வியாழன், 15 ஜூன், 2017

ஐயப்பன் பாடல்கள்!

சபரிமலையில்....

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை...நாமும்
கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை  (சபரி)
பாலெனச் சொல்லுவதும் உடலாகும் - அதில்
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்.... இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா...இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும்
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வாசமுடைய பன்னீர் அபிஷேகம்... எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் - அதில்
இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)
உள்ளத்தின் வெண்மைதன்னைக் கையிலெடுத்து - அதில்
உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்...ஹரி
ஓம்மென்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

தேடுகின்ற கண்களுக்கு...

தேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை

வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி  (தேடு)

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே... எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே...எங்கள்
அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடி வந்தாயே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி  (தேடு)

தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே...ஒரு
தம்பிமட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே
அன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே...நாங்கள்
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)

சுவாமியே சரணம்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னயப்பா
சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு
சரணம் இல்லையப்பா
ஹரிஹர சுதனே சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
பொன்னம்பல ஜோதியே சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சபரிமலை வாசா சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

ஐயப்பா ஐயப்பா...

ஐயப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என்றாலே அல்லல் எல்லாம் அகழும்
அதுவே மெய்யப்பா மெய்யப்பா
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா
அன்னை நோயை தீர்ப்பதற்கு ஐயன் புலிபால் கொண்டு வந்தான்
அரக்கர் குலத்தை அழிப்பதற்கு அழகுதேவன் அவதரித்தான் (ஐயப்பா)
யோக நிலையில் சபரி என்னும் உச்சி மலையில் வீற்றிருப்பான்
பாவம் போக்கும் பதினெட்டு படிகள் காண நமை அழைப்பான் (ஐயப்பா)
மகர ஜோதி காண்பதற்கு மாதம் முழுவதும் நோம்பிருந்தோம்
இரவும் பகலும் எண்ணி எண்ணி நினைவில் வைத்தே வேண்டுகிறோம் (ஐயப்பா)

ஆயிரம் தீபங்கள்...

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள்
கண்ணில் தெரிகிறது - பம்பை ஆற்றில்
மணிகண்டன் பிறந்தது பம்பை ஆற்றில்

1. வில்லும் அம்பும் கொண்டவரை
விரதம் இருந்து வணங்கிடுவோம்
விரதம் இருக்கும் சக்தியினால்
வெற்றிகளை நாம் அடைந்திடுவோம் (ஆ)

2. சக்தி மிகுந்த ஆண்டவரை
சரணம் சொல்லி அழைத்திடுவோம்
சரணம் சொல்ல சரணம் சொல்ல
ஐயன் என்றும் நம்மிடையே (ஆ)

3. அழுதா நதியில் குளித்திடுவோம்
அன்னதானங்கள் செய்திடுவோம்
அமுதா மலையும் கரிமலையும்
கடந்து பம்பையை அடைந்திடுவோம் (ஆ)

4. ராமா ராமா என்று நாம்
ராம நாதனை வணங்கிடுவோம்
ராம நாதனை வணங்கி விட்டு
சபரிமலை ஏறிடுவோம்

5. சத்தியமான பதினெட்டாம்
படிகள் மீது ஏறிடுவோம்
படிப்படியாக நம் வாழ்வும்
உபயம் ஐயன் சக்தியினால் (ஆ)

ஐயப்பன் துதி

பூதநாத சதானந்த சர்வபூத தயாபரா
ரட்சரட்ச மஹா பாஹோ சாஸ்த்ரேதுப்யம் நமோநம:



கருத்துகள் இல்லை: