சனி, 7 செப்டம்பர், 2019

274 சிவாலயங்கள்  அருள் மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்

மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
உற்சவர் : கரும்பேஸ்வரர்
அம்மன் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : வேத தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு
ஊர் : திருக்கானூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்,தேவாரப்பதிகம்

நீரும் பாரம் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே. திருநாவுக்கரசர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 56வது தலம்.

விழா : ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மூலம், தைப்பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.  
      
திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும். திருக்காட்டுப் பள்ளியில் உள்ள குருக்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு அதன்பின் கோயிலுக்கு செல்லலாம். அருள் மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், விஷ்ணம்பேட்டை - 613 105 திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுக்கா,தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91-4362-320 067, +91- 93450 09344. 
     
தகவல் : கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை : திருமணத்தடை உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 
     
நேர்த்திக்கடன் : உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர். 
     
பெருமை : ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. கரிகால் சோழன் வாழ்ந்த ஊர்: ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

ஸ்தல வரலாறு : ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றார்.  திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு "சத்திரிய தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு ஆலந்துறையார் திருக்கோயில்

மூலவர் :ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் : அருந்தவ நாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழுவூர்
ஊர் : கீழப்பழுவூர்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்  : திருஞான சம்பந்தர்,தேவாரப்பதிகம்

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர்
மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே. திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம்
 
திருவிழா:பங்குனி உத்திரம்  
      
ஸ்தல சிறப்பு : இத்தல சிவனுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம்.போன்:+91- 99438 82368 
     
தகவல் : முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூதலிங்கங்கள், மகாலட்சுமி, லிங்கோத்பவர், அறுபத்து மூவர், சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை : பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. 
     
பெருமை : "பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் "திருப்பழுவூர்' என பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு : கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார். அதன் படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

மூலவர் :  வைத்தியநாதசுவாமி
அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் பூஜை : காமிய ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி
ஊர் :  திருமழபாடி
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்,தேவாரப்பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. சுந்தரர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.  
      
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம்.போன்:+91 04329 292 890, 97862 05278. 
     
பொது தகவல் : இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

பிரார்த்தனை : கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர். 
     
தலபெருமை : இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

ஸ்தல வரலாறு : திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்க போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன் : சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :திருப்பெரும்புலியூர்
ஊர் : திருப்பெரும்புலியூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்

தோடுடையார் குழைக்காதில் சுடுபொடி யாரனலாடக் காடுடையார் எரிவீசும் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடையார் பொருளின்பம் நல்லவை நாளும் நயந்த பீடுடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே. திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 53வது தலம்.
 
விழா : மகா சிவராத்திரி  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் இரவு 11 மணி மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 94434 47826,+91- 94427 29856 
     
தகவல் : 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில். பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராஹி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன.
 
பெருமை : நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள் பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு : புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது.
நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்

மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் : கிருதபுரீஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
ஆகமம் பூஜை  : காரண ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநெய்த்தானம்
ஊர் :  தில்லைஸ்தானம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்,தேவாரப்பதிகம்

 பறையும்பழி பாவம் படுதுயரம் பலதீரும் பிறையும் புனல்அரவும் படுசடை எம்பெருமானூர் அறையும் புனல் வருகாவிரி அலைசேர் வடகரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே. திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 52வது தலம்.  
      
திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் - 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 4362-260 553. 
     
தகவல் : கிழக்குநோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகரம் விசாலமானது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

பெருமை : அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,"ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே' என பாடுகிறார்.  ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர். காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.  இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார். இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டு திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், ""இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்,''என வேண்டினார். இறைவன் அசரீரியாக,""நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்கு கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்,''என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோயில்

 மூலவர் : ஐயாறப்பன்
அம்மன் : தரும சம்வர்த்தினி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவையாறு
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்.தேவாரப்பதிகம்

''புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே''. -சம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம்.     
     
தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது. அம்மனின் சக்தி பீடங்களில் இது தர்ம பீடமாகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு - 613 204 தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-436 -2260 332, 94430 08104 
     
பொது தகவல் : இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

பெருமை : இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னதி சுற்ற தடை : இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி: சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி' என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது.வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பதுபற்றி ஆய்வு செய்தனர். ஆனால், இதற்கான காரணத்தை அறிய முடிய வில்லை. நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

தல வரலாறு : நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை. சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.  
வரவிருக்கும் பண்டிகைகள்

09:08:19     வரலக்ஷ்மி விரதம்
15:08:19     யஜுர் & ரிக் உபாகர்மா
16:08:19     காயத்ரீ ஜபம்
23:08:19     கோகுலாஷ்டமி
02:09:19     விநாயகர் சதுர்த்தி & ஸாம உபாகர்மா
14:09:19     மஹாளயம் ஆரம்பம்
28:09:19     மஹாளய அமாவாஸ்யை
07:10:19     சரஸ்வதி பூஜை
27:10:19     தீபாவளி
15:01:20     பொங்கல் பண்டிகை   நேரம் காலை 09:00 ; 10:00
14:03:20     காரடையான் நோம்பு  நேரம் காலை 10:45 ; 12:00

சந்தோஷம் முகநூல் +91 98408 63652
தர்ப்பணம்

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த மதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.
ஆவணி அவிட்டம்

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்

சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக

இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்

உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்

கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்

போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்

சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை

அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்

கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய

அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்

மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய

நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்

போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று

சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்

கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்

என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.

உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த

ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்ட

நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்

பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்

ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள்

ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு

வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்

முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்

உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று

தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண

ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்

தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட

உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை

ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை

நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய

வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து

முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து

விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று

ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை

மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்

அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்

கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது

எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே

முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்

கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை

ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது

போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்

வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்

ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து

இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்

காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு

இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,

காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி

இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ

மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்

இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ

ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்

அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக

புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை

ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்

வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்

தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்

செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே

வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து
விடுகிறது.
ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம்- இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். கைகூப்பி:
ததேவ லக்னம், ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ
லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி
வடகலையார்: - (அஹோபில மடம் சிஷ்யர்கள்)
யஸ்யாபவது, பக்த ஜனார்த்தஹந்து, பித்ருத்வ மன்யேஷ்வ விசார்யதூர்ணம்,
ஸ்தம்பேவதார தமனன்யலப்யம், லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே.

வடகலையார் (பொது):

******அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச நமோவாகே மதீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ஸ்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸர்வபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.

ஐயங்கார் - வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) - எல்லோருக்கும் பொது :
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே
யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே
 என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்:
ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே,  ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே -
விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, க்ரீஷ்ம ரிதௌ, கடக மாஸே, சுக்ல பக்ஷே, பௌர்ணமாஸ்யாயாம் ஸுப திதௌ,
குரு வாஸர, ச்ரவண/ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், ஸௌபாக்ய யோகே, பவ கரணே, அஸ்யாம் பௌர்ணமாஸ்யாயாம் ஸுபதிதௌ,

ஸ்ரீ பகவதாக்ஞா
>> ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம் (வடகலயார்)
>> பகவத் கைங்கர்ய ரூபம் (தெங்கலயார்) *****
>> பார்வதீ பரமேஸ்வர ப்ரீதியர்த்தம் (ஐயர் – ஸ்மார்த்தாள்)******

முதல் பூணல் மாற்ற -
மம ஸ்ரௌதஸ்மார்த்த விதி விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்தியர்த்தம், ப்ரம்ம தேஜ: அபிவிருத்தியர்த்தம்,  யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, யக்ஞோபவீத தாரணே வினியோக:
"யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
க்ரஹஸ்தர்களுக்கு இரண்டாவது பூணல் அணிய : -
கார்க்க ஸிதியர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம்ச கரிஷ்யே என்று ஸங்க்கல்பித்துகொண்டு -
யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மாரிஷி: த்ருஷ்டுப்சந்த: த்ரயீ வித்யாதேவதா, த்விதீய யக்ஞோபவீத தாரணே வினியோக:
"யக்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதிம் யஸ்சகஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம், ப்ரதிமுஞ்சசுப்ரம், யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: “
------------------------------------------------------------------------------------------------------------
காமோகாரிஷத் ஜபத்திற்கு ::
மீண்டும் மேற்கண்ட திதி வார நக்ஷத்ர ஸங்க்கல்பத்தை கூறி (*****____***** இக்குறியிட்ட ஸங்கல்பம் மேலே உள்ளபடி)   தொடரவும்
...தைஷ்யாம் பௌர்ண்மாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜன அகரண ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர (1008 முறை ஜபிக்க) (அஷ்டோத்ர ஸத – 108 முறை ஜபிக்க) ஸங்க்யா காமோகாரிஷத், மன்யுகார்ஷித் இதி மந்த்ர ஜபம் கரிஷ்யே.
1008 அல்லது 108 முறை “காமோகாரிஷத், மன்யுகார்ஷித்” ஜபிக்கவும்.
பிறகு ஸேவித்து அபிவாதனம் செய்யவும்.
------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரவண ஸங்கல்பம் – நவகாண்டரிஷி தர்ப்பணம்
மறுபடியும்  *****_______***** இக்குறியிட்ட ஸங்க்கல்பத்தை மீண்டும் சொல்லி … க்ஷேத்ரே, ஸ்வாமி ஸன்னிதௌ,

    ஸ்ராவண்யாம் பௌர்ண்மாஸ்யாம் அத்யாயோபகர்ம கரிஷ்யே,
    ததங்கம் காவேரி ஸ்னானமஹம் கரிஷ்யே
    ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே
    ததங்கம் மௌஞ்சீ அஜின தாரணானி கரிஷ்யே
        (இது ப்ரம்மச்சாரிகளுக்கு மட்டும்)
    ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே.

மேற்கண்டபடி ஸங்க்கல்பித்து, ப்ரம்மச்சாரிகள் மொஞ்சீ, தண்டு அணிந்து, பூணலை மாலை போலணிந்து, அரிசி+கருப்பு எள் கலந்து, இரண்டு கைகளின் நுனி சுண்டுவிரல்கள் வழியாக வழியுமாறு, ரிஷி தீர்ததை கீழ் கண்ட மந்த்ரத்தை சொல்லி, மூன்று முறை தர்ப்பிக்கவும்:

    ப்ரஜாப்திம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸோமம் காண்டரிஷிம் தர்ப்ப்யாமி (மூன்று முறை)
    அக்னிம் காண்டரிஷிம் தர்ப்ப்யமாமி (மூன்று முறை)
    விஸ்வாந்தேவான் காண்டரிஷிம் தர்ப்பயமி (மூன்று முறை)
    ஸாம்மிஹீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)
    யாக்ஞிகீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)
    வாருணீர் தேவதா உபனிஷத் தர்ப்பயாமி (மூன்று முறை)

கீழ்கண்ட மந்த்ரத்தை சொல்லி, கைகளை சற்றே உயர தூக்கி, ரிஷி தீர்த்தம் கைகளின் மணிக்கட்டு வழியாக் விடவும்

    ப்ரம்மாணக்குஸ்வயம் புவம் தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸதசஸ்பதீம் தர்ப்பயாமி

பின்னர், குல-குடும்ப வழக்கப்படி, மூன்று முன்போல்,  இரண்டு கை சுண்டுவிரல் வழியாக விழும்படி கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி தீர்த்தம் விடவும்:
வேதம் தர்ப்பயாமி, இதிஹாஸம் தர்ப்பயாமி, புராணம் தர்ப்பயாமி, கல்பம் தர்ப்பயாமி, வ்ருக்ஷம் தர்ப்பயாமி.
(தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும், பித்ரு தர்ப்பணம் தொடரவும்.  மற்றவர்கள் , பவித்ரத்தை கழற்றி பிரித்துவிட்டு, இரண்டு முறை ஆசனமம் செய்து, பெரியோர்களை ஸேவித்து ஆசி பெறவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

தகப்பனாரில்லதவர்கள் மட்டும், கீழ்கண்ட பித்ரு தர்ப்பணம் செய்யவும்

பூணலை ப்ராசீனாவீதமாக மாற்றிகொண்டு, வலதுகை கட்டை விரல் வழியாக அமாவஸை/மாஸப்பிறப்பு  தர்ப்பணம் செய்வதுபோல், தீர்த்தம் விட்டு, மூன்று முறை தர்ப்பிக்கவும்:

    ஸோம: பித்ருமான், யமோ: அங்கீரஸ்வான் அக்னிம் கவ்யவாஹனாதாய,
    யேபிதர: தான் பித்ரூன் தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸர்வான் பித்ருகணான் தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸர்வான் பித்ரு பத்னீ தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஸர்வான் பித்ருகணபத்னீ தர்ப்பயாமி (மூன்று முறை)
    ஊர்ஜம்வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய:; கீலாலம்பரிஸ்ருதம், ஸ்வதாஸ்த தர்ப்பயதமே, அஸ்மத் பித்ரூன் (ஓரே ஒரு முறை மட்டும்).

உபவீதம், பவித்ர விஸர்ஜனம், ஆசமனம்.
____________________________________________________________________________ 
                                                                   ஸுபம்
____________________________________________________________________________
ஸமிதாதானம்   பிரம்மசாரிகள் மட்டும் செய்ய வேண்டும்

காலை ஸ்நானம் செய்துவிட்டு மடி உடுத்தி ஸந்த்யாவந்தனம் செய்த பிறகு செய்ய வேண்டும். ஆசமநம் செய்யவும். சுக்லாம் பரதரம் ..... சாந்தயே. ஓம் பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரோம்| மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வரப்ரீத்யர்த்தம் {காலையில்} ப்ராத: ஸமிதாதானம் கரிஷ் {மாலையில்} ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே| என்று சொல்ல வேண்டும். {அபஉபஸ்ப்ருஸ்ய} ஜலத்தை தொடவும் அக்னியை ஜ்வலிக்க செய்து பூர்ப்புவஸ்ஸுவரோம் {இதி} அக்னிம்ப்ரதிஷ்டாப்ய ஒரு சமித்தை வைக்கவும். கையை கூப்பி கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி அக்னியை ப்ராத்தனை செய்யவும். பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்
ஸுவீர: வீரை: ஸுவர்ச்சா: வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹ: க்ருஹை: ஸுபதி: பத்யா ஸுமேதா மேதாய ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி:| தேவஸவித: ப்ரஸுவ என்று அக்னியை ஜலத்தினால் ப்ரதக்ஷிணமாக சுற்றவும். கீழ் வரும் மந்திரம் முடிவில் ஸ்வாஹா என்று சொல்லிய பிறகு ஸமித்தை ஒவ்வொன்றாக கிழக்கு நுனியாக வைக்கவும்.

01)ஒம் அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதாத்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யாமேதயா ப்ரஜயா பசு பி: ப்ரஹ்ம வர்ச்சஸேன அந்நாத்யேன ஸமேதய ஸ்வாஹா.
02) ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
03)ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
04)தேஜோஸிதேஜோ மயிதேஹி ஸ்வாஹா
05)அபோ அத்ய அந்வசாரிஷகும்ரஸேந ஸம ஸ்ருக்ஷ்மஹிபயஸ்வான் அக்ந ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜவர்சாசஸா ஸ்வாஹா
06)ஸம்மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தநேந ச ஸ்வாஹா
07)வித்யுந்மேஅஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி:  ஸ்வாஹா
08)அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
09) த்யாவா ப்ருதிவீ ப்யாகும் ஸ்வாஹா
10) ஏஷாதே அக்நே ஸமித்தயா வர்த்தஸ்வ ச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்த்தமாநோ பூயாஸம் - ஆப்யாயமாநஸ் ச ஸ்வாஹா
11) யோமாக்நே பாகிநகும்ஸந்தம் – அதா பாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குருமாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா
12)ஸமிதமாதாய அக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகும் ஸ்வாஹா
 ( என்று ஸமித்தை அக்னியில்  சேர்த்த பிறகு )
தேவஸவித: ப்ராஸாவீ: என்று ஜலத்தால் அக்னியை ஒரு முறை சுற்றி விடவும். பிறகு "ஸ்வாஹா"  ( என்று கூறி ஸமித்தை அக்னியில்  சேர்க்கவும்  )

உபஸ்தானம்:-  ”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” என்று கூறி உபஸ்தானம் செய்ய எழுந்து நின்று, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி  பகவானைப் ப்ரார்த்திக்கவும்) யத்தே அக்நே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம் மயி மேதாம் மயிப்ஜாம் மய்யக்நி: தேஜோ த்தாது, மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர:  இந்த்ரியம் த்தாது, மயி மேதாம் மயி ப்ரஜாம் மயிஸூர்யோப்ராஜோ த்தாது, அக்நயே நமஹ  மந்த்ரஹீநம்  க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாச’ன யத் ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் த்தஸ்து தே, ப்ராயச் சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநிலை, யாநிதேஷாமசே ஷாணாம், ஸ்ரீக்ருஷ்ண அனுஸ்மரணம் பரம், ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, (என்று சொல்லிநமஸ்காரம் செய்யவும்) பிறகு அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

 ரக்ஷா மந்த்ரம் : “மானஸ்தோகே தநயே மாந ஆயுஷமாநோகோஷுமாநோ அச்’வேஷீரீ ரிஷ: வீராந்மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ்மந்தோ நமஸாவிதேமதே மேதாவீ பூயாஸம் (நெற்றில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரஹ்வ்வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) அந்நாதோ பூயாஸம் (நாபியில்) ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) இட்டுக்கொண்டு கை அலம்பி, அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரஜ்ஞாம், வித்யாம், புத்திம். ச்’ரியம், பலம், ஆயுஷ்யம், தேஜ: ஆரோக்யம் தேஹி மே, ஹவ்யவாஹந ச்’ரியம் தேஹி மே, ஹவ்யவாஹன ஓம் நம: இதி (என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) ‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து” என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.
                                        ஸமிதாதனம் முற்றிற்று.
___________________________________________________________________________
                                      காமோ கார்ஷீத் ஜப ஸங்கலபம்
       ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது
     (முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)

ஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில்  போட்டுக் கொண்டு 4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.

                                          விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

                                                ப்ராணாயாமம்;.                                                               ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக  ஐதிகம் )

                                               ஸங்கல்பம் மந்திரம்
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஸூர்த்தே, அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்ததே ச்’வேத வராஹ கல்பே ,வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரததே  பாதே, ஜம்பூத்வீபே, பாரவர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.

விஜய நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே, சதுர்தச்’யாம் (10.30 காலை வரை) பின் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ, பௌம வாஸரயுக்தாயாம், ச்’ரவண நக்ஷத்ரயுக்தாயாம், ஸௌம்ய நாமயோக, வணிஜை  (10.30 காலை வரை) பின் பவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்’சித்தார்த்தம், அஷ்டோத்திர ஸஹஸ்ர, ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) “காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன்”  இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)

(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து)  ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து ( என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் ) இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.

                                              மஹா ஸஹ்கல்பம்
(2-புல் தர்ப்பை பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4-கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும். (பின்)

                                            விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

                                                  ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக  ஐதிகம் )

                                               ஸங்கல்பம் மந்திரம்
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ததேவ லக்னம் ஸுதினம் ததேவ,  தாராபலம் சந்த்ரபலம் ததேவ! வித்யாபலம் தைவ பலம் ததேவ,  லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி !! அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய: ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்’ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் ச’திதமே, கலியுகே –ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ:  தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே

விஜய நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சு’க்ல   பக்ஷே சதுர்தச் யாம் (10.30 காலை வரை) பின் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ பௌம வாஸரயுக்தாயாம், ச்’ரவண நக்ஷத்ரயுக்தாயாம், ஸௌம்ய நாமயோக, வணிஜை (10.30 காலை வரை) பின் பவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.

அனாதி அவித்யாவாஸனயா ப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதி ஸம்ஸார சகரே, விசித்ராபி:  கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசே ஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜன்ம விசே’ஷம், பராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம், பால்யே, வயஸி, கௌமாரே,யௌவனே, வார்த்தகே ச ஜாக்ரத், ஸ்வப்ந, ஸுஷுப்தி அவஸ்த்தாஸு, மனோ வாக்காய, கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய வ்யாபாரைச்ச ஸம்பாவிதானம் இஹ ஜன்மனி, பூர்வ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ஜ்ஞானத:  அஜ்ஞானத: க்ருதானாம், மஹா பாதகானாம், மஹாபாதக அனுமந்த்ரத்வாதீனாம், ஸமபாதகானாம், உப பாதகானாம், நிந்தித தனாதான உபஜீவனாதீனாம்,  அபாத்ரீகரணானாம், ஜாதி ப்ரம்ச கராணாம், விஹிதகர்ம த்யாகாதீனாம், ஜ்ஞானத: ஸக்ருத்க்ருதானாம், அஜ்ஞானத:  அஸக்ருத்க்ருதானாம், ஹர்வேஷாம் பாபாநாம், ஸத்ய:  அபனோதனார்த்தம், பாஸ்கர க்ஷேத்ரே விநாயகபதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, ச்’ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யா யோபாகர்ம கரிஷ்யே, த்தங்கம் ஸ்நானமஹம் கரிஷ்யே, என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தம், ப்ரார்த்தனை (செய்து கொள்ளவும்)

1) அதிக்ரூர மஹாகா கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
2) துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸக்யகன்யே நமோஸ்துதே
3) த்ரிராத்ரம் ஜாஹ்னவி தீரே பஞ்சராத்ரம் து யாமுநே: ஸதய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
4) கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி
5) நந்திநி நளிநி ஸீதா மாலதீ ச மாலபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத.

காமினி புஷ்கரத் யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம
(என்று ஸங்கல்பத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம் யஜ்ஞோபவீத்தாரம், காண்டரிஷி தர்ப்பணம் செய்து ச்’ராவண ஹோமம் செய்யும் இடத்தில் கலந்து கொண்டும், ஸ்வாமி தரிசனம், பெரியோர்களை வழிபடுதல் முதலிவற்றை முடித்துக் கொண்டு ச்’ராவண கர்மாவை பூர்த்தி செய்து கொள்ளவும்)

யஜ்ஞோபவீத தாரண மந்த்ரம் ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)
ஆசமனம்
(1) ஒம் அச்யுதாய நம: (2)ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:

                                             விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

                                                     ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக  ஐதிகம்)

                                                 ஸங்கல்பம் மந்திரம்

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே. என்று ஜலத்தை தொட்டு  யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி:  (தலையில்) த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்) பரமாத்மா தேவதா: (மார்பில்) யஜ்ஞோபவீத்தாரண விநியோக: என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல (பஞ்சபாத்திரத்தில்) பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்
(என்று புதிய பூணுலைப் போட்டுக் கொள்ளவும், ப்ரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல்) சிலர் மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ள பழக்கம் உள்ளது.
ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச:  ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் (பழைய பூணுலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்)
காண்டரிஷி தர்ப்பணம்
ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை பவித்ரத்துடன் மடித்துக் கொண்டு விக்னேச்வர த்யானம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!  ப்ராணாயாமம்; ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக  ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், ச்’ராவண்யாம், பௌர்ணமாஸ்யாம்,  அத்யாயோபாகர்மாங்கம்  ப்ராஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே (என்று சொல்லி, கட்டைபுல் தர்ப்பையை கீழே போட்டு ஜலத்தை தொடவும். பூணுலை மாலையாகப் போட்டுக் கொண்டு கீழ்க்கண்ட 9 தர்ப்பணங்களை  அக்ஷதையும், எள்ளும் சேர்த்துக்கொண்டு, மும்மூன்று தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக ஜலத்தைக் கீழே விடவும்) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) விச்’வான் தேவான்  காண்டரிஷிம் தர்ப்பயாமி (3)  நேராக ஸாகும்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) யாஜ்ஜிகீர் தேவதா: உபநிஷதஸ்: தர்ப்பயாமி (3)  வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (3)  ( துக்கிய உள்ளங்கையைக் கீழமர்த்தி அதன் வழியாக ஜலம் விடவும்)  ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி (3) (நேராக ஜலம் விடவும்) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (3)   பூணுலை உபவீதி  (பவித்ரத்தை காதில் வைத்து) ஆசமனம் செய்யவும்.

வேதாரம்பம்
பவித்ரம் அணிந்து கொண்டு கட்டை தர்ப்பையை பில் மடித்துக் கொண்டு ச்ராண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம், வேதாரம்பம் கிரிஷ்யே, தர்ப்பையை போட்டு கை அலம்பவும். ஒம்பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஒம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, ஒம் கும் ஸுவ: தியோயோந:  ப்ரசோதயாத், ஓம் பூ: தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்: ஒகும் ஸுவ:
 தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோயோந: ப்ரசோதயாத் ஓம்.ஓம்
இக்ஷேத்வா -  ஊர்ஜேத்வா – வாயவஸ்த – உபாயவஸ்த தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்’ரேஷ்டதமாய கர்மணே ஓம் – ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம்:ஹோதாரம் ரத்ன தாதமம் ஓம் – ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹாதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் – ஓம் ச’ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்துபீதயே ச’ம்யோரபிஸ்ரவந்துந:ஓம் – ஓம் ஸமாம்நாய; ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ம-ய-ர-ஸ-தஜபன லகஸம்மிதம் – அத சி’க்ஷாம் – ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா – க்ஷமா – ஷோனி: அவநி: - அ – இ – உண் – ருலுக் – ஏஓங் – ஐஓளச் ஹயவரடு – லண் – ஞமங்ணநமு – ஜபஞ்ச் – கடதஷ் ஜப கடமஸ் க – ப – ச – ட – த சடதவ் – கபய் – ச’ஷஸர் – ஹல் – இதிமா ஹேச்’வராணி ஸூத்ராணி ஓம் நமோ ப்ரஹ்மணே – நமோஸ்த்வக்னயே – நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய:  நமோவாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி, ஒம் தத்ஸத், பவித்ரம் அவிழ்த்து ஆசமனம், கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீதுத்தப்ரஸாதம் – வாத்யார் ஸம்பாவனை – சுண்டல் – அப்பம் – புஷ்பம்     ரக்ஷை ப்ரஸாதம் – ஸ்வாமி பெரியோர் நமஸ்காரம் – வீட்டில் போய் ஹாரத்தி.