படலம் 6/2 : மஹோத்ஸவ விதி
101. குடம் போன்ற பகுதியில் ஸ்கந்தனையும் அதன் முகப்பகுதியில் வினாயகரையும் தண்டத்தின் நுனியில் மன்மதனையும் தண்டத்தின் நடுவில் பாஸ்கரனையும் பூஜை செய்ய வேண்டும்.
102. தண்டத்தின் மூலபாகத்தில் சண்டேசர், கிழக்கு தளத்தின் நுனி பாகத்தில் லக்ஷ்மி, தெற்கு தளத்தில் ஸப்த மாதா மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும்
103. வடக்கு திக்கில் காத்யாயினியும், சூலத்தின் அடிப்பகுதியில் பதினோறுருத்திரன், சூர்யன் பன்னிரண்டும் அஷ்ட வசுக்கள் அச்வினி தேவர்கள் இவர்களும் மற்றும் பதினெட்டு கணங்களையும்
104. முறைப்படி உபசாரம் செய்து வரவேற்பதாக செய்து பேரியில் அந்தந்த தேவதா ஆவாஹணம் செய்ய வேண்டும். பேரியை வஸ்திரத்தால் சுற்றி நடுவில் ருத்திரனை பூஜிக்க வேண்டும். (தோல் கயிற்றில்)
105. வலது பாகத்தில் பிரம்மாவையும், இடது பாகத்தில் விஷ்ணுவையும், வலயத்தின் தெற்கில் சூர்யனையும் வடக்கில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
106. ஏழு கீலங்களில் ஸப்த மாதாக்களையும் ஒன்பது வலயங்களில் நவகிரஹங்களையும், ருத்திரர்களையும் அதன் எண்ணிக்கையில் பூஜை செய்து சர்ம ஸூத்திரங்களில் வாசுகியையும் பூஜை செய்ய வேண்டும்.
107. அடிக்கும் தண்டத்தில் ஷண்முகனையும் மஸ்தகத்தில் கிழக்கு பக்கமாக பூஜை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பம், முதலியவைகளையும் நைவேத்யம் ஹிருதயமந்திரத்தால் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.
108. அஸ்த்ர மந்திரத்தை நினைத்து பேரிதாடனம் செய்ய வேண்டும். முதலில் ஒரு அடியும் இரண்டாவது இரண்டு அடியும் அடிக்க வேண்டும்.
109. மூன்றாவது முறை மூன்று முறை அடிக்க வேண்டும். மூன்று முறையும் ஒவ்வோர் அடியுமோ அடிக்க வேண்டும். வாசிப்பவனை பஞ்சாக்ஷரத்தை நினைத்து பிரோக்ஷித்து
110. வஸ்திரம், சந்தனம், மாலை, பூணூல் இவைகளை கொடுத்து, அவருடைய கையில் புஷ்பமும் கொடுத்து அஸ்திர மந்திரத்தை நினைத்து
111. பேரியில் புஷ்பத்தை வைத்து ஆசாரியனின் உத்தரவால் பேரியை கழுத்தில் வைத்துக் கொண்டு முறைப்படி எல்லா தாளத்தையும் அறிந்தவனாக வாசிக்க செய்ய வேண்டும்.
112. காந்தாரம் முதலிய ஸ்வரங்களோடும் ஸமதாளம் முதலிய தாளங்களோடும் கீதம், நிருத்தம் இவைகளோடும் அன்னலிங்கங்களோடு கூடியதும்
113. முறையாக மூர்த்திகளுடனோ அல்லது சண்டேசருடனோ அஸ்த்ரராஜரை குடை முதலிய உபசாரங்களோடு எழுந்தருளச் செய்து
114. தூபம் தீபம், மற்றும் மணி, சப்தம் முதலியவைகளோடு பிரம்ம ஸ்தானத்திலிருந்து நகர் வலம் வரவேண்டும்.
115. இந்திரனின் ஸ்தானத்திலிருந்து இந்திரனுக்கு பலிகொடுக்க வேண்டும் பலி தானத்தின் கடைசியில் தாளம், கீதம் இவைகளோடு கூடியதாகவும்
116. நர்த்தனத்தோடு கூடியதாகவும் அந்தந்த திக்குகளில் செய்ய வேண்டும். பிரம்மாவிற்கு பிரம்ம தாளம் மற்றும் மேகராக ஸ்வரத்துடனும்
117. ஸமதாளம், காந்தாரம், கொல்லிபக்தா பணம், ப்ருங்கிணீ, கவுசிகம், நட்டபாஷை, மல்லதாளம்,
118. ஸ்ரீ காமரம், நவதாளம், தக்கேசி, கோடிகம் தர்கராகம், சாலபாளனீஸ்வரம் டக்கரி முதலிய பலவகை ராகங்களோடும், தாளங்களோடும் பலிதானம் செய்யப்படவேண்டும்.
119. கிழக்கு முதலிய திக்குகளில் முன்னதாக முறைப்படி செய்யப்படவேண்டும். த்வஜாரோ ஹணத்தின் முன்னதாக உத்ஸவத்தில் முக்குணமான தினத்தில் செய்யப்படவேண்டும்.
120. பேரீதாடன பூர்வமான உத்ஸவமானால் அதுவே த்விகுணமாக எண்ணப்படும். தெய்வத்திற்கு எதிரில் நான்கு ஸ்தண்டிலும் செய்யப்படவேண்டும்.
121. முதலில் அஸ்த்ரமூர்த்தியும் அதன் எதிரில் த்வஜ படத்தையும் அதன் எதிரில் விருஷப கும்பத்தை வித்யேஸ்வர்களோடும்.
122. அதற்கு முன்னால் எல்லா லக்ஷணங்களோடு கூடிய பேரியை வைக்க வேண்டும். முறையாக இவர்களை சந்தனம், புஷ்பம், இவைகளை எல்லாம் வைத்து பூஜிக்க வேண்டும்.
123. பேரிக்கும் கும்பத்திற்கு நடுவில் ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யலாம். முன் சொன்ன முறையில் பூஜை செய்து தத்வங்களை நியஸிக்க வேண்டும்.
124. திரிசூலத்தில் தேவதாஹ்வானம் செய்ய வேண்டும். (தேவதாஹ்வானம்) பேரிதாடனம் செய்து விருஷபம் முதலியவர்களோடு திரிசூலத்தை எடுத்துக் கொண்டு
125. அன்னலிங்கம் மற்றும் வாத்யங்களோடு கூடவும் அந்தந்த தேவதாவாஹணங்களோடு கூடவும் கிராம பிரதக்ஷிணமாகச் செய்து
126. பலிதானம் முதலியவைகளையும் செய்து கொடியேற்றும் இடம் சென்று முன் சொன்ன முறைப்படி கொடி ஏற்ற வேண்டும்.
127. பேரீதாடன பூர்வாங்கமான இந்த முறை ராத்திரியில் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. கொடி சுற்றி வருதல் பகலில் செய்ய வேண்டும்
128. தேவதை ஆஹ்வான காலத்தில் விருஷப பிரமணத்தை விட்டு விட வேண்டும். பிறகு அங்குரார்பணம் இரவில் யாகாரம்ப தினத்தில் செய்ய வேண்டும்.
129. அதற்காக அங்குரார்பணம் செய்ய வேண்டும். கிராம பிரதட்சிணம் தீர்த்தாங்குரத்திற்கு அவசியமாகும்.
130. மற்ற எல்லாவற்றிற்கும் செய்தாலும் செய்யலாம். இல்லாமலும் இருக்கலாம். அங்குரார்ப்பணத்திற்கு முன்னதாக மாலையில்
131. மித்ஸங்க்ரஹணம் செய்து அங்குரங்கன் நன்கு முளைக்க பேரீதாடனுத்துடன் விதைகளை தெளிக்க வேண்டும்.
132. மற்றவை எல்லாம் அங்குரார்பண பூர்வமாக இரவிலேயே செய்ய வேண்டும். சிவனுடைய யாகாரம்பமும் அந்த இரவிலேதான்
133. இவ்விதம் நிச்சயம் செய்து முதல்நாள் அஸ்த்ரராஜரையும் பூஜிக்க வேண்டும். பிறகு யாக சாலையை எதிரிலோ அல்லது பக்கத்திலோ அமைக்க வேண்டும்.
134. இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் ஐந்து சாலைகள் உள்ள விருப்பமான இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். நடுவில் ஐந்து முழ அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
135. ஒரு முழம் முதல் பதினைந்து முழம் வரை அளவுள்ளதாக யாகசாலை அமைத்து மூன்று ஆவரணங்களோடு கூடியதாகவும் அல்லது ஐந்து ஆவரணங்களோடு கூடியதாயும்
136. சமமாகவோ அல்லது ஒவ்வொரு அங்குல அதிக அளவுள்ளதாக அதிகரித்து ஒன்பது அங்குலம் உடையதாக ஐந்து வரிசைகள் ஏற்படுத்தவும்.
137. ஒரு வரிசையாக இருந்தாலும் பெரிதாக நான்கு வாயில்களை உடையதாகவும் அல்லது ஒரு வாயில் உடையதாகவும் மண்டப அமைப்பை உடையதாகவும் மற்றும்
138. பந்தல், கூடாரம், போன்ற அமைப்பை உடையதாகவும் ஐந்து ஒன்பது அல்லது ஒரு அக்னியோடு கூடியதாகவும் மேற்கட்டிதுணிகள் கொடி இவைகளோடு கூடியதாகவும்
139. தர்ப்பை மாலையோடு கூடியதாகவும் முத்து தோரணங்களோடு கூடியதும் தேங்காயோடு கூடியதும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாகவும்
140. நடுவில் எட்டு மாத்ராங்குல அளவுடையதாகவும் ஒவ்வொரு அங்குலம் அதிகம் உடைய இருபத்தெட்டு அங்குலம்வரை உள்ள மேடையோடு கூடியதாகவும்
141. யாகசாலையின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வேதிகையின் உயரமும் பரப்பும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கோ ஐந்தில் ஒரு பங்காகவாவது உபவேதிகை இருக்க வேண்டும்.
142. முஷ்டி அளவுள்ளதும் அல்லது ஓட்டை அளவுள்ளதும் அல்லது கையளவு (முழம்) உள்ளதுமான குண்டம் இருக்கலாம். அந்த குண்டம் நாற்கோணமாகவோ அல்லது வட்டவடிவமாகவோ மூன்று மேகலைகளோடு கூடியதாக இருக்க வேண்டும்.
143. மண்டபத்திலோ அல்லது பெரிய இடத்திலோ யாகம் அதிவாஸம் செய்ய வேண்டும். இவ்விதம் எல்லாவற்றையும் சேகரித்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். சில்பியை திருப்தி செய்து அனுப்ப வேண்டும்.
144. புண்யாஹவாசனம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்ய வேண்டும். எல்லா யாகங்களுக்கும் முக்யமான மண் எடுத்தலை செய்ய வேண்டும்.
145. வேதிகையினுடைய மத்தியில் எல்லா லக்ஷணங்களோடு கூடிய ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். ஒரு மரக்கால் முதல் ஒன்பது மரக்கால் வரை நெல் போடவேண்டும்.
146. அதில் பாதி அரிசியும் அதில் பாதி அளவு எள்ளும் அதே அளவு பொறியும் போட்டு நடுவில் தாமரையை எழுத வேண்டும்.
147. பலநிறமுடைய கர்ணிகைகளோடும் பிரகாசிக்கின்ற தளங்களோடு கூடியதும் எள், பொறி இவைகளால் ஆன கோடுகளை உடையதும் தர்பைகளோடு கூடியதும்
148. ஐந்து முதல் முப்பத்தாறு தர்பைகளோடு கூடிய அதன் நடுவில் சிவ கும்பத்தை வர்த்தனியோடு கூடியதாகவும்
149. அஷ்ட வித்யேச்வரர்களோடு கூடியதாகவும் கும்பங்களின் ஆவரணங்களோடு கூடியதாகவும் சிவகும்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். மேலும் எல்லா கும்பங்களும் வஸ்திரம் மற்றும் தங்க தாமரை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
150. மாவிலைகளோடும் கூர்ச்சங்களோடும் கூடியதாகவும், முழுமையான கோவைப்பழத்தின் பொலிவை உடையதாகவும் ஸ்நபனத்திற்கு கூறிய இலக்கணங்களோடு கூடியதாகவும் கும்பங்கள் இருக்கவேண்டும்.
151. சிவகும்பத்தில் ஒன்பது ரத்னங்களும் வர்தனியில் ஐந்து ரத்னங்களும், வெளியில் உள்ள குடங்களில் தங்கத்தையும் போட வேண்டும்.
152. செல்வம் நிறைந்தவர்களால் இவ்வாறு செய்யப்படவேண்டும். சிவகும்பத்திற்கு இரண்டு வஸ்திரங்கள் அணிவிக்கவேண்டும். தோரணம், துவாரகும்பங்கள் லோக பாலர்கள் இவர்களையும்
153. வித்யேஸ்வரர்களோடும், சக்தியோடும் அஷ்டமங்களங்களோடு கூடியதாகவும் தசாயுதங்களோடும், சிவ கும்பத்தை வைத்து பூஜிக்கவும்.
154. இவ்விதம் செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, அல்லது பருத்தி நூல் இவைகளுள் ஏதேனும் ஒன்றினால் காப்பு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
155. தங்கம், வெள்ளி இவைகள் பிம்ப கையின் அளவிற்கு சிறிது அளவு அதிகமாக உடைய தாக, பாம்பின் படம் உடையதாகவும் இருக்கவேண்டும்.
156. வாலோடு கூடிய அந்த சூத்ரம் ஸர்ப படத்தோடு கூடியதாகவும் இருக்கவேண்டும். சூத்ரத்திற்கு அனந்தன் அதிதேவதையாகும். தங்கத்திலோ வெள்ளியிலோ செய்யப்பட்ட சூத்ரம்.
157. எல்லா விருப்பங்களையும் நிறப்பக்கூடியதாகும். சூத்ரம் ஒன்றாக இருக்கும். சிறப்பானதாகவும் பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய வலயத்துடன் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
158. பட்டு முதலிய சூத்ரங்கள் மூன்று தத்துவங்களையும் ஐந்து கலைகளையும் உள்ளடக்கியதாகவும், அமைதியைத்தரவல்லதாகவும் வெற்றியைத் தரவல்லதாகவும் ஆகும்.
159. ஒன்பது நூலிழை உள்ளதாக அமைக்க வேண்டும். இது ஆரோக்யத்தை கொடுக்க கூடியதாகும். ஆறு நூல்களோலோ, ஐந்து அல்லது எட்டு நூல்களாலோ செய்யப்பட்ட ரக்ஷõஸூத்ரம் புத்ரன், நீண்ட ஆயுள் முதலியவற்றை கொடுக்க கூடியதாகும்.
160. கைப்பருமனுக்குத் தகுந்தவாறு ஒன்று, மூன்று, என்று அங்குலங்களில் அளவு வித்யாசங்களால் சூத்ரம் அமைக்கவேண்டும். நன்கு தண்ணீரால் சுத்தி செய்து சந்தனத்தைப் பூசி
161. விபூதி பாத்திரத்தில் நேத்ர மந்திரத்தை உச்சரித்து விபூதியை வைத்து தனியாக ஸ்தண்டிலம் செய்து அதை ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும்.
162. மரக்கால் முதலிய அளவுகளாலும் இரண்டு படிக்கு குறையாமலும் நக்ஷத்திரம் போல் பிரகாசமான அரிசியை ஹ்ருதய மந்திரத்தை கூறியவாது நிரப்பி அஸ்த்ர மந்திரத்தால் பாத்திரத்தை வைக்க வேண்டும்.
163. அதன் நடுவில் விபூதி பாத்திரத்தில் சூத்ரத்தை வைக்கவேண்டும். வெட்டப்படாமல் இரண்டு பாக்கு முதலியவைகளோடு கூடியதாகவும்
164. வெட்டப்படாத அடி, நுனி பாகத்தை உடைய வெற்றிலையை வடக்கு, கிழக்கு முகமாக வைத்ததாக ரக்ஷõ சூத்திரத்தையும் வைத்து இவைகளை ஸ்தண்டிலத்தின் மேல் வைக்க வேண்டும்.
165. புண்யாகவாசனம் செய்து ஹ்ருதய மந்திரத்தால் பிரோக்ஷித்து, ஸ்தண்டிலத்தில் சக்தியை பூஜை செய்து யந்திரிகையில் மூன்று தத்வத்தை பூஜிக்க வேண்டும்.
166. பாத்ரத்தில் பிரதானமான மாயா தத்வத்தையும் அரிசியில்சிவனையும் விபூதி பாத்திரத்தில் உமா சக்தியையும் விபூதியில் லகுளீச்வரனையும்
167. சூத்ரத்தில் அனந்தன் முதலிய நாகர்களையும் பூஜை செய்து சந்தனம் முதலிய உபசாரங்களை செய்து பட்டு முதலான வஸ்திரங்களால் பாத்திரத்தை மூடி மாலையை அதன்மேல் வைக்கவேண்டும்.
168. எல்லா அலங்காரங்களோடும், எல்லா வாத்யங்களோடும் கிராம பிரதட்சிணமோ அல்லது ஆலய பிரதட்சிணமோ செய்ய வேண்டும்.
169. அல்லது செய்யாமலும் இருக்கலாம். பிறகு இறைவனை பூஜிக்க வேண்டும். கட்டைவிரல் மோதிர விரலால் இவைகளால் இடதுகையில் எடுத்து
170. விபூதியோடும் வலது இரண்டு விரல்களினால் அந்த ரக்ஷõ சூத்ரத்தை பூச வேண்டும். அனுஷ்டுப்புடன் கூடிய நேத்ர மந்திரத்தால் (த்ரயம்பகம் என்ற மந்திரத்தால்)
171. தெய்வங்களுடைய வலது மணிக்கட்டில் கட்டி அந்த இடத்தில் விபூதியை வைக்கவேண்டும். இது ஆண் தெய்வங்களுக்கு பொருந்தும். பெண் தெய்வங்களுக்கு வலது கையிலோ, இடது கையிலோ கட்டலாம்.
172. ஆசார்யன் முதலியோர் மக்களுக்கு விபூதி கொடுக்க வேண்டும், தாம்பூலம், அப்பம், பழம், தேங்காய், இவைகளையும் கொடுக்க வேண்டும்.
173. தேவனுக்கும் பக்தர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்காமலும் இருக்கலாம். ஸோமாஸ் கந்தரிடமோ, ஸ்கந்தரில்லாமலுள்ள உமாமஹேச்வரரிடமோ, சந்திரசேகரிடமோ ரக்ஷõபந்தினம் செய்ய வேண்டும்.
174. தேவியோடு கூடியதாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக உடைய நர்த்தன ரூபத்திலும் உமாமகேச்வரர் உட்கார்ந்திருக்கும் மூர்த்தி சுகாசீனர், மஹேச்வரன்
175. அல்லது உத்ஸவத்திற்காக ஏற்பட்ட சாந்த உருவமுடைய இறைவனுக்கும் இன்னும் பல மூர்த்திகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரக்ஷõ பந்தனம் சொல்லப்படுகிறது.
176. கிராமபிரதட்சிணத்தை ரக்ஷõபந்தனம் முடிந்த பிறகு செய்யவேண்டும். இவை இரண்டும் யாகாரம்ப காலத்தில் (தினத்தில்) செய்யவேண்டும் என சொல்லப்படுகிறது.
177. மற்றொரு நாளில் அல்லது உத்ஸவத்தின் நடுவில் விரும்பிய தெய்வத்திற்கு ரøக்ஷ கட்டிவிடலாம். அல்லது அதற்கு முதல் நாளும் கட்டிவிடலாம்.
178. ரவுத்ர மூர்த்தியினிடத்திலும் சாந்த மூர்த்தியினிடத்திலும், சிவபக்தரிடத்திலும் இந்த விதி பொருந்தும். திரிசூலத்தின் நடுபாகத்திலோ, அதில் உள்ள தெய்வத்தின் கையிலோ ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.
179. தசாயுதங்கள் எல்லாவற்றிற்கும், யாக ஆரம்ப முதல் நாளோ அல்லது அந்த நாளிலோ ஸூத்ர பந்தனம் செய்யவேண்டும்.
180. இது இரண்டிற்கும் முன்பு தீர்த்தாங்குரம் செய்யவேண்டும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன்கூடி (சித்விக்குகளுடன்) ஸகளீகரணம் முதலியன செய்துகொண்டு
181. திவார பூஜையை, செய்து யாகசாலையில் நுழைந்து பிரம்மேஷ்டி (ஸந்த்யாவந்தனம்), பூதசுத்தி, ஸகளீகரணம் முதலியவைகளைச் செய்து
182. பாத்யம், அர்க்யம், ஆசமனம், இவைகளை கொடுத்து, அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து யாகசாலையில் ஸ்தண்டிலத்தில் சிவாஸனம் செய்து
183. சிவ கும்பத்தில் மூர்த்தியை மூர்த்தி மந்திரத்தால் ஆவாஹனம் செய்து, பஞ்ச பிரம்ம மந்திரங்களையும் நியாசித்து கலாநியாஸமும் செய்ய வேண்டும்.
184. வித்யாதேஹத்தை கல்பித்து பிரணவ ரூபமான சிவபெருமானை ஆவாஹணம் செய்து ஹ்ருதயம், முதலிய மந்திரங்களை நியாஸம் செய்து பாத்யம் முதலிய உபசாரங்களை செய்ய வேண்டும்.
185. இவ்விதம் மனோன்மணியையும், சக்தி மந்திரத்தால், பூஜிக்கவேண்டும். சுற்றிலும் வித்யேச்வரர்களையும் லோகபாலர்களையும் பூஜிக்கவேண்டும்.
186. அவர்களுடைய பத்து ஆயுதங்களையும் கண்ணாடி முதலிய அஷ்டமங்களப் பொருளையும் பூஜிக்கவேண்டும். அவைகளை வேதிகையின் பக்கத்திலும் ஸ்தண்டிலத்திற்கு மேலேயோ அல்லது ஸ்தலத்திலோ
187. எட்டு திக்குகளிலுமோ, அல்லது திக்கிற்கு இரண்டு இரண்டாக வேண்டும் அதன் முடிவில் எட்டு திக்குகளில் ஸ்தண்டிலத்தில் உள்ள தசாயுதங்களை
188. முறையாக பூஜித்து ஆசார்யன்யாக குண்டத்தின் அருகில் சென்று அதன் ஸம்ஸ்காரங்களை செய்து சிவாக்னியை முறைப்படி ஏற்படுத்த வேண்டும்.
189. ஒன்பது, ஐந்து, இவ்விதம் அவரவர்கள் குண்டங்களில் ஆவாஹணம் செய்து சிவனை நன்கு பூஜித்து பிரும்மாங்கங்களோடு சேர்த்து ஹோமம் செய்யவேண்டும்.
190. கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வக்த்ரம் (தத்புருஷ) முதலிய மந்திரங்களையும் தென்கிழக்கு முதலிய விதிக்குகளில் ஹ்ருதயம் முதலிய மந்திரங்களையும் தன்தன்பிரதானமந்திரங்களோடு பூஜித்து மற்ற எல்லா மந்திரங்களை பிரதான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.
191. மூங்கிலரிசி, பில்வம், யவை, ஸத்துமா, பால், வெல்லம், எள், கடுகு, பயறு இவைகள் எதுவும் ஹோமத்தில் இடம்பெறுபவையாகும்.
192. (பிரும்மசாலி) பெருநெல், யவை அல்லது உளுந்து, நெல், யவை அல்லது எள், கடுகு, பயிறு அல்லது ஸத்துமா மூங்கிலரிசி, வெல்லம், தேன்
193. என்று நான்குவிதமாக ஹோமத்ரவ்யம் சொல்லப்பட்டது. ஸமித்து, நெய், அன்னம், பொறி இவைகளை நான்கு பகுதிகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.
194. சிவாங்க மந்திரத்தில் பத்தில் ஒரு பங்கும் மற்றும் 108 முறை மூல மந்திர ஹோமமும் பிரதான குண்டத்தில் செய்து, கலைகளுக்காக மற்ற குண்டங்களிலும் ஹோமம் செய்ய வேண்டும்.
195. திரவ்ய பேதங்களால், மந்திரங்கள் சிவாமத்தில் சில சொல்லப்பட்டன. ஆனால் தந்திரங்களின் பேதத்தால் மந்திரபேதம் இங்கு சொல்லப்படவில்லை.
196. ஹவிஸ்ஹோமம் ஹோமத்தின் முடிவிலோ ஹோமத்தின் ஆரம்பத்திலோ செய்யலாம். அதன் முடிவில் பலிதானம் செய்யவும் அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது.
197. நித்யோத்ஸவ முறையில் உள்ள ஹவிர்மயமான அன்ன லிங்கத்தை செய்து அங்கு அஸ்திர ராஜரை பூஜித்து திரிசூலத்தோடு கூடிய
198. தசாயுதங்களோடும், தூபதீபங்களோடும், மணிநாதத்தோடும், திரவ்யத்தோடும்
199. குடை முதலிய உபசாரங்களோடும் பலவித வாத்யங்களோடும் நகரம் முதலியவைகளில் ஆசார்யனோ, அல்லது சிஷ்யனோ பிரவேசிக்க வேண்டும்.
200. தேவதா ஆஹ்வானம் செய்யும் இடத்தில் பலியை முறையாக கொடுத்து மோதகம், இட்லி, பயிறு, வெல்லம், சத்துமா கணேச்வரர்க்கும்
படலம் 6/2 : தொடரும்...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 7 அக்டோபர், 2024
படலம் - 6/2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக