திங்கள், 30 டிசம்பர், 2013

51சக்தி பீடங்கள்-பகுதி-1

அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில்

மூலவர்:ஜ்வாலாமுகி
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்:ஜ்வாலாமுகி
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்

திருவிழா:பலவித பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. துர்க்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது, தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுக்கிறார்கள்.

தல சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.

திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் காங்ரா, ஹிமாச்சல பிரதேசம்-176031.போன்:+91 01970-222223, 01970-222137

பொது தகவல்:சரஸ்வதி, லெட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.

பிரார்த்தனை:பில்லி சூன்யம் , ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். பில்லி, சூன்யம், ஏவல் விரட்டும் மந்திரவாதிகள் இங்கு வந்து யந்திரபூஜை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:அன்னை ஆதிபராசக்தியானவள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் கோவில்கொண்டு அருள்பாலித்து வருவது நாமறிந்ததே அவற்றில் சதிதேவியின் உடற்பகுதிகள் வீழ்ந்த 51 இடங்கள் சக்திபீடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றிலொன்றான ஜ்வாலாமுகி தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக விளங்குகிறது. ஹீமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தலம் தேவியின் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் அன்னை. இங்கு தீச்சுடராகத் தன்னை வெளிப்படுத்துகிறாள். இங்குள்ள மிகப் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகள் இயற்கையாகவே வெளிப்படுகின்றன ஒன்பது இடங்களில் வெளிப்படும் இந்த ஜுவாலைகளையே தேவியின் வடிவமாக வழிபடுகின்றனர். பிரதான தெய்வமாக காளிதேவி வழிபடப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.

இந்த ஜுவாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றனவாம்! என்ணெயில்லை; திரியில்லை. ஆனால் தீச்சுடர்! இந்த பாறை இடுக்குகளிலிருந்து ஒருவித வாயு தொடர்ந்து வெளிப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு:வெகு காலத்துக்குமுன் இப்பகுதியை காங்ரா நகரைத் தலைநகராகக் கொண்டு பூமிசந்த் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த தேவி பக்தன். அவன் கனவில் தோன்றிய இவ்வன்னை தான் சுடர் வடிவில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை உணர்த்தினாள். அதன்பின்னர் அவ்விடத்தைக் கண்டுபிடித்த மன்னன் அங்கே ஆலயம் எழுப்பினான். நேபாள அரசன் ஹங் என்பவன் மண்டபம் அமைத்து. மிகப்பெரிய வெண்கல மணியையும் வழங்கினான் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

கி.பி 1009-ல் இஸ்லாமிய மன்னன் கஜினி முகம்மதுவால் இவ்வாலயம் கொள்ளையிடப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதன்பின்னர் ஆட்சிபுரிந்த மொகலாயப் பேரரசர் அக்பர் இவ்வாலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு. அங்கு எரிந்துகொண்டிருக்கும் ஜுவாலைகளை அணைக்க உத்தரவிட்டாராம். படைவீரர்கள் நீரைப்பாய்ச்சி பலவிதங்களில் முயன்றும் ஜுவாலைகள் அணையவில்லை. அதன்பின் தேவியின் ஆற்றலைப் புரிந்து கொண்ட அக்பர் ஒரு தங்கக் குடையை காணிக்கையாகச் செலுத்தி தன் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தருமாறு தேவியிடம் வேண்டினாராம். அதற்கு அன்னை உடன்பட வில்லை. அதற்கு அடையாளமாக அக்பர் அளித்த தங்கக்குடை சாதாரண உலோகமாக மாறிவிட்டதாம்.

இவ்வாறு பல வரலாற்று நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டதாக விளங்குகிறது இந்த ஜ்வாலமுகி ஆலயம். இறுதியாக கி.பி 1813-ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இங்கு வருகை புரிந்து ஆலயத்தை சீரமைத்து கோபுரத்துக்கு தங்கக் கவசம் அணிவித்தானாம். வெள்ளியாலான கதவையும் அமைத்தான்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.

வியாழன், 19 டிசம்பர், 2013


வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீமத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

பூரி ஜெகந்நாத க்ஷேத்திரத்தில் மகாபெரிய வரின் ஆக்ஞையின் பேரில், ஜெயதேவர்- மீரா விக்ரகத்துடன் காமகோடி மடம் கட்டப் பட்டுள்ளது என்றால், கீத கோவிந்த- ஜெகந் நாத மகிமையை காஞ்சிப் பெரியவர் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

விழுப்புரத்தில், சுப்பிரமணியன்- லட்சுமி தம்பதியருக்குத் தவப்புதல்வனாய் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் மகா பெரியவர். வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று சிவபெருமானே ஜோதி சொரூபனாக- முருகப் பெருமானாக அவதரித்தார். (அதற்கு அடுத்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் மகா பெரியவர்.) சுவாமிமலை சுவாமிநாதனே குலதெய்வம் என்பதால், மகா பெரியவரின் இயற்பெயரும் சுவாமிநாதன் ஆயிற்று.

விசாக- அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். ராதைக்கு அடுத்தது. எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என் றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மகாபெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ரமண மகரிஷியைப் பற்றி இன்று ஆன்மிக உலகம் அறிகிறது என்றால், அப்பெருமை காஞ்சிப் பெரியவரையே சாரும். அயல் நாட்டிலிருந்து வந்த பால் பிரண்டன் என்பவர் பல இந்திய ஆன்மிகவாதிகளைச் சந்தித்து விட்டு வேதனையோடு தன் நாடு திரும்ப ஆயத்தமாகும்போது, ஒரு அன்பர் மகா பெரியவரைத் தரிசிக்க காஞ்சிக்கு அவரை அழைத்து வந்தார். பெரியவரைப் பார்த்ததுமே நெகிழ்ந்து போனார் பால் பிரண்டன். அவரையே தன் குருவாகக் கொள்ள அனுமதி கேட்க, பெரியவர் அதை மறுத்து, "ரமண மகரிஷியை நாடு' என்றார்.

அங்கிருந்து திரும்பிய பால் பிரண்டன் திருவண்ணாமலை செல்லவில்லை. தன் நாடு செல்ல விமான டிக்கெட்டுக்குப் பதிவு செய்துவிட்டு சென்னை ஹோட்டலில் தங்கியிருந்தார். அன்றிரவு... அது கனவா அல்லது நனவா என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் தோன்றிய காஞ்சிப் பெரியவர், "அருணாச் சலம் சென்று ரமணரைத் தரிசிக்காமல் உம் நாடு திரும்ப வேண்டாம்' என்று கூறினாராம். வியந்துபோன பால் பிரண்டன் தன் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு திருவண்ணா மலை சென்று ரமணரைத் தரிசித்தார். பேசாமலேயே ரமணரின் அனுபூதியைப் பெற்று மிகவும் நெகிழ்ந்து போனார். அந்த பால் பிரண்டன்தான் ரமணரின் புகழை உலகம் முழுக்கப் பரப்பினார். ரமணரும் ஒரு சுவாமிநாதன்- கந்த அவதாரம்தானே. காஞ்சிப் பெரியவர் திருவண்ணாமலை சென்றிருந் தாலும் ரமணரைச் சந்தித்த தில்லை. இதன் மூலம் ஆன்மிகப் பெரியவர்களுக்கு பௌதிக தரிசனம் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

எவ்வித ஆடம் பரத்தையும் விரும்பாதவர் மகாபெரியவர். சுயநலம், பண ஆசை போன்ற அனைத்தையும் அறவே வெறுத்து ஒதுக்கியவர்; எளிமையின் சின்னம். வைணவ, கன்னட மடாதிபதி களுக்கும்; தேவார, திருப்புகழ், திருமுறை மடாதிபதிகளுக்கும் இடையே ஒற்றுமையை வளர்த்து, ஒவ்வொன்றும் சீருடன் தழைத்திட வழிவகுத்த பெருமையும் காஞ்சிப் பெரியவ ரையே சாரும்.

பெரிய பண தானம் எதையும் எதிர்பார்க் காமல், பிடியரிசித் திட்டம், மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பிரசாதம் வழங்குவது, சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கு தர்மம் செய்வது, ஆன்மிகம் போதிப்பது என்று எளிமையாக அனைவரையும் சமூக நலனுக்கு இழுத்தவர் மகா பெரியவர். இத்தனை சிறப்பு வாய்ந்த பெரியவரின் கீத கோவிந்த ஈடுபாட்டை இனி காண்போம்.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.

பெரியவர் தன் சிறு வயதில் கும்பகோணம் மடத்திலிருந்தபோது, பாலு பாகவதர் என்பவரை மடத்திற்கு வரவழைத்து, பல நாட்கள் அந்த 24 பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்டு அதன் மகிமையை உணர வைத்தார். அந்தப் பாடல்களில் உள்ள ஆண்பால்- பெண்பால் உணர்வு சார்ந்த பதங்களைத் தள்ளி, ஜீவாத்மா- பரமாத்மா இணைப்பை உணர வேண்டும் என்று கூறினார். பின்னாட்களில் ஆஞ்சனேய சுவாமி (ஸ்ரீ அனந்த ஆனந்த சரஸ்வதி சுவாமி) என்பவர் காஞ்சி மடத்திலேயே 24 அஷ்டபதி களையும் பாடுவார். இதை குடிசை யோரம் அமர்ந்து மகா பெரியவர் கேட்டு ரசிப்பார். இந்த பஜனை சம்பிரதாயம் முழுவதும் தமிழ், வடமொழி ஆகியவற்றில் 1967-லேயே மடத்தின் சார்பில் பிரசுரிக்கப்பட்டது என்றால், நாம பஜனைக்கு பெரியவர் எவ்வளவு மதிப்பளித்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

காஞ்சி மடத்தின் 62-ஆவது பீடாதிபதியாக விளங்கிய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராதா- கிருஷ்ண அஷ்டபதிபோல் காஞ்சி காமாட்சி- ஏகாம்பரநாதர் சங்கம லீலைகளை "சிவகீதி மாலா' என்ற பெயரில் 20 அஷ்டபதிகளாக எழுதினார். அதையும் பெரியவர் கேட்டு ரசிப்பார். மகா பெரியவரின் 75-ஆவது வயது பவழ விழாவின் போது, "சிவகீதி மாலா' என்னும் சிவ அஷ்டபதியையும், ராமகவி இயற்றிய ராமாயணம் முழுதும் கொண்ட ராமாஷ்டபதியையும் பிரசுரிக்கச் செய்தார். இன்றும் அதனை காம கோடி ஆச்சாரியர்கள் பக்தி பாவத் துடன் ரசிக்கிறார்கள்.

எனவே,பெரியவாளின் அனுஷ நாட்களில் நாம சங்கீர்த்தனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்; குருவருள் பெற்று பேரின்பமுடன் வாழ்வோம்.

புதன், 18 டிசம்பர், 2013

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம்.
பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா
அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல்
வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து
தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி
வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய
சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்து
ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து
வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.
அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!
மகா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார் என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு

மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு. இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மகாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.

''ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.

அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:

''தான் ஏகாதசி, துவாதசி என்று உபவாசம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக் காகவும் மனம் இரங்கியதுண்டு. இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா?! பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத் தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை பேதம் பார்க்காத கருணை!

ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.

அப்போது, மடத்தில் பல்லக்கு தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.

மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மகாபெரியவா!''
இந்த என்னுடைய கட்டுரையை சரியாகப் புரிந்துகொள்வதற்க& #3009;, என்னுடைய ஆதிகால வரலாறு, என் குடும்பத்தின் பின்னணி, மற்றும் என்னுடைய துன்பங்கள் நிறைந்த நாட்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். என்னுடைய முதல் பன்னிரண்டு வருஷ வாழ்க்கையில், சந்தோஷமான நேரம் என்று எதுவும் இருந்ததாகவே நினைவில்லை, ஒன்றே ஒன்றைத் தவிற-----1947—ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில், எங்கள் ஊரில் நடந்த விழா அது. நாட்டுக்கு சுதந்திரம் என்பது என்ன என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.

1950 வாக்கில் என்னுடைய பெற்றோர்கள், தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூர், மற்றும் திருவெண்ணைநல்லூர் அருகே இருந்த டி.குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். அதுதான் என்னுடைய அம்மாவின் பிறந்த ஊர்; அங்கிருந்து 5 மைல் தொலைவில் இருக்கும் கொடியூர் என்ற ஊர் என் தந்தையின் பிறந்த ஊர். என்னுடைய அம்மாவின் திருமணத்தின்போது, அவளுக்கு வயது ஐந்து! கல்யாணத்திற்கு சில வருஷங்கள் பின், என்னுடைய அப்பா குளத்தூருக்கு வந்து விட்டார். சுந்தரேச ஐயர் என்பவரின் ஒரே மகளான என் அம்மாவுக்கு, அவரிடமிருந்து பல ஏக்கர் விளை நிலங்கள் சொந்தமாயின. என் தந்தை, ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்பு முடிந்தவுடன், வேதங்கள் படிக்க முற்பட்டார். ஆனால் வேதபாடசாலைப் படிப்பை முடிக்கவில்லை. அவருடைய முன்கோபம் மிகவும் பிரஸித்தமானது! அதனால் பல வேலைகளை இழந்து, கடைசியில் ,மேட்டுக்குப்பம்---ப 97;ந்தூர் கிராமங்களின் தாற்காலிக மணியக்காரராக (village munsiff) ஆனார். சிறுபையனாயிருந்த அந்த வேலைக்குரிய வாரிசு, வயது வந்தபின், அவருக்கு இருந்த அந்த வேலையும் போயிற்று. அதன் பிறகு, வக்கீல் குமாஸ்தாவாக, சொந்தமாக வேலை செய்ய ஆரம்பித்தார். படிப்பறியாத அந்த கிராம மக்களின் ‘கேஸ்’களை திருக்கோயிலூர் மற்றும் கடலூர் வக்கீல்களிடம் கொண்டு கொடுத்து ஏதோ கொஞ்சம் வரும்படி வந்தது. ஆனால் அந்த கிராமத்தின் பெரும்பாலான மக்கள் நல்ல குணத்தினால், பெரும்பாலான ‘கேஸ்’களை உள்ளூர் பஞ்சாயத்தில் வைத்தே தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தையின் வருமானம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. ஒவ்வொரு வருஷமும் என் தாய் ஏக்கர் ஏக்கராகத் தன் நிலங்களை விற்கத் தொடங்கினார். 1950—ஆம் வருஷத்தில் எங்கள் குடும்பத்தின் நிலைமை நம்பிக்கையற்ற மிக மோசமான நிலையை அடைந்தது என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஒரு இளைய சகோதரியும், ஒரு அண்ணனும் இருந்தனர். அண்ணா கணபதியை திருக்கோயிலில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அப்பா மிகவும் முயன்றார். ஆனால் அவன் படிப்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை. 1951 ஆம் ஆண்டு அவன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். என்னுடைய ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்புக்குப் பிறகு ஒரு வருஷம் போல் வெறுமனே இருக்க வேண்டி வந்தது; திருக்கோயிலூர் உயர்நிலைப்பள்ளிக்& #2965;ு அப்பாவால் என்னை அனுப்ப முடியவில்லை.

1949—50 வாக்கில் பெரியவா எங்களுடைய கிராமத்தில் முகாமிட்டிருந்தார& #3021;. அதைப்பற்றி எனக்கு மிக மங்கலான நினைவே உள்ளது. பெரியவா எங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டியதாகவும், அப்போதிருந்த குடும்பநிலையைக் கண்டு, எல்லோரையும் மடதில் சேர்ந்து விடும்படி அழைப்பு விட்டதாகவும் என் அம்மா சொன்னார்கள். என்னை ப்ரத்யேகமாக ஆசீர்வதித்ததாகவும& #3021;, “இவன் உன்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷத்தையும் வளத்தையும் கொண்டு வருவான்” என்று சொன்னதாகவும் அம்மா சொன்னார்கள். இதை அவர் சொல்லும்பொழுது, நான் அவரை நம்பவில்லை. பின்னால் நடந்த நிகழ்ச்சிகள், பெரியவா உண்மையாக என்னை ஆசீர்வதித்திருக்க& #3007;றார்’ என்று நிரூபித்தன (காலம் கடந்த தெளிவு!). மீதி இருந்த கொஞ்சம் கௌரவத்துடன், 1951—இல், அந்த ஊரை விட்டு வெளீயேறி, மாயவரத்தில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த மடத்தில் சேர்ந்தனர் என் பெற்றோர்கள்.

என்னுடைய பெரிய அக்காவின் கணவர், குளத்தூரிலேயே அதிகம் படித்த மூன்று, நான்கு பேர்களில் ஒருவர். S.S.L.C—முடித்தவுடன், ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு, ஒரு நல்ல, ப்ரஸித்தமான ஆசிரியராக ஆனார். 1951—இல் கண்டசிபுரம் என்ற ஊரில் ஆசிரியராக இருந்தார். என் ஏழாவது வகுப்பை, அவர்கள் வீட்டில் தங்கி, அங்கேயே படித்தேன். அடுத்த வருஷம் அவர் சித்தலிங்கமடம் என்ற ஊருக்கு மாற்றப்பட்டபோது நானும் அவருடன் சென்று எட்டாவது வகுப்பில் படித்தேன்.

அப்பொழுது, ஞானானந்தா என்ற ஒரு ஸ்வாமிகளின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. அவர் நான் படித்த பள்ளியின் எதிரில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அழகுத் தமிழில் இனிமையாகப் பேசுவார். என்னை “சுந்தரம்” என்று அன்புடன் கூப்பிடுவார். ஒவ்வொரு மாலையிலும் எனக்கு இனிப்புகளும், பழங்களும் தருவார், தினமும் மாலை ஸ்கூல் விட்டதும் நேரே அங்கே போவதற்குப் போதுமான ஊக்குவிப்பு! நான் அவரை என்னுடைய தாத்தாவாகக் கருதினேன். அவருடைய பூர்வ சரித்திரம் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்& #2994;ை. சில வருஷங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ அந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் வயதாகிறது என்று பேசிக்கொண்டார்கள்; ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நான் ஸ்கூலில் என்னென்ன படிக்கிறேன் என்று கேட்பார்; கதைகள் சொல்லுவார். நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். நான் ஸ்கூலிலிருந்து அங்கு வரவில்லையென்றால், எனக்காக வாசலில் காத்திருப்பார்.. சில வருஷங்களுக்குப்பி& #2985;், அவர் திருக்கோயிலூர் அருகே இருக்கும் அரகண்டநல்லூர் என்ற இடத்திற்குப் போய் விட்டார். அங்கே மிகவும் பிரபலமானார். இப்பொழுது அவர் இல்லை. “தபோவனம்’ தற்பொழுது ஒரு மிகப் பிரபலமான இடம்; அதைப் பின்பற்றுபவர்கள் அநேகம். நான் எதற்காக அந்த ஸ்வாமிகளைப் பற்றி இவ்வளவு சொல்கிறேன் என்று நீங்கள் வியக்கலாம். “பெரியவாள் ஒரு நடமாடும் தெய்வம்; ஒரு மடத்தின் பீடாதிபதி மட்டும் இல்லை; சீக்கிரம் மக்கள் அவருடைய உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்வர்.” என்று எனக்கு முதல் முதலாக சொன்னவர் அவர்தான்! நான் எப்பொழுது சோர்ந்து போயிருந்தாலும், “பெரியவா உன்னையும் உன் குடும்பத்தையும் ரக்ஷிப்பார்.” என்று கூறுவார். என் தாயார் மாயவரம் போகும் வழியில் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார்.

மடத்தில் சேர்ந்து சுமார் எட்டு மாதங்கள் கழித்து, என் தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதினார். “பெரியவா உன்னைப்பற்றி விஜாரித்தார்; நீ உயர்நிலைப்பள்ளியி& #2994;் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தத& #3009;. அன்று வரை, எப்படியாவது E.S.L.C வரை படித்துவிட்டு, ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று, ஒரு ‘எலிமென்டரி’ ஸ்கூல் ஆசிரியராக வர வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. உயர்நிலைப்பள்ளியி& #2994;் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அறிந்தபோது, என் மனத்தில் உற்சாகம் கரை புரண்டது. ஞானானந்த ஸ்வாமிகளின் ஜோசியம் பலிக்கிறதோ என்று எண்ணினேன்.

ESLC முடித்துவிட்டு, ஞானானந்த ஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு, 1952 ஏப்ரலில் பெரியவாளின் முன்பு போய் நின்றேன். அப்பொழுது அவர் மாயவரம் பக்கத்தில் ஒரு இடத்தில் இருந்தார்.
பெரியவா கேட்டார், “ஹைஸ்கூலில் படிக்கப்போறே இல்லியா?”
நான் அதற்கு ஆசைப்படுவதாகவும் ஆனால் எப்படி, எங்கே என்று தெரியவில்லை என்றும் பதிலளித்தேன்.

பெரியவா அப்போது எனக்கும் என் தந்தைக்கும் ஒரு புதிர் போட்டார், “தென்னாற்காடு, தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைகளிலிருந்து ரொம்ப தூரமில்லாமலும், ஒரு பிரபலமான கோயிலும், ‘யுனிவெர்சிடி’யும் இருக்கும் இடமுமான ஒரு பெரிய நகரத்தின் பெயர் என்ன?”
எங்கள் மனத்தில் ‘யுனிவெர்சிடியைப்ப ற்றிய எண்ணம் இல்லாததால், மாயவரமாக இருக்குமோ என்று நினைத்தோம்.

ஆனால், பெரியவா சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் முக்கியத்துவத்தைப& #3021;பற்றிப் பேசி விட்டு, என்னுடைய அம்மாவிடம் சிதம்பரத்தில் குடித்தனம் போடச் சொன்னார். இப்பொழுது நான் அதைப்பற்றி நினைக்கும்போது, நானோ என்னுடைய பெற்றோரோ என்னுடைய மேல்படிப்புப்பற்ற& #3007; , ஒரு திட்டம் போடவில்லையென்றாலு& #2990;், ஒரு நினைப்பே கூட இல்லாமல்தான் இருந்தோம்; ஆனால் பெரியவா ஒரு முழுத் திட்டமே போட்டு வைத்திருந்ததாகத்த& #3006;ன் எனக்குத் தோன்றுகிறது.

நான் சிதம்பரத்தில் இருந்த ராமஸ்வாமி செட்டியார் உயர்நிலைப்பள்ளியி& #2994;் சேர்ந்தேன். படிப்பில் மிகவும் நன்றாகச் செய்தேன். லீவு நாட்களில் பெரியவாளைப் போய்ப் பார்ப்பேன். விரைவில் அவருடைய அணுக்கத் தொண்டனாகவும் ஆனேன்.; பிரசாதம் கொடுப்பது, பக்தர்களுக்கு மெயிலில் பிரசாதம் அனுப்புவது, பக்தர்களின் கடிதங்களைப் பெரியவாளுக்குப் படித்துக் காட்டுவது, தினசரி பத்திரிகைகளைப் படித்துக்காட்டுவத& #3009;, பக்தர்களின் க்யூ வரிசைகளைக் கட்டுப்படுத்துவது, இன்னும் அவர் எனக்கு என்னென்ன பணிகளிடுகிறாரோ அவைகளைச் செய்வது போன்ற பல.

ஏப்ரல் 15—ஆம் தேதி S.S.L.C பரீக்ஷை எழுதினேன். அதற்குள் பெரியவாளும் மடமும் சின்ன காஞ்சீபுரத்திற்கு& #2970;் சென்று விட்டனர். அந்த சமயத்தில் அவர் அருகிலிருந்த சிவாஸ்தானத்திலும், ஓரிக்கையிலும் முகாமிட்டிருந்தார& #3021;.. பரீக்ஷை முடிந்தவுடன், காஞ்சீபுரம் சென்று, அடுத்த இரண்டு மாதங்கள் அவருடன் இருந்தேன். ஜூன் 1955-இல் ‘ஹிந்து’ நாளிதழில் என்னுடைய பரீக்ஷை முடிவு வெளியானபொழுது, பெரியவாளிடம் போய் சந்தோஷமாகத் தெரிவித்தேன்..

ஜனவரி 23-ஆம் தேதி மெட்ராசிலிருந்து நியூயார்க் போகும் flght—இல் நான் மேட்டூர் ஸ்வாமிகள் சொன்னதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த 26 மணி யாத்திரையில் 8 மணி நேரம், நான் 1952 முதல் 1967 வரையிலான பெரியவாளுடனான என்னுடைய அனுபவத்தை மறுபடி ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். எதிரில் உள்ள திரையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தப& #3019;து, என் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தத& #3009;. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘நானும் என்னுடைய கஷ்டமான நாட்களையே நினைவில் வைத்திருக்கிறேன்.” என்று. எனக்கு அருகில் அமர்ந்திருந்த என்னுடைய இரண்டாவது மகன் பிரபாகர் அதைக்கேட்டு, “யாரைப்பற்றி எதற்காக நீங்களே சத்தமாகப் பேசிக்கொள்கிறீர்க& #2995;்?” என்று கேட்டான். அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபொழுது அதை நிச்சயமாக எழுதுவது என்று உறுதி கொண்டேன். வீட்டை அடைந்த பின், ஜனவரி 25—ஆம் தேதி இரவு எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வரிசையாக எட்டு இரவுகள், ஒவ்வொரு இரவிலும் நான்கு மணி நேரம், விடாமல் எழுதினேன். ஒவ்வொரு இரவும் அந்த அனுபவங்களைத் திரும்ப ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன் (என்னுடைய மனைவி என்னுடன் அப்போது திரும்பி வரவில்லை). ரமணியின் புல்லாங்குழல் இசையும் லால்குடி ஜயராமனின் வயலின் இசையும் மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கர்னாடக இசையில் இருந்த ஆர்வம் ஞாபகத்திற்கு வந்தது, முக்கியமாக, வீணை இசையில். எங்கே இதை தொடங்குவது என்று ஆலோசித்தேன். முன்னால் எழுதியுள்ள ‘அந்த இரவின் விஸ்வரூப தரிசனத்திலேயே தொடங்கினேன். எனக்குத் தெரியும், அவர் நினைத்தால் நான் எழுதுவதை நிச்சயமாகப் பார்ப்பார் என்று.

இனித் தொடர்வது என்னுடைய சொந்த விஷயம். படித்து முடிக்கும் வாசகர்கள்,, பெரியவாள் என்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறார் என்று அறிந்து கொள்வர். பெரியவா அவருடைய பரிசோதனைகளுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று, இப்பொழுதும் நான் ஆச்சரியப்படுவதுபோ& #2994;வே, அவர்களும் ஆச்சரியப்படுவர். அவருடைய கடாக்ஷம் எனக்குக் கிடைப்பதற்கு நான் அருகதை உடையவனே இல்லை. நான் எழுதியதில், பெரியவாளுக்குப் பல துறைகளிலும் இருந்த மிக உயர்ந்த திறமையையும் அறிவையும் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை; என்னுடைய வழியில் எழுதியிருக்கலாம்; ஆனால் அந்த முக்கிய விஷயம் பற்றி எண்ணும்பொழுது நான் என்னை ஒரு கடைநிலை சிஷ்யனாகவே கருதுகிறேன்.

1952—இல் இருந்து 1967 வரை உள்ள பதினைந்து வருஷங்கள் பெரியவாளுடன் நெருங்கிப் பழகும் பாக்யம் கிடைத்தது. முக்கியமாக, 1952 முதல் 1960 வரையிலான என்னுடைய பள்ளிமாணவ நாட்களில் பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவருடைய அணுக்கத் தொண்டனாக பணியாற்றினேன். அவருக்கு என் மேல் ஒரு ப்ரத்யேக அன்பு இருந்தது. மடத்தில் உள்ளவர்களும் மடத்திற்கு வருகிறவர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்தனர்; என்மேல் பொறாமையும் கொண்டணர். நான் இதை மிகவும் ரஸித்தேன்! ஒருமுறை, மடத்தின் மானேஜர் ஸ்ரீ விஸ்வனாத ஐயர் (எனக்கு மிகவும் பிடித்தவர்), பெரியவா நெடுநேரமாக தியானம் செய்துகொண்டிருந்த அறைக்குள் செல்ல விரும்பினார். தட்டிக்கதவுக்கு அருகில் நான் காவல் இருந்தேன். விஸ்வநாத ஐயர், பெரியவாளிடம் மிக முக்கியமான ஒரு விஷயம் தெரிவிக்க உள்ளே போகவேண்டும் என மிகவும் வற்புறுத்தினார். நான் அவரிடம் பணிவாக ஆனால் உறுதியாக, அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, இப்போது உள்ளே போக முடியாது என்று மறுத்தேன். அவர் கோபமடைந்து, மடத்தில் இருந்த பக்தர்கள் மத்தியில் கத்தினார், “அந்த துரைஸ்வாமி ஐயரோட பையன் சுந்தரராமன் மடத்துக்கு வந்துட்டா, பெரியவா அவனுக்கு முழு அதிகாரம் கொடுத்துடறா! மடமே அவனோட அரசாங்கமாயிடறது.” அன்று பிறகு ஒரு சமயம் அவர் பெரியவாளிடம் இதைப்பற்றிப் புகார் சொன்னார். அதற்குப் பெரியவா தந்த பதில், “ அவன் என்னை இத்தனை நன்னா பாத்துக்கறதுக்கு, நீன்னா அவனுக்கு நன்றி சொல்லணும்?”

இந்த ஏழை ஸ்கூல் மாணவனான என்னிடம் ஏன் பெரியவா இத்தனை அன்பும் பரிவும் வைத்திருக்கிறார்? இந்தக் கடாக்ஷத்தைப் பெற நான் அவருக்கு என்ன செய்து விட்டேன்? பல வருஷங்களுக்கு முன், நான் அவரைத் திடீரென்று விட்டு விட்டுப் போன பின்னாலும், வெகு தொலை தூரத்தில் இருந்த போதிலும், அவர் என்னை விடாது ஆசிர்வதித்திருக்க& #3007;றார் என்று எண்ணும்போது என் மனது வெடித்துவிடும் போல் இருக்கிறது.

1985—இல், நான் மெக்ஸிகோ நகரத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள், காஞ்சீபுரத்தில் இருக்கும் என் மருமான் சந்த்ருவிடமிருந்த& #3009; எனக்கு ஒரு கடிதம் வந்தது. கடைசியாக அவனிடம் இருந்து கடிதம் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. அவன் கடிதம் எழுதியதற்கு முதல் நாள் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றிருக்கிறான். எப்போதும் போல் பல பக்தர்களும் அணுக்கத்தொண்டர்கள& #3009;ம் இருந்தனர். திடீரென்று, சம்பந்தமே இல்லாமல், பெரியவா எல்லோருக்கும் ஒரு புதிர் போட்டார்.

“நான் ஒத்தனை மனஸால் நினைத்தேன். அவன் பறந்து போயிட்டான். யார் அவன்?”

(anusham163’s comment at this stage: இதைப்படித்த எனக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்து கதறி அழுது விட்டேன். எத்தனை ஒரு அன்பு இருந்திருந்தால் பெரியவா வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும்? நம்மைப்போன்ற ஸாதாரண மனிதர்களுக்குத்தா& #2985;் சுகம், துக்கம், போன்ற உணர்ச்சிகள். மஹான்களுக்கு அதொன்றும் கிடையாது என்றாலும், பெரியவா மனசில் அன்புடன் கூட, “திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டுப் போயிட்டானே” என்ற தாபம் அந்த வார்த்தைகளில் தொனிக்கிறதோ என்ற எண்ணத்தில்தான் நான் அப்படி அழுதேன். ஆனால் அவர் எதை நினைத்து அவ்விதம் சொன்னார் என்று யாரால் சொல்லமுடியும்?)

அரைமணி நேரம் ஆனபிறகும், அந்தப் புதிருக்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை. பெரியவாளே கடைசியில் புதிரை அவிழ்த்தார், “அந்த துரைஸ்வமியின் பையன் சுந்தரராமந்தான் அவன்”

பெரியவா எதற்காக என்னைப்பற்றி அன்றைய தினம் குறிப்பிட வேண்டும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த கடிதத்தைப் படித்து முடித்தவுடன், என்னை நம்புங்கள், என்னுடைய இதயம் நின்றுவிட்டது போல் இருந்தது; அழுதேன். மனைவி கடைக்குப் போயிர
புதுப்பெரியவாள் 1971-71 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வல்த்திற்கு ஏற்பாடு

செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல் வரிசையில் ஊர்வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தீடீரென்று ஏற்பட்ட

மின் தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்

விளக்குகள் எரியத்தொடங்கியது. இடையில் புதுப் பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கி விட்டிருந்தார்கள்*.

*வீதிவிளக்குகள் அணைந்ததும், பக்தர் திரு.டி.வி.சுவாமிநாதன் தன் இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்த காரணத்தைக்

கேட்க மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டார். அதற்குள் எல்லாம் சரியாயிற்று. மீண்டும் அவர் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப்

புறப்படும் சமயம் காஞ்சியிலிருந்து டெலிபோன் அழைப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்

விசாரித்தார். “ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா?” திரு.டி.வி.சுவாமிநாதன் நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன்

வினவினார், “சம்பவம் நடந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”

அதற்கு ஏ.நாகராஜ அய்யர், ”ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம், “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு

முன் நான் மலையாள ராஜ்ஜியத்தில் யாத்திரை செய்த போது இருந்ததை விட, புது சுவாமிகள் ஊர்வலத்திற்க்கு இன்று

தடபுடலான் ஏற்பாடுகள்…” இவ்விதம் சொன்ன பெரியவா, தீடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே?”

என்று சொன்னாராம், உடனே எர்ணாகுளத்திலிருந்த உங்களை கூப்பிட்டு, “என்ன நடந்தது?”” என்று அறியப் பணித்தார் என்று

கூறினார்.

அங்கு நடந்தது சிவாஸ்தானத்தில் இருந்த பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?, பெரியவாளுக்கு,, சிவாஸ்தானம் தான்

நேத்ரஸ்தானமா???
சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்?
காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

சாஸ்திர பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-
'பெரியவா'க்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

"சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும். பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அப்போது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர். பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொன்னார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அப்புறம் நான் அதை வாசிக்கலாமா?', என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன? வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார். 'இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த

பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.' 'சரியா இருக்கு!'. பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். 'க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும்' என்று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. 'தப்பு பண்ணிட்டேன், க்ஷமிக்கணும்' என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"

வீணை வித்துவான் ஏன் அழுதார்? காரணம் இதோ:

ராவணனின் ஸாம கானம் வந்த போது, அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து, 'யாருக்கு இது தெரியப் போகிறது?', என்று நினைத்து, வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார். பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ,

அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதைப் புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்? 'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.
பிரகஸ்பதி கொடுத்த வரம்

மஹா பெரியவா.....

“இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை என்ன விலை?”

“நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!”

மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி முடித்ததும் “அது போலத்தான் அர்ச்சனை பூக்களும், வில்வத்திலேயும், துளசியிலேயும். எத்தனை ஓட்டை தெரியுமா! நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா? தேவதைகள் நம்ப வேண்டாமா? பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்” என்றார்.

வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா.. அவாளுக்கு கிரகங்களும் நிறைய உபசரணை பண்றா.

ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.

“வீட்டுலே யாருமே இல்லே…பொழுது போகலே..”ன்னு தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு புரியும்.

தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா
ஆசிர்வாதம் பண்றார்.

தாயார், குடி இருந்த கோவிலில்லையா? இதேபோல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.

குருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும். பிரகஸ்பதி அப்படி வரம் கொடுத்திருக்கார்.
"சந்திரசேகரா ஈசா"

(ஒரு பழைய தினமலர்)


காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.

ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.

இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.

மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.
கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய இரண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள். பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம். ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவிடம் ஒரு கம்பிளியை குடுத்து "இதக் கொண்டு போய் பட்டுப் பாட்டிட்ட குடு" என்றார்.அன்று நள்ளிரவு, சற்று முன்புதான் கண்ணயர்ந்த பெரியவா, பாலு அண்ணாவை எழுப்பி, "பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?" என்றார்.தூக்கிவாரிப் போட்டது! ஆஹா! மறந்தே போய்விட்டோமே! " இல்லே பெரியவா......மறந்தே போயிட்டேன்""சரி.இப்போவே போயி அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவள்ட்ட குடுத்துட்டு வா"இந்த நடுராத்ரியிலா? குளிரான குளிர்! எங்கே போய் பாட்டியை தேடுவது? "காலம்பற குடுத்துடறேனே"தெய்வக் குழந்தை அடம் பிடித்தது. "இல்லே.....இப்பவே குடுத்தாகணும். ராத்ரிலதானே குளிர் ஜாஸ்தி?" அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஸ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்து கம்பிளியை சேர்த்தார் பாலு அண்ணா. பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது. அதே பாலு அண்ணா ஒருநாள் சம்போட்டி என்ற ஊரில் உள்ள கோவிலின் திறந்த வெளியில் மார்கழி மாசக் குளிரில் சுருண்டு படுத்து, எப்படியோ உறங்கிப் போனார். மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு சால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். சக பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. நாலு நாள் கழித்து, பெரியவா "ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?" என்று கேட்டார்."தெரியலே பெரியவா.....வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு. நான் தூங்கிண்டிருந்தேன்" தன் ஊகத்தை சொன்னார் பெரியவா ஜாடை பாஷையில் "அப்படி இல்லை" என்று காட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்! முகத்தில் திருட்டு சிரிப்பு!"நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..."தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.