ஞானி ஹநுமாரும் அவரது ஞான குருவும்
அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.
துளஸீதாஸ் என்ற பரம பக்தர் ’’ராம் சரித் மானஸ்’ – ‘ராமசரிதமானஸம்’ – என்கிற தலைப்பில் எழுதியிருக்கிற ஹிந்தி ராமாயணம் வடக்கேயெல்லாம் ரொம்ப ப்ரஸித்தம். இங்கே நாம் கம்பராமாயணத்தைக் கொன்டாடுவதைவிட அங்கே அவர்கள் அந்த ராமாயணத்தை ரொம்பவும் பூஜிதையாகக் கொண்டாடிப் பாராயணம் பண்ணுவது வழக்கம். முந்நூறு-முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன் எழுதிய புஸ்தகம்தான் அது. தமிழ் மாதிரிப் பழமை பெறாத ஹிந்தி பாஷைக்கு அந்த ராமாயணத்தால் தான் இலக்கிய ரீதீயிலும் ஒரு ஏற்றம் கிடைத்திருக்கிறது. இலக்கியமாகச் சிறப்புப் பெற்றாலும், இலக்கணம் என்று பார்த்தால் அது புலவர் பாஷையில் எழுதினதில்லை. பாமர ஜனங்களும் ரஸித்துப் படிக்கிற மாதிரியான பாஷையிலேயே அதை துளஸீதாஸ் செய்திருக்கிறார். அதனால்தான் அது கம்ப ராமாயணத்தை விடவும் ஸர்வ ஜன ப்ரஸித்தமாக, பாமர-பண்டித ரஞ்ஜகம் என்னும்படியாக இருந்து வந்திருக்கிறது. பக்திக்கு பக்தி, கவிதாரஸத்துக்குக் கவிதா ரஸம் என்று இரண்டுமாக அது இருந்தாலும் அதனுடைய பக்தி சக்தியே பொது ஜனங்களை பலமாகத் தொட்டு வருகிறது.
துருக்கர்கள் ஆட்சியில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக பலவந்தம் நடந்து வந்த காலத்தில் எழுதிய புஸ்தகம் அது. அந்த பலவந்தத்தையும் மீறி ஜனங்கள் தாய் மதத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததற்கு ‘ராம்சரிதமானஸ்’ ஊட்டிய பக்தியும், மத உணர்ச்சியும் ஒரு முக்யமான காரணம். அதிலே வருகிற மஹாவீர பலவந்தரான ஆஞ்ஜநேயரின் ஸாஹஸங்கள் எந்த பலவந்தத்துக்கும் தலை பணியாத ஒரு மனோபாவத்தை ஜனங்களுக்கு ஊட்டியது. துளஸிதாஸே பரம பராக்ரமசாலியான ஆஞ்ஜநேயரின் காப்புக் கவசம் எந்த ஆபத்திலும் பக்தர்களுக்கு இருப்பதைக் காட்டி, ரொம்பவும் வீர சூரம் கொடுக்கும்படியாக ‘ஹநுமான் சாலீஸா’ என்று நாற்பது ஈரடிச் செய்யுள்கள் கொண்ட ஒரு தனி ஸ்தோத்ரமும் எழுதியிருக்கிறார். எவரானாலும் அதைப் படித்து மனப்பாடம் செய்யும்படியாகப் பண்ணும் ஆகர்ஷணம் அந்த ஸ்தோத்ரத்துக்கு உண்டு. படித்தாலே மஹா கோழையான சோப்ளாங்கிகளுக்கும்கூட, ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பலத்தில் தானும் பயில்வானாகி விட்ட மாதிரியான உத்ஸாஹத்தை அது கொடுக்கும். அந்த ஸ்தோத்ரமும் அவர் நாளிலேயே ஜனங்களுக்கிடையே நன்றாக ப்ரஸித்தமாகி, மதமாற்றத்துக்குத் தடுப்பு வேலி போட்டது.
துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதிரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்.
அப்படிப்பட்டவர் பண்ணின ஆஞ்ஜநேய ஸ்தோத்ரம்தான் நான் ஆரம்பத்தில் சொன்னது. அவருடைய ராம் சரித் மானஸில் ஆஞ்ஜநேய ப்ரபாவத்துக்கேயான ஸுந்தர காண்ட ஆரம்பத்தில் வரும் மங்கள ச்லோகங்களில் ஹநுமத்பரமாக வருகிற ச்லோகம்தான் அது. உள்ளே கதை ஹிந்தி பாஷையில் இருந்தாலும், ‘ராம் சரித் மான’ஸில் வரும் மங்கள ச்லோகங்கள் எல்லாம் அழகான ஸம்ஸ்க்ருதத்திலேயே இருக்கும். அப்படி ஒன்றுதான் நான் சொன்னது.
அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
’வாதஜாதம் நமாமி’ என்று நமஸ்காரம் பண்ணி முடிகிறது. ‘வாதஜாதன்’ என்பதுதான் இந்த ச்லோகத்தில் ஆஞ்ஜநேயரின் பெயராக வருவது. ‘வாதஜாதன்’ என்றால் ‘வாயுகுமாரன்’. ‘வாதம்’-வாயு; ‘வாயுப் பிடிப்பு’ என்பதை ‘வாதம்’ என்றும் சொல்கிறோமல்லவா? ‘ஜாதன்’ – குமாரன். ‘வாதாத்மஜன்’ என்றும் இதே அர்த்தத்தில் ஆஞ்ஜநேயருக்கு பெயர் உண்டு. ‘வாத(da)ம்’ இல்லை; ‘வாத(ta)ம்’ என்று சொல்ல வேண்டும். ‘வாதம்’ என்றால் பேசுவது; ‘ஆர்க்யூ’ பண்ணுவது.
இந்த ச்லோகத்தை நான் சொல்லக் காரணம், அதில் ‘ஞானினாமக்ரகண்யம்’ – ஞானினாம் அக்ரகண்யம்’ என்று வருவதுதான். அப்படியென்றால் ‘ஞானிகளுக்குள்ளே முதல்வராக எண்ணத் தக்கவர்’. ப்ரஹ்ம ஞானிகள், ஆத்ம ஞானிகள் என்று சொல்லப்படுகிறவர்களில் ஆஞ்ஜநேய ஸ்வாமிக்குத் தலை சிறந்த இடம் என்று ச்லோகம் சொல்கிறது.
பொதுவிலே ஆஞ்ஜநேயருடைய சிறப்புக்களாகச் சொல்லப்படுபவை அவருடைய பலம், அதாவது சரீர பலம், வீர பராக்ரமம், துணிச்சல், கார்ய ஸாமர்த்யம், அபாரமான புத்தி தீக்ஷண்யம், குறிப்பாக வ்யாகரணத்தில் படுத்வம் (இலக்கணத்தில் பேராற்றல்), அப்பழுக்குச் சொல்ல முடியாத ப்ரஹமசர்யம், தன்னுடைய இத்தனை சக்திகளையும் தனக்காக இல்லாமல் பகவத் ப்ரீதியாக தர்மத்துக்கே ப்ரயோஜனப்படுத்தியது, எல்லாவற்றுக்கும் மேலாக ராம பக்தியில் அப்படியே உருகி ராமருடைய அடியார்க்கடியாராக அடங்கிக் கிடந்த விநயம் ஆகியவைதான். சரீர பலம், கார்ய ஸாமர்த்யம், செய்கிற கார்யத்திலேயே ஆடாத, அசையாத ஈடுபாடு ஆகியவற்றால் அவரைப் பெரிய கர்ம யோகியாகவும், அசஞ்சலமான ராம பக்தியால் பக்த யோக சிகாமணியாகவும்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஞான யோகியாக அவரை நம்மில் ரொம்பப் பேர் தெரிந்து கொள்ளவில்லை.
அவர் மஹா புத்திமான். ’புத்திமதாம் வரிஷ்டம்’ என்று சொல்கிறபடி* இருந்தவர் என்பதும் நமக்குத் தெரியுமானாலும், புத்தி வேறே, ஞானம் வேறேதானே? இன்றைக்கு லோகத்தில் பல துறைகளில் மஹா புத்திமான்களாகப் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஞானி என்று சொல்ல முடியுமா? ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ‘தான்’ என்கிற ஜீவாத்மா என்ற அறிவை அநுபவமாகப் பெற்றவனைத்தான் ஞானி என்று சொல்கிறது – ப்ரஹ்மஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சொல்கிறது. அந்த அறிவைப் பெறவும் நிரம்ப தத்வ சாஸ்த்ரங்கள் படித்து அவற்றில் புத்தியைச் செலுத்தி அலசிப் பார்க்க வேண்டுமாதலால், இங்கேயும் புத்தி அவசியம்தான் என்றாலும், அந்த புத்தி ஆத்ம விஷயத்தில் மட்டுமே ப்ரவர்த்திப்பதாக இருக்க வேண்டும். புத்திமான்களாக மட்டும் இருப்பவர்கள் அப்படி தத்வ சோதனம் செய்பவர்களாக இல்லாமல் வேறே ஸ்ப்ஜெக்டுகளிலேயே புத்தியைப் ப்ரயோகிப்பவர்களாக இருப்பதுதான் ஜாஸ்தி. தத்வ ஆராய்ச்சியே அவர்கள் பண்ணினாலுங்கூட, அது பெரும்பாலும் வெறும் மூளையின் அலசலாகத்தான் இருக்கும்; பரமாத்ம-ஜீவாத்ம ஐக்யத்தை அநுபவித்தாக வேண்டும் என்ற ஹ்ருதய தாபம் கலக்காத மூளையலசலாக மட்டுமே இருக்கிற அது ப்ரயோஜனமில்லை. அது ஞானமுமில்லை. மஹா புத்திமானேயானாலும் அப்படிப் பட்டவர் ஞானிக்கு எங்கேயோ தள்ளி நிற்கிறவரே.
இங்கே ’புத்திமதாம் வரிஷ்ட’ரான ஆஞ்ஜநேயர் மற்ற புத்திமான்களுக்கெல்லாம் வித்யாஸமாக இருக்கிறார். அவர் வேதாந்தத்தின் பரம தாத்பர்யத்தை அறிந்தநுபவித்தவர். அது மட்டுமில்லை. அப்படி அறிந்தநுபவித்தவர்களிலேயும் முதலாமவராக நினைக்கத்தக்கவர், ‘ஞானினாம் அக்ரகண்யர்’ என்று அவரை நேருக்கு நேராக அறிந்திருந்த துளஸீதாஸ் சொல்கிறார்.
லோகமறிந்த ஆஞ்ஜநேயருடைய மற்றப் பெருமைகளில் சிலதையும் அவர் இந்த ச்லோகத்தில் சொல்லியிருப்பதால், அதிகப்படியாக அவர் சொல்லியிருக்கும் இதுவும், அதாவது ஆஞ்ஜநேயர் ஞானி ச்ரேஷ்டர் என்பதும் பரம ஸத்யமாகத்தான் இருக்கவேண்டும்.
அந்த மற்றப் பெருமைகள் என்ன? ‘அதுலித பலதாமம்’ என்று ஆரம்பிப்பது ஆஞ்ஜநேயரின் சரீர பலத்தைச் சொல்வதுதான். ‘அதுலித பலதாமர்’ என்றால் ‘தன்னிகரில்லாத பலத்தின் இருப்பிடமாக இருப்பவர்’. அப்புறம் ‘ஸ்வர்ண சைலாப தேஹம்’ என்பதாக அவருடைய சரீரம் பொன்மலையான மேரு மாதிரிப் பெரிசாக, ப்ரகாசமாக இருப்பதைச் சொல்கிறார். அந்த ஸ்வர்ண வர்ணம் அவருடைய ப்ரஹ்மசர்ய தேஜஸால் ஏற்பட்டது. ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ என்று மாணிக்க வாசகர் சொன்னார். ஆஞ்ஜநேய ஸ்வாமியிடமோ உள்ளொளி ஸ்வர்ண காந்தியாக ஊனிலும் ப்ரகாசித்தது; அந்த ஊனை உருக்காமல் அவர் மேரு பர்வதம் மாதிரியான சரீரியாக இருந்தார். ஏனென்றால், அவர் கர்ம யோகியாக அஸாத்யமான கார்யங்களைச் செய்ய வேண்டியிருந்ததே, அதனால்! அந்த அஸாத்யமான கார்யங்களில் ஒன்றைத்தான் அடுத்ததாக வரும் ‘தநுஜ வன க்ருசானும்’ என்பது சொல்கிறது. அப்படியென்றால், காட்டுத் தீ என்று உண்டே, அப்படி அவர் ராக்ஷஸ குலம் என்கிற காட்டை பஸ்மம் பண்ணின அக்னியாயிருந்தவர் என்று அர்த்தம்.
இப்படி அவருடைய கார்ய லோக சதுரத்தைச் சொன்னவிட்டுத்தான் சட்டென்று ஞானி லோகத்துக்குத் துளஸீதாஸ் போய் அவரை ‘ஞானினாம் அக்ரகண்ய’ராக ஸ்தோத்ரிக்கிறார்.
அதற்கப்புறம் அவருடைய மனோ விசேஷத்தைச் சொல்கிறார்: ‘ஸகல குணநிதானம்’. அத்தனை ஸத்குணங்களுக்கும் ஒரு தேக்கமாக, கஜானாவாக அவர் இருந்தாரென்று அர்த்தம். அந்த குணங்களில் ஒன்றாகவே அவருடைய புத்தி தீக்ஷண்யத்தையும் வைத்துக்கொண்டு விடலாம். அதற்கப்புறம், ‘ராமதாஸர்’ என்று ஸேவகராகப் பெயரெடுத்த அவரே ஸுலபத்தில் அடக்கி வைக்க முடியாத வானர ஜாதி முழுதையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதீச்வரனாக – Lord ஆக – இருந்தாரென்பதைச் சொல்கிறார்: ‘வானராணாம் அதீசம்’.அப்படிச் சொன்னதிலேயே figurative – ஆக, ஸுலபத்தில் அடங்காமல் பிய்த்துக் கொள்ளும் இந்த ஜீவாத்மாவின் இந்த்ரியங்களை, மனஸை – குரங்கு மனஸ், குரங்குப் புத்தி என்றே சொல்கிறதை – கட்டுப் படுத்தி வைத்திருந்த ஜிதேந்த்ரியரான ப்ரஹ்மசாரி அவர் என்றும் தெரிவித்துவிடுகிறார்.
முடிவாக, ஆஞ்ஜநேயர் என்ற மாத்ரத்தில் நாம் முதலில் நினைப்பதான அவருடைய ராம் ஸம்பந்தத்தைச் சொல்கிறார்: ‘ரகுபதி வரதூதம்’.ராமசந்த்ர மூர்த்தியின் சிறப்பு வாய்ந்த தூதர் அவர்.
‘வரதூதம்’ என்பதற்குப் பதில் ‘ப்ரிய பக்தம்’ என்றும் இன்னொரு பாடம். ரகுபதியான ஸ்வாமியின் பரம ப்ரியத்தைப் பெற்ற பக்தர், அவரிடம் பரம ப்ரியம் வைத்த பக்தர் என்ற இரண்டு விதத்திலும் இவர் அவருக்கு ‘ப்ரிய பக்தர்’.
ஆஞ்ஜநேய ஸ்வாமியைப் பற்றிய இத்தனை விஷயங்களையும் முதலில் சொல்லி, முடிவாக இந்த விஷயங்களுக்கெல்லாம் பாத்ரமான நபர் யார் என்று பேர் சொல்லி அடையாளம் காட்டவேண்டிய இடத்தில் ‘வாதஜாதம்’ என்று போட்டு அவருக்கு ‘நமாமி’ – ‘நமஸ்கரிக்கிறேன்’ – என்று ச்லோகத்தைத் துளஸீதாஸ் முடித்திருக்கிறார்.
இத்தனையிலும் நமக்கு இப்போது விஷயம் ‘ஞானினாம் அக்ரகண்யம்’ என்பதே. ஆஞ்ஜநேய ஸ்வாமி ப்ரஹ்மஞானிகளுக்குள்ளே ப்ரதம ஸ்தானம் கொடுத்து மதிக்கப்படவேண்டியவர் என்று அது தெரிவிக்கிறது. அவரோடு ப்ரத்யக்ஷமாகப் பழகி அறிந்த துளஸீதாஸ் நமக்குத் தெரிந்த அவருடைய சிறப்புக்களைச் சொல்லும்போது நடுவிலே, மத்யமணி மாதிரி இந்தச் சிறப்பையே சொல்லியிருக்கிறார்.
’அதுலித’, அதாவது நிகரில்லாத, பலம்; ஸ்வர்ண பர்வதமாக மேரு இருக்கிறதே, அது மாதிரியான தேஹம்; ராக்ஷஸ குலம் என்கிற வனத்தை பஸ்மமாக்கும் அக்னியாக இருக்கும் வீர சூரம் என்றிப்படி முன்னால் மூன்று சிறப்புக்கள். ஸகல ஸத் குண நிலயமாக இருப்பது; வானரகணாதிபதியாக இருப்பது; ராமருக்குச் சிறப்பு வாய்ந்த தூதராக இருப்பது என்றிப்படி பின்னால் மூன்று சிறப்புக்கள். இந்த இரண்டு ‘மூன்று’களுக்கும் நடுவிலே, நடுநாயகமாக அவர் ஞானிகளில் அக்ரகண்யராக இருப்பதைச் சொல்லியிருப்பதால், அது சிறப்புக்களிலும் சிறப்பிடம் பெற்றிருப்பதாக ஆகிறது.
ஆஞ்ஜநேயர் ப்ரஹ்மஞானி என்றவுடனே நம்முடைய வைதிக ஸம்ப்ரதாயத்தில் அடுத்த கேள்வி ஒன்று வரும். அநுபவிகள் உருவாக்கியிருக்கிற நம்முடைய ஸம்ப்ரதாயக் கருத்துப்படி ஒருத்தருக்கு ப்ரஹ்மஞானம் கிடைத்திருக்கிறது என்றால், அதைத் தானாக அவர் ஸம்பாதித்திருக்க முடியாது. ப்ரஹம வித்யா உபதேசகரான ஒரு குருவின் உபதேசத்தைக் கேட்டு, அந்த உபதேச பலத்தால், உபதேசிக்கிற குருவின் அநுக்ரஹ பலத்தால்தான் ஸம்பாதித்திருக்க வேண்டும். உபதேசம் பெறுகிற சிஷ்யரும் நிரம்ப ப்ரயாஸை, ப்ரயத்னத்தோடு ஸாதனை பண்ணத்தான் வேணுமென்றாலும் அவர் தாமே பண்ணும் மனன, நிதித்யாஸனாதிகளுக்கு முன்னால் ‘ச்ரவணம்’ என்பதாக அவர் குருவிடம் உபதேசம் பெறுவதுதான் வருகிறது. ச்ரவண-மனன-நிதித்யாஸனம் என்றே படி வரிசை. ‘ச்ரவணம்’ : குருவிடம் உபதேசம் கேட்டுக் கொள்வது: ‘மனனம்’: அப்புறம் அதைச் சிஷ்யர் ஓயாமல் உருப்போடுவது; ‘நிதித்யாஸனம்;: உருப்போட்டதில் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் அதை அநுபவமாக்கிக் கொள்வது.
ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்.
ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யர் யார்?
அவருடைய பால ப்ராயத்தில் அவருக்கு ஸுர்ய பகவான் குருவாக இருந்து உபதேசித்தாரென்று கதை கேட்டிருக்கலாம். அவதரித்தவுடனேயே அவர் உதிக்கிற ஸுர்யனைப் பார்த்து அது ஒரு செம்பழம் என்று நினைத்து அதைப் பிடிப்பதற்காக ஸுர்ய மண்டலத்துக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தவர். அதற்குச் சில வருஷம் அப்புறம் அந்த ஸுர்ய பகவானிடமே சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். உதயகிரியிலிருந்து அஸ்தமன கிரி வரை குருவான ஸுர்யனுக்கு எதிர் முகமாக சிஷ்ய க்ரமத்தில் அவரோடு கூடவே ஸஞ்சாரம் செய்துகொண்டு பாடம் கேட்டார். ஆனால் அது ஞான போதனைப் பாடமில்லை. ஆத்மாநுபவமாக இல்லாமல் மூளை அறிவினால் பெறக்கூடிய மற்ற எல்லாத் துறைகளிலும், மற்ற ஸகல சாஸ்த்ரங்களிலுமே ஸுர்ய பகவான் ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்தார். முக்யமாக வ்யாகரண சாஸ்த்ரங்கள் ஒன்பதையும் உபதேசித்தார். அது அவருடைய பால ப்ராயத்தில். அவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றுத்தான் அவர் ‘புத்திமதாம் வரிஷ்டம்’ என்னும்படி அறிவாளிகளில் சிறப்பிடம் பெற்றது. ஆனாலும் அறிவாளி வேறே, ஞானி வேறேதானே? ஞானியாக அவர் ஆனது எப்போது? அப்போது அவரை அப்படி ஆக்கிய குரு யார்?
ஆத்ம சாஸ்த்ரத்துக்குத்தான் பரவித்யை என்று பெயர். அது தவிர்த்து மற்ற எல்லா சாஸ்த்ரங்களும் அபரவித்யைதான். ‘பரம்’: superior. ’அபரம்’ : inferior.
அபர வித்யையால் ஆஞ்ஜநேயருடைய புத்தியை சோபிக்க வைத்த குரு ஸுர்யன் என்கிறாற்போல பரவித்யையால் அவருடைய அந்தராத்மாவையே சோபிக்க வைத்த குரு யார்? அவர் இவருக்கு உபதேசித்த கதை எப்போது நடந்தது?
ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸுர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.
அவர் பெரியவராகி, ‘ஆஞ்ஜநேய ப்ரபாவம்’ என்று இப்போது நாம் கொண்டாடிக் கொண்டு சொல்கிற மஹத்தான லீலைகளை ராம ஸேவையாகப் பண்ணியாகி விட்டது. ‘ஸமுத்ரம் தாண்டி தூது போனார். அந்த தூதுப் பணியை வெற்றிகரமாக ஆற்றினார். அசோக வனத்தை அழித்தார். லங்கையை தஹனம் பண்ணினார். அப்புறம் ராம-ராவண யுத்தம் வந்தது. அதன்போது ஸேது கட்டுவதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் அபாரமான ஸாஹஸ கார்யங்கள் பண்ணினார். ஒரு பக்கம் ராக்ஷஸ ஸைன்யத்தை அடித்து நொறுக்கி உயிரைப் போக்கியவரே இன்னொரு பக்கம் ராம-லக்ஷ்மணர்கள் உள்பட ஸ்வபக்ஷ ஸைன்யம் முழுதும் ப்ரஜ்ஞா பங்கமாகிச் சாய்ந்தபோது ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டுவந்து உயிர் ஊட்டவும் செய்தார்; - என்றிப்படியெல்லாம் சொல்கிற அவருடைய அத்தனை ப்ரபல லீலைகளையும் அவர் செய்தாகிவிட்டது. அதற்கப்புறம் ராவண வதமாகி, ஸ்வாமி அயோத்தியில் சக்ரவர்த்தியாக ஆண்டு கொண்டிருந்த போது அவருக்கே தம்மை அர்ப்பணம் செய்து கொண்டு ஆஞ்ஜநேயர் ஸேவகம் பண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஞானோபதேசம் பெற்றுக் கொண்டது.
‘ராமருக்கே ஸேவகம் என்று ஆத்மார்ப்பணம் செய்து கொண்டவர் அதை விட்டுவிட்டு எங்கே போய், யாரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டிருக்க முடியும்?” – இப்படிக் கேள்வி எழும்புகிறது.
தம்முடைய உயிருக்குயிரான ராமரை விட்டுவிட்டு அவர் எங்கேயும் போகவில்லை. வேறே எவரிடமோ உபதேசம் பெறவுமில்லை.
ஸ்ரீராம ஸந்நிதியிலேயே, அந்த ராமரிடமேதான் உபதேசம் பெற்றுக்கொண்டார்.
ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசம் செய்த குரு ராமரேதான்.
ப்ரபு-ஸேவகர் என்ற உறவிலும், பகவான் பக்தர் என்ற உறவிலுந்தான் நாம் பொதுவாக ராம-ஆஞ்ஜநேயர்களைப் பார்ப்பது. இங்கேயோ வேறே ஒரு புதுமையான கோணத்தில் அவர்களை குரு-சிஷ்யர்களாகப் பார்க்கிறோம். ராமகுருவின் சிஷ்யராக ஆஞ்ஜநேயரைப் பார்க்கிறோம். இதிலே தனியான ஒரு விசேஷம் தெரிகிறதோல்லியோ? ஸத்குரு-ஸச்சிஷ்ய உறவைப்போல ஒன்று கிடையாதே! ஆஞ்ஜநேயர் பரம ஸத்புருஷர். ராமரோ ‘ஸத்’ என்றே சொல்லப்படுகிற மெய்ப்பொருளான பரமாத்மா. இரண்டு பேரும் குரு-சிஷ்யர்களாக இருந்ததை நினைத்தாலே புண்யம்.
‘ராஜாராமன்’ என்றே பெயர் கொண்ட சக்ரவர்த்தியாக ஸ்வாமி, இன்றைக்கும் ‘ராம ராஜ்யம்’ என்று சொல்லும்படியான முறையில் தர்ம பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த ராஜாவே ஞானராஜாவாகவும் இருந்துகொண்டு ஆத்மோபதேசமும் பண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய மாமனார் ஜனகர் ராஜர்ஷி (ராஜரிஷி) என்பது ப்ரஸித்தம். மாப்பிள்ளையும் மாமனார் மாதிரிதான். ஒரு பக்கம் கார்ய வீரரான ராஜா; இன்னொரு பக்கம் ஞானச்ரேஷ்டரான ரிஷி; வேதாந்தத்தை வ்யாக்யானம் செய்தவர்.
அவர் ஹநுமாருக்கு உபதேசித்தது மாத்திரமில்லை. அன்றைக்கு லோகத்தில் இருந்த ரிஷிகணங்களுக்கெல்லாமும் அவர் உபதேசித்தார். அந்த ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் அவர் ஸாக்ஷாத் நாராயணாவதாரம் என்று தெரியும். தங்களை ஹிம்ஸித்து வந்த ராவணாதி ராக்ஷஸர்களை நாசம் செய்யவே முக்யமாக அந்த அவதாரம் ஏற்பட்டது என்றும் தெரியும். அந்தக் காரியம் முடிந்து ராமர் ராஜாவாகி ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டார். அப்போது தம்முடைய தர்ம ஆட்சி மூலம் அவர் ஸாதாரண ஜனங்களெல்லாம் லக்ஷ்யமாகக் கொண்டு முன்னேற வேண்டிய தர்ம மார்க்கத்தை அவர்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு அவதார கார்யந்தான். அதோடு மூன்றாவது கார்யமாக இன்னொன்றையும் அந்த ரிஷிகள் சேர்த்து விட்டார்கள். என்னவென்றால்:
பூர்வாங்கம்-உத்தராங்கம் என்று இரண்டு. பூர்வாங்கம் முதலில் பண்ண வேண்டியது; உத்தராங்கம் பின்னால் பண்ண வேண்டியது. வைதிக ஸம்ப்ரதாயத்தில் இந்த இரண்டை வைத்தே, முதலில் நம்முடைய ஸாமான்ய தசையில் இஹ லோகத்தில் நல்லபடி வாழ்க்கை நடத்திப் பரலோகத்துக்கு ப்ரயத்னம் பண்ணும் பக்குவத்தைப் பெறுவதற்காக தர்மம் என்பதை அறிந்து அப்யஸிக்க வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் பெற்றவர்கள் அதற்கப்புறம் தர்மம்-அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ப்ரஹ்மம் என்பதை அறிந்து அநுபவிக்க வேண்டுமென்றும் வைத்தார்கள். ஷட்-தர்சனங்கள் என்று நமக்கு ஆறு சாஸ்த்ரங்கள் இருப்பதில், ‘தர்ம ஜிஞ்ஜாஸா’ என்று முதலில் தர்மத்தை அறிய ஆசைப்பட வேண்டிய நம்மை தர்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே பூர்வ மீமாம்ஸை என்கிற தர்சனத்தையும், அதை அறிந்த பிற்பாடு ‘ப்ரஹ்ம ஜிஞ்ஜாஸா’ என்று ப்ரஹ்மத்தை அறிய ஆசைப்படுகிறபோது அந்த ப்ரஹ்மத்தில் ஈடுபடுத்துவதற்காகவே உத்தர மீமாம்ஸை என்ற தர்சனத்தையும் வகுத்துக் கொடுத்தார்கள். அப்புறம் அந்தப் பூர்வ மீமாம்ஸைக்கே மீமாம்ஸை என்ற பெயரும், உத்தர மீமாம்ஸைக்கு வேதாந்தம் என்ற பெயரும் வந்துவிட்டது. தர்ம மார்க்கமான மீமாம்ஸை கர்ம மயமானது. ப்ரஹ்ம மார்க்கமான வேதாந்தம் ஞான விசார மயமானது.
ராக்ஷஸ வதம் என்ற முதலாவது அவதார கார்யம் ஆன பிற்பாடு ராமர் சக்ரவர்த்தியாகி ஸாதாரண நிலையிலேயுள்ள லோக ப்ரஜைகளுக்கெல்லாம் தம்முடைய நீதி பரிபாலனத்தாலும், தாம் செய்யும் யஜ்ஞாதி வைதிக கர்மாநுஷ்டானத்தாலும் தர்ம மார்க்கத்தைக் காட்டிக் கொண்டிருப்பதான இரண்டாவது அவதார கார்யத்தையும் பண்ணினார். இப்போதே அவர் ரிஷிகளான தங்களையெல்லாம் ஞான மார்க்கத்தில் நிலைப்படுத்துவதான மூன்றாவது கார்யத்தையும் பண்ணட்டும் என்று அந்தக் கால ரிஷிகள் எல்லாரும் நினைத்து அவரிடம் வந்து கூடினார்கள்.
எந்த அந்தரங்கத்தையும் துளைத்துக் காணக்கூடிய பார்வை பெற்ற அந்த ரிஷிகளுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் ராமர் உள்ளூர பரம ஞானி என்று. வெளியிலே அவர் மாநுஷமாகக் கூத்தடித்தார்; ஒரு ஸமயம் ரெளத்ர கோபம் கொண்டார்; இன்னொரு ஸமயம் அழு அழு என்று அழுதார் என்றாலும் இதெல்லாம் நடிப்புத்தான் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுக்குள்ளே ஸகுணமாகப் பார்த்தால் அவர் மஹாவிஷ்ணுவே, அதற்கும் உள்ளே நிர்குணமாகப் பார்த்தால் பரப்ரஹமமாகவே இருந்து கொண்டிருக்கிற ஞானி என்று அவர்களுக்குத் தெரியும். ஆகையினால், ஏற்கெனவே தாங்கள் உபதேசம் வாங்கிக் கொண்டு அநுபவம் பெற்றவர்கள்தானென்றாலும், பகவானாகவும் பரப்ரஹ்மமாகவுமே இருக்கப்பட்ட ராமரின் வாயால் மறுபடி உபதேசம் கேட்டால் அப்போதுதான் தாங்கள் பெற்ற அநுபவம் நின்று நிலைத்துத் தங்களுக்கு ஜீவன் முக்தி ஸ்திதி கிட்டும் என்று அவர்கள் கண்டார்கள். அதனால் அவரிடம் கூட்டமாக வந்து வேதாந்தத்தை உபதேசிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.
உபதேசம் கொடுப்பதற்கு ராமருக்கும் இஷ்டந்தான். ஏன் இஷ்டம் என்றால், ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பழமொழி அல்லவா? அப்படி, ப்ரஹ்ம வித்யையைத் தான் கற்றுக் கொண்டு பேரின்பம் என்பதையே அடைந்தவர்களுக்கும் அதை மற்றவர்களோடு ‘ஷோ’ பண்ணிக் கொள்ளவேண்டும் என்று இருக்கும். ராமர் ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபம்; ப்ரஹ்மானந்தத்தில் இயற்கையாகவே திளைத்துக் கொண்டிருப்பவர்; அவர் யாரிடமும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை தான். என்றாலும் அவதாரம் என்று நரலீலை பண்ணும் போது அவரும் ஜனங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக குருமுகமாகவே தாம் ப்ரஹ்ம வித்யை கற்றுக் கொன்டதாகத்தான் காட்டினார். நல்ல யெளவனப் பிராயத்திலேயே, ஒரு ராஜகுமாரன் பெறவேண்டிய தநுர்வேதம் உட்பட்ட ஸகல வித்யைகளையும் வஸிஷ்டரின் குருகுலத்தில் பெற்றுக்கொண்டபோதே வேதாந்தத்திலும் – அதுதான் ப்ரஹ்ம வித்யை என்பது; அதிலும் – அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்டார். ஆனால் அதோடு அவருடைய ஆர்வம் – ஞான தாஹம் என்பது – தணியவில்லை. அதனால் விஸ்தாரமாகவே வஸிஷ்டரிடமிருந்து ப்ரஹ்ம வித்யோபதேசம் கேட்டும் பெற்றுக் கொண்டார். அந்த உபதேசம் ஒரு பெரிய புஸ்தகமாக இருக்கிறது. அத்வைத வேதாந்தத்தில் ஒரு ‘அதாரிடி’ என்று சொல்லக்கூடிய ‘க்ளாஸிக்’காக அது இருக்கிறது. அதற்கு ’யோக வஸிஷ்டம்’ என்று பெயர். தமிழிலும் அதற்குப் பழமை வாய்ந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. அதை ’ஞான வாசிட்டம்’ என்பார்கள். ‘வாசிட்டம்’ என்று மட்டுமேயும் சொல்வதுண்டு. யோகப் புஸ்தகமாக அதைச் சொல்வதைவிட ஞானப் புஸ்தகமாகவே சொல்வதுதான் அதிகப் பொருத்தம். ஸாதனா மார்க்கம் எல்லாவற்றையுமே யோகம் என்று சொல்வதுண்டு – கர்ம யோகம், பக்தி யோகம், ஞான ய

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக