செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம்

கல்வெட்டுக்கள் நிறைந்துள்ள  இத்திருக்கோயில் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.பெரிய ராஜ கோபுரத்துடன் விளங்கும் இக்கோயிலில்  ஸ்ரீ வராகீச்வ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கௌரீச்வரி. லிங்க திருமேனியில் சங்கு,சக்கிரம் காணப்படுகிறது.

தல புராணம்:ஸ்ரீ மகாவிஷ்ணு வராக அவதார நோக்கம் முடிந்தபின் வைகுண்டம் திரும்பாமல் இருக்க பிரம்மா  மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிட  இறைவன் வராகத்துடன் 18 நாட்கள் யுத்தம் செய்து அதன் கோர பற்களை பிடுங்கி மாலையாக போட்டுக்கொண்டார்.ஸ்ரீ மகாவிஷ்ணுவும் தம் நிலை அறிந்து ,அருகில் தீர்த்தம் உண்டாக்கி நீலோத்பல புஷ்பங்களால் சிவனை அர்ச்சித்து வைகுண்டம் திரும்பினார்.

தல மகிமை:ரத சப்தமி முதல் மகாசிவராத்திரி வரை  சூரிய பூஜை நடைபெறுகிறது.சூரியன் செங்கதிர்கள் மாலை வேளையில் லிங்க திருமேனியில் படுகிறது.
அம்பாளுக்கு இங்கு ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது விசேஷம்.அஷ்ட தட்சிணாமூர்த்தி. அஷ்ட பைரவர் இத்தலத்தில் காட்சி கொடுப்பது விசேஷம்.ராகுகால நேரத்தில்,எல்லா இடர்களையும் போக்கும்  சரபேஸ்வரர் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ராகு,கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.மூலவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும்.

ஆலயம் கட்டப்பட்ட வரலாறு; இந்த ஊரில் வாழ்ந்து வரும் திருமதி கௌரி அம்மாள் என்ற மூதாட்டியை  கோயில் கட்டும்படி காஞ்சி மடத்து ஸ்ரீ மகாஸ்வாமிகள் கூறினார்கள்.சித்தர்கள் வழிபடும் இக்கோயில்  இடிந்துபோய் முட்புதர்களாக இருந்தது.மகாபெரியவர் கூறியபடி பணம் திரட்டிட ஒரு குச்சியில் தயிர்சாதம் கட்டி ஆஞ்சநேயர் படம்  முன்பு அப்பெண்மணி வைக்க கட்டு சோற்றுடன் கிளம்பிய அனுமார் தேவையான பணத்தை கொண்டு சேர்த்தார். இந்த நிகழ்ச்சி நிதர்சனமான உண்மை.பெரும் செல்வம் படைக்காத சாதாரண குடும்பத்தில் வந்த அந்த மாது இப்பெரிய ஆலயத்தை மகாஸ்வாமிகள் சொன்னபடி அவரின் அருளாசியோடு கட்டி  முடித்துள்ளார்கள்.திரட்டிய பணம் அதிகமாகவும் இல்லை,குறைவாகவும் இல்லை. கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து முடிக்க வேண்டிய அளவிலேயே இருந்தது.சிவகொஷ்டங்கள், பிரகாரத்தில் விநாயகர்,முருகன், நவக்கிரக சன்னதிகள்.
ஸ்ரீ மகாவிஷ்ணு அமைத்த திருக்குளம் அருகில் உள்ளது.

ஆலய அர்ச்சகர் திரு தீனேஷ் குருக்கள்-9994367390, திரு சரவண குருக்கள் -9952379986.


கருத்துகள் இல்லை: