ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஹோமப் புகையின் நன்மைகள்:

நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம்.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது.

ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது.
அப்படி என்ன பயன்? இந்த ஹோமத்தினால்?

ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , நாயுருவி , தர்ப்பை , வெள்ளெருக்கு , தேங்காய் , மா , நெய் , எருக்கு , அறுகு , முருக்கு இவை அனைத்தும் சேர்ந்து எரிந்து அதிலிருந்து வரும் புகையால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்துவிடுகிறது.

அத்தோடு இவற்றால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த வாயுவை நாம் சுவாசிப்பதால் இரத்த அழுத்தம், ஆஸ்துமா , குடல்புண் , தலைவலி , போன்ற நோய்கள் நீங்குகின்றது.

இந்தப் புகை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.



ஆனால் நம்மில் சிலர் இதன் உண்மை பலனை புரிந்துகொள்ளாமல் ஹோமப் புகையைப் பார்த்து அஞ்சுகின்றனர்.

இனியாவது ஆலயத்தில் ஹோமம் செய்தால் அருகில் சென்று ஹோமப் புகையை நன்றாக சுவாசியுங்கள் ஹோமத்தில் கலந்துகொண்டு நல் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

ஹோமப் புகையால் வரும் சிறிதளவு கண்ணீருக்காக பெரிதளவு பயனை இழக்காதீர்கள.

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல்
 

திருவொற்றியூர்:

(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.

(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.

(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.

(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.

(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:
***********

(1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

(2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர்பாடி:
***************

(1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

(2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:
************

(1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது.

(2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்.

(3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில்.

(4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்.

(5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

(6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:
**********

ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:
******************

(1)வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.

(2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:
***********

(1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

(2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:
*******************

(1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

(2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

(3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

(4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

(5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:
*******************

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:
************

அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:
***************

(1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

(2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி
எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

(3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.

(4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:
*************

(1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை.

(2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.

கிண்டி:
*********

(1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

(2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:
*******************

(1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

(2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.

(3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:
***************

சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:
*********************

சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:
**************

நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:
*****************

மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி.

சிட்லப்பாக்கம்:
******************

சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

ஊரப்பாகம்:
***************

எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:
***********

துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்:
*********************

ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்:
********

(1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

(2)காரனோடை மல்லையா சாமிகள்:
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.

(4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

(5)பூதூர் ஷா இன்ஷா பாபா-  செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
*************

புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)-  ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்:
**************

ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்:
*****************************

(1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

(2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி:
**************

(1)கர்லாக்கட்டை சித்தர்-  வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

(2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

(3)கருடகோடி சித்தர்-  பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:
********************

(1)அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்-  வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :
*************

சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்):
*****************************

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்-
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம் :
*************

ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :
**********************

(1)குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

(2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :
*****************

சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்று வருகிறது.

செம்பாக்கம் :
****************

இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன.

கூடுவாஞ்சேரி :
*******************

மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :
********************

முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோ

வில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பெயர்களையாவது படித்து அறிவோம்..

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை       நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம் 
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்  
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி 
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல். 

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪🏻💪🏻💪🏻

வெள்ளி, 31 ஜூலை, 2020

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

3. சந்தானலட்சுமி : எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும் தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும் தன் இருபுறமும் தீபம் சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும் அபய கரத்துடனும் இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும் கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்

வியாழன், 30 ஜூலை, 2020

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

2. ஆதிலட்சுமி : ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும் நல்ல அழகும் கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும் அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள் என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகு வெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள் சக்தியின் திருநாவத்தை உடையவளும் அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.

புதன், 29 ஜூலை, 2020

பதிவு கொஞ்சம் பெரிதாக தான் இருக்கும். சொல்லப்பட்ட விஷயங்கள் அதி அற்புதமானது. தவராமல் படித்து பயணடைய வேண்டுகிறேன்.

சிவாலயங்கள் : அருள் மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்) கோடிகாநாதர்
அம்மன் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,
தல விருட்சம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேத்ரவனம்
ஊர் : திருக்கோடிக்காவல்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்

இன்று நன்று நாளை நன்று என்று நின்று இச்சையால் போன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37 வது ஸ்தலம்.
 
விழா : நான்கு கால பூஜை, சித்திரை, பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை : 609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் :+91-0435 - 2450 595, +91-94866 70043, 
     
தகவல் : இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது. சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்ம பல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன. ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழை வாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்து தான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர் மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோக சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளை தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது. கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். தினமும் ஐந்து குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது. பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காண முடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜ கோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்ப கோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ள பூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகா விஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்கு புற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

பிரார்த்தனை : இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.
     
ஸ்தல பெருமை : இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.

1) "கா' என்றால் சோலை எனப் பொருள்படும். "கா' என முடியும் ஐந்து சிவத்தலங்களை "பஞ்ச காக்கள்' என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்), திருநெல்லிகா, (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடுர் அருகில்), மற்றும் திரு கோடிக்கா, ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

2) "திரிகோடி' என்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், "திரிக்கோடிக்கா' என்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் "திருக்கோடிக்காவல்' என்று மருவி இருக்கலாம்.

யமபயம் இல்லை : சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்று விட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரக லோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவ பெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன்  யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது.  இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. வைணவருக்கு அருள் பாலித்த ஈஸ்வரன் இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடிய வில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்து கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றி கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார். மறுநாள் காலை திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர் தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

காட்சி கொடுத்த அம்பாள் : ஸ்ரீ திருக்கோடீஸ்வரரைப் போல் ஸ்ரீ திரிபுரசுந்தரி  அம்பாளும் அருள் பாலித்த விபரம் வருமாறு.

1. ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல்: ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்ட போது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

2. துர்வாசருக்கு காட்சி கொடுத்தல்: காட்சி கொடுத்த அம்பாளாக திருக்கோடீஸ்வரர் சந்நிதியில் வீற்றிருக்கும் இந்த அம்பாளைக் குறித்து வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. அதைக் கூறுவதற்கு முன்னால் பிருங்கிமஹரிஷியின் கதையை தெரிந்து கொள்வது அவசியம். பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம் பொருள் என்று துணிந்து சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவ பெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாத படி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவ பெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று ஸ்வாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை ஸ்வாமியிடம் வரம் பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார். துர்வாச மகரிஷி, தக்ஷின சிதம்பரம் என அழைக்கப்படும் "திருக்களர்' ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று ஸ்ரீ நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுர சுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன்வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி அதற்கு சந்தர்ப்பமே  கொடுக்கக்கூடாது என்று எண்ணி தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது.

திருக்கோயிலில் ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தேவானையுடன் அசுரமயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்க விட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டா தேவி தன் மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம் மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. இனி வடபுற திருச்சுற்று சன்னதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனி சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதை கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதே போல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது. திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம். க்ரத யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களை கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்கு வந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெற முடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில் தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக்  கொண்டிருக்கும் சமயம் ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும் படியும் ஒரு மாதம் காசியில் தங்கி விட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும் படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்து கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில்  கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள்  துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்க வில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து  சென்று விட்டார். சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும் தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழி படுங்கள் எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற போது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெற முடியும். என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக்கேட்டு கோபமடைந்த மந்திரதேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின்  அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திர தேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ நாராயணனைக்குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத  தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன் ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும் ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மஹா ஹத்யா பாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில் தான் பாப நிவர்த்தி கிடைத்தது. இந்த ஷேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும் படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். ஸ்ரீ நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி பிப்பல மரத்தை பிரதட்சனம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து அசுவமேத யாகங்கள் செய்ய ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து ஸ்ரீ நாராயணன் முன் தோன்றி அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். ஸ்ரீ நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்  என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் ஸ்ரீ நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும் படி கூறுகிறார். மந்திர தவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்க போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. ஸ்ரீ நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு விட்டேனாபார் என்று கர்ஜித்து விட்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி பிரத்யட்சமானவுடன் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன க்ஷேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார்.

அந்த பிரவாஹத்தில் மகா காளியும், வீரபத்திரரும், மஹாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன் புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறி விட்டு தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள். உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும் படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார் என்று துர்வாசர் கூறி விட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார். திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டு கோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித்தந்து சிவ பூஜா விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர்  திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ரநாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

""த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய
த்ரிகோடி   பரிஸேவித:
த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:
த்ரிகோடி  பரிவேஷ்டித:

என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர்  கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறு வயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்) சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும் போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுர சுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம் மஹாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும் படி கூறுகிறார். அதன் படி மந்தர தேவதைகள் நந்திக்கு சமீபம் கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர், சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் மேபரமஸ்வரனிடம் சென்று ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படி முறையிட்டார். அதன் படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர பிராமணர்கள் முன் தோன்றினர். பிரபோ! எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ் வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு திருக்கோடிக்கா ஷேத்திரத்தின் மகிமையை கூறலானார். நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய க்ஷேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம க்ஷேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில் இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது.

ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்து விடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார்.
*நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி* (ரகசியம்) தெரியுமா?

நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*

நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் #
ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள்.

நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி*.

காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்
நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி விலகுகிறாள்..!!

நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி*..!!
 வசிக்கிறாள்.

பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி விலகுகிறாள்.

நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*

 இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே
மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.!!

வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி.*..!

பெற்றோர்கள்  கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி விலகி விடுவாள்...!!

நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி.*..!

எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் இவள் விலகி விடுவாள்.

நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..*!!

நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி...*!!

கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை
 அணியாதவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.

நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*

இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்
வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும்
வீபூதி .நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு விலகுகிறாள்..

*பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மிகளை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.*      .
பிரம்மஹத்தி பரிகாரம் - 2

நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;

விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;

நெய் 1/2 லிட்டர்;

இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;

வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;

மேல் கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.

1. பலிபீடம்;

2. கொடிமரம்;

3. கொடிமர நந்தி

4.அதிகார நந்தி;

5. வாயில் கணபதி;

6. துவார பாலகர்;

7.சூரியன், சந்திர பகவான்;

8. சமயக் குரவர்கள்;

9. சப்த கன்னிமார்கள்;

10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;

11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;

12. சுர தேவர்;

13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;

14. தட்சிணாமுர்த்தி

15. கால பைரவர்;

16. சண்டிகேஸ்வரர்;

17. சனீஸ்வரர்;

18. சிவன் சன்னிதி;

19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.

மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில் அதாவது சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்
மூலவர் :  திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)
தாயார் :செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)
தீர்த்தம் :கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஸ்ரீவல்லப சேத்திரம்
ஊர் : திருவல்லவாழ்
மாவட்டம் : பந்தனம் திட்டா
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
     
காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.-நம்மாழ்வார்
 
விழா : மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.   
       
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.   
       
திறக்கும் நேரம் : காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்- 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.போன்:+91- 469 - 270 0191  
      
தகவல் : நாட்டிய குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு கலாக்ஷேத்ரா என்று பெயர்.
      
ஸ்தல பெருமை : பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள் பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை  கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.   
       
தல வரலாறு : கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன் இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒரு முறை அவர் காட்டு வழியே வரும் போது பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில் அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமூழிக்களம்
ஊர் : திருமூழிக்களம்
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
பூந்துழாய் முடியாருக்கு பொன்னாழிக் கையாருக்கு ஏந்து நீரிளங் குருகே திரு மூழிக் களத்ததாருக்கு ஏந்து பூண்முலை பயந்து என்னினை மலர்கண்கள் நீர் ததும்ப தாம் தம்மை கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே. நம்மாழ்வார்
 
விழா : சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  
      
தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம் மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம் : 683 572 எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம். போன் : +91- 484 - 247 3996 
     
தகவல் : நான்கு திருக்கரத்துடன் உள்ள இந்த பெருமாள் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ் கையில் தாமரை மலருடன் இடுப்பில் வைத்த கோலத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சவுந்தரிய விமானம். இவரை ஹாரித மகரிஷி தரிசித்துள்ளார். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.
     
ஸ்தல பெருமை : கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது. "ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும் கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது. ராமன் வனவாசம் செல்லும் போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான். இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து அவனை கொல்ல முயற்சிக்கிறான். இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும் அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும் இதனால் இத்தலம் திருமொழிக்களம் ஆனதாகவும் கூறுவர்.  
      
ஸ்தல வரலாறு : கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற நான்கு  விக்ரகங்களை பூஜித்து வந்தார். ஒரு முறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான் இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்ய கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும் இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும் பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும் எர்ணாகுளம் மாவட்டம் திரு மூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள பெருமாள் கோயில்களில் லெட்சுமணப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான். இத்தலம் குறித்து இன்னொரு வரலாறும் உண்டு. முன்னொரு காலத்தில் ஹரித மகரிஷி என்பவர் இத்தலத்தில் பெருமாளை குறித்து தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழந்த பெருமாள் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு மகரிஷி பெருமாளே! இந்த உலக மக்கள் அனைவரும் உன்னை வந்து அடைவதற்கான எளிய வழிமுறையை கூறுங்கள் என்றார். அதற்கு பெருமாள் மகரிஷியே! மக்கள் அனைவரும் அவரவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கேற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் என்னை அடைவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை போதிக்கும் ஸ்ரீ ஸுக்தியை  (திருமொழியை) இந்த தலத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என்றார். எனவே தான் இத்தலம் திருமொழிக்களம் என்றும் பெருமாள் திரு மொழிக்களத்தான் எனவும் வழங்கப்படுகிறது. இதுவே காலப்போக்கில் திருமூழக்களம் ஆனது.
108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில்
மூலவர் :  காட்கரையப்பன் (அப்பன்)
தாயார் :  பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
தீர்த்தம் :  கபில தீர்த்தம்
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருகாட்கரை
ஊர் :  திருக்காக்கரை
மாவட்டம் :  எர்ணாகுளம்
மாநிலம் :  கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே. நம்மாழ்வார்  
      
விழா : ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை : 683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்.
 
தகவல் : கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலை பரசுராமர் நிறுவியுள்ளார். மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாக சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் ஐந்து  பூஜைகள், மூன்று சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்கு தெற்குத் திசையில் மகாபலி வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் வாமனரை வழிபடுவதற்கு முன்பாக சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தலபெருமை : கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. கி.பி. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்து கொண்டது. 1948ல் புனர் பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. திருக்காட்கரை திருத்தலத்திலும் ஓணம் திருவிழா வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம் புஷ்கல விமானம். தாயார் ஸ்ரீ பெருஞ் செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. பத்து மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டு கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன.

ஸ்தல வரலாறு : மகா பலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகா விஷ்ணு அதை வளர விடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகா பலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகா விஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இது வரை செய்த தானம் பலனில்லாமல் போய் விடும் என நினைத்தான் மகா பலி  சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகா பலி பணிந்து தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி தன்னோடு இணைத்து கொண்டார். வாமனர் மகா பலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன் மகா பலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒரு முறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள் செய்யுமாறு வேண்டிக்கொண்டான் பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள் புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில்  இதை நினைவு கூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் நான் வேண்டிக்கொண்டபடி இந்த விழாவில் கலந்து கொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.