வியாழன், 15 ஜூன், 2017

வெக்காளி அம்மன் வழிபாடு!

கணபதி வாழ்த்து

1. ஜந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

2. கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோகவி நாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்
ஓம் ஸீமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணாகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விதடாய நம:
ஓம் விக்ன ராஜாய நம: ஓம் கணாதி பாய நம:
ஓம் தூம கேதவே நம: ஓம் கணாத்யஷாய நம:

ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானனாயாநம:
ஓம் வக்ரதுண்டாயா நம: ஓம் ஸூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹோம்பாய நம: ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விஸ்னெஸ்வர ÷ஷாடஸ நாமாவளி
நானாவித மந்த்ர, பளமள பத்ர புஷ்பணி சமர்ப்பயாமி
ஓம் காளி  ஜெய் காளி
ஓம் காளிகாயை ச. வித்மஹே. ச்மசான
வாஸின்யை தீமஹி ! தந்தோ கோரா
ப்ரசோதயாத்
தனம் தரும் : கல்விதரும். ஒரு நாளும்
தளர்வறியா
மனம் தரும் : தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்
என்பவர்க்கே
கனம் தரும் : பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே.

வெக்காளி அம்மன் வழிபாடு

ஓம் சக்தி வாழ்க வாழ்க
ஓங்கார பொருளும் வாழ்க
அம்சக்தி இவளனவே
அனைவரும் தொழ வாழ்க
அருவாக உருவாக அருள் உருவாய்
அம்மன் அருள் கவசம் தனை
காலத்தை உண்டோன் தன் அகத்தே
உள்ளவளை மனமே துதி

உறையூர் தனிலே அமர்ந்திட்ட தாயே
உன் திருவடியை தந்தருள்வாயே
வெட்ட வெளியில் இருக்கும் என் தாயே
வேதனை தீர்க்கும் வெக்காளி நீயே

பகவதி நீயே பார்வதி நீயே
உறையூர் தனிலே வாழ்பவள் நீயே
உன்புகழ் பாட வரம் எனக்கருள்வாய்
நின்பதம் பணிவோம் வெக்காளி தாயே

மண் மழை தவிர்த்த மாகாளி நீயே
மக்களை காத்த வெக்காளி தாயே
சினம்கொண்ட சிவனை சிந்தையில் அடக்கி
சீர் செய்தாயே வெக்காளி தாயே

ஜகமது யாவும் ஜயஜய எனவே
வெக்காளி உன்னை பாடிடுவோமே
நின்பதம் வந்தோம் உள்ளத்தை தந்தோம்
உன்னை நினைந்து பாடிடுவோமே!

வல்லவள் நீதான், வஞ்சியும் நீதான்!
வசந்தமும் நீதான் வெக்காளி தாயே
நல்லறம் நீதான், நன்மையும் நீதான்
நற்சுவையும் நீதான் வெக்காளி தாயே!

உலகை ஈன்றவள் நீதானம்மா
உண்மை என்பதும் நீதானம்மா
நன்மை செய்வதும் நீதானம்மா
நலம் பெற செய்வதும் நீதானம்மா!

அம்மா என்றே உனை அழைத்தாலே
அன்பால் என்னை ஆட்கொள்வாயே !
அண்டங்கள் எல்லாம் ஈன்றவள் நீயே
ஆதி பரம்பொருள் சக்தியும் நீயே !

கனகன தகதக பசபச எனவே
தளிர்விடும் ஜோதி ஆனவள் நீயே
மோகநிவாரணி, சோக நிவாரணி
தாக நிவாரணி வெக்காளி நீயே!

உந்தன் நாமம் என்றும் பாட
ஊக்கம் தந்திட வேண்டும் அம்மா
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈஸ்வரி நீயே!
குன்றினிதேவி, முனையொலி சூலி
முனிவர்கள் போற்றும் வெக்காளி நீயே
உறையூர் வாழும் வெக்காளி தாயே!
உன்திருவடியை தொழுதிடுவோமே!

காளியும் நீயே, காமினி நீயே
கார்த்திகை நீயே வெக்காளி தாயே
நீலினி நீயே, நீதினி நீயே, நீர்நிதி நீயே
நீரொலி நீயே
மாலினி நீயே, மாதினி நீயே மாதவி நீயே
வான்விழி நீயே
உறையூர் வாழும் வெக்காளி நீயே!
உன் திருவடியை தொழுதிடுவோமே!
நாரணி மாயை நான்முகன் தாயே
நாதினி நீயே வெக்காளி தாயே
பூரணி மாயை ஊற்றும் நீயே

உன் புகழ்பாட அருள்வாய் நீயே
தாரணி மாயை தாருணி தாயே
கனகாம்பிகையே காசினி தாயே
உறையூர் வாழும் வெக்காளி நீயே
உன்திருவடியை தொழுதிடுவோமே
வேதமும் நீயே வேதியியல் நீயே
வேதமும் நீயே வெக்காளி தாயே

நாதமும் நீயே நல்இசை நீயே
ஞானமும் நீயே, நாயகி தாயே
உலகமும் நீயே, உமையவள் நீயே
உண்மையும் நீயே வெக்காளி தாயே
காலமும் நீயே, கவிதையும் நீயே
காத்திடுவாயே காளியும் நீயே
உயிரும் நீயே, உடலும் நீயே
உலகமும் நீயே வெக்காளி தாயே
நாவுரை ஜோதி நற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி சுடரொளி நீயே
அன்பின் வடிவே ஆறுதல் தருவாய்
அங்கம் முழுதும் தன்னுடையாளே

இன்னல்கள் தீர்க்கும் வெக்காளி நீயே
இகம்பர சுகத்தை தந்தருள்வாயே
ஊரை காப்பவள் நீதானம்மா
உன்பதம் சரணம் சரணம் அம்மா

ஏற்றம் தருவது நீதானம்மா,
எங்கும் நிறைந்தவள் வெக்காளி அம்மா
குங்குமத்தோடு சந்தனம் பூசி
மங்கல செல்வி வெக்காளி அம்மா

தினமது அபிஷேகம் பூ அலங்காரம்
பூஜையை ஏற்பவள் நீதானம்மா
கண்களில் வேகம் கைகளில் சூலம்
ஏந்திய நாயகி வெக்காளி நீயே

திருசாம்பலினால் ஆயிரமாயிரம்
சக்தியை கொடுப்பவள் நீதானம்மா
எத்தனை இன்பம் உன்திருநாமம்
எத்தனை சக்தி உன்திருரூபம்

எத்தனை சாந்தி உன் அருள் நாமம்
எத்தனை அன்பு வெக்காளி அம்மா
எனை மறந்தாலும் இவ்வுலகினிலே
உனை மறவேனோ வெக்காளி அம்மா

அலைபாயும் எந்தன் மனதினில் நின்று
ஆறுதல் அளிப்பாய் வெக்காளி அம்மா
காற்றினில் ஆடும் தீபத்தை போல
கலங்கி நின்ற வேளையில் நீயே

ஆறுதல் தந்து அருள்புரிவாயே அம்மா
தாயே வெக்காளி நீயே
தீயில் விழுந்த புழுவை போல
தவித்து நின்ற வேளையில் நீயே

கருணையில் என்னை காத்திடுவாயே அம்மா
தாயே வெக்காளி நீயே
கானல் நீர்போல் காணும் காட்சி கவலையை
தீர்ப்பாய் வெக்காளி தாயே

வாழ்க்கை என்ற ஓடத்தில் தாயே வளம்பெற
செய்வாய் வெக்காளி நீயே
கலங்கரை விளக்காய் இருப்பவள் நீயே
கரைதனில் சேர்ந்திட கருணை செய்வாயே
முழு முதல் தாயை அறிமுகம் செய்து
அனைவருக்கும்
அருளை கொடுப்பவள் நீயே
அலையும் மனதை நிலையாய் வைத்து
அணையா சுடரால் ஆட்கொள்வாயே

துயர் வந்த போதும் துணையாய் இருந்து
வழியை காட்டும் வெக்காளி நீயே
பொய்யான உலகில் புது வாழ்வை தந்து
மெய்யான பாதையை காட்டிடுவாயே

பொல்லாத மனதை பொன்போல் ஆக்கி
புகழ்தனை தருவாய் வெக்காளி தாயே
சக்தியின் சொல்லில் பொருள்கள் கோடி
சத்திய பாதையை காட்டிடுவாயே

இருளை நீக்கிய ஈஸ்வரி நீயே
ஞான ஒளியை தந்தருள்வாயே
முள்ளான என்னை மலர்போல் ஆக்கி
மோட்சத்தை தருவாய் வெக்காளி நீயே

கல்லான என்னை கனிபோல் ஆக்கி
காத்தருள்வாயே வெக்காளி தாயே
அன்ன சக்தியும் நீதான் அம்மா
ஆறுதல் தருவதும் நீதான் அம்மா

உறையூர் வழும் எங்கள் தாயே
உன்அடி சரணம் சரணம் அம்மா
அகிலத்தை ஆள்வதும் நீதானாம்மா
அக்கினி வடிவம் நீதானம்மா

அம்பிகை என்பதும் நீதானம்மா
அகிலாண்டேஸ்வரி நீதானம்மா
சிங்க வாகினி நீதானம்மா
விஸ்வரூபினி நீதானம்மா

அங்காள ஈஸ்வரி நீதானம்மா
அனைத்தையும் காப்பவள் நீதானம்மா
உறையூர் வாழும் வெக்காளி அம்மா
உன்பதம் சரணம் சரணம் அம்மா

சக்தி மாரியும் நீதானம்மா
சஞ்சலம் தீர்ப்பதும் நீதானம்மா
முத்து மாரியும் நீதானம்மா

மூகாம்பிகையும் நீதானம்மா
காளி என்பதும் நீதானம்மா
நீலி என்பதும் நீதானம்மா
சூலி என்பதும் நீதானம்மா
வந்தருள்வாயே வெக்காளி தாயே
என்னை படைத்து நீதானம்மா
என்குறை தீர்ப்பது நீதானம்மா
கதியை தருவது நீதானம்மா
அனைத்தையும் கொடுப்பது வெக்காளி அம்மா
ஆதி சக்தியும் நீதானம்மா
அமர சக்தியும் நீதானம்மா
பராசக்தியும் நீதானம்மா

பருவ சக்தியும் நீதானம்மா
இச்சா சக்தியும் நீதானம்மா
கிரிய சக்தியும் நீதானம்மா
ஏக சக்தியும் நீதானம்மா

என்குறை தீர்ப்பதும் நீதானம்மா
ஞான சக்தியும் நீதானம்மா
ஞானத்தை தருவதும் நீதானம்மா
இந்து சக்தியும் நீதானம்மா வேத சக்தியும் நீதானம்மா
மூலசக்தியும் நீதானம்மா
முதலும் முடிவும் நீதானம்மா

பிரம்ம சக்தியும் நீதானம்மா
பிணிகளை தீர்ப்பதும் நீதானம்மா
கிரியா சக்தியும் நீதானம்மா
கீர்த்தியை தருவதும் நீதானம்மா

முடிலாசக்தியும் நீதானம்மா
குவளையம் காப்பது நீதானம்மா
சிற்றாசக்தி நீதானம்மா, சித்தியை தருவது நீதானம்மா
யோக சக்தியும் நீதானம்மா
யோகேஸ்வரியும் நீதானம்மா

தவத்தின் சக்தியும் நீதானம்மா
தத்துவம் தருவது நீதானம்மா
நித்தியம் தருவது நீதானம்மா
நின்பதம் சரணம் சரணம் அம்மா

காத்திட வேணும் எனையே வருக
வருக வருக வெக்காளி வருக
ஆழ்கடல் தனிலே பிறந்தவள் நீயே
ஆதிசக்தியே வருக வருக

காப்பவள் நீயே வருக வருக
கருணை கடலே வருக வருக
ஆதிபராசக்தி அம்மா வருக
அகிலம் நீயே வருக வருக

பக்தருக்கு அருளிட வருக வருக
சங்கரிதாயே சடுதியில் வருக
அம்மா தாயே அருள் புரிவாயே
அகிலத்தை காப்பவள் வெக்காளி தாயே

ஆதிசக்தியே அகிலமும் நீயே
ஆதியே ஜோதியே வருக வருக
அருள்நிறை வடிவே வருக வருக
ஆதியில் பாதியே வருக வருக

வெக்காளி அம்மா வருக வருக
பகவதி அம்பிகை பைரவி வருக
வராத சக்தியே வரம்தர வருக
தந்திர சக்தியே தவ சக்தி வருக

காளிகாம்பிகையே காத்திட வருக
கவலைக்கு மருந்தே காளியே வருக
சொந்தமும் பந்தமும் வெக்காளி வருக
ஆதியும் அந்தமும் அங்காளி வருக

எழில்மிகு முகமும் என்முன் வருக
கோல்விழி நீண்ட படர்ந்த முகமும்
காதுவரையும் நீண்ட கண்களும்
வில்லைபோல வளைந்த புருவமும்

சூரிய சந்திரன் கோல்விழி அழகும்
கோவை கனிபோல் கனிந்த செவ்வாயும்
கருணை முகமும் குங்கும திலகமும்
விரிந்த சடையும் கூந்தலின் அழகும்

செவிகள் இரண்டிலும் குண்டலம் அணிந்து
சிரசில் தங்க கீரீடம் அணிந்து
கழுத்தினில் முத்தார மாலை அணிந்து
திருமாங்கல்யம் அட்டிகையும் அணிந்து

கைகளில் கங்கனம் வளையல் அணிந்து
திரிசூலம் உடுக்கை வலக்கையில் பிடித்து
பாசாங்குசமும் அட்சய பாத்திரம்
இடுப்பில் யோக பட்டயம் அணிந்து

வலது காலை மடியில் வைத்து
இடது காலை அசுரன் மேல் வைத்து
உறையூர் வாழும் ஆதிசக்தியே
வெக்காளி தாயே வரம் தருவாயே

அன்பர்க்கருளும் யோகேஸ்வரியே
அன்பே அருளே சரணம் சரணம்
எங்கும் நிறைந்த வெக்காளி தாயே
எங்களை காத்திட முன் வருவாயே

சுடர்போல் தோற்றம் என்குலதாயே
இடர்களை போக்கி எனை அருள்வாயே
அங்காளஈஸ்வரி அருள் புரிவாயே
அருள்மிகு வெக்காளி அகிலமும் நீயே
அபயம் காத்திடும் அன்னையும் நீயே

அமாவாசையில் ஒளியினை தந்தாய்
ஆதியேசரணம்
அன்னமும் சொர்ணமும் காத்திடுவாயே
ஜோதியே சரணம்
பூரணி நாரணி சரணம் சரணம்
புவனேஸ்வரியே சரணம் சரணம்

உறையூர் தனிலே அமர்ந்தாய் சரணம்
வெக்காளி அம்மா சரணம் சரணம்
ஆக்கலும் அழித்தலும் உன் அருள்தாயே
அடியெனை காத்திட முன் வருவாயே
வேப்பிலை கண்ணின் வினைகளை தீர்ப்பாய்

குங்குமம் குறைந்தாய் கோயிலில் அமர்ந்தாய்
கருணை கடலாய் இருப்பவள் நீயே
கலங்கரை விளக்காய் எங்கும் நீயே
காளியும் நீயே, நீலியும் நீயே
கற்பூரதீபத்தில் காட்சி தந்தாயே

உறையூர் அமர்ந்தாய் வெக்காளி தாயே
உயிர் ஓவியமே உலகாம்பிகையே
உடலும் உணர்வும் நீதானம்மா
உடலோடு உயிரையும் காப்பாய் நீயே

நிலவில் நின்றவள் நீதானம்மா
நித்தியம் தருவது நீதானம்மா
இரவினில் நிற்பது நீதானம்மா
தேவியே வெக்காளி வருவாய் அம்மா

பொற்பத மேடையில் அற்புதம் தந்து
புவனங்கள் அனைத்தும் காப்பவள் நீயே
இமையவள் மகளும் நீதானம்மா
இகம்பர சுகம்தரும் வெக்காளி அம்மா

வெக்காளி அம்மன் கவசம்

காக்க காக்க காளியே காக்க
காக்க காக்க கருமாரியே காக்க
நோக்க நோக்க நோய்களை நீக்க
தாக்க தாக்க தடைகளை தகர்க்க

பார்க்க பார்க்க பவபயம் நீங்கிட
பார்க்க பார்க்க பாவங்கள் ஓடிட
பில்லி சூனியம் தவ முனியோர்கள்
உந்தனை கண்டால் ஓடியே ஒளிய

பிரம்ம ராட்சசரும் காற்றும் கருப்பும்
என் பெயர் சொன்னால் கலங்கி அலறிட
வெக்காளி தாயே உன்துணை இருந்தால்
அணுகிய துயரம் அகன்று போகும்

மனிதனும் மிருகமும் கொல்லாதிருக்க
கடியும் பிடியும் சேராதிருக்க
துன்பமும் சோகமும் சூலாதிருக்க
துர்க்கை என்னும் வெக்காளி துணையாயிருப்பாய்

அம்மனின் 108 நாமங்கள்

ஓம் என்னும் பொருளே ஓம் ஓங்கார நாயகி ஓம்
ஆங்காரி ரீங்காரி ஓம் அங்காள ஈஸ்வரி ஓம்
அகிலாண்டநாயகி ஓம், ஆனந்த வல்லியே ஓம்
அந்தரி சுந்தரி ஓம், அபிராமி தாயே ஓம்
அக்கினி சக்தியே ஓம், ஆனந்த தாண்டவி ஓம்
ராஜராஜேஸ்வரி ஓம், ராமலிங்கேஸ்வரி ஓம்
கருமாரி தாயே ஓம், கற்பக வல்லியே ஓம்
காயத்ரி தேவியே ஓம், கங்கா துவானியே ஓம்
கண்ணாத்த தாயே ஓம், கன்னியாகுமரியே ஓம்
கனகாம்பிகையே ஓம், காமாட்சி தாயே ஓம்

காந்திமதி தாயே ஓம், கற்பூர சுந்தரி ஓம்
கன்னிகா பரமேஸ்வரி ஓம், கனகதுர்க்கையே ஓம்
இளவஞ்சி கொடியே ஓம், இமையக்கரசியே ஓம்
வேப்பிலைகாரி ஓம், வெக்காளி தாயே ஓம்
வேதாம்பிகையே ஓம், வேதநாயகியே ஓம்
சமயபுரத்தாளே ஓம், செண்பக வல்லியே ஓம்
சர்வேஸ்வரியே ஓம், சந்தன மாரியே ஓம்
சத்திய மாரியே ஓம், சாமுண்டிஸ்வரி ஓம்
சர்வசக்தியே ஓம், சாம்பிராணிவாசகி ஓம்
உமா மகேஸ்வரி ஓம், உலகாம்பிகையே ஓம்

உண்ணாமுளையே ஓம், உக்கிரங்கிரியே ஓம்
முண்டக கன்னியே ஓம், மூகாம்பிகையே ஓம்
கோமள வல்லியே ஓம், கோமதி அன்னையே ஓம்
கொப்புடைநாயகி ஓம், கோட்டை மாரியே ஓம்
கொடுங்கனூர் பகவதி ஓம், கோலவிழிதாயே ஓம்,
கோர சொருபியே ஓம், குங்கும தாயே ஓம்,
குண்டல தேவியே ஓம், குரூமாரி தாயே ஓம்,
மலையாள பகவதியே ஓம், மயான காளியே ஓம்,
மங்கள நாயகி ஓம், மான்விழி தேன்மொழி ஓம்,
மருவத்தூர் சக்தி ஓம், மதுரை மீனாட்சி ஓம்,

வல்லத்தரசியே ஓம், வடிவுடை தாயே ஓம்,
வாகேஸ்வரியே ஓம், வக்ர காளியே ஓம்,
விஸ்வரூபினி ஓம், விசாலாட்சியே ஓம்,
சோக நிவாரணி ஓம், ரோக நிவாரணி ஓம்,
புவனேஸ்வரியே ஓம், பூமாரி தாயே ஓம்,
தில்லை காளியே ஓம், சிவசக்தி தாயே ஓம்,
கஞ்சி காமாட்சி ஓம், காசி விசாலாட்சி ஓம்,
நிரந்தரி நிமலியே ஓம், நித்திய கல்யாணி ஓம்,
பவானி தாயே ஓம், பன்னாரி மாரி ஓம்,
நெல்லுகடைமாரி ஓம், நீலி கபாலி ஓம்,

துர்க்கை அம்மனே ஓம், துலுகானத்தம்மனேஓம்,
பராசக்தியே ஓம், பரமேஸ்வரியே ஓம்,
இளங்கண்மாரியே ஓம், ஈஸ்வரி தாயே ஓம்,
அமலாம்பிகையே ஓம், ஆத்மாம்பிகையே ஓம்,
நல்லாம்பிகையே ஓம், நடனாம்பிகையே ஓம்,
திருவுடைநாயகி ஓம், திருமுல்லை தேவியே ஓம்,
எல்லைமுத்துமாரி ஓம், நல்லைமுத்துமாரி ஓம்,
மூங்கில் அம்மனே ஓம், முக்கோண நாயகி ஓம்,
பத்ரகாளியே ஓம், பகவதி தாயே ஓம்,
பாகேஸ்வரியே ஓம், படை வீட்டம்மனே ஓம்,

பச்சையம்மனே ஓம், பைரவி தாயே ஓம்,
மாங்காட்டு மாரியே ஓம், மண்டியம்மாதாயே ஓம்,
முத்தாளத்தம்மனே ஓம், முக்குடைத்தம்மா ஓம்,
சோலையம்மனே ஓம், செல்லி அம்மனே ஓம்,
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம், ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்,
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம், ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

வெக்காளி அம்மன் 108 போற்றி

ஓம் சக்தியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் வெக்காளி அம்மயே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் ஏழைகளின் தாயே போற்றி
ஓம் மங்கல நாயகி போற்றி
ஓம் மதுரையை எரித்தாய் போற்றி

ஓம் ஈசனின் தேவி போற்றி
ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தில்லைகாளியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி
ஓம் அம்மை உமையே போற்றி
ஓம் ஆனந்த வல்லி போற்றி
ஓம் மாயனின் தங்கை போற்றி
ஓம் மணி மந்திரகாளி போற்றி
ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி
ஓம் செங்கண்மா தங்கை போற்றி

ஓம் சிதம்பரம் காளி போற்றி
ஓம் வேலனின் தாயே போற்றி
ஓம் வேல் தந்த வித்தகி போற்றி
ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி
ஓம் சங்கரன் நாயகி போற்றி
ஓம் உறையூரின் தேவி போற்றி
ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி
ஓம் மங்கையர்க்கரசி போற்றி
ஓம் மாணிக்க வல்லி போற்றி
ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் காரணி பூரணி போற்றி
ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரி போற்றி
ஓம் அங்கையர் கண்ணி போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெக்காளி தேவியே போற்றி
ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி

ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி
ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி
ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணி போற்றி
ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி
ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி
ஓம் பஞ்சாசர பகவதி போற்றி

ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி
ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி
ஓம் நவ வடிவான நாராயணி போற்றி
ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சிவ சிவ சிவசங்கரி போற்றி
ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி
ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி
ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி
ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி
ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி

ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி
ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி
ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி
ஓம் முன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி
ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி
ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி
ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி

ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி
ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி
ஓம் வேதாந்த மால வித்தைகியே போற்றி
ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி
ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி
ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி
ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி
ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி

ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி
ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி
ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி
ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி
ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி
ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி
ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி
ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி

ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி
ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி
ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி
ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி
ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி
ஓம் மந்திர சொரூபினி மௌலியே போற்றி
ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி
ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி
ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி

ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி
ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி
ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி
ஓம் மகிமை மிகு கஞ்சி காமாட்சியே போற்றி
ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி
ஓம் மணங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி
ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி
ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்மயே போற்றி.

கருத்துகள் இல்லை: