செவ்வாய், 24 செப்டம்பர், 2019

*அம்பிகையின் வைபோகம்*

*நவராத்திரியில் 9நாளும் செய்ய வேண்டியவை*

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். நவராத்திரி பூஜையும் அப்படியே!!

சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துகொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.

பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம். வீட்டிலே இருந்தால், ‘மஹா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை சுவாமிக்கு காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அனுபவிப்பதற்காக பிரபஞ்சம் முழுவதையும் போக்கிய வஸ்துகளை வெளியில் உண்டாக்கி, அவற்றை அனுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார்.

*9நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:*

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து  மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)
ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா

*ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:*

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

*ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:*

• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

*ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:*

நாம் அனுபவிப்பதை எல்லாம் அவருக்கு சமர்ப்பித்து விட்டே உபயோகித்து கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தை கொடுத்து விடுகிறோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம் தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் சுவாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாக கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர அவருக்கு இதனால் எதுவுமில்லை.

“நிவேதயாமி” என்றால் “அறிவிக்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர “உண்பிக்கிறேன்” என்று அர்த்தமில்லை. “அப்பனே, இந்த வேளைக்கு உன்னுடைய கருணையில் நீ இந்த அன்னத்தை கொடுத்திருக்கிறாய்!” என்று அவனுக்கு தெரிவித்து விட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸான்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

*தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:*

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி (வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

*பின் குறிப்பு:*

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.

அவளை  பூஜை என்று வைத்து கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம். என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இந்த பக்குவம் நம்மை நல்லவர்களாக்கும்.

நவராத்திரியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி , அன்னையின் அருளைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன்.
மற்றவர்களையும்  சந்தோஷப்படுத்தி, அதன்மூலம்  நாமும் சந்தோஷம் அடைவோம்.

*நவராத்திரி 2019 நமோ தேவ்யை  குமார் ராமநாதன்.*

கருத்துகள் இல்லை: