வெள்ளி, 27 செப்டம்பர், 2019

 ால் சாமி கோவில் - ஓர் அதிசயம்.

சுமார் 900 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்ட குடவரைக் கோவில்.

இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation - அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.

குன்றின் மேல் கோபால் சாமி சந்நிதி மிகக்குறுகியது. மிக அதிகம் புளுக்கம் கொண்ட இடம். அந்த இடத்தில் குளுகுளு காற்றோட்டத்தை அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம் "

நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பது அறிவியலால்கூட. விளக்க முடியாமல் இருப்பது. அந்த செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

உண்மையில் இது சிலையுமல்ல! யாரும் செதுக்கியதும் அல்ல!

கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாக அமைந்தப் பாறை.

இதை இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்.

கருத்துகள் இல்லை: