பிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா?
நரசிம்மரின் கோபத்தை அடக்க பிறந்தவர் சரபேஸ்வரர். அவரது இரண்டு சக்திகளாக
பிரத்யங்கிராதேவியும், சூலினி துர்காதேவியும் சரபேஸ்வரரின் இரண்டு
இறக்கைகளாக அவதரித்தனர். பிரத்யங்கிராதேவி பத்ரகாளி என்றும்
அழைக்கப்படுகிறாள். இந்த தேவியை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா என்ற
ஐயப்பாடு பலரிடம் உள்ளது. இவளது தோற்றம் பயங்கரமாக உள்ளதால் இவ்வாறு
பக்தர்கள் கருதுகிறார்கள். இவள் குடியிருக்கும் கோயிலுக்கும் செல்வதற்கு
பலர் பயப்படுகிறார்கள். பிரத்யங்கிராதேவி உக்கிரமான தெய்வம் என்பதில்
சந்தேகம் இல்லை. ஆனால் இவளை வணங்கும் பக்தர்களிடம் இவள் சாந்தமாகவே நடந்து
கொள்வாள். இவளை வணங்கிவிட்டு தர்மத்திற்கு புறம்பான காரியங்களில்
ஈடுபட்டால் அவர்களை அழித்துவிடுவாள் என்பது உறுதி. மந்திர, தந்திரங்கள் என
கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி சிலர் நாச காரியங்களில்
ஈடுபடுகிறார்கள். இவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.
அதேநேரம் இவளை நம்பி வணங்கும் பக்தர்களை எல்லாவிதமான நவக்கிரக
தோஷங்களிலிருந்தும் காப்பாற்றி எல்லா ஐஸ்வர்யங்களையும், நேர்மையான
நடத்தையையும் கொடுக்கிறாள். இவளை வணங்குவோர்,
புத்தி முக்தி பலப்ரதாயை நம:
சகல ஐஸ்வர்ய தாரிண்யை நம;
நவக்ரஹ ரூபிண்யை நம;
சகல ஐஸ்வர்ய தாரிண்யை நம;
நவக்ரஹ ரூபிண்யை நம;
என சொல்லி வணங்கினாலே போதும். பூஜை அறையில் மிகவும் சுத்தமான இடத்தில் வைத்து, பயபக்தியுடன் மன சுத்தியுடன் இவளை வழிபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக