படலம் 6/5 : மஹோத்ஸவ விதி
401. மாஸோத்ஸவம் இரண்டு வந்தால் இவ்விதமே செய்ய வேண்டும். ஒருநாள் உத்ஸவத்தை போல் மாஸோத்ஸவம் செய்ய வேண்டும்.
402. ஒரே மாதத்தில் ஒன்றோ பலவோ உத்ஸவம் வந்தால் அங்குரார்பண பூர்வாங்கமாகவோ அல்லது இல்லாமலோ செய்யலாம்.
403. ஒருநாள் உத்ஸவம் பேரீ அடித்தல் முன்னதாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்து சூலத்தை ஒன்றில் வைக்க வேண்டும்.
404. அதன் முன்பு பேரியை வைத்து பிறகு புண்யாஹம் செய்ய வேண்டும். அஸ்த்ர தேவரையும் பேரியையும் பூஜித்து பேரியை அடிக்க வேண்டும்.
405. பிறகு பிரதிஸரம் (காப்பு) தெய்வத்திற்கும் சூலத்திற்கும் முறைப்படி கட்டி பிரகார பிரதட்சிணம் செய்து யாகசாலையில் நுழைந்து
406. ஸ்தண்டிலத்தில் சூலத்தை ஸ்தாபனம் செய்து வேதிகைக்கு மேலே மங்கள கரமான ஸ்தண்டிலத்தில் வர்த்தனீ ஸஹிதமாக சிவகும்பத்தை ஆசார்யன் வைக்க வேண்டும்.
407. சுற்றிலும் எட்டு கலசங்களையோ கடங்களையோ வைக்க வேண்டும். புண்யாகவாசனம் செய்து அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.
408. தங்க பத்மம் முதலியவைகளை இட்டு வஸ்த்ரம் யக்ஞஸூத்ரம் கூர்ச்சம் இவைகளோடு கூடியதாக இரண்டிற்கும் அளித்து
409. கும்பங்களில் மாவிலை பழம், இவைகளை சேர்த்து நடுவில் கும்பத்தில் சிவனையும், வர்த்தனியில் மனோன்மணியையும், அஷ்டவித்யேஸ்வரர்களை கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.
410. திவாரங்களை பூஜை செய்து நந்தி முதலிய திவார பாலகர்களை ஸ்தலத்திலுள்ள கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும். தோரணங்கள் அஷ்டமங்களங்கள் இவைகளை பூஜை செய்ய வேண்டும்.
411. தசாயுதங்களையும் மற்றும் அஷ்டமங்களம் போன்றவையும் வைத்து பூஜை செய்யலாம். இல்லாமலும் செய்யலாம். குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.
412. ஐந்து அல்லது ஓர் குண்டத்தில் முன் சொன்ன பொருள்களைக் கொண்டே ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கிராமபலி செய்ய வேண்டும். பலி பிம்பத்தோடு கூடவோ அல்லது இல்லாமலும் செய்யலாம்.
413. இவ்விதம் இரவில் செய்ய வேண்டும். காலையில் யாகேஸ்வரரை பூஜிக்க வேண்டும். விக்ரஹத்தோடு கூட ஹோமம் பலி இரண்டும் முடிந்தவுடன்
414. ஆசார்யன் ஆலயம் சென்று அங்கு சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும். பிறகு தீர்த்தோத்ஸவம் இங்கு சொல்லப்படவில்லையெனில் முன்பு போலவே செய்ய வேண்டும்.
415. பேரீதாடனம் இல்லாமல் அனைத்தையும் காலையிலும் செய்யலாம். உடனே அதிவாஸம் செய்து முன்புபோல் அனைத்தையும் செய்யவேண்டும்.
416. சூர்ணோத்ஸவம் இல்லாமலும் இந்த உத்ஸவம் செய்யலாம். அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பலிதானம் திருவீதியு லாவையும் செய்யவும். தீர்த்தம் இல்லாமல் உற்சவம் செய்யலாம்.
417. வீதிவலம் பிற்பகலிலோ மாலையிலோ செய்யலாம். தீர்த்தவாரி இருந்தால் ஸ்வாமி வீதி வலம் வருதலும் பலிகாலத்தில் வேறு பிம்பம் வைத்து
418. வலம் வருதலோ செய்யலாம். வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. பலி ஹோமம் முதலியவைகளை செய்யாமல் வலம் வருதலையோ மட்டும் கூட செய்யலாம். தெய்வத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டுமென தினங்களின் உத்ஸவத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
419. கர்த்தாவின் விருப்ப நாட்களிலும் அதற்கு உரிய நாளிலோ மேற்கூறியபடி செய்யலாம். கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரத்திலோ அல்லது மரண நாளில் அல்லது மாதாந்திர திருவாதிரை நக்ஷத்திரத்திலோ
420. சதுர்தசி, அஷ்டமி, பவுர்ணமி அல்லது அமாவாசை உத்தராயண தட்சிணாயனம் விஷுவ புண்யகாலம், கிரஹணங்கள் தமனோத்ஸவம் என்ற மரிக்கொழுந்து சாற்றுதலிலும்.
421. பவித்ரோத்ஸவம், கார்த்திகை தீபம் மற்றும் வருடசிறப்பு தினங்கள் புதிய தண்ணீர் வருதல்
422. பூரம் நக்ஷத்திரம், நவ நைவேத்ய கர்மாவிலும் மற்ற மங்கள கார்யங்களிலும் ஒருநாள் உத்ஸவம் செய்யலாம்.
423. இவ்விதம் ஒவ்வொரு வருடமும் போகத்திற்கும் அல்லது மோக்ஷத்திற்காகவும் செய்ய வேண்டும். ஞாயிறு முதல் வார பூஜையும் முறைப்படி செய்ய வேண்டும்.
424. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் மற்றும் ஸ்நபனங்களால் இறைவனை அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைய சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் இறைவனை பூஜை செய்ய வேண்டும்.
425. (ரோஜா) தலாரவிந்தம், நாயுருவி, தாமரை துளசி, பில்வ பத்ரம், விஷ்ணுகிராந்தி இவைகள் முறையாக
426. ஞாயிற்றுகிழமை முதலான கிழமைகளில் மேல் கூறிய பத்ரங்களால் பூஜிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கமும் திங்கள் முத்துவும்
427. பவழம் செவ்வாய் கிழமையிலும், புதன் கிழமையில் மரகதமும் வியாழக்கிழமை புஷ்பராகமும் வெள்ளிக்கிழமை வஜ்ரமுமாகும்.
428. சனிக்கிழமை இந்த்ர நீலமும், சாத்தலாம். மற்ற எல்லா ரத்னங்களும் எப்பொழுதும் சாத்தலாம் இந்த முறைப்படி சாத்துவது சிறந்தது
429. அந்தந்த நிறமுடைய புஷ்பம் வஸ்திரம் இவைகளை சாத்த வேண்டும்.
430. அந்தந்த நிறமுடைய நைவேத்யம் அந்தந்த வாரத்திற்கு உட்பட்டு நிவேதனம் செய்ய வேண்டும். வாரபூஜையின் முடிவில் வாரோத்ஸவம் செய்ய வேண்டும்.
431. வேண்டியதை அடைய ஞாயிற்றுகிழமை உத்ஸவத்தை மட்டுமோ நடத்தலாம். ஞாயிறு உத்ஸவம் கிருஹணங்களின் பீடை நீங்கவும் சிறப்பாக ஆரோக்யம் பெறவும் ஆகும்.
432. உலக நன்மைக்காகவும் எந்த கிரஹத்தால் துன்பமேற்பட்டுள்ளதோ அந்த கிருஹ வாரத்தில் பூஜை செய்ய வேண்டும். அந்த வார உத்ஸவத்துடன் சேர்த்து செய்ய வேண்டும்.
433. அந்தந்த கிழமைக்கு தக்கவாறு சந்தனம் முதலிய திரவ்யங்களை சேகரிப்பது, செய்தும் செய்யாமலும் இருக்கலாம். ஸம்வத்ஸர உத்ஸவம் கூறி மாஸோத்ஸவத்திலும் அவ்வாறே அனுஷ்டிக்கவும் என்றும்
434. வாரோத்ஸவத்திலும் சிறப்பு சொல்லப்படுகிறது. முற்பகல் பிராமணர்களுக்கும் நடுப்பகல் க்ஷத்ரியர்களுக்கும்
435. மாலை வைச்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடு இரவிலும் கொடி ஏற்றப்பட வேண்டும். கொடியேற்றம் முதலாகவோ
436. பேரீ அடித்தல் முதலாகவோ பாலிகை தெளித்தல் முதலாகவோ பிராம்மணர் முதலான வர்ணத்தவர்களுக்கு செய்யலாம். மற்றவர்களுக்கு பாலிகை தெளித்தல்தான் முதலாவதாக செய்ய வேண்டும்.
437. நகரத்தில் த்வஜம் முன்னதாகவும் மங்கள கார்யங்களில் பேரீதாடனம் முன்னதாகவும் பெரிய நகரங்களில் அங்குரம் முன்னதாகவும் செய்யலாம். அது போல் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கும் உண்டு.
438. நான்காயிரம் அந்தணர்களுக்கு மேல் இருக்கும் கிராமத்தில் மற்றும் நகரங்களிலும் உத்ஸவங்களுக்கு கலப்பு தோஷம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
439. ஏழு ஆறு, ஐந்து அல்லது நான்கு முழத்தில் த்வஜதண்ட வேதிகை கட்டவேண்டும். முதல் மூன்று வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு இது மாறுதலாக அமையும்.
440. ஒரு த்வஜத்தில் மற்றொரு த்வஜத்தை செய்யக் கூடாது. விருஷபத்வஜருக்கு செய்யலாம். ஒரு உத்ஸவத்தில் மற்றொரு உத்ஸவம் செய்யக்கூடாது. சைவோத்ஸவம் சிறந்தது.
441. எல்லோரும் பொருத்தமான நக்ஷத்திரத்தில் த்வஜாரம்பம் செய்வது சிறந்தது. கொடிக்கு வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மூன்றும் அந்தணர் முதலான வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.
442. நான்காவது வர்ணத்தவர்க்கு மஞ்சள் நிறம் எல்லோர்க்கும் வெண்மை நிறத்தை பொதுவாக வைத்துக் கொள்ளலாம். கொடி ஆரம்பத்தில் விருஷபத்தலையும் வால் அடிப்பகுதியிலும் இருக்க வேண்டும்.
443. த்வஜ பிரதட்சிண காலத்தில் ஆசார்யன் முன்னால் சென்றாலும் செல்லலாம். கிழக்கில் காந்தாரம் தெற்கில் கவுசிகம்.
444. மேற்கில் காமரம், வடக்கில் தர்கராகம், இவ்விதம் ஸ்வரங்கள் சொல்லப்பட்டன.
445. த்வஜாரோஹண காலத்தில் நான்கு ராகமோ ஓர் ராகமோ வாஸித்து த்வஜாரோஹம் முதல் தீர்த்தம் வரையில் இரவில் கிராமபலி போட வேண்டும்.
446. அல்லது வேறு இடத்தில் உத்ஸவம் நடக்கும் போதும் நித்யோத்ஸவமுள்ள இடத்திலும் தேவர்களின் பலி த்வஜத்தின் அடியிலேயே கொடுக்கப்படவேண்டும்.
447. பிராம்மணர் முதலிய பேதங்களில் வடக்கிலிருந்து குண்டமேற்படுத்தி பிரதட்சிண முறையாகவும் ஒரே அக்னி குண்டபூஜையும் செய்யலாம்.
448. நன்கு புசித்த சண்டரூபம் தரித்த பிரம்மசாரி தன்னை சண்டன் போல் தியானித்து த்வஜ தண்டத்தை சேதனம் செய்தாலும் செய்யலாம்.
449. உத்ஸவம் அல்லது பவித்ரம் உத்ஸவம் அல்லது இரண்டையும் செய்யலாம். ஒன்பதாவது நாளில் கொடிக்காக அங்குரார்ப்பணம் செய்து ஏழாவது நாளில் உத்ஸவத்திற்காக அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.
450. தீர்த்தாங்குரம், அதே எண்ணிக்கையில் உடைய நாட்களில் செய்யவும் என்ற இந்த முறை எங்கும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம் நடுப்பகலில் த்வஜ பூஜையையும் ஸோம கும்பத்தில் ஜலத்தை
451. வைத்து பூஜையையும் அந்த கும்ப பூஜை ராத்திரியில் செய்ய வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட சுவாமியை கிராமத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுதலும்
452. வேட்டையாடும் உத்ஸவம் விருப்பப்பட்ட காலத்திலும் செய்ய வேண்டும். காமிகாகமத்தில் வருடமானது சவுரம், சாந்தரம் என்பதாக இருகூறாக வகுக்கப்பட்டுள்ளது.
453. சவுரமானம் உயர்ந்ததாகும். சாந்தரமானப்படி செய்வது நடுநிலையாகும். சாவனம் என்ற வருஷக் கணக்கு முறையானது அதமமாகும். ஸாவனமானத்தால் பூஜைகள் செய்யக்கூடாது.
454. உத்ஸவம் முதலிய காலங்களில் பிரதிஷ்டை முதலியவைகளை செய்யக்கூடாது. சாந்தி, ஹோமம் முதலியன செய்து பிரதிஷ்டை முதலியவைகள் வேண்டுமானால் செய்யலாம்.
455. அல்லது மற்றொரு முறையால் உத்ஸவம் சொல்லப்படுகிறது. த்வஜா ரோஹண பூர்வமாக ஒரு கொடியை ஏற்றி
456. கொடியேற்றிய அதே தினத்தில் சூரியன் மறைந்தபொழுது யானை முதலியவைகளில் ஏறப்பட்டவனால் தீர்த்த தினத்தை அறிவிக்கப்படவேண்டும்.
457. மனைவியோடு கூடி யானையின் மேல் ஏறிய சண்டாளன் பேரி முரசை அடித்துக்கொண்டு மிகவும் சப்தமாக கொடியேறிய தினத்திலேயே இரவிலேயே அறிவிப்பை செய்ய வேண்டும்.
458. அஸ்திர தேவரிடத்தின் முன்பாக முன்பு கூறப்பட்டபடி தேவதைகளை ஆவாஹித்து கிராம பலியின்றி தீர்த்த நாளை தெரிவித்து
459. ஆலயத்திலே இதைத் தெரிவித்து அவ்விடமிருந்து நீர் நிலையை அடைந்து அங்கு இரண்டு ஸ்தண்டிலத்தை அமைக்க வேண்டும்.
460. ஒரு இடத்தில் சூலம் மற்றொரு இடத்தில் கலசங்களை வைக்க வேண்டும். ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை மூழ்க வைக்க வேண்டும்.
461. திருக்கோயிலை அடைந்து அந்த நாளிலிருந்து பத்தாவது நாளிலோ, அங்குரார்பண பூர்வமாக யாகாரம்பம் மறுபடியும் செய்யவேண்டும்.
462. ஒரு ஹோமத்தோடு கூடியதாக கிராமபலி முதலியவைகளை போடவேண்டும். தினமும் காலையில், மாலையிலும் ஸ்வாமி திருவீதியுலா இருக்க வேண்டும்.
463. ஐந்தாவது நாளில் அஸ்தர மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட மணலை உள்ளும், வெளியேயும் எங்கும் இரைத்தல் வேண்டும்.
464. பதினெட்டாவது தினத்தில் அங்குரார்பணம் செய்யவேண்டும். தீர்த்தத்திற்காக பதினெட்டாவது தினத்தின் இரவில் ஆலயத்தின் எட்டு திசைகளிலும்
465. திக்பாலகர்களுடைய வாகனங்களால் அடையாளம் செய்யப்பட்ட அல்லது அவர்களின் ஆயுதத்தால் அடையாளமிடப்பட்ட அல்லது விருஷபத்தை அடையாளமாக உடைய எட்டுக் கொடிகளை ஆசார்யன் ரித்விக்குகளோடு கூடியவனாய் ஏற்றவேண்டும்.
466. அது முதற்கொண்டு ஹோமம் சிறப்பாக செய்யவேண்டும். அதன் முடிவில் பலிதானமும் திருவீதி உலாவும் செய்யவேண்டும்.
467. இவ்விதம் ஒன்பது நாட்கள் செய்து பத்தாவது நாளில் தீர்த்தம் ஆகும். எட்டு கொடிகளையும் அன்று இரவே அவரோஹனம் செய்து
468. அன்றையிலிருந்து பல வாத்யங்களோடும் பல இசைகளோடும் பல ஆடல்களோடும்,
469. முறைப்படி கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் இப்படி செய்து பிறகு தீர்த்தக்கரையை அடைந்து
470. ஜல தீரத்தில் இரண்டு ஸ்தண்டிலங்களை வைக்கவேண்டும். ஒன்றில் சூலத்தையும் மற்றொன்றில் கலசங்களையும் ஸ்தாபனம் செய்யவேண்டும்.
471. ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை ஜலத்தில் முழுக வைக்கவேண்டும். எல்லா வாத்யங்களுமின்றி ஆலயத்தில் நுழைந்து
472. ஏழுநாட்களுக்கு பிறகு மவுனமாகச் சென்று சண்டிகேஸ்வரரை முன்னிட்டுக் கொண்டு தெய்வ பிம்பங்களோடு சென்று
473. பலி ஹோமம் இல்லாமல் ஏழுநாள் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபனம் ஹோமம், இவைகளோடு ஏழுநாள் இருக்கவேண்டும்.
474. அதன் முடிவில் திரிசூலத்தோடு தீர்த்தம் கொடுக்கவேண்டும். அன்று இரவில் முன் சொன்ன முறையில் கொடி இறக்குதல் செய்யவேண்டும்.
475. வீதி உலா இல்லாவிட்டாலும் இவ்விதம் விதியை செய்யவேண்டும். புதிய அன்னலிங்கம் செய்தாவது திக்பாலகர்கள், அவர்கள் அஸ்திர தேவதைகளை
476. அந்த திரிசூலத்தினாலோ பலியை கிராமங்களில் செய்யலாம். நித்யோத்ஸவத்தில் அன்னலிங்கம் முதலியவைகளை பத்து எண்ணிக்கைகளாகவோ செய்ய வேண்டும்.
477. பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் த்வஜ ஸ்தாபனம் செய்யலாம். தேய்மானம் மலினமடைந்தால் அதை எடுத்து வேறு புதிய கொடிக் கம்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்.
படலம் 6/5 : தொடரும்...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 7 அக்டோபர், 2024
படலம் 6/5...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக