்கால் பாக அளவுச் சுற்றாகவும்
12. ஒன்றரை பாகம், ஒன்றே முக்கால், இரண்டு பாக அளவினாலே செய்து கொள்ளவும். இடைவெளிச் சுவரை விட்டு வெளிப்பாகத்தினால் கனமாகவோ எல்லா பாகத்தையும் அமைக்க வேண்டும்.
13. அதிஷ்டானம் முதலான ஆறுவர்கங்களை முன்புள்ள அளவுப்படி செய்யவும். பிரகார மண்டபம் போல் ஸபையைப் போல் கோபுர அமைப்புடன் கூடியதுமாகவோ அமைக்க வேண்டும்.
14. கோபுரத்தின் மேலுள்ள ஸ்தூபியின் எண்ணிக்கை ஒன்று முதல் பதினொன்று வரையிலும் ஆகும். திக்தேவதைகளின் விஷயங்கள் தேவியின் ரூபமாற்றங்களை உள்ளதாக கூறப்படுகின்றன.
15. தேவி விமானத்தில் சிவாலயத்தின் தேவதைகளையோ வினாயகர், முருகனையோ தென் கிழக்கு முதலான திசைகளினால் ஸிம்மம் அல்லது வ்ருஷபத்தை வாஹநமாகவோ
16. கோணங்களில் கிளியையோ அமைத்து மற்ற உருவங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்கவும். தேவியானவள் கிழக்கு, மேற்கு, தெற்கு முக அமைப்புள்ளதாகவோ
17. வடக்கு முகமாகவோ அமைக்கலாம். எல்லாதிசை முக அமைப்புகளும் எல்லா ஸம்பத்துக்களையும் கொடுக்க வல்லதாகும். கர்பக்ருஹ அமைப்பின்படி செய்யப்பட்டால் அதன் அளவு விசேஷமாக கூறப்படுகிறது.
18. பிம்ப உருவ இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆயாமம் என்ற கணக்களவை எடுத்து கொள்ளவும். ஆலயத்தில் திக்தேவதைகளை பெண் உருவமுள்ளதாக அமைக்க வேண்டும்.
19. த்வரதசாந்த தளம் என்ற அமைப்புள்ள இடத்தில் ருத்ரன், முருகன், வினாயகர் ஆகிய உருவங்களையும் விமான மூலைகளில் விருஷபத்தையே சிம்மத்தையோ அமைக்க வேண்டும்.
20. மற்ற எல்லா விதமான கர்பக்ருஹ சுவற்றின் தேவதைகளுடைய பிரதிஷ்டை பரமேஸ்வரனின் ஆலயப்ரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளது.
21. இறைவனின் திருவிளையாடல்களை குறிக்கும் பிரதிஷ்டை கூறப்படவில்லை. திருச்சுற்றுப் பகுதிகள் பரிவார தேவதைகளையும், அவைகளின் மண்டபங்களையும் அமைக்க வேண்டும்.
22. வாமை முதலான சக்திகளையோ பரிவாரத்தில் இருக்கும்படி அமைக்கவும். லக்ஷ்மீ, துர்க்கா, பூமாதேவி. சசினீ, காயத்ரி, உஷா இவர்களையும் அவ்வாறே
23. ஸந்த்யை, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளையோ பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். ப்ரக்ஞை, மேதா, ஸ்ருதி. ஸ்வாஹா, வஷட் இவர்களும்
24. த்ருதி, மதி ஆகிய தேவிகள் கிழக்கு முதலான திசைகளில் வரிசைக்கிரமமாக கூறப்பட்டுள்ளன அல்லது ஜ்யேஷ்டா தேவியுடன் கூடிய ஸப்த மாத்ருக்களையும் பிரதிஷ்டை செய்யலாமென கூறப்பட்டுள்ளது.
25. தேஹளீ, பேஷணீ, சுல்லி, கண்டநா, உலூகலீ, முஸலீ, முத்கரீ, வாத்மாநீ, ஆகிய எட்டு தேவதைகளையுமோ பரிவார தேவதைகளாகவும் செய்யலாம்.
26. மேற்கூறிய தேவதைகள் நான்கு கைகளையுடையவர்களாகவும், அவைகளில் விருப்பப்பட்ட ஆயுதங்களையோ, தாமரையை தரித்தவர்களாகவோ அமைக்கவும். வ்ருஷபம், வினாயகர், முருகன் மஹாசாஸ்தா குபேரன்.
27. வீரன், பைரவன், சூர்யன் இவர்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென் மேற்கு அல்லது தென் கிழக்கிலே வினாயகரை ஸ்தாபிக்கவும்.
28. கிழக்கு முதலான திசைகளில் இந்திரன் முதலான திக்பாலர்களையோ வஜ்ரம் முதலான தசாயுதங்களையோ ப்ரதிஷ்டை செய்து வடகிழக்கு திசையில் அசநீ என்ற நிர்மால்யத்தை தரிக்கும் சண்டிகேஸ்வரியை ஸ்தாபிக்க வேண்டும்.
29. முன்பு கூறப்பட்ட பரிவார தேவதைகளையோ ஸ்தாபிக்கவும். மஹாபலிபீடத்தில் விசேஷமாக எல்லா அப்ஸர தேவதைகளும் இருக்கிறார்கள்.
30. சிவலிங்க அளவை அனுசரித்து தேவியின் அளவு மூன்று அளவாக கூறப்பட்டுள்ளது. பூஜைக்குத் தக்கதான அளவையோ, இரண்டு பாகமோ, மூன்று பாகமாகவோ
31. நான்கு பாகம், ஐந்து பங்கு அளவாகவோ, பூஜையின் அம்ச பாகத்திலிருந்து மேற்பட்ட முக்கால் பாகம், பாதி பாகம், அதற்கு மேற்பட்ட எட்டில் ஓர் பங்காகவோ ஒன்பதில் ஓர் பங்காகவோ அமைக்க வேண்டும்.
32. பூஜையின் அம்சருத்ர பாகத்திற்கு மேல் நூற்று இருபத்தி நான்கு பங்காகவோ பிரித்து, புருவம், கண், வாய், காது பாகம் வரையிலும் தோள் பாகம், கையின்மேல் பாக இடைவெளி, மார்பகம் வரையிலும்,
33. நிஷ்களம் என்ற அமைப்புள்ள தேவியின் உருவ அமைப்பை லிங்கத்தின் அளவை அனுசரித்து செய்யவும். சிவமூர்த்த பிம்பத்தை அனுசரித்து தேவிமானமும் கூறப்பட்டுள்ளது.
34. தேவியானவள் தானே பிரதானமாக இருக்குமாயின் அதன் கோயில் அளவு முறைப்படி செய்யவும். அந்த அளவும் முன்னமே கூறப்பட்டுள்ளது. மானாங்குல அளவினாலோ
35. செய்து, வீட்டில் ஆன்மார்த்த பூஜைக்கு மாத்ராங்குல அளவினாலோ, அமைக்கவும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அளவுப்படி தேவியை அமைக்க வேண்டும்.
36. நான்குகை, மூன்று கண், மிகவும் மலர்ந்த ஓர் முகமும், வெண்பட்டையணிந்தவளாயும், கரண்ட மென்கிற அமைப்புடைய கிரீடத்தையுடையவளாகவும்
37. வரதம், அபயம், பாசம், அங்குசமிவைகளை கையிலுடையவளாகவும் அமைக்கவும். இரண்டுகை, இரண்டுகண் இவைகளையுடனுமோ தொங்குகின்ற கையுடனும்
38. தாமரையைக் கையிலுடையவளாயும் மிகவும் அமைதியாயுடையவளாயும் பொன்னிறமாய் உடையவளாயும் உள்ளதாகவோ தேவி கிளியையும் ஆம்பல் புஷ்பத்தை உடையவளாயுமோ சூலம், பாசமிவைகளை உடையவளாயுமோ
39. விரும்பிய ஆயுதத்தை உடையவளாகவோ, ஆறு கையுடன் உடையவள் சங்கம், சக்ரம் இவைகளையுடையவளாகவோ அமைக்கலாம். ஐந்து முகமாயும் தித்திப்பல்லால் பயங்கரமான முகமும் பத்து கைகள் உடையவளாயும்
40. ஸ்வாமிக்கு கூறப்பட்ட ஆயுதங்களையும் ஆஸனத்தையும் உடையவளாகவோ ஸ்வாமியை ஆலிங்கனம் செய்வளாகவோ, ஸ்வாமியின் மடியில் அமர்ந்தவளாகவோ, நின்ற திருக்கோலம், அமர்ந்த கோலமுடையவளாகவோ
41. தொங்குகிற இடதுகால் அல்லது வலதுகால் இவைகளை உடையவளாகவோ, ஸ்வாமியுடன் கூடியவளாகவோ, தனித்திருப்பவளாகவோ கூறப்பட்டுள்ளன.
42. கருப்பு, வெள்ளை, சிகப்பு முதலிய நிறமுடையதாகவோ, ஸாதகனின் விருப்பமுள்ள வடிவமுடையதாகவோ நிமிர்ந்த தோற்றமுடையவளாகவோ த்விபங்கம் என்ற அமைப்புடன் கூடியதாகவோ
43. மூக்கின் நுனியில் சூத்ரத்தை தொங்கவிட்டு வலதுகால் நின்ற கோலமான இடத்தில் நுதிகால் நடுவில் உள்ள நூல்கோடு சிவசூத்ரமொன்று கூறப்பட்டுள்ளது.
44. அந்த சூத்ரத்திலிருந்து இடது பாகத்திலுள்ள மார்பக மத்ய தேசம் வரை மூன்றங்குலமும், அதே சூத்ரம் தொப்பூழ் நடுபாகம் வரை உள்ளவையாக இருப்பது ஓரங்குலமெனப்படும்.
45. சிவசூத்திரம், ஸ்தன மத்ய சூத்ரமிரண்டின் இடைவெளி நான்கு மாத்ரராங்குலமாகும். சிவசூத்ரம், முழந்தாள் சூத்ரமிரண்டின் இடைவெளி மூன்றங்குலம் எனப்படும்.
46. பாதங்களிரண்டின் கட்டை விரலுடைய இடைவெளி ஏழரை அங்குலமும் ஆகும். அந்த ஏழங்குலத்தின் மூன்று பாகமோ, ஓர் பாகமோ, குதிகால்களின் இடைவெளியாகும்.
47. கடக ஹஸ்திரத்தின் நுனிஉயரம் மார்பக நுனிக்கு ஸமமாகும். தொப்பூழ் பாகத்திலிருந்து மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி ஏழரை அங்குல அளவாகும்.
48. பக்கவாட்டுக்கை உள்ளடங்கிய நடுஇரண்டு கையின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். தொங்கும் கையின் நுனியிலிருந்து துடையின் நுனி ஆறங்குல அளவாகும்.
49. முழந்தாள் மூட்டிலிருந்து மணிக்கட்டு பாகம் வரையிலுள்ள இடைவெளி நான்கு அங்குலமாகும். பக்கவாட்டுக் கை, மத்யமக்கைகளின் இடைவெளி ஆறங்குலமாகவும் இருக்கலாம்.
50. கூறப்பட்டுள்ள சூத்ர கணக்கு எடுத்துக் காட்டுக்காகவேயாம். சூத்திரத்தில் நியமமில்லை. தன்னிச்சையான ஆலய தேவியின் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.
51. மூலஸ்தான தேவியின் அளவு முறை முன்னமே கூறப்பட்டுள்ளது. உத்ஸவ மூர்த்தி தேவி பிம்பங்களின் அளவு மூலஸ்தான பிம்பத்தின் அளவேயாம்.
52. மூலாலய லிங்க அளவுப்படியே மூலஸ்தான தேவியின் அளவுப்படியோ அமைக்கவும். சரீர உருப்புக்களின் அளவு முழந்தாள், துடைபாக அளவு ஸமமாகவோ செய்யவும்.
53. இவ்வாறு தேவியை அமைத்து, அதன் பெயர் இருவிதமாக அறியவும். மனோன்மணீ என்றும் கவுரி என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் உருவ அமைப்பில் மாற்றமில்லை.
54. ஸதாசிவ மூர்த்தமான லிங்கம் எங்கு நிர்மாணிக்கப்பட்டு தேவி அமைக்கப்படுகிறதோ அப்பொழுது மனோன்மணா என்ற பெயரை தேவீ அடைகின்றான்.
55. நிருத்த (நடராஜ) மூர்த்தி முதலான உத்ஸவ மூர்த்தி பேதங்களில் கவுரி முதலான பெயரை அடைகிறாள். நல்ல உருவ அமைப்புடன் கூடியதாக தேவியை அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
56. ஸாந்தமென்கிற ஹ, ரேபம் ர, மஹாமாயா ஈ, பிந்து நாதம் இரைகளுடன் சேர்ந்ததான ஹ்ரீம் என்றும் மனோன்மணீயின் பீஜமந்திரம் ஹ என்ற எழுத்து இருக்குமிடத்தில் க வின் முடிவான சேர்ந்ததாகவும்
57. க்ரீம் என்பதானது கவுரி மந்திரமாகும். மேற்கூறியவைகள் விஸர்கத்துடன் கூடியதாகவும், என்றிருக்கலாம். வ என்பதற்கு முடிவான ச வும் ரேபமான ர வும் மாயையாகிய ஈ யும், ஸ்ரீம் விஷ்ணு மந்திரமான ஹ்ரீம் கூடிய மந்திரம்
58. எட்டாவது வர்க்கமென்ற ச ச்வர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ வும், நான்காவது உயிரெழுத்தான ஈ யும், பிந்து நாதத்தன்மை உள்ளதாக இருப்பது தேவீ பீஜமாகும். (ஸீம்)
59. ஐம், க்லீம், சவும் என்பதாகவும், ஹம்ஸபீஜ மான ஹ வும், பிந்து நாதத்துடன் கூடியதாகவும், ஸ்ரீம் என்பதாகவுமோ தேவி பீஜத்தை அறிய வேண்டும்.
60. இவ்வாறு நான்கு பீஜ மந்திரம், தேவிக்கு பொதுவானதாகும். இவ்வாறாக மூலமந்திரம் கூறப்பட்டுள்ளது. அதில் பிரம்ம மந்திரம் அங்க மந்திரங்களை கல்பிக்க வேண்டும்.
61. ஹ்ருதய மந்திரத்திற்குட்பட்ட, ஜாதி பீஜம், மூலமந்திரம் இவைகளும் முறையே மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரமாக கூறப்பட்டுள்ளது. ஆதி சக்தியின் மந்திரமாக ஹ்ரீம்முமோ மூலமந்திரமாக ஆகும்.
62. இவ்வாறாக மந்திரம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை கூறப்பட்டது. பிரதிஷ்டையின் நேரமும், அங்குரார்ப்பணமும் முன்புள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
63. மண்டபத்திலுள்ள ஸ்தண்டிலத்தில் கிழக்கு முகமாக தேவியை ஸ்தாபிக்கவும். தேவியின் பீடத்தில் மத்தியில் தங்கம், கிழக்கில் இந்த்ர நீலக்கல், முறைப்படி
64. வைடூர்யம், பவழம், முத்து, வைரம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம் இவைகளை ரத்னந்யாஸம் முறையாக
65. ஹ்ருதய மந்திரத்தினாலும் வாமை முதலான மந்திரங்களினாலோ வைக்கவும். அல்லது எல்லா இடத்திலும் தங்கத்தையோ வைக்கவும். நயனோந் மீலத்தை தங்கத்தினாலான நகத்தினால் செய்ய வேண்டும்.
66. தேன் முதலிய திரவ்யங்களால் பிம்பங்களுக்கு திரையிடப்பட்டவாறு கண் திறக்கவும். பசு, பிராமணர்கள், தான்யம், மனிதர்கள் இவர்களை பிம்பத்திற்கு காட்டுவதையும் முன்பு போல் செய்து
67. ஆசார்யனையும் சில்பியையும் பூஜித்து விட்டு, மண் முதலான பொருட்களால் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணமும் ஜலாதி வாஸமும் செய்ய வேண்டும்.
68. பிம்பத்தை சுற்றிலும் கலசங்களை வாமை முதலான தேவியர்களை பூஜித்ததாகி வைக்க, ஆலயத்தின் நான்கு திசையிலுமோ, தென் கிழக்கு வடகிழக்கு திசையிலோ மண்டபங்களை அமைத்து
69. அதில் யோநி வடிவமாக ஒன்பது, ஐந்து, ஒன்று ஆகியவைகளை மந்திர எண்ணிக்கைகளுக்கு அடிப்படையாக குண்டம் அமைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் அழகாக முன்புபோல் ஸ்னான வேதிகையை அமைக்க வேண்டும்.
70. யாகசாலை அமைத்து சில்பியை த்ருப்தி செய்வித்து, அந்தணர்களுக்கு உணவளித்து, பசுஞ்சாணமெழுகிட்டு, புண்யாஹவாசனமும், வாஸ்து சாந்தியும் செயற்பாலது.
71. வாஸ்து ஹோமம் செய்து, வேதிகையின் மேல் ஸ்தண்டிலத்தில் முன்பு கூறப்பட்டுள்ளபடி சயனத்தை அமைக்க வேண்டும். தேவீ பிம்பத்தை ஜலத்திலிருந்து எடுத்து முன்பு கூறப்பட்டபடி ஸ்நபநம் செய்விக்க வேண்டும்.
72. சந்தனம் புஷ்பமிவைகளால் தேவி பிம்பத்தை பூஜித்து ஹ்ருதிய மந்திரத்தினால் ரக்ஷõபந்தனம் செய்விக்கவும். கிழக்கில் தேவியின் தலை உள்ளதாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
73. சயன பிம்பத்தை சிகப்புத் துணியால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். தேவியின் சிரோதேசத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
74. உருவ அமைப்பு முறையாக பிம்பத்தை தியானித்து சந்தனமிவைகளால் பூஜிக்கவும். பிம்பத்தை சுற்றிலும் எட்டு கடங்களை ஸ்தாபித்து வாமை முதலியோர்களை பூஜிக்க வேண்டும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 9 அக்டோபர், 2024
படலம் 44: தேவீ ஸ்தாபன விதி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக