ஒரு அம்மா சொன்னார் " நான் நிறைய ஸ்லோகங்கள் பாராயணம் செய்கிறேன் ! மத்தியானம் சாப்பிடவே ஒரு மணியாகின்றது ! ஆனாலும் என் பிரச்சினைகள் தீரவில்லை ! பகவான் கண் பார்க்கவே இல்லை ! "
“ஸ்லோகம் சொல்லும் பொழுது ஸ்வாமியின் முன்னால் அமர்ந்து கொண்டு ஸ்வாமியை மனதில் நிலை நிறுத்திக் கொண்டுதானே பாராயணம் ?” என்றேன் !
“அதெப்படி முடியும் ? குளித்துக் கொண்டும் பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டும்தான் சொல்லுகின்றேன் ! எல்லாம் எனக்கு மனப்பாடம் ! தவறுதலே வராது ! ” என்றார் அம்மையார்.
காய் நறுக்க வேண்டுமானால் அரிவாள் மணை அல்லது கத்தியைக் அருகில் வைத்துக் கொள்கிறோம் !? சமைக்க வேண்டுமென்றால் அடுப்பிற்குக் கிட்டே போகிறோம் !? குளிக்க, துவைக்க என்றால் தண்ணீரின் பக்கத்திலே போகிறோம் !? ஸ்கூட்டர், கார் எதுவானாலும் அதனிடம் சென்று ஓட்டினால்தான் ஓடுகிறது !?
ஆனால் ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்றால் நம் மனது ஸ்வாமிக்குக் கிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” யாக எங்கும் இருப்பவன்தான் அவன் ! ஆனாலும், முக்கியமான பிரச்சினை நமக்குத் தீர வேண்டும் என்றால் நாம்தானே மனதை ஒருநிலைப் படுத்தி அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்து அனுசரணையாக சிரத்தையாக சொல்ல வேண்டும் !? அப்படிச் சொன்னால் நிச்சயம் கேட்பான் !
வேறு வேலைகளைக் கவனம் இல்லாமல் செய்தால் விபத்து நடக்கும் என அறிந்து கொள்ளும் நாம் பகவானுக்கு மட்டும் முழு கவனம் இல்லாமல் ஸ்லோகங்களை முணுமுணுத்தால் போதும் என்று நினைக்கலாமா ?
மலர்ந்த புது பூவைப் பார்த்தால் பகவானுக்குத் தரவேண்டும் என்று ஆசை வரவேண்டும் ! நல்ல வாசமிகு சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்க வேண்டுமென்று எண்ணம் வரவேண்டும் ! அம்பாளின் அலங்கார ரூபம் எண்ணி ஒருநிலையாக தியானம் செய்தால் கருணை செய்கின்றவள் அல்லவா !?
கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டால் மூழ்கி விடும் ! ஆனால் மரத்தால் கப்பல் செய்து அதிலே எத்தனை கற்களை ஏற்றினாலும் மூழ்குவது இல்லை !
கவலைகள் கற்களைப் போன்றவை ! பகவான் தெப்பத்தைப் போன்றவர் ! மனது என்கிற சமுத்திரத்தில் பகவானைத் தெப்பமாக்க வேண்டும் ! தெய்வத்தை இணைக்கின்ற ஆணிகள்தான் பூஜை மந்திரங்கள் எல்லாம் !
பிறகு, கவலைகள் எனும் கற்களைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம் ! சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் நாம் சுலபமாகக் கரை சேர்ந்து விடலாம் !
- காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக