அக்னி
காற்றின் வகையாக தசவாயுக்களும் அவற்றின் 7 பிரிவுகளும் எப்படி நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் வழி நடத்துகின்றதோ ! அதே போல அக்னியும் பலவகையாக நம்மையும் நம் செயல்களையும் வழி நடத்தி சாட்சியாய் ஆதராமாய் உள்ளது.
கிட்டதட்ட 27 வகையான அக்னி உண்டு 27 நட்சத்திர கணக்காட்டம்.
கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணம், நிர்மந்த்யம், வைத்யுதம், சூரம், ஸ்ம்வர்த்தம், லவுகீகம், ஜடாரம், விஷகம், க்ரவ்யாத், க்ஷேமவான், வைஷ்ணவம், தஸ்யுமான், பலதம், சாந்தம், புஷ்டம், விபாவஸு, ஜ்யோதிஸ்மான், பரதம், பத்ரம், ஸ்விஷ்டக்ருத், வஸுமான், க்ருது, ஸோமம், பித்ருமான், அங்கிரஸ் என்பன...
இதில் ஒன்னு ரெண்டுதான் நமக்கு தெரியும்.
உதாரணமா முதல் மூனு அக்னியையும் நித்யம் அக்னி ஹோத்திரம் பண்ணறவங்க ஆராதிப்பாங்க.💥
ஆக்சுவலா யாகம் பண்ணும்போது யூப கம்பம் நடுவாங்க. அது சரியா 21 முழம் இருக்குமாறு வெப்பாங்க... அது கணக்கு என்னான்னா... முதல் மூனு அக்னிக்கும் ரிஷிகள் 7பேருக்கும் கணக்கு பண்ணி 21 முழம் இருக்கறதா சொல்லுவாங்க..
பசுவின் முகத்தில் இந்த 3 அக்னி இருக்கறதா கணக்கு. விபாவஸு அக்னி அஸ்ட வசுக்களில் ஒருவரா இருக்கார்.⚡️⚡️⚡️
ஔபாசன கர்மாவை பண்ணும் போது க்ருதுவை ஆராதிப்பங்கன்னு நினைக்கேன்... (சரியா தெரியல... தெரிஞ்சவங்க சொல்லலாம்).
எது எப்படியோ நமக்கு முக்கியமான அக்னி ஜடாரம்தான்🔥🔥🔥 ஏன்னா அதுதான் நாம சாப்பிடும் ஆகாரத்தை எல்லாம் ஜீரணம் செய்யுது . அது மட்டும் வேலை செய்யல... நோ அவுட்கோயிங் ... நமக்கெல்லாம் குதிரை வால் மயிர் நுனியின் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அந்த ஜடார அக்னி இருக்காம். அதுக்கே இப்ப்டி சாப்புடறோம்...
பீமசேனருக்கும் அவரின் அம்சமான மத்வருக்கும் இந்த ஜடாரம் கட்டை விரல் அளவுக்கு இருந்ததா சொல்லுவாங்க. அதனால்தான் எம்புட்டு போட்டாலும் அவிகளுக்கு பத்தாம போகுது. எல்லாத்தையும் முழுங்கிடுவாங்க. அதனாலே பீமருக்கு விருகோதரன்ன்னு பேர்.
அதான் பெரும்பாலும் அந்தகால பெண்கள் காலம்ப்றம் அடுப்பை பத்த வெச்சி அட்சதையை போட்டு நமஸ்காரம் பண்ணிதான் அன்றைய சமையல் தொடங்கினாங்க...
ஆனா இன்னைக்கு ... நோ கமெண்ட்ஸ்🙅🤦♂️🤫
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 5 ஆகஸ்ட், 2021
அக்னி
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021
உபநயனம்
உபநயனம்....
உத்திராயனத்தில் செய்வது சிறந்ததாக இருக்கும்.... தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம். யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு, செவ்வாய் நீச மில்லா காலங்களிலும்
செய்ய வேண்டும்.
வேதம் பயிலக்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது. பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும். கசரம் சுத்த மாக இருக்க வேண்டும். பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும். கரி நாள், தனிய நாட்களில் செய்ய கூடாது. மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது. அமாவாசை, பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.
பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது. அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம். திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம். வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது. ஒரே நாளில் இரண்டு, நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம். திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாத பிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது. திதி, நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது. பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை.
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும். அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை.
செவ்வாய், 29 ஜூன், 2021
அத்திரி மகரிஷி
அத்திரி மகரிஷி
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானச புத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார். ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள். ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள். ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே. சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவி<லும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே. யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர் வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்தி<லும், ஜோதிட சாஸ்திரத்தி<லும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும். பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.
புதன், 5 மே, 2021
அக்னிபுரீஸ்வரர் கோவில்
ருவாரூர் மாவட்டம் )
நட்சத்திர கோவில்கள்
நட்சத்திரம் : சதயம்
ஸ்தல வரலாறு : அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
வாழ்த்தி பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்:பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.
ஸ்தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.
ஸ்தலபெருமை:அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்:
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.
அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.
கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள் . அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.
சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.
திருவிழாக்கள் :வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பொது தகவல்:சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை செய்தல் இத்தலத்தின் மிகவும் விசேசமான பிரார்த்தனை ஆகும். புதிய வீடு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை பண்ணி அந்த செங்கலை எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் சுயம்புவாய் வீற்றிருக்கும் அக்னீசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர்,விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோவில் விவரங்கள்
மூலவர் : அக்னிபுரீஸ்வரர்,சரண்யபுரீஸ்வரர், கோணபிரான்
பிரத்தியக்ஷ வரதர்
அம்மன் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் :திருப்புகலூர்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு
அமைவிடம் :திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.
அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
காஞ்சில் பார்க்க வேண்டிய கோயில்கள்
இன்று அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
மூலவர் : ஏகாம்பரநாதர்
உற்சவர் : ஏகாம்பரநாதர், ஏழவார்குழலி
அம்மன்: காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : சிவகங்கை
ஆகமம் : சிவாகமம்
பழமை : 3500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.(திருநாவுக்கரசர்)
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
திருவிழா : பங்குனி உத்திரம் பெருவிழா-13 நாட்கள் நடைபெறும் வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.போன்:+91- 44-2722 2084.
பொது தகவல் : மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. ராஜகோபுர கலசம் மட்டும் 11 அடி உயரம் கொண்டது.
பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர். இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்த போது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்க வில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும் படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
அப்பர்
தெரிந்து கொள்வோம் அப்பரை பற்றி பாகம்-1
அப்பர் : இவர் திருவாமூரில் வளோளர் குடியில்
பிறந்தார்.தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். இவரது பிள்ளைத் திருநாமம் "மருள்நீக்கியார்" என்பதாகும். இளமையில் பெற்றோரை இழந்த மருள் நீக்கியாரைத் தமக்கை திலகவதியார் அன்போடு வளர்த்தார்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம்
ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம் 19:02:21
ஸூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்புவதால் ரத ஸப்தமி என்று பெயர். இந்நாளில் ஏழு எருக்க இலைகள், அக்ஷதை, அருகம்புல், பசுவின் சாணம், மஞ்சள் பொடி, ஆகியவற்றை தலையில் வைத்து கிழக்கு முகமாக கீழ் கண்ட ஶ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும். இதற்கு அர்க்கபத்ர ஸ்நானம் என பெயர்
सप्त सप्तिप्रिये देवि सप्त लोक प्रदीपिके ।
सप्तजन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम् ।।
एतज्जन्म कृतं पापं कृतं सप्तसु जन्मसु ।
सर्वं शोकंच मोहंच माकरी हन्तु सप्तमी ।।
नौमि सप्तमि देवि त्वां सप्तलोकैक मातरम् ।
सप्तार्कपत्र स्नानेन मम पापं व्यपोहय ।।
ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்தலோக ப்ரதீபிகே ।
ஸப்தஜந்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் ।।
ஏதஜ்ஜந்ம க்ருதம் பாபம் க்ருதம் ஸப்தஸு ஜந்மஸு ।
ஸர்வம் ஶோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்து ஸப்தமீ ।।
நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம் ।
ஸப்தார்க்கபத்ர ஸ்நாநேந மம பாபம் வ்யபோஹய ।।
என்று ஸ்னானம் செய்து
*रथ सप्तमि स्नानाङ्गम् अर्घ्य प्रदानम् करिष्ये*
*ரத ஸப்தமி ஸ்நாநாங்கம் அர்க்ய ப்ரதாநம் கரிஷ்யே*
என்று ஸங்கல்பம் செய்து கீழே உள்ள ஶ்லோகத்தால் அர்க்யம் கொடுக்கவும்.
सप्तसप्ति रथस्थान सप्तलोक प्रदीपक ।
सप्तम्या सहितो देव गृहाणार्घ्यं दिवाकर ।।
दिवाकराय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यं ।।
ஸப்த ஸப்தி ரதஸ்தான ஸப்த லோக ப்ரதீபக ஸப்தம்யா ஸஹிதோ தேவ க்ரஹாணார்க்யம் திவாகர திவாகராயநம:இதமர்க்யம்
என்று தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு பகவானுக்கு அர்க்யம்விடவும்.
வியாழன், 11 பிப்ரவரி, 2021
பிராமணர்கள் அதுவும் வைதீக குடும்பத்தில் இருப்பவர்கள் மடி, ஆச்சாரம் என்று சொல்லிக் கொண்டு கண்ட இடத்திலும், இதராவாத்திலும் சாப்பிடுகிறார்கள். இதனால் இவர்களின் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் இவை அனைத்தும் போய் விட்டதே. பிறகு எப்படி இவர்களை மற்றவர்கள் மதிப்பார்கள். அடியேன் எல்லோரையும் சொல்ல வில்லை. ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். அதனால் சொன்னேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
இல்லை ஜி தேவையான பதிவு தான் ஜி... அடியேன் சொந்தகாரர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவர்களின் அக்கா குடும்பம் ரொம்ப ஆச்சாரம். அதனால் அடியேனிடம் இட்லி, தயிர் சாதம் கேட்டார்கள். அடியேனும் ஆத்துக்கு வந்து குளித்து இட்லி, தயிர் சாதம் செய்து எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு புறப்பட்ட அவர்கள் வழியில் அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்து விட்டார்கள். இது நேற்று முன் தினம் தான் எனது மாமாவிடம் பேசும் போது மாமா சொன்னார். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு அடியேனிடம் கேட்டு இருக்க வேண்டாம். ஒரு வேளை அவரிகளுக்கு பிடிக்க வில்லை என்றால் ஏதாவது ஏழைக்கு கொடுத்து இருக்கலாம். இப்படி தூக்கி எறிந்ததால் தான் இந்த பதிவே போட்டேன். மற்ற படி யாரையும் குறை கூறுவது அடியேனின் விருப்பம் இல்லை.
புதன், 10 பிப்ரவரி, 2021
வேதம் கூறும் ஒரே ஹோமம்
வேதம் கூறும் ஒரே ஹோமம்
ஹோமங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம், ஒன்று காம்யார்த்தமான ஹோமங்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டிச் செய்வது. இரண்டாவது ப்ராயஸ்சித்த ஹோமங்கள், இங்கு நாம் சற்று விரிவாக பார்க்க போகும் கூஷ்மாண்ட ஹோமம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்று சொல்லாம். யாகம், ஹோமம் வித்தியாசம். யாகம் ஹோமம் இவை இரண்டும் ஒன்றல்ல, அக்னிஹோத்ர அக்னியில் செய்யப்படுவது யாகங்கள் {அஸ்வமேதம், ஸோம யாகம், வாஜபேயம் முதலியவை} யாகங்களை ஸ்ரௌத கர்மாக்கள் எனக் கூறுவர்.
ஏகாக்னியில் அதாவது ஔபாஸன அக்னியில் அல்லது லௌகீ காக்னியில் செய்யப்படும் அக்னி காரியங்கள் ஹோமங்கள் என குறிப்பிடலாம்.
ஹோமங்கள் ஸ்மார்த்த கார்மாக்கள் என அழைக்கப்படுகின்றன. பல ரிஷிகளும், மஹான்களும் தங்களது தெய்வீக த்ருஷ்டியினால் தகுந்த ப்ரயோகங்களுடன் பல ஹோமங்களை நமக்கு தொகுத்து அருளியுள்ளார்.
எந்த ஹோமமும் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப் படவில்லை. கூஷ்மாண்டஹோமத்தை மட்டும் தான் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப்பட்டுள்ளது. கூஷ்மாண்ட ஹோம விவரங்கள் யஜுர் வேதத்தில் பொக்கிஷமாக அமைந்துள்ளது. தைத்தீரிய ஆரண்யக பாகத்தில், இரண்டாவது ப்ரஸ்னத்தில் கூஷ்மாண்ட விதிமுறைகள் உள்ளன.
ஏன்? எதற்கு?
பஞ்ச மஹா பாவத்திற்கு ஸமமான பலவிதமான பாபங்களை கூஷ்மாண்ட
ஹோமத்தினால் தொலையும். சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர் அவர்கள் இது விஷயத்தில் கூறுவதை கேளுங்கள். “இந்த ஹோமத்தை உபநயனம், விவாஹம், முதலிய நல்ல கர்மாக்கள் செய்வதற்கு முன்தினம் செய்ய வேண்டும். இன்னும் எப்பொழுதாவது ஒருவன் தான் ஏதாவது பாபத்தை செய்து விட்டேனோ, அதனால் தனக்கு சுத்தமற்ற தன்மை வந்திருக்குமோ என சந்தேகப்பட்டால் அப்பொழுது இந்த ஹோமத்தை செய்யலாம் என்று வேதம் கூறுகிறது’. பல பாபங்களை தொலைய வேண்டி பல மந்த்ரங்கள் இந்த ஹோமத்தில் காணக் கிடைக்கின்றன. என்னவெல்லாம் பாபங்கள் போகும் என நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.? அவை இதோ
• தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தவறுகள்.
• பிழைப்புக்காக (குடும்பம் நடத்துவதற்காக) வாக்கினால் சொல்லிய பொய்கள்.
• பிறரைப் பற்றி குற்றங்கூறி (கோள் மூட்டுவது) அதனால் ஏற்படும் பாபங்கள்.
• தாயின் கர்பத்தில் நாம் வாசம் செய்த சமயத்தில் நம்மை அறியாமலேயே நாம் தாய்க்கு ஏற்படத்திய இன்னல்களுக்கும், இந்த ஹோமத்தில் ப்ராயஸ்சித்தம் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல தாய் தகப்பனாருக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நாம் ஏற்படத்திய மனவருத்தங்கள்.
• பல ரோகங்களை அளிக்கும் பாபங்கள்.
• கெட்ட நடத்தை முதலிய செயல்களால் ஏற்பட்ட பாபங்கள்.
• அலக்ஷ்மி (ஏழ்மை) ஏற்படுவதற்காக உள்ள பாபங்கள்.
• பெரியவர்களை நீ என்று சொல்லியது, வைதிகாளை அல்லது ஆச்சார்யர்களை (குல குருமார்களை) அவமானப் படுத்தியது போன்ற பாபங்கள்.
• இப்படி ஏகபட்ட பாபங்கள் விலக வேண்டுமென இந்த ஹோமத்தில்
வேத மந்திரங்கள் மூலம் வேண்டப்படுகின்றது.
ஒருவர் கடன் வாங்கி கொண்டு கொடுக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டால் இந்த ஜன்மத்திலேயே நிறைய பொருள்களை அடைந்து அந்த கடனை கொடுக்கும் படியான நிலைமை அவனுக்கு ஏற்படுவதற்கு இந்த ஹோமம் வகை செய்யும். நல்ல சரீரம், நல்ல மனம் இந்த ஹோமத்தினால் அடையலாம். நமது யோக்யதையும் கூடும். கடல் கடந்து சென்று வந்தவர்களும், அந்த தோஷம் நீங்க சுத்தியாக இப்போது கூஷ்மாண்ட ஹோமத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இதுவும் ஏற்புடையதே.
எப்படி செய்வது?
பலன்களை அதிகம் தரவல்ல ஹோமமாக இருந்தாலும் இதைச் செய்வது மிகவும் சுலபம். அதிக எண்ணிக்கையில் ருத்விக்குகளோ, அதிக பணமோ இல்லாமலும் செய்யலாம். குறைந்தபட்சமாக ஆசார்யனைத் தவிர ஓரிருவர் இருந்தால் போதும். ஹோம த்ரவ்யங்களின் பட்டியலும் மிக நீளமாக இல்லாமலிருக்கலாம். வசதியுள்ளவர்கள் விஸ்தாரமாகச் செய்ய வேண்டும். தானங்கள் உண்டு. அவை அவரவர்களின் சக்தியைப் பொறுத்தது.
கவனிக்க வேண்டிய விஷயம் மேலும் ஒன்று. கூஷ்மாண்ட ஹோமத்தில் பிரதான ஆஹூதிகளை தவிர ஹோம அங்கமாக பல கிரியைகள் அம்சங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக (1) தீக்ஷாநியமம், (2) முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் (3) ப்ராத ஸ்நானம் (4) நாந்தீ சிரார்த்தம் ஆகியவைகளில் சிரத்தை அதிகம் காண்பித்தல் அவசியம்,
மற்றுமொரு விசேஷம்
பொதுவாக எல்லா ஹோமங்களிலும் ஸங்கல்பம் ஆனதும் வாத்யார் கர்த்தாவிடமிருந்து “ ஆசார்ய வர்ணம்” பெற்றுக் கொண்டு வந்திருக்கும் மற்ற சாஸ்திரிகளின் உதவியோடு கர்த்தாவின் சார்பில் அவரே ஹோமங்களை நடத்தித் தருவார். நாம் இதை அறிந்திருப்போம். ஆனால் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தில் வாத்யார் சொல்ல சொல்ல கர்த்தாவே நேரிடையாக ஔபாஸன அக்னியில் தானே செய்ய வேண்டும். மொத்தத்தில் இது ஒரு சிரேஷ்டமான வைதீக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தினால் விலகுகின்றன. சகல மங்களங்களும் உண்டாகும் மன சாந்தி உறுதி. மேலும் விவரங்களை ஆத்து வாத்தியாரிடம்கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும்.
அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்
அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்
மூலவர் : அஞ்சலி வரத ஆஞ்சநேயர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : சின்னாளபட்டி,
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:சித்திரை மாதப்பிறப்பன்று பத்தாயிரம் கனி அலங்காரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் முதலாவது சனியன்று ராஜ அலங்காரம் (பேண்ட், சர்ட் அணிந்த அலங்காரம்), இரண்டாவது சனியன்று செந்தூர அலங்காரம், மூன்றாவது சனியன்று பச்சை அலங்காரம், 4வது சனியன்று சஞ்சீவிமலையை தூக்கிய அலங்காரம், 5வது சனியன்று பத்மாசனத்தில் தியான அலங்காரம் ஆகியவை செய்யப்படும். தை மாதப்பிறப்பன்று 5008 கரும்பு அலங்காரத்தில் காட்சி தருவார். ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் உண்டு. இதுதவிர ஒவ்வொரு வார சனிக்கிழமையும் விசேஷ அலங்காரம் உண்டு. ஆஞ்ச நேயருக்குரிய மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். அப்போது பஞ்சசூக்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுமசகஸ்ர நாமாவளி யாகம் ஆகியவை செய்யப்படும். தொடர்ந்து வரும் மூல நட்சத்திரத்தன்று 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் ஆகியவை நடைபெறும். அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரமும், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருவார்.
தல சிறப்பு:சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 16 அடி உயரம் கொண்டவர்..
திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி- 624301. திண்டுக்கல் மாவட்டம்,போன்:+91 - 451-245 2477, 94432 26861
பொது தகவல்:கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களால் எழுதப்பெற்ற 1 கோடி ராமநாமஜெபம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சுற்றி வந்தால் சுந்தரகாண்டத்தையே பாராயணம் செய்த பலனும், ராமநாமஜெபத்தை 1 கோடி தடவை உச்சரித்த பலனும் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆஞ்சநேயர் ராஜாவாக விளங்குவதால் மகாமண்டபத்தில் அவரது பரிவாரங்களான நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பாகும்.கோயிலின் சுற்றுப்பகுதியில் செல்வத்தின் அதிபதி லட்சுமியும், கல்விக்கதிபதி சரஸ்வதியும் அருள்பாலிக்கிறார்கள். ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும் சன்னிதானத்தில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்தக் கோயில்.
பிரார்த்தனை:பக்தர்கள் தாங்கள் என்ன வேண்டினாலும் இந்த அனுமான் நிறைவேற்றித்தருவதாக கூறுகிறார்கள்.
தங்களின் நியாயமான வேண்டுதல் நிறைவேற வெண்ணெய் காப்பு சாற்றுதல், பட்டு சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுதல் என வேண்டிக்கொள்கிறார்கள்.சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. ""ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்,'' என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன் னலமில்லாத வீரனாக திகழ்ந் தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.
""நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள் ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன்'' என்று சொன்னவர்.வணங்குபவர் களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். "அஞ்சலி ஹஸ்தம்' என்றால் "வணங்கிய நிலை' என்பதாகும். இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர். நாமக்கல் லில் ஒரு ஆஞ்சநேயரும், சென்னை நங்கநல்லூரில் ஒரு ஆஞ்சநேயரும், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 77 அடி உயரத்தில் தமிழகத்தின் மிக உயரமான ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆனால் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் ஆனவர் என் பது குறிப்பிடத்தக்கது."அழகான ஆஞ்சநேயர்', "சுந்தர புருஷன்' என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். இவரை வணங்கினால் ஆயுள் விருத்தி, சகல செல்வம், கல்வி ஞானம் சிறக்கும். இவரது வால் பாதத்தை நோக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தரிசனம் காண்பவர்கள் திருமணபாக்கியம், உத்தியோகஉயர்வு, புத்திர பாக்கியம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்,'' என்கிறார்.
தல வரலாறு:ராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுவதுண்டு.ஒரு முறை கனகராஜ் என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, தான் இவ்விடத்தில் தியான கோலத்தில் வீற்றிருப்பதாகவும் எனவே இங்கு கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். அதன்பிறகே இந்த கோயில் கட்டப்பட்டது.
பாண்டவர்கள்
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.
உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.
விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.
கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.
ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அதுமற்றவர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.
சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.
கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகைசுமந்துவந்தார்கள்.
அவர்கள் களைப்பாவது நியாயம்.
உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.
சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க ,சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்
தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.
துரியோதனன்,பாண்டவர்களை
அழிப்பதற்கு ,போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.
அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.
போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான்,கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.
இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.
18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.
அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..
ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.
ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.
இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு
பாருங்க பதில்.
அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???
இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.
அடங்கியது அவன் கர்வம்.
எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.
மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!
இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.
படித்ததை பகிர்ந்துள்ளேன்!