ஞாயிறு, 31 மே, 2020

நைஷ்டிக பிரம்மச்சாரி = ஆசையற்ற பிரம்மச்சாரி

மகாபாரதப் பெரும்போர் நடந்து முடிந்தது. துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, உயிர் நீங்கும் நிலையில் இருந்தான்.

அசுவத்தாமா, போரில் தன்னுடைய தந்தை துரோணரையும் நண்பன் துரியோதனனையும் கொன்ற பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்க எண்ணினான். .

அதுவே துரியோதனின் ஆசையாகவும் இருந்தது.

உப பாண்டவர்கள் என்னும் பாண்டவ குமாரர்கள் ஐவரும் போர்க்களத்தில் இருந்த பாசறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டவர்கள் வெளியில் இருந்தனர்.

அசுவத்தாமன் பாசறைக்குத் தீவைத்தான். உப பாண்டவர்களை, வாளால் வெட்டிக் கொன்றான். ஐவரும் இறந்த செய்தியை உயிர்விடும் நிலையிலிருந்த தன்னுடைய நண்பன் துரியோதனனிடம் சொன்னான்.

துரியோதனும் அசுவத்தாமனும் உப பாண்டவர்கள் அழிந்து விட்டதாக எண்ணினர்.

அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்துப் பாண்டவர் வம்சம் குலநாசம் செய்ய எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது உத்தரையின் வயிற்றைத் தாக்கியது. உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்தாள்.

உத்தரையின் வயிற்றை, பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும்.

உத்தரையின் வயிற்றைத் தடவ, பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவிய கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவினான்.

பிரம்மாஸ்திரக் கட்டு விலகியது. உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் காக்கப்பட்டது.

கிருஷ்ணன் எப்படி சுத்த பிரம்மச்சாரி

பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான்.

அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே “நைஷ்டிக பிரம்மசாரி”

இராமயண காலத்தில்
தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர்.

தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று விசுவாமித்திரர் ராமனை அழைத்ததாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்தனர்.

தாங்கள் விரும்பியபடி, கண்ணனைத் தழுவி மகிழ்ந்தனர்.

ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை! அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றினர்.
வேதம் ஒரு புனிதமான சொல். இந்த சொல்லை உச்சரிக்க்கூட நமக்கு தகுதி இருக்கிறதா? என்பதை நாம் ஒவ்வொருவரும் அவரவர் மனதை தொட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் வேதம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் "அ" னாவிலே இருக்கிறோம்.

வேதம் என்றால் மந்திரமா?   வேத ஹோமங்களா? பாடல்களா? செய்யுளா, வாய்ப்பாடா உரைநடையா?  என்னவென்றே தெரியாமல் பீடு நடை போடுகிறோம்.

வேதம் என்றால் " அறிவு" என்று மட்டும் யாரோ சொல்ல கேட்டுள்ளோம்.

சாதாரண அறிவா அது. ஞானம் என்னும் களஞ்ஜியம் அப்பா அது.

அந்த ஞானத்தை நாம் எளிதில் எட்டிப் பிடித்திடலாம் பிடித்துவிட்டோம் என்பது மிகவும் எள்ளி நகையாடும் செயலாகும்.

அப்பேர்ப்பட்ட வேத ரிஷியான பாரத்வாஜரே ஒரு சிறு கல் அளவுதான் வேதத்தை ஏற்றிருக்கிறார் என வேதம் கூறுகிறது.

மந்திரங்கள் சரியானபடி சரியான ஏற்ற இறக்கங்களோடு சரியான நேரத்தில் சரியான நோக்கத்திற்காக சரியானபடி சொல்லப்பட்டால் அந்த மந்த்ரங்கள் அனைவருக்கும் பலித்தமாகும்.

உண்மை பேசுதல் பொறாமை இல்லாதிருத்தல் பிறர் சொத்துக்கு ஆசை படாமல் இருத்தல் எல்லோரையும் சமமாக பாவித்தல் திருடாமை பிறருக்கு உதவி செய்தல் பொரறுமை போன்ற  குணங்கள் இருந்தால்தான் ஒருவர் சொல்லும் மந்த்ரங்கள் பலித்தமாகும்.

வேத ரிஷிகள் தங்களின் பாடல்களை தங்களின் ஞானத்தால் மந்திரங்களாக  மாற்றி  நமக்கு நல்ல ஒளி என்னும் பாதையை காட்டி சென்றார்கள்.

ஆனால் நாம் அவர்களுடைய மந்த்ரங்ஙளை பாடல்களாக மாற்றி நமது பார்வையினை இழந்துவிட்டிருக்கிறோம்.

இது அவர்களின் தவறல்ல. நாம் நமது வேதத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாதே அடிப்படை காரணமாகும்.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நமது செயலுக்கு விளக்கம் சொல்லி சமாதானம் செய்து கொள்கிறோம்.
பாலசுப்ரமணிய கவிராயர்.

இவர் ஒரு சேய்த் தொண்டர் ஆவார்.

முருகப்பெருமானின் திருப்பணிகளிலும், அவனது புகழைப் பரப்புவதிலுமே தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அடியவர்கள் ‘சேய்த் தொண்டர்கள்’
ஆவார்கள்.

பழனியில் பெரியான் கவிராயர்'
என்னும் முருக பக்தர் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல்
தவித்தார்.

தினமும் மலர் மாலை வாங்கி
பழனிப்பதிவாழ் முருகனை
வணங்கி
சஷ்டி விரதங்கள் கார்த்திகை விரதங்கள் இருந்து
முருகன் அருளால் ஆண் குழந்தையைப் பெற்றனர் கவிராயர் தம்பதியர்.

அக்குழந்தைக்கு பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பிறந்த குழந்தையின் கண்களும்
காதுகளும் செயல்படாமல்
இருக்க,
பெற்றோர்கள் வேதனையுடன்
குழந்தையை வளர்த்தனர்.

குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, பழநிமலை ஆண்டவர் சந்நிதியில் தம் மகனைப் படுக்க வைத்து தவமிருந்தார் பெரியான் கவிராயர்.

அவரது வேண்டுதலுக்கு
செவி சாய்த இறைவன்
கந்தப் பெருமானே ஒரு சிவனடியார் போல வேடம் தரித்து
ஒரு கடப்ப மலரைக் கொண்டு
சிறுவனின் உடலை வருடி, பின்
கண்களிலும் செவிகளிலும் கடப்ப மலரால் மெல்ல ஒத்தி எடுத்தார்.

சிறுவன் பாலசுப்பிரமணியனின் கண்கள் ஒளிபெற்றன; செவிகள் கேட்கும் திறனைப் பெற்றன.

பிறகுதான், `சிவனடியார் வேடத்தில் வந்தவர் முருகப் பெருமானே' என்பதை உணர்ந்து வியந்தார் கவிராயர்.

தம் மகனுக்கு தக்க ஆசிரியரிடம் தமிழ் மொழி வடமொழி
ஆகியவற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி, துறைசை ஆதீனத்து சுப்பிரமணியத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தமும் கௌமார தத்துவமும் பயின்றான், பாலசுப்ரமணியன்.

பின்னர் பல தலங்களை தரிசித்தார் பாலசுப்ரமணியன்.

அவர் இயற்றிய நூல்கள்

சைவ சித்தாந்த தரிசனம், பாஞ்சராத்ர மதச பேடிகை, வேதாந்த சித்தாந்த சமரச தீபம், கூவின நீப மான்மியம், அக்கதீபிகை

பாலசுப்ரமணியன்
தஞ்சை சமஸ்தானத்தில் ‘கவிராயர்’ பட்டமும் பாராட்டும் பெற்றார்.

பழநியின் பெருமைகளையும் அற்புதங் களையும் விவரிக்கும் ‘பழநிப்புராணம்’ என்னும் மிக உயர்ந்த நூலை இயற்றி முருகன் சந்நிதியில் அரங்கேற்றினார்.
*🚩ராமரின் வெற்றிக்கு வழிகாட்டிய* *திருப்புல்லாணி கோவில்!*

*🔯ஸ்ரீராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதனக் கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது,*

 ‘திருப்புல்லாணி’ திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

இந்த ஆலயத்தின் மூலவரான ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருமகளும், நிலமகளும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி நல்குகிறார். புனித பாரதத்தில் எத்தனை ஜெகன்னாதர் கோவில் இருப்பினும், இவர் மிகவும் பழமையானவர் என்பதால் ஆதி ஜெகன்னாதர் எனப்படுகிறார். இறைவனுக்கு ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்பது திருமங்கை ஆழ்வார் செல்லமாக வைத்த பெயர். உற்சவர் கல்யாண ஜெகன்னாதர்.

‘சக்கர தீர்த்தம்’ என்னும் தாது கலந்த தெள்ளிய திருக்குளத்தின் முன்பு, வண்ணங்கள் அள்ளித் தெளித்த ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. அதனைக் கடந்து உள்ளே நுழையும் போதே வேத மந்திரங்கள் காற்றில் தவழ்ந்து நம் செவிகளைப் புனிதமாக்குகிறது. பலிபீடம், கொடிமரம், பெரிய மண்டபத்தில் சேவிக்கும் கருடாழ்வார், அவர் முன்பாக கல்யாண விமானத்தின் கீழ் கடல்நிறப் பெருமாள் காட்சி தருகிறார்.

ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் விளக்குகிறது.

தென்பிரகாரச் சுற்றில் விமானத்தில் சற்று உயர்ந்த பகுதியில் லட்சுமிநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். மண்டபங்களில் சிற்பங்கள் சிந்தையைக் கவர, நாம் இரண்டாம் சுற்றினைத் தாண்டியதும் தென் பிரகாரத்தில் பத்மாசனித் தாயார் மூலவராகவும், உற்சவராகவும் புன்னகைத்தபடி தனிச் சன்னிதியில் அமர்ந்திருக்கிறார். வடமேற்குத் திசையில் கோதை நாச்சியார் கொலு விற்றிருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது காணக் கிடைக்காத திருக்காட்சி.

இந்த சன்னிதியின் இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் பகை வருக்குப் பயமூட்டும் தோற்றத்துடன் இருப்பது சிறப்பு. ராவணன் தூதர்கள் முன்னே வந்தால் ‘என்னை மானுடனாக மட்டும் எண்ணி விடாதே’ என்பது போல தோற்றத்துடன் வீர ராமன் காட்சித் தருகிறார். நாபியிலிருந்து மூன்று தண்டுகள் எழுந்து, ஒரு தண்டில் உள்ள தாமரையில் பிரம்மனும், மற்ற இரு தண்டுகளில் சூரிய - சந்திரர்களும் இருக்கிறார்கள். மேலே முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டதாக நுண்ணிய சிற்பங்கள் மின்னுகின்றன.

#கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.

இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.

திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

ராமநாதபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ராமநாதபுர சமஸ்தான கோவில்களில் ஒன்றாகத் திகழும் திருப்புல்லாணி ஆலயம், தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் கடலரசன் ஆட்சி செய்யும் சேதுக்கரை நீல நிறத்தில் காட்சி தருகிறது.
அதிகாலை நேரம்.

யமுனை நதிக்கரையில் காலவ முனிவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்.

அர்த்தியம் விடுவதற்காக புனித நீரை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்தார்.

கண்ணனை நினைத்து கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி என்று கண்களை மூடி பக்தியோடு அர்க்கிய மந்திரங்களை ஜபித்தார்.

கைகளில் இருந்த நீரில் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. கண் திறந்து பார்த்தார். எச்சில் தாம்பூலம் மிதந்தது. வெற்றிலையை மென்று இருந்த நீரில் துப்பியவர் யார் என்று ஆகாயத்தைப் பார்த்தார்.

புஷ்பக விமானத்தில் கர்ந்தர்வன் தன் மனைவியோடு உல்லாசமாக பறந்து கொண்டிருந்தான். காலவருக்கு கோபம் பொங்கியது.

கடவுளுக்காக
கையிலெடுத்த புனித நீரை அசுத்தப்படுத்திவிட்ட கந்தர்வன் இன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் தலை அறுபட்டு சாகட்டும் என்று சபித்தவர் மீண்டும் கைகளைச் சுத்தம் செய்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தப்படி அர்த்தியத்தை முடித்து நீரிலிருந்து வெளிப்பட்டார்.

நாரதர், இதற்காகவே காத்திருந்தது போல் காலவ முனிவரை நெருங்கினார்.

காலவ முனிவரே...கந்தர்வன் தெரிந்து தவறு செய்யவில்லை. ஆனால் நீங்கள் சட்டென்று சபித்து விட்டீர்களே.

கந்தர்வர்கள் இப்போதுதான் மேல் நோக்கி எழுகிறார்கள்.

தாங்கள் இப்படி செய்யலாமா? என்று கேட்டார். அவன் அர்த்தியம் செய்த போது எச்சிலை உமிழ்ந்தானே அது சரியா என்று கேட்டார் காலவ முனிவர்.

அது தவறு தான் முனிவரே ஆனால் அவன் அறிந்து செய்யவில்லை. அவன் உமிழ்ந்தது காற்றின் வேகத்தில் சரியாக உமது கரத்தில் விழுந்து விட்டது.

அதற்கு சிறிய தண்டனை கொடுத்திருக்கலாம்.

ஆனால் அறியாமல் செய்த தவறுக்கு நீங்கள் அளித்த தண்டனையால் கந்தர்வர்களின் கோபங்கள் உங்கள் மீது திரும்பும்.

நீங்கள் கண்ணனிடம் சென்று கந்தர்வனை கொல்ல சொல்லுங்கள்.

அப்போதுதான் யாரும் உம் மீது கோபப்பட மாட்டார்கள் என்றார்.

காலவ முனிவர் துவாரகை சென்று கண்ணனை சந்தித்து நடந்ததைக் கூறி நான் உன் பக்தன் ஆயிற்றே. எனது வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார். கண்ணனும் கந்தர்வனை கொல்ல ஒப்புக்கொண்டார்.

இடையில் நாரதர்,

கந்தர்வனை காணச்சென்றார். கண்ணன் கொல்கிறாரா என்று பதறிய கந்தர்வன் அழத்தொடங்கினான்.

அவனது மனைவியிடம் நாரதர் அர்ஜூனனது மனைவி சுபத்திரை உனக்கு தோழிதானே அவளிடம் சென்று உன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வை.

ஆனால் கண்ணன் தான் கொல்லப்போகிறான் என்று முதலிலேயே சொல்லாதே என்றார்.

கந்தர்வனின் மனைவியும் சுபத்திரையின் காலில் விழுந்து தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்.

சுபத்திரை அர்ஜூனனிடம் அழைத்து சென்று நடந்ததைக் கூற அர்ஜூனனும் கொல்ல வருபவனிடமிருந்து உன் கணவரை மீட்கிறேன். யார் அது உன் கணவரைக் கொல்வேன் என்று சொல்வது என்று கேட்டான்.

கந்தர்வன் மனைவி அப்போதுதான் கண்ணன் என்ற பெயரைக் கூறினாள்.

இருவரும் விக்கித்து போனார்கள். ஆனால் கொடுத்த வாக்கை காப் பாற்ற வேண்டுமே என்று அர்ஜூனன் கந்தர்வனுக்காக கண்ணனை எதிர்த்து நின்றான்.

ஒருவர் மீது ஒருவர் விட்ட அம்புகள் மலர்மாலையாக மாறியது.

நாரதர் திகைத்தார்.

விடுவிடுவென கண்ணனிடம் சென்றார். அர்ஜூனன் மீது எதற்கு வில் அம்பு. நேராக கந்தர்வன் மீது செலுத்து கண்ணா என்றார்.

கண்ணனும் நாரதர் கூறியபடி அம்பை கந்தர்வன் கழுத்தில் எய்தார்

தலை தனியாக வந்து விழுந்தது.

கந்தர்வனின் மனைவி அர்ஜூனனின் காலில் வீழ்ந்து கதறினாள்.

என்னவாயிற்று என் கணவரின் உயிரை காப்பேன் என்றீர்களே என்று அழுதாள்.

சிறிது நேரம் கழித்து நாரதர் கண்ணா காலவ முனிவர் உன் பக்தர் என்பதால் கந்தர்வனை கொன்றுவிட்டாய். ஆனால் அர்ஜூனனும் உனது பக்தன் தான் என்பதால் கந்தர்வனைக் காப்பதும் உன் கடமை தான் என்றார்.

சற்றே யோசித்த கண்ணன் அதுவும் சரிதான் என்றபடி கந்தர்வனுக்கு உயிர் கொடுத்தார்.

கந்தர்வனும் அவன் மனைவியும் கண்ணனிடமும், காலவ முனிவரிடமும், நாரதரிடமும், அர்ஜூனனிடமும் நன்றி தெரிவித்து வணங்கினார்கள்.

பக்தர்களைக் காப்பதில் வேறுபாடு பார்க்காத கண்ணனுக்கு பூமழை தூவி வாழ்த்தினார்கள்.
*லிங்க புராணம் ~ பகுதி — 05*

      *பகவான் உந்தியில்*
       *தோன்றிய பரமன்*
  ======================

மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும்., மலரோனுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரம்மனிடம்., உலகைப் படைப்பவர் அவர் என்றால்., ஈரேழு உலகங்களையும் அவர் உதிரத்தில் காட்ட முடியுமா என்று கேட்டு., பிரம்மன் வாய்வழிச் சென்று அவர் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தார். அப்போது பிரம்மன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு., அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க., திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய் வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரம்மன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன்., நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலை கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் "அவன்" பெருமையை அறிய., தானே வழிகளை அடைத்ததாகவும்., உன்னை தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன்., மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்..? என்று பிரம்மன் கேட்க., நாராயணன் இவருக்கு நிகர் இவரே..! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும்., பிரம்மன் மாயையால் மயங்கி அலைய., ஈசன் அவர் மயக்கம் தீர அழற் சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர்.

தொடரும்.....

*குங்கும சம்தன லேபித லிங்கம்*
*பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் |*
*ஸஞ்சித பாப வினாஸன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
தசாவதாரம் ஒன்பது கிருஷ்ண அவதாரம்.
*******************************************************

🌷🌷◆◆◆ இது சற்று நீண்ட பதிவு. அதனால் 3 பகுதிகளாக பதிவிடுகிறேன்... படித்து அந்த மாயவன்  ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெருங்கள் ◆◆◆🌷🌷

கிருஷ்ண அவதாரம் பாகம் 1
****************************************************************
பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும்.

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவ தாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மன தை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான்.

கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு  முறை பூமாதேவி, நாராயணனிடம், பகவானே, பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு நாராயணனும் சற்று பொறுமையா இருக்கும் படி கூறினார்.

பல காலம் கழித்து பூமாதேவி நாராயணா, தாங்கள் சொன்னது போல இன்று வரை பொறுமையுடன் தான் இருக்கிறேன். ஆனால், முனிவர்கள் செய்யும் யாகத்தைக் கெடுப்பவர் கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், உழைப்பைத் திருடுபவர்கள் ஆகியோரையும் சேர்த்து சுமக்கிறேனே.

இவர்களின் எடையைத் தாங்கும் சக்தி எனக்கில்லை பிரபு.  இவர்களை அழிக்கும் அளவுக்கு பலமும் என்னிடமில்லை. புரூசோ ஷாத்தமா என்னையும், நான் தாங்கும் நல்லவ ர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்று. பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தா மனுக்கும் கேட்டது, பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்தெழுந்தார்.

சிவனும், பிரம்மனும், மற்ற தேவர்களும் முன் செல்ல, பூமாதேவியும் அவர்களின் பின்னால், நாராயணனைச் சந்திக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் நாராயணனின் வரவுக்காக காத்திருந்தனர். நாராயணன் வரவில்லை. ஆனால், பிரம்மாவு க்கு ஒரு செய்தி மட்டும் வந்தது.

பிரம்மனே,  பூமாதேவியின் கவலையை விடச் சொல். உலகத்திலுள்ள பாவிகளை அழிக்க நானே பூலோகத்தில் பிறக்கப்போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள் அனைவரும் பூலோகத்திலுள்ள யது வம்ச (இடையர்குலம்) குடும்பங்களில் பிறக்க வேண்டும். எனக்கு உதவியாக இருக்க வேண்டும், என்பதே அந்தச் செய்தி. பிரம்மா மகிழ்ந்தார்.

பூமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். சிவனும் மற்ற தேவர்களும் மகிழ்ந்தனர். தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். எல்லா தேவர்களும் யதுகுலத்தில் அவதரித்தனர்.

யதுகுலத்தின் அரசனாக இருந்தவர் சூரசே னன். இவரது புத்திரன் வசுதேவர். இவருக்கு தேவகர் என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயமாயிற்று. தேவகரின் அண்ணன் உக்ரசேனன் போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார்.

அவருக்கு ஒரு மகன். பெயர் கம்சன். தேவகி கம்சனின் சித்தப்பா மகள். கம்சன் தோற்றத் தால் தான் மனிதனே தவிர, உள்ளத்தால் அசுரன். ஒரு சுபமுகூர்த்த வேளையில் தேவகி யைக் கைப்பிடித்தார் வசுதேவர். தேவகிக்கு ஏகப்பட்ட சீர் வரிசையை அள்ளிக் கொடுத்தார் தேவகர்.

 திருமணம் முடிந்தவுடன் மணமக்களை, மண மகளின் சகோதரன் அவளது புகுந்த வீட்டில் கொண்டு விடுவது அக்கால வழக்கம். தேவகி க்கு உடன்பிறந்த சகோதரர்கள் இல்லையெ ன்பதால், பெரியப்பா மகன் கம்சன் தன் தங்கை யை தேரில் அழைத்துச் சென்றான்.

மின்னல் வேகத்தில் குதிரைகள் பறந்து கொ ண்டிருந்தன. அப்போது, வானம் அதிர்ந்தது. அங்கிருந்து ஒரு குரல் எழுந்தது. நில்லு கம்சா! போஜகுலத்தின் இளவரசனை இவ்வளவு தைரியத்துடன் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து, தடுத்து நிறுத்திய மாயக்குரலே.. யார் நீ ? என்ற கம்சனுக்கு பதிலாக பயங்கர சிரிப்பொலி வானிலிருந்து எழும்பியது.

மூடனே, எமனுக்கு யாராவது தேரோட்டுவார்க ளா ? உன்னைப் போல் மடையர்கள் தான் உண்டா ? யார் அந்த எமன் என்கிறாயா ? உனது சகோதரியின் வயிற்றில் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தான் அது, குரல் அடங்கிவிட்டது. கம்சன் ஆவேசமானான்.

அத்தனை நாளும் ஊட்டி வளர்த்த அன்புத்தங் கையுடன் விளையாடிய காலத்தை மறந்தான். அவளுக்கு அன்று தான் திருமணமே நடந்திரு க்கிறது என்பதையும் மறந்தான்.

இந்த உலகத்து இன்பங்களையெல்லாம் எப்ப டி எப்படியோ துய்க்க வேண்டுமென கனாக்க ண்டு கொண்டிருக்கும் அவன் மடிவதா ?.

தேவகி, கேட்டாயா அசரீரி குரலை. ஒழிந்து போ, என்பவனாய், வாளை உருவினான்.புது மணப்பெண்ணைக் கொல்வதற்கு கம்சன் வாளுடன் பாய்ந்ததைக் கண்ட வசுதேவர் கம்சனைத் தடுத்தார்.

மைத்துனரே " நீர் வீரத்தில் வல்லவர். உம்மை அழிக்க யாரால் இயலும் ? அசரீரி சொல்வது உண்மையே ஆனாலும் கூட, தேவகி அதற்கு எப்படி பொறுப்பாவாள் ? அவளுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தானே உமக்கு ஆபத்து .நான் அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்களை என்ன வேண்டுமா னாலும் செய்யும். மேலும் மரணத்தைக் கண்டு நீர் அஞ்சுவீர் என நான் கனவிலும் எண்ணவில்லை.

மரணத்தைக் கண்டு மனிதன் ஏன் பயப்பட வேண்டும் ? மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அது எல்லாருக்கும் வந்து சேரும். அது எந்தநாள் என்பதும் குறிக்கப்பட்ட ஒன்றுதான். அப்படியிருக்க, தைரியசாலிகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவார்களா? தேவகியின் குழந்தை யால் இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உமக்கு மரணம் சம்பவிக்கத்தானே போகிறது.

உனக்கு வயது 25 என்றால், நீர் ஏற்கனவே 25 ஆண்டுகள் இறந்து விட்டீர். மனிதன் தான் கட ந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் மரணத்தி ன் வாசலை நோக்கித்தானே நகர்ந்து கொண் டிருக்கிறான்! இந்த உண்மையை நீர் அறிந்தி ருந்தும், இவ்வாறு செய்வது முறையானதாக தெரியவில்லை என பணிவு கலந்ததும், அதே நேரம் அழுத்தமாகவும் தெரிவித்தார். கம்சன் கோபம் தணிந்தார்.

வசுதேவரே, உமது சமாதானத்தை ஏற்கிறேன். நீர் உமது எட்டாவது குழந்தையை என்னிடம் தந்துவிடுவீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில், நீர் சத்தியசீலர், என்ற கம்சன் அவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டான். காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தையுடன் கம்சனின் அரண்மனைக்குச் சென்றார் வசுதேவர். கம்சன் ஆச்சரியப்பட்டான்.

வசுதேவரே ! உலகில் சொன்ன சொல் காப்பா ற்றுபவர்கள் மிகவும் குறைவு. நீர் உயர்ந்த ஆத்மா என்பதை நிரூபித்து விட்டீர். என் பாச த்திற்குரியவரே ! உமது பண்பை மதிக்கிறேன். இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். உமது எட்டாவது குழந்தை தான் என்னை கொல்லும் என்ற விதி இருக்கிறது. எனவே, இந்தக் குழந்தையை நீரே வளர்த்துக் கொள்ளும், என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான்.

வசுதேவர் சென்றதும், நாரதர் கம்சனைக் காண வந்தார். கம்சன் அவரை வரவேற்று ஆசனமளித்து உபசரித்தான்.

அவர் கம்சனிடம், உன் மீது கொண்ட அன்பின் காரணமாக நான் ஒரு ரகசியத்தை உனக்குச் சொல்கிறேன். தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறக்கப்போவது உறுதி. அது விஷ்ணுவின் அவதாரம் என்பதைத் தெரிந்து கொள்.

அதற்கு முன்னதாக யது குலத்தில், தேவர்க ளே குழந்தைகளாக வந்து பிறக்கப் போகிறா ர்கள். உன் தங்கைக்கு பிறந்த முதல் குழந்தை யும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் எட்டாவது குழந்தைக்கு உதவி செய்வதற்காக வே பிறக்கப் போகின்றன. எனவே, நீ உன் தங்கைக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிடு. அதில் எது விஷ்ணு அம்சமுடை யது என்று கண்டுபிடிப்பது கஷ்டம், என்று தூபம் போட்டார்.

அவ்வளவு தான், கம்சனின் மிருக குணம் தலைதூக்கி விட்டது. நாரதரே காலம் முழுவ தும் நான் உமக்கு கடமைப்பட்டவன். இனி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், என்றவன், " யாரங்கே ,  உடனே வசுதேவரையும், தேவகியையும் கைதுசெய்து பாதாள சிறையில் அடையுங்கள்.."  என்றான். சில மணி நேரத்தில் வசுதேவரும், தேவகியும் சிறையில் தள்ளப்பட்டனர்.

வசுதேவருக்கு பிறந்த குழந்தைகள் அஷ்டவ சுக்கள் எனப்பட்டனர். இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து, உடனே இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி அவர்களில் ஆறுபேர் இறையடி சேர்ந்து விட்ட னர். இப்படியிருக்க, ஏழாவது குழந்தையாக தேவகியின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர் தன்னைத் தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தைய அவதார த்தில், அனந்தன், ராமனின் தம்பி லட்சுமண னாகப் பிறந்து, சேவை செய்தார். அதற்கு நன்றி சொல்லும் வகையில், இப் பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்ப முடிவெடுத்தாராம் பரமாத்மா. இவரே பலராமர் எனப்பட்டார்.

கிருஷ்ணரிடமே பல மாயசக்திகள் உண்டு என்றும், அதில் ஒரு சக்தியே அனந்தனாகிய பலராமர் என்றும் அதிதீவிர கிருஷ்ண பக்தர் கள் சொல்வார்கள். அதாவது இறைவனை யாராலும் தாங்க முடியாது. அவரே தன்னை தாங்க முடியும்.

எனவே, கிருஷ்ணரே அனந்தனாகிய பாம்பு வடிவில் இருந்தார் என்றும் சொல்வதுண்டு. இதே கிருஷ்ணருக்குள், இன்னொரு பெண் சக்தியும் அடங்கிக் கிடந்தது. அவளுக்கு யோக மாயை எனப்பெயர். அவளை கிருஷ்ணர் வரவழைத்தார்.

"மாயா, பூலோகம் செல் மதுராபுரி சிறையிலே தேவகியும், வசுதேவரும் சிறைப்பட்டு கிடக்கி ன்றனர். அவர்களின் வயிற்றில் நான் அவதரி க்கப் போகிறேன். அதற்கு முன்னதாக எனது மற்றொரு சக்தியான அனந்தன் தேவகியின் வயிற்றுக்கு போய் விட்டான். நீ, யதுகுலத்தின் தலைவரும், கோகுலத்தில் வசிப்பவருமான நந்தகோபனின் மனைவி யசோதையின் கருவில் உருவெடு.

சில காலம் கழித்து, நீ தேவகியின் வயிற்றிலு ள்ள கருவை மாய சக்தியால் அகற்றி, வசுதே வரின் இன்னொரு மனைவியான ரோகிணி யின் வயிற்றுக்கு மாற்றிவிடு. பின்னர் நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். தலைவணங்கி அவரது உத்தரவை ஏற்ற யோகமாயை, பரந்தாமா ! என் பங்கு பூலோகத்தில் என்ன ? என்றாள்.

தங்கையே,  பூலோக மக்கள் உன்னை என் சகோதரியாக கருதுவர். உன்னை துர்க்கை என அழைப்பர். வைஷ்ணவி, சாமுண்டி, காளி, விஜயா, சாரதா, அம்பிகா இப்படி பல பெயர்க ளை சூட்டுவர். புஷ்பம், பழங்களால் ஆராதிப்பர்.

மேலும் உன்னை நம்பி யாகங்கள் பல நடத்தி, தங்கள் சொந்த நலனை எல்லாம் நிறைவேற் றித்தர வேண்டுவர். தகுதியானவர்களுக்கு நீ தகுதியானதைச் செய்வாய், என்றார். மகிழ்ச்சி யடைந்த துர்க்கை பூமிக்கு வந்து யசோதையி ன் வயிற்றில் கருவானாள். சில காலம் சென்றதும், தேவகியின் வயிற்றில் இருந்த பலராமனை, ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றி விட்டாள்.

இதன்மூலம் கிருஷ்ணர், தன்னோடு என்றும் இருக்க வேண்டிய ஒரு சக்தியை உறுதிப் படுத்திக் கொண்டார். பலராமனின் கரு பலவ ந்தமாக இன்னொரு பெண்ணின் வயிற்றுக்கு ஈர்க்கப்பட்டதால் அவரை ஆகர்ஷணன் என்றும், ரமணன் என்றும் சொல்வார்கள்.

அவரை யார் உளமார நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவரே குழந்தையாவார் என்பது இதன் உட்கருத்து. ஆறு குழந்தைகளைக் கொன்ற பாவமும், ஒரு குழந்தை கர்ப்பத்திலே யே கலைந்து போகவும், தன்மூலம் தேவகிக்கு ஏற்பட்ட பயமே என்பதால் அதையும் ஏழாவது கொலையாகக் கருதி, அதனால் தனக்கு துன்ப ம் விளையுமோ என்று அச்சமும் கொண்டிருந் தான் கம்சன்.

கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்தார் ஒரு நன்னாளில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை வசுதேவர் பார்த்தார். பரவசத்தி ன் உச்சிக்கே போய்விட்டார். ஆம்... குழந்தையி ன் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன. மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன். பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம். இதெப்படி சாத்தியம்? தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.

பகுதி : ஒன்று

தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து, தரிசித்துக் கொண்டிருந்தாள். கடவு ளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில், அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான்.

அவள் அந்த தெய்வக் குழந்தையிடம், பரந்தாமா, உலகம் உய்விக்க வந்த விளக்கே,  தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில் எங்க ளிடம் எப்படி வளர முடியும் ? என் அண்ணன் கம்சன் உங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கி றான். அத்துடன் எங்களையும் அவன் கொன்று விடுவான்.

என்னைத் திருமணம் செய்த பாவத்திற்காக, என் கணவர் உயிர்விடுவது எவ்வகையில் நியாயம் ? தாங்கள் தான் இதற்கொரு வழி சொல்ல வேண்டும், என பிரார்த்தித்தாள். அந்தக் கணமே குழந்தை பெருமாள் விஸ்வரூ பம் எடுத்தார். என்னைப் பெற்ற புண்ணியவ திக்கும், என் தந்தை வசுதேவருக்கும் நமஸ்காரம்.

தாயே , முன்னொரு பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார். தாயான நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய். அப்போது இந்தப் பூவுலகில் மக்க ள் தொகை குறைந்தது. இதனால் கலவரமடை ந்த பிரம்மன் உன்னை அணுகி மக்கள்தொ கையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான்

ஆனால், நீயும், சுதபாவும் ஐம்புலன்களையும் அடக்கி விரதம் ஒன்றை அனுஷ்டித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால் பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை. கோபமடைந்த பிரம்மன் புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஏனெனில்,  உங்கள் இதயம் பரிசுத்தமாயிரு ந்தது. பரிசுத்தமான மனம் எங்கே உள்ளதோ, அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது.

இப்படி 12 ஆயிரம் தேவஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள். உங்கள் மனம் முழுவதும் என்னைப் பற்றிய சிந்தனையே தவிர வேறி ல்லை. அப்போதும், நான் உங்களுக்கு காட்சி தந்து, என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள் என எண்ணினேன். ஆனால், நீயோ, பரந்தாமா, நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன்.

அதன்பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்தி விட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள் நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன். அடுத்த பிறவியில், நீங்கள் காஷ்யபர் - அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப்பிறவியில் நான் உபேந்தி ரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன்.

இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்தி ருக்கிறேன். நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியது தான். பல பிறவிகளில் என்னை அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சனிட மிருந்து உங்களைக் காப்பது என் கடமை.

நீங்கள் உடனே என்னை கோகுலத்துக்கு எடு த்துச் செல்லுங்கள். அங்கே வசுதேவரின் நண்பர் நந்தகோபனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்க என்னை நந்தகோபரின் மனைவி யசோதை யிடம் கொடுத்து வளர்க்க சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார்.

பின்னர், ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும், தன்னை கோகுலத்துக்கு கொண்டு போகச் சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையு ம், தன் தாய் தந்தைக்கு மறக்க செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். கனவிலிருந்து விழித்தவர் போன்ற வசுதேவர், குழந்தையைப் எடுத்துப் போகும் ஏற்பாட்டைச் செய்தார். அவர் குழந்தையைத் தொட்டாரோ இல்லையோ, கையிலிருந்த விலங்குகள் கழன்றுவிட்டன. சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. காவலர் களோ மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர். அங்கு கிடந்த ஒரு பழைய கூடையில் தன் அங்கவஸ்திரத்தை விரித்தார். குழந்தையை அதற்குள் வைத்தார். பெண்
குழந்தை பெற்றிருந்த யசோதை, மயக்கத்தில் இருந்து எழவில்லை.

அவளுக்கு தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்வு இருந்ததே தவிர, என்ன குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயக்கமாகி விட்டாள். சப்தமின்றி, வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தி னார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து சேர்ந்தார். சந்தேகமின்றி இருக்க விலங்குகளை பூட்டிக் கொண்டார். குழந்தை வீறிட்டு அழவே, காவலர்கள் விழித்தனர்.

தேவகிக்கு குழந்தை பிறந்து விட்டதென்ற செ ய்தி கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுட ன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தான் கம்சன். என் உயிரைக் குடிக்க வந்த அந்த எமன் எங்கே ? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன், என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தாள் தேவகி.

அண்ணா, ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக, என் ஆண் குழந்தைகளையெல் லாம் கொன்றாய். இப்போது பிறந்திருப்பது பெண். அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட, என் வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண்பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர, பெண்ணால் இல்லை. பார்த்தாயா, இது பெண் குழந்தை, என குழந்தையை நீட்டினாள்.

கொடிய உள்ளம் கொண்ட கம்சன், அவள் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. குழந்தையின் கால்களைப் பிடித்தான். தலை யை சுவரில் ஓங்கி அடித்தான். அவ்வளவு தான், மதுராபுரியே கிடுகிடுக்கும் வகையில், ஓங்கி ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்தக் குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல பிரகாசம். கையில் சங்கு, சக்கரம் மின்ன, திரிசூலம், வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மாலையாய் கழுத்தை அலங்கரிக்க அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள்.

அவள் விஷ்ணுவின் சகோதரி என்பதாலும், உலகைக் காக்கப்போகும் ரட்சகி என்பதாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல், வான த்து தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர்க ளும் அந்த தேவியைத் தரிசிக்க பரிசுப் பொரு ள்களுடன் வந்து அவளை பணிந்தார்கள். துர்க்கை கர்ஜித்தாள்.

கொடியவனே, உன் தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா, மனிதனாய் பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திரு ந்தும், இவ்வுலகம் உள்ளளவும் உயிர் வாழப் போவதாக எண்ணி, அப்பாவி குழந்தைகளை  கொன்றாயே, உன்னைக்கொல்ல போகிறவன் பிறந்து விட்டானடா. அவன் ஒளிந்து வளர்கி றான் உன் அழிவு நெருங்கிவிட்டது இவர்க ளை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தை யாவது தேடிக்கொள், என்றாள். அத்துடன் அவள் மறைந்து விட்டாள்.

கம்சனின் மனம் அந்தக்கணமே மாறிவிட்டது. அம்மா தேவகி,  என் அன்பு சகோதரியே,  உன க்கு எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்து விட்டேன். என் கொடுமைக்கு பலனாக பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) என்னைப் பற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே என்னை இருவரும் மன்னிக்க வேண்டும் என்று கூறி வசுதேவரின் கால்களில் விழுந்து வணங்கி னான்.

தன்னையுமறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது. வசுதேவர் அவனைத் தேற்றும்படியான சூழ்நிலை உருவாகி விட்ட து. அதன்பின் கம்சன் ஒருநாள் அரசவையில் வீற்றிருந்தான்.

அவனுடைய சகாக்கள் வந்தனர். கம்சா ! நீ ஏதோ தியாகி போல உன் தங்கையை விடுவி த்து விட்டாய். உன்னைக்கொல்ல பிறந்திருப்ப வன் விஷ்ணு என்பதை நீ அறிவாய். எங்கோ, அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகிறது. அவன் வளர்ந்து அதன்பிறகு தானே உன்னைக் கொல்ல வருவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயோ ? அசரீரி சொன்னதை ஒரு பொருட்டாக நீ மதிக்கவில்லை.

இதன் பலனை நீ அனுபவிக்கத்தான் போகிறா ய் என கம்சனை எச்சரித்தனர். உடனே கம்சன் அரசவையைக் கூட்டி நமது அதிகார எல்லைக் குள் கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்துள்ள எல்லாக் குழந்தைகளையும் கொன்று விடுமா று கூறினான். இந்த தகவல் வசுதேவருக்கு தெரிய வந்தது. நந்தகோபருக்கு இதை தெரி வித்து, கோகுலத்தில் இருக்கும் தன் குழந்தை களான கிருஷ்ணரையும், பலராமரையும் பாது காக்க ஏற்பாடு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

இந்நேரத்தில், தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவே நம்பிவிட்ட கோகுலத்த லைவர் நந்தகோபரும், அவர் மனைவி யசோதையும் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க முடிவெடுத்தனர். தன் மகன் கிருஷ்ணரின் ஜாதக கணிப்பு திருநாளை, மலை போல் செல்வத்தை குவித்து வைத்து கொண்டாடி னார் நந்தகோபர்.

பசுக்களையும், பொன்னையும், நவரத்தினங்க ளையும், தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என வேதம் சொல்கிறது. பிராமண ர்களுக்கு இத்தகைய தகுதி இருந்தால், அவர்களுக்கு தங்கள் பொருளை தானமாகக் கொடுத்து, தங்களைப் புனிதப் படுத்திக் கொண்டனர் கோகுலவாசிகள். நந்தகோபர் மிக அதிகமாகவே தானம் கொடுத்தார்.

ஏனெனில் அவர் வீட்டில் லட்சுமியின் மணவா ளனே பிறந்திருந்ததால், செல்வத்திற்கு ஏது குறை. கிருஷ்ணனுக்கு மிக சிறப்பாக ஜாதக் கணிப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது இதன் பிற கு, கோகுலத்தின் சார்பில் கம்சனுக்கு செலுத் த வேண்டிய வரித்தொகையை செலுத்த நந்த கோபர் மதுராபுரி வந்தடைந்தார். அவரை வசு தேவர் சந்தித்தார். குழந்தைகளைக் கொல்ல கம்சன் முடிவெடுத்திருக்கிறான் என்ற விபரத் தை நேரடியாகச் சொல்லி அவரை பயமுறுத் தாமல், கோகுலத்தின் பாதுகாப்புக்கு இடைஞ் சல் வரப்போகிறது. நீங்கள் கவனமாக இருப்பது நல்லது என்று மட்டும் சொல்லி வைத்தார்.

வசுதேவர் க்ஷத்திரியர், நந்தகோபர் வைசியர். இருப்பினும், இவர்கள் சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். தன் நண்பர், தனக்கு தந்த எச்சரி க்கையை மறக்காத நந்தகோபர் மிக கவனமா கவே இருந்தார். இதற்குள் கம்சன் குழந்தைக ளைக் கொல்வதற்குரிய ஏற்பாட்டை செய்து முடித்து விட்டான்.

சூன்யக்காரியான பூதனா என்பவளை அழைத் தான். குழந்தைகளை கொல்லும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். இப்படிப்பட்ட சூன்ய க்காரிகளை கேசரீ என்பார்கள். சூன்யம், தெய்வ வழிபாட்டில் ஊறிப்போனவர்களை தாக்காது. கோகுலத்திலும் அதுவே நிகழ்ந்தது.

பூதனா, கோகுலத்திற்குள் நுழைந்தவுடன் தன்னை பேரழகியாக மாற்றிக் கொண்டாள். முகத்தில் கனிவை படரவிட்டுக் கொண்டாள். அவளது அழகும், போலி சாந்தமும் அங்கிருந்த வர்களின் கண்களை ஏமாற்றி விட்டது. அவ்வூர் மக்கள் அந்தப் புதியவளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கவில்லை. நல்லவர்களின் கண்களுக்கு கெட்டது கூட நல்லதாகத்தான் தெரியும்,

இதைப் பயன்படுத்திக் கொண்டு தன் மார்பில் நஞ்சை தடவி பல குழந்தைகளை அவர்களது பெற்றவர்கள் அறியாமல் கொன்றாள். அவள் நந்தகோபரின் மாளிகைக்குள் நுழைந்தாள். அவள் மீது சந்தேகம் கொள்ளாத வாயிற்காவ லர்கள், அவள் யசோதையைப் பார்க்க வந்திருக்கலாம் எனக் கருதி தடுக்கவில்லை. யாரும் அறியாமல், கிருஷ்ணன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். குழந்தையை பார்த் ததும் பூதனாவின் மனதில் ஏதோ சஞ்சலம்.

அது சாதாரண குழந்தையாக தெரியவில்லை. ஏதோ ஒரு சக்தி அதனுள் மறைந்து கிடப்பதை புரிந்து கொண்டாள். இருப்பினும், கம்சனின் கட்டளையை அவளால் மீற முடியுமா ? குழந் தையை மடியில் வைத்தாள். அவள் மார்புக்கா ம்பை வாயில் திணித்தாள். கிருஷ்ணன் விஷப்பாலோடு அவளது உயிரையும் சேர்த்து குடித்தான்.

அவள் அலறினாள். கோகுலத்தையே அதிர வைத்தது அந்த அலறல். அது மட்டுமா,  அவள து அசுர உருவம் வெளிப்பட்டது. 12 மைல் நீளத்துக்கு அவளது உடல் நீண்டது. பூதனாவி ன் உடலை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கோகுலத்தையே அதிரச்செய்த அவளது அலறல் கேட்டு, யசோதையும் ரோகிணியும் இதர கோபியர்களும் ஓடிச் சென்று கிருஷ்ண ரை தூக்கினர். தங்கள் அன்புக்குழந்தையின் உயிர்காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு கண்ணேறு பட்டு விட்டது என எண்ணி பசுவின் வாலைப்பிடித்து குழந்தையின் உடலைச்சுற்றி திருஷ்டி கழித்தார்கள். 

பகுதி. இரண்டு

பசுக்கன்றுகளின் பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள் சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள்.

நாராயணின் 22 நாமங்க ளை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவ தில்லை என நம்பிய கோகுல மக்கள், மணி மான், யக்ஞர், அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா, விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா, குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா, ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா, யோகேஸ்வரா, புருஷோத்த மா, கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி, என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர்.

இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட, கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூ ட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்த து. அவளது உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.
நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதா னது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார்.

யசோதை குழந்தையை மடியில் வைத்திருந் தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டு மெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியி ன் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்று நேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார்.

அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர்.

யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர்,  இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான். எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களு க்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவை கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவ ர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினா ன். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன்.

இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுல த்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுல த்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பற ந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரை காணாமல் அழுதாள். ஐயோ,  என் மகன் புழுதி புயலில் சிக்கிக் கொண்டானோ,  அவன் எங்கே?..  என அரற்றினாள்.

த்ருணாவர்த்தன் உயரே சென்று குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே, குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசி கள் பார்த்தனர்.

கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வ குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக் கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளி தின்று கொண்டிருந்தார்.

யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தரு வேனே, ஏன் மண்ணைத் தின்கிறாய் ? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்பு களில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார்.

அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ, வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன் னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன் றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து உபசரித்து பின்பு நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டு மின்றி, ரோ கிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தை யும் கொடுத்தார்.

ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணி கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்ற தும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னரு கே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள்.

தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியி ருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர் பலராமனும் தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்தி ற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார்.

நந்தகோபரே, இக்குழந்தை சாதாரண பிறவி யல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவி யில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்ச ளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக் கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக் கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்க லாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தை யும் அவர் காட்டவில்லை.

மாறாக விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதை பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார் கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.

பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள்  அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள்.

யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா, உன்மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள்.

சரி... சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர் களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்யனும் என உத்தரவிட்டார்.

அப்போது அவர்கள், தந்தையே, நீங்கள் கூறும்  உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். மகா விஷ்ணு வை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார்.

அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியா ங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.

யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மன மெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடிய படியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள்.

அப்போது, அவளையறியாமல் அவளது மார் பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமெ ன்ற தன் ஆசையை குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார்.

அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப் பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத் தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார்.

ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக் கண்ணன். பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடு த்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந் திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்!

அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத் தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான்.

மாயனே, வசமாக சிக்கினாயா?,

வெண்ணெ யை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவா ய் போலும்,  என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சி த்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்து கட்டினாள்.

என்ன அதிசயம், எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப் பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், அந்தக் குறும்புக் காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.

தசாவதாரம் ஒன்பது கிருஷ்ண அவதாரம். நேற்றைய  தொடர்ச்சி...
கிருஷ்ண அவதாரம் பாகம் நான்கு
**********************************************************

பரந்தாமா நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன் மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண்டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனைத்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதானமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவையே அவை. இதில் முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதை கண்ட நாரதர் இருவரையும் அர்ஜுன மரமாகும் படி சபித்து விட்டார்.

மேலும் இருவரும் தேவர்கள் என்பதால் அவர்களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும் படி சபித்து விட்டார். பகவான் நாராயணன், கிருஷ் ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும் போது தான் உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெருங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி இனி தவறு செய்வதில்லை என உறுதியளித்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும் கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதரரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.

கோபாலர்களே! கிருஷ்ணன் அரக்கர்களிடமிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால் எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும் நாம் கோகுலத்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைக ளைத் தருவான். அதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நம் செயல்களை மாற்றி கொள்ள வேண்டும். எனவே நாம் யமுனை நதிக்கரையிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில் நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்றனர்.அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர்.

குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவனம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திருந்தது.  மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம். ஒவ்வொருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடி தான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள். இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.

ஒருமுறைகம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அவன் கன்று குட்டியாக உருமாறி கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன் காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான். அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளை பிளந்து கிருஷ்ணர் கொன்றார். ஒரு முறை அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன். அவனைக் கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட பயந்த நிலையில் இருந்தனர். அகாசுரன் பூமியில் கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான். கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை. இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக் கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம் ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ள முடியும்.

அகாசுரன் தன் உருவத்தை பன்னிரெண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு பெரிதாக்கி ஒரு பாம்பின் வடிவெடுத்து கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கொல்ல வந்தான். கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கன்று மேய்க்க வந்த சிறுவர்கள் ஒரு சர்ப்பம் வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில் ஒருவன் சொன்னான்.  இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால் தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள். அவனை இந்தப் பாம்பு விழுங்கி விட்டால் அவர்களின் நிலைமை என்னாவது? மேலும் கஷ்ட காலத்தில் நண்பனைக் காப்பாற்றுபவனே உண்மையான தோழன். இந்த பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக் கொண்டு போய் விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான். எல்லா தோழர்களும் ஆஹா... அருமையான யோசனை என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்று விட்டனர்.

பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட்டார். அவர் நின்ற நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும்.  ஆனால் மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே அந்த எல்லையை அவ்வப்போது அவர் கடைபிடிக்கத்தான் செய்வார். தன் நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார். சதிகார பாம்பு வாயை மூடிவிட்டது. வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கி விட்டனர். கிருஷ்ணர் இல்லா விட்டால் தங்கள் கதி என்னாவது என்று.. வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர் அவர்களை தன் கருணைப் பார்வையால் அமைதிப்படுத்தினார். பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன் வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது. கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர். வயிறு கிழிந்த பாம்பு இறந்தது. கிருஷ்ணரின் பாதம்பட்ட காரணத்தால் அதன் உயிரொளி அவரிடமே கலந்தது. நண்பர்களைக் காத்த கண்ணன் தன்னைக் கொல்ல வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.

ஒரு சமயம் கிருஷ்ணர் யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அன்று பலராமன் உடன் வரவில்லை. அந்த ஆற்றில் காளிங்கன் என்ற நாகம் வசித்தது. அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கரைகளில் நின்ற பெரும்பாலான மரங்கள் அதன் விஷக் காற்று பட்டு கருகி விட்டன. காளிங்களின் இந்தப் போக்கு கிருஷ்ணருக்கு கோபத்தைத் தந்தது. ஆனாலும் கரையில் ஒரே ஒரு மரம் மட்டும் பச்சை பசேலென கிளைகளுடன் உயரமாக நின்றது. இந்த மரத்தில் கிருஷ்ணர் பிற்காலத்தில் ஏறுவார் எனத்தெரிந்து கருடபகவான் அதன் மீது அமிர்தத்தை தெளித்து வைத்திருந்தாராம். அதனால் அது அழியவில்லை. அந்த மரத்தின் மீதேறிய கிருஷ்ணர் தண்ணீரில் குதித்தார்.

தண்ணீர் சிதறியது அப்போது ஏற்பட்ட நீரலைகள் பல மிக்க காளிங்கனையே அசைத்தது. அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒரு சிறுவன் தண்ணீரில் குதித்து தன்னை இம்சை செய்ததைக் கண்ட காளிங்கன் ஆத்திரத்துடன் கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணரின் அழகு அவனைக் கவர்ந்து விட்டது. அப்படியே அதிசயித்து பார்த்தான். இருப்பினும் தன் ஆக்ரோஷத்தை காட்டி அவரை வளைத்தான். கிருஷ்ணர் தன் பலத்தைப் பிரயோகித்து விடுபட்டு அவனது தலையில் ஏறி நர்த்தனமாடினார். அப்போது அவரது பாதங்களின் வலிமையை உணர்ந்தான் காளிங்கன். ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவும் தாங்க முடியாத வலியைத் தர ஒவ்வொரு தலையாக உயர்த்தி தாக்குப் பிடித்தான். ஒரு கட்டத்தில் வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது காளிங்கனின் பத்தினியர் அவர் பகவான் நாராயணின் அவதாரம் என்பதைத் தெரிந்து ஓடி வந்தனர்.

இங்கே இப்படி இருக்க கரையில் நின்ற நண்பர்கள் கிருஷ்ணர் நீரில் குதித்து காளிங்கனால் இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்து யசோதையிடம் தகவல் சொன்னார்கள். அவள் பதறியடித்து வந்தாள். பலராமனுக்கு தெரியும் காளிங்கனின் கதை முடிந்து விடுமென்று. எனவே அவன் பதட்டமின்றி வந்தான். யாசோதை தண்ணீரில் குதிக்க முயன்றாள். என் மகனை இழுத்திச் சென்ற அந்த பாம்பு என்னையும் இழுத்துச் செல்லட்டும் என்றாள். யசோதயை கரையில் நின்ற கோபியர்கள் பிடித்து இழுத்து வந்தனர். அவள் மூர்ச்சையாகி விட்டாள். காளிங்கனின் பத்தினிகள், கிருஷ்ணரிடம் சென்றனர்.

மகாபிரபு உமது சக்தியை அறியாமல் எங்களது கணவர் உம்மிடம் தவறு செய்து விட்டார். அவரை ரட்சிக்க வேண்டும். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும் என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. கிருஷ்ணர் கரைக்கு வந்த பின்னர் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அவரிடம் முன்வினைப்பட்டது. நான் கொடுத்து வைத்தவன். கடிப்பதும் சீறுவதும் எனது இயற்கை குணம். அது உம்மால் தரப்பட்டது. அதை உம்மால் தான் மாற்ற முடியும். எனவே நான் சீறியது குறித்து கவலை ப்பட வில்லை. இருப்பினும் மகாபிரபு தண்டிக்க நினைத்தாலும் அதையே ஏற்கிறேன்  என்றது பணிவுடன்.

உடனே கிருஷ்ணர், காளிங்கா நீ உனது மனைவி, குழந்தை மற்ற சகாக்களுடன் கடலுக்கு போய்விடு. யமுனையை அசுத்தப்படுத்தாதே. பசுக்களும், சிறுவர்களும் அதை குடிக்கிறார்கள். அதில் விஷத்தன்மை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன். நீ கருடனுக்கு பயந்தே இங்கு வந்தாய். இப்போது நான் நடனமாடியாதால் ஏற்பட்ட குறிகள் உன் தலையில் உள்ளன. இதைப் பார்க்கும் கருடன் உன்னை ஏதும் செய்யமாட்டான் என்றார். காளிங்கனும் அதை ஏற்று கடல் நோக்கி போய் விட்டது. கோகுல மக்கள் நிம்மதி பெற்றனர். கிருஷ்ணரின் உறுதியான மனம், வீரம், அலங்காரம் ஆகியவை கோபியர்களை பெரிதும் கவர்ந்திருந்து. பல சிறுமிகள் கிருஷ்ணன் தனக்கும் கணவனாக மாட்டானா என எண்ணத் துவங்கினர். அவரது புல்லாங்குழல் இசையால் ஈர்க்கப்படும் அவர்கள் தங்களை மறந்து நிற்பார்கள்.

சில சமயங்களில் அவர்களது ஆடைகள் விலகியோ, நெகிழ்ந்தோ இருக்கும். ஆனால் இசையிலும் கிருஷ்ணரின் அழகிலும் லயித்து போகும் அவர்கள் இவ்வாறு ஆடை நெகிழ்ந்தது கூட தெரியாமல் அவரையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பார்கள். அப்பகுதியில் வசித்த பழங்குடி இனப்பெண்களும் கிருஷ்ணரை காதலித்தனர். கிருஷ்ணர் நடந்து செல்லும் போது அவரது திருவடிப்பட்டு மண் சிவந்து போகும். அந்த சிவந்தமண்னை எடுத்து குழைத்து தங்கள் மார்பிலும், முகத்திலும் பூசிக்கொள்வார்கள் பழங்குடிப் பெண்கள். அவர்களுக்கு ஏற்கனவே காதலர்களே கணவர்களோ உண்டு. இருப்பினும் அவர்கள் தொட்டால் தீராத காம இச்சை கிருஷ்ணரின் காலடிபட்ட மண்ணை எடுத்து மார்பில் தடவினால் அடங்கிப்போகும். இது தவறில்லையா? பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வுடன் வாழ வேண்டாமா? என கேட்பீர்கள்.

அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வுடன் தான் வாழ்ந்தார்கள், ஆனாலும் காமம் குறையவில்லை. கிருஷ்ணரின் காலடி பட்டமண் உடலில் பட்டதும் காம இச்சை தீர்ந்து விடுகிறது. அதாவது காமம் மிகுந்தவர்கள் பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்தால் போதும். காமம் என்ற பேய் உடலில் இருந்து பறந்து விடும் என்பதே இதன் தாத்பர்யம். மேலும் கோபியர் கிருஷ்ணரின் நினைவிலேயே மூழ்கிக்கிடந்தனர். கடவுளின் நினைப்பில் மூழ்கிக் கிடப்பது எவ்வகையிலும் தவறாகாது. இப்போதும் இது தொடரத்தான் செய்கிறது. திருமணத்துக்கு முன்னும் பிறகும் நம் பெண்கள் சிவனையோ திருமாலையோ முருகனையோ உள்ளன்போடு வணங்கத்தான் செய்கிறார்கள். அது பக்தி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர ஒரு ஆணுடன் கொண்ட உறவாகக் கொள்ளப் படாது. காமம் என்ற உணர்வு கிருஷ்ணனை நினைத்தாலே போய் விடும். காமம் நீங்கிவிட்டால் உலகில் பிறப்புகளே இருக்காதே. மீண்டும் பிறக்கக்கூடாது. கிருஷ்ணனுடன் கலந்திருக்க வேண்டும் என்பதே கோபி கிருஷண காதல் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

கிருஷ்ணர் யமுனையில் அதிகாலையில் குளிக்கும் பெண்களின் பின்னால் செல்வார். ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொள்வார். கோபியர் தங்கள் ஆடைகளை முழுமையாகக்களைந்து விட்டு ஆற்றில் இறங்கி நீராடினார்கள். கோபியர் கரையில் கழற்றி வைத்திருந்த ஆடையை எடுத்து மரப்பொந்தில் ஒளித்து வைத்தார் கிருஷ்ணர். கரைக்கு வந்த கோபியர் ஆடையைக் காணாமல் தவித்தனர். எப்படி வீட்டுக்குச் செல்வது என தவித்த வேளையில் உங்கள் ஆடைகள் என்னிடம் உள்ளன என மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. கோபியர் நிமிர்ந்து பார்த்தனர். மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கிருஷ்ணரை கண்டு வெட்கப்பட்டனர். கண்ணா பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை? போதாக்குறைக்கு எங்கள் ஆடைகளையும் கவர்ந்து கொண்டாய். இப்போது நாங்கள் எப்படி மேலே வருவது? என்றாள். கிருஷ்ணர் கலகலவென சிரித்தபடியே நானாகவே இந்து வந்தேன். நீங்கள் என்னை மனதில் நினைத்தீர்கள் என்னைப் பற்றி பாடினீர்கள். என்னையே அடைய வேண்டுமென மனதார வேண்டினீர்கள். அது எனக்கு கேட்டது வந்தேன் என்றார். இது நிஜம் தானே? கோபிகைகளால் அவருக்கு பதிலளிக்க முடியவில்லை.

இருந்தாலும் உடைகளைப் பெறும் பொருட்டு அதற்காக நாங்கள் ஆடைகளை எப்படி மேலே வந்து பெற முடியும். நீயாக கீழே வைத்து விட்டு போய் விடு என்றனர். கோபியரே ஒரு பெண் கணவனைத்தவிர பிறர் முன்னிலையில் ஆடையின்றி இருக்கலாகாது. நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென துர்க்கையை வழிபட்டு விரதம் இருந்தீர்கள். உங்கள் கணவனாகிய என் முன்னால் வருவதற்கு என்ன வெட்கம்? வாருங்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். அவர்கள் தயங்கவே பெண்களே ஆடையின்றி தண்ணீரில் இறங்குவது குற்றம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயலால் வருணன் கோபமடைந்துள்ளான்.  எனவே நீங்கள் வருணனை நினைத்து மன தார வணங்கி இனி இவ்வாறு ஆடையின்றி குளிக்கமாட்டோம். எனச் சொல்லி அவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மேலே வந்து ஆடையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றான். இப்படி கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நாரத முனிவர் கம்சனை அழிப்பதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்தார். அவர் நேராக கம்சனிடம் சென்றார்.

கம்சா சவுக்கியமாக இருக்கிறாயா? உன் சவுக்கியம் நீண்டு நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால் நீயோ உன்னை அழிக்கப்போகும் கிருஷ்ணனும், பலராமனும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதை அறியாமாலேயே இருக்கிறாய். அவர்களை சீக்கிரம் கொன்று விடு. இல்லா விட்டால் உன் அழிவை யாராலும் தடுக்க இயலாமல் போய்விடும் நீ சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும் உன்மீது நான் அக்கறை கொண்டவன் என்பதாலும் சொல்கிறேன். உன்மீது ஏமாற்றிய வசுதேவரையும் நந்தகோபனையும் விட்டு விடாதே என்றார். கம்சனும் அவரது கருத்தை ஆமோதித்து வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதாகச் சொன்னான். நாரதர் தன் கடமை முடிந்த திருப்தியுடன் சென்றார். கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்குரிய ஏற்பாடுகளைத் துவங்கினான். சிவசக்தியான காலபைரவருக்கு மிருகபலி கொடுத்தான். சில யாகங்களையும் செய்தான். கிருஷ்ணர் வளர்ந்து கொண்டிருக்கும் யது வம்சத்தைச் சேர்ந்த அக்ரூரர் என்பவரை அழைத்து அன்பு நண்பரே விருந்தாவனத்தில் வசிக்கும் கிருஷ்ணர், பலராமன், வசுதேவர், நந்கோபர், எனது தங்கை தேவகி எனது தந்தை உக்கிர சேனன், சித்தப்பா தேவகன் ஆகியோரைக் கொல்லப் போகிறேன்.

எனது அரசியல் காரியங்களில் என் தந்தை தலையிடுவதால் அவரையும் கொல்ல வேண்டியுள்ளது. எதிரிகளே இல்லாத நிலையில் இவ்வுலகை சிரமமின்றி ஆள்வேன். எனக்கு என் மாமனார் ஜராசந்தன், துவிவிதா என்ற குரங்கு அரசன், சம்பரன், நரகாசுரன், பாணாசுரன் என்ற எனது நண்பர்கள் உதவுவர் நீங்களும் உதவ வேண்டும் என்றான். அக்ரூரர் அவன் சொல்வதைக் கேட்டு எம்மாதிரியான உதவி என்றார். அக்ரூரரே கிருஷ்ண பலராமர்களை இங்கே ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள். அவர்கள் வரும் வழியில் குவலயாபீடம் என்ற யானையை அவிழ்த்து விடுவேன். அது அவர்களைக் கொல்லும். ஒருவேளை தப்பி விட்டால் எனது மல்யுத்த வீரர்கள் கொல்வார்கள் என்றான். அக்ரூரர் கிருஷ்ணரின் பக்தர் அவருக்கு கம்சன் சொன்னது பிடிக்கவில்லை. இருப்பினும் கம்சனே உன் நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். திட்டம் தீட்டுவது மனித அறிவு. அதை வெற்றி பெற செய்பவன் இறைவனே ஒருவேளை இவ்விஷயத்தில் நீ தோற்றுப்போகலாம். நல்லதைச் சொல்லவே ண்டியது நண்பனின் கடமை என்பதால் சொன்னேன். இருப்பினும் உனக்காக கிருஷ்ணரிடம் சென்று அவரை அழைத்து வருகிறேன் என்றார்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

நாளை தொடர்வோம்.... 
96 வகை சிவலிங்கங்கள்!

ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.

ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம்.

அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்! ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.

கட்டுரை. தொகுப்பு.
குமார் ராமநாதன்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

"சுபமஸ்து"
*லிங்க புராணம் ~ பகுதி  — 04*

*அரி, அயன் கண்ட ஜோதி*
 ======================

பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி., நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரம்மன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். *"நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான்."*
*"ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன்."* இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அச்சமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட., அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி., அடி காண முடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக., ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது *ஈசானம்., தத்புருஷம்,, அகோரம்,, வாமதேவம்,, சத்தியோஜாதம்* என்ற ஐந்து முகங்களுடன்., ஆறாவதாக *அதோமுகம்* சூட்சும முகத்துடனும்., ஜடை பிறைச் சந்திரன்., கைகளில் மான்., மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்ந்து., கரம்கூப்பி., ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும்., இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன்., கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள் பாலித்தார் பரமன். மாதவனிடம்., பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடரும்.....

*கனக மஹாமணி பூஷித லிங்கம்*
*பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |*
*தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்...

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை                                       
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை...