படலம் 79: அரசனுக்கு நீராஜனம் செய்யும் முறை...
79 வது படலத்தில் அரசனுக்கு நீராஜனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. முதலில் சாமர்த்யமான ராஜ விஷயத்திலும், ஸார்வ பவும ராஜ விஷயத்திலும் நீராஜன விதி கூறப்படுகிறது என்பது கட்டளை. பிறகு வேதிகையில் தோரண மாலையால் அலங்கரிக்கப்பட்ட அழகான ஆசார்யன் புதிதாக வஹ்நியை ஏற்படுத்தி அந்த அக்னியை வளர்ந்ததாகவும், மேல் எழுந்ததும் பிரகாசம் ஆனதுமாக சமித்துக்களால் ஜ்வாலை செய்து பத்திர, புஷ்ப, அக்ஷதைகளாலும், இலந்தை சமித்துக்களாலும் கூர்ச்சங்களாலும் மந்திரத்துடன் கூடி ஹோமம் செய்க என கூறப்படுகிறது. இதில் ஹோம விதியானது கூறப்படவில்லை. பிறகு பகவானான பவனை, கந்தபுஷ்பங்களால் பூஜித்து நீராஜன கர்மாவை செய்யவும். பிறகு கவுரியை முன்புபோல் பூஜித்து நீராஜன கர்மாவை அனுஷ்டிக்கவும். பிறகு மஹாவிஷ்ணு, லக்ஷ்மி, குஹன், பிரம்மா, கணபதி, சண்டிகை, சூரியன், யக்ஷர்கள், மாதுர்கணங்கள் மற்றும் எல்லா பித்ருக்களுக்கும் முன்புபோல் பூஜித்து நீராஜன விதியை மணியினால் பெரிய சப்தத்துடன் இடையூறு கூட்டத்தை போக்க எருமை மாடு, இவைகளுக்கு நீராஜனம் செய்யவும். பிறகு உத்தமமான ஆசார்யன் அரசனின் யானை, குதிரை, இவைகளுக்கும் ராஜ சின்னங்களுக்கும் நீராஜன கர்மா அனுஷ்டிக்கவும். அமைச்சர் முதலியவர்களால் சூழப்பட்டவரும் சிம்மாசனத்தில் அமர்ந்தவருமான அரசனை பலஸ்திரீகளால் அல்லது அழகு, யவுவனம், உடைய தாசீ நீராஜனம் செய்யவும் என கூறப்படுகிறது. நீராஜன விதியானது இந்த கிரந்தத்தில் ஏழாவது படலத்தில் கூறப்படுகிறது. முடிவில் நீராஜன கர்மா எந்த ராஜ்யத்தில், புரத்தில், கிராமத்தில், செய்யப்படுகிறதோ, அந்த ராஜ்ய ராஜா சுகமாக இருப்பார், சுபிக்ஷம் ஏற்படும் என கூறப்படுகிறது. பிராம்ணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கும் வியாதி ஏற்பட்ட சமயத்திலும் அதை போக்குவதற்காக நீராஜன கர்மா செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 79வது படல கருத்து சுருக்கமாகும்.
1. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி திதியில் இரவு வேளையின் ஆரம்பமான பிரதோக்ஷ வேளையில் வேதிகையின் மேல் தோரணம், புஷ்பமாலை இவைகளால் சதுரச்ரமான வேதிகையை அலங்கரித்து
2. புதியதான அக்னியை மந்திரங்களால் உத்தமமான ஆசார்யன் ஹோமம் செய்து, நன்கு வளர்ந்த மரங்களால் பிரகாசிக்கின்ற அக்னியை
3. இலந்தை மரங்களாலும் கூர்ச்சம், இலை, புஷ்பம், அக்ஷதை இவைகளாலும் சந்தனம், புஷ்பம் இவைகளாலும் ஈச்வரனை முன்பு கூறியபடி நீராஜனம் செய்ய வேண்டும்.
4. அந்த அக்னியினாலே அதை சிவனை அனுசரிக்கின்ற கவுரி விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, வினாயகர், சண்டிகை, சூர்யன், யக்ஷர்கள், மாத்ரு கணங்கள்
5. அவ்வாறே குஹன், பித்ருகணங்கள், ஸர்ப்ப தேவதைகள், ஆகிய எல்லாவற்றிற்கும் பசுவிற்கும் எருமைக்கும் நீராஜனம் செய்ய வேண்டும்.
6. மணி அடிப்பதால் உண்டான பெரிய சப்தங்களால் இடையூறுகளை போக்கி உத்தமமான ஆசார்யன் விசேஷமாக அரசனுக்கு நீராஜனம் செய்ய வேண்டும்.
7. குதிரைகள், யானைகள், ராஜசின்னங்கள் இவைகளுக்கும் சிம்மாசனத்தில் இருப்பவரும், அமைச்சர்களுடன் கூடியவருமான ராஜாவிற்கு நீராஜனம் செய்ய வேண்டும்.
8. சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கப்பட்ட தாயும் குலஸ்த்ரீகளாலும், இளமையான ஸ்த்ரீகளாலும் அழகான தாசிகளாலும் நீராஜனம் செய்யவேண்டும்.
9. எந்த ராஜ்யம், பட்டணம், கிராமங்களில் இந்த நீராஜனம் செய்யப்படுகிறதோ அங்குள்ளவர்களின் ராஜா சுகம் அடைகிறான், சுபிக்ஷத்தை அடைகிறான், நான்கு வர்ணத்தவர்களுக்கும் வ்யாதி ஏற்பட்ட பொழுது இந்த நீராஜனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ராஜநீராஜன விதியாகிற எழுபத்தி ஒன்பதாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
படலம் 79: அரசனுக்கு நீராஜனம் செய்யும் முறை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக