சனி, 14 செப்டம்பர், 2013

இளைஞர்களும் காசிக்கு போகலாம்!

வீட்டில் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால், இந்த வயசான காலத்தில் காசி, ராமேஸ்வரம்னு போக வேண்டியதுதானே என்று சொல்வது வழக்கம். ஆனால் காசி தலம் இளைஞர்களுக்கும் உரியது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  காசி என்றால் ஒளி நகரம் என பொருள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற இளைஞர்கள் காசிக்கு இளம் வயதிலேயே சென்று விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயையும் வணங்கிவருவது நலம் பயக்கும். காசியில் இறந்துபோவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்துபோகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் அவற்றின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்பது ஐதீகம்.  இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிமுக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம். இங்கு வாரணா என்ற நதியும் ஹசி என்ற நதியும் ஓடுகின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்ததால் வாரணாசி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் இவ்வூரை பனாரஸ் என்று சொல்வார்கள்.  இவ்வூரில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது அவர்களை எரித்து அழித்த இடமும் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே இவ்வூருக்கு மகாமயானம் என பெயர்  வீட்டில் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால், இந்த வயசான காலத்தில் காசி, ராமேஸ்வரம்னு போக வேண்டியதுதானே என்று சொல்வது வழக்கம். ஆனால் காசி தலம் இளைஞர்களுக்கும் உரியது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  காசி என்றால் ஒளி நகரம் என பொருள். வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற இளைஞர்கள் காசிக்கு இளம் வயதிலேயே சென்று விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயையும் வணங்கிவருவது நலம் பயக்கும். காசியில் இறந்துபோவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்துபோகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் அவற்றின் காதுகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்பது ஐதீகம்.  இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிமுக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம். இங்கு வாரணா என்ற நதியும் ஹசி என்ற நதியும் ஓடுகின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்ததால் வாரணாசி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் இவ்வூரை பனாரஸ் என்று சொல்வார்கள்.  இவ்வூரில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது அவர்களை எரித்து அழித்த இடமும் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வேண்டும். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. இந்த 12 லிங்கங்களுக்கும் காசி விஸ்வநாதரே முதன்மையானவர் என சொல்லப்படுவதுண்டு. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இதை கட்டினார்.  இந்த கோயில் மிக சிறிய கோயில்தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும்.
லிங்க ரூபத்தில் இங்கு காசி விஸ்வநாதர் இருக்கிறார். நமது பூஜை பொருட்களைக் கொண்டு நாமே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கோயிலில் சுவாமிக்கு ஆறு தட்டுகளில் வெள்ளை அன்னமும் ஆறு தட்டுகளில் ரொட்டி, கூட்டு, குழம்பு ஆகியவையும் வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள். அந்த நேரத்தில் விஸ்வநாதரை மறைத்து சிறு வேலி அமைக்கப்படுகிறது. விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக் கும். அன்று அம் பாளின் முன்பு பலவகை அன்னங்கள், பலகாரங்கள், ஏராளமான அளவில் படைக்கப்படுகிறது. தீபாவளி அன்று தான் அன்னபூரணி தங்க அன்னபூரணியாக பவனி வருவது வழக்கம். அன்று ஒருகையில் கரண்டியையும் மற்றொரு கையில் அன்ன பாத்திரத்தையும் ஏந்தி பவனி வருவதுண்டு. தங்க அன்னபூரணியை தீபாவளி அன்று மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காசி தலத்தில் ஒரு விசேஷ அம்சம் உண்டு.  இவ்வூரில் பல்லிகள் சத்தமிடுவதில்லை. கருடனும் பறக்காது.  பாம்பன் சுவாமிகள் ஒருமுறை காசிக்கு சென்றிருந்தார். அவரை அங்குள்ள சந்நயாசி ஒருவர் காவி உடை கொடுத்து துறவியாக மாற்றினார். அன்று முதல் அவர் அங்கேயே தங்கியிருந்து காசி யாத்திரை என்ற நூலை எழுதினார்.காசிக்கு முதியோர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் சென்று வரலாம்.வடமாநிலத்தில் உள்ள காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதற்கு நிகரான தமிழகத்தில் உள்ளகீழ்கண்ட  தலங்களுக்கு சென்று வரலாம்.
தமிழகத்தில் காசிகள்
திருவையாறு: சப்த ஸ்தானம் என்று போற்றப்படும் ஏழு தலங்களில் திருவையாறு முதன்மையானது. இங்கு மூலவர் - ஐயாறப்பர்; அம்பாள் - தர்மசம்வர்த்தினி. ஈசனிடம் இரண்டு நாழி நெல் பெற்று 32 அறங்களையும் குறைவின்றி செய்தவள் ஆதலால், இந்த அம்பிகையை அறம்வளர்த்த நாயகி என்று போற்றுவர். மேலிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திகழ்வதால், இந்த தேவி விஷ்ணு அம்சத்தினளாக அருள்புரிகிறாள் என்கின்றனர் பக்தர்கள். திருநாவுக்கரசருக்கு, இறைவன் கயிலாய தரிசனம் தந்த இந்தத் தலத்தைத் தரிசிக்க, காசியம் பதியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

ஸ்ரீவாஞ்சியம்: கங்காதேவியே, தனது பாவங்கள் நீங்கி புனிதம் பெறுவதற்காக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம்  தலத்துக்கு வந்து முனி தீர்த்தத்தில் நீராடி, வாஞ்சிநாதரை வழிபட்டு அருள் பெற்றாளாம். இங்கு வந்து வாஞ்சிநாதரையும், மங்கள நாயகியையும் பிரார்த்தித்து வழிபட, சகல பாவங்களும் தொலையும். இங்கு அருள்பாலிக்கும் எமதர்மனை வழிபடுவதால் மரண பயம் நீங்கும்; வாழ்வு சிறக்கும்.

திருச்சாய்க்காடு: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருச்சாய்க்காடு திருத் தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. எம பயத்தை நீக்கி உயிர்களுக்கு முக்தி தரும் ÷க்ஷத்திரம் என்பதால், காசி தலத்துக்கு நிகரானதாகப் போற்றப்படுகிறது. இங்கு சாயவனேஸ்வர ஸ்வாமியும், கோஷாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். இதே தலத்தில், வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்கிறார் முருகன். கையில் வில்லுடன் காட்சி தரும் திருச்சாய்க்காடு வேலவனை தரிசிக்க நம் வினைகள் யாவும் நீங்கும் !

மயிலாடுதுறை: அம்பிகை, மயிலாக வந்து ஈசனை வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று மயிலாடுதுறை.  மாயூரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்து ஈசனிடம், கங்கையைவிட புனிதமான நதியில் தீர்த்தமாடி, சிவனை வழிபட வேண்டும். ஆக, இந்தத் தலத்துக்கு வந்து இடப தீர்த்தமாகிய காவிரியில் நீராடி, மாயூர நாதரையும் அபயாம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு, காசியில் வழிபட்ட புண்ணியம் உண்டு. மேலும், இந்தத் தலத்துக்கு வடக்கே உள்ள வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் ஈசன்.

கருத்துகள் இல்லை: