JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 5 மே, 2021
அக்னிபுரீஸ்வரர் கோவில்
ருவாரூர் மாவட்டம் )
நட்சத்திர கோவில்கள்
நட்சத்திரம் : சதயம்
ஸ்தல வரலாறு : அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
வாழ்த்தி பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்:பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.
ஸ்தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.
ஸ்தலபெருமை:அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்:
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.
அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.
கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள் . அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.
சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.
திருவிழாக்கள் :வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பொது தகவல்:சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை செய்தல் இத்தலத்தின் மிகவும் விசேசமான பிரார்த்தனை ஆகும். புதிய வீடு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை பண்ணி அந்த செங்கலை எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் சுயம்புவாய் வீற்றிருக்கும் அக்னீசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர்,விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோவில் விவரங்கள்
மூலவர் : அக்னிபுரீஸ்வரர்,சரண்யபுரீஸ்வரர், கோணபிரான்
பிரத்தியக்ஷ வரதர்
அம்மன் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் :திருப்புகலூர்
மாவட்டம் :திருவாரூர்
மாநிலம் :தமிழ்நாடு
அமைவிடம் :திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.
அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
காஞ்சில் பார்க்க வேண்டிய கோயில்கள்
இன்று அருள் மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
மூலவர் : ஏகாம்பரநாதர்
உற்சவர் : ஏகாம்பரநாதர், ஏழவார்குழலி
அம்மன்: காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : சிவகங்கை
ஆகமம் : சிவாகமம்
பழமை : 3500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.(திருநாவுக்கரசர்)
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
திருவிழா : பங்குனி உத்திரம் பெருவிழா-13 நாட்கள் நடைபெறும் வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.போன்:+91- 44-2722 2084.
பொது தகவல் : மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. ராஜகோபுர கலசம் மட்டும் 11 அடி உயரம் கொண்டது.
பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர். இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்த போது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்க வில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும் படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
அப்பர்
தெரிந்து கொள்வோம் அப்பரை பற்றி பாகம்-1
அப்பர் : இவர் திருவாமூரில் வளோளர் குடியில்
பிறந்தார்.தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். இவரது பிள்ளைத் திருநாமம் "மருள்நீக்கியார்" என்பதாகும். இளமையில் பெற்றோரை இழந்த மருள் நீக்கியாரைத் தமக்கை திலகவதியார் அன்போடு வளர்த்தார்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம்
ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம் 19:02:21
ஸூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்புவதால் ரத ஸப்தமி என்று பெயர். இந்நாளில் ஏழு எருக்க இலைகள், அக்ஷதை, அருகம்புல், பசுவின் சாணம், மஞ்சள் பொடி, ஆகியவற்றை தலையில் வைத்து கிழக்கு முகமாக கீழ் கண்ட ஶ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும். இதற்கு அர்க்கபத்ர ஸ்நானம் என பெயர்
सप्त सप्तिप्रिये देवि सप्त लोक प्रदीपिके ।
सप्तजन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम् ।।
एतज्जन्म कृतं पापं कृतं सप्तसु जन्मसु ।
सर्वं शोकंच मोहंच माकरी हन्तु सप्तमी ।।
नौमि सप्तमि देवि त्वां सप्तलोकैक मातरम् ।
सप्तार्कपत्र स्नानेन मम पापं व्यपोहय ।।
ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்தலோக ப்ரதீபிகே ।
ஸப்தஜந்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் ।।
ஏதஜ்ஜந்ம க்ருதம் பாபம் க்ருதம் ஸப்தஸு ஜந்மஸு ।
ஸர்வம் ஶோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்து ஸப்தமீ ।।
நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம் ।
ஸப்தார்க்கபத்ர ஸ்நாநேந மம பாபம் வ்யபோஹய ।।
என்று ஸ்னானம் செய்து
*रथ सप्तमि स्नानाङ्गम् अर्घ्य प्रदानम् करिष्ये*
*ரத ஸப்தமி ஸ்நாநாங்கம் அர்க்ய ப்ரதாநம் கரிஷ்யே*
என்று ஸங்கல்பம் செய்து கீழே உள்ள ஶ்லோகத்தால் அர்க்யம் கொடுக்கவும்.
सप्तसप्ति रथस्थान सप्तलोक प्रदीपक ।
सप्तम्या सहितो देव गृहाणार्घ्यं दिवाकर ।।
दिवाकराय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यं ।।
ஸப்த ஸப்தி ரதஸ்தான ஸப்த லோக ப்ரதீபக ஸப்தம்யா ஸஹிதோ தேவ க்ரஹாணார்க்யம் திவாகர திவாகராயநம:இதமர்க்யம்
என்று தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு பகவானுக்கு அர்க்யம்விடவும்.
வியாழன், 11 பிப்ரவரி, 2021
பிராமணர்கள் அதுவும் வைதீக குடும்பத்தில் இருப்பவர்கள் மடி, ஆச்சாரம் என்று சொல்லிக் கொண்டு கண்ட இடத்திலும், இதராவாத்திலும் சாப்பிடுகிறார்கள். இதனால் இவர்களின் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் இவை அனைத்தும் போய் விட்டதே. பிறகு எப்படி இவர்களை மற்றவர்கள் மதிப்பார்கள். அடியேன் எல்லோரையும் சொல்ல வில்லை. ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள். அதனால் சொன்னேன். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
இல்லை ஜி தேவையான பதிவு தான் ஜி... அடியேன் சொந்தகாரர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவர்களின் அக்கா குடும்பம் ரொம்ப ஆச்சாரம். அதனால் அடியேனிடம் இட்லி, தயிர் சாதம் கேட்டார்கள். அடியேனும் ஆத்துக்கு வந்து குளித்து இட்லி, தயிர் சாதம் செய்து எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு புறப்பட்ட அவர்கள் வழியில் அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்து விட்டார்கள். இது நேற்று முன் தினம் தான் எனது மாமாவிடம் பேசும் போது மாமா சொன்னார். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு அடியேனிடம் கேட்டு இருக்க வேண்டாம். ஒரு வேளை அவரிகளுக்கு பிடிக்க வில்லை என்றால் ஏதாவது ஏழைக்கு கொடுத்து இருக்கலாம். இப்படி தூக்கி எறிந்ததால் தான் இந்த பதிவே போட்டேன். மற்ற படி யாரையும் குறை கூறுவது அடியேனின் விருப்பம் இல்லை.
புதன், 10 பிப்ரவரி, 2021
வேதம் கூறும் ஒரே ஹோமம்
வேதம் கூறும் ஒரே ஹோமம்
ஹோமங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம், ஒன்று காம்யார்த்தமான ஹோமங்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டிச் செய்வது. இரண்டாவது ப்ராயஸ்சித்த ஹோமங்கள், இங்கு நாம் சற்று விரிவாக பார்க்க போகும் கூஷ்மாண்ட ஹோமம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்று சொல்லாம். யாகம், ஹோமம் வித்தியாசம். யாகம் ஹோமம் இவை இரண்டும் ஒன்றல்ல, அக்னிஹோத்ர அக்னியில் செய்யப்படுவது யாகங்கள் {அஸ்வமேதம், ஸோம யாகம், வாஜபேயம் முதலியவை} யாகங்களை ஸ்ரௌத கர்மாக்கள் எனக் கூறுவர்.
ஏகாக்னியில் அதாவது ஔபாஸன அக்னியில் அல்லது லௌகீ காக்னியில் செய்யப்படும் அக்னி காரியங்கள் ஹோமங்கள் என குறிப்பிடலாம்.
ஹோமங்கள் ஸ்மார்த்த கார்மாக்கள் என அழைக்கப்படுகின்றன. பல ரிஷிகளும், மஹான்களும் தங்களது தெய்வீக த்ருஷ்டியினால் தகுந்த ப்ரயோகங்களுடன் பல ஹோமங்களை நமக்கு தொகுத்து அருளியுள்ளார்.
எந்த ஹோமமும் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப் படவில்லை. கூஷ்மாண்டஹோமத்தை மட்டும் தான் வேதத்தில் நேரிடையாகச் சொல்லப்பட்டுள்ளது. கூஷ்மாண்ட ஹோம விவரங்கள் யஜுர் வேதத்தில் பொக்கிஷமாக அமைந்துள்ளது. தைத்தீரிய ஆரண்யக பாகத்தில், இரண்டாவது ப்ரஸ்னத்தில் கூஷ்மாண்ட விதிமுறைகள் உள்ளன.
ஏன்? எதற்கு?
பஞ்ச மஹா பாவத்திற்கு ஸமமான பலவிதமான பாபங்களை கூஷ்மாண்ட
ஹோமத்தினால் தொலையும். சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர் அவர்கள் இது விஷயத்தில் கூறுவதை கேளுங்கள். “இந்த ஹோமத்தை உபநயனம், விவாஹம், முதலிய நல்ல கர்மாக்கள் செய்வதற்கு முன்தினம் செய்ய வேண்டும். இன்னும் எப்பொழுதாவது ஒருவன் தான் ஏதாவது பாபத்தை செய்து விட்டேனோ, அதனால் தனக்கு சுத்தமற்ற தன்மை வந்திருக்குமோ என சந்தேகப்பட்டால் அப்பொழுது இந்த ஹோமத்தை செய்யலாம் என்று வேதம் கூறுகிறது’. பல பாபங்களை தொலைய வேண்டி பல மந்த்ரங்கள் இந்த ஹோமத்தில் காணக் கிடைக்கின்றன. என்னவெல்லாம் பாபங்கள் போகும் என நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.? அவை இதோ
• தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தவறுகள்.
• பிழைப்புக்காக (குடும்பம் நடத்துவதற்காக) வாக்கினால் சொல்லிய பொய்கள்.
• பிறரைப் பற்றி குற்றங்கூறி (கோள் மூட்டுவது) அதனால் ஏற்படும் பாபங்கள்.
• தாயின் கர்பத்தில் நாம் வாசம் செய்த சமயத்தில் நம்மை அறியாமலேயே நாம் தாய்க்கு ஏற்படத்திய இன்னல்களுக்கும், இந்த ஹோமத்தில் ப்ராயஸ்சித்தம் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல தாய் தகப்பனாருக்கு தெரிந்தோ, தெரியாமலேயோ நாம் ஏற்படத்திய மனவருத்தங்கள்.
• பல ரோகங்களை அளிக்கும் பாபங்கள்.
• கெட்ட நடத்தை முதலிய செயல்களால் ஏற்பட்ட பாபங்கள்.
• அலக்ஷ்மி (ஏழ்மை) ஏற்படுவதற்காக உள்ள பாபங்கள்.
• பெரியவர்களை நீ என்று சொல்லியது, வைதிகாளை அல்லது ஆச்சார்யர்களை (குல குருமார்களை) அவமானப் படுத்தியது போன்ற பாபங்கள்.
• இப்படி ஏகபட்ட பாபங்கள் விலக வேண்டுமென இந்த ஹோமத்தில்
வேத மந்திரங்கள் மூலம் வேண்டப்படுகின்றது.
ஒருவர் கடன் வாங்கி கொண்டு கொடுக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டால் இந்த ஜன்மத்திலேயே நிறைய பொருள்களை அடைந்து அந்த கடனை கொடுக்கும் படியான நிலைமை அவனுக்கு ஏற்படுவதற்கு இந்த ஹோமம் வகை செய்யும். நல்ல சரீரம், நல்ல மனம் இந்த ஹோமத்தினால் அடையலாம். நமது யோக்யதையும் கூடும். கடல் கடந்து சென்று வந்தவர்களும், அந்த தோஷம் நீங்க சுத்தியாக இப்போது கூஷ்மாண்ட ஹோமத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இதுவும் ஏற்புடையதே.
எப்படி செய்வது?
பலன்களை அதிகம் தரவல்ல ஹோமமாக இருந்தாலும் இதைச் செய்வது மிகவும் சுலபம். அதிக எண்ணிக்கையில் ருத்விக்குகளோ, அதிக பணமோ இல்லாமலும் செய்யலாம். குறைந்தபட்சமாக ஆசார்யனைத் தவிர ஓரிருவர் இருந்தால் போதும். ஹோம த்ரவ்யங்களின் பட்டியலும் மிக நீளமாக இல்லாமலிருக்கலாம். வசதியுள்ளவர்கள் விஸ்தாரமாகச் செய்ய வேண்டும். தானங்கள் உண்டு. அவை அவரவர்களின் சக்தியைப் பொறுத்தது.
கவனிக்க வேண்டிய விஷயம் மேலும் ஒன்று. கூஷ்மாண்ட ஹோமத்தில் பிரதான ஆஹூதிகளை தவிர ஹோம அங்கமாக பல கிரியைகள் அம்சங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக (1) தீக்ஷாநியமம், (2) முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் (3) ப்ராத ஸ்நானம் (4) நாந்தீ சிரார்த்தம் ஆகியவைகளில் சிரத்தை அதிகம் காண்பித்தல் அவசியம்,
மற்றுமொரு விசேஷம்
பொதுவாக எல்லா ஹோமங்களிலும் ஸங்கல்பம் ஆனதும் வாத்யார் கர்த்தாவிடமிருந்து “ ஆசார்ய வர்ணம்” பெற்றுக் கொண்டு வந்திருக்கும் மற்ற சாஸ்திரிகளின் உதவியோடு கர்த்தாவின் சார்பில் அவரே ஹோமங்களை நடத்தித் தருவார். நாம் இதை அறிந்திருப்போம். ஆனால் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தில் வாத்யார் சொல்ல சொல்ல கர்த்தாவே நேரிடையாக ஔபாஸன அக்னியில் தானே செய்ய வேண்டும். மொத்தத்தில் இது ஒரு சிரேஷ்டமான வைதீக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தினால் விலகுகின்றன. சகல மங்களங்களும் உண்டாகும் மன சாந்தி உறுதி. மேலும் விவரங்களை ஆத்து வாத்தியாரிடம்கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும்.
அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்
அருள் மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில்
மூலவர் : அஞ்சலி வரத ஆஞ்சநேயர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : சின்னாளபட்டி,
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:சித்திரை மாதப்பிறப்பன்று பத்தாயிரம் கனி அலங்காரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் முதலாவது சனியன்று ராஜ அலங்காரம் (பேண்ட், சர்ட் அணிந்த அலங்காரம்), இரண்டாவது சனியன்று செந்தூர அலங்காரம், மூன்றாவது சனியன்று பச்சை அலங்காரம், 4வது சனியன்று சஞ்சீவிமலையை தூக்கிய அலங்காரம், 5வது சனியன்று பத்மாசனத்தில் தியான அலங்காரம் ஆகியவை செய்யப்படும். தை மாதப்பிறப்பன்று 5008 கரும்பு அலங்காரத்தில் காட்சி தருவார். ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் உண்டு. இதுதவிர ஒவ்வொரு வார சனிக்கிழமையும் விசேஷ அலங்காரம் உண்டு. ஆஞ்ச நேயருக்குரிய மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். அப்போது பஞ்சசூக்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுமசகஸ்ர நாமாவளி யாகம் ஆகியவை செய்யப்படும். தொடர்ந்து வரும் மூல நட்சத்திரத்தன்று 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் ஆகியவை நடைபெறும். அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரமும், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருவார்.
தல சிறப்பு:சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 16 அடி உயரம் கொண்டவர்..
திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி- 624301. திண்டுக்கல் மாவட்டம்,போன்:+91 - 451-245 2477, 94432 26861
பொது தகவல்:கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களால் எழுதப்பெற்ற 1 கோடி ராமநாமஜெபம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சுற்றி வந்தால் சுந்தரகாண்டத்தையே பாராயணம் செய்த பலனும், ராமநாமஜெபத்தை 1 கோடி தடவை உச்சரித்த பலனும் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆஞ்சநேயர் ராஜாவாக விளங்குவதால் மகாமண்டபத்தில் அவரது பரிவாரங்களான நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பாகும்.கோயிலின் சுற்றுப்பகுதியில் செல்வத்தின் அதிபதி லட்சுமியும், கல்விக்கதிபதி சரஸ்வதியும் அருள்பாலிக்கிறார்கள். ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும் சன்னிதானத்தில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்தக் கோயில்.
பிரார்த்தனை:பக்தர்கள் தாங்கள் என்ன வேண்டினாலும் இந்த அனுமான் நிறைவேற்றித்தருவதாக கூறுகிறார்கள்.
தங்களின் நியாயமான வேண்டுதல் நிறைவேற வெண்ணெய் காப்பு சாற்றுதல், பட்டு சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுதல் என வேண்டிக்கொள்கிறார்கள்.சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. ""ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்,'' என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன் னலமில்லாத வீரனாக திகழ்ந் தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.
""நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள் ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன்'' என்று சொன்னவர்.வணங்குபவர் களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். "அஞ்சலி ஹஸ்தம்' என்றால் "வணங்கிய நிலை' என்பதாகும். இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர். நாமக்கல் லில் ஒரு ஆஞ்சநேயரும், சென்னை நங்கநல்லூரில் ஒரு ஆஞ்சநேயரும், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 77 அடி உயரத்தில் தமிழகத்தின் மிக உயரமான ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆனால் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் ஆனவர் என் பது குறிப்பிடத்தக்கது."அழகான ஆஞ்சநேயர்', "சுந்தர புருஷன்' என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். இவரை வணங்கினால் ஆயுள் விருத்தி, சகல செல்வம், கல்வி ஞானம் சிறக்கும். இவரது வால் பாதத்தை நோக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தரிசனம் காண்பவர்கள் திருமணபாக்கியம், உத்தியோகஉயர்வு, புத்திர பாக்கியம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்,'' என்கிறார்.
தல வரலாறு:ராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுவதுண்டு.ஒரு முறை கனகராஜ் என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, தான் இவ்விடத்தில் தியான கோலத்தில் வீற்றிருப்பதாகவும் எனவே இங்கு கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். அதன்பிறகே இந்த கோயில் கட்டப்பட்டது.
பாண்டவர்கள்
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.
உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.
விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.
கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.
ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அதுமற்றவர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.
சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.
கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகைசுமந்துவந்தார்கள்.
அவர்கள் களைப்பாவது நியாயம்.
உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.
சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க ,சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்
தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.
துரியோதனன்,பாண்டவர்களை
அழிப்பதற்கு ,போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.
அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.
போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான்,கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.
இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.
18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.
அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..
ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.
ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.
இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு
பாருங்க பதில்.
அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???
இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.
அடங்கியது அவன் கர்வம்.
எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.
மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!
இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.
படித்ததை பகிர்ந்துள்ளேன்!
குரு
தெளிவு குரு மேனி காணல்!
தெளிவு குரு மேனி திருநாமம் செப்பல்!!
தெளிவு குரு மேனி திருவார்த்தை கேட்டல்!!!
தெளிவு குரு மேனி உரு சிந்தித்தல் தானே!!!!
--------------------------------------------------
குரு ஏவ பரபிரம்மம்! குரு ஏவ பரம்தணம்!!
குரு ஏவ காமோ! குரு ஏவ பாராயணம்!!
குரு ஏவ பரவிந்தியா! குரு ஏவ பரகதி!!
--------------------------------------------------
யஸ்மாத்தத் உபேதேஷ்டா தஸ்மாத்
குருதரோ குரு: {கார்ய சம்ஹீதை}
--------------------------------------------------
குருவானவர் பரம்பொருளின் மரு உருவானவர்!
குருவானவர் பெருந்தக்க ஐஸ்வர்யங்களின் இருப்பிடமானவர்!!
குருவானவர் அடையத்தகுந்த விருப்பங்களின் ஊற்றானவர்!!!
குருவானவர் நம் உள்ளத்தை நல்லுரைகளால் பயன்படுத்துபவர் !!!!
குருவானவர் ஆன்மா ஈடேற உயர்ந்த தத்துவத்தை உரைப்பவர்!!!!!
குருவானவர் நமது இருதிப் புகலிடமானவர், நாம் உய்ய வேண்டியவற்றையெல்லாம் உபதேசிப்பதால் அப்பரம்பொருள் குருவுக்கெல்லாம் குருவாவர்...
--------------------------------------------------
மநோஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||
அக்னி நட்க்ஷத்திரம்
அக்னிநட்சத்திரம்( மே 4 ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. 23 ம் தேதி காலை நிவர்த்தி.)
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும். இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர். சூரிய பகவான் சித்திரை மாதம் முதல் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல் நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை : கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னி பகவான். இவர் நெருப்பு ரூபமாய் காணப்படுவதால் இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடை விடாது நடை பெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார். இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும் விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது. காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னி தேவன் முறையிட்டதால் அவர் அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்து கொண்டார். அப்போது அக்னி தேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார். 21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்து விட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்... இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக் கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.
இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான தர்மங்கள் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம். நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊன முற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம். அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம். அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.
அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல் நிலை பாதிக்காமலிருக்க காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம். அக்னி ரூபானை வழிபடுவோம் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் சிவ பெருமானையும் தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.
சூரிய காயத்திரி: ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்தோ சூர்ய ப்ரசோதயாத்.
அமாவாசை தர்பணம்
அமாவாசை தர்பணம்* {யஜுர்வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்}
ஆசமனம் அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.
ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ; ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் .... (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே
“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு
ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும் மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.
இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாத்ரூ வர்க்கம்:
வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.
வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
பூணல் வலம் : தேவதாப்பிய: ______
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.
ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து
கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.
காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.