திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பார்த்து அருள் புரியும் ஆறுமுகநயினார் சன்னதி பற்றிய சில அரிய தகவல்கள் அடங்கிய பதிவு!
பெரும்பாலான கோவில்களில், ஆறுமுகங்கள் கொண்ட முருகன் சிலை முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்களும் ஆறாவது முகம், பின்புறமும் அமைக்கபட்டிருக்கும்.
பின்புறம் உள்ள ஆறாவது முகம், “அதோ முகம்"என அழைக்கப்படும்.
இந்த ஆறாவது முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்கும் வகையில் அமைக்க பட்டிருக்கும்.
ஆனால் அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோவிலில் ஆறுமுகங்கள் கொண்ட சக்தி மிக்க ஆறுமுகநயினார் சிலை தனி சன்னிதியாக தெற்கு நோக்கி அமைக்கபட்டுள்ளது மிக அபூர்வமான ஒன்றாகும்.
இந்த ஆறுமுக நயினார் சன்னிதியில் ஆறுமுகங்கள் கொண்ட சக்தி மிக்க இந்த ஆறுமுகநயினார் சிலை அபூர்வமான முறையில் அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கும்படி அமைக்கபட்டுள்ளது மிக விசேஷமான அமைப்பாகும்.
மேலும் இந்த ஆறுமுகநயினார் சிலையை சுற்றிவந்து வழிபடும் வகையிலும் அமைக்கபட்டுள்ளது.
இப்படியொரு வடிவமைப்பு,வேறு எந்தக் கோவிலிலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆறுமுகங்கள் கொண்ட சக்திமிக்க இந்த ஆறுமுகநயினார் தன்னை அண்டிவரும் பக்தர்களைக் காப்பாற்ற வல்லவர்.
ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு பார்த்து அமர்ந்திருப்பது போல,இந்த ஆறுமுகநயினாரும் தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார்.
இது மிக மிக விசேஷமான அமைப்பாகும்.
உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான சக்தி இருப்பதை உணரலாம்.
அந்த வகையில் தெற்கு நோக்கி ஆறுமுகநயினார் சுவாமி இங்கு மட்டுமே மூலவராக அமர்ந்திருப்பது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு!
மனிதனின் மனதில் தோன்றும் ஆறு தீய குணங்களான காமம் (இச்சை), க்ரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தனம்), மோஹம் (ஆசை), மதம் (செருக்கு), மாஷர்யம் (பொறாமை) ஆகிய 6 தீய குணங்களை ஆறுமுக கடவுளாக இங்கு காட்சி தரும் முருகன் தீர்த்து வைக்கிறார்.
சில நூறாண்டுகளுக்கு முன்பு மலையாள நம்பூதிரிகள் சிலரது சதியால் இப்படிபட்ட சக்தி மிக்க ஆறுமுகநயினார் சன்னிதியில் தெற்கு பார்த்த மூலவர் முருகனின் அதீதமான, அற்புதமான சக்திகளை முடக்கி பூட்டபட்டுவிட்டது.
நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி மீண்டும் திறக்கப்பட்டதற்கு குளத்தூர் ஜமீன்தார் வழியில் வந்த தில்லைத் தாண்டவராயர் மற்றும் அமாவாசை சித்தர் ஆகியோரதான் காரணம் என்பது ஆன்மிக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத உண்மை சம்பவமாகும்.
இதைப்பற்றி விரிவாக பார்ப்போமா!
நெல்லை மாநகரில் மிகவும் அற்புதமான தெய்வக் காரியங்களை குளத்தூர் ஜமீன்தார் வழியில் வந்த தில்லைத் தாண்டவராயர் என்பவர் திறம்படச் செய்து வந்துள்ளார்.
இவரால் நெல்லைக்கு அழைத்து வரப்பட்ட அமாவாசை சித்தர் என்பவரால்தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை சம்பவமாகும்.
குளத்தூர் ஜமீன்தார் வழி வந்த தில்லைத் தாண்டவராயர் என்பவர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண்மனை போன்ற வீட்டை கட்டி வசித்து வந்தவர்.
தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள்.
தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார்.மேலும் இவர் கார்காத்த வெள்ளாளர் குலத்தை சேர்ந்தவர்.
இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்கும் பழக்கமுடையவர்.
தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே என்பதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வாராம்
அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள்.
இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்துள்ளார்
இவர் அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை காசி சென்றபோது அங்கு அமாவாசை சித்தரை என்பவரை சந்தித்துள்ளார்..
நாகர்கோவிலைச் சேர்ந்த அமாவாசை சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு,பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர்.
தன் கால் போன போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார்.
இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது.
எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.
அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டு படுத்து கிடப்பாராம்.
இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம்.
இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது.
ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர்.
இவர் பகல் வேளையில் கடை தெருக்களில் சுற்றி வருவார்.
கடை வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார்.
அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார்.
மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான்.
எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ என காரணப்பெயர்.
ஒரு நாள் அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும் நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.
கண்ட ராம பாண்டியன் என்பவரால் பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை முழுவதுமாக மனமுருக வேண்டி நின்றுள்ளனர்.
பின் பிரகாரம் சுற்றி வந்தபோது நெல்லையப்பர் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தததை கண்டு மனம் நொந்து போனார்கள்.
ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்துள்ளார்.
அவர் எப்போதும் ஆறுமுகநயினார் சன்னிதி நினைவாகவே இருந்துள்ளார்.
தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார்.
திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது.
கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான்.
சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை.
இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும்.
எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது.
அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.
கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம்.
காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்களாம்.
அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்களாம்.
இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார்.
எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியை எப்படியாவது திறந்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்ற நினைவுகளுடன் குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர் இருப்பதை கண்டவுடன், போகர் மாயாசித்தர் மற்றும் வல்லநாட்டு சாது சிதம்பர சித்தர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்துள்ளார் அமாவாசை சித்தர்.
சிலரது சதியால் பூட்டப்பட்ட ஆறுமுக நயினார் சுவாமி சன்னிதியை திறப்பதற்கு எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள், அதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்ததால் மாயாசித்தர் மற்றும் வல்லநாட்டு சாது சிதம்பர சித்தர் ஆகிய சித்தர்களுடன், அமாவாசை சித்தர் ஆலோசித்துள்ளார்.
இதற்காக மூன்று சித்தர் பெருமக்களும் கூடினர். போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஒரு ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர்.
இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எல்லாவிதமான தீய சக்திகளும் ஒழிந்து போகும்.
குறிப்பிட்ட நாளில் இந்த ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.
தொடர்ந்து குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் அவர்கள் உதவியால் பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம்!மலையாள நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது.
ஆறுமுக நயினார் கோவில் சன்னிதி திறக்கப்பட்டது.
அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது.
பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரையிலும் இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.
காலங்கள் கடந்தது.தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர்.
அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர்.
இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.
‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர்.
சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார்.
சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார். அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும்.
ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார்.
ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்துள்ளார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார்.
போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது.
உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது.
அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார்.
அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி.
அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார்.
அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.
அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.
சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு.
சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.
அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.
போகர் மாயா சித்தர், மிகவும் விசேஷமானவர். இவரது காலடிப் படாத இடமே மகேந்திர கிரி மலையில் இல்லை எனக் கூறலாம்.
இந்த மலையில் சிவன் பாதம், தாயார் பாதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது.
மனிதர்கள் செல்ல முடியாத, தேவர்கள் மட்டுமே வாழும் தேவபூமியும் இங்குண்டு. அவ்விடங்களில் எல்லாம் அமர்ந்து போகர் மாயா சித்தர்.தியானம் செய்வாராம்.
மகேந்திரகிரி மலையில் தியானம் செய்வது சாதாரணமான விஷயம் அல்ல. அங்கு செல்ல வேண்டும் என்றால், 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதை மிகச் சுலபமாகக் கையாண்டுள்ளார் போகர் மாயா சித்தர்.
அதுபோலவே வல்லநாடு சித்தரும். தனது உடலை எட்டு துண்டாகப் பிரித்து நவக் கண்ட யோகம் செய்யக் கூடியவர்.
ஒரே நேரத்தில் பல இடத்தில் இருப்பவர். இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர்.
பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர்.
செண்பகாதேவி அருவி அருகே உள்ள கசாயக் குகையில் அமர்ந்து தவம் புரிந்தவர்.
ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.
இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது.
இவரை வள்ளலாரின் வழித்தோன்றல் எனவும் கூறுவர். இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.
நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம்.
இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது.
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்குகிறது. மேலும் திருமணத் தடை அகன்று குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
முக்கிய குறிப்பு:நான் பிறந்து வளர்ந்தது,கல்வி கற்றது எல்லாமே திருநெல்வேலியில்தான்.
நானும் பெருமைக்குரிய கார்குலத்தில் பிறந்தவன்தான்.
பெருமைக்குரிய குளத்தூர் ஜமீன்தார் தில்லைத்தாண்டவர் வழித்தோன்றலான திரு.இரத்தின சபாபதி பிள்ளை அவர்களின் மூத்த புதல்வருக்கு எனது பெரியப்பா மகளை திருமணம் செய்து கொடுத்த வகையில் குளத்தூர் ஜமீன்தாருக்கு உறவினராவேன்.
எனது பால்ய காலத்தில்
நெல்லையப்பர் கோவிலில் உள்ள இந்த ஆறுமுக நயினார் சன்னிதிக்கு பலமுறை சென்ற வழிபட்டுள்ளேன்.
அப்போதெல்லாம் இந்த ஆறுமுக நயினார் சன்னதியில் இப்படி பட்ட அரிய நிகழ்வுகளை நடந்துள்ளதை அறிந்திலேன்.
அதுவும் பெருமைக்குரிய குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர் பற்றியும் தெரியாமல்
இருந்துள்ளேன்.
பலமுறை கருப்பந்துறைக்கு சென்றிருந்தாலும் அமாவாசை சித்தர் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏதும் தெரியாதவனாக இருந்துள்ளேன்
இறைவனின் அருளாசியால் ஆன்மீக செய்திகள் தொடர்பாக இணைய தளத்தில் தற்செயலாக
மேற்கண்ட நிகழ்வுகளை படித்தவுடன்
இந்த அரிய நிகழ்வுகளை தொகுத்து பதிவிட்டுள்ளேன்.
இந்த பதிவினை படிக்கும் ஆன்மீக அன்பர்கள்,நெல்லையிலுள்ள எனது உறவினர்கள்,நண்பர்கள் ஒரு முறையாவது நெல்லையப்பர் கோவிலிலுள்ள ஆறுமுகநயினார் சன்னிதி,அமாவாசை சித்தர் சமாதி வல்லநாடு சித்தர் சமாதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்டுவர கேட்டு கொள்கிறேன்.
🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக