திருநெல்வேலி குருக்குதுறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை, இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
பெரியவா சரணம்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக