ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

பராசரர்

பராசரர்

வசிட்டர் அருந்ததி அவர்களின்
மகன் சக்திரி.

சக்திரி ஓர் ரிஷி ஆவார்

சக்திரி அடர்ந்த மலைக் காட்டில் ஒற்றையடிப் பாதை வழியாக செல்கையில் எதிரில் வந்த இச்வாகு குல மன்னன் கல்மாஷபாதன்
பாதையை மறித்து நின்றார்.

கல்மாஷபாதன் ஓர் நல்ல மாமன்னன். விசுவாமித்திரரே அவனை சீடனாக ஏற்பதாக கூறியும் அவன் தொடர்ந்து மன்னனாகவே இருந்து வந்தான். வசிஷ்டருக்கு விசுவாமித்திரர் செயல் பிடித்தமானதாக இல்லை என கூறி வாதம் செய்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.

விலகி போ என இருவரும் மாறி மாறி சொல்லிய வண்ணம் வாக்குவாதம் செய்தனர். குதிரையை விரட்டும் சவுக்கால் சக்திரி முனிவரை அடித்துப் பாதையை விட்டு விலகிச் செல் என அடித்தார். தன்னை ஒரு ரிஷி என்று அறிந்தும், அரக்கத்தனமாக அடித்ததால், மன்னர் கல்மாஷபாதனை நரமாமிசம் உண்ணும் அரக்கனாக மாற சாபமிட்டார் சக்திரி. அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் வசிட்டர் மீதான கோபத்தை அவரது மகன் சக்திரியை அழிக்கும் விதமாக ஒரு செயல் செய்தார். ஏற்கனவே சக்திரியின் சாபம் பெற்ற கல்மாஷபாதனின் உடலில், விசுவாமித்திரர் ஒரு கிங்கரனை ஏவினார். கல்மாஷபாதன் சக்திரி முனிவரையும் அவரது தம்பியர்களையும் கொன்று குவித்து நரமாமிசம் உண்டான்.

முனிவர் சக்திரி இறந்த போது 12 வயதான அவரது மனைவி அத்ருச்யந்தீ கர்ப்பவதியாக இருந்தாள். ஓர் வனத்தினில் கற்பாரையில் வசிஷ்டர் அமர்ந்திருந்தார். அவரை தின்று பசியை போக்கி கொள்ள கல்மாஷபாதன் ஓடி வந்தான். தன் கமண்டலத்தில் இருந்த நீரை
கல்மாஷபாதன் மேல் தெளிக்க சுய உணர்வு பெற்றான் மன்னன்.

பன்னிரென்டு வருடங்கள் அரக்கனாக நரமாமிசம் தின்றவன்
மறுபடியும் மனிதனாக அரக்க குணம் இன்றி கையெடுத்து வணங்கி நின்றான். அவனை மன்னித்த வசிஷ்டர் நாடாள செல்ல பணிந்தார்.

அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. தனது மகன்கள் இறந்ததை தாக்கி கொள்ள முடியாமல் பல முறை வசிஷ்டர் உயிரை விட எத்தனித்த போது அவர் இறைவனால் காப்பாற்றப்பட்டார்.

ஓரு முறை வசிஷ்டருக்கு யாரோ மந்திரங்கள் சொல்வது காதில் விழுந்தது. மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டு விட்டான் என்றாள். தனக்கு ஓர் பேரன் வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர் வசிஷ்டரும் அருந்ததியும். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார்.

பராசரர் என்ற சொல்லுக்கு பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும் படி செய்பவன் என்பது பொருள்.

இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது.

அவனது தாய் ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லி விட்டாள். அத்துடன் அவனது தந்தை சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். தன் தந்தை மற்றும் தனது சித்தப்பாவை அழித்தவர்களை பழிவாங்க முடிவு செய்து வசிஷ்டரிடம் அனுமதி கேட்க
பழி வாங்குவது ரிஷிகளின் இயல் பில்லை என மறுத்து அவரை தடுக்கிறார். பராசரர் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான பூதங்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த பூதங்களைகளை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்திரியை நினைத்துக் கொண்டு முதிர்ந்த இளைய பால்ய பூதங்களைகளை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.

முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிவர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.

“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான பூதங்களைகளை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான நமக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்திரி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் கொல்லப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் சுவர்க்கம் சென்றுவிட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார். அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள். பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் அழிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டி விட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பலகாலமாக காணப்படுகிறது.

சக்திரிபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை சுப்ரமணியர் விழுங்கினார். தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார். வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ள நதி இதுவாகும். பராசரர் விஷ்ணுபுராணம் எழுதினார். பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது. பராசருக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவரே வேதவியாசர். வேதவியாசர் மகாபாரதத்தை தந்தவர் ஆவார்.


கருத்துகள் இல்லை: