செவ்வாய், 24 செப்டம்பர், 2019

*பசுவின் பால் சைவமா அசைவமா ?*

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது.

அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.

இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது.

அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே.

முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம்.

பால் அப்படியல்ல.

பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.

ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.

பசுவுக்கு நான்கு மடு இருக்கும்.

இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.

பசும்பால் மனிதனுக்கு (சத்வ)சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது.

அது புனிதமானதும் கூட.

பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

 பஞ்ச கவ்யம் (பால்,தயிர்,நெய்,பசும்சாணம்,பசுங்கோமியம்) விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்கிறோம்
இதிலிருந்தே புரியாத பலரும் பால் சைவமா அல்லது அசைவமா என்று புரிந்து கொள்ளலாம்.

எது எப்படி புரிந்து கொண்டாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு எதிராக கோஷம் போட ஒரு கோஷ்டி இருந்து கொண்டுதான் இருக்கும்.

*பசு காயத்ரி மந்திரம்:-*

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு
பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக்
கொண்டவளாகவும், இருக்கிறாள்.

பசுவை அடிக்கவோ, விரட்டவோ
கூடாது. பூஜிக்க வேண்டுமென
வேதம் சொல்கிறது.

பிரும்ம சிருஷ்டியில்
உலகம் உய்ய முதலில்
பசுவைப்படைத்து அதன் உடலில்
பதினான்கு உலகையும் முப்பத்து
முக்கோடி தேவர்களையும்
இருக்கச் செய்தார் பகவான்

அதில் முதலில்
வந்தவர்களான தர்மராஜனும்
காலதேவனும்தான் முகத்தில்
இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும்
குடியேறினார்கள். இதில் இரண்டு
பேர்கள் தாமதமாக வந்தார்கள்.

அவர்கள் மஹாலட்சுமியும்
கங்கையும். பசுவின் உடலில்
இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை
மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம்
கொடுத்தால் போதும் என்று
கெஞ்சினார்கள்.

பசுவும்,
தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு
அனுதாபம் இருக்கிறது. ஆனால்
இடமே இல்லையே, ஒன்று
வேண்டுமானால் செய்யுங்கள், என்
உடலிலிருந்து வரும் சாணம்,
கோமூத்ரம் இரண்டும் யாருக்கும்
சொந்தமாகவில்லை.

நீங்கள்
விரும்பினால் அதில் இருக்கலாம்
என்று சொல்ல லட்சுமியும்
கங்கையும் மிகுந்த
சந்தோஷத்துடன் அந்த இடத்தில்
வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அதனால் இன்றைக்கும் பசுவின்
பின் புறத்தில் லட்சுமியும்,
கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.
அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல
பாபங்களையும் போக்கி லட்சுமி
கடாட்சம் அளிக்கக் கூடியது
என்கிறது சாஸ்திரம்.

ஹரே கிருஷ்ண

*பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.!*

பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,
 *முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

 *கொலை களவு செய்வதால் உண்டாகும்
  பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

 *நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

 *பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

பசுவும் புண்ணியங்களும்.....
*******************************

 *பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

 *பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

 *பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

 *பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

 *பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

`மா’ என்று பசு கத்தும் ஓசை..
அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

 *பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

 *மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

 *ஒருவர் இறந்த பின் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் கலந்து ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.

 *பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

 *உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை: