வியாழன், 7 நவம்பர், 2024

இராமானுஜர்...

ஒரு சமயம் இராமானுஜர் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தார். அந்த சமயம் அவர் மனைவிக்கும் அவர் குருநாதர் 'பெரிய நம்பி' யின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது மனஸ்தாபம் ஏற்பட்டு வாய் தகராறு ஆகிவிட்டது.

பெரிய தம்பியிடம் நடந்ததை கூறி அவர் மனைவி வருத்தப்பட்டாள். பின் நாம், இங்கிருப்பதை விட ஸ்ரீரங்கத்தில் சென்று இருக்கலாம் என்றாள். அவரும், அதற்கு ஒப்புக் கொண்டு கிளம்பினார்.

இது எதுவும் அறியாத ராமானுஜர் குருவின் க்ருஹம்  பூட்டியிருப்பதை பார்த்து, நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டார். மிகவும் மனம் வருந்தினார். தன் குரு தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்லும் அளவிற்கு அபசாரம் நிகழ்ந்தது என வருத்தப்பட்டார். ஆனால் இதற்கு காரணம் தன் மனைவி எனத் தெரிந்தும் அவர் கோபப்படவில்லை. குரு பத்னியிடம் சண்டை போகலாமா என  மனைவியிடம் கேட்கவுமில்லை. தனக்குள்ளே வருத்தப்பட்டார். மனைவியிடம் கோபப்பட வேண்டாம். மனைவி தன் குருநாதரிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதையாவது சொல்லி திருத்தியிருக்கலாமே... அதுவும் செய்யவில்லை. இராமானுஜர் கோபப்படவுமில்லை, தானாக அறிவுரையும் சொல்லவில்லை... ஏன்? பொதுவாக யாருக்குமே அறிவுரை சொன்னால் பிடிக்காது அறிவுரை சொன்னதற்க்காக நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

பலவித மக்கள், உலகம் பலவிதம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம், எண்ணம் உண்டு. இதனை நாம் சம புத்தியுடன் பார்க்க வேண்டும். இந்த குணம் ஸ்ரீமந் நாராயணனுக்கு உள்ளது. தன்னை பார்க்க வரும் பக்தனை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கிறார்.

இவன் நல்லவனா?

ஒழுக்கம் உள்ளவனா?

திட பக்தி செய்கிறானா? என்று  எதையும் பார்ப்பதில்லை...
கோவிலுக்குள் வரும் அனைவரையும் ஆசையோடு பார்க்கிறார்.
 
என்னை கல் என்று  பார்க்கிறானே? நான் இவனை மாமிச மலை என்று பார்க்கிறேன் என்று ஒரு போதும் கோபப் படுவதில்லை. தவறு செய்பவர்களை நாம் அறிவுரை மூலமோ, கோபம் கொண்ட திருத்த முயற்சித்தால் பொதுவாக அவர்கள் நம்மை விட்டு விலகுவர். இதனால் நஷ்டம் நமக்கு தான்.

மேலும் அறிவுரை கூறி திருத்த முயற்சிப்பதும் எல்லை. இவன் நம்மிடம் வந்து கொண்டிருப்பதே ஞானத்தை கொடுக்கும் என்று இருக்கிறார். நமக்கு அறிவுரை சொன்னால் கேட்கும் மனநிலை வரும்வரை பொறுமையாக தாயைப் போன்று இருக்கிறார். திட நம்பிக்கையுடன் உண்மையான சரணாகதி செய்யும் வரை நமது அபசாரங்களை பொறுத்துக் கொள்கிறார்.

கருத்துகள் இல்லை: