திங்கள், 13 ஜூலை, 2020

108 திவ்ய தேசங்கள் -32
அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில்
        மூலவர்    :     புருஷோத்தமர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     புருஷோத்தம நாயகி
      தல விருட்சம்    :     பலா, வாழை மரம்.
      தீர்த்தம்    :     திருப்பாற்கடல் தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருவன் புருஷோத்தமம்
      ஊர்    :     திருவண்புருசோத்தமம்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
      மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில் நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.

-திருமங்கையாழ்வார்      
             
     திருவிழா:    
             
      பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.      
             
     தல சிறப்பு:    
             
      பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 4364-256221     
            
     பொது தகவல்:   
             
     

மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன. இத்தல மூலவர் கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர்.

     
             
 
    பிரார்த்தனை   
            
      திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.     
            
     தலபெருமை:   
             
      108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.      
             
      தல வரலாறு:   
             
      சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.
108 திவ்ய தேசங்கள் -31

அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்
 
       மூலவர்    :     குடமாடு கூத்தன்
      உற்சவர்    :     சதுர்புஜ கோபாலர்
      அம்மன்/தாயார்    :     அமிர்தவல்லி
      தல விருட்சம்    :     பலாச மரம்
      தீர்த்தம்    :     அமிர்த தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     பாஞ்சராத்ரம்
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     அரியமேய விண்ணகரம்
      ஊர்    :     திருநாங்கூர்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

மங்களாசாசனம்


திருமங்கையாழ்வார்

வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்தகில் கனக முந்தி மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித்தங் கரிசரனென்று இரைஞ்சு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.

-திருமங்கையாழ்வார்

     
             
     திருவிழா:    
             
      வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.      
             
     தல சிறப்பு:    
             
      பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திருநாங்கூர் - 609 106. நாகப்பட்டினம் மாவட்டம்      
           
    போன்:   
           
      +91- 4364 - 275 689, 94439 - 85843.     
            
     பொது தகவல்:   
             
     

இங்கு மூலவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 

மானம்: உச்சரூருங்க விமானம் பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சீதை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

     
             
 
    பிரார்த்தனை   
            
      குறைவில்லாத வாழ்க்கை பெற, எதிரிகள் தொல்லை குறைய கடன் தொல்லைகள் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு தைலக்காப்பு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.     
            
     தலபெருமை:   
             
      சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.      
             
      தல வரலாறு:   
             
      உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.
சவுந்தர்ய லஹரி என்றால் என்ன?

கைலாயம் சென்ற ஆதிசங்கரர் சிவதரிசனம் செய்தார். அப்போது சிவன் சங்கரரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு மந்திர சுவடியையும் கொடுத்தார். அந்த லிங்கத்தில் ஒன்றே காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரமவுலீஸ்வரர் என்னும் பெயரில் வழிபாட்டில் இருக்கிறது. மற்ற நான்கும் கேதார்நாத், சிருங்கேரி, சிதம்பரம், நேபாளம் ஆகிய தலங்களில் இருக்கின்றன. மந்திரச் சுவடியில் நூறு ஸ்லோகங்கள் இருந்தன. சவுந்தர்ய லஹரி என்னும் இந்நூலுக்கு அழகு அலைகள் என்று பொருள். அம்பிகையின் அழகை வர்ணிக்கும் இதனை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவளது பேரருள் கிடைக்கும்.
பூண்டி ஆற்று ஸ்வாமிகள்

ஒரு நாட்டை ஆளும் மன்னர் தன் பணி நிமித்தம் எல்லா இடங்களுக்கும் சென்று நிறை குறைகளைக் கண்டறிவது இயலாத ஒன்று.அது போன்ற சந்தர்ப்பங்களில் தன் அந்தஸ்துக்குச் சமமான பிரதிநிதிகளை(மந்திரிகளை)குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி தகவல்களை அறிந்து வரச் சொல்வார்.இது அரசாட்சிக்கு மட்டுமில்ல...ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.இங்கே மன்னன் என்பவன் மகேசனுக்கு சமம் மந்திரி என்பவர் மகான்களுக்குச் சமம்.மேலே சொன்ன உதாரணத்தைப் போல் தன் ஒருவனால் மட்டும் குடிமக்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதியோ என்னவோ மகான்களைத் திக்கெங்கும் அவதரிக்க வைத்தான் ஆண்டவன்.இறைவனிடம் மக்கள் வேண்டும் வரங்களை தங்களின் தவ பலத்தால் வழங்கினார்கள் மகான்கள்.அவர்களது பிணிகளைத் தீர்த்தார்கள்.இவரிடம் போ...உனது பிரச்சனை தீரும் என்று பகாவனே சில மகான்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்த நிகழ்வுகளையும் நம் புராண வரலாற்றில் படித்து இன்புறலாம்.இந்திரியங்களை அடக்கி ஆண்ட மகான்கள் இந்தியாவில்தான் பெருமளவில் பிறப்பெடுத்தார்கள்.உலகளாவிய ஆன்மிகத்தில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.இந்த மண்ணில் நிகழ்ந்த இதிகாசங்களும் புராணங்களுதான் ஆன்மிகத்தின் தேவையையும் அவசியத்தையும் அனைவருக்கும் அடிகோடிட்டுக் காட்டின.உதாரணத்துக்கு ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சொல்லலாம்.

ஆன்மிகம் என்பது தினமும் கோயிலுக்குப் போய் தொழும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல..கருணை தொண்டு பரோபகாரம் போன்ற  நற்சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்ள வேண்டும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.அதுவே சிறந்த ஆன்மிகம்.இப்படிப்பட்ட நற்குணங்களுடன் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள்தான் மகான்கள்.இறப்பு என்பது இவர்களது தேகத்துக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல.இன்றும் பல அதிஷ்டானங்களில் இவர்கள் சூடசுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.உள்ளன்போடு தன்னைத் தேடி வரும் பக்தர்களை ஆசிர்வதித்து அருள்கிறார்கள் அவர்களுடன் பேசுகிறார்கள்.மகான்களில் பலர் கருவில் இருந்து உருக் கொண்டதாகத் தெரியவில்லை.அப்படி என்றால் எவ்விதம் இந்த பூமிக்கு வந்தார்கள் இவர்களுக்கு ஜனன ஜாதகம் கிடையாதா?ஆன்ம பலத்தை இவர்கள் அடைந்த ரகசியம் புரியாதா?இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாத புதிர்தான்!ஷீரடி பாபா திடீரென ஒரு நாள் ஷீர்டி கிராமத்தில் வேப்பமரத்தடியில் தோன்றியதாக அவரது திவ்ய சரித்திரம் சொல்கிறது.பூண்டி ஆற்று ஸ்வாமிகளும் அப்படித்தான்! 

மிக சமீப காலத்தில் ஸித்தி ஆன சித்த புருஷர் பூண்டி ஸ்வாமிகள்.1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் வளர்பிறை திரயோதசி கூடிய அனுஷ நடசத்திரத்தன்று காலை சுமார் 9.40 மணிக்கு கலசப்பாக்கத்துக்கு அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் முக்தி ஆனார் இவர்.மூன்று நாட்கள் பக்தர்களின் அஞ்சலி தரிசனத்துக்குப் பின் இவரது உடல் ஆகம விதிப்படி பதும ஆசனத்துடன் சமாதி கண்டது.  ஸ்வாமிகளின் உடலை சமாதிக்குள் இறக்கிய பின் அவரது தேகத்தைச் சுற்றி மூட்டை மூட்டையாக விபூதி,தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இட்டு நிரப்பினார்கள்  அவரது பக்தகோடிகள்.நடமாடும் தெய்வம் என்று நாமெல்லாம் போற்றி வணங்கும் காஞ்சி மகா பெரியவரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர் இந்த பூண்டி ஸ்வாமிகள்.

பூண்டி ஆற்று ஸ்வாமிகள் என்பது பிற்பாடு வந்த பெயர்.அதற்கு முன் வரை இவர் அழுக்குச் சாமி என்றும் மூட்டைச் சாமி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.அதற்குக் காரணமும் உண்டு.முதன் முதலாக ஸ்வாமிகள் கலசப்பாக்கத்துக்கு(திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வரும் ஊர்)வந்தபோது ஓர் அழுக்கு மூட்டையுடன் காணப்பட்டாராம்.தவிர உடலில் ஒன்றன் மேல் ஒன்றாக பல விதமான அழுக்குச் சட்டைகளை அணிந்திருந்தாராம்.அதிலிருந்து இவரை இந்தப் பெயர்களிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள்.ஆற்று ஸ்வாமிகள் என்று இவரை பக்தர்கள் அழைக்க ஆரம்பித்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு.அது 1943-ஆம் வருடம்...கலசப்பாக்கம் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை.எனவே சுட்டெரிக்கும் ஆற்று மணலில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.சூரியனின் வெம்மையான கிரணங்கள் ஸ்வாமிகளைப் பாதிக்கக் கூடாது என்று விரும்பிய உள்ளூர்க்காரர்கள் சிலர் இவர் அமர்ந்திருந்த இடத்துக்கு மேலே நிழல் விழும் வண்ணம் ஒரு கூரையை அமைத்தனர்.இவர் அமர்ந்த நேரமோ என்னவோ...கலசப்பாக்கம் பகுதியில் திடீரென பேய் மழை பிடித்துக் கொண்டது.எங்கெங்கோ கொட்டிய நீரெல்லாம் வடிகால் தேடி கடைசியில் இந்த ஆற்றில் கலந்தது.விளைவு ஆற்றின் இரு கரையெங்கும் தொட்டுக் கொண்டு பிரவாகம் எடுத்து ஓடியது வெள்ளம்.ஸ்வாமிகளுக்குப் போட்டிருந்த கூரை வெள்ளத் தோடு அடித்துக் கொண்டு போய் விட்டது.மழை ஓரளவு விட்ட பிறகு உள்ளூர்க்காரர்கள் சிலர் ஓடி வந்து ஸ்வாமிகள் அமர்ந்திருந்த இடத்தை ஆராய்ந்தனர்.அங்கே கூரையும் தெரியவில்லை ஸ்வாமிகளையும் காணவில்லை.பதைபதைத்துப் போனார்கள்.ஸ்வாமிகள் ஜல சமாதி ஆகி விட்டதாகத் தீர்மானித்து விட்டார்கள்.

மூன்று நான்கு நாட்கள் ஓடின.  கலசப்பாக்கம் ஆற்றில் திரண்ட வெள்ளம் மெள்ள வடியத் தொடங்கியது.  அப்போது ஆற்றங்கரைக்கு வந்த விவசாயி ஒருவர்.ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.அங்கே-ஸ்வாமிகளுக்கு நிழல் தருவதற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் ஒரு பகுதி மணலில் குத்திட்டு நின்றிருந்தது.அட ஸ்வாமிகளுக்கு மேலே இருந்த கூரை ஆயிற்றே இது?என்று சந்தேகப்பட்டு அங்கே பள்ளம் பறித்தார்.என்னே ஆச்சரியம்...ஆற்றின் உள்ளே சில அடி ஆழத்தில் ஸ்வாமிகள் எந்த நிலையில் அமர்ந்து நிஷ்டையைத் தொடங்கினாரோ.அதே நிலையில் அப்படியே காணப்பட்டார்.பரம சந்தோஷம் அடைந்த அந்த விவசாயி ஊருக்குள் ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டி வந்தார்.பிறகு ஸ்வாமிகளை அவரது நிஷ்டை கலையாமல் மெள்ள வெளியே தூக்கி வந்து கரையில் அமர்த்தினார்கள் ஊர்க்காரர்கள்.வெள்ளத்தோடு போய் விட்டார் என்று கருதப் பட்டவர்.அப்படியே உருக்குலை யாமல் மீண்டு வந்திருக்கிறார் என்றால் இவர் சாதராணப் பிறவி அல்ல என்று தீர்மானித்து அவருக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த ஆரம்ப நாட்களில் ஊர் எல்லையில் இருக்கும் அடர்ந்த புதருக்குள் சென்று அமர்ந்து அங்கே நிஷ்டையில் கூடி விடுவது வழக்கம்.  இவர் இருக்கும் இடத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியாது; அவரது  தவத்துக்கும் தொந்தரவு இருக்காது.கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் கிராமவாசிகள் இருவர் இவரிடம் வந்தனர்.இருவருமே நண்பர்கள்.ஏதோ ஒரு பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்டனர்ஸ்வாமிகளிடம்.வந்தவர்களில் ஒருவனை உன்னிப்பாகக் கவனித்த ஸ்வாமிகள்.நீ மண்ணில் போகப் போகிறாயப்பா என்றார்.ஆனால் அந்த இருவருக்கும் இதன் பொருள் அப்போது விளங்கவில்லை, அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்.மறுநாள் காலை அந்த இருவரின் ஒருவன் இறந்து விட்டான்.  அவனைப் பார்த்துதான் ஸ்வாமிகள் மண்ணில் போகப் போகிறாய் என்று முதல் நாள் குறிப்பால் சொல்லி இருக்கிறார்.இதன் விளக்கம் பிறகுதான் இன்னொருவருக்குப் புரிந்தது.இப்படி ஸ்வாமிகளின் சித்து விளையாட்டுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன.பூண்டி ஆற்று ஸ்வாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் அருகே முன் காலத்தில் ஒரு ஒட்டுத் திண்ணை வீடு இருக்கும்.இந்தத் திண்ணைதான் ஸ்வாமிகளின் குடியிருப்பு.1960-ஆம் ஆண்டு முதல் அவர் சமாதி ஆன1978-ஆம் ஆண்டு வரை சுமார் 19 வருடங்கள் இந்தத் திண்ணையை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.இவர் மல ஜலம் கழித்தோ குளித்தோ எவரும் பார்த்ததில்லை.இதே இடத்தில் அமர்ந்த வண்ணம்தான் தன்னைத் தேடி வந்த பலரது பிரச்சனைகளையும் தீர்த்தாராம்.

அந்தக் காலத்தில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் டீக்கடைக்காரர் தினமும் காலை வேளையில் டீ கொண்டு வந்து கொடுப்பார்.பெரும்பாலும் எதையும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் ஸ்வாமிகளுக்கு இல்லை.எனவே அந்த டீக்கடைக்காரரே தான் கொண்டு வந்த டீயை ஸ்வாமிகளின் வாய்க்கு அருகே வைத்து சாப்பிட வைப்பாராம்.இதுபோல் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தான் விரும்பினால் மட்டுமே உண்பாராம்.வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் தோலை உரித்துக் கொடுத்தால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே அதை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விடுவாராம்.  இப்படித் தூக்கி எறியப்பட்ட பழக் குவியல்களும் உணவுப் பொருட்களும் ஒரு இடத்தில் குவிந்திருக்கும்.  ஆனால் அதில் இருந்து எந்த விதமான ஒரு தூர்நாற்றம் வராது.மாறாக சுவையான ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.பக்தர்கள் சிலர் ஸ்வாமிகளின் வாயில் சிகரெட்டை வைத்து தீக்குச்சியால் பற்ற வைப்பார்கள்.அதை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தூக்கி எறிந்து விடுவார்.அவரது வாயில் இருந்து புகை வெளியே வராது.இத்தகைய பக்தர்களுக்கு வேறு ஒரு சிகரெட்டையோ பீடியையோ தருவார்.அதை ஸ்வாமிகளின் பிரசாதமாகக் கருதி எடுத்துச் செல்வார்கள்.

ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றி அறிந்த ஒரு பெண்மணி சென்னையில் இருந்து புறப்பட்டு  கலசப்பாக்கம் வந்தார்.வருகின்ற வழியில் சில திருடர்கள் இந்தப் பெண்மணியை வழி மறித்து மிரட்டி அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை எல்லாம் களவாடிச் சென்று விட்டனர். ஏதடா...ஸ்வாமிகளைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் இப்படி ஆகிப்போச்சே?என்று அந்த பெண்மணி அழாத குறைதான்.என்றாலும் ஸ்வாமிகளைத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார்.அப்போது ஸ்வாமிகள் ஆற்றங்கரையில் இருந்தார்.களவு போன நகைகளை வேண்டி ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து புலம்பினார்.அதுவரை மவுனமாக இருந்த மகான் விடு...அழுது புலம்பாதே...கலசப்பாக்கத்தில் ஒருவன் இருக்கிறான்.அவனிடம் போய் நான் கேட்டதாகச் சொல்லி ஒரு இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வா...என்று அந்த ஆசாமியின் பெயர் சொல்லி அனுப்பினார்.

தங்க நகைகள் களவு போனதற்கும் இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையுடனேயே.ஸ்வாமிகள் சொன்ன ஆசாமியிடம் போய் விஷயத்தைச் சொன்னார்.  அவரும் ஒரு கம்பியை கொடுத்து அனுப்பினார்.அதை பவ்யமாக எடுத்து வந்து ஆற்றில் உலவிக் கொண்டிருந்த ஸ்வாமிகளிடம் கொடுத்தார் பெண்மணி.அந்தக் கம்பியைத் தன் கையில் வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு அடுத்த விநாடியே பெண்மணிடம் கொடுத்தார் மகான்.அதைக் கையில் வாங்கிய பெண்மணியின் விழிகளில் பிரகாசம்.தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.போம்மா போ...இது இப்ப இரும்பு இல்லே.சொக்கத் தங்கம்.புலம்பாம பத்திரமா வீடு போய்ச் சேர் என்று அனுப்பி வைத்தார்.அதுபோல் கை வேறு கால் வேறாகப் பிரித்துக் காண்பிக்கும் ஹடயோகக் காட்சியில் ஒரு சுடுகாடு அருகே ஸ்வாமிகள் இருந்தபோது இதைப் பார்க்க  நேர்ந்த கிராமவாசிகள் சிலர் திகைத்துப் போய் விட்டனர்.பிறகு சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஒன்றானபோது வியந்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஏராளமான குடில்கள் உண்டு.1963-ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தங்கி இருந்தார் திருமதி தலையார்கான்(பார்ஸி)சித்தர்கள் சமாதிகளைக் கண்டு தரிசிப்பதற்காக இந்தப் பெண்மணி இங்கு தங்கி இருந்தார்.அப்போது அவரது குடிலில் இருந்து விலை உயர்ந்த தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒரு நாள் திருடு போய் விட்டன.உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த அம்மையார் தன் புகாரைத் தெரிவித்தார்.உயர்ந்த இடத்தில் செல்வாக்கு பெற்றவர் இந்தப் பெண்மணி என்பதால் ஏழு பிரிவுகளாக போலீஸ் படை சென்று திருவண்ணாமலையின் சுற்று வட்டாரக் கிராமங்களை முற்றுகையிட்டு திருட்டுக் கும்பலை சல்லடை போட்டுத் தேடியது.

இந்த ஏழு பிரிவில் அரக்கோணம் காவல் நிலையத்தில் சப இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவரதன் குழுவினரும் ஒரு பிரிவினர்.ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோருடன் திருட்டுக் கும்பலைப் பிடிக்கப் புறப்பட்டார் சுந்தரவரதன்.அரக்கோணத்தில் இருந்து கிளம்பி போளூர் வந்ததும்.ஒரு கான்ஸ்டபிள் சுந்தரவதனிடம் சார்...பக்கத்திலேயே ஒரு சாமீ இருக்கார்.ரொம்ப ராசியானவர்.அவரைப் பார்த்துவிட்டுப் போனா குற்றவாளியை நாம் பிடிச்சுடலாம் என்றார்.அதன்படி இவர்கள் நால்வரும் போகிற வழியில் பூண்டி ஸ்வாமிகளைத் தரிசித்தனர்.மகானை ஏற்கெனவே அறிந்த கான்ஸ்டபிள்.அவரது வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார்.அதை வழக்கம்போல் ஒரு இழப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்தார்.பிறகு வேறு ஒரு சிகரெட்டைக் கொடுத்து போ போ...போற காரியம் நல்லா முடியும் என்றார்.பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தனர்.குற்றவாளியைப் பிடிக்க இவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தானிப்பாடி என்கிற கிராமத்துக்கு வந்தனர்.அந்த ஊரில் கேடி கட்டய்யன் என்பவன் போலீஸ் பதிவேட்டில் இடம் பெற்ற திருடன்.ஆகவே அவனது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தலாம் என்று அங்கே சென்றனர் போலீஸார்.இவர்கள் போனபோது மாலை ஐந்து மணி இருக்கும்.கட்டய்யனின் மனைவி மட்டும் அப்போது வீட்டில் இருந்தாள்.புருஷன் எங்கேம்மா?என்று சுந்தரவரதன் விசாரணையை ஆரம்பிக்க...அதற்கு அவர் வயல் வேலைக்குப் போயிருக்காரு.வர்றதுக்கு ராவாயிடும் என்று சொன்னாள்.அப்போது ஸ்வாமிகளிடம் சிகரெட் வாங்கிய கான்ஸ்டபிள்.தம் அடிப்பதற்காகத் தனியே ஒதுங்கி வீட்டின் கொல்லைப் பக்கம் ஒரு வைக்கோல்போர் அருகே வந்தார்.

வீட்டின் உள்ளே பல வகையிலும் சோதித்த குழுவினர்.சந்தேகப்படும்படியாக அங்கே எதுவும் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்தனர்.வந்தவர்கள் தங்களுடன் வந்த கான்ஸ்டபிளை மட்டும் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் சப்இன்ஸ்பெக்டர் தன்னைக் கவனித்து விடப் போகிறாரே என்கிற பயத்தில் சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார் கான்ஸ்டபிள். அப்போது அவர் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.அதாவது வைக்கோல்போர் திடீரென அசைய ஆரம்பித்தது.இந்த நேரம் பார்த்து சுந்தரவரதனும் அவரது குழுவினரும் இங்கே வந்து விட்டனர்.  இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சிகரெட்டைப் பட்டென்று கிழே போட்டு அணைத்து விட்ட கான்ஸ்டபிள் சார்...இந்த வைக்கோல்போர் மெள்ள அசையுது சார் என்றார்.அவ்வளவுதான்.... சந்தேகப்பட்டவர்கள் பரபரவெனச் செயல்பட்டு வைக்கோல்போரைப் பிரிக்க முற்பட...உள்ளே கேடி கட்டய்யன் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.பிறகென்ன...அவனைப் பிடித்து முறைப்படி விசாரிக்க...பார்ஸி பெண்மணியிடம் திருடியது தானே என்பதை ஒப்புக் கொண்டான் நகைகள் மீட்கப்பட்டன.

பாத்தீங்களா சார்...பூண்டி சாமீ கொடுத்த சிகரெட்டைப் பத்த வைக்கறதுக்காகத் தோட்டத்துப் பக்கம் மட்டும் நான் போகலேன்னா ஒரு திருடனை இந்நேரம் கோட்டை விட்டிருப்போம்.அதான் சாமியே ஆசிர்வாதம் பண்ணி இந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்திருக்கிறார் போலிருக்கு என்று சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் உற்சாகம் பொங்கச் சொல்லி இருக்கிறார்.அதே போல் திரும்பும்போது பூண்டிக்கு இந்தக் குழு மீண்டும் வந்தது.சிகரெட் கான்ஸ்டபிளைப் பார்த்த பூண்டி மகான் என்னப்பா...போன காரியம் நல்லபடியா முடிந்தா?என்று கேட்க... அந்த போலீஸ் படையே மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது.ஸ்வாமிகளின் சமாதி திருக்கோயில் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பலிபீடம் நந்திதேவர் முன்புறம் இருக்க...கருவறையில் லிங்கத் திருமேனியுடன் அதிஷ்டானம் அமைந்துள்ளது.கருவறைக்கு வெளியே இரு பக்கமும் விநாயகர் மற்றும் முருகப் பெருமானின் திருவடிவங்கள் கருவறையில் முன்புறம் லிங்கத் திருமேனி பின்புறம் திருவாசியுடன் ஸ்வாமிகளின் திருவுருவம்.இடக்காலை மடித்து வைத்து வலக் காலைத் தொங்க விட்டபடி சின்முத்திரை காண்பித்து ஸ்வாமிகள் அருள் புரிந்து வருகிறார்.ஸ்வாமிகளின் உற்ஸவர் விக்கிரகமோ நம்மை எல்லாம் ஆசி புரியும் வண்ணம் அமைந்துள்ளதுஸ்வாமிகளுக்கு உடன் இருந்து பணிவிடை செய்த சுப்பிரமணிய சாமி என்பவர் இப்போதும் இங்கே வசித்து வருகிறார்.ஸ்வாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள் இன்றைக்கு அவரது திருச்சந்நிதி தேடி வந்து தங்களது மனக் குறைகளைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.அந்தக் குறைகளைத் தானே களைந்து அவர்களைக் காத்து வருகிறார் இந்த அற்புத மகான்!
*தேன்கூடு தினம் ஒரு கதை.. (13.07.2020)*

_*எதிர் நீச்சல்..*_
அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன்.. யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன்..

அன்று வீட்டின் முற்றத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்..

அவன் வீட்டின் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது.. ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில்பட்டது..

மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது..

இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான்..

ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான்.. வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டிவிட்டான்..

அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம், வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக..!

நேரம் கடந்த்தது, ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை..! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொய்த்தது.. வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்த்தது..!

அவன் திகைத்து நின்றான்..

கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும்.. அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு, அதற்கு எமனாகி விட்டது..!
🐝
*நமக்கு வரும் கஷ்டங்கள், நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி ..*
_அதனால் அதை ஏற்றுக்கொண்டு பயிலுவோம் , எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே , அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.._
🙏
"  #துளசி#

* எந்த வீட்டில் காலையிலும் ,
மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு
" யமதேவன் " நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்
லை.

*  நாள்தோறும்  " தீபமேற்றி " பூஜி
ப்பவர்களுக்கு 100 க்கணக்கான
யாகம் செய்ததின் பலனை அடைவர்.

*  துளசியின் காற்று பட்டாலும்,,
துளசியை வலம் வந்து வணங்கி
னாலும் எல்லா பாபங்களும்
நீங்கும்.

*  தொடுபவர்கள் புனிதம் அடை
கிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம்
உள்ள தூசியை நெற்றியிலிடுவது
மாபெரும் கவசமாகும்.

*  பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்
பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுட
ன் ஏற்பவர் கங்கையில் நீராடிய
பலனை அடைவர்.

*  பகவானது தாமரைப் பாதங்களி
ல் சந்தனம் கலந்து துளசி இலை
யை ஒட்டுபவர், ஒரு லட்சம்
அஸ்வமேத யாகத்தை நடத்திய
பலனை பெறுவர்.

*  " துவாதசி " தினத்தில் பகவான்
துளசியுடன் வசிக்கிறார்.

*  துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை , துவாதசி", சூர்ய
சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது.

*   பிரதிஷ்டை செய்யப்பட்ட
விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன
ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே
மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம்
கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்
கள் ஆவார்கள்.இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் "
என அழைக்கப்படுவர்.

* துளசி ஜெயந்தி " கார்த்திகை
பெளர்ணமி " ஆகும்.

* துளசியின் பிற பெயர்கள் −
ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூ
ஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா
நந்தினி , க்ருஷ்ண ஜீவானி ,
ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா,
வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா,
கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா,
தமிழில் " திருத்துழாய் ".

*  பாற்கடலில் தன்வந்த்ரி பகவான்
அம்ருதம் கொண்டுவருகையில்
அதில் துளசி தளமும் இருந்தது
என ப்ரம்ம வைவர்த்த புராணம்
கூறுகிறது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
#நாராயண_பட்டத்ரி

1560 ஆம் ஆண்டு கேரளா பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற ஊர் அருகே உள்ள மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவரது தந்தை மாத்ருதத்தர்
சிறு வயதில் தந்தையே கல்வியை கற்றுக் கொடுத்தார்.

பிறகு
நாராயண பட்டத்ரி ரிக் வேதத்தை மாதவாச்சாரியாரிடத்திலும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் பயின்றார். வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார்.

குரு
அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது.

அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது.

அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

தினமும் அவரை சீடர்கள் குளிக்க வைத்து அவரைக் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள்.

அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார்.

ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது.

உனக்கு சமஸ்கிருதத்தில் அனைத்தும் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து நல்லபடியாக கடவுள் துணையோடு வாழ்வாயாக என்றார்.

பட்டத்ரி அவர் காலில் விழுந்து வணங்கி உங்களுக்கு நான் குருதட்சணையாக எதையாவது தரவேண்டும்? என்றார்.

அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதட்சணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது.

ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தட்சணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான்.

அப்படியும் நீ குருதட்சணை கொடுக்க நினைத்தால், நீ கற்ற சமஸ்கிருதத்தை தட்சணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு, அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.

பட்டத்ரி குருவிடம், குருவே, நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.

ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தட்சணை தர விரும்புகிறேன் என்றார்.

இதைக் கேட்ட குரு, உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல், அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார்.

குருவே உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன் என்று கூறினார்.

இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும், சாஸ்திரங்களையும், சகல வித்தைகளையும், கடவுள் பக்தியையும், புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நோயைத் தரக் கூடாது.

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு வியாதியைத் தருவாரா?

என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த நோய் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம்.

அது மட்டுமில்லை. நான் உனக்கு என் நோயைக் கொடுத்தால் இந்த உலகம் என்னை திட்டும்
எனக்கு உள்ள நல்ல பெயர் அனைத்தும் கெட்டுவிடாதா
ஆகையால் நீ இங்கிருந்து புறப்படு என்றார்.

ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை. நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார்.

அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.

அதற்கு பட்டத்ரி குருவே, எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும்.

அது மட்டுமில்லை, நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள்.

நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து, மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள்.

பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார். தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார்.

சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே.... இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான்.

தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுத பிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார்.

தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார்.

அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார்.

எனவே, தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார்.

அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும், பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர்.

உடனே குரு தன் மற்ற சீடர்களிடம், இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள்.
ஏனென்றால் படிக்கச் சென்ற பிள்ளை வியாதியோடு வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்?

குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவை நிர்பந்தப்படுத்தி அவரின் வியாதியை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள்.

அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.

பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள்.

வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம்.

இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம்.
மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்?

படிக்கச் சென்ற பிள்ளை இப்படி வியாதியுடன் வந்து விட்டானே! என
இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர்.

ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை.

அவர் சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள், சூர்ணத்தினால் எல்லாம் எந்த ஒரு பலனும் இல்லை.

மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது.

கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது.

எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.

ஆனாலும் அவர் ரோகம் குணமாகவில்லை.....

இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.

நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை?!

அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.

பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.
நான் மாபெரும் தவறு அல்லவா செய்திருக்கிறேன்? அதனால்தான் என் வியாதி இன்னும் தீரவில்லை.
தன் குருவை தவறாக பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார்.

இனி நாம் என்ன செய்வது? இந்த நோயை எப்படிப் போக்குவது? என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள்.

எந்த ஜோசியரிடம் போவது, என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள்.

அதுபோலத்தான் இவரும் நினைத்தார்.அதே ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.
அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார்.

அவர் #அஷ்ட_மங்கல_ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி, அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து, அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார்.

பட்டத்திரியும் செல்ல முடியாது. அவரும் வர மாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.

அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு, வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா? நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.

ஆனால் நாளுக்கு நாள் அவரது வியாதியின் தன்மை அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன் கோபால குட்டன்.
சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்பவன் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு.
அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான்.

ஐயா, நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான்.

இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே! எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி, இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன். இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவனுடைய எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார்.

பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து, அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து. அவன் வந்த நேரத்தையும் பார்த்து, அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார்.

உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார்.

உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா? என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா, நான் உடனே செய்கிறேன் என்றார்.

அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற தலம். குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம், பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த தலம். கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள தலம். அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல்.
அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.

பட்டத்தரியிடம்
ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார்.

அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான்.

அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்?
என்று ஆர்வமாகக் கேட்க,

அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார்.

அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான்.

ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி.

நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய தலத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான். அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல. மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்? பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர்.

பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர்.

அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் குளிக்க வைத்து புதிய வேஷ்டி உடுத்தி அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.
கிருஷ்ணரை அழகாக தரிசித்தார். பின் அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.

வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம், நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். உன் சௌந்தர்ய ரூபத்தை அடிக்கடி பார்க்காமல் நான் எப்படி உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியம் எழுத முடியும்? அதனால் நீ தரிசனத்தைத் தா என்றார் நாராயண பட்டத்ரி.

என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்று தான் உன் வியாதி நீங்கும். நீ மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறினார் கிருஷ்ணர்.

இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும். அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர்
பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார்.

குருவாயூரப்பனே
தன் தலையைச் சாய்த்து பட்டத்ரியை பார்த்து “மீனைத் தொட்டுப் பாட ஆரம்பிக்கலாம்!” என்று உத்தரவு வழங்க, மத்ஸ்யாவதாரம் தொடங்கி, திருமாலின் அவதாரங்களை எல்லாம் தொகுத்து ‘நாராயணீயம்’ என்ற நூலாகப் பாடினார் நாராயண பட்டத்ரி.

நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீ மந்நாராயணீயம் என்னும் வரப்பிரசாதம் ஆகும்.

அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம்.

அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது
மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டதாம். (நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு).

1034 வடமொழி சுலோகங்களால் ஆனது ஸ்ரீமந்நாராயணீயம்.

தினமும் பத்து சுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் நாராயணீயத்தை பாடி முடித்தார் நாராயண
பட்டதிரி. சில நேரங்களில் ஒன்றுஇரண்டு என கூடுதலாகவும் பாடினார்.

நாராயணீயம் நூலை அவர் நிறைவு செய்த வேளையில், குருவாயூரப்பன் அருளால் அவரது வாத நோயும் பூரணமாகக் குணமானது.

1586ஆம் ஆண்டு விருச்சிகம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந்நாராயணீய காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள் .

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர உற்சவ தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.
உங்கள் பிறந்த தேதியின் தெய்வ வழிபாடை கண்டறியுங்கள் 👇😁

🎂31- காமாக்ஷி விருத்தம்🙏
🎂30 - ஆதித்ய ஹ்ருதயம்🙏
🎂29 - லலிதா அஷ்டோத்ரம்🙏
🎂28 - லிங்காஷ்டகம்🙏
🎂27 -சுப்ரமணிய புஜங்கம்
🎂26 - அபிராமி அந்தாதி
🎂25 -விஷ்ணு ஸஹஸ்ரநாமம்🙏
🎂24 - தேவி நாராயணியம்🙏
🎂23 - விநாயகர் அகவல்🙏
🎂22 - ஹனுமன் சாலிஸா🙏
🎂21-  கந்த சஷ்டி கவசம்🙏
🎂20 - சுந்தரகாண்டம்🙏
🎂19 - லலிதா த்ரிசதி🙏
🎂18 - மதுராஷ்டகம்🙏
🎂17 - நரசிம்ம கராவலம்பம்🙏
🎂16 - காயத்ரி மஹா மந்திரம் 🙏
🎂15 - லலிதா ஸஹஸ்ரநாமம்🙏
🎂14 - கந்தர் அனுபூதி🙏
🎂13 - நாராயணீயம்🙏
🎂12 - லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம்🙏
🎂11 - மீனாட்சி பஞ்சரத்னம்🙏
🎂10 - தன்வந்திரி மந்திரம்🙏
🎂9 - சிவபுராணம்🙏
🎂8 - ஹயக்ரீவ காயத்ரி
🎂7 - அம்பாள் நவரத்னமாலை🙏
🎂6 - கோளாறுபதிகம்🙏
🎂5 - வேல்மாறல்🙏
🎂4 - மஹாபெரியவா நாமாவளி🙏
🎂3 - ஐயப்பன் மந்திரம்🙏
🎂2 - ப்ருத்யுங்கராதேவி ஸ்தோத்ரம்🙏
🎂1 - பைரவாஷ்டகம்🙏

*உங்கள் பிறந்த தேதியில் குறிப்பிட்ட ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்து நற்பலனடையுங்கள்*

(குறிப்பு: நற்பலனளிக்கும் இந்த குறுந்தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்) 🙏
வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்’ என்று கூறியது நியூட்டனின் சித்தாந்தம்.

இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் ஆன்மிகப் பயன்பாடு தான் ‘Karma Theory’ என்று சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’,

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’,

‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்றும் முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர்.

ஆனால் நாம் ‘மூத்தோர் சொல் வார்த்தை விஷம்’ என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம்.

தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால் தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.

தமிழில் ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு ‘விதி’ என்ற பொருளும் உண்டு.

‘விதி’யை யார் விதித்தார்கள்? யாருமல்ல, நாமேதான்!!!.

அதனால்தான் சங்கப் புலவன் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று மிக உறுதியாகக் கூறினான்.

இந்து மதம், கடவுளை சாட்சி பூதம் என்று ஒரு நிலையில் சொல்கிறது.

நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள்,

அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்?

வானம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது.

உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை.
நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது.

வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் எச்சில் விழும்,
அமிலத்தை ஊற்றினால்…
ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து தான் போவான்.

அப்போது, ‘ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?’ என்று கதறுகிறான்.

அவநம்பிக்கைப் படுகிறான்.
மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது? என்று புலம்புகிறான்.

சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.

கீரை விதை போட்டால் ஆறு மாதத்தில் பலன்.

வாழை நட்டால் ஒரு வருடத்தில் பலன்.

தென்னை நட்டால் நான்கு வருடத்தில் பலன்.

தேக்கு மரம் அறுபது வருடங்கள் எடுக்கிறது.

அதேபோல, நமது நல்ல, தீய செயல்களும் பலன் தர அவற்றின் தன்மைக்கு ஏற்பக் குறைவாகவோ அதிகமாகவோ நாள் எடுக்கின்றன.

நமது கரும வினைகளை முன்னோர்கள் மூன்று வகையாகப் பிரித்தார்கள்:

பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்பவையே அவை.

பிராரப்தம்
என்பது பலன் தரத் தொடங்கி விட்ட வினைகள்.

விதைத்து, மரம் வளர்ந்து, கனி தரத் தொடங்கிவிட்டது.
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகதுக்கங்கள் இந்த வினைப் பயன்கள்தாம்.

ஆகாம்யம் என்பது விதைத்து வளரத்தொடங்கிவிட்ட பயிர் போல.
அது மரமா,செடியா, கொடியா என்பதைப் பொறுத்துத் தக்க சமயத்தில்,
இந்தப் பிறவியிலேயே பலன் தரும்.

சஞ்சிதம் என்பது விதைக் கையிருப்பு. ஆனால் பயிராகவில்லை.
இந்தப் பிறவியிலோ இன்னும் வரும் பிறவிகளிலோ எப்போது வேண்டுமானாலும் பலன் தரும்.

‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்று ஆண்டாள் திருப்பாவையில் இரண்டு வகை வினைகளைக் கூறுகிறாள்.

ஒன்று, முன்பே செய்துவிட்ட பிழை, அடுத்தது, இன்னும் வரப்போகும் பிழை (அதாவது அந்தப் பாவங்களின் விளைவு).

ஆக, பாவம், புண்ணியம் இவை இரண்டின் மூட்டையைச் சுமந்து பிறப்பு வருகிறது.

அந்தப் பிறப்பு மனிதப் பிறப்பாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

பாவ புண்ணிய மூட்டையின் பலனாக மீண்டும் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்லி நிறுத்தினேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகம் ஆகிப்
பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

என்று திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) எப்படி மனிதன் கல் போன்ற ஜடப்பொருள் தொடங்கி புல் முதல் தேவர் வரையான (ஓரறிவிலிருந்து பல்லறிவுடைய பிறவிகள்) பல வகைப் பிறப்பும் எடுத்துத் துயரப்பட்டேன் என்று பட்டியலிடுகிறார்.

ஒருமுறை புத்தரின் முக்கியச் சீடரான மௌத்கல்யாயனர் மற்றும் லட்சணர்
கிருத்திர கூட மலையிலிருந்து இறங்கி வரும் போது பாம்புத் தோற்றம் கொண்ட பேயைப் பார்க்கின்றனர்.

இந்த அதிசயத்தைப் போய் அவர்கள் புத்தரிடம் கூறியதும் அவர் கூறினார்:

“புதிதாகக் கறந்த பால் உடனே தயிராகாது. அதுபோலத்தீய செயல்களின் விளைவுகள் உடனே தெரிவதில்லை.

அத் தீய செயல்களின் பலன்கள் நீறு பூத்த நெருப்புப் போலமறைந்திருந்து பாவம் செய்த அறிவிலிகளைச் சுடுகின்றன.”என்று கூறினார் (
தம்மபதம்: மூடர் இயல்: 12).

மேலும் அவர் அந்தப் பேயின் பின்புலத்தை இவ்வாறு விளக்கினார்,

“காஸ்யப புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவரது காலத்தில் துறவிகள் பலர் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்தனர்.

இவர்களை விரும்பாத ஒருவன்  பிட்சுக்களின் குடில்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.

அதன் காரணமாகவே அவன் பாம்பு உருவம் கொண்ட பேயாகப் பிறப்பெடுத்திருக்கிறான்” என்று விளக்கினார்.

எதுவரை செயல்களைச் செய்கிறோமோ, அதுவரை பிறப்பும் இறப்பும் என்னும் சுழல் நம்மைத் தொடரும்.

இன்பம் துன்பம் என்னும் இருமைகள் இருக்கும்.

முற்பிறவியும் மறுபிறவியும் நிச்சயம் உண்டு.

அப்படி செயலைத் தவிர்க்க வேண்டுமா?

அது தனிக் கேள்வி.

அதற்கு விடை சொல்லப் போனால் இன்னும் பெரிதாக விரியும்.

ஆனால், ஒருவன் துன்பப்படும் போது

“இது உன் வினைப்பயன்” என்று கூறிப் பாராமுகமாக இருக்கும் உரிமை சக மனிதனுக்குக் கிடையாது.

கருணை உள்ளவனே ஆன்மிகவாதியாக முடியும்.

அதனால் தான் வள்ளலார் பெருமான், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உருகினார்.

அன்பினால் பிறருக்குச் செய்யும் தன்னலம் கருதாத சேவை மனிதனின் ஆணவத்தை அழித்து,

அவனை உயர் நிலைக்குக் கொண்டு செல்கிறது.அதனால்தான் தன்னலம் கருதாத பேரன்பே ஆன்மிகம்.

எல்லாவுயிரும் தம்முயிர்போல் எண்ணுவதே ஆன்மிகம்.

ஆன்மிக வழி ஒன்றே பிறப்பு-இறப்புச் சுழலினின்று விடுபடுவதற்கான தந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.

முன்னர் பாவ-புண்ணியங்களை வெவ்வேறு காலங்களில் விளையும் விதைகள்.

அந்த விதைகளை வறுத்து விட்டால் விளையாதல்லவா?

அதுதான் சூட்சுமம்.

சிவாயநம ,,
              🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.

ஆனால் இது முட்டாள்தனம்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட,

எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.

மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்,

உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
ஶ்ரீசித்சக்தி மஹிமை:

ஸம்விதாநந்த ரூபிணியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை ஆத்மஸ்வரூபமாக உணர்வதே ஶ்ரீவித்யையின் லக்ஷ்யம். மற்ற பலன்கள் எல்லாம் லக்ஷ்யமல்ல!!

பாவனோபநிஷத், லலிதோபநிஷத், ஶ்ரீசக்ரோபநிஷத் மூன்றுமே "ஸ்வயமேவ ஆத்மா லலிதா" என்று ப்ரத்யக்ஷமாகக் கூறுகின்றன.

மஹாயாகக்கரமத்தில் பாஸ்கராச்சார்யாளும் "ஸம்விந்மாத்ர ரூப காமேச்வராங்க நிலயாயை, ஸச்சிதாநந்த ப்ரஹ்மாத்மிகாயை பரதேவதாயை லலிதாயை மஹாத்ரிபுரஸுந்தர்யை நம" என்கிறார்.

கேவலஞான மயமான ஶ்ரீகாமேச்வரன் மடிமீது (ஆத்மஞானத்தை விட உயர்ந்த பரஞானமில்லாததால் ஶ்ரீகாமேச்வரன் ஸம்விதாநந்த மயமானவர்), கேவலாத்ம(தன்னைத் தவிர்த்து வேறொன்றில்லாத ஏகசைதன்ய பரவஸ்து) வடிவினளாக ஶ்ரீலலிதா பரமேச்வரி ஜ்வலிக்கிறாள்.

ஆத்மஞானமான ஶ்ரீகாமேச்வரன் மூலமாக, ஆத்ம தத்வமான ஶ்ரீலலிதாம்பாளை உணர்கிறோம்!! உணர்ந்ததும் ஆத்மாவே ஆத்மஞானமாக விளங்குவதைத்தான் சிவசக்தி ஸாமரஸ்ய ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி லலிதை என்று உணரப்படுகிறது.

தந்த்ரராஜதந்த்ரத்தில் ஶ்ரீவித்யையில் அனேக ப்ரயோகங்கள் கூறப்படுகிறது. ஶ்ரீமத்பஞ்சதசாக்ஷரிக்கும் அனேக ப்ரயோகங்கள் உண்டு!! திதிநித்யைகள் பதினைந்து பேருக்கும் தனித்தனி ப்ரயோகங்கள் ஸமுத்ரம் போல் உள்ளது.

ஆனால் இதெல்லாம் தேவி உபாஸனையின் லக்ஷ்யமா!? என்று கேட்டால் இல்லையென்றே தான் சொல்லவேணும்!! தேவி உபாஸனையின் லக்ஷ்யம் என்றவென்ளால் கைவல்ய மோக்ஷமே!!

ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலைகள் போல் கேவலானந்தவடிவினளான ஶ்ரீலலிதையிடமிருந்து தெறித்தத் துளிகள் நாம் அனைவரும்!! ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலை மறுபடி ஸமுத்ரத்தில் சேர்வது போல் ப்ரஹ்மானந்த வடிவினளான நிர்குண ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியினோடே ஐக்யமடைவதே கைவல்யம் எனப்படும்!!

ஶ்ரீலலிதை அக்கைவல்யத்தை தான் கொடுப்பவள் என்பதை ஸாலோகாதி முக்திகளை சொல்லாத ஸஹஸ்ரநாமம். கைவல்யத்தை மட்டுமே இருமுறை அழுத்திச் சொல்கிறது. ஒரு ஶ்ரீவித்யோபாஸகன் இத்தகைய கைவல்யத்தை மட்டுமே நாட வேண்டுமே அன்றி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது.

மோக்ஷத்தை எங்ஙனம் அடைவது என்பது பெருங்கேள்வியாக உள்ளது அல்லவா!! கலிப்ரபாவமோ கொடுமை!!? கலி தோஷம் க்ரூரமாக உள்ள இந்த ஸமயத்தில் மோக்ஷத்தை நாடிப்போவதெல்லாம் ஸாத்யமா!!?

பார்வதி பரமசிவனிடம் கேட்கிறாள் "மஹாதேவா!! நீலகண்டா!! சைவம், வைஷ்ணவம், ஸௌரம் முதலிய மார்க்கங்கள் ஆயிரம் இருக்கும் போது மிகக்கடினமான ஶ்ரீவித்யையில் ஏன் நீங்கள் ஜனங்களை ப்ரவேசிக்கச்சொல்கிறீர்கள்!!"

மஹாதேவர் சொன்னார் "மலையரசன் மகளே!! அஞ்ஞானம் எனும் இருளால் சூழப்பெற்றது இவ்வுலகு. உன் வடிவான ஶ்ரீவித்யை எனும் சூரியன் உதிக்காத வரை இந்த இருள் விலகாது!!" என்றார்.

ஶ்ரீவித்யை ஞானஸூர்யன். ஆனால் மிகக்கடினமாயிற்றே!! இப்போது உபாஸனை சுருங்கிச்சுருங்கி நவாவரணமும் சுருங்கியாயிற்று!! உபாஸனையிலும் லகு வந்தாயிற்று!! எல்லாவற்றிலும் லகு வந்தாயிற்று !! அது வேறு விஷயம்!!

ஶ்ரீசக்ர நவாவரணம் என்பது மஹாயாகம்!! பஞ்சதசீ/ஷோடஷீ என்பது ஆத்மவித்யை. ஆத்மஸாக்ஷாத்கரமே இதனுடைய பலன்.

இவ்விதம் ஆத்மஸாக்ஷாத்காரத்தை அடைவதென்பது எல்லோர்க்கும் சுலபமா என்றால் நிச்சயம் இல்லை!! ஶ்ரீசக்ர நவாவரணமே செய்தாலும் அந்தர்யாகம், காமகலா த்யானம் முதலியவற்றில் பாவனையிலாவது குண்டலினி சக்தியை எழுப்புதல்/ ஶ்ரீவித்யா ஸ்வரூபத்தை தானாக பாவித்தல் என்பதெல்லாம் செய்ய வேண்டும்!!

கலிதோஷத்தால் அஸுத்தமடைந்திருக்கும் மனதில் பாவனை லபிப்பதற்கே மிகுந்த ப்ரயத்தனம் வேண்டும். பிறகு ஶ்ரீவித்யையை தானாக (முகம் பிந்தும் க்ருத்வா முதலியவற்றில் கூறியுள்ளபடி) பாவிப்பதற்கு எவ்வளவு காலமாகுமோ தெரியாது!!

அப்போது, எப்படித்தான் அம்பாளிடத்திற் லயத்தை அடைவது!! முக்தியை நோக்கிச்செல்ல என்ன தான் வழி!! உபாஸகர்கள் ப்ரயத்தனம் செய்துகொண்டே இருப்பின் அம்பாள் வழிகாட்டுவாள். ப்ரயத்தனம் செய்தாவது தேவி ஸாக்ஷாத்காரத்தை அடைய முடியும்!! இந்த உபாஸனையெல்லாம் இல்லாத ஸாதாரண நம் போன்ற பக்தர்களுக்கு என்ன வழி!!?

அனைத்து தந்த்ரங்களும் தந்த்ரராஜம், தக்ஷிணாமூர்த்தி ஸம்ஹிதை, த்ரிபுரார்ணவம், ஞானார்ணவம் என ஆர்ணவம் எனும் ஸமுத்ரமாக பலகடின வழிகளில் லலிதோபாஸனா பத்ததியைக் கூறுகிறதே தவிர சுலபமான வழியைக் கூறுகிறதா!!?

ஸுபகோதயம், சுபாகம பஞ்சகம் முதலியவற்றில் தக்ஷிணத்தை விட கடினமான ஞானமார்க்கமான ஸமயத்தைப் பற்றியே கூறுகிறது. கௌலதக்ஷிணங்களையாவது அவலம்பிக்கலாம் அன்றி அவலம்பிக்கிறோம் என்று பெயரிலாவது பூஜிக்கலாம். ஶ்ரீஸமயாச்சார மஹாவித்யை லபிப்பதே மிக துர்லபம்!!

ஷட்சக்ரங்களிலும் ஶ்ரீவித்யையை பாவித்து, ஸஹஸ்ரகமலத்தில் ஐக்யபாவம் செய்து, அம்ருதரஸம் பெருகி இதையெல்லாம் நினைக்கவே கடினமாக உள்ளது. பயமாக இருக்கிறது. சுலபமான வழியைத் தான் தந்த்ரங்கள் கூறுகிறதா!!?

நிச்சயம் கூறுகிறது. தந்த்ரராஜம் எனும் மிகப்பழமையான மஹாக்ரந்தத்தில் உபாஸனை இல்லாது மோக்ஷமடையும் வழியும், ஜீவன் முக்தியை மட்டும் விரும்புவோரின் ஶ்ரீசக்ர பூஜையும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது ஸஹஸ்ரதளத்தில் யந்த்ர பாவனை செய்து, அம்பாளை பிந்துவில் பாவித்து பூஜிப்பது.

முதலாவது, உபாஸனை இல்லாது முக்தி அடைய முடியுமா!!? என்ற கேள்விக்கு விடை!!- நிச்சயம் முடியும்

குண்டலினி முதலிய யோகமார்க்கங்கள் அறியாதவர்கள், அதயந்த பக்தியுடன் ஶ்ரீலலிதாம்பாளை நாட்யம் அல்லது ஸங்கீதம்/ பஜனை, மற்றும் ப்ரவசனம் இவற்றால் ஆராதிப்பவர்கள் ஜீவன்முக்தர்களாகி ஶ்ரீலலிதா பரமேச்வரியின் ஸாயுஜ்யம் அடைவர் என்று ப்ரத்யக்ஷமாக தந்த்ரராஜத்தில் கூறியிருக்கிறது.

1) ஶ்ரீலலிதாம்பாளின் வைபவங்களை ந்ருத்ய ஸாஸ்த்ரத்தின் மூலமாக பரதம் முதற்கொண்ட அனைத்து ஸாஸ்த்ரங்கள் மூலமாகவும் காண்பிப்பவர் ஜன்மாவின் இறுதியில் ஶ்ரீபுரம் சென்று ஶ்ரீலலிதையுடன் ஐக்யமடைவர்.

2) ஶ்ரீதேவியின் பெருமையை நாதோபாஸனை மூலமாக அதாவது ஸங்கீதத்தின் மூலமாக ஸங்கீர்த்தனம் செய்பவர் ஶ்ரீபுர ஸாயுஜ்யம் அடைந்து லலிதையுடன் ஐக்யத்தை அடைவர். ஸங்கீத மும்மூர்த்திகளும் இதற்கு ஸாக்ஷி. மூவருமே ஶ்ரீவித்யோபாஸகர்கள் தான்.

கர்நாடக ஸங்கீதம் ராக தாள பாவங்களெல்லாம் கடினமாயிற்றே என்பின், இங்கு குறிப்பிடப்பட்டது நாம ஸங்கீர்த்தனம். ஶ்ரீவித்யா நாமஸங்கீர்த்தம். ஸந்தேஹமே இல்லாது ஶ்ரீலலிதா பரமேச்வரியின் நாமஸங்கீர்த்தனைத்தினை செய்து கடினமில்லாமல் முக்தியை ஸுலபத்தில் கொடுத்துவிடும். ஸமஸ்த பாபங்களையும் அழித்து ஜன்மாந்த்ரத்தில் முக்தியையும் அளித்துவிடும். ஶ்ரீலலிதாம்பாளின் நாமஸங்கீர்த்தனம் என்பது மிகுந்த புண்யம் வாய்த்தது. ஶ்ரீலலிதா நாமஸங்கீர்த்தனம் இதுவரை ப்ரபலமாகவில்லை. இனியாவது எல்லாவிடங்களிலும் சென்று ஜனங்களுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ணட்டும்!!

3) ப்ரவசனம் -- ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் கதாச்ரவணங்களை உபந்யஸித்தல். உபநாயஸிப்பது என்பது ப்ரவசனம் செய்வது கேட்பது இரண்டிற்கும் பொருந்தும். ஶ்ரீலலிதோபாக்யானம், த்ரிபுராரஹஸ்யம், தேவி பாகவதம், காமாக்ஷி விலாஸம் முதலய புண்ய சரித்ரங்களை மிகுந்த பக்தி ச்ரத்தையுடன் உபந்யஸிக்க வேண்டும்!! அத்யந்த பக்தியுடன் கேட்க வேண்டும்!! அங்ஙனம் செய்யின் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான அம்பாளின் சரணாவிந்தங்களை ஸுலபமாய் அடைந்து, கைவல்ய மோக்ஷத்தை அடையலாம்.

தேவி ப்ரவசனங்கள் தமிழுலகில் மிகமிகக் குறைவு என்பது துக்கிக்கவேண்டிய விஷயம். தெலுங்கு தேசத்தில் ஶ்ரீஸாமவேதம் ஷண்முக சர்மா, ஶ்ரீசாகண்டி கோடீச்வரராவ் முதலியோர் ஶ்ரீவித்யையைப் பற்றியும், ஶ்ரீகாமாக்ஷி பற்றியும், ஶ்ரீலலிதோபாஸனை பற்றியும் வருடக்கணக்கில் உபந்யஸித்துள்ளர். உபந்யஸித்து வருதிறார்கள்.

தமிழுலகில் அம்பாளுக்கென்று உபந்யஸிப்பது தற்காலத்தில் மிகமிக்குறைவாக உள்ளது மிக வருத்தமான விஷயம். ஶ்ரீஅநந்தராம தீக்ஷிதரின் தேவிபாகவதம், ஶ்ரீக்ருஷ்ண மூர்த்தி ஸாஸ்த்ரிகளின் லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் முதலியவை அற்புதமான ப்ரவசனங்கள்.

மேலும் திருச்சி ஶ்ரீராதாக்ருஷ்ண ஸாஸ்த்ரிகளின் ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம, ஸௌந்தர்யலஹரி, தேவி பாகவத, தேவி மாஹாத்ம்ய, லலிதா த்ரிசதி ப்ரவசனங்கள் முதலியவை பொக்கிஷங்கள்.

ஶ்ரீகோடாவெங்கடேச்வர ஸாஸ்த்ரிகள் தற்காலத்தில் தேவிபாகவத ப்ரவசனம் செய்துள்ளார். மற்றும் தேவி பரமான நிறைய விஷயங்களை ப்ரவசனம் செய்துள்ளார். அவர் ஶ்ரீதேவியின் பாதகமலங்களில் சீக்ரமாகவே சேர்ந்தது நமக்கெல்லாம் பெரிய துக்கம்.

மேலும் ஶ்ரீராஜகோபால கனபாடிகள் ஸௌந்தர்யலஹரி ப்ரவசனம் அற்புதமாகச் செய்துள்ளார்.

தற்போது சாக்த பரமாக ப்ரவசனம் செய்து ஶ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் Aravind Subramanyam அண்ணா தான். ஶ்ரீலலிதோபாக்யானத்தை அண்ணாவைத் தவிர்த்து வேறு யாரும் செய்து பார்த்ததில்லை.

ஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள் எனில் ஶ்ரீதேவி நாம ஸங்கீர்த்தனம்,
ஶ்ரீலலிதாம்பாள் கல்யாணம், ஶ்ரீதேவி பாகவத, மாஹாத்ம்ய, ஶ்ரீலலிதோபாக்யன ப்ரவசனங்கள் நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது போன்ற தேவி ஸம்பந்தமான விஷயங்கள் பெருக ஜகத்தில் மங்களம் பெருகும். லௌகீகத்தில் ஸமஸ்த ஸுகங்களும் பெருகி மறுவாழ்வில் மோக்ஷமும் கிட்டும்!!

இப்படி கைமேல் ஸர்வ ஸௌபாக்யங்களையும் வழங்கும் பராசக்தியின் அம்ருதம் இருக்க, அதை உபயோகித்துக்கொள்ள வேண்டியது நமது கடமை!!

ஶ்ரீதேவியின் பஜனையையும், ஶ்ரீலலிதா நாம ஸங்கீர்த்தனத்தையும், ஶ்ரீலலிதாம்பாளின் ப்ரவசனங்களும் எட்டுத்திக்குகளிலும் சென்று சேர்ப்பது நமது கடமை என்று நினைத்துச் செயல்படுவோம்!!

ஶ்ரீதேவியின் அருள் அதை கூட்டிவைக்கட்டும்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

-- மயிலாடுதுறை ஶ்ரீராமராகவன்