வெள்ளி, 20 செப்டம்பர், 2024

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...

 ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள், ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ பரமாச்சார்யாள், என்று உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன்னை இச்சா சக்தி என்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கிரியா சக்தி என்றும் போற்றியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது குரு ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அவர்களால் மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்காம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆச்சார்யராக நியமிக்க பட்டதில் இருந்து பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் பல செய்து நமது சனாதன மதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு இங்கே சொல்லி மாளாது. இருப்பினும் அடியேனுக்கு தெரிந்ததை சொல்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னற்ற பாடசாலைகள், சங்கரா பள்ளிகள், சங்கரா சிபிஎஸ் பள்ளி பாடங்களுடன் சேர்த்து வேத பாடசாலைகள், சங்கரா கல்லூரிகள், சங்கரா கண் மருத்துவமனைகள், சங்கரா முதியோர் இல்லங்கள், சங்கரா ஆயூர் வேதா கல்லூரிகள், ஜன கல்யான், சங்கரா சாரிட்டபுள் டிரஸ்ட், சங்கரா மருத்துவமனைகள், பாரத தேசம் முழுவதும் சங்கர மடங்கள் நிருவியது, சங்கரா கல்யாண மண்டபங்கள், காலடியில் ஆதிசங்கரருக்கு கீர்த்தி ஸ்தம்பம்  என்று நம் நம் புது பெரியவாளால் தொடங்கப்பட்டு இன்று வரை  ஏராளமான மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வருவது நம் புது பெரியவாளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு சன்யாசியாக மட்டும் இல்லாமல் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய சேவை இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து. இது போல் இன்னும் ஏராளமான பணிகளை செய்தது காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி ஸ்வாமிகளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையாகாது.


கருத்துகள் இல்லை: