வெள்ளி, 29 மே, 2020

சிவருத்ர மந்திரம்!!  கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்

இன்று 28/5/2020 வியாழன் அன்று பதிவு செய்து வணங்குகின்றோம் .இக்கட்டான சூழலில்

ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை அண்டாது . ஓம் நமசிவாய

தீமைகளை அழிக்க சிவன் அவதாரம் எடுத்ததில்லை. ஆனால், தனது அம்சத்தினை அனுப்பி வைத்ததாக புராணங்கள் சொல்கின்றது, அவ்வாறு சிவன் அனுப்பிய அம்சங்களில் ருத்ரன் மிக முக்கியமானவர். இக்கட்டான சூழலில் ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை அண்டாது

மந்திரம்:

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய

த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய

காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய

ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம!

பொருள்:

எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும் திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும் உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும் கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும் சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன் என்பதே இதன் பொருளாகும்.



மந்திரம் சொல்லும் முறை:

இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள்,பிரதோஷம் மாதசிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

கருத்துகள் இல்லை: