ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சித்தர்கள்

இரகசியத்தை அறிந்துக் கொண்ட "சித்தர்கள்" பரம் பொருளான இறைவனை பஞ்சப்பூத ஆராதனைகள் மூலம் வழிப்பட்டனர்.

இப்பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், அதை தொடர்ந்து காற்று, பின் நெருப்பு - நீர் இறுதியில் நிலம் என்பதை உணர்த்தும் வகையில் "நமசிவய" என பஞ்சாட்சரத்தை மந்திரமாய் பிரயோகித்து "ந"-மண் "ம"- நீர் "சி"-நெருப்பு "வ" காற்று, இறுதியில் ஆன்மா ஒடுங்கும் இடமான "ய" ஆகாயமாய் இருப்பதை அறிந்து அனுதினமும் வணங்கி வந்தனர்.

அண்டத்தில் இருக்கும் இப்பூதங்களே சூட்சுமத்தில் இயங்கும் பிண்டங்களையும் ஆட்டுவிக்கின்றன. பஞ்ச பூதங்களில் ஆகாயம், நெருப்பு, நீர், நிலம் என நான்கு பூதங்களையும் இயக்கும் சக்தி காற்றாகும். 

காற்று இல்லா விட்டால் மற்ற பூதங்களால் தனித்து செயல்பட முடியாது என்பதை சித்தர்கள் உறுதி செய்தனர். எனவே சுவாசமான "காற்று" ஒடுங்கினால் "மனம்" ஒடுங்கும் ஐம்புலன்களும் அடங்கும் எனும் சூட்சுமத்தை உலகோர் அறிய தெரியப்படுத்தினர்.

சித்தர்கள் சுவாசத்தை ஒடுக்கும் முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், உடலில் அதீத உஷ்ணம் உண்டானது. அதீத உஷ்ணத்தால் ஏற்பட்ட பஞ்சபூத வித்தியாசத்தால் உடலை எண்ணிலடங்கா பிணிகள் சிதைத்தது. 

இப்பிணிகளை நீக்கி உடலை பேணி உயிரை காக்க வேண்டிய காலக்கட்டாயத்தால் உடலை பலப்படுத்தும் உபாயங்களைத் தேடி உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர். 

இறுதியில் சித்தர்கள் அனைவரும்  தஞ்சம் அடைந்த பூமி தான் குமரிக் கண்டமான இன்றைய தமிழகம்.

கருத்துகள் இல்லை: