ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று
முப்பத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 758 - 788]
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்... இவரின் தந்தை பெயர் '‘ஸ்ரீ பாலசந்திரர்''. பெற்றோர் இவருக்குச் வைத்த பெயர் ''சூரிய நாராயணர்''
இவர் வேற்று சமயத்தவர் தாக்கத்திலிருந்து நம் சமயத்தைக் [மதமாற்றம்] காத்த மஹான்.
இந்தியாவின் மேற்கு பகுதியில் முகலாய படை எடுப்பாளர்களால் நிகழ்ந்த அசம்பாவிதங்களை மாற்றி ஆறு சமயங்களும், அத்வைதமும் நிலை பெறும் படி செய்தார்.
இன்றும் ''குரு ரத்ன மாலை'' அதற்கு சான்றாக இருக்கின்றன. இவர பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற் கொண்ட போது இரண்டாவது குருவான பத்மபாதர் பின் தொடர்ந்து இவரை வழி நடத்த்தி சென்றார்.
மேலும் முதல் குருவான ஸ்ரீ ஆதி சங்கரர் இவருக்கு காட்சி அளித்ததோடு மட்டும் இல்லாமல் ஆதிசங்கரரின் பாதுகையை இவரிடம் அளித்தார் பத்மபாதர்.
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் “இது நம் குரு நாதரின் பாதரட்சை, இதை அனுதினமும் தொடர்ந்து பூஜித்து வர வேண்டும் என்று அருளினார்.
அந்த பாதுகைகள் தான் இன்றும் நம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் அனுதினமும் பூஜிக்கப்பட்டு வருகின்றது. சந்திர மௌலீஸ்வர பூஜை நடக்கும் சமயத்தில் இந்த பாதுகைக்கு இன்றும் பூஜை நடைப்பெற்ற வருகிறது.
யார் வேண்டுமானாலும் இந்த பாதுகை பூஜைக்கான பணத்தை ஸ்ரீமடத்தில் கட்டி இந்த பூஜையை செய்யலாம்.
இவர் கி.பி. 788 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், தை மாதம், சுக்லபக்ஷம் த்விதியை திதியில், சிதம்பரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் 20 ஆண்டுகள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளார்....
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 20 செப்டம்பர், 2024
37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக