புதன், 10 ஜனவரி, 2024

எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?

எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?




காஞ்சி காமகோடி பீடத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காமாக்ஷி அம்பாள் கோவிலில் அம்பாளுக்கு சாற்றிய அஷ்ட பந்தனம் எலி தின்று விட்டதாக சொல்லி இன்று யாருக்கும் தெ‌ரியாமல் கும்பகோணத்தில் இருந்து தினகரசர்மா அவர்களை நேற்றே வர வைத்து முறையாக செய்யப்பட வேண்டிய சாஸ்திரங்களை செய்யாமல் அவசர அவசரமாக தற்போது அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். சுப்பையா ஸ்தபதி அவர்கள் முன்னிலையில். மஹா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த அஷ்டபந்தனம் எலி தின்றதாக சொல்லப்படுகிறது.

கௌரி காமாக்ஷிக்கு செய்த துரோகத்திற்கு இந்த காமாக்ஷியிடம் இவர்கள் மாட்டிக் கொண்டனர். ஏழு வருடங்களாக காமாக்ஷி கல்யாண மண்டபத்தை நிர்வாகம் செய்து வந்த காமாக்ஷியிடம் இருந்து ஒரே நாளில் வெளியேற்றி வேறு ஒருவரிடம் கொடுக்கப் பட்டதோ அதே போல், ஒரே நாளில் காஞ்சி காமாக்ஷிக்கு அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். இது எந்த விதத்தில் ஞாயம்? இவர்கள் நினைத்தால் அஷ்ட பந்தனத்தை எப்படி வேண்டுமானாலும் சாற்றலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெளி உலகத்திற்கு சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை.

சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டாமா?  அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டாமா? மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா? இந்த கடுமையான கொரோனா காலத்தில் இந்த மாதிரியான தவறான காரியங்களை மடமே செய்யலாமா? மடம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது? கலாகர்ஷணம் செய்ய வேண்டாமா? [கலையை ஆவாகனம் செய்வது] அம்பாளின் சக்தி, அறுபத்தி நான்கு கலைகளை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து அதை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டாமா?. அப்படி ஏதாவது செய்தார்களா? யாக வேள்விகள் செய்தார்களா? யார் கொடுத்த யோசனையில் இவர்கள் இப்படி செய்கிறார்கள். சட்டத்தை ஆளுபவர்கள் சட்டத்தை மீறுவது போல் இவர்களும் வேதத்தை, சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை, தர்மத்தை மீறுகிறார்கள். எல்லாவற்றிலும் நிபுணரான தினகரசர்மாவும் உடந்தையாக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. காமாக்ஷி அம்பாளின் சாபத்திற்கு வெகு விரைவில் ஆளாவார்கள். துக்ளக் ஆட்சி நடைப்பெற்று கொண்டு இருக்கிறதோ??.

ஆதி சங்கரர் காமாக்ஷியை முதல் முறையாக தரிசிக்க வந்த போது காஞ்சி நகரமே பெரும் பஞ்சத்திலும், ஊரே வறண்டும், நோயின் கொடுமையும் இருந்ததை வரலாறு சொல்கிறது. ஏன் என்றால் கபாலிகளிடம் அம்பாள் மாட்டிக் கொண்டு பல பலிகள் கொடுக்கப்பட்டு அம்பாள் கடும் கோபத்தில், உக்கிரகத்லும் இருந்தால். இதை கண்ட ஆதி சங்கரர் கமாக்ஷியின் உக்கிரத்தை தனித்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த பின் தான் அம்பாள் சாந்தமடைந்தால் என்பது உண்மையான வரலாறு. இது அனைவருமே அறிவீர்கள். அன்று காபாளிகலிடம் இருந்து மீட்டார் ஆதி சங்கரர். இன்று இவர்கள் இப்படி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக அஷ்ட பந்தனம் சாற்றுவதால் காஞ்சிபுர மக்களுக்கும், உலகத்திற்கும் பெறும் கேடு வந்து விடாதா? ஏற்கனவே கொரானாவால் உலகமே அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் துன்பப்பட்டால் யார் அவர்களை காப்பாற்ற வேண்டும். உலகை காக்கும் பொறுப்பு இவர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட்டார்களோ? ஏற்கனவே கொரானா முதல் அலை, இரண்டாம் அலை என்று மக்கள் பெரும் கஷ்டத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தி ஒன்று ஞாபகம் வருகிறது, செய்தி சேனலில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரானா மூன்றாம் அலை மிக கொடுரமாக இருக்கும் என்று டெல்லி ஏம்ஸ் மருத்துவர்கள் நேற்று முன் தினம் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

எது தர்மம்... இதோ இதுவே முறையான தர்மம் ....

செட்டியார் கடையில் இருந்து கெமிக்கல் மருந்தை சாற்றலாம்.

உலகத்திற்கு தெரியாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சாற்றலாம்.

ஒரே நாளில் பூட்டிய சாவியை எடுத்தது போல் அஷ்ட பந்தனத்தை ஒரே நாளில் ரகசியமாக மாற்றலாம்.

ஏன் என்றால் தர்மமே இவர்களுக்கு கிடையாது என்பதும் இரண்டு நாட்களுக்கு முன் காமாக்ஷி கல்யாண மண்டபம் ஒரு சாட்சி. இன்று காமாக்ஷி கோவிலில் நடந்ததும் ஒர் சாட்சி.

ஏன் இவர்கள் எதையுமே முறையாக செய்ய மாட்டார்களா? ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். முறையாக கௌரியிடம் பேசி என்ன நடைமுறையோ அதன் படி செய்து கல்யாண மண்டபத்தை கேட்டு இருக்கலாம். அதை செய்ய வில்லை. மடத்தின் ஸ்ரீகார்யம் டிரஸ்டிக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி தான் நடக்கும் என்கிறார் ஸ்ரீகார்யம். டிரஸ்டிகள் யார் என்றே எனக்கு புரியவில்லை. அவர்கள் தான் எல்லாவற்றையும் பார்கிறார்கள் என்றால் எதற்காக ஸ்ரீகார்யம்? தர்மத்தை மீறினால் அது நல்லதுக்கு இல்லை. எதையும் முறையாக செய்யலாம். இப்படி அராஜகமாக எடுத்தோம், கவிழ்தோம் என்று செய்ய கூடாது. ரவுடிகளின் ராஜ்யம் போல் இருக்க கூடாது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் கலிகாலம்.

மேலும் தற்போது கார்த்திக்கு பூஜை முறை இன்று பால பெரியவா வழங்கி உள்ளார். எத்தனை பேருக்கு தெரியும் இவர் இதற மத பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று. கார்த்திக் எப்படி அம்பாளுக்கு பூஜை செய்வதற்கு உத்தரவு கொடுத்தார்கள். இதே புது பெரியவா நடனம் அண்ணாவின் மகன் ஸ்ரீராமிற்கு நான்கு வருடங்கள் முன்பே புது பெரியவா பூஜை முறை வழங்கினார். அப்போது பால பெரியவாளிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றார்கள். ஆனால் பால பெரியவா ஸ்ரீராமை இப்போ பூஜை முறைக்கு வேண்டாம் பிறகு நான் சொல்கிறேன் என்று சொன்ன பெரியவா இன்று வரை பூஜை முறை வழங்க வில்லை. தன்னோட குருநாதர் பூஜை செய்வதற்கு முறை கொடுத்தும் இன்றுவரை ஸ்ரீராமுக்கு வழங்க வில்லை. நடனம் அண்ணாவோ, அவரின் பையன் ஸ்ரீராமோ இன்று வரை பொருமையாகவும், பெரிய மனதோடும் இருக்கலாம், ஆனால் இன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீராமிற்கு பூஜை வழங்காதது மனசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அனைவரும் அர்சகர் ஆகலாம் என்பதை அவருக்கு முன்பே தொடங்கி வைத்ததற்கு முதலில் பாரட்ட வேண்டும்.

பெரியவா சரணம்

அடியேனின் தந்தையை பற்றிய ஒரு நினைவாற்றல்

என்றென்றும் நீங்கா நினைவில் இருக்கிறோம் அப்பா....

தந்தையர் தினத்தை முன்னி்ட்டு அடியேனின் தந்தையோடு வரலாறு....
வெகு நாட்களாகவே அடியேனின் தந்தையை பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவளோடு இருந்தேன். இன்று தந்தையர் தினம் என்பதால் அடியேனின் தந்தை பாலு சாஸ்திரிகள் அவர்களை பற்றி மிக எளிமையாக ஒரு சிறு கட்டுரை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அடியேனின் தந்தை கும்பகோணம் பாலு சாஸ்திரிகள். இயர் பெயர் பால சுப்பிரமணியன்.1943 ஆம் ஆண்டு மன்னார்குடி மாவட்டம் சித்தமல்லியில் வெங்கடராமன் மீனாக்ஷி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகளில் இவர் கடைக்குட்டியாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள். அப்பாவுக்கு ஒரு அண்ணா உண்டு, சிறு வயதிலியே இறந்து விட்டார். கடைக்குட்டி சிங்க குட்டியாக பிறந்தார். அக்கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்த குடும்பம். அதுவும் எங்கள் தாத்தாவின் உழைப்பை சொல்லி மாளாது. தாத்தா பூரணமாக வேதாத்தியானம் படித்தவர். ஆச்சார, அனுஷ்டானத்தில் கடுமையாக இருந்தவர். ஆதனாலேயே மகனை வேத பாடசாலையில் சேர்த்து படிக்க வைத்தார். அவரும் சிறந்த முறையில் வேதாத்யானத்தை பெரும் புலமையோடு முடித்தார்.

படிப்பு முடிந்த உடன் திருமணம். திருமணத்தின் போது தந்தையின் வயது பத்தொண்பது. சிமிழி ஸ்ரீராமா & மீனாக்ஷி தம்பதிகளின் மூத்த பெண்ணை கைப்பிடித்தார். அப்போது அடியேனின் தாயாருக்கு வயது ஒன்பது. பெரிய மனுஷியாக கூட ஆகவில்லை. பதிமூன்று வயதில் அடியேனின் தாயார் முதல் குழந்தையை ஈன்றெடுத்தார். அடியோனோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். முதல் இரண்டும் பெண், மூன்றாவதாக அடியேன், நான்காவதாக ஒரு பெண் எனக்கு தங்கையாக பிறந்தாள். பின் தந்தை பிழைப்புக்காக கும்பகோணம் ராஜு சாஸ்திரிகள் அவர்களிடம் வைதீகத்திற்கு வந்தார் தந்தை. ராஜு சாஸ்திரிகள் அடியேனின் தந்தையின் மாமா ஆவார்.
கும்பகோணத்தில் பேரும், புகழோடும் குடும்பம் நடந்தது. குழந்தைகள் எல்லாம் வளரவே வருமானம் போததால் சென்னைக்கு குடி வந்தார்.

சென்னையில் குரோம்பேட்டையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை தொடங்கி, படி படியாக உயரத்திற்கு வந்தார். குரோம்பேட்டையில் தனக்கென முத்திரை பதித்தார். கிரகஸ்தர்கள் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். மிகவும் எளிமையாகவும், அனைவரிடமும் அன்பாகவும் பழக்க கூடியவர். கிரகஸ்தர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் காரியங்களுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்று குடும்பம் நடத்தி வந்தார். தனது கடின உழைப்பால் அவரின் பெயரிலேயே ஒரு தெரு அமைத்து, கிரகஸ்தர்களின் உதவியோடு தனக்கென ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு எளிமையான வீடு கட்டி பெருமையோடு வாழ்ந்து வந்தார். கிரகஸ்தர்கள் கும்பகோணம் பாலு சாஸ்திரிகள் என்ற பெயரோடு கூடவே குரோம்பேட்டை பாலு சாஸ்திரிகள் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் வெண்கல குரலுக்கு அனைவரும் அடிமை என்றால் அது மிகையாகாது. அப்படி ஒரு குரல் வளம் கொண்டவர். அதே நேரத்தில் வைதீக காரியங்களை எதற்காகவும் குறைக்க மாட்டார். சாஸ்திரத்தில் எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படி செய்து தருவார். குரோம்பேட்டையில் என்னற்ற வைதீகர்களை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அப்பாவின் சிஷ்யராக இன்றும் குரோம்பேட்டையில் நிறைய வைதீகர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் அப்பாவிடம் வைதீகம் பார்த்து இருக்கிறார்கள்.

வேதீகத்தையும் தாண்டி தனது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலான ஆகாச வீரனார் கோவிலையும் கட்டினார். வலம்புரி விநாயகர், ஆகாச வீரனார், முருகன் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சிறப்பாக கும்பாபிஷேகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் இந்த கோவிலில் உருவம் கிடையாது. தீபம், அரிவாள், கதை ஆகியவை மட்டுமே வெட்ட வெளியில் இருந்தது. வெட்ட வெளியில் எ‌வ்வளவு காற்று அடித்தாலும் தீபம் இனையவே அனையாது. அவ்வளவு சக்தி உண்டு எங்கள் ஆகாச வீரனாருக்கு. பின் அப்பாவுக்கு உத்தரவாகி தனது உருவத்தை காட்டி அப்பாவை கோவில் கட்ட ஆகாச வீரனார் கனவில் கேட்டுக் கொண்டதின் பேரில் கோவில் அப்பாவால் கட்டப்பட்டது. கோவிலுக்கும் முதல் செங்கல்லை ஜகத் குரு ஜயேந்திர பெரியவா தான் தந்தையின் கனவில் தோன்றி எடுத்து வைத்தார். அப்போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது என்றும் மழையில் நனைந்த படி பெரியவா முதல் செங்கல்லை எடுத்து வைத்தது போல் கனவில் அனுக்கிரஹம் செய்தா ஜயேந்திர பெரியவா. தற்போது  பூஜைகளும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர பெரியவா மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதனாலேயே பெரியவாளுக்கும் தந்தையை மிகவும் பிடிக்கும். பெரியவாளை இரண்டு முறை குரோம்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளார். முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் சந்திர மௌளீஸ்வர பூஜையோடும், இரண்டாவது முறையாக பெரியவாளின் எழுபத்தி ஐந்தாவது ஜயந்தி [2012 ஆண்டு] மஹோட்சவத்திற்காகவும் அழைத்து வந்து மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்தார். காலங்கள் உருண்டு ஒடின. தந்தைக்கு எழுபது வயது பீமரதாஸாந்தி இல்லத்திலேயே வெகு விமரிசையாக நடந்தது. நாளாக நாளாக உடலில் தளர்வு ஏற்பட்டது. சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி காலை ஏழரை மணிக்கு பெரியவாளின் பாதார விந்தத்தில் சரணடைந்தார். இப்படி ஒரு தந்தை எங்களுக்கு கிடைத்த பெருமையோடும், மிகவும் பாக்கிய சாலிகளாக, தங்களின் நீங்கா நினைவோடு வாழ்ந்து வருகிறோம் அப்பா.

தந்தையை பற்றி இன்னும் எழுதுவதற்கு ஏராளமாக உள்ளது. இனினும் மிக சுருக்கமாக அடியேன் எழுதி உள்ளேன்.




காமாக்ஷி கல்யாண மண்டபத்தில்

இன்று காலை முதலே காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் பம்மல் விஸ்வநாதன் அவர்கள் தொடர்ந்து அராஜகமாக உள்ளே நுழைந்து கல்யாண மண்டபத்தின் மேனேஜராக இருக்கும் சரவணனை மிரட்டி கல்யாண மண்டபத்தின் சாவியை பறித்து சென்று வேறு ஒரு பூட்டை பூட்டி சென்றுள்ளார். பின் சரவணனையும் போலிஸ் ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து சென்றார்கள். இதனிடையே கௌரி காமாக்ஷி அவர்கள் யார் மீதும் எந்த விதமான புகாரும் தெரிவிக்காமல். அவரின் சொந்த முயற்சியில் பெரியவாளின் அனுகிரஹத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு முடியுமோ அதை முயற்சித்தது டி.ஐ.ஜியிடம் பேசி, டி.ஐ.ஜி அவர்கள் டி.எஸ்.பி.யிடம் பேசி, டிஎஸ்பி அவர்கள் இன்பெட்டரை அழைத்து சமாதனமாக பேசி சாவியை மீண்டும் சரவணிடம் தர சொல்லி உள்ளார்கள். மடத்தின் சார்பாக பம்மல் விஸ்வ நாதன் பேசுவதால் இன்ஸ்பெக்டர், சப்இன்பெட்டர், சரவணன், பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் மடத்திற்கு சென்றுள்ளார்கள். இனி பால பெரியவா தான் சாவியை யாரிடம் தர வேண்டும் என்ற முடிவை  பெரியவா தான் எடுக்க வேண்டும். ஆனால் பெரியவா வீடியோ கின்பிரஸ்சில் இருப்பதாக சொல்லி உள்ளார்கள். இதனிடையே மடத்தின் ஸ்ரீகார்யம் அவர்கள் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் கொடுக்க சொல்லி இருக்கார் ஸ்ரீகார்யம். போலிசும் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் வழங்கிவிட்டார்கள்.

 எனக்கு ஒரு சந்தேகம்?

மடத்தின் சொத்துக்களை யார் நிர்வாகம் செய்ய வேண்டும்? ஸ்ரீகார்யமா, பெரியவாளா அல்லது டிஸ்டிக்களா? ஒருவரிடம் இருந்து நிர்வாகத்தை வேறு ஒருவரிடம் கொடுக்க நினைத்தால் அதை முறையாக எப்படி செய்ய வேண்டும்? சென்ற ஆண்டு கொரொனா முதல் அலையின் போது எஸ்.யூ.டி மருத்துவ கல்லூரியை விற்றார்கள். இன்னும் அந்த பிரச்சனையே முடிந்த பாடு இல்லை. அதற்குள் இந்த ஆண்டு இரண்டாவது அலையில் கல்யாண மண்டப பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. சுமுகமாக பேச வேண்டிய ஒன்றை தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள். ஏன் இவர்கள் இப்படி தவறான அனுகுமுறையில் செல்கிறார்கள் என்றே தெரிய வில்லை. பெரியவா கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினாளே எல்லாம் சரியாகி விடும். அப்படியும் இல்லை என்றால் ஸ்ரீகார்யமாவது கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினால் இது பிரச்சனையே இல்லாமல் சுமுகமாக முடிந்திருக்கும். போலிஸ் வரை சென்று மடத்தின் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசிம் இல்லையே? மடத்தை நிர்வாகம் செய்வது கூட டிரஸ்டிக்கலாக மட்டுமே இருக்குமோ? அப்போ ஸ்ரீகார்யம்? 2016 முதல் கல்யாண மண்டபத்தை நிர்வகித்து வந்தவர் கௌரி காமாக்ஷி தான். புது பெரியவா தான் கௌரி காமாக்ஷியிடம் கல்யாண மண்டபத்தை தந்தார். பெரியவா சித்திக்கு பிறகும் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவம் ஆக மொத்தம் ஆறு ஆண்டுகளாக கௌரி தான் பார்த்துக் கொண்டு இருந்தார். [இன்று காலை வரை] ஆனால் கடந்த நான்கு நாட்களாக பம்மல் விஸ்வ நாதன் அவர்கள் கல்யாண மண்டபத்தை அவரின் கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஒன்று புரியவே இல்லை. மடத்தை நிர்வகிப்பது யார்? சங்கரா பள்ளிகள், மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள், மற்றும் மடத்தின் அசையும் சொத்து, அசையா சொத்து இவற்றை எல்லாம் யார் நிர்வாகம் செய்கிறார்கள். நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன் டிரஸ்டிக்கள் பெரியவாளால் நியமிக்க பட்டவர்களே! அவர்கள் அதில் எந்த முதலீடும் செய்ய வில்லை. பிறகு எப்படி டிரஸ்டிக்கள் கோடி கோடியாக மடத்தின் மூலம் இவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது ஏதோ கடந்த நான்கு நாட்களாக இவர்கள் இதை செய்திருக்க முடியாது திட்டமிட்டு தான் செய்திருக்க முடியும். ஏன் தொடர்ந்து கௌரி காமாக்ஷி அவர்களையே இந்த மடத்தின் நிர்வாகிகள் கார்னர் செய்கிறார்கள்?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பூமியில் வாழ போகிறோம். எதை எடுத்துக் கொண்டு வந்தோம் எதை எடுத்துக் கொண்டு போக போகிறோம். நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் கூட நம்முடன் வர போவது இல்லை. அடியேனை பொருத்தவரை ஆறு அடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லை. நாளை நம்மீது ஒருவரின் சடலம் கூட இருக்கும். இருக்கும் காலத்தில் தான் மனிதன் என்னென்ன ஆட்டம் போடுகிறான். இன்று இறந்தால் நாளைக்கு பால்...... இது தான் வாழ்கை..... புரிந்தவர்களுக்கு புரியட்டும்.......



கூடலி சிங்கேரித் மடம்

கூடலி சிங்கேரித் திருமடம்



(துங்கபத்ரா சிங்கேரி)

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகாவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் கூடலி எனும் நகரமும், துங்கைக் கரையில் சிங்கேரியும்  இருக்கின்றன. இந்த இரு இடங்களிலும் புகழ் பெற்ற சங்கர மடங்கள் இருக்கின்றன.

கூடலி...  வித்யாநகரம், தட்சிண வாரணாசி, ஹரிஹர க்ஷேத்ரம், தட்சிண ப்ரயாகை, ராமக்ஷேத்ரம் எனும் பல  சிறப்புப் பெயர்களுடன் கூடிய புகழ் மிக்க இடமாகும். மேலும், பீடத்தின் அதிதேவதையான சாரதாப் பிராட்டியே கூடலியில் இருப்பதாகவும், நவராத்திரியின்போது  சிங்கேரிக்கு வருவதாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.  இந்தக் கதை மெய்யோ பொய்யோ.. இதன் உண்மைத் தன்மையை  பிராட்டியே அறிவாள்.  இது பழைய நூல்களிலும் பதிவாகி உள்ளது என்பதை மட்டும் சொல்லி இதை இத்துடன் விடுத்து மேற்கொண்டு தொடருவோம்.

கூடலி  உண்மையான சிங்கேரியே
என்பதை உறுதிபடுத்த வேண்டி கூடலி மடத்தினர் பல ப்ராசீன சாசனங்கள், உடன்படிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைச் சேர்த்து அனேக நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

ஆயினும், நம்மைப் பொருத்தவரை, போற்றுதற்குரிய இவ்விரண்டு மடங்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் கிடையாது,
இதுவரை கிடைத்துள்ள பழைய சரித்திர ஆவணங்களின்  அடிப்படையில் இவ்விரு அத்வைத பீடங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நாம் ஆராய்வோம்.. அத்துடன் அமைவோம்.

கூடலியும், சிங்கேரியும் ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள் எனக் கொள்வர் பெரியோர்.

இந்த இரண்டு பீடங்களும் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளாலும், காலச் சூழலாலும் அப்போதிருந்த  அரசர்களையும்,  நீதிமன்றங்களையும் அணுகியிருப்பினும்,  இருவரது  குரு பரம்பரைப் பட்டியல்களும் ஸ்ரீ நரசிம்ம பாரதி என்னும் ஆசார்யர் வரைக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன என்பதை நவீனரும்  ஒப்புக் கொள்கின்றனர்.

பழைய கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்டவற்றில் இருவருக்குமே சிங்கேரி என்னும் முன்னொட்டு தரப்பட்டுள்ளதையும், கூடலி மடத்தின் பலமான சரித்திரப் பின்னணி பற்றியும் மைஸூர் தொல்லியல் துறை ஆண்டறிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம்.

பி.கு: தற்கால வெகுஜன ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கர்நாடக மாநிலத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு அத்வைத மடம் அல்லது மற்ற  மடங்களையும்  பற்றி இதுவரை மேலோட்டமாக அறிந்து வந்திருப்போர்,  இந்தப் பதிவுகளை நிதானமாக ஒரு தடவைக்கு இருமுறையாக வாசிக்க நன்கு தெளிவாகும். அனைத்து அத்வைத மடங்கள் மற்றும் ஆசார்யர்கள் மீது மதிப்பும் உண்டாகும்.
படங்கள்: ஸ்ரீகூடலீ ச்ருங்கேரி பீடம் ஜகத்குரு மஹாஸம்ஸ்தான ஸிம்ஹாஸனம்..

கயா ஸிராத்தம்...


சங்கர பகவத்பாதாள் அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை பார்ப்போம்.

ஹரி ஓம் சங்கர பகவத்பாதாள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதிக்கட்டும் அன்பே சிவம்

''கயே கயே கயே என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம். ''கயே கயே கயே என்று சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு. ஷோடசி தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

''அடே பயலே அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் போதே  அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்து கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்கள் அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல  தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' [தமிழில் சின்ன 'ட"] ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு  [திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.]

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக  நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்த போது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா  இந்த நான்காவது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக - ஒரு பரிசு - என்றே  ஏற்று கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனம் முன் வந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும் போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம் அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  நேரம் தவறாமல் பால் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்து கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

9. தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம் எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே பார்த்து, பார்த்து அவ்வப்போது எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  ஒன்பதாவது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா  அதற்காக பத்தாவது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து, ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்க்கு ஏற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பதினோறாவது பிண்டம் எடுத்துக்கொள்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே,    கண் விழித்து உன் உடல் அதற்காகத்தான் இந்த பன்னிரெண்டாவது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு, ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ  யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூறாவவது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் - நீ இல்லா விட்டால்  நானே எது? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த பதினான்காம் பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி, திருப்பி சொல்கிறேனே நான் வளரத்தானே நீ  உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ  அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த  பட்டினி,பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதி உபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த பதினாறாவது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே.... என்னை மன்னித்து ஆசிர்வதி தாயே....




ஸிராத்தம்....

ஸிராத்தம் ஒன்று

மஹாளய பட்சத்தில் சொல்ல வேண்டு்ம் என்று தோணித்து...

இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாளில் அரசாண்ட ராஜாக்களுக்கு ரிஷிகள் சொல்லியருளியது... அதில் சிலதை சொல்ல னுமுன்னு தோணித்து....

அதாவது அன்னவாஹார்யம்ன்னு சொல்லப்படும் ஸிராத்தமானது ஒவ்வொரு அமாவாசை தோறும் செய்வது சிறப்பு. பிதுருயாகமானது தேவர் அஸுரர் மனிதர் கந்தர்வர் நாகர் அரக்கர் பிசாசர் கின்னரர்கள் ஆகியோரும் பிதுருக்களை பூஜிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாசமும் கைகூப்பி பணிவுடன் அந்த ஸிராத்ததை செய்ய வேண்டும். அதை தவிர ஷ்ண்ணவதின்னு சொல்லக் கூடிய 96 நாட்கள் வருடத்திற்கு உகந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்...

உதாரணமாக பிரதமையில் பூஜிப்பதால் அழகான குழந்தைகளும் குடும்பபாங்கான ஸ்திரீயும் மணவாட்டியாக வருவாள். துவிதியையில் ஸிராத்தம் செய்ய பெண் குழந்தைகள் கிடைக்கும் திருதியையில் செய்வதால் குதிரைகளுக்கும் சதுர்த்தியில் செய்வதால் ஆடுமாடு நான்கு கால் பிராணிகளும் விருத்தியுண்டாகும்.

பஞ்சமியில் ஸிராத்தம் முறையாக செய்பவனுக்கு அதிக புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். ஷஷ்டியில் செய்பவன் ஒளி பெறுவான். சப்தமியில் செய்பவன் பயிர் செழித்து வளரும். அஷ்டமியில் செய்பவன் வர்த்தக லாபத்தை அடைவான்.  

நவமியில் செய்பவனுக்கு ஒற்றை குளம்புள்ள பிராணிகள் விருத்தியாகும். தசமியில் செய்தால் ஆட்கள் கிடைப்பார்கள். ஏகாதசி ஸிராத்ததால் வஸ்திராபரணங்களை மிகுதியாக அடைந்து மகிழ்வான். மேலும் சாஸ்திரோத்தமான பிள்ளைபேறு கிடைக்கும். துவாதசி சிராத்ததால் அதிக பொன் வெள்ளி விருத்தியாகும்.

திரயோதசியில் செய்பவனுக்கு மனிதரில் சிறந்தவனாக ஆக்கப்படுவான். சதுர்தசியில் செய்வது அவ்வளவு உசிதமல்ல... [தேவை இருப்பின் மட்டுமே அனுமதி]. அமாவாஸை ஸிராத்ததால் விரும்பினவற்றை அடைவான்.

கிருஷ்ணபட்சமானது சுக்கிலபட்சத்தை விட ஸிராத்தத்திற்க்கு விஷேஷமாகும். அதே போல முற்பகலை விட பிற்பகலே விஷேஷம்....

இதே போல் ஸிராத்த பொருட்கள் என்னென்ன குடுத்தால் எவ்வளவு திருப்தி என்பதையும் நட்சத்திரங்களில் செய்தால் என்ன பலன் அப்படிங்கறதையும் வரும் பதிவுகளில் சொல்லறேன்...

மஹாளபட்சம் முறையா அனுசரியுங்கள்... யதா சக்தியாக என்ன தரமுடியுமோ அதை தானம் தாருங்கள்...

இப்பவும் சொல்லறேன்...ஸிராத்தம் தர்ப்பணம் எல்லாம் பரிகாரம் அல்ல... நாம் வாங்கின கடன். அந்த கடனை இந்த ஜீவன் தேக காலம் இருக்கும் வரை முழுவதும் அடைக்கனும்... இதை பரிகாரமா சோதிடத்தில் சொல்வது பாபம். மனிதனா பிறப்பவருக்கும் பொது இது... அதிலேயும் ப்ராமணனா பிறந்து சந்தியாவந்தனம் செய்யாமல் தர்ப்பணம் செய்யாமல் இருப்பது கொடிய நரகத்தில் வாசம் செய்வதற்க்கு சமம்...

இது நம் தர்மம்... அனைவரும் முடிந்த வரை செய்யவும்...



வியாழன், 7 டிசம்பர், 2023

பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!

பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!



சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.

முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் - காஞ்சி. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது. அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?

ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும். ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.

ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.

ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.

சொரிமுத்து சாஸ்தா கோவில்...

சொரிமுத்தையனார்- சாஸ்தா கோவில் அதிசயம்!



பொதிகை மலையின் அடர்ந்த காடுகளின் நடுவே எழுந்தருளி இருக்கும் சொரிமுத்தையனார்- சாஸ்தா- பக்தர்கள் வியந்து போற்றும் தெய்வம். மிகப் பலரின் வாழ்விலே ஏராளமான அருளாடல்களைச் செய்தவர். இன்றளவும் இவர் தேவ சரீரத்துடன் காட்டில் உலா வருவதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இவருக்கு பிரார்த்தனையாக செலுத்தப்படும் காலணிகள் தேய்ந்திருப்பதும், மண் ஒட்டியிருப்பதும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள். அதே போல திருநெல்வேலியில் வீரராகவபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமர், ஆஞ்சநேயர் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளுகின்ற கருணையின் வடிவம்...

முருகம்மையார்...

முருகம்மையார்



சோழநாட்டில் தற்போது சுவாமிமலை என்றழைக்கப்படும் பகுதியில் இறையன்பு மிக்க தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. முருகப்பெருமானிடம் அன்பு வைத்த அவர்கள், தமிழ் வேளே ! வள்ளி மணாளா ! கந்தப்பெருமானே ! நீ எங்கள் மீது கருணை கொள்ளமாட்டாயா ? எங்களுக்கு செல்வத்தைக் கொடுத்து பயன் என்ன ? மக்கள் செல்வமில்லாதவர் நரகம் எய்துவர் என சாஸ்திரங்கள் சொல்கிறதே ! நாங்கள் உன்னையே நினைந்தும் கூட, நரகத்திற்கு தான் செல்ல வேண்டுமா ? என மனமுருகிப் பிராத்தித்தனர்.கந்தக்கடவுள் அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அன்பு மகளை ஈன்றார் அந்தத்தாய். முருகனின் பெயரையே மகளுக்கும் சூட்டினர். ஆம்.... அவளது பெயர் முருகம்மை.இளமை முதலே பெற்றோரைப் போலவே முருக பக்தியில் திளைத்தார் முருகம்மை. நடந்தால் முருகா, படுத்தால் முருகா, அமர்ந்தால் முருகா, சாப்பிடும் போது முருகா, தந்தையையும் முருகா, தாயையும் முருகா, தோழியரையும் முருகா, விளையாடும்போதும் முருகா, என்றபடி முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். இதுகண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர். வயதுக்கு வந்ததும், இப்பக்தைக்கு ஏற்ற பதி வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு ஏற்பட்டது. குணத்தில் சிறந்த தனஞ்செயன் என்ற வாலிபனுக்கு இவளை மணம் முடித்து வைத்தனர். கணவனின் மனம் கோணாமல், அவன் வைத்த மீதியை பிரசாதமாய்க் கருதி அருந்தி, கற்புநிலை பேணினாள் முருகம்மை. நாத்தனாரிடமும் அன்பு பேணினான்.

மனைவி மீது கணவனும் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான். இது மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பொறுக்கவில்லை. இந்த தனஞ்செயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் இவனை மயக்கி வைத்திருக்கிறாள். நாளைக்கு, அவள் அவனுடைய எல்லா வருமானத்தையும் சுருட்டிக் கொண்டால், நம் வயிறு காயுமேடி, என தேவையில்லாமல் பொறாமைப்பட்டனர். அவளை பழிதீர்க்கும் நாளுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதற்கு சில உறவினர்களும் தூபம் போட்டனர். எப்பேர்ப்பட்ட மனிதனையும் கெட்டநேரம் விதியில் சிக்க வைத்துவிடும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ! தனஞ்செயனின் வணிகம் நஷ்டத்தில் ஆழ்ந்தது. மனம் வெறுத்த அவன் வேறுவேலைக்காக வெளிநாடு சென்று விட்டான். போகும்போது முருகன் என்ற வேலைக்காரனை வீட்டுப்பணியில் அமர்ந்தினான். மணாளன் திரும்பும் வரை அவன் நினைவிலேயே இருந்தாள் முருகம்மை. முருகா, முருகா என அவள் அடிக்கடி அழைப்பதைப் பயன்படுத்தி, அவளுக்கும், வேலைக்காரன் முருகனுக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக்கதை எழுப்பினர். ஊர்திரும்பிய தனஞ்செயனும் அதை நம்பி அவளது கைகளை வெட்டிவிட்டான். முருகா, உன் திருநாமம் சொன்னதற்காக எனக்கு இப்பேர்ப்பட்ட சோதனையைத் தந்தாயே, என அலறித்துடித்தாள். தன் கற்புக்கு விளைந்த களங்கத்தை துடைக்க முருகனே கதியென உண்ணாமல், உறங்காமல் கிடந்தாள். சோதனையை முடித்த முருகப்பெருமான் அவள் முன் வள்ளியுடன் வந்தார். இழந்த கைகளை திரும்பக் கொடுத்து அதிசயம் நிகழ்த்தினார். கணவன், அவளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினான். விதியால் வந்ததை யார் தடுக்க முடியும் என அவள் கணவனைத் தேற்றினாள். மாமியார், நாத்தனாருக்கு எந்த தண்டனையும் தரக்கூடாது என அவள் முருகனிடம் வேண்டிக் கொண்டான். அவளது நல்ல மனதைப் பாராட்டிய முருகன், நீண்டகாலம் பூமியில் வாழச் செய்து, இறுதியில் தன்னுலகில் சேர்த்துக் கொண்டார்.

பாம்பன் ஸ்வாமிகள்

பாம்பன் சுவாமிகள்



பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.

அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான்.  ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம்  ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர்.  பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.

மயூர வாகன சேவன விழா: முருகன் மீது சண்முக கவசம் உள்ளிட்ட 6666 பாடல்களைப் பாடிய அருளாளர் பாம்பன்சுவாமி. 1923, டிச.27ல் சென்னை தம்புச் செட்டித்தெருவில் குதிரை வண்டி மோதியதால் சுவாமியின் இடதுகால் முறிந்து போனது. அரசு  மருத்துவமனை மன்றோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது 73 என்பதாலும், உப்பு சேர்க்காமல் உணவு உண்பவர் என்பதாலும், குணமாவது சிரமம் என்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர்.  பாம்பன் சுவாமி தான் பாடிய சண்முககவசத்தை பாராயணம் செய்தபடியே இருந்தார். 1924, ஜனவரி 6 இரவில், மருத்துவமனையில் சேர்ந்த 11வது நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் தோகை விரித்தபடி இருமயில்கள் ஆடுவதை சுவாமி கண்டார். இன்னும் 15 நாளில் குணமாகும் என்று அசரீரி ஒலித்தது. குழந்தை வடிவ முருகனும் சுவாமிக்கு காட்சியளித்தார்.  அதன்படி பூரணகுணமும் பெற்றார். சென்னை அரசு மருத்துவமனை 11வது வார்டு பதிவுக்கல்லில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியில், ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையன்று, மயூரவாகன சேவன விழாவை வாக மகா தேஜோ மண்டல சபையினர் நடத்துவர்.  அப்போது சுவாமி எழுதிய, அசோக சாலவாசத்தை வாசிப்பர். இதில்  அவரின் தெய்வீக அனுபவம் இடம் பெற்றுள்ளது.

சிகண்டினி

சிகண்டினி



துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி! இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் சென்றது புத்புதகம் எனும் இடத்திற்கு தான்..! தன் தோற்றத்தை அளித்த கந்தர்வனே, அந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி காட்டினான். புத்புதகம் வீரர்களை உருவாக்கும் இடம். குறிப்பாக எல்லாவித அஸ்திரங்களையும் பிரயோகிக்க கற்றுத் தரும் ஒரு இடமாகும். அந்த பயிற்சிகளைப் பெற்ற சிகண்டி, வெகு சிக்கிரத்தில் பெரும் வீரனாகி விட்டான். பெரும் வீரனாக மாறி கந்தர்வனுக்கான எழிலோடு ஒரு ஆண் வாரிசாக அவன் துருபத மன்னனை வந்து சந்தித்த போது துருபதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.இருந்தாலும் இப்போதும் பீஷ்மரை எண்ணி துருபதன் மனம் அச்சப்படவே செய்தது. ஆனால் அந்த அச்சத்தை சிகண்டி போக்கினான். தந்தையே... கவலையை விடுங்கள். விதிப்பாடு என்னை ஆளாக்கிவிட்டது. அந்த மாலையை நான் விளையாட்டாக அணிந்த வேளை இன்று நானொரு மாவீரன். என் வீரத்துக்கு எந்த நாளிலும் இழுக்கு ஏற்படப் போவதில்லை. தைரியமாக இருங்கள். என்று ஆறுதல் கூறினான்.

மகாபாரதத்தின் பெரும் வியப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய பாத்திரமே சிகண்டினியாக இருந்து பின் மாறிய சிகண்டி!மகாபாரத பாத்திரங்களில் சிகண்டியை போலவே பழிவாங்கவென்றே உருவான பாத்திரம்தான் திருஷ்டத்துய்மன்! பீஷ்மரால் சிகண்டி வந்தது போல, துரோணரால் வந்தவன் இவன்.அதாவது வில்வித்தையில் தலை சிறந்த அர்ஜுனன், ஏகலைவன் போன்ற பெரும் வில்லாளி களின் குருநாதரான துரோணரை பழி வாங்கவென்றே வேள்வி ஒன்றால் பெறப்பட்டவன். இவன் யாரோ அல்ல! பாஞ்சாலி எனப்படும் திரவுபதியின் சகோதரன். இவன் எப்படி வந்தான் என்று பார்ப்போம். துரோணரும், பாஞ்சால அரசன் துருபதனும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். அப்போது துருபதன் துரோணரிடம், துரோணா! நாளையே நான் பாஞ்சால நாட்டுக்கு அரசனானாலும், உன்னுடனான நட்பை துளியும் பிரிய மாட்டேன். அதுமட்டுமல்ல! என்னுடையது அனைத்தும் உனக்கும் சொந்தம். நான் எதை அனுபவித்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் உண்டு. அந்த வகையில், எனது பாஞ்சால நாட்டை நான் ஆளத் தொடங்கும் போது உனக்கும் அதில் பாதியை அளித்து உன்னை அதற்கு அரசனாக்குவேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தான். துரோணரும் அவனது நட்பின் சிறப்பை எண்ணி சந்தோஷப்பட்டார்.நாட்கள் கடந்தது. துருபதனும் பாஞ்சால நாட்டு மன்னன் ஆனான். அப்போது துரோணர் வறுமையின் பிடியில் இருந்தார். அவருக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு பிள்ளையும் பிறந்து அவனும் பெரும் வீரனாக வளர்ந்திருந்தான். இந்த நிலையில் தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காக பாஞ்சால நாட்டில் பங்கு கேட்டு, துருபதன் முன் சென்று நின்றார். ஆனால் துருபதன் மிக மாறிவிட்டிருந்தான். அரச போகமும் யோகமும் அவன் கண்களைக் கட்டியிருந்தன. துரோணர் வரவும் முதலில் யார் என்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். பின் துரோணரை தெரிந்து கொண்டவன், அடடே, குருகுலத்து நண்பனா? வேதம் படிக்க வேண்டிய நீ இங்கே எங்கே வந்தாய்? என்று கிண்டலாகக் கேட்டான். துரோணருக்கு அப்போதே துருபதன் பழைய நண்பன் இல்லை என்பது புரிந்து விட்டது. இருந்தும் அவன் குருகுலத்தில் செய்து தந்த சத்தியத்தை நினைவுபடுத்தினார். அது நினைவுக்கு வரவும் துருபதனுக்கு சிரிப்புதான் வந்தது. துரோணா! உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. பள்ளிப் பிராயத்தில் ஏதோ விளையாட்டாக சொன்னதை இவ்வளவு உறுதியாகவா எடுத்துக் கொள்வது? பாஞ்சால தேசம் என்ன வெட்டித்துண்டு போட்டுத்தர அது என்ன பட்டுத்துணியா? தேசமப்பா.... தேசம்! இந்த தேசத்தை ஒரு க்ஷத்திரியனான நான் ஆளவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.

நீயோ வேதியன். பரத்வாஜ முனிவரின் புத்திரன். தவம்புரிவதை விட்டுவிட்டு நாடாள ஆசைப்படுகிறாயே...! வேடிக்கையப்பா பெரும் வேடிக்கை....என்று இழுக்காக பேசி சிரித்தான். துரோணருக்கு கூச்சம் எடுத்தது. இருந்தும், துருபதா.... உன் சத்தியத்தை நம்பி நான் மோசம் போய் விட்டேன். சத்தியத்தை மதிக்காத பாவத்துக்கு ஆளாகாதே. வாக்கில் நில்.       உன்னைவிட என்னால் இந்த தேசத்தை நன்றாக ஆளமுடியும், என்றார்.  ஆனால் துருபதன் கேட்கவில்லை. மாறாக மேலும் அவரை இழிவுபடுத்தி வேண்டுமானால் உனக்கு பொற்காசுகளை பிச்சையிடுகிறேன். பொறுக்கிக் கொள், என்று கைநிறைய காசுகளை அள்ளி துரோணர் முன்வீசி எறிந்தான். எப்போதும் நாம் தாழ்வாக இருக்கும் பொழுதைக் காட்டிலும், உயர்வாக இருக்கும் பொழுதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் செயல்களாலேயே நாம் மோசமான வினையை தேடிக் கொள்ள நேரிடும். துரோணர் வரையில் துருபதன் நடந்துகொண்ட விதம் துரோணரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. துருபதா! உன்னை நான் சும்மாவிடமாட்டேன். வேதியன் என்றா என்னை இகழ்ந்தாய்...? வேதமும் கல்வியும் எப்படி இரு கண்களோ அப்படித்தான் எல்லாமே! நீ தர மறுத்த நாட்டை மட்டுமல்ல! உன்னையே நான் என் அடிமையாக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும் இந்த துரோணாச்சாரி எப்படிப்பட்டவன் என்று...என சபதம் போட்டுவிட்டு சென்று விட்டார்.அடுத்து அவர் ஒரு வனத்தில் சந்தித்தது பாண்டவர்களையும் கவுரவர்களையும் தான்!இருசாரரும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தர்மரின் மோதிரம் அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் அவர்கள் விழித்து நின்றபோது, துரோணர் அந்த பக்கமாய் வந்தார். மோதிரம் விழுந்து விட்டதை அறிந்தவர், அர்ஜுனன் வசமிருந்த வில்லையும் அம்பையும் செலுத்தினார். அம்பின் நுனி மோதிரத்தை தன்னுள் பூட்டிக் கொண்டு துரோணர் முன் வந்து விழுந்தது. அதைக் கண்டு தர்மர் முதல் அவ்வளவு பேரும் ஆனந்தப்பட, அர்ஜுனன் துரோணரை அப்போதே தன் குருவாக வரித்துக் கொண்டான். பின், பீஷ்மரிடம் துரோணரை கொண்டு சென்று நிறுத்த அவர் இருசாரருக்கும் குருவாக துரோணரை நியமித்தார். துரோணரும் தான் அறிந்த அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்தார். ஒருநாள் அனைவருக்கும் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. அர்ஜுனன் ஒருபுறமும், துரியோதனன் மறுபுறமும் துரோணரிடம் தங்களது குருகாணிக்கை என்ன? என்று கேட்டனர். துரோணரும், நான் கேட்பதை நீங்கள் கட்டாயம் தருவீர்களா? என்று பலத்த பீடிகை போட்டார். அர்ஜுனன் வேகமாக முன் வந்து, குருவே! நான் என் உயிரைக் கூட தர சித்தமாக இருக்கிறேன், என்றான். அதைக் கேட்ட துரியோதனனும், குருநாதா.... நானும் ஒன்றும் அர்ஜுனனுக்கு சளைத்தவனில்லை. எதுவேண்டுமானாலும் கேளுங்கள்! தங்கள் காலடியில் அதை வைக்கிறேன், என்றான். அப்போது துரோணர் இருவரிடமும் கேட்டது ஒன்றைத்தான். அதுதான் துருபதனை ஒரு கைதியாக தன் காலடியில் கிடத்துவது என்பதாகும். ஒரு வினாடி இருவருமே அதிர்ந்தாலும், குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராயினர்.

முதலில் துரியோதனன் துருபதன் மீது போர் தொடுத்தான். ஆனால், அதில் துருபதன் தான் வெற்றி பெற்றான். அடுத்து அர்ஜுனன் போர் தொடுத்தான். அவனுக்கு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்று சகலரும் பெரிதும் உறுதுணை!போரில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். துருபதனைக் கைது செய்து தன் ரதத்திலேயே தூக்கிப் போட்டு இழுத்து வந்து துரோணரின் காலடி நோக்கி தள்ளி விட்டான். பின், குருநாதா! இப்போது உங்கள் காலடியில் கிடப்பது துருபதன் மட்டுமல்ல. இவனது பாஞ்சால தேசமும் தான்... நீங்கள் ஒருபாதியைதான் கேட்டீர்கள். ஆனால், முழு தேசத்தையே நான் இப்போது உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்றான்துருபதனுக்கும் தன் தவறு புரிந்தது. இருந்த போதிலும் பாண்டவர்களிடம் பிடிபட நேர்ந்து இப்படி காலில் விழுமளவு வந்தது மனதை ரணப்படுத்திவிட்டது. துரோணருக்கும் மனம் கசிந்தது. துருபதா.... என் பால் உனக்கு நட்பில்லாமல் போனாலும், என்னிடம் அது இப்போதும் உள்ளது. நீ செய்யத்தவறியதை நான் இப்போது செய்கிறேன். நீ தராத பாதி நாட்டை நான் உனக்கு தருகிறேன். பெற்றுக் கொள். இனியாவது அகந்தை கொள்ளாமல் தர்ம நெறிகளோடு வாழக் கற்றுக் கொள், என்று துருபதனுக்கு பாஞ்சால நாட்டின் வட பகுதியை தந்து அதற்கு அரசனாகவும் ஆக்கினார். தன் நாடு தனக்கே தானமாக வந்து சேர்ந்தது துருபதனை கொந்தளிக்க வைத்தது. அதுபெரும் கோபமாக மாறியது. அந்த கோபம் துரோணர் மேல்தான் திரும்பியது. துரோணரை வெற்றி கொண்டு பழிக்குபழிவாங்க துருபதன் மனது துடித்தது. துரோணரிடம் இருப்பதோ பிரம்ம தேஜோபலம்! தன்னிடம் இருப்பதோ க்ஷத்திரியபலம்.

க்ஷத்திரிய பலத்துக்கு, பிரம்ம தேஜோபலம் துளியும் ஈடாகாது என்பது துருபதனுக்கு புரிந்தது. இவ்வேளையில் தான் யாஜர், உபயாஜர் என்று இரண்டு பிரம்மரிஷிகளை துருபதன் பார்த்தான். அவர்களிடம் தன் ஆதங்கத்தைச் சொல்லி, பிரம்ம தேஜோபலத்தை வெல்லும் சக்தியை நான் பெற வழிகாட்டுங்கள், என்று கேட்டான். அவர்கள் சவுத்ராமணி எனும் யாகம் செய்யச் சொன்னார்கள். அப்படி ஒரு யாகத்தை உரிய முறையில் செய்தால் யாக பலனாய் மிகுந்த அழகும் அறிவும் வீரமும் உடைய புத்திரன் மட்டுமல்ல, புத்திரியும் தோன்றுவது நிச்சயம், என்றார் யாஜர். யாகமும் முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆகுதியை தேவர்களுக்கு அரசனும் அரசியும் சேர்ந்தே தர வேண்டும்.  ஆனால் துருபதனின் மனைவியான ப்ருஷதி, தான் இருக்கவேண்டிய இடத்தில் யாஜரையே தன்சார்பில் இருந்து யாகம்புரியச் சொன்னாள்.துருபதனும் யாஜரும் ஒன்றுபட்டு ஆகுதியை வழங்கவும். அந்த யாக நெருப்பில் இருந்து ஒரு அழகிய வீரன் வெளிப்பட்டான். அவன் வெளிப்பட்ட நொடியில் அசரீரி ஒலித்தது. இவனே துரோணருக்கு எமன். அவருக்கு நண்பனாகவும் திகழ்வான். இவனால் பாஞ்சால தேசம் நற்பெயர் பெறும், என்றது அந்த வாக்கு. இவனே திருஷ்டத்துய்மன்! ஜெயிக்க முடியாதவன் என்பது இதன் பொருள். திருஷ்டத்துய்மனைத் தொடர்ந்து அந்த யாகத்தில் அழகிய பெண்ணொருத்தியும் தோன்றினாள்! அவளே திரவுபதி.