அப்பண்ண சுவாமிகள்!
நாலு முழ வெள்ளைக் கதர் வேட்டியும், ஜிப்பாவுமே அவரின் வழக்கமான ஆடைகள். கிராம வாசிகளோடு சேர்ந்து நின்றால், அவரைத் தனியாக இனம் காண முடியாது. அந்த அளவுக்கு எளிமை. ஆனால், அவரது கண்களில் அபரிமிதமான ஈர்ப்பு சக்தி இருந்தது. அவர்தான் அப்பண்ண சுவாமிகள்.அவர் ஒருமுறை திருவண்ணாமலை சென்று சேஷாத்ரி சுவாமிகளைத் தரிசனம் செய்தார். அப்போது, போக்குவரத்து குறைந்த ஒரு பின்தங்கிய பகுதியில் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய். உன் ஆத்ம சாதனையையும் தொடர்ந்து வா! என அறிவுறுத்தினார் சேஷாதிரி சுவாமிகள். அதன்படியே, அப்பண்ண சுவாமிகள் வட குமரையை தன் நிரந்தர தங்குமிடமாகக் கொண்டார். அவ்வூரில் தம் அன்பர்களின் நிதி உதவியுடன் ஒரு பள்ளியை நிறுவினார். குடிநீர் கிணறு தோண்டினார்; மாவட்ட ஆட்சியரையும் வளர்ச்சி அலுவலரையும் அணுகி சாலை வசதிக்கு ஏற்பாடு செய்தார். கோயில்களைப் புதுப்பித்தார். இப்படிப் பல திருப்பணிகள் செய்தார். காஞ்சி மகாசுவாமிகள், ஒருமுறை கள்ளக் குறிச்சியில் இருந்து ஆத்தூருக்குப் பயணம் செய்தார்.வடசென்னிமலையில் பல்லக்கை நிறுத்தச் சொல்லி அருகிலிருந்தவரிடம், இவ்விடம் வைஷ்ணவ குலத்து அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே! அவரை அழைத்து வாருங்கள் என்றார். அப்பண்ண சுவாமிகளை, பெரியவரிடம் அழைத்து வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, காஞ்சி முனிவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து அப்பண்ண சுவாமிகளுக்கு அணிவித்தார். பின்னர் அருகிலிருந்தவர்களிடம், இவர் நல்ல அநுபூதிமான் என்றார்.
அப்பண்ண சுவாமிகள், திருவண்ணாமலை ரமண மகரிஷியையும், திருக்கோவிலூர் ஞானானந்தரையும் தரிசித்து ஆசி பெற்றுள்ளார். இப்படி மகான்களோடு மகானாய் வாழ்ந்த சுவாமிகள், தம் அன்பர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சோமநாதன் செட்டியார் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். சுவாமிகள் தங்கியிருந்த அறை, செட்டியார் பணம் வைக்கும் அறையாக இருந்தது. அச்சத்தின் பேரில் செட்டியார், சுவாமிகள் இரவு தங்கியிருந்த அறைக்கு வெளிப்பூட்டு போட்டுவிட்டார். விடியற்காலையில் எழுந்து குளித்து வழக்கம்போல சிவபூஜையில் ஈடுபட்டார் செட்டியார். சுவாமிகள் தங்கியிருந்த அறை பூட்டியபடியே இருக்க, பொழுது புலர்ந்தவுடன் சுவாமிகள் பல்குச்சியுடன், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்ட செட்டியாருக்கு பெரும் அதிர்ச்சி. தன் தவறை உணர்ந்து சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தண்ணீரைப் பாலாக்கியும், நீரில் விளக்கெரித்தும், காசநோயை குணமாக்கியும், நள்ளிரவில் அந்தரத்தில் நிஷ்டையில் இருந்தும் சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அந்த மகான், நாளைக்கு இங்கு பலர் வருவார்கள். எதற்கும் ஆயத்தமாக இருங்கள் என்று தன் இறுதித் தருணத்தைக்கூட சூசகமாகச் சொல்லி, தமது 48-ஆம் வயதில் முக்தி அடைந்தார். அவரது அதிஷ்டானத்தில், பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் ஜயந்தி விழாவும், முக்தி அடைந்த தினமான மகாளய அமாவாசையில் ஆராதனை விழாவும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
அப்பண்ண சுவாமிகள்!
கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில்...
முழுவதையும் படியுங்கள் நண்பர்களே!!!
மிக பழமை வாய்ந்த பெருமையுடையதும்; காவிரி வடகரை வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும்; பிதுர் தோஷம், ஹத்திதோஷம், சனி தோஷம் போன்ற தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்ற தலம் கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில்.
மூலவர் திருநாமம் : ஸ்ரீவானமுட்டி பெருமாள், பக்தப்ரியன், வரதராஜன்.
இறைவி : ஸ்ரீதயாலட்சுமி {மூலவரின் திருமார்பிலே உள்ள தாயார்}, பூமாதேவி {சிலாரூபம்}
விமானம் : சத்திரவிமானம் (குடை போன்ற அமைப்பு).
தீர்த்தம் : விஸ்வபுஷ்கரணி, பிப்பிலமகரிஷி தீர்த்தம்.
ஸ்தல வரலாறு : குடகுமலைச்சாரலில் வாழ்ந்த நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது நாரத மாமுனிவர் மிக இனிமையாகப் வீணை இசைத்துக்கொண்டிருந்த தெய்வீகமான ஒலியை செவியுற்று வணங்கி அடிபணிந்து நின்றான். முனிவர் உபதேசித்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது. நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் {சிவன்} உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ அங்கேயே தங்கிவிடு என்றது.
அதன்படி மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.
ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் தோன்றிய பெரிய அத்தி மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார். மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் கோடிஹத்தி என அழைக்கப்பட்டது.
கோடிஹத்தி என்றால் சகல பாவமும்நீங்குமிடம் என்று பொருள்.
இதுவே காலப்போக்கில் மருவி கோழிகுத்தி ஆனது. இதன் பின் மன்னன் பெருமாள் பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். பிப்பல மகரிஷி என மன்னனை மக்கள் அழைத்தனர்.
பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை பிப்பல மகரிஷி தீர்த்தம் என அழைக்கிறார்கள்.
பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரையோரத்தில் இன்றும் உள்ளது.
பெருமாள் வானமுட்டி பெருமாள் என்று அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.
பிப்பிலர் அருளிய சனி ஸ்தோத்திரம்
ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ- சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய: படேத்
சனைச்சர கிருதா பீடநகதாசித் பவிஷ்யதி.
கோழிகுத்தி வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட
சரபோஜி மகராஜா தனது யுத்ததோஷம் நீக்க வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியது போல் {வானளாவிய காட்சி}
சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார்.
ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியென்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார்.
சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து ஆலயம் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால்
வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார். மகேந்திரவர்மன் போன்ற பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன.
அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு வைணவ ஆகம விதிப்படி சுற்றுப்பெருமதில்களுடன் ஆலயம் அமைத்து முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சியை வணங்கி விட்டு பலிபீடம் கொடிமரத்தைக் கடந்து ஸ்ரீவிநாயகப் பெருமானை தரிசிக்கலாம். கருடாழ்வாரிடம் உத்தரவு பெற்று உள்மண்டபத்தில் நுழைந்து ஆலயக் கருவறை விமானத்தின் கீழ் 14 அடி உயரத்தில் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மியுடன் விளங்கும் வானமுட்டி பெருமாளின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம் பெறலாம்.
மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்று வரை காயாமல் வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன் வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசய தோற்றத்துடன் அருகில் பூமாதேவி சிலாரூபத்துடன் ஸ்ரீவானமுட்டி பெருமாளின் வடிவழகை மெய்ம்மறந்து மெய்யுணர்வோடு வணங்கலாம்.
பெருமாள் மார்பில் மகாலட்சுமி
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாருக்கு தனிச்சந்நிதி கிடையாது.
உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும் இடப்புறம் யோக நரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்
நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, தைலக்காப்பு மட்டுமே.
பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால் அவர் மேலும் வளராமல் இருக்க தானியம் அளக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாற்றியுள்ளனர். அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும் வருண மூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் செய்து பலனடையலாம்.
வெளிப்பிராகாரத்தின் வடதிசையில் தெற்கு நோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பிலமகரிஷி இம்மூவரும் அருள்புரிகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம் பெருமாள்
தியான ஸ்லோகம் ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன.
ஈசான்ய திக்கில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவராக சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.
சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டு இன்னல்கள் நீங்கப்பெறுகிறார்கள். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற தரிசித்து பயனடையலாம். அனுமன் சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலை மீது தூக்கி வைத்துள்ளதும் சிறப்பு.
திருப்பதி சீனிவாசப் பெருமாளையும்,
சோளிங்கர் யோக நரசிம்மரையும்,
காஞ்சிபுரம் அத்திவரதராஜப் பெருமாளையும் ஒன்றாக தரிசித்த பலன் கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும் என்று ஸ்தலபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் இங்கு வழிபாடுகள் செய்தால் பன்மடங்கு பலனைப் பெறலாம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சனிக்கிழமை வருவதால் வெகுசிறப்பாக இருக்கும். சிந்தையில் மாலவனை நிலை நிறுத்தி வழிபடுவதும் வீதி தோறும் இறைவன் திருநாமத்தைப் போற்றிப்பாடுவதும் ஆடுவதும் வைணவமரபு. பக்தர்கள் கூடும் கூட்டத்தில் இறைவனும் இணைந்து உடனிருப்பான் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ வளப்படுத்தும் வானமுட்டி பெருமாளை வழிபடுவோம்.
ஆலயத் தொடர்புக்கு: எம்.எஸ். வரதராஜ பட்டாச்சார்யார், செல்: 97872 13226.
அமைவிடம் : மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழம் பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கோழிகுத்தி செல்லலாம். மினி பஸ்ஸில் ஆலய வாசலுக்கே செல்லலாம். காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
புதன், 25 செப்டம்பர், 2024
46. ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
46. ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
நாற்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 1061 - 1098]
ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் "சூர்யர்". இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சோமதேவர்".
இந்த ஆச்சார்யாளை ''இரண்டாம் போதர்'' என அழைத்திருக்கின்றனர். முந்தைய குருவுக்கு பணிவிடை செய்த ஒரே சீடர் இவர். குரு சேவையை செய்து கொண்டே எழுதிய நூல் தான் ''கதா சரித்திரம்'’.
இவர் காலத்தில் உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் ''போஜ மஹாராஜன்''. இவர் தீர்த்த யாத்திரை செல்ல முத்துப் பல்லக்குத் தந்திருக்கிறார். அதோடு, இவர் காலத்தில் காஷ்மீர மன்னன் ''கலசன்'', காஞ்சியில் அந்நியர் நுழையாதவாறு தடுக்க உதவி புரிந்திருக்கிறார்.
இவர் கி.பி. 1098 ஆம் ஆண்டு, ஈஸ்வர வருடம், ஆடி மாதம், அமாவாசை அன்று அருணாசல க்ஷேத்திரத்தில் இவர் சித்தி அடைந்தார்.
இவர் 37 ஆண்டுகள் காஞ்சி பீடத்தை அலங்கராத்துள்ளார்.
45. ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று ...
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
45. ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
நாற்பத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 1040 - 1061]
ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, "சிவ சம்பு பண்டிதர்" என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''ஸ்ரீகண்டர்''.
இவர் காவிரி உற்பத்தி ஆகும் சஹ்யமலைத் தொடரிலுள்ள ஒரு குகையில் நீண்ட காலம் கடும் தவமிருந்தார். ''சோம தேவர்'' என்ற ஒரே ஒரு சிஷ்யரை மட்டும் தன்னுடன் இருக்க சம்மதித்தார். "சோமதேவர்" என்பர் தான் கடைசி வரை உடன் இருந்து இந்த ஆச்சார்யருக்கு கைங்கர்யம் செய்து வந்துள்ளார். இந்த ஒருவருக்கு மட்டும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்துள்ளது. அப்படி என்றால் அவரும் ஒரு மஹானாக தான் இருந்திருக்க வேண்டும்... த
னக்கு இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்த ஸ்வாமி ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சிக்கு வந்து சித்தி அடைந்தார்.
இவர் கி.பி. 1061 ஆம் ஆண்டு, சர்வதாரி வருடம், ஐப்பசி மாதம், வளர்பிறை, சப்தமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 21 ஆண்டுகள் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார்.
நவராத்திரி நான்காம் நாள்...
நவராத்திரி நான்காம் நாள் : வழிபடும் முறை!
அக்டோபர் நான்காம் தேதி அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். இதில் அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில் ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர் ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்பர். அதுபோல நவராத்திரியின் நான்காம் நாளான மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை காண்போமே!
நைவேத்யம்: புளியோதரை
தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, ரோஜா
பாட வேண்டிய பாடல்:
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!
Sadashiva Brahmendra Part - 1 ....
Sadashiva Brahmendra Part - 1 ....
In this Kaliyuga, many Gnaanis might have appeared without our knowledge. But as far as I know there are only three who have reached the final stage of spiritual bliss [Gnaanam] viz, Abiram, Manikavachagar and Sadasiva Brahmam. The ancestors of Sadasivan lived in Madurai. His father, Soma Sundara Avadani, who was working towards proficiency in vedic scriptures reached Thiruvisainallur to improve his knowledge in philosophical enquiry as the place brimmed with teachers of repute in the subject.
According to the customs of Brahmins Sadasivan was invested with the sacred thread [Poonal] when he was five. As soon as he completed his studies of Vedas and scriptures, his parents got him married. Within a few years his wife attained puberty. The girl's parents called on Avadani to covey this news. Avadani arranged a feast for them. Sadasivan became hungry when his food got delayed and he asked his mother Parvathi Ammal, "Why so much time? I am hungry!". His mother responded in jest, "Sadasiva, your wife is going to come to our home. It is for that this feast is being organised".
"If there is so much delay when the wife is about to come, what will happen ater she comes", said Sadasivan to his mother coolly before falling into deep contemplation. The mind of Sadasivan which was inclined naturally to discrimination and sublimation, shrunk from worldly life. Like Pattinathar, the Vedanthi quit his home without telling anyone. For a few years his whereabouts were unknown. He took Sanyasa from a great saint [a ripe Sanyasi]. For some time he was engaged in wandering before reaching Thiruvenkadu near Sirkazhi. After having Darshan of Swetharanya who was the presiding deity and Aghora Moorthy who was the special deity of the kshetra, he desired to see Paramasivendral who was a Yathi [Sanyasi].
He already had information that there was a Mahan by name Paramasivendral living there. [Parama Sivendra Saraswathi was one of the descendants of Kanchee Kamakoti Peetam 1539-1586] When he saw Paramasivendra Swamigal, he had a strong desire to adopt him as his spiritual guru. When the Vedanthi expressed his desire to Paramasivendral, he neither accepted it nor rejected it since he had no desire of anyone elevating him to the status of a Guru.
Sadasivan who was an adept in scriptures shone beyond compare in them after coming to his Guru. In this Kali, Sadasiva Bramham and Sri Shankara can be described as the "mounts of sublime arts". Important works authored by him such as 'Bramhasuthra Vrithi', 'Yogasuthra Vrithi', 'Siddhantha Kalpavalli' etc are incomparably great. He was both farsighted and hind sighted.
Tomorrow Continue...
செவ்வாய், 24 செப்டம்பர், 2024
44. ஸ்ரீ பூரண போதேந்திர ரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
44. ஸ்ரீ பூரண போதேந்திர ரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
நாற்பத்தி நான்காவது ஆச்சார்யர் [கி.பி. 1014 - 1040]
ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு கர்நாடக மாநிலத்தவர். இவரது தந்தையின் பெயர் ''சிவா''. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ''ஹரி''.
ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல் பட்டவர். இவர் சிறிய குழந்தைகள் மீது அன்போடு இருந்தார். இவர் குரு இவரின் குருவின் பீடத்தை மிக பெருமையோடு அலங்கரித்தார். இவர் பாரதம் முழுவதும் யாத்திரை செய்து பக்தர்களுக்கு அருளாட்சி வழங்கினார்.
இவர் கி.பி. 1040 ஆம் ஆண்டு, பிரமாதீச வருடம், புரட்டாசி மாதம், தேய்பிறை திரயோதசி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 26 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார்.
அதிசய வழிகள் நான்கு...
அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன. சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம (21618) சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.
சந்தோஷம் : விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!
நல்லோர் இணக்கம் : மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!
விசாரம் : நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!
சமஸ்தம் : அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது. அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.
ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.
இன்னும் சுமந்து கொண்டு நாளை வருகிறேன் 👣
நவராத்திரி ஆரம்பம்....
முதல் நாள் : மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.
இரண்டாம் நாள் : இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்யலாம்.
மூன்றாம் நாள் : துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம் செய்யலாம்.
நான்காம் நாள் : ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா மந்திரம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி மந்திரம் பாராயணம் செய்யலாம்.
ஐந்தாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா மந்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஆறாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.
ஏழாம் நாள் : ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ சாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.
எட்டாம் நாள் : சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.
ஓன்பதாம் நாள் : சரஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.
கன்னிகா பூஜை : நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.
எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.
அன்னை மாயம்மா...
அன்னை மாயம்மா!
ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம் கந்தலை விட மோசமாகத் தென்படும் உடை தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்... இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு முறை தன் பக்தர்கள் கேட்ட போது சொன்னார். கன்யாகுமரி கோவிலில் பகவதியாக இருப்பவள் தான் கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மஹான்களைப் பற்றி மஹான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில் அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர ஒருவரும் உதவி செய்யவில்லை. மாயம்மா அவனிடம் எழுந்திரு மகனே இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.
ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால் குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர் நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவு தான்! மடியில் கிடந்த நாய் துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர் மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம். இதன்பின்னர் பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன் தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். இந்நிலையில் அவரது பக்தரான ராஜமாணிக்கம் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.
வலங்கைமான் கோவிந்த செட்டியார்...
வலங்கைமான் கோவிந்த செட்டியார்!
செட்டியார்வாள், காணாமால் போன என் பரம்பரை நகைகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மயிலம் ஜமீன்தார் அழாக் குறையாகக் கூறினார். கோவிந்த செட்டியார் என்ற சோதிடர் கண் மூடினார். ஜமீன்தாரின் படபடப்பு தணிந்தது. சோதிடர் என்ன கூறுவாரோ என்ற எதிர்பார்ப்பில், ஜமீன்தார் நிலைகொள்ளாதிருந்தார். சோதிடர்கண் திறந்து, ஜமீன்தார்வாள், உமது மாளிகையில் உள்ள கிணற்றில் அந்த நகை முழுவதும் பத்திரமாக இருக்கு என்றார். ஜமீன்தார் வாயெல்லாம் வெற்றிலைப் பல்லாக, போன உயிர் வந்ததுபோல் ஓடினார். உடன் வந்த கணக்குப் பிள்ளையைச் சோதிடர் தனியாக அழைத்தார். அவரை உற்றுப் பார்த்து, ஏன் ஓய், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றீர்? ஜமீன்தாருடனே இருந்து கொண்டு, அவரது சொத்தையே திருடிவிட்டீர் இல்லையா? என்று சற்று கடுமையாகக் கேட்டார் செட்டியார். கணக்குப் பிள்ளை செட்டியாரின் காலில் வீழ்ந்தார். சரி சரி இனிமேலாவது தர்ம வழியில் வாழ முயற்சி செய்யும் என அவரை மன்னித்து அனுப்பினார். கோவிந்த செட்டியாரின் சித்திகளும் அதன் சக்திகளும் பிரசித்தி பெற்றவை. அதைவிட முக்கியம் தான் சம்பாதித்ததை ஏழைகளுக்காகச் செலவழிப்பார். ஏழைகளின் ஆடுகள், கோழிகள் காணாமல் போய்விட்டால், அந்த ஜனங்கள் அவரது ஓட்டு வீட்டின் முன் நிற்பார்கள். சோதிடர் அவர்களைப் பார்த்ததும், காணாமல் போனதைப் பற்றி உடனே கூறிவிடுவார்.
இப்படியாக அவரது புகழ் தனது சொந்த ஊரான வலங்கைமானிலிருந்து மைசூர் வரை சென்றது. வந்து விட்ட சங்கடங்களையும் வரப் போகும் அச்சுறுத்தல்களையும் தீர்த்துக் கொள்ள பெரும் செல்வந்தர்களும் ஆங்கிலேய கனவான்களும் வந்தனர். சோதிடர் இப்படி வாழ்ந்து வந்தபோது அவரைக் காண, ஜீவர்களைக் கடைத்தேற்றும் சிந்தாமணி சுவாமி விவேகானந்தர் வந்தார். சுவாமிஜி அமெரிக்கா செல்வதற்கு முந்தைய காலம். 1893-ஆம் ஆண்டு பரிவ்ராஜகராக சுவாமிஜி தமிழ்நாட்டில் சஞ்சரித்து வந்தார். சென்னையில் சுவாமிஜி இருந்த நேரம் ஒரு நாள் கனவு ஒன்று கண்டார். திடுக்கிட்டு எழுந்து தவித்த தம் குருவிடம் அளசிங்கப் பெருமாள், சுவாமிஜி, ஏதாவது சொப்பனமா? என விசாரித்தார். ஆம் அளசிங்கா. என் தாய் தவறி விட்டதாக ஒரு கனவு. அவரைப் போய் பார்த்து வர மனம் விழைகிறது. ஆனால் முடியாதே... என்று விவேகானந்தர் ஒரு தலைமகனாகத் தனியே தவித்தார். இது வெறும் கனவுதான் சுவாமிஜி, விடுங்கள் என்று மன்மத் பட்டாச்சார்யர் என்ற அன்பர் ஆறுதலளித்தார். சுவாமிஜி அமைதியாகவில்லை. அதைக் கவனித்த அளசிங்கர் வலங்கைமான் சோதிடரிடம் சென்று குறி கேட்டால், தெளிவு பிறக்கும் என்றார். புறப்பட்டார் சுவாமிஜி இந்த இருவருடன்.முதலில் ரயிலில், பின் நடந்து வலங்கைமானை அடைந்தார்கள். சோதிடரின் வீட்டைத் தேடிப் பிடித்தனர். அளசிங்கா, இவரைப் பற்றி நீ பெருமையாகச் சொல்கிறாய். எனக்கு இவரிடம் மூன்று கேள்விகள் உள்ளன. அவற்றைக் கேட்டு இவரின் சித்திகளைச் சோதித்துப் பார்க்கலாம் என்றார் சுவாமிஜி. சோதிடரின் கூரை வீட்டுக்குள், தாழ்வாரத்தில் மன்மத், அளசிங்கர் மற்றும் சுவாமிஜியும் கோவிந்தசெட்டிக்காகக் காத்திருந்தனர். கோவிந்த செட்டி வந்தார். அவரது முகம் காய்ச்சல் வந்ததுபோல் கருமையாக, இறுக்கமாக இருந்தது. வந்துள்ளவர்களைப் பார்த்தும் பார்க்காதவர் போல் இருந்தார். போய் விடலாமா என்று சுவாமிஜி சீடரைக் கேட்டார். அதற்குள் செட்டியாரே அவர்களிடம் அமைதி காக்க சைகை செய்தார். பிறகு எழுந்து வந்து, என் உடம்பு சரியில்லை. இன்று சோதிடம் சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆகணும்னா பத்து ரூபா எடுத்து வையும் என்றார். சீடர்கள் பணத்தைத் தரத் தயாராய் இருந்தனர். பிறகு செட்டியார் தனது அறைக்குச் சென்றார். முகம் கழுவினார். வெளியே வந்தார். சுவாமிஜியை உற்றுப் பார்த்தார். அந்தத் திருமுகத்தில் செட்டியார் என்ன கண்டாரோ? சுவாமிஜியைக் கனிவுடன் பார்த்தார். உடனே வீட்டினுள்ளே சென்றார்.விபூதிப் பையை எடுத்து வந்து சுவாமிஜியிடம் நீட்டி, சாமி, எனக்கு இந்த விபூதியைப் பூசினால் என் காய்ச்சல் குணமடையும், பிறகு நான் உங்களுக்குக் குறி சொல்வேன் என்று தமிழில் கூறினார். அளசிங்கர் ஆங்கிலத்தில் சுவாமிஜியிடம் கூறினார். சுவாமிஜி வினயத்துடன், ஐயா என்னிடம் அது போன்ற சித்திகள் ஏதுமில்லை என்றார். ஆனாலும் செட்டியார் சுவாமிஜி விபூதி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சுவாமிஜி விபூதி வழங்கினார். உடனே செட்டியார் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி, அதை சுவாமிஜியிடம் கொடுத்துக் கையொப்பமிடும்படிக் கூறினார். பிறகு அந்தத் தாளை மன்மத்தின் சட்டைப் பையில் வைத்தார். சுவாமிஜிக்கு இது வியப்பை ஏற்படுத்தியது. செட்டியார் சுவாமிஜியை ஒரு நோட்டமிட்டபடி, சாமி, துறவியான நீங்கள் ஏன் உங்கள் அம்மாவைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? என யாரும் எதுவும் சொல்வதற்கு முன்பே கேட்டார். தமது மனதில் உள்ளதைத் தெளிவாகச் சொல்பவரைப் பார்த்து வியந்த சுவாமிஜி அவரது கேள்விக்கு விடையாக, ஐயா, ஆதிசங்கரர்கூட தமது தாயைப் பற்றிக் கவலைப்பட்டாரே...! என்றார். அந்தப் பதிலால் மகிழ்ந்த செட்டியார், உங்கள் தாய் நலமாகவே இருக்கிறார் என்றார்.
செட்டியார் மிக அமைதியாக மன்மத் சட்டைப் பையிலிருந்து காகிதத்தை எடுக்கச் சொன்னார். அதில் சுவாமிஜியின் தாயாரின் சொந்தப் பெயரும் அவரைப் பற்றிய பல தகவல்கள் எழுதப்பட்டிருந்ததையும் தெளிவாகக் கூறினார். தமது குருவின் திருநாமத்தைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சோதிடர் சரியாகக் கூறினார். சாமி, அதுவும், அதோடு நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த திபெத்திய மந்திரத்தையும் நான் ஏற்கனவே காகிதத்தில் எழுதிவிட்டேன் என்றார். சுவாமிஜி அளசிங்கரைப் பார்த்தார். அளசிங்கர் வாசித்தார். உங்களது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்துவிட்டார். ஆனாலும் அவர் சூட்சும சரீரத்தில் இருந்தபடி உங்களைக் காத்து வருகிறார் என்று இருந்தது. தாய் நலமென அறிந்ததுடன் தாயும் தந்தையுமாகிவிட்ட குருதேவர் தம்மைக் காத்து வருகிறார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானதால் சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. பிறகு செட்டியார், சுவாமி, நீங்கள் விரைவில் தூர தேசங்களுக்குச் சென்று நமது மதத்தைப் பிரச்சாரம் செய்வீர்கள் என்றார். அளசிங்கர் உடனே பெருமிதமாய் சுவாமிஜியை நோக்கினார். சுவாமிஜி சோதிடரின் நடவடிக்கைகளைப் பார்த்தார். சுவாமிஜியிடமிருந்து அவர் பணம் பெற மறுத்துவிட்டார். தமது குடும்பத்தினரை அழைத்து சோதிடர், வாங்க எல்லோரும். இவர் ஒரு பெரிய பரமஹம்சரோட சீடர். காலில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்க. சாமி கையிலிருந்து விபூதி வாங்கிக்குங்க என்றார். அதன்படியே நடந்தது. சுவாமிஜிக்காகச் சோதிடர் நீண்ட நேரம் செலவழித்ததால், வெளியில் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்களின் கூட்டம் அதிகரித்தது.சுவாமிஜியிடம் சோதிடர் கூறிவிட்டு, வெளியே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குக் குறி சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். கூடத்தில் இருந்த சுவாமிஜியிடம், சுவாமி, நீங்கள் அடியேனின் சேவையை ஏற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். சோதிடரின் வற்புறுத்தலுக்காக சுவாமிஜி அவர் தந்த பாலை அருந்தினார். பிறகு சுவாமிஜி, ஐயா, இந்த அனுமாஷ்யமான ஆற்றலை எப்படி பெற்றீர்கள்? என்று கேட்டார். முதலில் சோதிடர் பதில் கூறவில்லை. பிறகு அவர் சுவாமிஜியிடம் மெல்ல, சாமி தேவியின் சகாயத்தால் பெறப்பட்ட சித்தி மந்திரங்களால் இவை நடைபெறுகின்றன என்றார். ஓ அப்படியா! என்று சுவாமிஜி செட்டியாரிடம் ஏதோ கூற நினைத்தும், அந்தக் கிராம மக்களைப் பார்த்து ஏதும் கூறாது கிளம்பினார். கோவிந்த செட்டியார் குறி சொன்னவாறே, சுவாமிஜி தமது குருதேவரின் அருளால் மேலைநாடுகளில் இந்து மதத்தைப் பரப்பினார். 1897-ல் தாயகம் திரும்பினார் வேதாந்த வெற்றி வீரராக. இலங்கை முதல் ஒவ்வோர் ஊராகச் சமய முழக்கமிட்டபடி வந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணத்தில் வேதாந்தத்தின் செய்தி என்ற அற்புத உரையை நிகழ்த்தினார் சுவாமிஜி. ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதிய அந்தக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் இருந்தார். சுவாமிஜியைப் பார்த்ததும், அடடா, இவர் முன்பு வலங்கைமான் வந்த வங்கத் துறவி யல்லவா என்று நினைவுகூர்ந்தார். அன்று பிரபலமாகாதவர், இன்று பிரபஞ்ச நாயகனாக வந்துள்ளாரே என ஒதுங்கியே நின்றார்.
கோவிந்த செட்டியாரை சுவாமிஜி பார்த்து விட்டார். உடனே அருகிலிருந்த ஒருவரிடம், அந்தச் சோதிடரிடம் என்னைச் சந்திக்கும்படி கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். விவரமறிந்து செட்டியார் சுவாமிஜியைத் தனியே சந்தித்தார். சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். சுவாமிஜி நலம் விசாரித்தார். ஓரிரு பொதுவான கேள்விகளைக் கேட்டுவிட்டு, சோதிடரே, உங்களுக்கு வாய்த்துள்ள சித்திகள் உங்களுக்குப் பெயரும் புகழும் பணமும் தருகின்றன. தவறில்லைதான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கையைக் கடைத்தேற்றி விடுமா? என்று சுவாமிஜி கேட்டதும், கோவிந்த செட்டியார் மவுனமானார். சுவாமிஜியின் தீர்க்கமான கண்களிலும் அவரது வார்த்தையிலும் உள்ள சத்தியத்தைக் கண்டார் சோதிடர். அன்பரே, சமயச் சடங்கு, சமுதாயக் கடமை போன்ற வாழ்க்கை எல்லாம் சரிதான். ஆனால், ஆன்மிகம் என்று வந்தால் நீங்கள் எங்கு ஆரம்பித்தீர்களோ, அங்குதானே நிற்கிறீர்கள்... இல்லையா? செட்டியாரின் கண்களில் நீர் பெருகியது. அது சுவாமிஜியின் நெஞ்சில் ஊற்றெடுத்த கருணையால் வந்த விளைவு. கைகூப்பி, தன் ஜீவனைக் கடைத்தேற்றுமாறு பணிந்து நின்றார் செட்டியார். சுவாமிஜி ஆனந்த மேலீட்டால் அவரை ஆலிங்கனம் செய்தார். ஸ்ரீராமர் அனுமனுக்குத் தந்த ஆசிர்வாதம் போன்றதல்லவா, அது! சுவாமிஜி புறப்பட்டார். சோதிடரும் தமது நூறு சதவிகித ஆன்மிக வாழ்வை நோக்கிப் புறப்பட்டார். இதன் பின் சோதிடருக்கு எல்லாம் முன்பு போலவே இருந்தது. ஆனால், தெய்வம் அவருக்கு முன்பு எல்லாமாகி நின்றது. சில வருடங்களுக்குப் பிறகு....
ஒவ்வொரு வருடமும் நவமியன்று ஸ்ரீராமரின் ஊர்வலம் சோதிடரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டு உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த ஆண்டு சோதிடர் ஏனோ, உறியடித்தல் நிகழ்ச்சி தமது வீட்டு முன்பு நடக்க வேண்டாம் என்று கூறினார். ஸ்ரீராம ஊர்வலம் புறப்பட்டது. வாசலிலிருந்து சோதிடர் ஸ்ரீராமரைப் பக்தியுடன் வணங்கி நின்றார். உறியடித்தலைத் தன் வீட்டுமுன்பு நடத்த வேண்டாம் என்று சொன்ன சோதிடரின், தொங்கிக் கொண்டிருந்த வாழ்க்கை எனும் உறியடிப் பானையை அன்று ஸ்ரீராமரே அடித்து அனுக்கிரகித்தார் போலும். ஆம், சோதிடர் அன்று பகவானின் தரிசனமே பெற்றார். ஸ்ரீராமதரிசனம் பெற்ற அந்த மேலான நிலையிலேயே ராமருடனேயே ஐக்கியமானார். இது சத்குருவின் ஸ்பரிச தீட்சை தந்த விளைவோ! மான் சஞ்சலமே உருவானது. தனது அன்னை குறித்த சஞ்சலத்திற்காக வலங்கைமானுக்கு வந்த சுவாமிஜி, கோவிந்த செட்டியாருக்குச் சம்சார சஞ்சலத்தை நீக்கி யோக ÷க்ஷமம் வழங்கினார். அது வலக்கையில் மானைக் கொண்ட சிவனின் கருணையைப் போன்றதல்லவா!