நின்றார்.. அமர்ந்தார்.. கிடந்தார்: பெருமாளின் மூன்று கோலங்களை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்!
திட்டக்குடி: திட்டக்குடியில் பெருமாளின் மூன்று கோலங்களை, வைகுண்ட ஏகாதசி நாளில் தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினர். திட்டக்குடி, கூத்தப்பன்குடிகாடு, வதிட்டபுரம் ஆகிய மூன்று பகுதிகளிலும் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. இவற்றில் கூத்தப்பன்குடிகாட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசனபெருமாள் கோவிலில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வதிட்டபுரம் திருமகிழ்ந்த வல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில் பெருமாள் கிடந்த கோலத் தில் ஆதிசேஷபடுக்கையில் அருள்பாலிக்கிறார். திட்டக்குடியிலேயே மூன்று கோலங்களிலும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், வைகுண்ட ஏகாதசி அதிகாலை சொர்க்க வாசல் திறப்புடன் மூன்று கோவில்களிலும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பெருமாளின் மூன்று கோலங்களை தரிசிக்க ஆர்வமுடன் வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக