வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலாபலன்களைப் பெற:

மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து அதன் மீது, படத்தில் உள்ளது போன்று குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டத் திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொள்ளவும்.

முதலில், 'ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு

'ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே
நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:

’ என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி துதிக்க வேண்டும். பின்னர்...

ஓம் அறிவுறுவே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரனே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பணிக்குருவே போற்றி
ஓம் பாதுகாப்பாளனே போற்றி
ஓம் கலைக் குருவே போற்றி
ஓம் மஞ்சள் பிரியனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் தியான மூர்த்தியே போற்றி
ஓம் தென் முக நாயகனே போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் காவலாய் இருப்பவனே போற்றி
ஓம் தனுர் நாதனே போற்றி
ஓம் தயை புரிவாய் போற்றி

- என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டிய பிறகு, உத்தியோக குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்க வேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி விசேஷ கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம்!

இந்த பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன் மூலமந்திரத்தை யும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.

மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே
சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்
மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்
குரு குரு ஸ்வாஹா

பிரஹஸ்பதி கவசம்:

ப்ருஹஸ்பதி சிர:பாது லலாடம் பாதுமே குரு
கர்ணௌ சுரகுரு: பாது:நேத்ரேமே அபீஷ்ட தாயக:
நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:
முகம் மே பாது ஸர்க்ஞா:புஜவ்பாது சுபப்ரத
கரௌ வஜ்ரதர: பாது பªக்ஷளமே பாதுகிஷ்பதி
ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:
நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:
ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:
பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு

கருத்துகள் இல்லை: