ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

1. ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆச்சார்யர்கள் பரம்பரை...

ஆதிசங்கரர் அவதாரம் - 1



கி.பி. நான்காம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரிடம் வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒரு நாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.

வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தானஷ தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். ஜோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார்.

குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதை எல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.
--------------------------------------------
கனகதாரா ஸ்தோத்திரம் - இரண்டு...

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்து விட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாக இருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷாம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று  அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள். 

இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார்.

19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மஹா லக்ஷ்மி  பொன் மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது.

[இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோவிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது.] சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று முடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணி விடை செய்து வந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பால லீலை - மூன்று

தினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகு தொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது.  இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. [இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி.] இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு ம ழான் கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர்.

சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான்.

பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார்.

ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி நான்கு துறவறம்: ஒரு நாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச் சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும், செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர்.

இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிகுந்த வருத்தம் அடுந்தாள். சிறுவயதில் இருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்து விட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசி ஆகலாம் என்று அனுமதி கொடுத்தார். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது.

பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார்.

அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின்  கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோவிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

குரு கோவிந்தபாதர்...

காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில்  தங்கியிருந்து விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி.

ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்கா தேவி, இவரின் பாத அடிகளை தாமரை மலரால் (பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார்.

இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்த போது சங்கரர் முக்கிய இறை நூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வநாதரின் திருவிளையாடல்

ஒரு நாள் கங்கையில் நீராடி விட்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவ பெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் [தீண்டத்தகாதவன்] உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார்.

இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்ம நிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள் பட "மனீஷா பஞ்சகம்" என்று போற்றப்படும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்து போய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேதவியாசரை சந்தித்தல்....

சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும் படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேத வியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவ பெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார்.

வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதை கேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16 ஆம் முடிந்து விட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார்.

வியாசரின் அருளால் சங்கரரின் வாழும் காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.

வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேத விற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும் படியும் கூறினார்.

குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை.

உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது.

உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம்.

சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள்.

சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார். 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. ஸ்ரீ ஆதிசங்கரர்

முதல் குருவாக ஆதிசங்கரர் [கி.மு. 509 - 477]

ஸ்ரீ சங்கரர் கேரளா காலடியில் பிறந்தார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஸ்தாபித்தவர். ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை திரையிட்டுக் கொண்டு சொல்லும் போது திரை விலக்கிப் பார்த்த எல்லா சீடர்களும் நாகத்தின் விஷ மூச்சால் பொசுங்கிப் போனார்கள். வெளியே அனுப்பப் பட்டிருந்த கெளட பாதர் மட்டுமே பிழைத்திருந்தார். கௌடபாதரின் சீடர், ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர். இவரே ஆதிசங்கர பகவத்பாதரின் குரு. மேற்கில் துவாரகாவிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே பூரியிலும், மத்தியில் சிருங்கேரியிலும் தெற்கில் ஸ்ரீ காமகோடி பீடம் காஞ்சியிலும் பீடங்களை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் தெற்கே வாசஸ்தலமும், சித்திஸ்தலமும் காஞ்சியே!

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜாதகம்....

புனர் பூச நக்ஷத்திரம் 2- ஆம் பாதம். கடக லக்னம், கடக ராசி, சூரியன், சுக்ரன், குரு, குஜன், சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் ஸ்ரீ ராமபிரான் ஜாதகத்தைப் போலவே உச்சம்.

சந்திரனும் ஸ்ரீ ராமர் ஜாதகத்தைப் போலவே ஆட்சி பெற்றிருக்கிறான் சுக்ரன், சூரியன், புதன், அதை போல் புதனும், சூரியனுடன் கூடியிருக்கிறான்.

குஜன் இருவருக்கும் ஒரே நக்ஷத்திரம். ஒரே மாதம் ராகு - கேதுக்கள் மட்டுமே இடம் மாறியிருக்கின்றன.

பிறந்த கிழமை - ஞாயிறு
திதி: சுக்ல பக்ஷ பஞ்சமி [வளர் பிறை]
ஆண்டு: நந்தன வருடம்.
காலம் : கலி 2593 [கி.மு.509] இவ்வாறு ப்ருஹத் ''சங்கர விஜயத்தில்’' கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரரே அதன் முதல் குருவாக இருந்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணமும் செய்து வைத்தார். ஸ்ரீ காமகோடி பீடத்தில் தனக்கென்று கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை ஸ்தாபித்தார். தனக்குப்பின் ஆச்சார்யராக ஸ்ரீ சுரேஸ்வரரை நியமித்தார்.

ஆதிசங்கரர் சமயவியல் அறிஞர்களை வாதிட்டு வென்றதும் காஞ்சியில் தான்! திருவானைக்காவில் ஸ்ரீ சக்ர வடிவிலான தாடங்கப் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ஆதிசங்கரர், காசி முதலான பிற க்ஷேத்திரங்களிலும் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

"ஸ்வர்ண ஆகர்ஷண யந்திரத்தை " திருப்பதியில் செல்வவளம் கொழிக்கும் படி பிரதிஷ்டை செய்து “விஷ்ணு பாதாதி கேசா’ந்த ஸ்தோத்திரத்தை”யும் அருளினார்.

கிழக்குக் கடற்கரை பூரி கோவர்த்தன மடத்தில் ''விமலா பீடத்தில்'’ முதல் ஆச்சார்யராக பத்ம பாதரை நியமித்தார் ஆதிசங்கரர். இதுவரை 145 பீடாதிபதிகள் அந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

மேற்குக் கடற்கரை துவாரகா மடத்தில் மகாகாளிகா பீடத்தில் முதல் ஆச்சார்யராக நியமிக்கப்பட்டவர் ''ஹஸ்தாமலகர்''. இதுவரை 79 பீடாதிபதிகள் அதை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர்.

ஹிமாச்சலத்தின் பத்ரியில் ஜ்யோதிர் மடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடத்தில் முதல் ஆச்சார்யராக ஆதிசங்கரர் நியமித்தவர் தோடகர்.

கர்நாடக மாநிலத்தில் துங்கை - பத்ரை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் சிருங்கேரி. ரிஷ்ய சிருங்கர் அங்கே தவமியற்றியதால் சிருங்க கிரி என அந்த க்ஷேத்திரம் புகழ் பெற்றது. ஸ்ரீசாரதாம்பிகையின் விருப்பப்படி, தேவியை அங்கே பிரதிஷ்டை செய்து ஸ்ரீமடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தன் சீடரான பிருத்வீதரரை அதன் ஆச்சார்யராக நியமனம் செய்தார். கைலாயத்திலிருந்து கொண்டு வந்த பஞ்ச லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தையும் அங்கே ஸ்தாபித்தார்.

கி.மு. 477 ரக்தாட்சி வருஷம், வ்ருஷப மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று காஞ்சியில் சித்தியடைந்தார் என வரலாறு கூறுகிறது. ஸ்ரீ சங்கரரின் வழிவந்த ஸ்ரீ காமகோடி பீடத்தில் குரு ரத்தினங்களாக விளங்கிய குருரத்னங்களைப் பற்றி இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.

இவர் 32 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை எழுபது ஆசார்யர்கள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளனர். இன்று முதல் இந்த பீடத்தில் இருந்த ஆசார்யர்களின், பிறந்த ஊர், பெற்றோர்களின் பெயர், ஆசார்யர்களின் பூர்விஸ்ரம பெயர், எந்த ஆண்டு முதல் பீடத்தில் இருந்தார்கள், எத்தனை ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்கள், எந்த ஆண்டு சித்தி அடைந்தார்கள், எங்கே சித்தி அடைந்தார்கள் போன்ற விவரங்களை இன்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு ஆசார்யர் வீதம் தொடர்ந்து பதிவிப்படும். நமது ஆசார்யர்களை பற்றி இன்று முதல் நாம் அனைவரும் தெரிந்து கொள்வோம். இந்த பீடத்தில் இருந்த ஆசார்யர்கள் அவர்கள் வந்த காலங்களில் என்ன என்ன அதிசயங்களை செய்துள்ளார்கள் என்பதை இந்த தொடரை முழுவதுமாக படிப்பவர்களுக்கு ஒரு வர பிரசாதமாக இந்த தொடர் அமையும்.....

சனி, 20 மே, 2023

History of the Kanchi Sankaracharya Math and Acharaparampara....

History of the Kanchi Sankaracharya Math and Acharaparampara....

ACHARYA - 1
Sri Sankara Bhagavatpada : On reaching Kanchi, after the digvijaya tours, Sri Sankaracharya settled down at Kanchi, established a Math for his own residence in that city, gave sanyasa deeksha to a very young boy of Thambaravarni valley, gave him the name Sarvajnatman, nominated him as successor Acharya of the Kanchi Sankaracharya Math and put him under the care of Sri Suresvaracharya. A long line of unbroken erudite and pious Acharyas have adorned the Kamakoti Peetham. Some of the most famous in this line of Acharyas are Sri Krpa Sankara, Sri Muka Sankara, Sri Abhinava Sankara, Sri Paramasivendra Saraswati, Sri Bhodhendra Saraswati and the world renowned 68th Acharya, Pujyasri Chandrasekharendra Saraswati Swamigal (Maha Periyaval), a benign soul who illustrated to us, through His universal tolerance, lofty nobility, profound erudition, towering spirituality and child like simplicity, like what the great Bhagavatpada Himself Adi Sankara took to sanyasa directly from Brahmacharya asrama. The same order is being followed till now where the Head of the Matham is selected from Brahmacharis only. The Acharyas of Kamakoti Peetham have the title "lndra-Saraswati". The Acharyas themselves perform daily tri-kala pooja to Sri Chandramauleesvara.

ACHARYA - 2
Sri Suresvaracharya : Sri Sureswaracharya was the most learned and aged of Sri Bhagavatpada's disciples. He was a native of Mahishmati. He was known as Mandana Mishra before He was initiated into the ascetic order by Sri Sankara Bhagavatpada. History of how Sri Sankara had a long debate with Sri Mandanat Mishra on various topics in the poorva mimamsa and in Advaita Vedanta, and how Sri Mandana Mishra was defeated in arguments and how he was given sanyasai and taken along with Him by the great Acharya, is recorded in most biographies of Sankara. After a long and eventful career and having been the author of the Vaathika on Sankara's Brhadaranyopanishad Bhashya and having authored the famous philosophical treatise known as Naishkarmya-Sidhi, Sri Sureswaracharya shook off his mortal remains at Kanchi, the southern Mokshapuri, on Sukla Ekadasi of Jyestha in the Cyclic Year Bhava (407 B.C). The presence of a street till recently under the name of Mandana Misra Agraharam, and the presence of a stone icon of Sri Sureswaracharya inside the Sri Kanchi Kamakoti Sankaracharya Math (which is in daily worship) confirm the connection of Sri Sureswaracharya with Kanchi Sankar Math and his videha mukthi at Kanchi.

ACHARYA - 3
Sri Sarvajnatman : After having conquered the leaders of many heretic sects prevalent in many parts of India, Sri Sankara Bhagavatpada reached Kanchi, the southern Mokshapuri to spend the evening years of His life in that holy city. One of the famous incidents of Sri Sankara's stay at Kanchi is his Sarvajna Peethahoranam or ascending the seat of Omniscience. On knowing about this, scholars from various parts of the Tamil regions gathered at Kanchi to witness the grand event. Among those, a band of scholars from Brahmadesam and its neighbourhood had a debate with the Acharya on Deva bedha, Moorthybedha, etc. By his clear exposition of the Advaita doctrine, the Acharya silenced their arguments. After the successful ascending of the Sarvajna Peetha, Sri Sankara was attracted by a boy of 7 summers to be very precious. He sent word for the parents of the boy. They came with their son and bowed before Sri Sankara. Then the great Acharya expressed His wish to nominate the little boy as his successor to the Kanchi Peetha. The parents greatly rejoiced and agreed to the Acharya's proposal. Thereafter the Acharya initiated the boy Into sanyasa asrama, gave him the deeksha name of Sarvajnatman. The Bala Sanyasi was put under the care of Sri Sureveswaracharya. Sri Sarvajnatman presided over the Sri Kanchi Sankaracharya Math for a long number of years. He wrote a lucid summary or rather a further commentary on Sri Sankara's Sutra Bashya. Sri Sarvajnatman's commentary is known as The Samkshepa Sareeraka.It is also said that He is the author of a poetical thesis called Sarvajna Vilasa. The Samkshapa Sareeraka of Sri Sarvajnatman contains 1267 verses couched in verses of elegance and easy style. After an eventful and glorious career Sri Sarvajnatman attained videha mukthi in Kanchi on the 14th day of the dark fortnight (Vaishaka Krishna Chaturdasi) of the cyclic year Nala (364 BC).

ACHARYA - 4
Sri Sathyabodhendra Saraswati : He is a native of Amaravatitheera in Chera country, and was known as Phalinisa in his poorvasrama. He was the son of one Thalinesa Sharma. He was a great fighter of Samkhyas, Bauddhas and Jainas. He was the author of Padaka-Sata (explanatory treatise on Sankara Bhashya). Sri Sathyabodhendra Saraswati attained mukti at Kanchi on Krishna astami in the month of Vaishaka of the cyclic year Nandana (268 BC ).

ACHARYA - 5
Sri Jnanandendra Saraswati : He was known as Jnanottama before Sanyasa. He was the son of Nagesa, a Dravida Brahman. He was a great tarkika and wrote a commentary called Chandrika, on Sri Sureswaracharya's Naishkarmya Siddhi. He, in his Chandrika commentary, has spoken of his guru Sri Satyabodha and Parama Guru Sri Sarvajnatman. This Chandrika commentary was edited and published by Prof. Hiranayya of the Mysore University. In the preface to this commentary, Sri Jnaanandendra Saraswati has spoken of himself as the glory of the Sarvajasrama at Kanchi. He attained mukti at Kanchi on Sukla Saptami in the month of Mrigaseersha of the cyclic year Manmatha (205 BC).

ACHARYA - 6
Sri Suddhanandendra Saraswati : He was the son of Bharvu Pandita and a native of Vedaranyam. His former name was Viswanatha. He was a Dravida Brahmin. Sri Suddhanandendra Saraswati attained mukti at Kanchi on Sukla Shashti in the month of Jyestha of the cyclic year Nala (124 BC).

ACHARYA - 7
Sri Aanandaghanendra Saraswati : He was known as Chinnayya before Sanyasa. He was the son of Suryanarayana Makhi. He hailed from Chera country. A great votary of Gauri, through divine grace of God, he obtained extraordinary literary powers. He wrote commentaries on the Sankara Bhashyas and Sureswaracharya's Vartikas. He attained mukti at Srisail on KrishnaNavami in the month of Vaisakha of the cyclic year Krodhana (55 BC).

ACHARYA - 8
Sri Kaivalyanandayogendra Saraswati : Before Sanyasa, he was known as Manganna and a native of Tirupati in Andhra. He was the son of Trailinga Sivayya , He attained mukti at Kanchi on first day of Makara of the, cyclic year Sarvadhari (28 AD),

ACHARYA - 9
Sri Krpa Sankarendra Saraswati : An Andhra Brahmin by birth, his former name was Gangesopadyaya. He devoted himself, heart and soul, to the eradication of degenerate, obscene practices that had once again crept into religion after the Bhagavatpada's time, and restored purity. It fell to the lot of Krpa Sankara to continue and perfect the noble work that Sri Adi Sankara had inaugurated. Krpa Sankara pursued with great vigour, the work of the Master and enhanced the greatness of Shanmatas introducing a chastened mode of worshiping Siva, Vishnu, Ambika, Surya, Ganapati and Skanda. In short, he prepared the ground for the growth of the devotional path to be attempted in the future by Saiva Nayanars, These later Saiva and Vaishnava religious reformers owe it to both Adi Sankara and Krpa Sankara so that their work was rendered easier by the preliminary religious reforms effected by the two great luminaries. He is said to have attained mukti at a place near Vindhya region on Krishna Tritiya in the month of Kartika of the cyclic year Vibhava (69 AD).

ACHARYA - 10
Sri Sureswara: Who succeeded Sri Krpa Sankara was a Maharashtra Brahmin and his poorvasrama name was Maheswara. He was the son of Iswara Pandita. He attained mukti at Kanchi on Purnima in the month of Ashada of the cyclic year Akshaya (127 AD).

ACHARYA - 11
Sri Sivananda Chidghanendra Saraswati : He was a Karnataka Brahmin and the son of one Ujjvala Bhatta. His poorvasrama name was Iswara Vatu. His predilections were towards Sivaadvaita. He attained mukti at Vrjddhachala on Sukla Dasami in the month of Jyestha of the cyclic year Virodhikrit (172 AD).

ACHARYA - 12
Sri Chandrasekharendra Saraswati : He was a native of a village near River Palar and was the son of Vatsa Bhatta. His former name was Hari. He entrusted the affairs of the Matha in the hands of one of his sishyas and engaged himself in a special type of Yoga. After a reign of sixty-three years, he disappeared into a cave in Seshachala on Sukla Navami in the month of Ashada of the cyclic year Ananda (235 AD).

ACHARYA - 13
Sri Satchidghanendra Saraswati : Known as Seshaya in his poorvasrama, he belonged to a village on the bank of the Gadilam river. He was the son of Sridhar Pandlta. Like his predecessor, he relinquished his pontificate to his successor and wandered about the environs of Kanchi as an "Avadhuta". After wandering for over thirty-two years, he disappeared into a. temple in Kanchi and it is said that his mortal frame got transformed into a Linga, now identified with Kayarohaneswara at Kanchi on Sukla Prathama in the month of Margasirsha of thecyclic the cyclic year Khara (272 AD).

ACHARYA - 14
Sri Vidyaghanendra Saraswati : He was Andhra by birth. His name before Sanyasa was Nayanai A great adept in Mantra Sastra, He is said to have mollified Ugra Bhairava. He attained mukti at a place near Agastya Hill on Amavasya in the month of Margasirsha d the cyclic year Dhatu (317 AD)

ACHARYA - 15
Sri Gangadharendra Saraswati : Hailing from Andhra, he was the son of Bhadragiri of Kanchi. His former name was Subhadra. Gangadhara was renowned for his great erudition. He attained mukti near the Agastyq Hill on Sukla Prathama in the month of Chaitra of the cyclic year Sarvadhari (329 AD).

ACHARYA - 16
Sri Ujjvala Sankarendra Saraswati : Before Sanyasa, he was known as Achyuta Kesava. He was son of Kesava Sankara. He was a Maharasthra Brahmin by birth. He was a great fighter of heretics. He went on Digvijaya and during his tours he drove the followers of Jainism beyond the Sindhu. He visited Kashmir and attained mukti at Kalapuri. Since then the place came to be known as Ujjvala Maha Yatipura on Sukla Ashtamj in the month of Valsakha of the cyclic year Akshaya (367 AD).

ACHARYA - 17
Sri Sadasivendra Saraswati : He was the son of Deva Misra, a Brahmana Minister of Kashmir. He showed a leaning towards Vedanta in his early years. He was ordained in Sanyasa by Sri Ujjvala Sankara. Wherever he went, he fed a number of Brahmanas every day. He attained mukti at Tryambaka (near Nasik) on Sukla Dasami in the month of Jyestha of the cyclic year Bhava (375 AD).

ACHARYA - 18
Sri Yogafilaka Surendra Saraswati : He was a native of Maharasahtra and the son of one Madhava. He vanquished the notorious Charwivaka Durdivi by argument. He attained mukti near Ujjain on Sukla Prathama in the month of Margasirsha of the cyclic year Taruna (385 AD).

ACHARYA - 19
Sri Martanda Vidyaghanendra Saraswati : Also known as Suryadasa, he was the son of one Umesa Sankara, His former name was Srikanta. Early in life, he was afflicted by Leuco-derma. But he got completely cured of the disease by offering 1008 prostrations to Bhagavan Surya every day. He was ordained in his eighteenth year and after a reign of 13 years, he attained mukti at a village on the bank of the Godavari on Krishna Navami in the month of Bhadrapada of the cyclic year Hevilambi (398 AD).

ACHARYA - 20
Sri Muka Sankarendra Saraswati : He was the son of one Vidyavati, an astrologer and astronomer. He was a congenital deaf-mute. But through the grace of Goddess Kamakshi he gained the power of speech.On knowing this attainment of speech by Mooka because of the grace of Devi, the then Acharya of Sri Kanchi Kamakoti Peetam, Sri Vidyaghana, sent for the boy's parents and told them of his intention of giving sanyasa to the boy and, with their consent, gave sanyasa to the boy and ordained him as his successor in the Kamakoti Math. Vikramaditya Sakari of Ujjain, Matrugupta, some time king of Kashmir, and Pravarasena, who succeeded Matrugupta on the throne, all considered it a rare privilege to serve at the feet of this great Acharya. Muka Sankara is the author of Muka Panchasati, a lyrical outburst of poetry on Kamakshi, The mellifluence of the work is said to be rivaled only by Lila Suka's Krishna Karnamrta. He attained mukti at a village near Godavari on full moon day in the month of Sravana of the cyclic year Dhatu (437 AD).

ACHARYA - 21
Sri Chandrasekharendra Saraswati II : He was a native of Konkan and the son of Achyuta. He succeeded Muka Sankara as the Pontiff of the Kamakoti Peetha and attained mukti at Banares on Krishna Astami in the month of Sravana of the cyclic year Vyaya (447 AD).

ACHARYA - 22
Sri Bodhendra Saraswati : He was the son of one Ramanatha, a native of Ratnagiri in Maharashtra. His name prior to sanyasa was Madhura. He was a great physician and yogi. He attained mukti near Jagannatha Kshetra on Sukla Navami in the month of Kartika of the cyclic year Raudri (481 AD).

ACHARYA - 23
Sri Satchisukhendra Saraswati : He was a native of Srikakulam in Andhra and son of Somanarayan. His former name was Girisa. He was a great votary of Subramanya. He attained mukti near Jagannatha Kshetra on Sukla Saptami in the month of Vaisaka of the cyclic year Khara (512 AD).

ACHARYA - 24
Sri Chitsukhendra Saraswati : He was a native of Konkan and was known as Siva Sarma before sanyasa. All through his pontificate, he remained in Konkan and attained mukti near Ratnagiri on Bahula Navami in the month of Sravana of the cyclic year Prabhava (527 AD).

ACHARYA - 25
Sri Satchidanandaghanendra Saraswati : He was the son of Krishna, a native of Srimushnam. He was a Dravida Brahrnana. Thrice he toured extensively all over India. He Was a great Yogi, and by his yogic powers, he is said to have turned Into a Linga at Gokarna on Sukla prathama in the month of Ashada of the cyclic year Prabhava (548 AD).
 
ACHARYA - 26
Sri Prajnaghanendra Saraswati : He was the son of Prabhakara, a native of a village on the bank of the Pinakini. His former name was Sonagiri. He attained mukti at Kanchi , on Sukla Ashtami in the month of Vaishaka of the cyclic year Svabhanu (546 AD).

ACHARYA - 27
Sri Chidvilasendra Saraswati : He was the son of Madhusudhana, a native of Hastagiri. His former name was Hari Kesava and he was an Andhra by nationality. He attained mukti at Kanchi on the First day in the month of Chaithra of the cyclic year Durmukhi (577 AD).

ACHARYA - 28
Sri Mahadevendra Saraswati I : He was the son of Bhanu Misra, a native of Bhadrachala. His pre- sanyasa name was Sesanarayana. He was a Maithila Brahmana domiciled in Andhradesa. He attained mukti at Kanchi on Krishna Dasami in the month of Asvina of the cyclic year Raudri (601 AD).

ACHARYA - 29
Sri Purnabhodhendra Saraswati : He was the son of Sripati. His former name was Krishna. He attained mukti at Kanchi on Sukla Ekadasi in the month of Sravana of the cyclic year Eswara (618 AD).

ACHARYA - 30
Sri Bhodhendra Saraswati II: He was the son of one Kajahasti . His Poorvasrama name was Balayya. He attained mukti at Kanchi on Krishna Chaturti in the month of Vaisaka of the cyclic year Ananda (655 AD).

ACHARYA - 31
Sri Brahmanandaghanendra Saraswati : He was the son of one Ananta, a native of a village on the bank of the river Gadilam. A Dravida Brahmana by birth, his former name was Jyestha Rudra. He was an authority in the six Darsanas. He was held in high veneration by King Lalitadiya Muktapida of Kashmir and by the great dramatist Bhavabhuti. He attained mukti at Kanchi on Sukla Dwadasi in the month of Jyeshta of the cyclic year Prabhava (668 AD).

ACHARYA - 32
Sri Chidanandaghanendra Saraswati : He was the son of one Kanva Sankara. His former name was Padmanabha. He was a great yogi and he subsisted on dry leaves only. He attained mukti at Kanchi on Sukla Shashti in the month of Margasirsha of the cyclic year Prajotpatti (672 AD).

ACHARYA - 33
Sri Satchidananda Saraswati : Otherwise known as Bhaskara Paramesthi. He was the son of one Praudha Ramanna, a native of a village on the bank of the Chandrabhaga. His former name was Timmanna, and he was a versatile linguist. He carried out extensive repairs to the Math buildings at Kanchi and attained mukti on Krishna Shashti in the month of Prostapada of the cyclic year Khara (692 AD).

ACHARYA - 34
Sri Chandrasekharendra Saraswati III : was the son of Mahadeva, a native of a village adjoining the river Vegavati. His former name was Sambhu and he made extensive tours. On one occasion, he heroically saved a child that had been caught in the midst of wild fire in a forest. He attained mukti at Kanchi on New Moon day in the month of Margasirsha of the cyclic year Saumya (710 AD).

ACHARYA - 35
Sri Chitsukhendra Saraswati : He was the son of Vimalaksha, a native of Vedachala. His pre-sanyas name was Susila Kamalaksha. He attained mukti in the Sahya mountain area on Sukla Shashti in the month Ashada of the cyclic year Dhatu (737 AD).

ACHARYA - 36
Sri Chitsukhanandendra Saraswati : He was the son of Somagiri, a native of a village adjoining Palar. He was a Dravida by nationality and his former name was Suresa. He attained mukti at Kanchi on Purnima in the month of Asvina of the cyclic year Hevilambi (758 AD).

ACHARYA - 37
Sri Vidyaghanendra Saraswati III: He was the son of Balachandra. His former name was Suryanarayana. He attained mukti at Chidambaram, where he had gone on a pilgrimage on Krishna Dwitiya in the month of Pushya of the cyclic year Prabhava (795 AD).

ACHARYA - 38
Sri Abhinava Sankarendra Saraswati : He was one of the greatest among the successors of Adi Sankara, so great indeed that he and his deeds are often confounded with those of the Great Bhagavatpada and his deeds. His life story has been described in detail in a work entitled the "Sankara Vilasa" by Vakpati Bhatta. His father was one Visvajit of Chindambaram. He was invested with Yajnopavita at the age of five and taught Vedas. He showed an extraordinary promise in dialectics and soon he became a formidable disputant on intricate questions in philosophy. He defeated Vakpati Bhatta, a great scholar of that time, in argument. He ascended the Savajna Pitha in Kashmir. It is said that he entered the Dattatreya cave in the Atreya Mountains in the Himalayas on Amavasya in the month of Ashada of the cyclic year Slddharti (840 AD) and that it was the end of his mortal career.

ACHARYA - 39
Sri Satchidvilaasendra Saraswati : He was the son of Kamaleswara of Kanyakubja and was known by the name Sripati before Sanyasa. For a long time, He lived in Padmapura. He attained mukti at Kanchi on Purnima in the month of Vaishaka of the cyclic year Nandana (873 AD).

ACHARYA - 40
Sri Mahadevendra Saraswati II: He was the son of one Kannayya, a native of Karnataka. His poorvasrama name was Sivaramabhatta. He was of a very handsome appearance and hence styled Sobhana and Ujjvala. He attained mukti at Kanchi on Sukla Shashti in the month of Vaisakha of the cyclic year Bhava (915 AD).

ACHARYA - 41
Sri Gangadharendra Saraswati II: He was the successor of Sri Mahadevendra and he was the son of Umesabhatta, a native of a village on the bank of the Bhima river. His former name was Appanna, and he was a Karnataka by nationality. He is said to have restored vision to the poet Rajasekhara, who had become blind, He attained mukti at Kanchi on Sukla Prathama in the month of Sravana of the cyclic year Saumya (950 AD).

ACHARYA - 42
Sri Brahmanandaghanendra Saraswati : He was the son of one Subramanya. He was known by the name Narasambhatta prior to sanyasa. He attained mukti at Kanchi on Sukla Prathama in the month of Sravana of the cyclic year Eswara (978 AD).

ACHARYA - 43
Sri Anandaghanendra Saraswati : He was the son of Sudeva Bhatta, a native of a village in the Tungabhadra valley. His name before initiation into the ascetic order was Sankara Pandita. He attained external bliss at Kanchi on Sukla Navami in the month of Chaitra of the cyclic year Pramadi (1014 AD).

ACHARYA - 44
Sri Purnabhodhendra Saraswati II : His father was Siva, native of Karnataka region. His name in the former ashrama was Hari. He attained videha mukti at Kanchi on Krishna Trayodasi in the month of Proshtapada of the cyclic year Pramadi (1040 BC).

ACHARYA - 45
Sri Paramasivendra Saraswati I: He was the son of Sivasamba Panditar. His name before he became an ascetic was Srikanta. He attained mukti at Kanchi on Sukla Saptami in the month of Asvina of the cyclic year Sarvari (1061 AD).
 
ACHARYA - 46
Sri Sandranandabhodhendra Saraswati : He was the son of Surya. His former name was Somadeva and he spent a great part of his early life in attending on his Guru and predecessor Paramasiva I. He was the author of Katha-Sarit Sagara. He was presented with a palanquin wrought with pearls by King Bhoja of Dhara. He attained mukti at Arunachala Kshetra on Arriavasya in the month of Ashada of the cyclic year Esvara (1098 AD).
 
ACHARYA - 47
Sri Chandrasekharendra Saraswati IV: otherwise known as Chandrachuda. He was the son of Suka Deva, a native of Kundini riverside. He was a Dravida by nationality and his pre-sanyasa name was Srikantha. He went on tours of digvijaya and defeated in argument Hemacharya, a great Jain teacher in the court of Vidyalola Kumarapala, and author of Kumarapala Charita. This Acharya was also held in considerable veneration by Mankha, the author of Srikantha Charita,by Krishna Misra, the author of Prabhoda Chadrodaya and Guruvijaya and Jayadeva, author of Prasanna Raghavan, Chandraloka and Bhakti Kalpa Latika, and Suhala, and also by a physician of Kashmir and author of a medical lexicon, known as Vaidyabhidhana Chintamani, Jayadeva has celebrated the victory of Chandrasekhara over Hemacharya in his Bhakti Kalpalatika. Jayasimha, king of Kashmir, considered himself blessed in the service of this great Acharya. He attained mukti at Arunachala Kshetra on Amavasya in the month of Chaitra of the cyclic year Parthiva (1166 AD).
 
ACHARYA - 48
Sri Advaitanandabodhendra Saraswati : Also called Chidvilasa. He was the son of Premesa, who was a native of a village on the bank of the Pinakini. His poorvasrama name was Sitapati. He defeated in argument Sriharsha, author of Khandana Khanda Khadya and Naishada, as also Abhinava Gupta, a tantrik writer. He was the author of Brahmavidyabharana, Santi Vivarana and Gurupradipa. He attained mukti at Chidambaram on Sukla Dasami in the month of Jyeshta of the cyclic year Sidharthi (1200 AD).
 
ACHARYA - 49
Sri Mahadevendra Saraswati III : He was the son of Achyuta of Chhayavanam in the Tanjore District. His former name was Gurumurthi. He was a devout worshipper of Parasakti but not a tantrika. He attained mukti on the banks of the Gadilam River on Krishna Ashtami in the month of Sravana of the cyclic year Parabhava (1247 AD).
 
ACHARYA - 50
Sri Chandrachudendra Saraswati I: He was the son of Arunagiri and was known as Gangesa before sanyasa. Like his Guru Mahadeva, he was also an ardent devotee of Parasakti and offered one crore of oblations in a homa performed to propitiate Paradevata. He attained mukti on the banks of the Gadilam river on Sukla Shashti in the month of Jyesta of the cyclic year Durmukhi (1297 AD).
 
ACHARYA - 51
Sri Vidyateerthendra Saraswati : He was the son of one Sarangapani, a native of Bilvaranya. His pre-sanyasa name was Sarvajna Vishnu. Sayana, commentator of the Vedas, Madhava (later Vidyaranyaswami), Vedanta Desika, the Vaisnava scholar, and Bharati Krisna Tirtha, were all pupils of Vidya Tirtha. After reigning at the Kanchi Math for 73 years, he went to the Himalayas to perform tapas.After spending 15 years in tapas, he attained videha mukti there on Sukla Prathama in the month of Magha of the cyclic year Raktakshi (1385 AD).
 
ACHARYA - 52
Sri Sankaranandendra Saraswati : He was the son of Balachandra, a native of Madhyarjuna or Tiruvidaimarudur. His former name was Mahesa. Before succeeding to the pontifical throne, he had accompanied Vidya Tirtha to the Himalayas. It was Sankarananda who was largely instrumental in the founding of eight new Advaita Mathas in Karnataka. He was the author of Dipikas on Isa, Kena, Prasna and Brhadaranyaka Upanishads. He was the author of Atma Purana and a commentary on the Bhagavat Gita. He vigorously combated the aggressive propaganda carried on by Vaisnava and Madwa sectarians. He attained mukti at Kanchi on Sukla Prathama in the month of Vaisakha of the cyclic year Durmukhi (1417 AD).
 
ACHARYA - 53
Sri Purnananda Sadasivendra Saraswati: He was a native of Nagaranya. He was the son of one Naganatha. He went on a tour to Nepal and was accorded royal honours by the King of Nepal. He attained mukti at Kanchi on Sukla Dasami in the month of Jyesta of the cyclic year Pingala (1498 A.D).
 
ACHARYA - 54
Sri Vyasachala Mahadevendra Saraswati : He was the son of Kamesvara and Kamalamba who belonged to Kanchi. His pre-sanyasa name was Kuppanna. He is the author of a Sankara Vijaya. He attained mukti at Vyasachala on the first day of the cark fortnight of Ashada in the cyclic year Akshaya (1507 AD).
 
ACHARYA - 55
Sri Chandrachudhendra Saraswati II : He was a native of Asmachala, near Manimuktar river in South Arcot District. He was the son of Purari and Srimati. His former name was Arunagiri. He was a Dravida Brahmana. He attained mukti at Kanchi on Sukla Ekadasi in the month of Meena of the cyclic year Swabhanu (1524 AD).
 
ACHARYA - 56
Sri Sarvajna Sadasiva Bhodhendra Saraswati : He was the son of Chiruta Chikkanna, a native of a village on the banks of the north Pennar. He was the Guru of Pravira Setupati Raja of Ramnad. It is said that he was the author of Svatma Nirupana. He attained mukti at Rameswaram on Sukla Ashtami in the month of Chaitra of the cyclic year Vilambi (1539 AD).
 
ACHARYA - 57
Sri Paramasivendra Saraswati II : He was the son of Parameswara, native of a village on the bank of the river Pampa. He was known as Sivaramakrishna before Sanyasa. He was the Guru of the great Sadasiva Brahmendra, the author of the Gururatna malika and the great Brahma Jnani. The greatness of Paramasivendra may be gauged from the fact that Sadasiva Brahmendra used to carry the sandals of the Acharya always on his head. And the greatness of Sadasiva Brahmendra may also be understood by an incident, which is recounted in popular tradition, Sadasiva steeped in the bliss of Brahman, was wandering about as an Avadhuta, to all appearances like a mad man. Some one reported to Paramasivendra that Sadasiva had gone mad. The Acharya is reported to have answered "I wish I had but a touch of that madness". So great indeed was Paramasivendra that Sadasiva Brahmendra has immortalised immortalised him in his Atma Vjdya Vilasa. This Acharya wrote a commentary on Siva Gita. He attained mukti at Svetaranya (Tiruvenkadu) in Tanjore District on Sukla Dasami in the month of Sravana of the cyclic year Parthiva (1586 AD).
 
ACHARYA - 58
Sri Atma Bodhendra Saraswati : He was a native of Vruddhachala, and son of one Viswamakhi. His pre-sanyasa name was Visvesvara. He toured extensively and stayed at Benares for a long time. He wrote a Bhasya on the Sri Rudram. It was Atma Bodha that directed Sadasiva Brahmendra to write the Gururatna Malika. He attained mukti on the banks of the river South Pinakini, known in Tamil as Then Pennai on Krishna Ashtami in the month of Tula of the cyclic year Eswara (1638 AD).

ACHARYA - 59
Sri Bhagavannama Bodhendra Saraswati : He was born in Mandana Misra Agraharam at Kanchi as the son of one Kesava Panduranga. Bhoddendra's former name was Purushottama. It was he who stressed the efficacy of devotion as a means to liberation in Kali. He therefore undertook the great task of Nama Siddhanta, or establishing the supreme efficacy of reciting the names of Bhagavan in many of his writings, chiefly in Namamrta Rasayana and Namamrta Rasodaya. His mission of Nama Siddhanta was pursued with equal vigor by Sridhara Venkatesa, or Ayyaval of Tiruvisainallur and by Sadguru Swami of Marudanallur. It was the Nama Siddhanta of Bodhendra that was ultimately responsible for the evolution of Bhajana Sampradaya as an institution in the religious life of the Hindu community in South India. Bodhendra performed Tatanka Pratistha at Jambukeswaram and while returning to Kanchi he attained videha mukti at Govindapuram on Full Moon day in the month of Proshtapada of the cyclic year Prajotpatti (1692 AD). It is said the spiritual presence of Bodhendra still abides at his Adhisthana at Govindapuram. It is said that in the calm silence of the night a melodious voice uttering Rama Nama is heard rising from subdued tones to a crescendo, and then fading into silence again.
 
ACHARYA - 60
Sri Advaitatma Prakasendra Saraswati : He was also known as Govinda. He was the son of Parasurama, a native of a village adjoining the river Vasistha. His former name was Sruti-Pandita. For some time, he lived in Govindapuram where his predecessor had attained mukti. He was held in very great veneration by Sahaji, , the King of Tanjore. He attained mukti at the village Ambi, near Kanchi on Krishna Dwitiya in the month of Chaitra of the cyclic year Svabhanu (1704 AD). His brindavan at Ambi is in daily worship.
 
ACHARYA - 61
Sri Mahadevendra Saraswati IV: He was previously known as Narayana. He was a great yogi. It was during his pontificate that Atma Bodha wrote his commentary Susama on the Gururatna Malika. He attained mukti at Tiruvottiyur, now a part of Chehnai on Sukla Navami in the month of Jyesta of the cyclic year Krothana (1746, AD).
 
ACHARYA - 62
Sri ChandrasekharendraSaraswati V: Kanchi was involved in the Karnatic wars and peaceful existence there had become impossible. Hence the Acharyas of Kamakoti Peetha decided on migrating south though Kanchi still figured as the nominal headquarters. The golden image of Kamakshi (Bangaru Kamakshi) had already been carried away by the sthanikas of the temple first to Udayarpalayam, and later to Tanjore where it has been permanently installed. The Acharya Chandrasekhara himself acceded to the request of Pratapa Simha, Rajah of Tanjore (1740-63) and took up his permanent headquarters at Tanjore. But Kumbakonam, on the banks of the sacred river Kaveri, was found more suitable and shortly thereafter the Acharya shifted to Kumbakonam. Chandrasekhara attained mukti at Kumbakonam on Sukla Prathama in the month of Pushya of the cyclic year Subhakrt (1783 AD)
 
ACHARYA - 63
Sri Mahadevendra Saraswati V: He was a great yogi. His former name was Anna Srauti. He was a native of Kumbakonam. He attained mukti at Kumbakoriam on Sukla Dwadasi in the month of Ashada of the cyclic year Srimukha {1813 AD).
 
ACHARYA - 64
Sri Chandrasekharendra Saraswati VI: He was known as Venkatasubramanya Dikshita prior to his sanyasa and belonged to the talented family of the great Govinda Dikshita, the Brahmana minister of Tanjore, who is still lovingly remembered as "Ayyan". He was a great adept in Mantra Sastra. The Acharya caused repairs to the temple of Sri Kamakshi at Kanchi and performed kumbhabhishekham on 22nd January 1840 AD. He got the tatankas (ear-oranaments) of Devi Akilandesvari in the Tiruvanaikoil and re-consecrated them on the ear of the goddess in 1848 AD. He attained mukti at Kumbakonam on Sukla Prathama in the month of Karthika of the cyclic year Sadarana (1851 AD).

ACHARYA - 65
Sri Sudarsana Mahadevendra Saraswati : Son of Seshadri Sastri of Madhyarjuna was known as Mahalingam prior to his sanyasa. He toured extensively and attained siddhi at Ilaiyattangudi on Amavasya in the month of Phalguna of the cyclic year Virodhi (1891 AD). A Temple has been built by the Nattukottai Chettiars on his samadhi.

ACHARYA - 66
Sri Chandrasekharendra Saraswati VII : He was the son of Sitarama Sastri. This Acharya's poorvasrama name was Swaminatha. He was a native of Udayambakkam. He attained mukti at Kalavai in the year 1907 on Krishna Ashtami in the month of Magha of the cyclic year Parabhava (1907 AD).
 
ACHARYA - 67
Sri Mahadevendra Saraswati V: He was the son of Narasimha Sastri and Lakshmi and was known as Lakshmi Narasimha prior to sanyasa. He occupied the Peetha for seven days only and attained mukti at Kalavai on Sukla Prathama in the month of Phalguna of the cyclic year Parabhava (1907 AD).
 
ACHARYA - 68
The 68th Pontiff His Holiness Sri Chandrasekharendra Saraswati Swamigal
Sri Swaminathan (born at Villupuram on 20th May 1894 - Anuradha Star) was taken to Kalavai in his 13th year, when he was studying at Tindivanam, to be initiated into ascetic order and ordained as the 68th Acharya of the Kanchi Kamakoti Math. He was given the Sanyasa name Sri Chandrasekharendra Saraswati. He was affectionately called "Mahaswamigal" and "Walking God". He adorned the Peetam from February 13, 1907. True to the tradition of the Peetam set by Adi Sankara, Mahaswamigal travelled throughout the country by foot or by the traditional palanquin. He also stood by the national sentiments in discarding "foreign cloth" (He immersed them in water instead of setting fire) and started wearing Khadi. He set the trend to create Trusts for achieving the objectives of the Peetham. His foremost concern was preservation of the Vedas, tradition and dharma. He advocated simplicity, shunned pomp, ostentation and extravagance. His exposition of Vedanta, sastras and the dharmic duties attracted scholars and laymen alike, from far and wide, for it has always been rich in values and simple in understanding. Great humorist he had the keen acumen to relate root words of all the languages to Sanskrit highlighting its greatness. He attained moksha at Kancheepuram on 8th January 1994 (Dhanur, Krishna Dwadasi) in his Centenary year.
  

ACHARYA - 69
The 69th Pontiff His Holiness Sri Jayendra Saraswati Swamigal
Sri Subramaniyam, born on July 18, 1935 at Irulneekki in Thanjavur District had Veda Adyayanam at Tiruvidaimarudur under the direction of Mahaswamjgal and was initiated into Sanyasa on March 22, 1954 and was declared as successor Acharya and given the Sanyasa name Sri Jayendra Saraswati Sri Pada. In the footsteps of the Mahaswamigal, He too undertook yatra throughout the country. He attracted people from every nook and corner. He intensified the activities of the Matam to cover new social objectives -education, health, employment, temple renovation etc. It is due to His untiring efforts, Kamakoti Peetam established religious and social institutions in many parts of the country. Kamakoti Peetam has now become a beehive of socio- religious renaissance. The King of Nepal has erected an arch "Welcome to the only Hindu Kingdom in the world" at the instance of Sri Jayendra Saraswati, in 1988. The only Sankaracharya after the Adi Sankara to visit Manasarovar and Kailash is Sri Jayendra Saraswati Swamigal, in 1998; there He installed the idol of Adi Sankara. He had the unique distinction in being honoured by both Nepal and Chinese Governments. In known recent history, He is the only Sankaracharya to visit Dhaka in Bangladesh in June 2000. In honouring His visit, Sri Dhakeswari Temple named the entrance to the temple as "Sankaracharya Gate". His most notable contribution yet is the founding of the Sri Chandrasekharendra Saraswati Viswa Mahavidyalaya, a Deemed University in the name of His Guru.

ACHARYA - 70
The 7Oth Pontiff His Holiness Sri Sankara Vijayendra Saraswati Swamigal
Sri Sankaranarayanan, born on March 18, 1969, Periyapalayam, a village near Arani in Tiruvallore District, was taken as Acharya to the Peetham as Sri Sankara Vijayendra Saraswati, on 29th May 1983, while He was studying at Polur. Under the tutelage of His Guru and Parama Guru, the rare fortune for a Peetathipadi, He also travelled throughout the country including remote places like Megalaya. He is deeply worried about the worsening moral and ethical values of the youth and the deteriorating educational standards and vanishing cultural and artistic talents in the country. He has initiated a number of measures to draw the youth, train them in all these aspects along with modern education. His keen interest to preserve our ancient literature has brought out many publications through the Matam in Indian and foreign languages for the benefit of devotees. He has conducted a number of training centres for youth in the name of Bakti Kendra, Dharma Kendra, Karma Kendra, etc, to inculcate in them our values and traditions. Sri Chandrasekharendra Saraswati VII : He was the son of Sitarama Sastri. This Acharya's poorvasrama name was Swaminatha. He was a native of Udayambakkam. He attained mukti at Kalavai in the year 1907 on Krishna Ashtami in the month of Magha of the cyclic year Parabhava (1907 AD).

புதன், 8 மார்ச், 2023

குரு பகவான் அஷ்டோத்திரம்

குரு பகவான் அஷ்டோத்திரம்

------------------------------------------------------------------
ஓம் குருவே நம :



ஓம் குணாவராய நம :
ஓம் கோப்தரே நம :
ஓம் கோசராய நம :
ஓம் கோபதிப்ரியாய நம :
ஓம் குணிசே நம :
ஓம் குணவதாமஸ்ரேஷ்டாய நம :
ஓம் குருணாம்குரவே நம :
ஓம் அவ்யாய நம :
ஓம் ஜைத்ரே நம :
ஓம் ஜயந்தாய நம :
ஓம் ஜயதாய நம :
ஓம் ப்ருஹத்பாணவே நம :
ஓம் பரஹஸ்பதயே நம :
ஓம் அபீஷ்டதாய நம :
ஓம் ஸுராசார்யாய நம :
ஓம் ஸுராராயந்யாய நம :
ஓம் கீர்வாணபோஷகாய நம :
ஓம் தந்யாய நம :
ஓம் கிரிஸாய நம :
ஓம் அநகாய நம :
ஓம் தீவிராய நம :
ஓம் திஷணாய நம :
ஓம் ஜீவாய நம :
ஓம் அநந்தாய நம :
ஓம் ஜயாவஹாய நம :
ஓம் ஆங்கிரஸாய நம :
ஓம் அத்வராஸக்தாய நம :
ஓம் விவிக்தாய நம :
ஓம் அத்வாக்ருத்யாய நம :
ஓம் பராய நம :
ஓம் வாசஸபதயே நம :
ஓம் வஸிநே நம :
ஓம் வஸயாய நம :
ஓம் வரிஷ்டாய நம :
ஓம் வார்விசக்ஷ்ணாய நம :
ஓம் சித்தஸித்திகராய நம :
ஓம் ஸ்ரீமதே நம :
ஓம் சைத்ராய நம :
ஓம் சித்ரஸிகண்டிஜாய நம :
ஓம் ப்ரஹத்ரதாய நம :
ஓம் ப்ரஹ்மவித்யாவிஸாரதாய நம :
ஓம் ஸமாநாதிகநிர் முக்தாய நம :
ஓம் ஸர்வலோகவஸம்பதாய நம :
ஓம் ஸுராஸுரகந்தர்வ வந்திதாய நம :
ஓம் ஸ்ரீமத்குருவே நம :
ஓம் ஸுரேந்த்யாய நம :
ஓம் தேவாசார்யாய நம :
ஓம் அநந்தஸாமர்த்யாய நம :
ஓம் வேதஸித்தாந்தபாரகாய நம :
ஓம் திவ்யபூஷணாய நம :
ஓம் தனுர்தராய நம :
ஓம் தைத்யஹந்த்ரேய நம :
ஓம் தயாஸாராய நம :
ஓம் தயாகராய நம :
ஒம் தாரித்ர்யநாஸகாய நம :
ஓம் தந்யாய நம :
ஓம் தக்ஷிணாயநஸம்பவாய நம :
ஓம் தநுர்மீநாதிபாய நம :
ஓம் தேவாய நம :
ஓம் தநுர்பாணதராய நம :
ஓம் ஹரயே நம :
ஓம் ஸர்வாகமக்ஞாய நம :
ஓம் ஸர்வவேதாந்தவித்ராய நம :
ஓம் ப்ரஹ்மபுத்ராய நம :
ஓம் ப்ரஹ்மணே நம :
ஓம் ப்ரஹமணேஸாம நம :
ஓம் ஸர்வதாதுஷ்டாய நம :
ஓம் ஸர்வகாய நம :
ஓம் ஸர்வஜிதாய நம :
ஓம் அக்ரோதநாய நம :
ஓம் முநிஸ்ரேஷ்டாய நம :
ஓம் நீதிகர்த்ரே நம :
ஓம் ஜகத்பித்ரே நம :
ஓம் விபந்நத்ராணஹேதவே நம :
ஓம் விஸ்வயோநயே நம :
ஓம் அயோநிஜாய நம :
ஓம் பூர்பவாய நம :
ஓம் தந்தாத்தே நம :
ஓம் ஸதாநந்தாய நம :
ஓம் பீடாஹராய நம :
ஓம் வாசஸ்பதயே நம :
ஓம் பீதராஸிநே நம :
ஓம் அத்தீயரூபாய நம :
ஓம் லம்பகூர்சாய நம :
ஓம் ப்ரஹ்ருஷ்டநேத்ராய நம :
ஓம் விப்ராணாம்பதயே நம :
ஓம் பார்கவசிஷ்யாய நம :
ஓம் விபச்நஹிதகாரகாய நம :
ஓம் ப்ரஹஸ்பதயே நம :
ஓம் ஸுரசார்யாய நம :
ஓம் தயாயநமோநம :
ஓம் ஸுபலக்ஷணாய நம :
ஓம் தயாயநமோ நம :
ஓம் ஸுபலக்ஷணாய நம :
ஓம் லோகத்ராயகுருவே நம :
ஓம் ஸர்வதோவிபவே நம :
ஓம் ஸர்வேஸாய நம :
ஓம் பரத்ரே நம :
ஓம் ஜீவாய நம :
ஓம் மஹாபலாய நம :
ஓம் ப்ரஹஸ்பத்யே நம :
ஓம் காவ்யப்ரியாய நம :
ஓம் அபீஷ்டபலாய நம :
ஓம் விஸ்வாதமநே நம :
ஓம் விஸ்கர்த்ரே நம :
ஓம் ஸ்ரீமமே நம :
ஓம் ஸுபக்ரகாய நம :
ஓம் தேவாய நம :
ஓம் ஸுபூஜிதாய நம :
ஓம் பிரஜாபத்யே நம :
ஓம் விஷ்ணுவே நம :
ஓம் ஸரரேந்த்ரவந்த்யாம் நம :
ஓம் பிரஹஸ்பதயே நம :

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?

காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?




காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு பெரியவாளை தரிசனம் செய்த போது உங்களுக்கு உடம்பு கூச வில்லை. உள் மனது நெருட வில்லை. எத்தனை அவமானங்கள் உங்களை போன்றவர்களால் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு. இப்போது நினைத்தால் கூட மனதிற்கு மிகவும் வேதனையாகஉள்ளது. அது உங்களுக்கு இல்லை. அப்பா இப்பவாது வெளி உலகத்துக்கு சொன்னியே. ஆமாம் இவ்வளவு தெரிந்திருந்தும் பதிநான்கு ஆண்டுகள் {ஒரு வனவாசம்} வாயை முடி இருத்தற்கு உனக்கு பதவி மேல் உள்ள மோகம் தானோ?  இனியாவது காஞ்சி ஸ்ரீ மடத்தை பற்றி தெரிந்து கொள்வோம். தவரான தகவல்களை தவிர்ப்போம்.

புதுடில்லி: காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னனியில் கிறிஸ்தவ மதம் மாற்றும் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‛கொலிஸன் இயர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2017 ம் ஆண்டு அக். மாதம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருந்தன. சங்கரசாரியாரின் கைது விவகாரத்தில் அப்போதைய காங். தலைவர் சோனியாவின் தலையீடு இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரணாப் இப்படி தெரிவித்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சோனியா மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்ப முயற்சிகள் நடந்ததாகவும், மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமமே முஸ்லீமாக மாறிய போது கோயில் ஒன்றை கட்டிய காஞ்சி சங்கராச்சாரியார் தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனில் கோயில் அவர்களை தேடி செல்லும் என கூறியிருந்தார். அவரது இச்செயலுக்கு பின் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கிறிஸ்வ மதம் மாற்றும் கும்பலுக்கு கண் இருந்ததாகவும், இவர் கிறிஸ்வத மத மாற்றத்திற்கு தடையாக இருப்பார் என அவர்கள் கருதியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கராச்சரியார் மீது நிலம் தொடர்பாக வந்த வழக்கை பயன்படுத்தி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் சோனியாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சசிகலா மூலம் நெருங்கிய உறவு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய வைத்துள்ளனர். அவரை கைது செய்ததன் மூலம் ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கும். இதன் மூலம் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு இருக்கும் ஒரு முக்கியமான தடையை அவர்களால் உடைக்க முடியும் என இதை செய்துள்ளனர். ஆந்திராவில் வைத்தே காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அப்போது ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தில் காங்., கட்சியே இருந்தது. இந்த செயலை மனதில் வைத்தே அந்த புத்தகத்தில் சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்ணணியில் சோனியா இருந்ததாக பிரணாப் குறிப்பிட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் அந்த புத்தகத்தில் அவர் மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகுரியவை குறித்து எழுதியுள்ளார். சோனியா குறித்து பிரணாப் கூறியதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நரசிம்மர் வழிபாடும் அதன் சிறப்பும்

நரசிம்மர் வழிபாடும் சிறப்பும்!

விஷ்ணு அவதார சன்னதிகள்: அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மேலும் சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால் திருச்சுற்றில் நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனி சன்னதி ஏற்படுத்தும் போது வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.

நரசிம்மர் அவதார வரலாறு: மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.

நரசிம்ம அவதார தத்துவம்: கோள்களும் நக்ஷத்திர மண்டலங்களும் எண்ணற்கரியவை. கணக்கிட இயலாத அளவுக்கு அவை கோடிக் கோடி  வருடங்கள் பழமையும் ஆனவை. அவற்றில் எல்லாம் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு பூதாகாரமான மிக மிகப் பெரிய உயிரினங்கள் பல வினோத வடிவங்களில் இருக்கின்றன. இவ்வுண்மையை பல நாட்டவரும் கலாச்சாரத்தவரும் அண்மைக் காலத்தில் தான் அகழ்வு ஆராய்ச்சிகள் மூலமாக அறியத் துவங்கியுள்ளனர். அது வரை பாரத மண்ணினர் வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரித்த ஒட்டு (ஹைப்ரிட்) த்தாவரங்கள் போன்ற வினோதமான உருவங்களை மிருக உறுப்பும் மனித உறுப்பும் இணைந்த நரசிம்மர் போன்ற வடிவங்களை பொய் என்றே சாதிக்க முயன்றனர்.

இருந்திருக்காலம் என்று கூட ஏற்றுக் கொள்ள வில்லை. கிராமத்திலேயே வாழ்பவர்களுக்கு நகரங்களில் உள்ள சுகபோகப் பொருட்கள் தெரிவதில்லை. உயிரைப் பறிக்கும் பல ஆபத்துக்களிருப்பதும் தெரிவதில்லை. அதே போல பண்டைக் காலத்தில் வாழ்ந்தவனுக்கு எதிர்கால உலகின் போகங்களும் தெரிந்திருக்காது. மனிதனை மாய்க்கக்கூடிய பொருள்களும் நிலைகளும் பெருகி விடுவதும் தெரிந்திருக்காது. இந்த நிலையினால் தான் பல அசுரர்களும், தேவர்களும் தம் பேராசைகள் நிறைவேறுவதற்காகத் தவம் செய்து பின்னர் பெரும் நஷ்டம் அடைந்ததைக் காண்கிறோம். கற்பனை செய்யவும் அனுமானிக்கவும் முடியாத அண்ட சராசரங்களில் அவர்கள் ஆசைப்பட்டதின் பரிமாணமும், சாவு ஏற்படுத்தக் கூடியதாக நினைத்த சூழல்களும் மிகமிகக் குறைவே. பிறந்தவை மறைந்தே ஆக வேண்டும். எதுவுமே என்றுமே ஒரே உருவில் இருக்க முடியாது என்பதும் இயற்கை நியதி. இதை உணராது, பின்னால் தேவையாயிருக்கும் என்று எண்ணி நாம் தற்போதைய செலவைக் குறைத்துக் கொண்டு நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டுகிறோம். இன்னின்ன வகைச் செலவினமோ ஆபத்தோ வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்காக அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களிலும் இன்னும் பல சேமிப்புத் திட்டங்களிலும் சேருகிறோம். இது போன்ற செயல்பாடே முன்பு பல்லோரும் தவத்தினால் போகங்கள் பெற்றதும் இறப்பை ஒத்திப்போட முயன்றதும் ஆகும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நாம் இறக்கப் போவதில்லை.

அவ்வகையிலேயே இறந்தாலும் கூட சேமித்த பணத்தை நாம் அனுபவிக்கப் போவதில்லை. மேலும் பின் சந்ததியினரை நாம் நினைத்த படியே நம் சேமிப்பை பயன்படுத்திடச் செய்யவும் நம்மால் முடியாது. பிறப்பும், மறையும் நிரந்தர தோற்ற - அழிவு அல்ல இதை உணராது சாமர்த்தியராக நினைத்துக் கொண்டு நமக்குத் தெரிந்த அனைத்து வகைகளாலும் இறப்பு வரக் கூடாது என வரம் வேண்டுவது அசட்டுத்தனமே.

உதாரணமாக அருகிலுள்ள சிறு பள்ளத்தில் விழுந்தாலும் சாவு ஏற்படலாம் என்பதை உணராது நாம் மலையிலிருந்து உருண்டாலும் சாகக் கூடாது என்று வரம் கேட்கிறோம்; தன் காதுக்குள் அல்லது தும்பிக்கையுள் நுழைந்த மிகச் சிறு எறும்போ சிலந்தியோ கூடத் தன் உயிரைப் போக்கலாம் என்பதை அறியாத யானை, பெரிய உயிரினங்களால் ஆபத்து வரக்கூடாது என்று கேட்கிறது. இது போலவே தான் இராவணன், மனிதன் தன்னை என்ன செய்திட முடியும் என்ற இறுமாப்பில் அவனை மட்டும் குறிப்பிடாது பிற எல்லாவற்றிலிருந்தும் சாகாவரம் பெற்று வரங்களின் பயன்கள் விரயமானவுடன் மனித வடிவில் வந்த இராமனால் அழிந்துபடுகிறான்.

பல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும் அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் தான் இரண்யகசிபுவும் இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு சிலர் தானே தெய்வமெனவும் தனக்கு மேலான சக்தியில்லை யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி பல்லோரை பல்வகையிலும் பயமுறுத்தி பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும் களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை - உண்மை என்று நினைத்து செயல்பட்டு சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே அனைத்து அவதாரங்களும் ஆகும்.

நரசிம்மர் வழிபாடு: நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான் அவருக்குத் தனி கோவிலும் சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே கயவனாக இருந்த சுவேதன் மறுபிறவியில் பிரகலாதனாகப் பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியிருப்பதால் அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும் நம் வசதி கருதி சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில் பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.

நரசிம்மர் விஷ்ணுவே என்பதால் பொதுவாக விஷ்ணு வழிபாட்டில் பயன் படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

தமிழகத்துள்ள நரசிம்மர் ஆலயங்கள்

விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை

1. அகோபில நரசிம்மர்                     2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்    4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர்                                6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர்                                 8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்
9. கல்யாணநரசிம்மர்                       10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர்                     12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர்                            14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர்                         16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர்                          18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர்                     20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர்                22. பிரஹ்லாத வரதநரசிம்மர்
23. பூவராக நரசிம்மர்                       24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர்                          26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர்                28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர்                     30. ஜ்வாலா நரசிம்மர்

முக்கிய நரசிம்மத் தலங்கள்

மிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள்

ஜோதிஷ்மட்: உ.பி. மாநிலம். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் உக்ர நரசிம்மர். 246449.

அகோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம க்ஷேத்ரம். மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். (மங்க-திருமங்) (பாசு - 10) 518454.

சோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலுரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உத்ஸவமூர்த்தி மட்டுமே உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிப்பது (மங்க-பேயா, திருமங்) (பாசு-4) 631102.

வேளுக்கை: காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். (மங்க-பே) (பாசு - 4) 631501

திருவாழித் திருநகரி: சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.

சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி. (மங்க -குல , திருமங்) (பாசு -42) 609106.

நாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது. (மங்க - திருமங்) (பாசு - 10) 611001.

தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.

தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. (மங்க-நம், பூத, திருமங்) (பாசு - 5) 613003.

திருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.

மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.

மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். (மங்க - பெரி, திருமங், பூத, பேயா, திருமழிசை) (பாசு - 39) 623210.

ஆ) பிற நரசிம்மத் தலங்கள்

ஆந்திரம் மாநிலம்

1. எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 523327.

2. யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள்.

3. தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 505425.

4. பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 422101

5. அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.

6. மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள். 522503.

7. சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு - 530004.

8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர்.

9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 533289.

10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 521131.

11. திராக்ஷõராமம் : காகினநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 533262.

12. திருப்பதி: <உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.

13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 507001.

கர்நாடக மாநிலம்

1. நரசிப்பூர் திருமுக்கூடல் - மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 502313.

2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 571485.

3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 571484.

4. சாளக்கிராம்  : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 571604.

5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 573211.

6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.

7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி <உயர நரசிம்மர். 583289.

8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 584119.

9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.

10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 591142.

11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். 591118.

மஹாராஷ்டிரா மாநிலம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள்.

ஒரிசா மாநிலம்

ஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம்.

தமிழ்நாடு மாநிலம்

1. குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.
பிற ஊர்கள்: மங்கைமடம் ; திருநகரி; திருவாலி. 609106.

2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. 637001.

3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். 603204.

4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 607106.

5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 631501.

6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். 620006.

7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 நரசிம்மர்கள் வழிபாடு. 604504

பாண்டிச்சேரி மாநிலம்

பாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். 605007.

கேரள மாநிலம்

1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.

2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.

3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.

மதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்

மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாச<லுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன. கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன. ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு. கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.

இத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல. பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார். ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.

ஆனைமலை கிரிவல வழிபாடு

திருவண்ணாமலை போல, தமிழகத்தில், நெடுங் காலமாக, கிரிவலம் செய்யப்படும் தலங்களுள் மதுரை மாவட்ட ஆனைமலையும் ஒன்று. இதை ஒட்டி உள்ள கொடிக்குளம், வெளவால் தோட்டம், ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் புதூர் ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் பவுர்ணமி தோறும் ஆனைமலையை கிரிவலம் வருகின்றனர். எல்லோரும் ஒரே இடத்திலிருந்து திருச்சுற்றை தொடங்கி முடிப்பதில்லை. தத்தம் ஊரிலிருந்தே புறப்பட்டு திரும்புகின்றனர். சுமார் 12 கி.மீ. திருச்சுற்றை, அதிகாலை 3 மணிக்குத் துவங்கி ஆரோக்கியமும், அமைதியும் அருளும் பெற்று விடியும் போது வீடு திரும்பி, அன்றாடப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன், பெருமாள், கிராம தேவதைகள் உட்பட பரம்பொருளின் பல்வித அவதார ரூபங்களையும் தரிசித்த பயனை ஒருசேர அளிக்கின்ற ஆனைமலை கிரிவல வழிபாட்டை யாவரும் செய்திட இறையருள் கூடட்டும்.

ஆதி சங்கரரும், நரசிம்மரும்

இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார். அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார். பின்னொரு சமயம், காபாலிகர்கள் சங்கரரைக் கொல்ல முற்பட்டபோது, அவரின் சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே. இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.

நரசிம்மர் திருவுருவ பேதங்கள்

நரசிம்மர் பற்றியுள்ள பல இலக்கியங்களில் நரசிம்மரின் உருவ எண்ணிக்கை மிக அதிகமாக 74 ஆகவும், அடுத்து 23 ஆகவும் கருதப்பட்டாலும், நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அவை:

1. அகோபில நரசிம்மர்
2. சத்ரவட நரசிம்மர்
3. யோகாநந்த நரசிம்மர்
4. காராஞ்ச நரசிம்மர்
5. பார்க்கவ நரசிம்மர்
6. வராக நரசிம்மர்
7. ஜ்வாலா நரசிம்மர்
8. பானக நரசிம்மர்
9. மாலோல நரசிம்மர்

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

எனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லக்ஷ்மியுடன் அல்லது ஸ்ரீ தேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார்.

நரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்

1. பாகவதம்                                   2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம்                    4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை                  6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை                8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை                10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை        12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம்                  14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை    16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம்                  18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம்  20. நரசிம்ம புராணம்.

கம்பப் பெருமாள்கள்

கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளேஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது.

நவகிரஹமும் நரசிம்மரும்

மதுரைக் கூடலழகர் கோயில் போன்ற மிகத் தொன்மையான சில திருமால் ஆலயங்களில் கூட நவக்ரஹ சன்னதியிருந்தாலும், பொதுவாக, பெருமாள் கோயில்களில் நவக்ரஹ சன்னதி மிகக் குறைவே. சைவ மரபில், குரு கிரகத்தை வணங்கிட தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது போல, வைஷ்ணவ மரபிலும், நவக்கிரகங்களில் ஒவ்வொருவரையும், வழிபட விஷ்ணுவின் ஒரு அவதார மூர்த்தியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதுவே, விஷ்ணு ஆலயங்களில் நவக்கிர சன்னதி அதிகமின்மைக்கு காரணம்.

யோக நரசிம்மரின் சிறப்பு

குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார். விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

கிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.

மத்ஸ்ய அவதாரம் - கேது     கல்கி அவதாரம்      - புதன்
வராக அவதாரம்   - ராகு      நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்
கூர்ம  அவதாரம்   - சனி       கிருஷ்ண அவதாரம் - சந்திரன்
பரசுராம அவதாரம் - சுக்ரன்   ராம அவதாரம்       - சூரியன்
வாமன அவதாரம்  - குரு       பலராமர் அவதாரம்  - குளிகன்

நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

தினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்

செவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை
புதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை
வியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை
சனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை
ஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை
திங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.

செவ்வாய், 31 மே, 2022

குழந்தை சித்தர் பகுதி இரண்டு

[ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.]

குழந்தையானந்தர் சித்தர்-2
***** **** ****  **** ***  **** ***   **
(இறுதி பகுதி)

இந்த நிலையில் குழந்தையை எங்கே விடுவது? என்று அவர்கள் யோசித்தனர்.  அடுத்த நொடியில் கோயிலுக்குள்ளே இருந்து பலமான மணியோசை கேட்டது.  வாயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. மூவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.  கர்ப்பக் கிருகத்தின் அருகில் மீனாட்சியின் காலடியில் குழந்தையை விட்டாள் திரிபுரசுந்தரி.  ‘’தாயே! நாங்கள் வேண்டிக் கொண்டபடியே இந்தக் குழந்தையை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டோம்.  இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு’’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள்.

அர்ச்சகர் வரும் வரையில் காத்திருந்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு வரும்படியாக காத்தவராயனிடம் சொல்லிவிட்டு, பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர்.  

மாலை நேரத்தில் தினப்படி கோயில் பூஜைக்காக வந்த அர்ச்சகர், கோயில் கதவுகள் விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்துப் பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.   அம்மனின் காலடியில் குழந்தை இருப்பதையும்,  குழந்தையுடன் காத்தவராயன் இருப்பதையும் கண்டார். காத்தவராயன் நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினார்.  கோயிலின் கதவுகளைப் பூட்டிய சாவி தன்னிடம் இருக்கும் போது,  அவைகள் தாமாகத் திறந்து கொண்ட அதிசயம், மதுரை மீனாட்சி அம்மனின் அருளைத் தவிர வேறு எதனால் இருக்க முடியும்? என்று முடிவுக்கு வந்தார் அர்ச்சகர்.  அம்பிகையைத் தொழுதார், இது அம்மனின் குழந்தை என்று சொல்லிவிட்டு,  குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார்.   அன்று முதல் குழந்தையானந்தர் அந்தக் கோயிலிலேயே அம்மன் குழந்தையாக, அவளது சொந்தப் பிள்ளையாகவே வளர ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும், அர்ச்சகர் தனது கோயில் வேலைகளை முடித்துக் கொண்டு கதவுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார். குழந்தை அங்கேயே இருக்கும்.  இரவு நேரங்களில் மீனாட்சியம்மன் மனித உருவில் வந்து குழந்தையுடன் கொஞ்சுவாள்.  அவர்கள் இருவரும் பேசும் பேச்சொலியை அர்ச்சகர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்.

தெய்வத்தின் குழந்தையாக அவர் வளருகின்ற  காலத்தில், அவருக்கு உபநயனமும் செய்யப்பட்டது. ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் சூட்டப்பட்டது.  குழந்தை ராஜகோபாலனுக்கு மனிதர்களின் கர்ம விணைகளைப் போக்கும் மகா சக்தி வந்து குவிந்தது.  அவருக்கு பறவைகளைப் போல பறக்கின்ற சக்தியும் கிடைத்தது.  அஷ்டமா சித்துகளில் ஒன்றான லகிமா எனப்படும் சித்தின் துணையினால், அவர் தனது உடலை லேசாக்கிக் கொண்டு, எடையற்ற நிலையில் ஒரு பறவையைப் போலப் பறந்தார்.  அவரது முகத்தைப் பார்த்தாலே கர்ம வினைகள் மறையும். மனதில் குதூகலம் உண்டாகும்.  அமைதி ஏற்படும்.   சிலர் அந்தக் குழந்தை சித்தரின் முகத்தைக் காண்கிற போது, பேரானந்தப் பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

இறைவன் அவருக்கு நந்தி வித்தையை அருளிச் செய்தான்.  அவர் தன்னிடம் வந்து தங்களது குறைகளை சொல்லி அழுது குமுறும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை, காது கொடுத்து கருணையோடு கேட்பார்.  அவர்களது நெற்றியில் தன்னுடைய விரலை பதிப்பார்.  அடுத்த நொடியில் அவர்களுடைய பிரச்சனைகள் விலகி துயரங்கள் தீர்ந்துவிடும்.

மனஉளைச்சலாலும், உடல் நோய்களினாலும், வறுமையாலும் பீடிக்கப் பட்ட மனிதர்கள் அவரை அனுகி, தங்கள் துன்பங்களைப் போக்கிக் கொண்டனர். குழந்தையானந்த சித்தரின் ஸ்பரிசத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் நீங்கி குணமடைந்தனர்.  தோல்வி கண்டு துவண்டவர்கள் வெற்றி நடை போட்டனர்.

அவருடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பரவ ஆரம்பித்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள்,  என்ன காரணத்தினாலோ, அவளுக்கு குழந்தையானந்தரை பிடிக்கவில்லை.  அவரது புகழையும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கையும் அவள் வெறுத்தாள்.

கர்மவினையின் காரணமாக, அவள் குழந்தையானந்தருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தாள்.  பலப்பல சூழ்ச்சிகள் செய்து அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.   அவளுடைய பொறாமைத்தீ காட்டுத் தீ போல பரவியதால்,  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவளாக, குழந்தையானந்தரின் பெற்றோருக்கு சொல்ல முடியாத துன்பங்களையும்,  வேதனைகளையும் ஏற்படுத்தினாள்.  இதன் உச்சகட்டமாக சித்தரின் தந்தையார் கொலை செய்யப்பட்டார்.

தன் கணவன் கொலையுண்டதைக் கண்ட மனைவி திரிபுர சுந்தரி,  அவருடன் உடன் கட்டை ஏறினாள்.  ஒருவழியாக ராணி மங்கம்மாவின் ஆட்சி முடிந்து, சொக்கநாத நாயக்கர் அரியணை ஏறினார்.  

அந்த சமயத்தில் தென்னகத்தில்(காசி) இருந்து, கணபதி பாபா என்கிற சித்தர் மகான் ஒருவர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அம்மனை தரிசித்த சித்தருக்கு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் பட்டான்.  அவனுடைய அழகும், தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.  ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார்.  உண்மை பளிச்சென்று புரிந்தது.

‘ஒ! இங்கே இருப்பவன் என்னுடைய சீடன் ‘ என்று அம்பாள் மூலம் உணர்ந்து கொண்டார் பாபா.  சிறுவனை தன் அருகில் வரச் சொல்லி அழைத்தார்.

குழந்தையானந்தரும் அவர் அருகில் வந்தார்.  ‘ஐயா! நானும் உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.  வாங்க போகலாம்’ என்று அழைத்ததோடு,  பாபாவின் வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

பாபா அவருக்கு பல ஆன்ம விசயங்களைப் போதித்தார்.  பலவிதமான ஆன்ம சக்திகளை வழங்கினார்.  குழந்தையானந்தரும்,  பாபாவும் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சேவை செய்தனர்.

வியாதியினால் வாடி வாழ்க்கையைத் தொலைத்த மக்களுக்கு, மருந்தாக இருந்து நோய் நீக்கினர்.  மனதில் ஏற்படும் குழப்பம், பயம், எண்ணற்ற குடும்பச் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் குடும்பத்திலும், மனங்களிலும் மகிழ்ச்சி விதைகளைத் தூவி இறைப்பணி செய்து வந்தனர்.

தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல்,  அவர்கள் அங்கிருந்து விஜயநகரம் சென்றும் மக்கள் சேவை செய்தனர்.  பிறகு விதர்ப்ப நாடு சென்று, அங்கேயும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினர்.  அங்கிருந்து காசிக்குச் சென்றனர்.  காசியில் பல அற்புதங்களை நிகழ்த்திய குழந்தையானந்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.

காசியில் சமாதி நிலை அடைந்த மகா சித்தர் குழந்தையானந்தர், தமிழகத்தில் மீண்டும் அவதரித்து,  திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால்’ அது தான் உண்மை! சிலகாலம் திருவண்ணாமலையில் தங்கி சித்தாடல்களை நிகழ்த்தினார்.  அவரது கருணையினால் மக்கள் குறைகள் நீங்கினர். வளவாழ்வு பெற்றனர்.  நோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  இவ்வாறு மக்களுக்குத் தொண்டு செய்த அந்த அற்புதச் சித்தர் ஒரு நல்ல நாளில் ஜோதி வடிவத்தில் அண்ணாமலையாருடன் கலந்து விட்டார்.  இது இரண்டாவது சமாதி நிலை.

இந்த இரண்டாவது சமாதியிலும் அவர் முழுமையாக அடங்கிவிடவில்லை.  அவர் செய்ய வேண்டிய பணிகள் மீதமிருந்தன போலும்,  எனவே இரண்டாவது சமாதியில் இருந்தும் அவர் மீண்டார். உயிர்த்தெழுந்து காஞ்சிபுரம் சேர்ந்தார்.   

இரண்டு முறை சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சித்தர் என்று கேள்விப் பட்டதும், மக்கள் பெரும் ஆர்வத்தோடு அவரை தரிசிக்க வந்தனர்.  பிறவிப்பயனை பெற்றிட அவரது கருணையை யாசித்தனர்.  வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை தடையின்றி வழங்கிய வள்ளல் குழந்தையானந்த சித்தர், சில காலம் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து,  பின் அங்கிருந்து மதுரைக்கும், தென்காசிக்கும் பயணம் செய்தார்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நன்மைகளை அளித்தார்.  மேன்மைகளை உருவாக்கினார்.  அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்தனர். பல புதிய திருப்பங்களைப்  பெற்று வாழ்வில் உயர்ந்தனர்.  இந்த நிலையில் தென்காசியில் குழந்தை சித்தர் சமாதி அடைந்தார்.

பிறகு தென்காசி சமாதியில் இருந்து உயிர்த்தெழுந்து, மதுரையை அடுத்த சித்தாலங்குடிக்கு  வந்து பல சித்தாடல்களை நிகழ்த்தி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு, குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால், தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார்.

1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலகுண்டு சென்றார்.  அங்கு தனக்கு தன் சீடர்கள் மூலம் ஒரு கோயிலை நிர்மானித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். பின்னர்’ அங்கிருந்து வத்தலகுண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்தாலும், சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.



குழந்தை சித்தர் பகுதி ஒன்று

குழந்தையானந்தர் சித்தர்.
--------------------------------------

மதுரையில் அன்னை மீனாட்சியின் தீவிர பக்தர்களாக வாழ்ந்த தம்பதியர் ராமசாமி ஐயரும், அவரது தர்மபத்தினி திரிபுரசுந்தரி அம்மாளும்.  இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.  அவர்கள் எல்லா விரதங்களும் அனுஷ்டித்தனர்.  கோயில் குளங்களுக்குச் சென்று வந்தனர்.  புண்ணிய தீர்த்தமாடினர். ஆனாலும் திரிபுர சுந்தரிக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர்களது பெற்றோரும், உற்றோரும் சொன்னதன் பேரில்,  அவர்கள் அன்னை மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டியதோடு, உருக்கமான ஒரு வேண்டுகோளையும் தெரிவித்தனர்.  ‘’அம்மா உனது அருளால் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டானால்,  அந்தக் குழந்தையை உன் கோயிலிலேயே விட்டு விடுகிறோம்’’ என்பதுதான்  அந்த விநோதமான வேண்டுதல்.

இப்படி இவர்கள் வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து வீடு திரும்பிய போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவர்களது வீட்டில் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு அழகான குழந்தைகளும் தம்பதியரைப் பார்த்ததும், ‘’இந்தப் பொம்மைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்’’ என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அவர்கள் இருவரும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்பதே விளங்கவில்லை.  மிக அழகான அந்த இரண்டு குழந்தைகள் யார்?  அவர்கள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்?,  சுற்றுப் பக்கத்து வீடுகளில் இதுவரையில் அந்தக் குழந்தைகளை தாங்கள் பார்த்தது இல்லையே?  என்று இது போன்ற ஏராளமான கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

திரிபுரசுந்தரி குழந்தைகள் கொடுத்த பொம்மைகளை திருப்பிப் பார்த்தார்,  அவருக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.  காரணம் அந்தப் பொம்மையின் அடிப்பாதங்களில் சங்கும் சக்கரமும் வரையப்பட்டு இருந்தது.  அதை அவர் சந்தோஷத்தோடு தனது கணவரிடம் காண்பித்தார்.

‘’ஆஹா!, அம்பாள் கண் திறந்து அனுக்கிரகம் செய்துவிட்டாள்.  நமக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கப் போகிறது.  அதில் ஒரு குழந்தையின் கால்களில் சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்,  அதைத்தான் இந்தப் பொம்மை உணர்த்துகிறது.  உடனே இதை பூஜை அறையில் கொண்டு போய் வைத்துக் கொள்’’ என்றார்.

கணவரின் வார்த்தைகளினாலும், நடந்த அதிசயமான நிகழ்ச்சிகளினாலும் பிரமித்துப்போன திரிபுரசுந்தரி பரபரப்பாகிவிட்டார். உடனே லலிதா  சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை முனுமுனுத்தபடி அந்த மரப்பாச்சி பொம்மைகளை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து,  வீட்டில் இருந்த பொரியை நைவேத்தியம் செய்தாள்.

சற்று நேரத்தில், முன்பு வந்த குழந்தைகள் இரண்டு பேரும் தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அவர்களை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள்.  அவர்கள் இரண்டு பேரும்,  ‘’அந்தப் பொம்மையைக் கொடுங்கள்,  எங்களுக்கு நேரமாகிறது. நாங்கள் போக வேண்டும்’’ என்று ஒரே தொனியில் பரபரப்போடு கேட்டனர்.

இது என்ன? இந்தக் குழந்தைகள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்து பொம்மைகளை கொடுத்துவிட்டு, இப்போது கேட்கிறார்களே?  ஓ அதுதான் குழந்தை குணம் என்பது என்று நினைத்துக் கொண்டே,  ‘’கொஞ்சம் இருங்கள்,  பூசை அறையிலே வெச்சிருக்கேன்,  கொண்டு வந்து தரேன்’’என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்த திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனார். காரணம் சற்று நேரத்துக்கு முன்னால் அங்கே வைத்து பொரி நைவேத்தியம் செய்த போது இருந்த இரண்டு பொம்மைகளும் இப்போது காணவில்லை.  அவைகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.  குழந்தைகளிடம் வந்து பொம்மை காணவில்லை என்று எப்படி சொல்லுவது? அவர்கள் தான் திருடிவிட்டதாக எண்ண மாட்டார்களா? ஐயோ ஜகதாம்பிகே, இது என்ன சோதனை என்று மனதுக்குள் உருகியபடி கண்களை மூடி உட்கார்ந்தாள்.  மதுரை மீனாட்சியை மனமுருகி வேண்டினாள்.

அடுத்த நொடியில் அவள் அருகே அந்த இரண்டு பொம்மைகளும் வந்தன.  மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளை கையில் எடுத்தாள்.  அந்தப் பொம்மைகளில் இருந்து தெய்வீக மணம் வீசியது.  இதுநாள் வரையில் அதுபோன்ற வாசனையை அவள் அனுபவித்ததே இல்லை.  அது இந்த உலகத்தின் வாசனையே அல்ல என்பது திரிபுரசுந்தரிக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நடக்கும் ஆச்சரியத்தினால் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  இருந்த அவள்,  கையில் பொம்மைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.  அங்கே இதுவரையில் குழந்தைகளின் பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்து.  இப்போது சட்டென்று அமைதி ஏற்பட்டு விட்டது.  கூடத்தில் நின்ற குழந்தைகளைக் காணவில்லை.

திரிபுரசுந்தரி தன் கணவனை அழைத்து,  குழந்தைகள் எங்கே? என்று கேட்டாள்.  அவர் அங்கு வருகின்ற நேரத்தில் அதிசயப்படும் விதமாக அவள் கையில் இருந்த பொம்மைகளும் திடீரென்று காற்றில் மறைந்துவிட்டது  ஆனால்’ அந்தத் தெய்வீக மணம் மட்டும் பொம்மைகள் இருந்தது உண்மைதான்,  நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் உண்மைதான் என்று சொல்வதைப் போல சாட்சியமாக கூடத்தில் சுற்றி வந்தது.

மூச்சு வாங்க நடந்தவைகளை தன் கணவனிடம் சொல்லி முடித்தாள் திரிபுரசுந்தரி.

அதைக் கேட்ட ராமசாமி ஐயர், ‘’நம் வீட்டுக்கு வந்திருந்த குழந்தைகள் வேறு யாருமல்ல,  சாட்சாத் மீனாட்சி அம்மனும்,  சோமசுந்தரப் பெருமானும் தான்.  அவர்கள் உன் வயிற்றில் உருவாகப் போகும் ஒரு சக்தி மிக்க பேரொளியைப் பற்றிச் சொல்வதற்காக மானுட வடிவத்தில் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள்.  பயம் வேண்டாம்,  சந்தோஷமாக இரு’’ என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்று அம்மனின் சிலைக்கு முன்பாக அமர்ந்து மனமுருகி வேண்ட ஆரம்பித்தார்.    

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்த பிறகு, இறைவியின் கட்டளைப்படியே கி.பி 1607 ஆம் வருடம், புஷ்ய மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் திரிபுரசுந்தரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அவர் தான் குழந்தையானந்த சித்தர்.  

அடுத்த நொடியில் அந்த இடத்தில் உலகையே மயக்கும் விதமாக மிக அற்புதமான வாசனை வீசுவதை மருத்துவப் பெண்களும்,  உறவினர்களும்,  ராமசாமி ஐயரும் உணர்ந்தனர். தெய்வக் குழந்தையான குழந்தையானந்தா சுயம்புவாக அவதாரம் செய்தார் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.  தெய்வீக வாசனையின் காரணமாக தன்னிலை மறந்த அனைவரும் சுயநினைவு அடைந்த போது, அந்தக் குழந்தைக்குப் பக்கத்தில் மற்றொரு குழந்தையும் இருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்தனர்.

இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை இரண்டு குழந்தைகள் வந்து கொடுத்தனர் அல்லவா?  அதனால் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அறிந்த தம்பதியர் பெருமகிழ்ச்சி கொண்டனர்.  இரண்டு குழந்தைகளில் குழந்தையானந்த சித்தரின் பாதங்களில் மட்டும் சங்கு சக்கர ரேகைகள் இருப்பதைப் பெற்றோரும், மற்றோரும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.

குழந்தையானந்தருக்கு ராமன் என்று பெயர் வைத்தனர்.  மற்றொரு குழந்தைக்கு லட்சுமணன் என்று பெயரிட்டு அழைத்தனர்.  தெய்வீகக் குழந்தையான சித்தரின் சிரிப்பு காண்பவர் அத்தனை பேரையும் மயக்கியது.  அவருடைய சிரிப்பில் மகிழாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.  மற்றவர்களுக்கே இத்தனை மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருக்குமானால், பெற்றவர்களின் ஆனந்தத்தை வார்த்தைகளினால் விளக்க முடியுமா?

அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் அளவேயில்லை.  ஆனாலும், அவர்களுடைய மனத்தில் துயரத்தின் ரேகைகள் மிக அழுத்தமாக விழுந்தன.  காரணம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் மதுரை மீனாட்சியம்மனிடம் அவனை விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டிருந்தனர் அல்லவா?  அந்த வேண்டுதல் நினைவுக்கு வந்தவுடன் அவர்களுடைய மகிழ்ச்சியும்,  பூரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.  மனத்தை சோகமயமான மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

குழந்தை பிறக்கும்  வரையில் பிறந்தால் போதும்,  அதைப் பார்த்துவிட்டு கோயிலுக்கே நேர்ந்து விட்டு விடலாம் என்று தோன்றியது.  ஆனால்’ இப்போது குழந்தை பிறந்ததும், அதை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துடித்தாள் திரிபுரசுந்தரி.  அவளது நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமையில் இருந்தது.  வேண்டுதலை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது,  குழந்தையைப் பிரியவும் கூடாது,  இது எப்படி சாத்தியம்?  பெற்ற தாயின் துயரம் யாராலும் போக்க முடியாததாக இருந்தது.  இந்த நிலையில் ராமசாமி ஐயர் ஒரு முடிவுக்கு வந்தார்.    

இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.  தாங்கள் வேண்டிக் கொண்டபடி குழந்தையானந்த சித்தரை கோயிலில் விட்டு விடலாம்.  ஒரு குழந்தை தங்களிடம் வளரட்டும் என்று தீர்மானம் செய்தார்.  இதன்படிச் செய்தால் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும்,  ஒரு குழந்தையும் பெற்றோரிடம் வளரும் என்று அவர் எண்ணமிட்டார்.  இதைச் செயல்படுத்த அவர் காத்தவராயன் என்பவரோடு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது’ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கோயில் கதவு சாத்தப்பட்டு விட்டது.  பூஜைகள் முடிந்து அர்ச்சகர் கோயிலை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.

தொடரும்,.....