ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சிந்தாமணி கணபதி

சிந்தாமணி கணபதி

அபிஜித் ஓர் அரசன். அவரின் மனைவி பெயர்
குணவதி. இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை அந்த அரசனை, வைஸம்பாயன முனிவர் சந்தித்தார். தனக்கு குழந்தை பிறக்க அருளச் சொன்னார். அவர் பிர்ம்மாவை நோக்கி தவம் இருக்க சொன்னார்.

முனிவர் சொன்னபடி அபிஜித்தும்,
குணவதியும் காட்டிற்குள் சென்று கடுமையான தவமியற்றினர். தவத்தின் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கண’ என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்ததும், மக்கள் அனைவரும் ‘கண ராஜா’ என்று அழைத்தனர். கண ராஜா பலமும், புத்திசாதுர்யமும் கொண்டவனாக விளங்கினான்.

ஓர் நாள் காட்டினில் வேட்டையாடி விட்டு,
அங்கே இருந்த கபில முனிவரின் ஆசிரமம் வந்தான். கபில முனிவரும் கண ராஜாவை வரவேற்று உபசரித்தார். தன்னிடம் இருந்த சிந்தாமணி ரத்தினத்தைக் கொண்டு, அறுசுவை உணவுகளை வரவழைத்து இளவரசனுக்கு விருந்து படைத்தார். அந்த அற்புதத்தைக் கண்ட கண ராஜா தனக்கு அந்த சிந்தாமணி ரத்தினத்தை தரும்படி கேட்டான். ஆனால் அதற்கு கபில முனிவர் மறுத்துவிட்டார்.

இதனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த ரத்தினத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கபில முனிவர், துர்க்கை அம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தார். முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற துர்க்கை, விநாயகரை நோக்கி தவம் இருக்கும் படி வலியுறுத்தினாள். கபில முனிவரும் அப்படியே செய்தார்.

முனிவரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரை வணங்கிய முனிவர் கண ராஜாவிடம் இருந்து சிந்தாமணி ரத்தினத்தை மீட்டுத் தரும்படி வேண்டினார்.. இதன் காரணமாக விநாயகருக்கும் கண ராஜாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண ராஜாவை வதம் செய்து, சிந்தாமணி ரத்தினத்தை மீட்டு, கபில முனிவரிடம் ஒப்படைத்தார் விநாயகர். ஆனால் கபில முனிவர் அதை தானே வைத்துக் கொள்ளாமல், அந்த சிந்தாமணி ரத்தினத்தை மாலையாக கோர்த்து, விநாயகரின் கழுத்தில் அணிவித்து

விட்டார்.

இதனாலேயே ‘சிந்தாமணி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

கருத்துகள் இல்லை: