ஞாயிறு, 19 மே, 2024

பாரத வர்ஷம நதிகளின் பெயர்கள்

பாரத வர்ஷ நதிகளின் பெயர்கள்...

கங்கை, ஸிந்து, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதை, யமுனை, திருஷத்வதி, பருத்த மணலுள்ள விபாசை, ஆழமுள்ள வேத்திரவதி, கிருஷ்ண வேணி, இராவதி, விதஸ்தை, பயோஷ்ணி, தேவிகை, வேதவதி, த்ரிதிவை, இச்க்‌ஷலை, க்ருமி, கரீஷிணி, சித்திரவாகை, ஆழமான சித்திரசேனை,

பாபம் போக்கும் கோமதி, மஹானதியான வந்தனை, கவுசகி,க்ருத்யை, நிசிதை, லோஹிதாரணி, ரகஸ்யை, சதகும்பை, ஸரயு, சர்மண்வதி, வேத்ரவதி, ஹஸ்திஸோமை, திக், சாரவதி, பயோஷ்ணி, வேணை, பீமரதி, காவேரி, சுலுகை, வாணி, சதபலை, நீவாரை, அஹிதை, ஸுப்ரயோகை, பவித்ரை, குண்டலி, ஸிந்து, ராஜனி, புரமாலினி, பூர்வா பிரமை, வீரை, பீமை, ஓகவதி, பாசாசினி, பாபஹரை, மஹேந்திரை, பாடாலாவதி, கரீஷிணி, அஸிக்னி, மஹானதியான குசசீரை, மகரி, மேனை, ஹேமை, க்ருதவதி, புராவதி, அனுஷ்ணை, சைப்யை, காபி.

கலக்க முடியாத ஸதா நீரை, மஹா நதியான குசதாரை, ஸதாகாந்தை, சிவை, வீரவதி, வஸ்தரை, ஸுவஸ்தரை, கவுரி, கம்பனை, ஹிரண்யவதி, வரை, வீரகரை, மஹா நதியான பஞ்சமி, ரத சித்திரை, ஜோதிரதை, விஸ்வாமித்ரை, கபிஞ்சலை, உபேந்தரை, பஹுலை, குவீரை, அம்பு வாஹினி, வினதி, பிஞ்சலை, வேணை, துங்கவேணை, விதிசை, கிருஷ்ணவேணை, தாம்ரை, கபிலை, கலு, ஸுவாமை, வேதாஸ்வை, ஹரிஸ்ராவை, சீக்ரை, பிச்சலை, ஆழமுள்ள பரத்வாஜி, கவுசகி சோணை, பாஹுத்யை, சந்திரமை, துர்கை, சித்திரசிலை, பிரம்மவேத்யை, ப்ருஹத்வதி, யவ்க்‌ஷை, ரோஹி, ஜாம்பூ நதி, ஸுநஸை, தமஸை, தாஸி, வஸாமன்யை, வரணாசி, நிலை, த்ருதவதி, மஹா நதியான பர்ணாசை, மானவை, விருஷபை, பிரம்ம மேத்யை, பிருஹத்வனி.

எப்போதும் ரோகமற்றதான கிருஷ்ணை, மெதுவாக செல்லும் மந்த வாஹினி, பிராம்மணி, மஹாகவுரி, துர்கை, சித்திரோபலை, சித்ராதை, மஞ்சளை, மந்தாகினி, வைதரணி, மஹா நதியான கோஷை, சுக்திமதி, அனங்கை, வ்ருஷஸை, லோஹித்யை, கரதோயை, விருஷகை, குமாரி, ரிஷி, குல்யை, மாரிஷை, ஸரஸ்வதி, மந்தாகினி, ஸுபுண்யை, ஸர்வை, கங்கை இப்படியாக பல நதிகளும் இதற்க்கு மேலும் பாரத வர்ஷத்தை அலங்கரித்தன.

************************************************************************

எவர் தாய் போன்ற நதியை பழித்து அதை அசுத்தப்படுத்துகிறானோ அவனுக்கு தோல்வியாதி வந்து அவன் குலமும் சிதிலமடையும் என்பது பிரமாணம்.

இன்று இத்தனை நதிகளை தேடுவது சிரமம்... அது உங்கள் ஏரியாவில் [2 BHK, 3 BHK flat] யாக மாறி கூட இருக்கலம். யார் கண்டார்?.

இத்தனை நதிகளை கண்டிப்பாக பார்க்க முடியாது... குறைந்த பட்க்ஷம் வாய் விட்டு படியுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

ராம் ராம்*****************

ப்ரேத ஸப்தம், அ ப ஸ் வ ர ம் நாஸ்தி,

 ப்ரேத ஸப்தம், அ ப ஸ் வ ர ம் நாஸ்தி,

(முன்னுரை:- ஏனிந்த தலைப்பு?

காரணம் எல்லோரும் அபர க்ருத்யங்களை விரும்புவதில்லை. முயன்றால் ஜனனத்தை தவிர்க்கலாம், தள்ளிப்போடலாம். மரணத்தை தவிர்க்கவோ தள்ளிப்போடவோ முடியாது. மரணத்தை தொடர்ந்து செய்யப்படும் அபர க்ருத்யங்களுக்கு அந்தியேஷ்டி என்று பெயர். அந்தியேஷ்டியில் முக்கியமான க்ருத்யம் நடத்தும் நாள் ஒன்று உண்டு. அது நாள் வரை அபஸ்வரமாக ப்ரேதம்... ப்ரேதம் என்று ஒலித்து வந்த ஸப்தம் இன்று தான் நாஸ்தி [இல்லாமல்] ஆகிறது. இந்த அபஸ்வரம் நாஸ்தியாகும் நாளைப்பற்றிதான் இங்கே சாங்கோபாங்கமாக விளக்கப் போகிறேன்.

இங்கே உதாரணத்துக்காகத்தான் ஒரு மரணத்தை விளக்கப்
போகிறேன். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப சம்ப்ரதாயங்கள் மாறக்
கூடும். [மரணித்த உதாரண புருஷன், யஜுஸ் ஶாகா ஆபஸ்தம்ப ஸூத்ர, கௌன்டின்ய கோத்ர அருணாசல ஶர்மா]

அருணாசலம் என்கிற அருணாசல ஶர்மா காலமாயிட்டார். எம்பளத்தஞ்சு வயசானவர். பார்யாள் அபீதா என்கிற அபீத குசாம்பாள் இவரை முந்திண்டு போயிட்டா. இவருக்கு மூணு பிள்ளைகளும் ரெண்டு பொண்களும் உண்டு. ரெண்டு பொண்களுக்கும் தன் ஆயுஸு காலத்துலயே வசதியான எடத்துல விவாஹம் பண்ணிக் கொடுத்தூட்டார். பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆயிடுத்து. இந்தக்காலத்துல இல்லாத ஆச்சர்யம். மூணு பிள்ளைகளும் ஏக குடும்பம்.

அருணாசல ஶர்மாவுக்கு புத்ர கர்மா. ஜ்யேஷ்ட புத்ரன் சந்தானம் பண்ணிண்டிருக்கான். ஒடப்பொறந்தான்கள் கூட இருக்கா. மரணத்தன்னிக்கே தஹனம். மறுநாள் சஞ்ஜயனம். சஞ்ஜயனத் தன்னிக்கே நதி தீர குண்டம் வீட்டு ஆளோடில வச்சுண்டா. க்ருஹ குண்டம் மொட்டை மாடீல தென்னங்கீத்து பந்தல் போட்டு அங்க வச்சுண்டா. அன்னீலேர்ந்தே நித்யவிதி பண்ண ஆரம்பிச்சூட்டா. பொண்களுக்கு மூணு நாள் தீட்டு. ரெண்டு பொண்களும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் நித்யவிதி பிண்டம் பொங்கினா. பத்தாம் நாள் தஸாஸ்து. ப்ரபூத பலி [பத்து கொட்றது]. தஸாஸ்து அன்னிக்கு வரவாளுக்கெல்லாம் பந்தி போஜனம் பொண்களோட செலவு.

ஆத்துல தீட்டுங்கறதால வெளீல மடி ஆச்சாரமா சமைச்சுத்தர கேடரரை ஏற்பாடு பண்ணிப்பா. இந்த பந்தி போஜனத்துல வைதீகாள், சொந்தக்காரா எல்லாருமே சாப்டலாம். சாயந்திரமா ஆத்து வாத்யார் சர்ம ஸ்லோகம் வாசிச்சார். வாசிச்ச கையோட, என்னென்னிக்கு 27ம் 45ம் நாள் ஊனம், மத்தபடி மாஸாந்த்ர மாஸிகம், ஸோதகும்பம் என்று எல்லாத்தையும் எழுதி தந்தூட்டார். போறி அப்பம் வினியோகம் பண்ணா. சர்ம ஸ்லோகம் வாசிக்கறச்சே பேத்தி உருண்டைன்னு பௌத்ரிகளும், தௌஹித்ரிகளும் தினுசு தினுசா ஸ்வீட் உருண்டை பிடிச்சு வைப்பா. மறுநாள் ஏகோத்திஷ்டம். ஒருத்தன்னு சொல்லி ஒரு ப்ராமணனை தானே சமைச்சு ப்ராம்ணார்த்தம் சாப்பிட்டுக்கணும். இந்த ‘ஒருத்தனு’க்கு நெறைய தக்ஷணை தரணும். இதுக்கு அடுத்த பன்னண்டாம் நாள் தான் ரொம்ப முக்யமான நாள்.

பன்னண்டாம் நாளன்னிக்கு ரெண்டு ரிச்யுவல்ஸ். மொதல்ல பண்றது ஸபிண்டீகரணம். இது ஶ்ராத்தத்தை விட அதிக ஶ்ரத்தையோட பண்ணப்படுவது. கர்மாக்கள் கொஞ்சம் அதிகம். இரண்டு ப்ராம்ணார்த்தக்காராள்ள ஒரு ஸபிண்டி ப்ராம்ணன் பித்ருவா இருப்பார். இவர் தனக்கான ஏதோ ஒண்ணை தானே சமைச்சுக்கணும். அனேகமா இவா ரவா கேஸரி மட்டும் செஞ்சுப்பா. மத்த ஐடங்கள்லாம் விஸ்வேதேவருக்கு என்னவோ அதே தான் இவருக்கும்.

ஒவ்வொரு ஆத்துக்கும் ஶ்ராத்த சமையல்னு ஒரு வழக்கம் இருக்கும். அந்த வழக்கப்படியே தான் ஸபிண்டீகரணத்துக்கும் சமைக்கணும். இது பரம்பரை வழக்கம். இனிமே தான் முக்யமான கர்மா வரது.

ஸபிண்டீகரணத்துக்கு கூட்டத்தாரோடு சேர்த்தல் என்கிற இன்னொரு பெயரும் உண்டு. அப்டீன்னா என்ன தெரியுமோ! இப்போ இறந்து போனவரை ஏற்கெனவே பித்ரு லோகத்துல இருக்கற மூதாதையர்களோட சேர்க்கறதுன்னு அர்த்தம். ஒவ்வொரொத்தருக்கும் பித்ரு லோகத்துல பித்ரு வர்க்கத்தில் மூணு பேரும், மாத்ரு வர்க்கத்தில் மூணு பேரும் இருக்கறதா ஐதீகம். இவாளை வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபம்னு சொல்லுவா. மரணிச்சிருக்கற அருணாசல ஶர்மாவுக்கு கீழ்கண்ட மாதிரி மூதாதையர் இருக்கறதா வச்சுக்குவொம். பெயர் எல்லாம் கற்பனை.

கௌன்டின்ய கோத்ரான்
                      ரூபம்:-      வஸு               ருத்ர               ஆதித்ய
பித்ரு வர்க்கம்.       கணேச       நாராயண             ஶ்ரீராம
                                        ஶர்மா               ஶர்மா                 ஶர்மா
                                        பித்ரு      பிதாமஹான்    ப்ரபிதாமஹான்

மாத்ரு வர்க்கம்.   விசாலம்   ஜானகி            சுந்தரி
                                      மாத்ரு        பிதாமஹி      ப்ரபிதாமஹி

ஶ்ராத்தம், தர்ப்பணம் பண்றவா கவனிச்சிருப்பேளே. ப்ராம்ணாள் சாப்ட்ட பின் தக்ஷணை, தாம்பூலம் வாங்கிண்டு ஆஸீர்வாதம் பண்ணீட்டு போனப்பறம் ஆறு பிண்டம் [மூன்று மூன்றாக வரிசைல] வச்சு அதுக்கு எள்ளும் தீர்த்தமும் விட்டு ஒரு கர்மா பண்ணியிருக் கேளோன்னோ. அதே மாதிரி ஸபிண்டீகரணத்துலயும் உண்டு. ஆனா ஆறு பிண்டத்துக்கு பதிலா ஏழு பிண்டம் இருக்கணும். இந்த ஏழாவது பிண்டம் யாருக்கு தெரியுமோ? அது தான் இப்போ மரணிச்ச அருணாசல ஶர்மாவுக்கு.

அவரைத் தான் இப்போ கூட்டத்தாரோட [மூதாதையர்களோட] சேர்க்கணும். அப்படி சேர்க்கறச்சே இந்த வரிசையை ரீஅரேன்ஜ் பண்ணணும். ஆதித்ய ரூபனாக இருக்கிற ஶ்ரீராம ஶர்மாவை நீக்கிப்பிட்டு நாராயண ஶர்மாவை அந்த எடத்துக்கு கொண்டு வரணும். உதாரணமாக ஶர்மா இருந்த எடத்துக்கு கணேச ஶர்மா வந்தூடுவார். அதிகப்படியா ஒரு பிண்டம் வச்சிருந்தோமே அதை வஸு ரூபன் எடத்துல வச்சா அருணாசல ஶர்மா கூட்டத்தாரோட சேர்ந்துட்டார்... இவ்ளோ நாள் ப்ரேத ரூபமா அலைஞ்சுண்டிருந்த அருணாசல ஶர்மா வஸு ரூபரா மாறி பித்ரு லோகம் போறார். அந்த வீட்டு அபஸ்வரம் நாஸ்தி ஆயிடுத்து.

அம்மா அபீதா காலமான பிறகு சந்தானம் ஸஹோதராள் அம்மாவுக்கு ஶ்ராத்தம் பண்ணிண்டிருக்கா. அதுல அவா கௌன்டின்ய கோத்ரான் அபீதா, விசாலம், ஜானகி, வஸு, ருத்ர, ஆதித்ய ரூபான் மம மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹின்னு சொல்றா. இந்த வரிசைல இப்போ ஏதும் மாற்றம் கிடையாது

இந்த பன்னண்டாம் நாளே ஸபிண்டீகரணம் முடிஞ்ச ஒடனே வீடு பூரா அளம்பி தொடைச்சு புண்யார்ஜனம் பண்ணீட்டு ஸோதகும்பம் பண்ணணும்.

சனி, 18 மே, 2024

கயா மற்றும் அக்ஷய வடம்

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கயா மற்றும் அக்ஷய வடம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

விஷ்ணு பாதம் தான் இங்கு பிரதானம் ...👣 கயாவில் திதி கொடுக்கும் போது மூன்று இடங்களில் திதி கொடுக்க வேண்டும்...

1. விஷ்ணு பாதம்

2. பால்குனி நதி

3. அக்ஷய வடம் {கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இந்த மரம்}

முதல் இரண்டு இடங்களுக்கு பொதுவான ஒரிடத்தில் அமர வைத்து புரோகிதர்கள் திதி செய்து விடுகிறார்கள்... இதை முடித்து விட்டு இறுதியாக தான் அக்ஷய வடத்தில் திதி கொடுக்க வேண்டும். இங்கு இருக்கும் விஷ்ணு பாதம் என்பது யாரும் பிரதிஷ்டை செய்த பாதம் கிடையாது. யாரும் கொண்டு வந்து இங்கு வைத்த பாதமும் கிடையாது. பல யுகங்களுக்கு முன் கயாசுரன் என்ற ஒர் அசுரன் அங்கு வசித்து வந்தான். அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை அளித்து வந்தான். மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் முறையிட... சங்கு சக்கரம் மற்றும் கதையுடன் [அனுமார் கையில் வைத்திருப்பார்] இல்ல வந்து கயாசுரன் மார்பின் மீது கால் வைத்து அவன் மேலே எழும்பாதவாறு செய்தார். மகா விஷ்ணு பாதம் பட்டவுடன் அசுர குணம் அழிந்து மனிதனாக கயாசுரன் மாற்றம் அடைந்தான்.

அதன் பிறகு மகா விஷ்ணுவிடம் அவன் வரம் கேட்க துவங்கினான். அவரும் அவன் கேட்டவற்றை கொடுத்தருளினார்.

1. மகா விஷ்ணு பாதம் பட்ட இடம் தான் விஷ்ணு பாதமாக உருவெடுத்து இன்று பல கோடி மக்கள் தரிசித்து தங்களது பாவங்களைப் போக்கி புண்ணியம் அடைகிறார்கள் [இங்கு கொடுக்கப்படும் இரண்டு திதிகளில் ஒன்றை பிண்டங்கள் - உணவு விஷ்ணு பாதங்களில் சமர்ப்பித்து கயாசுரன் உணவாக உட்கொள்கிறார்] இன்னொன்றை பால்குனி நிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த விஷ்ணு பாதத்தில் தலை வைத்து மனித ஜென்மம் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி அடுத்த ஜென்மம் இதைவிட மிகவும் உயர்வானது ஒரு ஜென்மமாக கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இனி ஒருமுறை எந்த ஒரு பாவமும் செய்ய மாட்டோம் என உறுதி கொள்வோம்.

2. இங்கு வந்து திதி கொடுக்கும் அப்பா, அம்மா இல்லாத பிள்ளைகளின் வம்சம் விருத்தி ஆகி அப்பா, அம்மா மோட்சத்திற்கு சென்று அடைவார்கள்.

3. அந்த அசுரன் "கயாசுரன்" நினைவாகத்தான் இந்த ஊருக்கு கயா என்று பெயர் வந்தது...

கயாசுரன் இறைவனிடம் கேட்டார் ஸ்வாமி இங்கு திதி நடை பெறாத நாட்களில் எனக்கு அப்பொழுது எவ்வாறு உணவு கிடைக்கும் என்று வினவினான். அதற்கு மகா விஷ்ணு சூரியன் 🌕🌕 சந்திரன்🌛🌜🌛🌜🌚 இருக்கும் வரை இந்த திதியானது தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீ கவலைப்படாதே.

புனரபி ஜனனம் ...😊
புனரபி மரணம்.....😔

பிறந்த ஒவ்வொரு மனிதனும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இந்த மனித ஜென்மம் கொடுத்த கடவுள் அதற்காக அவர் வாழும் காலங்களில் நன்மைகளை செய்து நற்கதி அடைவார்கள் என்று இறைவன் அருளினார். கயா கால் தடம் பட்டாலே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி விடும். மீண்டும் எந்த ஒரு பாவங்களையும் நாம் செய்யாமல் இருத்தல் வேண்டும்.   

🍀🍀🍀🍀🍀🍀
அக்ஷய வடம்
🍀🍀🍀🍀🍀🍀

அக்ஷய வடம் என்பது அக்சய மரத்தைக் குறிக்கும். இந்த மரமானது பல யுகங்களை கடந்து இன்று வரை நீடித்திருக்கிறது. திரேதா யுகத்தில் ராமர் தசரதருக்கு இங்கு தான் திதி கொடுக்க வந்தார். அதன் பிறகு துவாபரயுகம் இப்பொழுது கலியுகம்.

பிரம்மா பூலோகத்தில் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் அதன் காரணமாக அக்ஷய 🍁 மரத்தை நிழலுக்காக  இங்கு பூமியில் கொண்டு வந்தார். யாகங்கள் அனைத்தையும் நிறை வேற்றி விட்டு தேவர்களுடன் பிரம்மா மேலோகத்திற்கு புறப்பட்டார். அக்ஷய மரமும் புறப்பட எத்தனித்த போது நீ வேண்டாம் இங்கேயே இரு. இங்கு வந்து பிதுர் காரியங்கள் செய்த அனைவருக்கும் மோட்சம் நீ அளிக்க வேண்டும். கடைசியாக பிரளய காலம் வரும் போது கிருஷ்ணர் வாயில் விரல் வைத்து உனது இலையின் மீது தவழ்ந்தபடி உன்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து வருவார் என்று பிரம்மா கூறி விடைபெற்றார். எனவே தான் இந்த அக்ஷய மரம் எப்பொழுதும் பசுமை நிறத்தில் காணப்படுகிறது.

அக்ஷயம் என்றால் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நல்ல உதாரணம் அக்சயதிரிதியை. {அன்று நாம் எந்த ஒரு புண்ணியம் செய்தாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்} அப்படி என்றால் பிரம்மதேவர் வரம் கொடுத்த அக்ஷய மரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று எண்ணிப் பாருங்கள்.

ராமாயண காலத்தில் தசரதன் இறந்து பல ஆண்டுகள் கழித்து ராமரின் சொப்பனத்தில் தசரதர் வந்து எனது ஆன்மா இன்னும் முற்றுப் பெறவில்லை நீ  வந்து அக்ஷய மரத்தடியில் எனக்கு ஸிராத்தம் செய் என்று கூறினார். கனவில் தசரதர் கூறிய படி ராமர் தனது குருமார்களையும் & சீதையும் இங்கு அழைத்துக் கொண்டு வந்து தசரதருக்கு திதி கொடுக்க தயாரானார். அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ராமர் வெளியே சென்றிருந்த நேரம் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது தசரத தோன்றி சீதை இடம் எனக்கு பசி தாங்க வில்லை நீனே எனக்கு திதி கொடுத்து சாதம் போடு என்று கூறினார். சீதையோ சற்று பொருங்கள் ராமர் வெளியே சென்றிருக்கிறார் அவர்கள் வந்தவுடன் திதி ஆரம்பமாகிவிடும் என்று கூறினார். ராமர் வருவதற்கு மாலை ஆகிவிடும் அதற்கு முன்பாக நீ எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார் அதற்கு சீதை ராமர் வந்து என்னை திட்டினால் நான் என்ன செய்வேன் என்று வினவினாள்.

பல்குனி ஆறு, அக்ஷய மரம், துளசி, பசுமாடு, பிராமணர் இவர்களை சாட்சியாக வைத்து எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார். திதி கொடுக்க போதுமான பொருட்கள் என்னிடம் இல்லை நான் என்ன செய்வேன் மீண்டும் சீதை வினவினாள். இந்த நதி ஆனது புண்ணிய பூமி இங்கு பால்குனி நதியில் இருந்து மணல் எடுத்து எனக்கு திதி கொடு எனக்கு மோட்சம் கிடைக்கும் என்று தசரதன் கூறினார். அவ்வாறு சீதை செய்தவுடன் தசரதன் மோட்சத்திற்கு சென்றடைந்தார். சற்று நேரம் கழித்து ராமர் வந்த உடன் நடந்த அனைத்தையும் சீதை கூறினாள். ராமன் கோபம் கொண்டு நீ எப்படி திதி கொடுக்கலாம் என்று கோபம் கொண்டார்.

நான் திதி கொடுத்ததற்கு இங்கு ஐந்து பொருட்கள் சாட்சி இருக்கிறது அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் என சீதை கூறியவுடன். கேட்கும் போது அக்ஷய மரம் தவிர அனைத்தும் மிகவும் அமைதியாக தான் இருந்தது. ராமர் அருகில் இருக்கும் முனிவரிடம் இதே போல சீதை திதி கொடுத்தால் எங்க அப்பா மோக்ஷம் அடைந்தாரா இல்லையா என்று பார்த்து சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். அவரும் தனது ஞான திருஷ்டியால் பார்த்து தசரதர் மோட்சம் அடைந்து விட்டார் மற்ற அனைவருக்கும் நீங்கள் திதி கொடுக்கலாம் சீதை கொடுத்த திதி போதுமானது என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ராமருக்கு சீதை மீது இருந்த கோபம் தணிந்து மற்றவர்களுக்கு திதி கொடுத்து தனது பிதுர் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார்.

சீதை அக்ஷயா மரம் தவிர மற்ற நான்கு பொருட்களுக்கும் கலியுகத்தில் மதிப்பு இருக்காது என்று கூறினார்....

1. பால்குனி நதி - இந்த நிதியால் கலியுகத்தில் யாருக்கும் எந்த பலனும் இருக்காது வருடத்தில் பத்து இருபது நாட்களுக்கு தான் மேலே சொல்லும் {நாங்கள் சென்றிருந்த நேரம் நீர் இருந்தது ஆனால் குளிப்பதற்கு ஏதுவாக இல்லை}

2. துளசி - கலியுகத்தில் துளசி மூன்று மாதம் தான் இருக்கும் அதன் பிறகு மீண்டும் அழிந்து... அழிந்து துளிர் விடும்.

3. பசுமாடு - முகத்திற்கு யாரும் பூஜை செய்ய மாட்டார்கள். மாட்டிற்கு பின்னால் தான் பூஜை செய்து புண்ணியம் தேடுவார்கள். கலியுகத்தில் பசு மாடுகளுக்கு கோ பூஜை என்பது பின்னால் தான் செய்ய வேண்டும்.

4. கயா பிராமணர் - எவ்வளவு தட்சனை கொடுத்தாலும் கலியுகத்தில் இவர்களை திருப்தி படுத்த முடியாது.

சீதையின் சாபம் இன்றளவும் பலித்து கொண்டிருக்கிறது.
உண்மையைக் கூறியதால் அக்ஷய மரம் இன்றளவும் புண்ணிய மரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு கேட்கலாம் பெண்கள் எவ்வாறு திதி கொடுக்கலாம் ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்று அதற்கும் ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது. தசரதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்று இருக்கும் பொழுது சிரவண குமாரன் தன் தாய் தந்தையை தீர்த்த யாத்திரைக்காக அழைத்துக் கொண்டு காசி வரும் பொழுது ஒரு நதியின் ஓரம் இருவரையும் அமரவைத்து குடிப்பதற்காக தண்ணீர் எடுத்துவர சென்றிருந்தான். கண் தெரியாத தாய் தந்தையை தொட்டில் வடிவில் அமரவைத்து தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். சிரவண குமாரன் தண்ணீர் எடுக்கும் காட்சியை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மான் நதியில் நீர் அருந்துவது போல இருந்தது. இதனைக்கண்ட தசரதச் சக்கரவர்த்தி சரவணகுமாரனை மான் என்று நினைத்து அம்பு எழுதினார் அப்பொழுது அம்மா என்ற குரலுடன் சிவகுமாரன் கீழே மடிந்தான். பதறிய தசரத சக்கரவர்த்தி அவனருகே சென்ற பொழுது தான் செய்த தவறை எண்ணி அவனிடம் நீ யார் என்று கேட்டார் அவன் அனைத்தையும் கூறியவுடன். ஐய்யகோ பெரும் பாவம் செய்து விட்டேன் என்று எண்ணி அவர் அங்கு சரவணகுமார் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு இருவர் அருகிலும் சென்றார்.

அப்பொழுது அவர்கள் எனது மகன் சிரவண குமாரன் நீ இல்லை. நீ யார் என்று கேட்டார். நடந்த அனைத்தையும் தசரதன் கூறியதை கேட்டு அவர் சாபம் கொடுத்தார். நீ இறக்கும் தருவாயில் உனது மகன்கள் உன்னருகே இருக்க மாட்டார்கள். மகன்கள் கையால் உனக்கு மோட்சம் கிடைக்காது என்று சாபம் கொடுத்தார்.

இந்த சாபம் தான் தசரதன் இறக்கும் பொழுது நான்கு மகன்களும் அருகில் இல்லை. அதே போல திதியும் மகன்கள் கையால் கொடுக்கப்படாமல் சீதை கையால் தான் கொடுக்கப்பட்டது. இதனால் தான் தசரதர் ராமர் திதி கொடுப்பதற்காக பதில் சீதையிடம் வந்து பிண்டம் {உணவு} வாங்கிக் கொண்டு மோட்சத்திற்கு சென்றார்.

மூன்றாவதாக செய்யப்படும் திதி இங்கு இந்த அக்ஷய மரம் அருகில் தான் செய்யப்படுகிறது.

உலகம் படைக்கப்பட்ட ஆண்டு எப்போது?

உலகம் படைக்கப்பட்ட ஆண்டு எப்போது? சனாதன சமய வான சாஸ்திர கணக்கு   இந்து மதப்படி உலகம் படைக்கப்பட்ட ஆண்டு எப்போது சங்கல்பம் போதும் விடை  தமிழில் "கணக்கதிகாரம்"  நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது, இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்து கொள்வதற்கு சமம்....  சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்....  கோவிலில் அர்ச்சனை செய்யும் போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக திருமணம் மற்றும் பூஜை, திதி சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம். அப்படி சங்கல்பம் செய்யும்போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  "சங்கல்பம்" :- "மாமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்.. என்று ஆரம்பித்து ..." ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சாலீவாஹண ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.. அன்றைய தினத்திற்க்கு உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்"  அது என்ன சங்கல்ப மந்திர கணக்கு என்றால்? மிக எளிமையான உங்களுக்கு தெரிந்த கணக்குதான் அது!!!!  30 நாள் = 1 மாதம்  12 மாதங்கள் = 1வருடம்  60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)  3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)  4 யுகங்கள் = 1 சதுர்யுகம்  71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்  14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்  ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள் (கணக்கதிகாரம்). தற்போது இதில் பாதி முடிந்து விட்டது.  இப்பொழுது நடந்து கொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.  ஸ்வேதவராஹ கல்பம் என்றால் - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த கால வெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.  வைவஸ்வத மன்வந்தரம் என்றால் - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.  14 மன்வந்திரங்களாவன என்பவை:-  1.ஸ்வாயம்புவ மன்வந்திரம்.  2.ஸ்வரோசிஷ மன்வந்திரம்.   3.உத்தம மன்வந்திரம்.  4.தாமச மன்வந்திரம்.  5.ரைவத மன்வந்திரம்.  6.சாக்ஷாஷ மன்வந்திரம்.  7.வைவஸ்வத மன்வந்திரம்.  8.சாவர்ணிக மன்வந்திரம்.  9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம்.  10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம்.  11.தர்ம சாவர்ணிக மன் வந்திரம்.  12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம்.  13.தேவ சாவர்ணிக மன்வந்திரம்.  14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.  அதாவது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.  அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - (71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம் அல்லவா   ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்.  கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.  இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.  இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.  ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.  1. ஜம்பூ த்வீபம் [நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது.] 2. பிலக்ஷ த்வீபம். 3. சான்மலி த்வீபம். 4. குச த்வீபம். 5. க்ரௌஞ்ச த்வீபம். 6. சாக த்வீபம். 7. புஷ்கர த்வீபம்  பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.  1. பாரத வர்ஷம். 2. ஹேம கூட வர்ஷம். 3. நைஷத வர்ஷத்ம்.  4. இளாவ்ருத வர்ஷம். 5. ரம்ய வர்ஷம். 6. ச்வேத வர்ஷம். 7. குரு வர்ஷம். 8. பத்ராச்வ வர்ஷம்.  9. கந்தமாதன வர்ஷம். பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.   1.பரத கண்டம். 2. கிம்புரு கண்டம் 3. அரிவருட கண்டம். 4. இளாவிரத கண்டம். 5. இரமிய கண்டம். 6. இரணிய கண்டம். 7. குரு கண்டம். 8. கேதுமால கண்டம். 9.பத்திராசுவ கண்டம.  இதில் நாம் (பாரத தேசம்) பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.  மேரோர் தக்ஷாணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.  எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் [கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்] வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது. அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது. ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!  ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.  இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வான சாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு வருடங்கள் போதாது.

வெள்ளி, 8 மார்ச், 2024

விநாயகர் அஷ்டோத்தரம்

விநாயகர் அஷ்டோத்தரம், கணேச அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கௌரீபுத்ராய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் அக்நிகர்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் சர்வதநயாய நம:
ஓம் சர்வரீப்ரீயாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம:
ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சுத்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் ப்ரம்மசாரிணே நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துதாய நம:
ஓம் பக்தவிக்னவிநாசநாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் சக்திஸம்யுதாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம:
ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
ஓம் பீஜபூரபலாஸக்தாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷூசாபத்ருதே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரீபேத்த்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாசநாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் தீராய நம:
ஓம் வாகீசாய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வப்ரியாய நம:
ஓம் அவ்யக்தமூர்த்தயே நம:
ஓம் அத்புதமூர்த்திமதே நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் ஆச்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் ஸௌம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானிநே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேச்வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்த்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:
ஓம் சைலேந்த்ர தநுஜோத் ஸங்க கேலநோத்ஸுக மானஸாய நம: 100
ஓம் ஸ்வலாவண்யஸுதாஸார ஜிதமன்மத விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம:
ஓம் த்வஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மநே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி


ஞாயிறு, 14 ஜனவரி, 2024

சதாசிவ பிர்ம்மேந்திரர்

18ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிர்ம்மேந்திரர். சோமநாதர் - பார்வதி அம்மையார் தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சிவராமகிருஷ்ணன். ஆம்! சதாசிவ பிரம்மேந்திரருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுதான். கல்வி, கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் முதலானவற்றை முறையாகக் கற்றார். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீட்சிதர், சிவயோகி தாயுமான ஸ்வாமி, தியாகராஜர் முதலானோரெல்லாம் சதாசிவ பிரம்மேந்திரரின் சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

துறவு என்றால் காவிதானா? அவதூத நிலையும் (நிர்வாணம்) ஒரு துறவுதான். சதாசிவ பிரம்மேந்திரர் இதைத்தான் கடைப்பிடித்து வாழ்ந்தார். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் மவுன நிலை. எவரிடமும் எந்த ஒரு பேச்சும் இல்லை. காரணம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரது குரு சும்மா இருக்க மாட்டியா! உன் வாயைக் கொஞ்ச நேரம் மூடு என்று அதிகாரமாகச் சொன்னதை. ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாகக் கருதி, அந்தக் கணம் முதல், பேச்சை நிறுத்தினார்.

மவுனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல பாகங்களுக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் சென்று வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. துருக்கி நாட்டுக்குக்கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச் செய்தி உண்டு. ஒரு முறை இவர் திகம்பரராக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சிற்றரசன் ஒருவனது அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து செல்கிறார் என்ற தகவல். அந்த சிற்றரசனைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியது.

ஆத்திரத்துடன் அரசவையில் இருந்து வெளிவந்த சிற்றரசன் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரைத் தன் வாளால் சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டுப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. கை வெட்டுப்பட்டதையும் அந்த இடத்தில் ரத்தம் ஆறுபோல் வழிந்துகொண்டு இருப்பதையும் பற்றி சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த சிற்றரசன் விதிர்விதிர்த்துப் போனான். கை வெட்டுப்பட்டும் சலனம் இல்லாமல் ஒருவர் நடந்து செல்கிறார் என்றால் இவர் யாராக இருக்கும் என்று குழும்பிப் போய் பயம் மேலிட அவர் பின்னே தொடர்ந்தான்.

மகானின் நிலை தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க ஓடிப்போய் அவருடைய பாதம் பணிந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். அப்போது சதாசிவரிடம் எந்த மாற்றம் இல்லை. எதுவுமே நிகழாதது போல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்லத் தடவி விட்டார். அடுத்து நடந்ததை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தம் வழிவது சட்டென நின்று, வெட்டுப்பட்டுத் தரையில் கிடந்த அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது!

அதன்பின் சதாசிவரின் அருளுக்கும் ஆசிக்கும் அந்த சிற்றரசன் பாத்திரமாகி விட்டான். இது போல் சதாசிவரின் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்கள் நடந்துள்ளன. சிறு வயதிலேயே பரப்பிரம்ம நிலையை எய்தியவர் சதாசிவர். அதாவது கல், கட்டை, மனிதர், புல், பூண்டு அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை தான் பரப்பிரம்ம நிலை. எதற்கும் பேதம் பார்ப்பதில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளைக் காவிரிக் கரை ஓரத்திலேயே கழித்தவர் சதாசிவர். அதனால் தானோ என்னவோ  எங்கெங்கோ சுற்றி இருந்தாலும் இறுதிக் காலத்தில் அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

ஜீவசமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே சமாதி நிலையில் இருந்தார் சதாசிவர். உணவு, உறக்கம் போன்ற இயல்பான செயல்கள் எதுவும் இல்லாமல். கட்டை போல் இருக்கும் நிலை. அப்போது மட்டுமில்லை. அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர். இப்படித்தான் ஒரு முறை கொடு முடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் உட்கார்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது கரையில், சமாதி நிலையில் இருந்த சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்து விட்டது. கரையில் இருந்தவர்கள் பதறினார்கள். கரையில் உட்கார்ந்து தியானம் செய்த சாமியக் காணோம் என்று ஒருவர் அலற.... அடுத்தவர் சோகத்துடன் ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தைப் பாத்தீல்ல. அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவாங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரோட ஆயுளு இப்படி அற்பமா முடிஞ்சு போச்சே என்று அங்கலாய்த்தார்.

இதன் பிறகு சதாசிவரைப் பற்றிக் கொடுமுடிவாசிகள் மறந்தே போய் விட்டார்கள். ஒரு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய நேரத்தில், காவிரியில் வாய்க்கால் வெட்டுவதற்காக ஒரு மணல் கோட்டை மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள் பணியாளர்கள். ஓர் ஆசாமி மண்வெட்டியால் வெட்டிய போது பதறிப்போனார். உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண் வெட்டி பட்டதாகத் தெரிகிறது என்று அலறி, மண் வெட்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்!

திகிலான மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து. அந்த மண் வெட்டியை எடுத்துப் பார்க்க.... அதன் முனையில் ரத்தம்! இதைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பிறகு அவர்களே சமாதானம் அடைந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த மண்ணை மெதுவாக விலக்கினார்கள். உள்ளே பள்ளத்தில் உடலெங்கும் மணல் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி தந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். காற்றுகூட புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாகத்தான் சமாதி நிலையில் இருந்தாரோ அந்த மகான்? இறைவனுக்குத்தான் தெரியும்.

தன் சமாதி நிலை கலைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவ. அவர் உடலில் இருந்து மண் துகள்கள் உதிர்ந்தன. அவர் உடலில் மண்வெட்டி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறு வென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக்கண்டு திகைத்துப் போனார்கள். பரப்பிரம்மத்துக்கு ஏது வலி? ரத்தத்தைக் கண்டு ஏது பயம்.? இது போல் தான் சமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பும் சமாதி நிலையில் நெரூரில் இருந்தவர் சதாசிவர். பல நாட்கள் இப்படி ஓடின. திடீரென ஒரு நாள் கண் விழித்தார் பிரம்மேந்திரர். ஏதோ சொல்லப் போகிறார் என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரை நெருங்கினார்கள். ஊரில் இருந்த முக்கிய பிரமுகர்களை உடனே அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தணர்கள் உட்பட அனைவரும் கூடினர்.

ஆனி மாதம் வளர்பிறை தசமி அன்று. பூத உடலை, தான் துறக்க இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தினர். தான் சமாதி ஆன பின், காசியில் இருந்து அந்தணர் ஒரு பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும் அதைத் தன் சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். ஜீவ சமாதியாகும் நாள் நெருங்கியது காவிரி ஆற்றங்கரை ஓரம் சதாசிவர். தான் சமாதி ஆவதற்காகத் தேர்வு செய்ய இடத்தில் இருந்த புல், பூண்டுகளை அகற்றும் பணியில் ஊர்க்காரர்கள் இறங்கினர். நெரூர் பூமி, புண்ணியம் செய்த பூமி, இல்லையென்றால் இத்தனை பெரிய மகான் நம்மூருக்கு வந்து சமாதி ஆவாரா? என்று ஊர்க்காரர்கள் நெகிழ்ந்தனர். சாஸ்திரப்படி குழி வெட்டினார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்பிரம்மம். ஜீவசமாதி ஆவதைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜனங்கள் திரண்டிருந்தனர். அனைவரின் முகமும் சோகம் கப்பியதாக இருந்தது.

குறித்தநேரம் வந்ததும். ஜனத்திரளில் நீந்தி. தனக்காகத் தோண்டப்பட்ட குழியை அடைந்தார் சதாசிவர். வேத மந்திர கோஷங்களின் ஒலி. அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. இரு புறமும் கூடி இருந்த மக்களின் வழிபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, தனக்கான குழியில் இறங்கினார். ஜனங்கள் அனைவரையும் ஒரு முறை சந்தோஷமாகப் பார்த்தார். பிறகு குழியின் நடுவில் சமாதி நிலையில் உட்கார்ந்தார். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அங்கு கூடி இருந்தவர்களுக்கு சமிக்ஞையாகச் சொன்னார். சமாதி மூடப்பட்டு சடங்குகள் நடந்தன. வந்திருந்தோர் அனைவரும் கண்ணீருடன் வழிபட்டுத் திரும்பினர். அந்த பரப்பிரம்மம். இந்த உலகத்துடனான தன் சரீரத் தொடர்பை விலக்கிக் கொண்டது சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடியே, அவர் சமாதியான பின், காசியில் இருந்து அந்தணர் ஒருவர் பாண லிங்கத்தைக் கொண்டு வந்தார். பிரம்மேந்திரருடைய விருப்பப்படி அவரது சமாதி அருகில் அந்த பாண லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானவரும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருமான விஜயரகுநாதராய தொண்டைமான் தகவல் கேள்விபட்டு நெரூர் வந்தார். காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் கட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் சமாதி வழிபாடுகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆகம பூஜை. ஜீவ சமாதிக்கு வைதீக பூஜை. கோயில் மற்றும் அதிஷ்டானம் ஆகிய இரண்டும் இணைந்த திருக்கோயிலாக இது காட்சி அளிக்கிறது.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பில் கோயில் இன்று இருந்து வருகிறது. காசி விஸ்வநாதர் (சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடி காசியில் இருந்து வந்த பாண லிங்கம் இதுதான்) மற்றும் விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கோயிலுக்குள் அருள் புரிகின்றனர். காசி விஸ்வநாதர் சன்னதிக்குப் பின்பக்கம் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதிக்குக் குடை பிடித்தபடி ஒரு பிரமாண்ட வில்வ மரம் காணப்படுகிறது.

சதாசிவர், ஜீவ சமாதி ஆன பத்தாம் நாளில் இந்த வில்வ மரம் தானாக வந்தது. இப்படி ஒரு வில்வ மரம் முளைக்கும் என்கிற செய்தி புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ருத்ரம், சமகம், புருஷசூக்தம் முதலிய பாராயணம் நடக்கும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை பத்து மணிக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம் உண்டு. அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது என்றார் நாராயண உபாத்யாயா. இவர்தான், ஜீவ சமாதியின் வழிபாடுகளை தற்போது கவனித்து வருகிறார்.

மகான்களின், மரணம் என்பது உடல் நீக்கம் மட்டுமே! காலங்களைக் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. அந்த மகானின் சன்னிதியைத் தரிசித்துச் செல்லும் அன்பர்களே சாட்சி.

ஸ்ரீசதாசிவரின் திருப்பாதம் பணிவோம்.

மகானின் திருக்கரம் பட்ட மந்திர மண்!

சமஸ்தானமாக இருந்தபோது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாதராய தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரருக்கு நெருக்கமானவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்டபோது. துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி , உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்டபோது. துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணத்துக்கு முன்னரே பசித்தபோது வயிற்றுக்குச் சோறு போட முடியவில்லை என்றால், மணமானபின் இல்லற வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்; எப்படியெல்லாம் சிரமங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று சிந்தித்தவர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விட்டார் நடந்தார்.... நடந்தார்...

தஞ்சாவூர் வழியே சென்றால். 1738 வாக்கில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளக் காடுகளில் (இதை திருவரங்கம் என்பாரும் உண்டு) நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மன்னரான விஜயராகுநாத ராய தொண்டைமான். மகானான சதாசிவரை சந்தித்தார். தன்னந்தனியே இருந்த மன்னரைக் கண்ட மாத்திரத்திலேயே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் கோலத்தில், சதாசிவம் முன் பணிந்தபடி நின்றார் மன்னர். மவுனத்தையே தான் கடைப்பிடித்து வந்ததால், கீழே அமருமாறு சைகை காண்பித்தார். மன்னரும் அமர்ந்தார். அதன்பின் கீழே இருந்த மணலில் சில மந்திரங்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தையும் எழுதிக் காண்பித்த அவருக்கு உபதேசம் செய்தார்.

அந்த மந்திரம்:

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.

மந்திர உபதேசத்தைப் பெற்றுக்கொண்டபின், எந்த மணலில் சதாசிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதினாரோ அந்த மணலைத் தன் இரு கைகளால் பவ்யமாக அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார் தொண்டைமான். இந்த மந்திர மண்ணை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டார் மன்னர் என்கிறார். சமஸ்தானத்தின் இன்றைய ராணியான ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமான்.

சதாசிவர் தன் கைவிரல்களால் மந்திர எழுத்துக்களை எழுதிக் காண்பித்த அந்த மணல் இன்று எங்கே இருக்கிறது?

எங்கள் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருக்கும் அந்த மந்திர மணல் அடங்கிய பேழை. வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இருந்து வருகிறது. இங்கு ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்ட அபூர்வமான தட்சிணாமூர்த்தி விக்கிரகமும் உள்ளது. என்று ராணியின் புதல்வரான ராஜ்குமார் விஜய்குமார் தொண்டைமான் கூறினார்.

மந்திர மணல் சன்னிதியையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை அன்று மட்டுமே தரிசிக்க முடியும். வழிபாட்டு நேரம் காலை 08.30 - 11.00; மாலை 05.30 - 08.00 {இதைத் தவிர, நவராத்திரியின் போது பத்து நாட்களிலும் தரிசிக்கலாம்}

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு...

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு...

தியாகராஜர் 'பிரபவ வருடம் பூசத்திங்கள் கிருஷ்ணபட்சம் ஞாயிற்றுக்கிழமை சமாதியடைந்தார்.அதற்கு ஆறு நாள்களுக்கு முன்னால் குன்றில் அமர்ந்தபடி ராமர் அவருக்குத் தரிசனம் தந்து பூமியில் தியாகராஜரின் காலம் முடியும் நாள் நெருங்கிவிட்டது என்று கூறினார்.சஹானா ராகத்தில் அமைந்த தியாகராஜரின்'கிரிவை'என்ற கிருதி இதைத் தெரிவிக்கிறது.பின்னர் அவர் சன்னியாசம் ஏற்று நாதபிரம்மானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.காவிரிக் கரையில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்ட அவர் தன் சீடர்களை அழைத்து இருதிகாலத்திற்க்கு பின் தனது உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.சவக் குழியில் எவ்வளவு உப்பு இட வேண்டும் என்பதைக்கூடச் சொன்னாராம்.குறிப்பிட்ட அந்த நாளில் பிராமணர்களுக்குத் தானங்கள் அளித்து, பின்னர் தியாகராஜர் சீடர்கள் அவரது கிருதிகளைப் பாடியபடியிருக்க யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். சட்டென்று அவரது சிரசிலிருந்து ஒரு பெரும்ஜோதி வெளிப்பட்டது தியாகராஜர் சமாதியடைந்தார். ஆங்கில நாள்காட்டியின்படி அன்று 1847ஆம் வருடம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி.தியாகய்யரின் பேரன் பஞ்சாபகேசய்யா இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

தியாகராஜர் தனது சமாதிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே பல சன்னியாசிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.மராட்டிய மன்னர் பரம்பரையின் தூரத்து உறவுக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இந்த இடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து திருவையாறில் காலமான சாதுக்களை அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்தது.தியாகராஜரின் சீடர்கள் அவரது சமாதிக்கு மேலே துளசி மாடம் ஒன்றை அமைத்தனர்.தியாகராஜர் முக்தியடைந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாபகேசய்யாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.அவரது சீடர்கள் அனைவரும் அதற்காக அங்குக் கூடினர்.அப்போதெல்லாம் அது ஒரு சிரார்த்தம்போலச் சம்பிரதாயச் சடங்காக எந்த இசை நிகழ்ச்சியும் இல்லாமல் நடந்தது.1855ஆம் ஆண்டு இருபத்திரெண்டு வயதில் பஞ்சாப கேசய்யா மரணமடைய சீடர்களும் திருவையாறுக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர்.அவரவர் தத்தமது ஊர்களில் திதியை நடத்தினர்.பிருந்தாவனம் மறக்கப்பட்டுப் புதர் மண்டியது.1903 வாக்கில் தியாகராஜரின் சீடர்களில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர்.இவர்களில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தமது குருவின் சமாதி சிதிலமடைந்திருந்ததை அறிந்து திருவையாறுக்கு வந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் அந்த இடத்தைக் கண்டுபிடித்துப் புனருத்தாரணம் செய்தனர்.சமாதியின் பின்பக்கத்தில் இதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் அவர்கள் பதித்தனர்.

அன்று தியாகராஜரின் சீடர்களில் மூன்று பரம்பரைகள் பிரபலமாக இருந்தன வாலாஜாப்பேட்டை தில்லை ஸ்தானம் உமையாள்புரம்.வாலாஜாப் பேட்டை பரம்பரை வேங்கடரமண பாகவதர் மற்றும் அவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரிடமிருந்து வந்தது.தியாகராஜரிடமிருந்து நேரடியாகச் சங்கீதம் பயின்ற இவர்கள் அவரைப் பற்றித் தனித்தனியாக வரலாறு எழுதினார்கள்.தில்லை ஸ்தானம் பரம்பரை ராம ஐயங்காரிடமிருந்து வந்தது.தியாகராஜரின் கிருதிகளை வரிசைப்படுத்தியவர்களில் முன்னோடி இவர்.உமையாள்புரம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தாம் மேலே குறிப்பிடப்பட்ட கிருஷ்ண சுந்தர பாகவதர்கள்.தில்லை ஸ்தானம் ராம ஐயங்காரின் சீடர்கள் தில்லை ஸ்தானம் சகோதரர்களான நரசிம்ம பாகவதரும் பஞ்சு பாகவதரும் கும்பகோணத்தில் வசித்து வந்த மூத்தவர் ஹரிகதை வித்தகர்.தில்லை ஸ்தானத்தில் வசித்துவந்த இரண்டாமவர் இசைக் கலைஞர்.1908இல் ஒரு முறை சென்னை சென்ற நரசிம்ம பாகவதர் சென்னை தங்க சாலையிலிருந்த தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் பல இசைக் கலைஞர்களைக் கூட்டினார்.சென்னை நகரத்தின் பழைய சபாக்களில் ஒன்றான பக்தி மார்க்க பிரசங்க சபாவின் செயலாளரான முனுசாமி நாயுடுவும் அந்தக் கூட்டத் திற்கு வந்திருந்ததார்.இசைக் கலைஞர்கள் அனைவரும் தியாகராஜரின் இசையினால் வாழ்ந்துகொண்டிருப்பதால் தங்கள் கடப்பாட்டைத் தெரிவிக்கும் முகமாகத் திருவையாற்றில் ஆண்டுதோறும் ஆராதனை விழா எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பாகவதர் சபைமுன் வைத்தார்.ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்றோர் அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது.

1909இல் இசைக் கலைஞர்கள் பலரும் ஆராதனையில் பங்கெடுக்க முன்வந்ததால் திருவையாற்றில் ஐந்து நாள் இசை விழா நடத்த வேண்டிவந்தது.ஆராதனைக்கு நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கிய விழா ஆராதனை நாளன்று நிறைவு பெற்றது.இனிவரும் ஆண்டுகளிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.தில்லை ஸ்தானம் நரசிம்ம பாகவதரும் அவரது சகோதரர் பஞ்சு பாகவதரும் இந்த விழாவிற்கான தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தியாகராஜரின் இசைப் பரம்பரையின் நேரடிச் சீடர்கள் என்பதால் ஆராதனை நாளன்று சமாதிக்கு அபிஷேகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இசைக் கலைஞர்கள் வேறு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்தனர் ஒன்று பெண்கள் எக்காரணத்தைக்கொண்டும் சமாதியின் முன் பாட அனுமதிக்கப்படமாட்டார்கள் இரண்டு நாதஸ்வரக் கலைஞர்கள் சமாதியிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.மிகச் சிறந்த வித்வான்களைக்கொண்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கூட்டம் இந்த ஏற்பாட்டிற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஆராதனை நாளன்று இரவில் தியாகராஜர் உருவப்படத்தின் பூப்பல்லக்குப் பவனிக்கு ஏற்பாடுசெய்து நாதஸ்வரக் கலைஞர்கள் தங்கள் இசை அஞ்சலியைச் செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.1940வரையிலும் இந்த ஏற்பாடே தொடர்ந்தது.

1909 வாக்கில் ஆராதனை விழா மிகவும் பிரபலமடைந்திருந்தது.ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு பல கச்சேரிகளுக்கும் ஹரிகதா காலட்சேபங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 1910இல் விழாவிற்கான நிதி தொடர்பாக சகோதரர்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. நரசிம்ம பாகவதர் ஆராதனை விழாவில் கலந்துகொள்ளாமல் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் தனியாக நடத்தினார்.திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை புதுச்சேரி ரங்கசாமி ஐயர் கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்ற பல இசைக் கலைஞர்கள் அவரது அணியில் இருந்தனர்.நரசிம்ம பாகவதர் சகோதரர்களில் மூத்தவர் என்பதால் இவரது அணி'பெரிய கட்சி'என்று அழைக்கப்பட்டது.பஞ்சு பாகவதர் திருவையாறிலேயே ஆராதனை விழாவை நடத்தினார்.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் நேமம் நடேச பாகவதர் பல்லடம் சஞ்சீவ ராவ் போன்றோர் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.இந்த அணி 'சின்னக் கட்சி'என்று அழைக்கப்பட்டது.ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டன.நரசிம்ம பாகவதர்1911இலோ அதை ஒட்டிய சில ஆண்டுகளிலோ மரணமடைந்த காலம்வரை இந்த நிலை நீடித்தது.அவரது மரணத்திற்குப் பிறகு பெரிய கட்சியும் விழாவைத் திருவையாற்றிலேயே கொண்டாடத் தலைப்பட்டது.இரண்டு கட்சிகளுமே ஆராதனை விழாவைத் திருவையாறிலேயே அதுவும் ஒரே சமயத்தில் நடந்த முடிவுசெய்ததால் அங்குப் பதற்றம் நிலவியது.ஏற்கனவே பண நெருக்கடியிலிருந்த சின்னக் கட்சி முக்கியமான சங்கீத வித்வானும் முசிறி சுப்பிரமணிய ஐயரின் குருவுமான சென்னையைச் சேர்ந்த பிரபலஸ்தர் டி.எஸ்.சபேச ஐயரை வளைத்து அவரிடம் சென்னையில் நிதிதிரட்டித் தரும்படிக் கேட்டுக்கொண்டது.இந்தக் கட்சி பச்சையப்ப முதலியார் சத்திரத்திலும் பெரிய கட்சி கல்யாண மஹால் சத்திரத்திலும் ஆராதனை விழாவை நடத்தின.ஆராதனை நாளின்போது சின்னக் கட்சி முதலில் சமாதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் பெரியக் கட்சி தனது வழிபாட்டைப் பின்னர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் அமலில் இருந்தது.

இந்தப் பூசலும் கட்சிகட்டலும் பல வித்வான்களை மிகவும் துயரில் ஆழ்த்தின.ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களில் முதன்மையானவர்.1913இல் பெரிய கட்சியின் அழைப்பின் பேரில் அவர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டார்.ஜனவரி 16ஆம் தேதி இரண்டு கட்சிகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ததோடு இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார்.ஆனால் சமாதியில் பூசை செய்வதற்கான உரிமை யாருடையது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.தியாகராஜரின் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சின்னக் கட்சி கூற பெரிய கட்சியோ தியாகராஜரின் தமையனார் சபேசனின் பேரனும் அன்று உயிரோடிருந்த ஒரே வாரிசுமான ராமுடு பாகவதருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று எண்ணியது.இரண்டு கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்படவில்லை. முத்தையா பாகவதர் இரு கட்சியினரும் ஒன்றுசேரும்வரை ஆராதனை விழாவில் கலந்துகொள்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துச் சென்றுவிட்டார்.1914ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி சின்னக் கட்சி தியாகராஜ பரப்பிரம்ம வைபவ பிரகாச சபை என்று பெயரிட்டுப் பதிவுபெற்ற சபையாகத் தன்னை உருமாற்றிக்கொண்டது.சென்னையிலுள்ள பண்டிட் லஷ்மணாச்சாரின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற முதல் கூட்டத்தில் அவர் தலைவராகவும் ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் உதவித் தலைவராகவும் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் செயலாளராகவும் டி.எஸ். சபேச ஐயர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்ட பஞ்சு பாகவதர் சமாதியில் பூசைசெய்யும் உரிமையை மட்டும் தனக்குத் தக்கவைத்துக்கொண்டார்.பதிவுபெற்ற சபையானதால் இந்தச் சபாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்ததோடு ஏகப்பட்ட நிதியும் வசூலானது.இதனால் ஆராதனை விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.மேலும் அந்தச் சபை வரவுசெலவுக் கணக்குகளை மிகுந்த பொறுப்புடன் அச்சிட்டு நன்கொடையாளர்களுக்கு வழங்கியது.பெருகிவரும் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக1915இல் பாலாயி சத்திரத்திற்கு மாறிய விழா 1917இல் அங்கிருந்து புஷ்ய மண்டபத்திற்கு நகர்ந்தது.பெரிய கட்சியோ மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையையே தனது நிதி ஆதாரங்களுக்காகப் பெருமளவு சார்ந்திருந்தது.அவரும் மனமுவந்து உதவிவந்தார்.சில ஆண்டுகளில் 2000 ரூபாய்வரை வசூலானது.தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு{பகுதி-2}

1918இல் பண்டிட் லஷ்மணாச்சார் இறக்கவே பூச்சி ஐயங்கார் சின்னக் கட்சி சபையின் தலைவரானார். 1919இல் அவர் இறக்க மாயவரம் வீணை வைத்தியநாத ஐயரும் அவருக்குப் பின் தஞ்சாவூர் கோவிந்த பாகவதரும் தலைவரானார்கள்.இவ்விருவருமே பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே மரணமடைந்துவிட்டனர்.இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக இருந்த சூல மங்கலம் வைத்தியநாத ஐயருக்கு இதனால் பெருங்கிலி உண்டாகி தலைவர் பதவியை ஏற்க மறுத்துச் செயலாளராகவே தொடர்ந்தார்.இதன் பிறகு தலைவர் பதவி காலியாகவே இருந்தது.பஞ்சு பாகவதர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க அவரது சீடரான ராஜகோபால பாகவதர் சின்னக் கட்சியின் சார்பில் சமாதியில் பூசைசெய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.பெரிய கட்சியின் சார்பால் ராமுடு பாகவதரே பூசையைச் செய்துவந்தார்.

1920களில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் மலைக்கோட்டைக் கோவிந்தசாமிப் பிள்ளையும் தத்தமது கட்சிகளின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தார்கள்.இருவருமே பிறரை மதிக்காத சுபாவம் கொண்டவர்கள்.இதனால் அவர்கள் பலரைப் பகைத்துக்கொண்டனர்.என்றாலும் இருவரும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததால் நிதி குவிந்துகொண்டேயிருந்தது.விழா நிகழ்ச்சிகள் மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தப்பட்டன.1923இல் வைத்தியநாத ஐயர் வரவுசெலவுக் கணக்குகளைச் சரியாகக் காட்டாததால் கோபமுற்ற சூலமங்கலம் சௌந்திரராஜ பாகவதர் டி.எஸ்.சபேச ஐயர் கல்யாணபுரம் விஸ்வநாத சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஸ்ரீதியாகராஜ பரப்பிரம்ம பக்த கான சபா என்ற பெயரில் மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்துப் புஷ்ய மண்டபத்தில் தனியாக விழா எடுத்தனர்.இந்த முயற்சி நீடிக்கவில்லை அடுத்த வருடமே அது நின்றுபோயிற்று.இதனால் சூலமங்கலம் வைத்தியநாத ஐயரின் கை ஓங்கியது.மறு வசத்தில் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை நாதஸ்வரக் கலைஞர்களான திருவிடை மருதூர் வீராசாமிப் பிள்ளை திருவீழிமிழலைச் சகோதரர்கள் ஆகியோர் கோவிந்தசாமிப் பிள்ளைக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தினர்.இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பெங்களூர் நாகரத்தினம் மாளின் வரவும் நிகழ்ந்தது.'வித்யா சுந்தரி' 'கானகலா விஷாரத்' பெங்களூர் நாகரத்தினம்மாள்

பெங்களூர் நாகரத்தினம்மாள்1878ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மைசூரைச் சேர்ந்த வக்கீல் சுப்பராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேவதாசி குலத்தவரான புட்டுலக்ஷ்மிக்கும் பிறந்தார்.நாகரத்தினம் பிறந்த சில நாள்களிலேயே பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர்.தாயும் குழந்தையும் வறுமையில் வாடினர். மைசூர் அரசவையைச் சேர்ந்த சமஸ்கிருதப் பண்டிதரான கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரி என்பவர் பின்னர் புட்டுலக்ஷ்மிக்கு அடைக்கலம் அளித்தார்.அவர் நாகரத்தினத்திற்குச் சமஸ்கிருதம் கற்பித்தார். நாகரத்தினம் மிக விரைவிலேயே அந்த மொழியைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தார்.இதைப் பொறுக்க மாட்டாமல் கிரிபட்டர் நாகரத்தினத்திற்கு9வயது இருக்கும்போது தாயையும் மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.துன்பத்திலும் மனம் தளராத புட்டுலக்ஷ்மி தன் மகளை மகாராஜாவே அழைக்கும்படி பிரபலமாக்கிவிட்டுத்தான் மைசூர் மண்ணை மிதிப்பேன் என்று சூளுரைத்து மைசூரை விட்டு வெளியேறினார்.தன் மகளுக்கு நல்ல சங்கீத ஆசிரியரைத் தேடி அலைந்த அவர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் உறவினரான தனகோடி அம்மாளைச் சந்திப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். ஆனால் தனகோடி அம்மாளோ வயதாகி மரணப் படுக்கையில் இருந்தார்.ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும்படியாக இருவருக்கும் சொன்னார்கள்.கையில் பணமில்லாத தால் தாயும் மகளும் பெங்களூர் சென்று புட்டுலக்ஷ்மியின் சகோதரர் வேங்கடஸ்வாமி அப்பாவிடம் தஞ்சம் புகுந்தனர். நாகரத்தினத்திற்குச் சங்கீதம் கற்றுத் தருவதற்காகப் பிரபல வயலின் வித்வான் முனிசாமியப்பா ஏற்பாடு செய்யப்பட்டார்.அவளுக்கு நாட்டியமும் கற்பிக்கப்பட்டது.ஆங்கிலம் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளும் கற்பிக்கப்பட்டன.ஆண்டுக் கட்டணமான நாற்பது ரூபாயைப் புட்டுலக்ஷ்மி பெரும்பாடுபட்டுத் தேற்றிக் கொடுத்துவந்தார்.பின்னர் நாகரத்தினம் மைசூரின் பெரிய வித்துவானான பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்டார்.கிருஷ்ணப்பா வீணை சேஷண்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.சேஷண்ணா மைசூர் சதாசிவராவின் சீடர்.சதாசிவராவ் வாலாஜாப் பேட்டை வேங்கடரமண பாகவதரிடம் சங்கீதம் கற்றவர்.இப்படியாக நாகரத்தினமும் தியாகராஜரின் இசைப் பரம்பரையில் ஒருவரானார்.நாகரத்தினத்திற்குப் பதினான்கு வயதிருந்தபோது புட்டுலக்ஷ்மி இறந்தார்.

1893இல் வீணை சேஷண்ணாவின் இல்லத்தில் கச்சேரி நடத்துவதற்காக நாகரத்தினம் அழைக்கப்பட்டார்.வெற்றிகரமாக நடந்த அந்தக் கச்சேரியைப் பற்றிக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் தன் மகள் ஜெயலக்ஷ்மி மணி ருதுவானபோது இசை நிகழ்ச்சி நடத்த நாகரத்தினத்திற்கு அழைப்புவிடுத்தார்.தன் தாயாரின் சூளுரைக்கு ஏற்ப நாகரத்தினம் அரசின் அழைப்பிற்கிணங்கி மைசூர் மண்ணில் முதல் முறையாகக் காலடி எடுத்துவைத்தார்.கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரியும் அதில் கலந்துகொள்ள வேண்டிவந்தது. இந்தக் கச்சேரிக்குப் பிறகு நாகரத்தினம் அரசவைக் கலைஞரானார்.இத்தருணத்தில் மைசூர் நீதிபதியான டி.நரஹரி ராவ் அவருக்கு ஆதரவாளரானார்.
1903இல் நாகரத்தினம்மாள் இசைத் தட்டு உலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.கல்கத்தா கௌஹர் ஜானைப் போல அவரும் கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியாவின் இசைத் தட்டுகளுக்காகப் பாடத் தொடங்கினார்.அது தென்னிந்தியா முழுவதும் அவருக்குப் பெயர்பெற்றுத் தந்தது.1905இல் சி.எஸ். ராஜரத்தின முதலியாரின் ஆதரவோடு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர் ஜார்ஜ் டவுன் சீனிவாச அய்யர் தெருவில் பத்தாம் இலக்க வீட்டை அமர்த்திக்கொண்டார்.கிரகப் பிரவேசத்தன்று பிடாரம் கிருஷ்ணப்பா கன்னடக் கிருதிகள் அமைந்த கச்சேரி ஒன்றை நிகழ்த்தினார்.இதற்குப் பரிசாக அவருக்கு வைர மோதிரம் அளிக்கப்பட்டது.சென்னையில் பூச்சி ஐயங்காரின் ஆதரவும் கிடைத்தது.சம்பாதித்த பணத்தை நாகரத்தினம்மாள் நல்ல முறையில் முதலீடு செய்ததால் அவருக்கு வருமானம் பெருகியது.வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர் அவர்தான்.மாறிவரும் சமூகச் சூழலை உன்னிப்பாக அவதானித்து வந்த அவர் சதிர்க் கச்சேரியின் காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து அதை நிகழ்த்துவதை விட்டுவிட்டார்.ஹரிகதையும் கர்நாடக சங்கீதமும் நிகழ்த்துபவரானார்.

அவரது புகழ் எங்கும் பரவியது.சமஸ்கிருதத்தில் அவருக்கிருந்த திறமை கலைஞர்களிடமிருந்தும் வித்வான்களிடமிருந்தும் அவருக்குப் பெருமை பெற்றுத் தந்தது.1929இல் சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம மாநாட்டை அவர் தனது சமஸ்கிருத உரையோடு தொடக்கிவைத்தார்.1905க்கும்1934க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்116நகரங்களில்1235நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்.1934இல் வெளியான சனாதன தர்ம பிரசார சபா விழா மலரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் யு.பி.கிருஷ்ணமாச்சார் என்ற அறிஞர் பட்டியலிட்டுள்ளார்.ராஜமுந்திரியில் நடந்த கண்ட பேர விழாவில் அவரைப் பாராட்டி இரட்டைக் கவிஞர்களான திருப்பதி வேங்கடேசக் கவிகள் சமஸ்கிருதக் கவிதை வாசித்தனர்.மேலும் அவருக்குச் சந்தன மாலையுடன் வரவேற்பும் அளிக்கப்பட்டது.அதில் நடந்த விவாதம் ஒன்றின்போது திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்த முத்துப் பழனி என்பவர்19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்று சபையிலிருந்த அறிஞர்கள் குறிப்பிட்டனர்.அவர்களின் அறியாமையைக் கண்டு நாகரத்தினம் பெரும் வியப்படைந்தார்.அந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் ஆசைக்கிழத்தியான முத்துப் பழனி என்பவர்தான் என்ற விவரம் அவருக்குத் தெரியும்.அவர் தனது மறுப்பைத் தெரிவித்தபோது அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை.சென்னை திரும்பியதும் அவர் முத்துப் பழனியின் இன்னொரு நூலான காமரசம் நிரம்பிய'ராதிகா சாந்தவனமு'என்ற நூலை வெளியிட்டு தன்னைப் போன்ற தேவதாசிகள் பலரும் பெரிய சமஸ்கிருத வித்வான்கள் என்பதை நிரூபிக்க முயன்றார்.1911இல் வாவில்லா ராமசாமி சாஸ்திரிலு அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட அந்த நூல் சீர்தருத்தவாதியான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது. அன்று போலீஸ் கமிஷனராக இருந்த கன்னிங்காம் புத்தகத்தின் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.இதனால் அந்தப் புத்தகத்தின் புகழ் அதிகரித்தது. அது தடை செய்யப்பட்டது.1947இல்தான் அந்தத் தடை நீங்கியது.

நாகரத்தினம்மாளுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்துகொண்டேவந்தது.பல விருதுகளும் பதக்கங்களும் அவருக்குக் கிடைத்தன.என்றாலும் தனக்கு ஒரு குழந்தையில்லாதது அவருக்குப் பெரும் துயரத்தை அளித்துவந்தது.இதனால் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தார்.ஆனால் அந்தப் பெண்1921இல் அவளது பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் நாகரத்தினம்மாளுக்கு விஷம் கொடுக்க முயன்றதாகச் சந்தேகம் ஏற்பட்டது.நல்ல காலமாக நாகரத்தினம் அந்த விஷமிடப்பட்ட பாலை அருந்தவில்லை.அந்தப் பெண்ணுடனான உறவை அவர் அத்துடன் முறித்துக்கொண்டார்.அந்த ஆண்டு அவருக்குத் தியாகராஜரின் உருவப்படம் ஒன்று கிடைத்தது.அதை வழிபட ஆரம்பித்தார்.தியாகராஜர் ஒரு நாள் அவர் கனவிலும் தோன்றினார்.நாகரத்தினம்மாளுக்கு அவர்தான் தன்னை விஷத்திற்குப் பலியாவதிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.இந்தச் சமயத்தில்தான் அவரது குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில் தியாகராஜர் சமாதியின் பரிதாப நிலை பற்றி எழுதப்பட்டிருந்தது.நாரத்தினம்மாள் உடனடியாகத் திருவையாறு புறப்பட்டுச் சென்றார்.நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும் & வரலாறும்{பகுதி-3}

பெரிய கட்சியில் அவரது நண்பர்கள் பலர் இருந்த தால் நாகரத்தினம்மாள் அந்தக் கட்சியின் ஆதரவை முதலிலேயே வென்றுவிட்டார்.சமாதி இருந்த இடம் ராஜா ராமண்ணாஜி சூர்வே என்பவரது வசமிருப்பதாக அவர்கள் மூலமாகத் தெரியவரவே நாகரத்தினம் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை விற்பதில் சட்டரீதியான வில்லங்கங்கள் இருந்தாலும் நாகரத்தினம் தனது வசமுள்ள சில சொத்துகளை மாற்றாகவைத்து ஒருவழியாக ஏற்பாடு செய்துவிட்டார்.இரண்டு கட்சிகளும் நடப்பவற்றை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.நாகரத்தினம்மாள் சற்றும் தாமதியாமல் தனது சொந்தச் செலவிலேயே தியாகராஜரின் கற்சிலை ஒன்றைச் செய்வித்துப் பிருந்தாவனத்தின் முன் பிரதிஷ்டை செய்தார்.சின்னக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் இந்தச் சிலையைப் பற்றி மோசமாகப் பேசிவந்தார்.பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக ஒரு சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது.நாகரத்தினம்மாள் அந்த இடத்தை வாங்கிவிட்டதால் எவராலும் எதுவும் பேச முடியவில்லை.சமாதியின் மீது கோவில் எழுப்புவதற்கான அடிக்கல்1921ஆண்டு அக்டோபர்27இல் இடப்பட்டுப் பணியும் தொடங்கியது.இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு கட்சிகளின் ஆராதனை விழாக்களும் நடந்துவந்தன ஒரே ஒரு வித்தியாசத்துடன்.பெரிய கட்சி ஆராதனை நாளன்று தனது விழாவைத் தொடங்கி ஐந்து நாள்கள் நடத்தியது.சின்னக் கட்சி ஆராதனைக்கு நான்கு நாள்கள் முன்பாகத் தனது விழாவைத் தொடங்கி ஆராதனையன்று முடித்துக்கொண்டது.எப்படியோ திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக நல்ல விருந்து கிடைத்தது வயிற்றுக்கும் செவிக்கும்.

கோயில் பணி 1925இல் முடிந்து கும்பாபிஷேகம் ஜனவரி 7இல் நடந்தது.ராமுடு பாகவதர் தினசரிப் பூசைக்கான பூசாரியாக நாகரத்தினம்மாளால் நியமிக்கப்பட்டார்.அந்த ஆண்டு சின்னக் கட்சியின் விழா மூன்றாம் நாள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையும் நாகரத்தினம்மாளும் திருவையாறு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஐயரிடம் சென்று இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விழாவை நடத்தவில்லை என்றால் அங்குச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழக்கூடும் என்பதை எடுத்துக் கூறினர்.அவர் சின்னக் கட்சியினரைச் சென்று பார்த்து பெரிய கட்சியினரோடும் நாகரத்தினம்மாளோடும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.சந்திப்புக்கு ஏற்பாடாகிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கோவிந்தசாமிப் பிள்ளைக்கும் வைத்தியநாத ஐயருக்கும் தகராறு மூண்டதால் இரு கட்சியினரும் பரஸ்பரம் விழாக் கொண்டாட்டங்களை நடக்க விடுகிறேனா பார் என்று மிரட்டிக்கொண்டார்கள்.அன்று மாலை சின்னக் கட்சியினர் வைத்தியநாத ஐயர் அரியக்குடி(அவர் அப்போது அந்தக் கட்சிக்கு வழிநடத்துபவராக மாறியிருந்தார்)இருவரின் தலைமையில் திருவையாறு மாஜிஸ்திரேட் ஏ.வி.சுப்பையாவைச் சந்தித்து ஆராதனை விழா நடக்கும் மறுநாள்'பந்தோபஸ்து' தரும்படி கேட்டுக்கொண்டனர்.மாஜிஸ்திரேட் இரண்டு கட்சியிரையும் அழைத்து ஆராதனையன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பெரிய கட்சி தனது பூசைகளை முடித்துக்கொள்ள வேண்டும் சின்னக் கட்சியினர் ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பூசைசெய்வதற்குச் சமாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவு இட்டார்.எல்லாம் சுமுகமாக நடப்பதற்காகப் போலீஸ் காவலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுநாள் நாகரத்தினம்மாளும் கோவிந்தசாமிப் பிள்ளையும் ராமுடு பாகவதரைப் பெரிய கட்சியின் பூசையை ஒன்பது மணிக்குள் முடிக்கச் சொல்லி சமாதிக் கோவில் கதவைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.பூஜைக்காக வந்த சின்னக் கட்சியினர் போலீஸை அழைத்தனர்.போலீஸ் பூட்டை உடைக்க உத்தரவிட்டது.ஆனால் ராமுடு பாகவதர் சமயத்துக்கு வந்து அவரே கதவைத் திறந்துவிட்டார்.மேலும் தான் சின்னக் கட்சியின் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன் என்று எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டுக்கு உறுதிமொழியும் அளித்தார்.போலீஸ் சமாதி இருந்த இடத்தில் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது.1926இல் சின்னக் கட்சி தனது ஆராதனை விழாவைப் புஷ்ய கல்யாண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றியது.அந்த ஆண்டு நாகரத்தினம்மாள் சமாதி தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் தன்னால் நியமிக்கப்பட்டவரைத் தவிர யாரும் பூசை செய்யக் கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இரு கட்சியினரின் ஆராதனை விழாக்களும் முன்புபோலத் தொடர்ந்தன.

நாகரத்தினம்மாள் சின்னக் கட்சியோடு மோதிக் கொண்டதுபோல் பெரிய கட்சியோடும் உறவை முறித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.1927இல் பெரிய கட்சி நடத்திய ஓர் இசை அஞ்சலி விழாவில் கலந்துகொள்ள வந்த நாகரத்தினம்மாள் பாடுவதற்காக மேடையேறினார்.ஆனால் பக்கவாத்தியக்காரர்கள் பெண்களுக்கு சமாதிக்கு முன்பு பாட அனுமதியில்லை என்று கூறி வாத்தியங்களைக் கீழே வைத்துவிட்டனர்.கோப முற்று வெளியேறிய நாகரத்தினம்மாள் சொந்தமாகவே விழா எடுக்கத் தீர்மானித்தார்.இப்படியாக பெங்களூர் நாகரத்தினம்மாள் கட்சி ஒரு மூன்றாம் அணியாக உருவெடுத்து பெரிய கட்சி விழா எடுத்த அதே நாள்களில் சமாதியின் பின்னால் விழா நடத்தத் தொடங்கியது.பெண்களும் இளம் இசைக் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.மற்ற இரு கட்சிகளின் விழாக்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு இந்தக் கட்சியின் விழாகளைகட்டியது.தனது கட்சியின் விழாக்களுக்கெல்லாம் நாகரத்தினம்மாள் தன் கைப்பணத்தைச் செலவழித்து வந்தார்.இறுதியாகத் தன் சென்னை வீட்டை விற்றுவிட்டு1930இல் நிரந்தரமாகத் திருவையாறுக்குக் குடிவந்துவிட்டார்.மேலும் ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை வசூல் செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றார்.தனது பருத்த உடலையும் தூக்கிக்கொண்டு தொலை தூரங்களுக்குக்கூட ஆராதனை விழா நிதி திரட்டு வதற்காகத் தளராமல் சென்றுவந்தார்.

1930இல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மாரடைப்பு வந்து அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது.1931இல் அவர் இறப்பதற்கு முன்னால் பெரிய கட்சியின் ஆராதனை விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பைத் திருவீழிமிழலைச் சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற வித்வான்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். காஞ்சிபுரம் நாயனா பிள்ளையும்1934இல் அவர் மரணமடையும் வரையிலும் முக்கியப் பங்கு வகித்துவந்தார்.நாடகக் கம்பெனிகளான தஞ்சாவூர் சுதர்ஸன சபா நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு போன்றவை பெரிய கட்சி ஆராதனை விழாவில் பங்கேற்றன.எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா நல்ல முறையில் நடந்துவந்தது.ஆனால் நாகரத் தினம்மாள் நடத்திய விழாதான் வெகு விமரிசையாக நடந்தது.1938இல் நாகரத்தினம்மாள் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களையும் விலை கொடுத்து வாங்கித் தியாகராஜ ஆசிரமம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார்.திருவையாறு வக்கீல் சி.வி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரமுகர்களும் அவரது விழாக்களில் பங்கேற்றனர்.இந்தச் சூழ்நிலையில் பெரிய கட்சி சிறிய கட்சியோடு இணைவது பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

சின்னக் கட்சியிலும் இதே உணர்வுதான் இருந்தது.அக்கட்சியில் நிதி திரட்டுவதிலும் ஆராதனை விழாவிலும் முக்கியப் பங்காற்றிவந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் முசிறி சுப்பிரமணிய ஐயர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற இளம் கலைஞர்கள் ஆராதனை விழாவை இணைந்து நடத்தும்படி வலியுறுத்தினர்.மூத்த கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்நாத ஐயரும் பல்லடம் சஞ்சீவராவும்கூட இதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர்.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் வயதாகிக் கொண்டுவந்ததால் அவருக்கும் விழாவை நடத்துவது சிரமமாக இருந்தது.1939இல் காவேரி டெல்டா பகுதியின் தனி அலுவலராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய்.கிருஷ்ண சாமி ஐ.சி.எஸ்.ஒன்றுபட்ட ஆராதனை விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வம் காட்டினார்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்1940ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.நாகரத்தினம்மாள் அணி சார்பில் நாகரத்தினம்மாளும் சி.வி. ராஜகோபாலாச்சாரியும் பெரிய கட்சி சார்பில் திருவீழிமிழலைச் சகோதரர்களும் சின்னக் கட்சி சார்பில் முசிறியும் செம்மாங்குடியும் கலந்துகொண்டனர்.ஆராதனை விழாவை நடத்துவதற்காகப் புதியதோர் அமைப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.அவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் விதித்து இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டார்.அ.சின்னக் கட்சியினரின் பூசை செய்யும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் ஆராதனை நாளன்று ராஜகோபால பாகவதர் சமாதியில் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும்.ஆ. நாதஸ்வரக் கலைஞர்களை மேடையில் கச்சேரி நடத்த அனுமதிக்கக் கூடாது.
இ. பிராமணர்களுக்கான போஜனம் சின்னக் கட்சியின் வழிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.

தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா 1940 ஜனவரியில் தொடங்கப்பட்டது.அந்த ஆண்டு ஆராதனையையும் அது நடத்தியது.இரு அணிகளும் இணைந்ததைக் கேள்விப்பட்ட ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரும் ஆராதனையில் கலந்துகொண்டார்.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் ஹரிகதை நடத்திக்கொண்டிருந்தபோது நாகரத்தினம்மாள் மேடையில் ஏறி அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்றது.அந்த ஆண்டு ஆராதனை விழா மிகவும் வெற்றிகரமாக நடந்தது.பெண்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.நாதஸ்வர வித்வான்களை மேடையேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து டி.என்.ராஜரத்தினம் பிள்ளை தனது எதிர்ப்பைக் காட்டியதால் அந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் வைதீகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்டார்.அதைத் தொடர்ந்த வருடங்களில் நடந்த ஆராதனை விழாக்களில் அவர் கலந்துகொள்ளவில்லை முசிறி போன்ற பெரிய வித்வான்கள் பங்கெடுத்துக்கொண்டபோதும் 1934இல் தியாகராஜரைப் போல அவரும் சன்னியாசம் வாங்கிக்கொண்டார் அவரைப் போலவே மூன்று நாள்கள் கழித்துக் காலமானார்.அவரது உடல் சொந்த ஊரான சூலமங்கலத்தில் அடக்கம்செய்யப்பட்டது.1941இல்தான் பஞ்சரத்ன கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தபட்டது.அதற்கு முன்பெல்லாம் பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த 'சேதுலரா'வை மட்டும் வாசிப்பார்.இந்த மரபு இன்றும் தொடர்கிறது.இன்றும் கூடப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடத் தொடங்குவதற்கு முன் புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.

திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாள்களை அவரது குருவான தியாகராஜரைத் தியானிப்பதிலேயே கழித்தார்.உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பாவித்தார்கள்.1946இல் சித்தூர் வி.நாகையா தியாகராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்துத் தியாகையா என்ற படத்தை எடுத்தார்.படம் நல்ல வசூல் கண்டது.நாகரத்தினம்மாளின் விருப்பத்திற்கிணங்க நாகையா திருவையாறுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அந்தப் படத்திலிருந்து கிடைத்த வருமானத்தில்'தியாகராஜ நிலையம்'என்ற சத்திரத்தைக் கட்டினார்.1948 ஜனவரி3ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனது உயிலை எழுதி வைத்தார்.தனது எல்லாச் சொத்துகளையும் நகைகள் உட்பட தியாகராஜர் சமாதியின் பரிபாலனத்திற்காக அளித்திருந்தார்.வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்ட் அந்தச் சமாதிக்கும் அதைச் சுற்றியிருந்த நிலங்களுக்கும் உரிமை பெற்றது.அவர் தனது உயிலில் பெண் கலைஞர்களோ பாடகர்களோ தேவதாசிகள் உட்பட சமாதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதை எவரும் தடை செய்ய முயலக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.1949இல் விஜயநகரம் மகாராணி வித்தியாவதிதேவி அவருக்குத்தியாகராஜ சேவா சந்தா என்ற பட்டத்தை அளித்தார்.

1952ஆம் ஆண்டு மே மாதம்19ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதுபோல் இருப்பதாகக் கூறினார்.அப்படியே அவர் மூச்சும் ஒடுங்கியது.அவரது உடல் ஊர்வலமாகத் தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம்செய்யப்பட்டது.அந்த இடத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டு மண்டபமும் கட்டப்பட்டது.அந்தச் சிலை தியாகராஜர் சமாதியைப் பார்த்தபடி அமைக்கப்பட்டது.இந்த மண்டபத்தின் எதிரில்தான் இன்று வித்வான்கள் ஆராதனையின்போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.கர்நாடகத்தைச் சேர்ந்த கோலார் ராஜம்மாள் என்ற தேவதாசி தியாகராஜரின் சமாதிக்கு மின் வசதியை அமைத்துக் கொடுத்தார்.தியாகராஜ ஆராதனை விழா இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா.இதற்கெல்லாம் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும்.அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.ஆராதனை விழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் பூசைகள் தனித்தனியாகத்தான் செய்யப்படுகின்றன.ஆகையால் இன்றும்கூட ஆராதனை நாளன்று தியாகராஜருக்கு மூன்று அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.முதலாவது பழைய சின்னக் கட்சியில் இன்று இருப்பவர்களும் ராஜகோபால பாகவதரின் வழித் தோன்றல்களுமாகச் செய்வது இரண்டாவது பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்டின் சார்பாக நடைபெறுவது.இறுதியாக தியாகப் பிரம்ம மஹோத்சவ சபாவினால் செய்யப்படுவது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுவது இந்த அபிஷேகத்தின் போதுதான். நாம் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சியில் காண்பதும் இதைத்தான்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!

சாது  ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!
--------------------------------------------------------------
இறைவன் கருணைக் கடல் - அனைவருக்கும் பொதுவானவர்.  அவரை உள்ளுணர்ந்து அனுபவிப்பவர்களுக்கே சாகரத்தின் தன்மை புலப்படும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இறை அனுபவம் ஒரு பிரமிப்பான விஷயம் மட்டுமே. இறை நிலையை ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. சிலருக்கோ மத்திம வயதை தாண்டி அடைய முடிகிறது.

இங்கு நாம் சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருணை பொங்கும் முகத்தோடு தன்னை நாடி வரும் அன்பர்களின் தேவையை அறிந்து அருள் செய்தவர். கடலூர் முது நகரை சேர்ந்த லட்சுமி அம்மாள், அரங்கசுவாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலேயே உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கணவரின் வேலை நிமித்தமாக வட இந்தியாவிற்கு பயணமான கிருஷ்ணவேணி அம்மாள் பாட்னா, ஹரித்வார் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அதுவே அவரின் ஆன்மீக தேடலுக்கு ஆரம்ப புள்ளி. வாழ்க்கைப் பயணம் சுமூகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரின் கணவர் இறந்து விட, அவரின் துறவற வாழ்க்கை ஆரம்பமானது. அவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு பித்தர் போல் இருக்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். திருச்செந்தூர் சென்ற  கிருஷ்ணவேணி அம்மாள் ஒரு சித்தர் தன் பின்னே தொடர்ந்து வரும் படி ஆணையிட அவரைத் தொடர்ந்து பாபநாசம் - பொதிகை மலைக்கு சென்றார். சித்தர் அங்கிருக்கும் ஒரு குகையை சுட்டிக்காட்டி அங்கு இருக்கும் படி கூறினார். அங்கு ஒரு சிவலிங்கமும் இருக்கின்றது. அதுவே கிருஷ்ணவேணி அம்மாளின் இருப்பிடமாக மாறியது. அக்குகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல தவம் செய்திருக்கிறார். இந்த குகை புலஸ்தியர் தவம் செய்த இடம் என நம்பப்படுகிறது.

துறவரம் பூண்ட ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் பொதிகை மலையில் 75 வருடங்களுக்கு மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். பல முறை ஸ்ரீ அகத்திய முனிவர் உள்ளிட்ட சித்தர்கள்  கிருஷ்ணவேணி அம்மாளுக்கு காட்சி கொடுத்துள்ளனர். ஸ்ரீ துர்க்கை அடிக்கடி காட்சி கொடுத்து வழி நடத்தியதாக  கிருஷ்ணவேணி அம்மாள் கூறியிருக்கிறார்.

பொதிகை மலையில் அகத்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தத்திற்கு மிக அருகில் கிருஷ்ணவேணி அம்மாள் வசித்த இடம் இருக்கிறது. சிவன் - பார்வதி திருமண கோலத்தை காண உலகமே திரண்டிருந்த கால கட்டத்தில் வடதிசை மக்களின் சுமை தாங்காமல் தாழ்ந்த விட அதை சமன் செய்வதற்காக அகத்தியர் தென்திசைக்கு அனுப்பப்பட்டார். தென்னிந்தியாவில்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைக்கு வந்த ஸ்ரீ அகத்திய முனி மலையில் தவம் மேற்கொண்டதற்கு புராண சான்று இருக்கின்றன. இங்கு அகத்தியருக்கு சிவன் - பார்வதி திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடமே கல்யாண தீர்த்தம்.

தனி பெண்மணியாக யாருமே அதிகம் நடமாடாத இடத்தில்  வசித்த கிருஷ்ணவேணி அம்மாளுக்கு பல நேரங்களில் குகைக்கு வெளியே கரடியும் உள்ளே பாம்பும் காவல் காத்து வந்தன. வன தேவதை போல் வாழ்ந்த கிருஷ்ணதேவி அம்மாளை சில சமயம் பார்க்க வரும் அன்பர்கள் பழம் உணவு கொடுத்துள்ளார்கள் . அவ்வாறு கொடுத்தவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் வர ஆரம்பித்தது. அதிலிருந்து சாது கிருஷ்ணவேணி அம்மாள் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரைக் காண மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. பக்தர்களின் நலன் பொருட்டு கிருஷ்ணவேணி அம்மாள் கீழிருந்து மேல் கல்யாண தீர்த்தம் வரை படிக்கட்டுகள் தானே அமைத்து வசதி செய்து கொடுத்தார். அங்கே ஒரு மடமும் அமைத்தார்.

கிருஷ்ணவேணி அம்மாளின் தவ ஆற்றல் அளப்பரியது. மிகவும் வறட்சியான காலத்தில் வருண ஜெபம் செய்து மழையை பொழியச் செய்துள்ளார். ஒரு சமயம் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளக்காடாக காட்சி அமைத்த கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி எங்கேயும் கிருஷ்ணவேணி அம்மாவின் நடமாட்டம் தெரியவில்லை. என்ன ஆனாரோ அனைவரும் பயந்தனர். நான்கு நாட்கள் கழித்து குகையிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல், மிகவும் மலர்ச்சியாக வெளியே வந்தார் சாது கிருஷ்ணவேணி அம்மாள் .

அவர் காலத்தில் இருந்த சித்தர்களான மாயம்மா, பூண்டிசித்தர் போன்ற மகான்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி அம்மாள். 2011 ஆம் ஆண்டு, தன்னுடைய 120 ஆவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இன்றும் அவரின் அஸ்தி அவர் கட்டிய மடத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது. அவரை எண்ணி வேண்டிய செயல்கள் யாவும் இன்றும் அவர்கள் பக்தர்களுக்கு நடந்தேறுகிறது.  

சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம் அன்பர்கள் சாது கிருஷ்ண வேணி அம்மாளை வணங்கி வர அவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். மேலும் ஜாதகத்தில் குரு/சந்திரன்/ சனிக்கு 1, 2, 5, 9ல் கேது இருக்க பெற்றவர்களுக்கு எளிதாக சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும் கிடைக்கும். இவர்கள் கிருஷ்ணவேணி அம்மாளை தியானித்து வர நன்மை பயக்கும். இந்த அமைப்பு இல்லாமல் இருந்தாலும் மேற்கூறிய கிரகங்களுக்கு 1, 2, 5, 9ல் கோட்சார கேது வரும் காலங்களிலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கப் பெறும்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் மடம்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அகத்தியர் அருவிக்கு மேலே சாது கிருஷ்ணவேணி அம்மாள் மடம் உள்ளது.

தியாகராஜ சுவாமிகள்...

தியாகராஜ சுவாமிகள்.. அவர்களின்  ஆராதனை விழா... பொதிகை டீவியில்..

காமிரா சுவாமிகளின் பிரதிமை, நடக்கும் அபிஷேக ஆராதனைகளையும் காட்டின. கூடவே இரு வரிசையில் அமர்ந்து உற்சாகமாக "எந்தரோ" என தலை ஆட்டியபடி  தாளம் போட்டு பாடிக் கொண்டு இருந்த ஆண்/ பெண் பாடகர் /பாடகியரையும். பெண்கள் பட்டுப்புடவை, பெரிய பெரிய நெக்லஸ், வடங்கள் . வைர மூக்குத்தி, கம்மல்கள் டாலடிக்க... அவர்களைப் பார்த்த உடன்  என் மனதில் இவர்கள் எல்லோரும் குறிப்பாக பெண்கள்... இன்று இங்கு வந்து உட்கார்ந்து பாட வழி வகுத்த அந்த மாது சிரோண்மணியின் நினைவு வந்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.

அவர் "வித்தியாசுந்தரி.. பெங்களூர். புட்டலஷ்மி நாகரத்னம்மா" அவர்கள். அவர் 1878 இல், மைசூர் நஞ்சன் கூட்டில் பிறந்தவர்.
பெற்றோர்  புட்டலஷ்மி, வழக்கறிஞர் சுப்பாராவ்... புட்டலஷ்யின் மூதாதையர்கள். மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும், விதூஷிகளாகவும் பணியாற்றியவர்கள். தேவரடியார் மரபு...

நாகரத்னம்மாவிற்க்கு ஸமிஸ்கிரதம், இசை, கன்னடம், ஆங்கிலம், தமிழ் தெலுங்கு, நடனம், ஹரிகதை ஆகியவை இயற்க்கை யாகவே கை வந்தது கலை. தனது 15 வது வயதில் வயலின் கலைஞராகவும் நடனக் கலைஞராகவும் தனது முதல் மேடை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

 மைசூர், விஜயநகரம், திருவிதாங்கூர், பொப்பிலீ அரசவைகளில் ஆஸ்தான விதூஷி பதவி, பெயர், புகழ். பெரும் பொருள் அவர் வீட்டுக் கதவைத் தட்டியது... செல்வம் கொழித்தது. ஆனால் அவர் மனம் தாமரை இலை தண்ணீர் போல் அவற்றில் ஒட்டவில்லை. சென்னையில் இருந்த போது நாகரத்னம்மா தனது குருவான 'பிதாரம் கிருட்டிணப்பா' மூலம் அப்போதைய தியாகராஜரின் சமாதியின் பாழடைந்த நிலையை கேல்விப்பட்டார்... அவர் மனம் துடித்தது. எப்பேர்பட்ட இசை பிதாமகரின் சமாதிக்கு இந்த நிலையா? தியாகப்பிரம்மத்தின் கிருதிகளை பாடி பல வித்வான்கள் பெரும் பொருள் ஈட்டுகிறார்கள், மேடைக்கு மேடை பலர் வாய் கிழிய பேசுகிறார்கள்... ஆயிரக்கணக்கான சங்கீத ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ஆனால் அவர் சமாதியை பராமரிக்க நாதி இல்லையா? அங்கும் நீயா/நானா போட்டி பெறாமைகள் அதன் பலன் சாமாதி சீர் குலைந்து கிடந்தது .

நாகரத்னம்மா செயலில் இறங்கினார். தன் சொந்தப் பணத்தில் சமாதி நிலத்தை மீட்டெடுத்து... திருத்திக் கட்டி... ஸ்ரீ தியாகராஜரின் பிரதிமையை 1921 இல் ஸ்தாபித்தார்... கும்பாபிஷேகம்... தினமும் பூஜை பிரார்த்தனை  ஏற்பாடு செய்தவர் இந்த மாது சிரோண்மணி தான். தியாகராஜரின் நினைவாக வருடாந்திர இசை ஆராதனையை முதன் முதலாக சிறப்பாக, கிரமமாக நடத்த  பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. அங்கும் காழ்ப்புணர்ச்சி பெண்கள் ஆண்களுடன் சமமாகப் உட்கார்ந்து பாடுவதா? என்று குறிப்பாக இவர் 'நீ அந்த மரபு' என. கட்டிடம் எழும்பியது, நிலம் மீட்டது, கும்பாபிஷேகம் எல்லாம் இவர் பணத்தில் ஆனால் இவர் அங்கு பாட அனுமதி இல்லை. "நான் பாடவில்லை ஹரிகதை செய்யவாவது அனுமதியுங்கள்" என்று கெஞ்சினார். ஊகும்... சனாதன தர்மம் என்ன ஆவது? என ஆங்கார மறுப்பு. இவரா அஞ்சுபவர்? ஆராதனை நாளில் கட்டிடத்தின் பின் பெண்களைக் கூட்டி பாட ஆரம்பித்தார். அதை "பொண்டுகள் கட்சி" என பரிகசித்தது. ஆண்களின் "பெரிய கட்சி.." பிறகு நாகரத்னம்மா முயற்ச்சியால் இரண்டும் இணைந்ததாம்... பல இலக்கிய இசை நூல்களை மீட்டெடுத்து தன் சொந்த செலவில் பதிப்பித்தவர்.

முக்கியமாக திருவையாற்று "முத்துப்பழனி" (1730 - 1790) தஞ்சை நாயக்க அரசரான பிரதாபசிம்மன் (1739-1763) அரசவையில் இருந்த இளம் தெலுங்குப் பெண் கவிஞர். தேவரடியார் மரபில் வந்தவர்... இவரது புகழ்பெற்ற படைப்பு "ராதிகா சாந்தவனம்" இந்தநூல் ராதை யின் பார்வையில் பெண்களின் விரக தாபத்தை நாயகன் நாயகி பாவத்தை வெளிப்படையாகப் பேசும் ஒரு  அற்ப்புத இலக்கியம் நாட்டியத்திற்க்கு மிகவும் தோது. அப்போதைய அரசர் அவையினரால்  பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாடி அபினயிக்கப் பட்டை புகழ் பெற்றது.

இது 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாவால் திருத்தப்பட்டு  மறுபதிப்பு கண்ட போது சில வக்கிர புத்திக் காரர்களால் ஆபாசப் பிரதியாக சித்தரிக்கப்பட்டு தடை. "ஒரு தேவரடியாள் எழுதினாள்.. மற்றொரு தேவரடியார் பதிப்பிதாள்"  என கேவலமாக பேசினார்கள். இவர் அசரவில்லை..  அதன் அற்ப்புதமான இலக்கியச் சுவயைப் பாருங்கள் என தொடர் போராட்டம் இத்தடை 1947ல் இல் விலகியது. புத்தகம் வெளி வந்து புகழ் பெற்றது.

இவர் வெளிட்ட மற்ற நூல்கள்: “மத்யா பானம்”
“தியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி”  “பஞ்சகீரண பௌதீகம்”  போன்றவை. ஒரு துறவி போல் வாழ்ந்தார். பெண் உரிமைகளுக்கு போராடினார். குறிப்பாக தேவரடியார் பெண்கள் நல்வாழ்விற்க்கு.

நாகரத்னம்மா அவர்கள் மே மாதம் 19 ஆம் தேதி 1952 இல் தனது 74 வயதில் மறைந்தார். தியாகராஜரின் சமாதிக்கு அடுத்ததாக இவரது நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் மட்டும் அன்று சமாதி நிலத்தை மீட்டெடுத்து, சிலை அமைத்து வழிபாடு, ஆராதனை ஆரம்பித்து இருக்காவிட்டால்? அந்த முயற்ச்சி எடுத்திருக்க விட்டால்? "ஆத்மீக பூமியாம்"!! செந்தமிழ் நாட்டில் எத்தனையோ கோவில்கள் பாழடைந்து,, மண்ணோடு மண்ணாகி கிடப்பது போல் சமாதியின் கதியும்  ஆகி இருக்கும். அது பற்றி ஆவேச பட்டி மன்றங்கள் நடந்தபடி இருந்து  இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெங்களூர் நாகரத்னம்மா அவர்களின்  மலர் பாதம் பணிந்து  நமஸ்காரம்  

வாழ்க அவர் புகழ்...

புதன், 10 ஜனவரி, 2024

மஹா சிவராத்ரி 08:03: 2024

மாசி மஹா சிவராத்திரி 2024 மார்ச் மாதம் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது... அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....

சிவராத்திரி, அதாவது சிவபெருமானின் பிரியமான இரவு. ஆண்டு முழுவதும் மொத்தம் 12 மாத சிவராத்திரி விரதங்கள் உள்ளன. சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் பால்குன் மாதத்தின், கிருஷ்ண பக்ஷத்தில், பதினான்காம் நாளில் நடந்தது. பாரம்பரியத்தின் படி, இந்த நாளில் போலேநாத் முதன்முறையாக சிவலிங்க வடிவில் காட்சியளித்தார். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காம் நாளில் மகிழ்ச்சி, செழிப்பு, சந்ததி மற்றும் வெற்றிக்காக மாசி சிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி மற்றும் ரதி தேவியும் மாதாந்திர சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தனர். 2024 புத்தாண்டில் மாசிக் சிவராத்திரி விரதங்களின் தேதிகள் மற்றும் முக்கியத்துவத்தைக் காண்போம்.

மாசிக் சிவராத்திரி 2024 பட்டியல்: இந்த பண்டிகை கொண்டாடப்படும் அனைத்து தேதிகளையும் பின் வரும்.

மாசிக் சிவராத்திரி 2024 தேதிகள்

1.ஜனவரி 9, 2024, செவ்வாய் - பௌஷ் மாசிக் சிவராத்திரி

2.பிப்ரவரி 8, 2024, வியாழன் - மக மாசிக் சிவராத்திரி

3.மார்ச் 8, 2024, வெள்ளி - மஹா சிவராத்திரி, ஃபால்குன் சிவராத்திரி

4.ஏப்ரல் 7, 2024, ஞாயிறு - சைத்ர மாசிக் சிவராத்திரி

5.மே 6, 2024, திங்கட்கிழமை - வைஷாக மாசிக் சிவராத்திரி

6.ஜூன் 4, 2024, செவ்வாய் - ஜ்யேஷ்ட மாசிக் சிவராத்திரி

7ஜூலை 4, 2024, வியாழன் - ஆஷாட மாசிக் சிவராத்திரி

8.ஆகஸ்ட் 2, 2024, வெள்ளி - ஷ்ரவன் மாசிக் சிவராத்திரி

9.செப்டம்பர் 1, 2024, ஞாயிறு - பாத்ரபாத மாசிக் சிவராத்திரி

10.செப்டம்பர் 30, 2024, திங்கள் - அஷ்வின் மாசிக் சிவராத்திரி

11.அக்டோபர் 30, 2024, புதன் - கார்த்திகை மாசிக் சிவராத்திரி

12.நவம்பர் 29, 2024, வெள்ளி - மார்கழி மாசிக் சிவராத்திரி

மாசிக் சிவராத்திரி விரதத்தின் முக்கியத்துவம்:
பதினான்காம் நாள் விரதம் அனுஷ்டிப்பதால் சிவபெருமானின் அருட் பலன்கள் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தைக் குறிக்கும் பண்டிகையாகும். மத நம்பிக்கைகளின் படி, சிவபெருமானின் அருள் விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். திருமணத்தில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தால் தடைகளை சமாளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மாசிக் சிவராத்திரி இரவில் ஏன் பூஜை செய்யப்படுகிறது:
புராண நம்பிக்கைகள் மற்றும் சிவபுராணத்தின் படி, ஒவ்வொரு மாத சிவராத்திரி விரதத்தின் நாளிலும் இரவில் நான்கு பிரகாரங்களில் (நான்கு பாகங்கள்) சிவனை வழிபடுவது மரபு.

பார்வதி தேவியுடன் சிவபெருமான் திருமணம் சதுர்த்தசி இரவில் நடந்தது. இரவில், பக்தர்கள் சிவ தியானத்தில் கவனம் செலுத்த முடியும், இது நள்ளிரவு நேரத்தை சிவலிங்க வழிபாட்டிற்கு சிறந்த நேரமாக மாற்றுகிறது.


இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார். அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள். தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர் சிறந்த சிவபக்தர். திருவிடைமருதூரில் உறையும் மஹா லிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மஹா லிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மஹா லிங்கமும் குழந்தை பருவத்திலேயே சிறந்து விளங்கினார். அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ் கண்களில் தெரிந்த ஒளி எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்! ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார். தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார். அவருடைய கீர்த்தி திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.

அப்போது காஞ்சி சங்கர மடத்தில், 64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1814-1851)வேதம், சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மஹா லிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது. அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை [தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்] நடத்தினார். இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும் படி மஹா லிங்கத்தைப் பணித்தார் ஆசார்யர். அதை சிரமேற் கொண்டு செய்து முடித்தார் மஹா லிங்கம். இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மஹா லிங்கத்தின் சாதுர்யம் பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. அதற்கு ஆசார்யரும் விதி விலக்கல்ல. எத்தனையோ பண்டிதர்கள், மன்னர்கள், பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்து விட்டானே! பலரும் பிரமிக்கும் படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64 வது பீடாதிபதி. அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார். நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர். இவரால் தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார். மஹா லிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி சம்மதம் வாங்கினார். ஒரு சுபதினத்தில் மஹா லிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர். காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார் 64 வது பீடாதிபதி.  மஹா லிங்கத்துக்கு மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார். 1851ல் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் 64 வது பீடாதிபதி சமாதி எய்த பின் 65 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மஹா லிங்கம் என்கிற மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி. சைவமும், வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி. மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர். எண்ணற்ற திரு கோவில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன. அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்கு அளவே இல்லை. காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே ஸ்ரீ சங்கரமடம் தான். ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார். பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக்கூறி சமய உணர்வுகளை ஊட்டினார். இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.

அவரில் துவங்கி இன்று 69 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் 70 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு முன் 68 வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர். இந்த புனிதமான மடத்தில் 65 வது பீடாதிபதியாக விளங்கியவர் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காலம் கி.பி.1851-1890. திருவிடைமருதூரில் அவதரித்தவர். காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார். நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான ஸ்தலம். இதை இளையாத்தங்குடி என்று சொல்வார்கள். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம் திருமயம் கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம். கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். சிவகங்கை மற்றும் காளையார் கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார். அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார் எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.

ஸ்ரீ நித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்து விட்டு நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார். அதற்கேற்றார் போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர். ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும் படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெரு மக்கள். அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று நிரந்தரமாகவே அங்கு தங்கி விட்டார் ஸ்வாமிகள் என்பது தான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப் போவது இங்கே தான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார். மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதற்கான ஒர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார் நகரத்தாருக்குச் சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள் அந்த இடத்தில் தான் சமாதி கொண்டுள்ளார். ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி. காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம். தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.

தனக்குப் பிறகு ஒர் ஆசார்யரை நியமித்து விட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள். உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்து வரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமி நாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார். பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார். இதையடுத்து இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகள் [மகா பெரியவர் அல்ல]  மஹா தேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணி விடை செய்து வந்தார். தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே அதை சூசகமாக உணர்ந்து விட்டார் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே! சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒர் இடத்தை கடந்து செல்ல நேரிட்ட போது அங்கேயே அப்படி நின்றார்.

அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது. தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார். செட்டியார் ஓடோடி வந்து ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார். முட்சொடிகள் புதர் போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா? என்று கேட்டார் ஸ்வாமிகள். எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும் ஸ்வாமிகளே வாய் விட்டு ஒரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே. அவருக்குப் போய் செடி, கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா? சிவன் கோவிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம். தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார். ஆனால் ஸ்வாமிகள் இந்த இடம் தான் எமக்குத் தேவை. உங்களால் கொடுக்க இயலுமா? என்று கேட்டார். ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார் தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன். கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்து கொள்ள முடிய வில்லை. ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்க வில்லை. மறு நாள்! ஸ்வாமிகளின் உடல் நலன் லேசாக பாதிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் 20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மள மளவெனக் குவிந்தனர். இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால் ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர். மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள் முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர். குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போது தான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!

நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர். காஞ்சி மடத்தில் 63வது ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள். கீர்த்தனங்கள் பாடப்பட்டன. நாம கோஷம் கூட்டமாக வெளிப்பட்டது. கயிலாய நாதர் கோவிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில் ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம் தான் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள் பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது.  

விஜயநகரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொல்லங்கோடு, கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள். ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன. இறைத்திருப் பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள் பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோவிலாக கட்டி பராமரித்து வருகிறார்கள்.

புது பெரியவா வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது. தினமும் நடக்கும் சந்திர மௌளீஸ்வர பூஜையைத் தவிர வேத பாராயணங்கள் விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம் தான். வேள்விப் புகைதான். புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர். எத்தனை நாட்களுக்குத் தான் மடத்தில் இருந்து கொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது எனவே ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள். மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், விழுப்புரம் எனக் கிளம்பினார். செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு. புது ஆசார்யர் வருகிறார் என்றதும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர். ஆந்திரப் பிரதேசம், பூரி ஜகந்நாதர் திருக்கோவில், விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது. மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர். ஆந்திர மன்னர்கள் 03.07.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார் ஸ்வாமிகள். விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா நகரத்து எல்லையிலேயே யானை, குதிரை, ராஜ பரிவாரம் ஆகியவை புடைசூழ வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மஹானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி பார்லிகிமேடி பித்தாபுரம். பொப்பிலி வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார். கோதாவரி கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து காளஹஸ்தியை அடைந்தார். காளஹஸ்தி மஹா ராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.

அதன் பின் சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து. திருப்பாதிரிப்புலியூர். தாஞ்சாவூர், தென் ஆற்காடு, திருச்சி, கோவை, கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள் மஹாமக நிகழ்வில் கலந்து கொண்டார். தனது வாழ் நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார். சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார். அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷி வந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார். சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்த பழுத்த சிவபக்தர். தவிர மிராசுதாராகவும் இருந்தார். தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார். பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.

மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார். எனவே கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார். வெங்கட்ராம ஐயரும் கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி தினமும் சொற்பொழிவு ஆற்றினார். உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து உபன்யாசத்தைக் கேட்டு வந்தார். இது வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அவர் சிவ பூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும் போது ஸ்வாமிகள் சிவ பூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம். அதோடு உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம். ஸ்வாமிகள் இசையிலும், வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர். வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார். ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால் அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர். அவர்களுள் மைசூர் சதாசிவராவ், முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர், திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமியின் திருக் கோவிலைத் தரிசிப்போமா?

ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர். எனவே ஒரு சிவ தலத்துக்கான பலி பீடம், நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன. கருங்கல் திருப்பணி உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி, நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது.  கைலி, சட்டை, பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது. கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது. ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி. அர்த்த மண்டபம், மஹா மண்டபம், பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன். மஹா  மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள். இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.

கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம், சாளக்கிராமத்தால் ஆனது. மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில் தான் தயராகிறது. பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி, வெல்லம், எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அதிஷ்டானத் திருக் கோவிலுக்கு1992, 2003ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து கொண்டு இருகின்றன.

லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம், தேன், பால், சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும், சதுர்த்தசியில் விநாயருக்கும், ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இங்கு சிறப்பாக நடந்து வரும் வேத பாடசாலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள். வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகு தான்! பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா, ஏகாதசி, துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன். மற்ற நாட்களில் காவி வஸ்திரம் தான். இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம். சுத்த, பத்தம் இல்லாமல் உள்ளே போக கூடது. ஒரு வேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து நமது சுத்தக் குறைவை உணர்த்தி விடும். ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள் அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும். ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார். தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார். பக்தர்கள் எவருமே இல்லாத போது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு. அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம். அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை ஸ்ரீ காஞ்சி மடத்தின் மேற் பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருகிறார்கள்.

அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது. மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது. இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம். இது போன்ற உயர்வான வில்வ இலைகளை இது வரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள். அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு. காஞ்சி மகா பெரியவருக்கு மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு. புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும் போதெல்லாம் மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.

1925ல் காஞ்சி மஹா பெரியவர் இனையாற்றங்குடிக்கு வந்த போது இங்கு வியாஸ பூஜை நடத்தி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். தவிர மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம். வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம். ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம். இந்த வில்வ இலைகளைக் கொண்டு ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம். பாரத தேசமெங்கும் புனித யாத்திரை மேற் கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றும் இளையாற்றங்குடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். இது அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றே தான் சொல்ல வேண்டும். நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லை என்றால், வேதமும் இல்லை கோவிலும் இல்லை என்று காஞ்சி மஹா பெரியவர் அடிக்கடி சொல்வார்.

பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!