படலம் 89: லட்சுமி தான முறை...
89 வது படலத்தில் லட்சுமிதான முறை கூறப்படுகிறது. முதலில் அதிகமான ஐஸ்வர்ய ஸித்திக்காக. லட்சுமிதானம் பற்றி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது நூற்றி இருபத்தி ஐந்து, நூற்றி எட்டு, இந்த கணக்குள்ள நிஷ்கம் என்ற அளவுள்ள தங்கத்தினால் லக்ஷண முறைப்படி லட்சுமிதேவி அமைக்கவும். பிறகு அந்த லக்ஷ்மியை துலாரோஹன முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதான மண்டபம் அமைத்து அந்த மண்டபத்தில் விஷ்ணுவின் இடது பாகத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அமைக்கவும் லட்சுமியை ஸ்ரீமந்திரம் அல்லது ஸ்ரீசூக்தத்தினாலோ அவ்வாறே மகாவிஷ்ணுவை விஷ்ணு காயத்திரியால் சந்தனம், புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவபூஜை ஹோமம் பரமேஸ்வரனுக்கு ஆயிரம் கலசம் இவைகளால் ஸ்நபனம் மஹாபூஜை செய்யவும் என கூறப்படுகிறது. அங்கு அக்னியில் ஹோமமோ செய்யலாம் என வேறு விதமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத கிரியையை துலாபார முறைப்படி செய்யவும் என கிரியையின் விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு 90வது படல கருத்து சுருக்கமாகும்.
1. விசேஷமான ஐஸ்வர்யத்தை உடைய லக்ஷ்மி தேவியின் தானத்தைக் கூறுகிறேன். ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ அல்லது அதில் பாதியான ஐநூறு தங்கத்தாலோ அல்லது அதிலும் பாதியான இருநூற்றி ஐம்பது சுவர்ணத்தாலோ
2. அல்லது அதிலும் பாதியான நூற்றி இருபத்தி ஐந்து சுவர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய மஹாலக்ஷ்மியை நிர்மாணிக்க வேண்டும். நூற்றி எட்டு நிஷ்கங்களாலும் இந்த மஹா லக்ஷ்மியை நிர்மாணம் செய்யலாம்.
3. முன்பு கூறியதைப்போல் வேதிகையுடன் மண்டலத்துடன் மண்டபத்தை நிர்மாணித்து அதில் மஹாவிஷ்ணுவையும் விஷ்ணுவின் இடது பாகத்தில் மஹாலக்ஷ்மியையும் ஸ்தாபிக்க வேண்டும்.
4. மஹாலக்ஷ்மியின் மந்திரத்தாலோ அல்லது ஸ்ரீ ஸூக்தத்தினாலோ அர்ச்சித்து, பூஜிக்க வேண்டும். மஹா விஷ்ணுவை, விஷ்ணு காயத்ரீ மந்திரத்தால் சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
5. சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமத்தை செய்ய வேண்டும். ஆசார்யன் முன்பு கூறிய வண்ணம் ஒரே ஹோமமாக விஷ்ணு, மஹாலக்ஷ்மி இவர்களுக்குச் செய்ய வேண்டும்.
6. ஸ்வாமிக்கு ஆயிரம் கலசங்களால் ஸ்நபனம் செய்து பூஜித்து அபிஷேகம் செய்ய வேண்டும். ஏதாவது கூறப்படாமல் இருந்தால் முன்பு கூறியதைப் போல் செய்யவேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லட்சுமி தான விதியாகிற தொண்ணூறாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
படலம் 89: லட்சுமி தான முறை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக