சிதம்பர ரகசியம் ஒரு தொடர்ச்சி பாகம் :- 3
இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கு சிதம்பரத்தைப் பத்தி. அவை யாவன : ஹேம சபாநாத மஹாத்மியம் : இதிலே தான் முதன் முதல் நந்தனாரை பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். நடேச விஜயம் வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப்பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி:2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப்பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி:2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய சங்கரவிஜயம் என்னும் நூலும் ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும் நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் அனந்தாச்சாரியா எழுதிய ப்ரபன்ன மந்திரத்திலும் சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்த ராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.
கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும் நடராஜர் காப்பாற்றி வைக்கப்பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள் வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார். நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும் சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும் பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் "வைதீக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி கோவிலைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் பரிவார தேவதைகள் பற்றியும் சிறு குறிப்புக்கள் தரப் போகிறேன். "ரகசியம்" கேட்பவர்கள் சற்றே பொறுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக