தமிழகத்திற்கு 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் குலசேகரமுடையார் நடராஜர் பஞ்சலோக விக்கிரகம்
------------------------------------------------------------------------------------------------
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி திரு பொன்மாணிக்கவேல் மற்றும் திரு ராஜாராம் அவர்கள் மற்றும் அவருடைய குழு இன்று 37 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து களவாடப்பட்ட குலசேகரமுடையார் கோவிலில் இருந்த நடராஜர் பஞ்சலோக விக்ரஹம் ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விக்கிரகம் கண்டுபிடிக்க முடியாது என்று முதல் குற்றப்பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக காவல்துறை முடித்து வைத்து இருந்தது. ஆனால் திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் திரு ராஜாராம் அவர்களும் மற்றும் அவர் குழுவும் சிறப்பாக பணியாற்றி விக்கிரகத்தை திரு நாகசாமி அவர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஆவணங்கள் மூலம் இது நம்நாட்டு விக்கிரகம் தான் என்பதை நிரூபித்து அதை திரும்பப் பெற்று என்று சென்னைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
சிறப்பு புலனாய்வுப் பிரிவு செயல்படக் கூடாது என்பதற்காக ஏகப்பட்ட தடைகளை தமிழக அரசு போட்ட போதும் அல்லும் பகலும் அயராது உழைத்து இந்த சிறிய புலனாய்வு குழு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினால் கைவிடப்பட்ட இந்த வழக்கை புலனாய்வு செய்து வெற்றிகரமாக முடித்து வைத்திருக்கின்றது. என்னைப் பொறுத்தமட்டில் ஏகப்பட்ட தடைகளை விதித்த தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விதத்தில் தங்களின் செயல்களால் இந்த சிறப்புப் புலனாய்வுக்குழு திரு பொன் மாணிக்கவேல் தலைமையில் பணியாற்றியுள்ளது என்று சொல்வேன்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புது தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் இந்த குழு 13ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். ஆன்மீக அன்பர்கள் திரளாக வந்து குலசேகரமுடையார் கோவிலில் நடராஜர் விக்கிரகத்தையும் அதை மீட்டுக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக