வியாழன், 30 ஜனவரி, 2014

குமரன் குன்றம் மலைக்கோயில்

அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் : காலை 9.00-10.30 மணிக்கு நாள்: குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக விளங்கும் என்பது ஆன்றோர் நீதி. அந்த வழியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்தபொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார்.

“தெய்வத்தின் குரலல்லவா!” அன்று அம்மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்று, ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப்பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர்.

இன்று (9-2-2014) ஸ்ரீ சுவாமி நாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய ஜீர்ணோத்தர அஷ்டபந்தனமும், நூதன இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

சென்னைக்கு அருகில் குரோம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் 1 கி.மீ தொலைவில் கிழக்கிலுள்ளது. குமரன் குன்றம் வாயில் வரை சிற்றுந்தும், பேருந்தும் வருகின்றன.

மஹா கும்பாபிஷேகம:விஜய வருஷம் தை மாதம் 27ம் தேதி 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்ரீ சுவாமிநாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நூதன இராஜ கோபுரத்திற்கும், திருக்குடமுழுக்குப் பெரு விழா நடைபெற உள்ளது.

இறையருளைப் பெறஆஸ்தீக அன்பர்கள் இக்குடமுழுக்கு விழா வைபவத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டுகிறோம். நன்கொடை வழங்குபவர்கள் காசோலை மற்றும் டிமாண்ட் டிராப்ட் மூலம்
“Kumaran Kundram Rajagopuram Thiruppani Committee”
என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.

Contacts:குமரன்குன்றம் மலைக்கோயில்
அ/மி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
குரோம்பேட்டை சென்னை தமிழ்நாடு 600044
22235319, 97106 43967
(5 photos)

கருத்துகள் இல்லை: