திங்கள், 13 ஜனவரி, 2014

நீர்வேலியில் ஒரு சிவாலயம் இருந்தது.. உங்களுக்குத் தெரியுமா..?

இற்றைக்கு 150 வருஷங்களுக்கு முன் நீர்வேலி வடக்கில் ‘மோதிரக்கேணி’ என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சிவாலயம் இருந்திருக்கிறது.

இக்கோவிலின் அடையாளங்கள் அண்மைக்காலம் வரை அவ்விடத்தில் இருந்து அழிந்து போயின.

இவ்வாலயம் விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதஸ்வாமி திருக்கோவில் என்று அறியப்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஏறத்தாழ ஒரு நூறாண்டுக்கு முன் அக்கோவில் சிதைந்து விட்டது.

கோவிலுக்கு உரியதாக இருந்த திருக்குளம் மட்டும் ஒரு தசாப்தத்திற்கு முன் வரை இருந்தது. ‘மோதிரக்கேணி’ என்று அழைக்கப்பட்டது. இன்றும் இவ்விடம் அப்பெயரால் அழைக்கப்படும் போதும், கோவில் அழிந்து போனது போல, குளமும் தூர்ந்து போயிற்று.

இவ்வாலயத்தில் இருந்த மூலவர் தான் இன்றும் வாய்க்காற்தரவை விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபடப்பெறும் சிவலிங்கமூர்த்தியாகும். ஆதனால், அங்கும் விசாலாக்ஷியம்பாள் சமேத விஸ்வநாதர் என்றே பூஜிக்கப்படுகிறார்.

இந்த லிங்கமும், அம்பாளும், நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்தில் சில காலம் வைத்து வழிபடப்பட்டு, சிவஸ்ரீ பிக்ஷாடனக்குருக்களால், வாய்க்காற்தரவை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாயும், சிலர் குறிப்பிடுகின்றனர்.

இன்று பல புதிய கோவில்கள் எழுந்திருக்கின்றன. அது போலவே, பழைய புராதனமான கோவில் ஒன்று நமது நீர்வேலியில் இருந்து மறைந்திருக்கிறது. இவ்வாலயம் குறித்த சில செய்திகள் நீர்வேலி குறித்த வரலாற்று நூல்களிலும், செய்திகளிலும் காணப்படுகிறது.

எனினும், இவ்வாலயம் குறித்து மேலதிகமாக எவராவது, ஆய்வுகள் செய்தால், சிறப்பான செய்திகள் கிடைக்கப்பெறலாம்..

கருத்துகள் இல்லை: