ஐம்பெரும் காப்பியம் அறிமுகம்
பழந்தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.காப்பியம் என்பது தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலை நாதர்.அறம்,பொருள், இன்பம்,வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின.இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் ஆகும்.இவ்விரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர்.இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி சமகாலத்தில் தோன்றியவையாகும்.பிற மூன்று காப்பியங்களும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது.அதில் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும்.அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் ஆகும்.மூன்றாவதான சீவகசிந்தாமணி விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம் என்பதுடன் காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது.நான்காவதாக உள்ள வளையாபதியில் விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம் கடைசியாக உள்ள குண்டலகேசியோ சமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும்.ஐம்பெரும் காப்பியம் பற்றி தண்டி அலங்காரம் கூறும் இலக்கணம்
பெருங்காப்பிய நிலைபேசும் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
ஏற்புடைத் தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக