ஞாயிறு, 11 நவம்பர், 2018

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில் தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு. இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக... ஒரு வீட்டை நாம் காலி செய்யும் போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும். ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். உயிர் பிரியும். 

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான். உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும். இவ்வாறாக புனரபி ஜனனம், புனரபி மரணம்.
என்ற நிலை அமைகிறது. பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும், புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும். அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல் வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உருப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல் இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள் தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
உறவினர்கள் இறந்து விட்டால் அந்த வருடத்தில் பண்டிகைகளை கொண்டாடலாமா? தர்ம சாஸ்த்ரம் சொல்வது என்ன.

பிராஹ்ம்மணர்களாகிய நாம் அனைவரும் அடிப்படை தர்ம சாஸ்திரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

சட்டம் (தர்ம சாஸ்த்திர சட்டம்) தெரியாது. என்பது குற்றமாகும் (பாபமாகும்.) IGNORANCE OF LAW IS NOT AN EXCUSE.

தர்ம சாஸ்திரப்படி ஒரு கர்மாவைச் செய்வதற்கு கர்த்தா (அக்கர்மாவைச் செய்கின்றவன்) காலம் (அக்கர்மாவை செய்ய விதிக்கப்பட்ட காலம்) இடம் (அக்கர்மாவைச் செய்யக்கூடிய இடம்) இவை மூன்றும் தோஷமற்றதாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

மேலே கூறப்பட்ட அடிப்படையின் படி ஒரு கிருஹத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு (அந்த இறந்தவருக்கு) கர்மா செய்யக்கூடிய பிள்ளை (அ) கர்மாவைச் செய்யக்கூடிய உறவினர் யாரோ அவர்கள் அந்த ஒரு வருடம் நித்ய கர்மாவைத் தவிர மற்ற கர்மாக்களஈச் செய்வத்ற்கு சுத்தி போறாது என்று கூறுகிறது. அது மட்டுமல்ல அக்கர்மாவை செய்பவன் எங்கு வஸிக்கின்றானோ அந்த இடத்திற்கும் போவதால் சுத்தி போறாது என்கிறது. 
இதன் அடிப்படையில் முற்காலத்தில் (அவிமுக்த குடும்பம்) அதாவது பந்துக்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். (சமையல், பூஜை) ஆகையால் பந்துக்கள் அனைவரும் ஒரு வருடம் பண்டிகைகளைக் கொண்டாடமாட்டார்கள். இக்காலத்தில் அப்படியல்லாமல் உறவினர்கள் அனைவரும் தனித்தனியாக இருக்கின்றார்கள். இப்படி இருக்க மேலே கூறிய சாஸ்த்திரப்படி கர்த்தாவைத் தவிர (கர்மா செய்யக்கூடிய) மற்றவர்களுக்கு எப்படி அசுத்தி வரும். மற்றவர்கள் வீட்டிற்கு எப்படி அசுத்தி வரும். ஆகவே இறந்தவரின் கர்மாவைச் செய்யக்கூடிய பிள்ளைகளுக்கும் (அ) அந்த இறந்தவரின் கர்மாவை தொடர்ந்து செய்யக்கூடியவர்களுக்கும் மட்டுமே இந்த அசுத்தி பொருந்தும். மற்ற தாயாதிகள் மற்றும் உறவினர்கள்  இறந்தவரின் சபிண்டீகரணம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் நாள் கர்மா முடிந்தவுடன் அவரவர்கள் வீட்டில் எல்லா பூஜைகளையும், பண்டிகைகளையும் செய்யலாம். 

சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்களை நாமே அசுத்தி என்று நினைத்துக் கொண்டு செய்யாமல் விடக்கூடாது. இயற்கையாக (தெய்வாதீனமாக) வந்தால் மட்டுமே விசேஷ கர்மாக்களை செய்யாமல் விடவேண்டும். சாஸ்த்திரம் எப்போதும் நமது நன்மையைத்தான் கூறும். நாம் தான் சாஸ்த்திர்ம் என்ற பெயரில் பல ஸம்பிரதாயங்களை வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதைப்பற்றி ஒரு சமயம் மஹாஸ்வாமிகள் கூறுகையில் நானும் பெரியவர்கள் (முன்னோர்கள்) செய்த ஸம்பிரதாயங்களை விடக்கூடாது என்று கூறிவந்தேன். ஆனால் வடக்கத்தியர்கள் விவாஹ விஷயங்களில் என்னை கண்டித்து கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் சாஸ்த்ர விரோதமான ஸம்பிரதாயங்களை கடைபிடிக்க கூடாது என்று கூறினார். ஆதிசங்கர பகவத் பாகவதர்களும் இதையே உபநிஷத் பாஷ்யத்தில் விவரமாகக் கூறியுள்ளார். ஏதோ ஒரு கட்டத்தில் (தவிர்க்க முடியாத) சூழ்நிலையில் தனது குருவே சாஸ்திரத்திற்கு மாறாக செய்திருந்தால் கூட நாம் அதைப் பின்பற்றக் கூடாது என்று கூறியுள்ளார். இதை பல பேர் எங்காத்து சாஸ்த்ரிகள் ஒரு வருடம் பண்டிகை செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே என்று கேட்கிறார்கள். யாரும் வைதீகர்களை குறை கூற வேண்டாம். நாம் தான் சாஸ்த்திரம் தெரிந்த வைதீகர்களை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். தர்ம சாஸ்திரம் தெரியாத வைதீகர்களைக் கேட்டுப் பயனில்லை. தர்ம சாஸ்திரம் சைவம், வைணவம் எல்லோருக்கும் ஒன்று தான். ரிஷிவாக்கியங்களான ஸ்ம்ருதியை கடைபிடிப்பவர்கள் அனைருக்கும் இது பொருந்தும்.

தற்காலத்தில் உள்ள குழப்பங்களுக்கு அருமையான விளக்கம்.

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்.
ஜோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்களை பார்ப்போம்.

திருச்சி ஶ்ரீரங்கம் பகவத் சந்நிதியில் தன் பெண் திருமணத்திற்கு அர்ச்சனை செய்த பின் ஒரு சேவார்த்தி ஏங்க திருப்பட்டூர் எப்படிப் போகணும் என கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு கேட்டார். அடுத்து அங்கே போகனுமாம். பின் இன்னும் இரண்டு கோவில்கள் வரிசையாக அடுத்த அடுத்த பயணம். இன்னொருவர் ஏங்க சுக்கிர ப்ரீதி பண்ண சொல்லி சொன்னாங்க அதாவது ஶ்ரீரங்க பெருமாளுக்கு பட்டு சாத்தவும் நம்பெருமாளுக்கு பன்னிரெண்டு  அடி மாலை சாத்தவும் சொன்னாங்க என்றார்.

தற்செயலாக வந்த கோயில் அர்ச்சகர் தம்பி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மதுரகவி நந்தவனம் என்ற இடத்திலிருந்து சாத்தாத வைணவர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை தான் சாத்துவார்கள். மற்றபடி வெளியில் இருந்து நாம் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கும் மாலைகளை சாற்றுவது கிடையாது என சொன்னார்.

அதே போல் வேறு ஒரு குடும்பம் அதன் தலைவர் பெண்ணுக்கு நாகதோஷம் நம்பெருமாளுக்கு பணிவிடை செய்யற ஆதிசேஷனுக்கு பன்னிரெண்டு முட்டை வாங்கி வைக்க  சொல்றாங்க என கூறினார். நான் மிரண்டு போய் ஶ்ரீரங்கத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது. என அவருக்கு புரியவைப்பதற்குள் பட்ட பாடு பெருமாளே முடியலை.

தெருவுக்கு நாலு ஜோசியக்கரர்கள் படித்த மற்றும் பாமர ஜனங்களுக்கும் எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில் அதை உபயோகப்படுத்தி பல ஜோதிடர்கள் ஆளுக்கொரு விதமாக இதுவரை கேட்டேயிராத பல பரிகாரங்கள் சொல்லுகிறார்கள்.

தேங்காயில் விளக்கெண்ணெய் விளக்கு, பூசணிக்காயில் விளக்கு
வாழைப்பழத்துல விளக்கு என சிறப்பு பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். ஜோசியக்காரங்க எல்லாம் குடும்ப பரிகாரம் என பக்கம் பக்கமாக நோட்டு போட்டு எழுதி தர நம்ம மக்களும் கர்ம சிரத்தையா அதை செஞ்சு முடிக்க கோவில் மற்றும் ஊர் ஊராக அலையறத பார்த்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது. நாள் கிழமைகளில் (வியாழன், வெள்ளி சனி, என பல நாட்களிலும்) பகவான் சந்நிதியிலோ தாயார் சந்நிதியிலோ ஒரு ஈ காக்கா காணோம். மொத்த கூட்டமும் அன்றய தினத்தில் நவக்கிரக சந்நிதில் அல்லது குடும்ப ஜோதிடர் பரிகாரம் செய்ய சொன்ன சன்னதிகளில் வரிசை கட்டி நிற்பது வேதனையான ஒன்று. எள் விளக்கு, கொண்டகடலை மாலை எலுமிச்சை விளக்கு, என ஒரே பரிகார அமர்க்களம். #ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்று கிடுயவே கிடையாது. பகவானை மட்டுமே நம்புங்கள் வாழ்வே நல்ல விதமான மாறும் உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விளக்குகிறேன்.

பாரதத்தில் பாண்டவரான சகாதேவன் கௌரவ மன்னன் துரியோதன் தன்னிடம் பாரத போரில் பாண்டவர்களை ஜெயிக்க பூமி பூஜை போட நல்ல நாள் குறித்து தர கேட்டப்போது அருமையான நாளை குறித்து கொடுத்தான்.
அதன் படி யுத்த நாள் பூஜை நடந்தால் கௌரவர்கள் வெற்றி உறுதி ஆயிற்று.

அதை அறிந்த தர்மர் கேட்டாராம். ஏன் சகாதேவா அப்படி ஒரு நல்ல  நாளை குறித்து கொடுத்தாய் அவன் நம் எதிரி அல்லவா என கேட்க? சகாதேவன் சொன்னாராம். உண்மையை சொல்லுவது ஜோதிட தொழில் தர்மம் அதனால் எதிரியே கேட்டாலும் சரியானதை மட்டுமே குறித்து கொடுப்பேன் என்றாராம். ஜோதிடம் என்பது உண்மைகளை மட்டுமே சொல்லுவது தவறாக வழிகாட்டுவதல்ல. உடனே தர்மன் பகவான் கிருஷ்ணனை சரணடைய பகவான் கிருஷ்ணன் சகாதேவன் குறித்து கொடுத்த அந்த அமாவாசை நாளுக்கு முதல் நாளே அமாவாசை தர்ப்பணம் செய்ய தன் செய்கையால் குழம்பிய சூரியனையும், சந்திரனையும் ஒருவருக்கு ஒருவர் நேரே பார்க்க வைத்து கௌரவர்களை குழப்பி விட்டு அமாவாசை இல்லா நாளில் பூஜையை போட வைத்து வெற்றியை பாண்டவர்கள் பக்கம் திருப்பினாராம்.

நண்பர்களே, அன்பர்களே பகவான் நினைத்தால் யார் வாழ்விலும் எத்தகைய நிலையிலும் எப்படிப்பட்ட மாற்றமும் நடக்கும். நமக்கு தேவை பகவான் மேல் முழு நம்பிக்கையும் உண்மையான பக்தியுமே. தினமும் அவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் காலை, மாலை என இரு வேளையிலும் நல்லெண்ணை விளக்கேற்றுங்கள்.

முக்கியமாக உங்கள் குடும்ப குல தெய்வத்தை தினமும் வணங்குங்கள்.

ப்ரபந்தம், திருப்பாவை என எது தெரியுமோ அதில் குறைந்தது நாலு பாசுரங்கள் சொல்லுங்கள். இல்லை உங்களுக்கு பிடித்த தேவாரம் திருவாசகம் என சொல்லுங்கள். குழந்தைகளை பகவத் நாமாக்களை சொல்ல சொல்லுங்கள். ஆத்மார்த்தமாக பகவானை வணங்குங்கள்.
இல்லத்தின் அருகில் உள்ள ஒரு பகவத் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் பகவானை மனமாற வேண்டுங்கள். பிறருக்கு நல்லதை நினையுங்கள், நல்லதையே பேசுங்கள். பகவானை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கிறார். எதற்க்கும்  நாம் கவலைப்பட தேவையில்லை. அரிய பிறப்பு மானிடபிறவி. பகவானை வணங்கி அனைத்தும் பெறலாம்.

ஜோசியத்தை நம்புங்கள் ஆனால் பரிகாரம் சொல்லும் எந்த ஜோதிடர்களையும் அல்ல. பகவான் இருக்கிறான் நம்மை காப்பாற்ற நாம் பகவானின் குழந்தைகள். நம்மை கஷ்டப்பட வைத்து அவர் மகிழ்வாரா எனவே யாரும் எதற்க்கும் கலங்கமடைய வேண்டாம். பகவான் கொடுக்க நினைப்பதை எந்த கிரகங்களாலும் அல்லது யாராலும் தடுக்க முடியாது. கொடுக்க நினையாததை எந்த கிரஹங்களாலும் அல்லது யாராலும்  கொடுக்க முடியாது எனவே பரிகாரங்கள் என பணத்தை நேரத்தை வீணாக்காமல் பகவானை மட்டுமே வணங்குங்கள் வெற்றி தானாக வரும்.

ஜெய் ஶ்ரீராம்!

சனி, 10 நவம்பர், 2018

புத்ர பாக்யம் இல்லாதவர்களின் கதி என்ன !!
புத்ர பாக்யம் இல்லாதவர்களின் கதி என்ன !!

தான் வாழும் காலத்தில் சாஸ்த்ரப்படி அனைத்துக் கடமைகளையும் செய்த ஒருவனுக்கு மரணத்திற்கு பின் புத்ரன் இல்லாமல் போனாலோ, புத்ரன் இருந்தும் கர்மா செய்யாமல் போனாலோ அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

புத்ரன் இல்லாமல் போனால் அத்துடன் சந்ததி முடிவடைந்தது
அந்த வம்சத்தில் அனைவரும் கரையேறி விட்டார்கள் என்றே அர்த்தம்.

புத்ரன் இருந்தும் செய்யாமல் போனால், அவர்கள் கரையேறுவதற்கு
சாஸ்த்ரம் பல்வேறு வழிமுறைகளை வைத்துள்ளது. ஒவ்வொருவரும் ச்ராத்தம் செய்யும் போது அன்ன ஹோமம், ஹோமசேஷம், பித்ரு போஜனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே நேரடியான மூன்று தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்காகச் செய்யப்படுகிறது.

இலை எதிரில் சாதம் உதிர்ப்பது, காக்காய்க்கு பிண்டம் வைப்பது போன்றவை தன் வம்சத்தைச் சேர்ந்த இது போன்ற பித்ருக்களுக்குத்தான் போகிறது. மூன்று தலைமுறையில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு ச்ராத்தம் செய்பவர் உயிருடன் இருந்து ச்ராத்தம் செய்யும் வரை அதே இடத்தில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு வேளை அவர் தன் புண்ணிய காரியங்களாலோ,
பகவான் க்ருபையினாலோ, ஆசார்யாளின் அநுக்ரஹத்தாலோ,
பாகவதர்களின் அருள் வாக்கினாலோ நல்ல கதியை மோக்ஷத்தை அடைந்திருக்கக்கூடும். ஆனால் விதிக்கப்பட்ட சாஸ்த்ரம் எந்தப் பழுதும் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல பகவான் தானே பித்ரு ஸ்வரூபியாக நின்று அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறான்.

எனவே தான் ச்ராத்தங்களில், ச்ராத்த பலனை தத்தம் செய்யும் போது,
விச்வேதேவா: பித்ருபிதாமஹப்ரபிதாமஹா: என்று கூறாமல்
விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி,
ப்ரத்யக்ஷ மகாவிஷ்ணு ஸ்வரூபி 'ஸர்வாகார: பகவான்' (எல்லா ரூபமாகவும் இருப்பவன்) ஶ்ரீஜனார்தன: ப்ரியதாம் என்றே தத்தம் செய்யப்படுகிறது.

எனவே ஒரு யோக்யமான ச்ரேஷ்டமான புத்ரனை உடையவன் 
இருக்கும் போதும் இறந்த பிறகும் (ஸபிண்டீகரணத்தன்று வரை) சில புண்ணியங்களை அடைகிறான். ஒரு அயோக்ய சிகாமணிணைப் புத்திரனாகப் பெற்றவன் இருக்கும் போது பாபங்களை அடைந்தாலும், இறந்த பிறகு அவனால் அவனுக்கு பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை. புத்ர பாக்யத்தால் தள்ளாத காலத்தில் அநுஷ்டானத்திற்கு உதவி இருக்கலாம். புத்ர பாக்யமின்றி அநுஷ்டிக்கப்படாததால் அவனுக்கு பாபம் நேராது. புத்ர பாக்யத்தால் பலன் அடைபவன் புத்ரனே அன்றி
பிதாவுக்கு எந்த பெரிய நஷ்டமும் இல்லை !!
தான் வாழும் காலத்தில் சாஸ்த்ரப்படி அனைத்துக் கடமைகளையும் செய்த ஒருவனுக்கு மரணத்திற்கு பின் புத்ரன் இல்லாமல் போனாலோ, புத்ரன் இருந்தும் கர்மா செய்யாமல் போனாலோ அதனால் எந்த நஷ்டமும் இல்லை.

புத்ரன் இல்லாமல் போனால் அத்துடன் சந்ததி முடிவடைந்தது
அந்த வம்சத்தில் அனைவரும் கரையேறி விட்டார்கள் என்றே அர்த்தம்.

புத்ரன் இருந்தும் செய்யாமல் போனால், அவர்கள் கரையேறுவதற்கு
சாஸ்த்ரம் பல்வேறு வழிமுறைகளை வைத்துள்ளது. ஒவ்வொருவரும் ச்ராத்தம் செய்யும் போது அன்ன ஹோமம், ஹோமசேஷம், பித்ரு போஜனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே நேரடியான மூன்று தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்களுக்காகச் செய்யப்படுகிறது.

இலை எதிரில் சாதம் உதிர்ப்பது, காக்காய்க்கு பிண்டம் வைப்பது போன்றவை தன் வம்சத்தைச் சேர்ந்த இது போன்ற பித்ருக்களுக்குத்தான் போகிறது. மூன்று தலைமுறையில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு ச்ராத்தம் செய்பவர் உயிருடன் இருந்து ச்ராத்தம் செய்யும் வரை அதே இடத்தில் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு வேளை அவர் தன் புண்ணிய காரியங்களாலோ,
பகவான் க்ருபையினாலோ, ஆசார்யாளின் அநுக்ரஹத்தாலோ,
பாகவதர்களின் அருள் வாக்கினாலோ நல்ல கதியை மோக்ஷத்தை அடைந்திருக்கக்கூடும். ஆனால் விதிக்கப்பட்ட சாஸ்த்ரம் எந்தப் பழுதும் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல பகவான் தானே பித்ரு ஸ்வரூபியாக நின்று அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறான்.

எனவே தான் ச்ராத்தங்களில், ச்ராத்த பலனை தத்தம் செய்யும் போது,
விச்வேதேவா: பித்ருபிதாமஹப்ரபிதாமஹா: என்று கூறாமல்
விச்வேதேவ ஸ்வரூபி, பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி,
ப்ரத்யக்ஷ மகாவிஷ்ணு ஸ்வரூபி 'ஸர்வாகார: பகவான்' (எல்லா ரூபமாகவும் இருப்பவன்) ஶ்ரீஜனார்தன: ப்ரியதாம் என்றே தத்தம் செய்யப்படுகிறது.

எனவே ஒரு யோக்யமான ச்ரேஷ்டமான புத்ரனை உடையவன்
இருக்கும் போதும் இறந்த பிறகும் (ஸபிண்டீகரணத்தன்று வரை) சில புண்ணியங்களை அடைகிறான். ஒரு அயோக்ய சிகாமணிணைப் புத்திரனாகப் பெற்றவன் இருக்கும் போது பாபங்களை அடைந்தாலும், இறந்த பிறகு அவனால் அவனுக்கு பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை. புத்ர பாக்யத்தால் தள்ளாத காலத்தில் அநுஷ்டானத்திற்கு உதவி இருக்கலாம். புத்ர பாக்யமின்றி அநுஷ்டிக்கப்படாததால் அவனுக்கு பாபம் நேராது. புத்ர பாக்யத்தால் பலன் அடைபவன் புத்ரனே அன்றி
பிதாவுக்கு எந்த பெரிய நஷ்டமும் இல்லை !!

செவ்வாய், 30 அக்டோபர், 2018

மகான் ராகவேந்திரர் பகுதி-1

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டி ருந்ததுஏ சங்குகர்ணா, எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே, ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இதுதானா, பிரம்மன் கத்தினார்.  சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.மன்னிக்கவேண்டும்  பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டி ருந்த வேளையில், தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்றபோது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன், என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப் பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது, மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின், எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய். குறிப்பாக,பக்தி மார்க்கத்தில் இருப்பவன், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே, நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள், என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும், இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன், எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி, நீ பூலோகத்தில் இருக்கவேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி, பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய்,என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான்.  இந்நிலையில், பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன், விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால், அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறுபிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக, இரண்யனாக பிறந்து நாராயண னுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி, ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டுவர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில், நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை, நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக்கினார்.
மகான் ராகவேந்திரர் பகுதி-2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி, தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி,சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள், அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும்,என்றார். சங்குகர்ணன் அவரிடம்,சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான்.  நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ, அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து, அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே, உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன், இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குரு÷க்ஷத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து, பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.
பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன், கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி, புண்ணியம் செய்தாலும் சரி!  கன்மம் எனப்படும் இந்த இரு வினை களால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான்  பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும்படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள்.பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்), அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும், அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர்.ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக, உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி, நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம், அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்துவிட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும், என்றதும், தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள், சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம், என்று புன்னகையும், கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி, அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ, வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும், வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும், என சொல்லி விட்டு, ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும், கேள்விக்குறியோடு, தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன், தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும், என்றார்.இந்த நிபந்தனையைக் கேட்டதும், தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்றுமுன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.

குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும், இளைஞன் ஆனதும், சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும், பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால், தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது, இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர்.ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லாவிட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய், சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும், பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன், என்று கண்ணீர் மல்க கூறினார்.
ராகவேந்திரர் பகுதி-3

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன்பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர், மேல்படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீபாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார்.இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது.வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒருநாள் முடிவுக்கு வந்தன.துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக, பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்துவிட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தான்.சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால், அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன்.மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத்  தயாரானது அந்தச் செல்வம்.1519ல் கர்நாடக மாநிலத்தில், வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும், தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ..தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால், அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும், வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது.எனவே, இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும், மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன்இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தது. அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர, அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.

செவ்வாய், 23 அக்டோபர், 2018


திருநெல்வேலி குருக்குதுறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை,  இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
பெரியவா சரணம்.
ஹர ஹர சங்கர                   ஜய ஜய சங்கர

செவ்வாய், 16 அக்டோபர், 2018

சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து ...

கொடுத்து மகிழ்பவர்

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.

பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்

இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.

நாத்திகனுக்கே முக்கியத்துவம்

தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.

வாங்க குழந்தையே!

யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..

கொலைகாரனிடமும் இறைவன்

1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.

மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்

*  எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
*  மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
*  தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*  தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
*  உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
*  நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
*  கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
*  உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
*  பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
*  உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
*  பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
*  கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
*  கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர்.ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி,கொடி,காய்,கனி பொம்மைகளை வைக்க வேண்டும்.மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம்.நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள்,கரையான் புற்று,சிலந்தி வலை,களிமண்ணில் செய்த எறும்பு,வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும்.எறும்பு போல் சுறுசுறுப்பு,கரையான் புற்றையும் சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு,தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும்.ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள்,பறவை பொம்மைகள் வைக்க வேண்டும்.மிருக குணத்தை விட்டு பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும்.முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் மகான்கள்,முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது.வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம்.கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள்(அப்பர், சம்பந்தர், சுந்தரர்),ஆழ்வார்கள்(ஆண்டாள்,பெரியாழ்வார்) சூரியன்,நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.மகானாக உயர்ந்தவர் தவம்,யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி,லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து,நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

குல தெய்வம் என்பது என்ன பிரிவு?

பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.

பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது.

ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும்.

ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும்.

ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும்.

இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை.

குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.