புதன், 27 மார்ச், 2019

காமாக்ஷி ஸ்தோத்திரம்

மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

செவ்வாய், 26 மார்ச், 2019

#குடிமல்லம் பழமையான "சிவன்" கோயில் !

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.

லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.

எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.

பழமையான சிவலிங்கம் :-

உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.

அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர். இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.

ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.

அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
இது மாதிரி மனசிருந்தா மழை கொட்டும்!

காமதம் என்ற வனப் பகுதியில் அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசூயாவும் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தனர். பல முனிவர்களும் அங்கிருந்தனர். ஐந்தாண்டுகள் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. அங்கிருந்த முனிவர்கள் வேறு இடங்களுக்கு புறப்பட்டனர். ஆனால்,அனுசூயா இதை பொருட்படுத்தாமல், கணவருக்கு பணிவிடை செய்து வந்தாள். அவள் முன் தோன்றிய கங்காதேவி, அம்மா அனுசூயா! மற்றவர்கள் வறட்சிக்கு பயந்து கிளம்பிய நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் கணவனுக்கு சேவை செய்தது கண்ட சிவன், என்னை அனுப்பினார். வேண்டும் வரம் கேள் என்றாள். தாயே! வறண்ட வனத்தை வளமாக்கு என்றாள். அப்படியே ஆகட்டும் என்ற கங்கை, அனுசூயாவிடம், எல்லோரும் என்னில் நீராடுவதால், அவர்கள் செய்த பாவமெல்லாம் எனக்குள் கரைந்து கிடக்கிறது. உன் போன்ற பதிவிரதை மனம் வைத்தால் நான் சுத்தமாகி விடுவேன், என்றாள். சற்று கூட தயக்கமின்றி, அனுசூயா கணவருக்கு சேவை செய்த புண்ணியத்தை தர சம்மதித்தாள். அப்போது சிவன் தேவியோடு காட்சி தந்து, புண்ணியத்தையே தானம் செய்த புண்ணியவதி நீயம்மா என வாழ்த்தினார். அங்கு நீர் வளம் பெருகியது.

சரப சாஸ்திரிகள்...

சரப சாஸ்திரிகள்

புல்லாங்குழல், ஒரு காலத்தில் கச்சேரிகளில் பக்க வாத்தியமாக மட்டுமே வாசிக்கப்பட்டு வந்தது. அத்தகைய வாத்தியத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து. அதை எல்லோராலும் கவனிக்க வைத்த பெருமைக்குரியவர் - ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் என்று போற்றப்பட்ட வேணுகானம்சரப சாஸ்திரிகள் ஆவார். தஞ்சை ஜில்லாவில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாத சாஸ்திரிகளுக்கும் தர்மாம்பாளுக்கும் 1872-ல் இரண்டாவது திருக்குமரனாக அவதரித்தவர் ஸ்ரீசரப சாஸ்திரிகள் (இந்தத் தம்பதியரது முதல் திருக்குமாரன் ஸ்ரீசிவக்குமார் சாஸ்திரிகள் கும்பகோணம் கல்லூரியில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர்). சரப சாஸ்திரிகளின் இயற்பெயர் ராமச்சந்திரன். வேத சாஸ்திரங்களில் பெரிய பண்டிதராகவும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் வித்வானாகவும் விளங்கியவர் விஸ்வநாத சாஸ்திரிகள்.

குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு வியாதியால் தனது இரண்டாம் வயதிலேயே இரு கண் பார்வையையும் இழந்தார் சரப சாஸ்திரிகள். புத்திரனுக்கு ஏற்பட்ட இத்தகைய ஒரு சோகத்தைப் பெற்ற மனம் தாங்குமா? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் குழந்தை தட்டுத் தடுமாறி நடந்தால் எப்படி இருக்கும்? விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும் துடித்துப் போனார்கள். போதிய சிகிச்சைகள் செய்தும் அது பலன் தரவில்லை. கல்வி மற்றும் கேள்வி ஞானங்களில் எதிர்காலத்தில் தன்னைப் போல் பெரும் பண்டிதராக விளங்குவான் என்று எதிர்பார்த்த தந்தைக்கு ஏமாற்றம். இவன் வயதை ஒத்த வயதுடைய சிறுவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை மிகவும் ஏக்கத்துடன் பார்த்து வந்தனர். விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும். என்றாலும், வேறு வழி தெரியாததால், மனதைத் தேற்றிக் கொண்டனர்.

மகனுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பது தந்தையாருக்குப் புரியவில்லை. ஒரு நாள் மகனிடமே கேட்டார் - எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போவதாக உத்தேசம்?0 புல்லாங்குழல் கொடுத்தால், என்னால் வாசிக்க முடியும் அப்பா என்று சரப சாஸ்திரிகள் இரண்டு வயதில் சொன்னது பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் திருவாக்கோ என்னவோ! அதிலேயே அவர் பெரும் புகழும் பெற்றார். மகனது பதிலில் நெகிழ்ந்து போனார். தந்தை பார்வையே தெரியாமல் இருக்கும்போது எப்படித் துளைகளை அடையாளம் கண்டு கொண்டு இவனால் புல்லாங்குழல் வாசிக்க முடியும் என்று விஸ்வநாத சாஸ்திரிகள் யோசிக்கவில்லை. இசைதான் இவனுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி போலிருக்கிறது என்று தெளிந்தார். ஒரு நாள் யதேச்சையாகத் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பக்குவப்பட்ட ஒரு மூங்கிலை எடுத்து அதில் துளைகள் போட்டு. புல்லாங்குழலாக உருவாக்கி மகன் சரப சாஸ்திரிகளிடம் கொடுத்தார் விஸ்வநாத சாஸ்திரிகள்.

தந்தையார் தன் ஆசிகளோடு வழங்கிய அந்தக் கருவியைக் கையில் வாங்கிய சரப சாஸ்திரிகள், அதைத் தன் வாயில் வைத்து காற்றைச் செலுத்தி, இசைக்கத் துவங்கியதும், எங்கே இருந்து இந்த வேணு கானம் கேட்கிறது? என்று தந்தையாரான விஸ்வநாத சாஸ்திரிகள் சுற்றும்முற்றும் பார்த்தார். பிறகுதான் விஷயம் அறிந்து தெளிந்தார் - தன் மகன் இசைக்கும் இந்தப் பச்சை மூங்கிலில் இருந்துதான் மயக்குகின்ற இந்த இசை வருகிறது என்று. தெய்வீகத் தன்மையுடன் கேட்ட இந்த தேவ கானத்தில் தன்னையே இழந்த விஸ்வநாத சாஸ்திரிகள் அன்றைய தினம் முதல் மகனுக்கு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். சுயமாகவே புல்லாங்குழலை வாசிக்கும் திறன் படைத்த சரப சாஸ்திரிகளின் அருட்திறன் அப்போது அந்தத் தெருவில் இருந்த எல்லோராலும் சிலாகித்துப் பேசப்பட்டது.

காலப்போக்கில் விஸ்வநாத சாஸ்திரிகள் இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இதற்குப் பின் கும்பகோணத்தில் வசிக்கப் பிடிக்காமல் தன் இரு திருக்குமாரர்களையும் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்தார் தர்மாம்பாள். அங்கே சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்துக்கு அடுத்தாற்போல் வசித்து வந்த தன் சகோதரர் வீட்டில் தங்கினார் தர்மாம்பாள். இளைய மகன் சரப சாஸ்திரிகளை இசைத் துறையில் சிறந்த மேதை ஆக்க வேண்டும் என்பதற்காக தன் இன்னொரு சகோதரரும் தியாகராஜ ஸ்வாமிகளின் அன்புக்குப் பாத்திரமானவருமான குப்புஸ்வாமி ஐயரிடம் சங்கீதம் கற்க அனுப்பினார் தர்மாம்பாள்.

இதன் பின் தியாகராஜ ஸ்வாமிகளின் நெருங்கிய உறவினாரும், அவரது முக்கிய சீடர்களில் ஒருவருமான மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் இசை பயில அனுப்பினார் (திருவையாறு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் ஸித்தி ஆனது 1847-ஆம் வருடம். இதற்குப் பிறகுதான் சரப சாஸ்திரிகள் அவதரித்தார். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் முக்கிய சிஷ்யர்கள் - தில்லை ஸ்தானம் ராமய்யங்கார், வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர், மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யர், திருவெற்றியூர் வீணை குப்பய்யர், ஐயா பாகவதர், லால்குடி ராமய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், அமிர்தலிங்கம் பிள்ளை, சுந்தர பாகவதர் போன்றோர். கர்னாடக சங்கீதம் நாடு முழுதும் பரவ வேண்டும் என்பதற்காக ஜாதி வித்தியாசம் பாராமல் ஆர்வம் உள்ள பலரையும் தன் சிஷ்யர்களாகச் சேர்த்து கொண்ட மாபெரும் மகான் தியாகராஜ ஸ்வாமிகள்).

தியாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்யராக விளங்கிய மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் பல மாணவர்கள் சங்கீதம் கற்றுக் கொண்டனர். எப்படி தியாகராஜ ஸ்வாமிகள் பல சிஷ்யர்களை உலகுக்கு அளித்தாரோ, அதுபோல் மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரும் ஒளி வீசும் ஐந்து ரத்தினங்களாக ஐந்து சிஷ்யர்களை உருவாக்கினார். அவர்களும் சரப சாஸ்திரிகளும் ஒருவர். ஏனைய நால்வர் - மகா வைத்தியநாதசிவன், பட்டணம் சுப்ரமணிய ஐயா, தியாகராஜ ஸ்வாமிகளின் பெண் வயிற்றுப் பேரனான தியாகராஜா மற்றும் பிடில் வெங்கோபராவ். புல்லாங்குழல் வாத்தியத்தில் நெளிவு சுளிவுகளை சரப சாஸ்திரிகளுக்கு விளக்கி, அவருக்குப் பல யுக்திகளைச் சொன்னவர்- கோவிந்த நாயணக்காரர் எனும் நாகஸ்வர வித்வான். மேலும், பல்லவி நாராயண சுவாமி ஐயர், நாடியம் ராமு ஐயர் போன்ற பெரிய வித்வான்களும் இவருடைய கலை ஞானத்தைப் புரிந்து கொண்டு இந்த வாத்தியத்தின் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்து வழிகாட்டியாக இருந்தனர். தியாகராஜ ஸ்வாமிகளின் அநேக க்ருதிகளை பயின்றார் சரப சாஸ்திரிகள். பின்னாளில் சுந்தர பாகவதர் நடத்தும் ஸ்ரீதியாகராஜ ஆராதனையின் போது சரப சாஸ்திரிகளின் கச்சேரியுடன்தான் ஆராதனையே துவங்கிற்று என்றால், சாஸ்திரிகளின் இசைத் திறனுக்கு சுந்தர பாகவதர் கொடுத்த முக்கியத்துவம் நன்றாகவே விளங்கும்.

சரப சாஸ்திரிகளுக்கு இனிமையான சாரீரம் அமைந்ததோடு வயலின், மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் தவிர சமஸ்க்ருதம்,  தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளிலும் பாண்டித்யம் கொண்டிருந்தார். வட மொழியில் எண்ணற்ற சாகித்யங்களை இவர் சுயமாக இயற்றியது இவரது பன்மொழிப் புலமையை உணர்த்தும். புல்லாங்குழல் வாசிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கிய சரப சாஸ்திரிகளை பல வித்வான்கள் அணுகி, அவரது இசைப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டினர். இப்படி தன்னிடம் வந்த பல திறமையாளர்களை ஊக்குவித்து. அவர்களையும் புகழ் பெற வைத்தார் சரப சாஸ்திரிகள். கடம் பழநி கிருஷ்ணய்யர் ஒரு முறை சரப சாஸ்திரிகளை சந்தித்து, அவரிடம் கடம் வாசித்துக் காண்பித்து பாராட்டுகளைப் பெற்றார். இதன் பின் சரப சாஸ்திரிகளின் கச்சேரியில் அடிக்கடி வாசிக்க ஆரம்பித்தார். சரப சாஸ்திரிகளின் சம காலத்திய வித்வான்களுள் குறிப்பிடத்தகுந்த சிலர் - புதுக்கோட்டை மான் பூண்டியாபிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை. திருவையாறு சுப்ரமண்ய ஐயர். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், திருமருகல் நடேச நாயணக்காரர், எட்டாயபுரம் ராமச்சந்திர பாகவதர்.

உரிய காலத்தில் அம்பு அம்மாள் எனும் யுவதியை மணந்தார் சரப சாஸ்திரிகள். நாயன்மார்களின் சரித்திரத்தைத் தமிழிலும் மராத்தியிலும் சுமார் 500 சாஹித்யங்களாக (கதைப் பாடல்களாக) புனைந்து இசையமைத்தார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் தன்னுடைய கதாகாலட்சேபத்தில் நாயன்மார்களின் இந்தப் பாடல்களைப் பாடுவது வழக்கம். நகுமோமு கனலேனி என்ற ஆபேரி கீர்த்தனையில் அற்புதங்கள் பலவற்றை அமைத்துத் தந்துள்ள சரப சாஸ்திரிகள். தானம் வாசிப்பதில் தேர்ந்தவர். இரு கண்களில் பார்வையை இழந்திருந்தாலும், எதையும் ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே கிரஹித்துக் கொள்ளக் கூடிய அபார ஆற்றல் பெற்றவராக விளங்கினார் சரப சாஸ்திரிகள். இதனால் இவர் ஏக சந்த்ர கிரஹி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.புல்லாங்குழல் வாசிப்பில் எதையும் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துப் பல புதுமைகளைப் புகுத்தியவர் சரப சாஸ்திரிகள். எப்படிப்பட்ட ஒரு துல்லியமான சத்தத்தையும் புல்லாங்குழலில் கொண்டு வருவது இவருக்குக் கைவந்த கலை. இவரது நேரடி சீடர்தான் பல்லடம் சஞ்சீவ ராவ்.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் மூப்பக்கோயில் என்ற இடத்தில் வலப் பக்கமாக ஒரு சாலை பிரியும். அங்கிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவு சென்றால் ஏராகரம் என்கிற கிராமம் வரும். இங்கு மிகவும் புராதனமான முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். ஒரு முறை சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டி. இந்த முருகப் பெருமானை வந்து வணங்கி, மன அமைதி பெற்றுள்ளார் சரப சாஸ்திரிகள். அதோடு, அங்குள்ள மக்களிடம் அந்த முருகப் பெருமானின் சிறப்பு பற்றிச் சொல்லி இருக்கிறார். முருகப் பெருமான் என்றாலே காவடிதானே விசேஷம்! எனவே, சர்ப்ப காவடி மச்ச காவடி போன்றவற்றைத் தூய பக்தியுடன் சுமந்து, இந்த முருகனை மனம் குளிரச் செய்யுங்கள்... உங்களையும் ஊரையும் காப்பாற்றுவார் என்று கிராமத்தவர்களிடம் சொல்லி, ஏராகரத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.

சரப சாஸ்திரிகளின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டார் மைசூர் மகாராஜா. இதற்கான 1904-ஆம் ஆண்டு தன் அரசாங்கப் பிரதிநிதி ஒருவரை கும்பகோணத்துக்கு அனுப்பி, சாஸ்திரிகளின் வசதியைக் கேட்டறிந்து வருமாறு அனுப்பினார் மகாராஜா. ஆனால், தன்னிடம் வந்த அரசுப் பிரதிநிதியிடம், என்னைப் போன்ற பார்வையற்ற ஒருவரை அதிகாரத்தில் உள்ள மகாராஜா சந்திப்பது முறையல்ல. மகாராஜாவின் முன் வாசிக்க நான் தகுதி அற்றவன். விஷயத்தைப் பக்குவமாக மகாராஜாவுக்குச் சொல்லுங்கள் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.

தன் பிரதிநிதி சொன்னதைக் கேட்ட மகாராஜாவுக்கு சரப சாஸ்திரிகளின் மீதுள்ள மரியாதை இன்னும் கூடியது. எப்படியேனும் அவரது இசையை நான் கேட்டே ஆக வேண்டும். என்று ஆவல் மிகுதியில் மீண்டும் ஆள் அனுப்பினார். மகாராஜாவின் இசை ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த சரப சாஸ்திரிகள் ஒரு நாள் மைசூருக்குப் பயணப்பட்டார். தான் வாசிக்கும் மேடையின் முன் ஒரு திரையைத் தொங்க விட்டு, அந்த மறைவில் இருந்தபடி வாசித்தார் சரப சாஸ்திரிகள். அதாவது மகாராஜாவுக்கு சாஸ்திரிகள் இசைக்கும் வாத்தியத்தின் ஒலி மட்டுமே கேட்கும். ஆனால், இவரை நேரில் பார்க்க முடியாது. அது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். சரப சாஸ்திரிகள் அன்றைய தினம் பல க்ருதிகளை அற்புதமாக வாசித்து மகாராஜாவை மகிழ்வித்தார் சாஸ்திரிகள்.

நீண்ட நேர இசைக் கச்சேரியைக் கேட்ட மகாராஜா. சரப சாஸ்திரிகளின் திருமுகத்தைப் பார்க்க கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்காததால். அவரை ஒரு புகைப்படம் எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால், சரப சாஸ்திரிகள் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை (சரப சாஸ்திரிகளின் புகைப்படம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.)மைசூரில் இருந்து கும்பகோணத்துக்கு சரப சாஸ்திரிகளை உரிய மரியாதைகளுடன் அனுப்பி வைத்தார் மகாராஜா. ஏராளமான சன்மானங்களையும் அரசாங்கத்தின் சார்பாகக் கொடுத்து அனுப்பினார். ஆனால், சரப சாஸ்திரிகளின் சேவை போதும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டான் போலும். கும்பகோணத்துக்குத் திரும்பும் வழியிலேயே கடும் ஜுரம் சாஸ்திரிகளைத் தாக்கியது. ஜுரத்துடனே வீட்டுக்கு வந்த சாஸ்திரிகள் போதிய சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அது பலன் தரவில்லை. ஒரு சில நாட்களிலேயே அவரது உடலில் இருந்து ஜீவன் பிரிந்தது. ஆதி சங்கரர். மகாராஜா சுவாதித் திருநாள் ஆகியோர் போல் இளம் வயதிலேயே இவ்வுலகை நீத்தார் சரப சாஸ்திரிகள்.

வெறும் 32 வருடங்களே வாழ்ந்த சரப சாஸ்திரிகள். தியாகராஜ ஸ்வாமிகளின் வழியில் ஸ்ரீராம பக்தியை என்றென்றும் அனுஷ்டித்து வந்தார். ஸ்ரீராமர் படங்களை வைத்தும், விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தும் தினசரி வழிபாட்டை நடத்தி வந்தார். ஸ்ரீராம பஜனை ஸபா என்கிற அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி உள்ளிட்ட பல வைபவங்களை நடத்தி வந்தார். எண்ணற்ற கலைஞர்களை அழைத்து, இசைக் கச்சேரிகளையும் நடத்தினார். அவர் நடத்திய அதே வழியிலேயே இந்த பஜனை சபாவின் அமைப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து வைபவங்களை நடத்தி வருவது பாராட்டத்தக்கது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பஜனை ஸபாவில் ஏகாதசி பஜனை. மார்கழி மாதத்தில் ராதா கல்யாணம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த பஜனை ஸபாவில் சரப சாஸ்திரிகள் காலத்து ஸ்ரீராமர் ஓவியங்களும், சரப சாஸ்திரிகள் தன் வாசிப்புக்குப் பயன்படுத்திய - பொக்கிஷம் போன்ற இரண்டு புல்லாங்குழல்களையும் நாம் காணலாம். 1956 - ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நிகழ்ந்த மகா மக வைபவத்தின்போது காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள் புனித நீராட வந்திருந்தார். அப்போது மகா பெரியவர் இந்த பஜனை ஸபாவுக்கு வருகை புரிந்தார். சரப சாஸ்திரிகளின் பெருமைகளைப் பற்றி அப்போது பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். சரப சாஸ்திரிகள் துவக்கி வைத்த இந்த பஜனை ஸபா இன்றளவும் தன் புகழைப் பரப்பி வருகிறது. இந்த ஸபாவின் நிகழ்வுகளையும் பராமரிப்பையும் வேணுகானம் ஸ்ரீசரப சாஸ்திரிகள் மெமோரியல் டிரஸ்ட் பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

தொடர்புக்கு:

செகரெட்டரி, ஸ்ரீராம பஜனை ஸபா,
110, சோலையப்பன் தெரு,
கும்பகோணம் - 612 001.
போன்: 0435 - 2422517,

அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்

மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
அம்மன்/தாயார் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகிழம், அத்தி
தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவொற்றியூர்
ஊர் : திருவொற்றியூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்:மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
திருநாவுக்கரசர்தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம். 
     
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும். 
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம். போன்:+91-44 - 2573 3703. 

 பொது தகவல்:சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.

பிரார்த்தனன திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
     
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
     
தலபெருமை:மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை.
இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.

வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார்.
மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.

கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர்.
இதை சேக்கிழார் பெரியபுராணம்,
""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.

சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.
படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.

பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.

சிறப்புகள் சில வரிகளில்...
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.

நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.

கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது. 
     
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.

ஞாயிறு, 24 மார்ச், 2019

எண் ஏழின் சிறப்புகள் தெரியுமா?

1. பிறப்புகள் : தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
2. பெண்களின் பருவம் : பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, திரிவை, பேரிளம்பெண்
3. தினங்கள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
4. கன்னிகள் : அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, நாராயணி, வராகி, காளி, இந்திராணி
5. மண்டலங்கள் : வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு
6. மேகங்கள் : சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்
7. கடல்கள் : உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு
8. சுவரங்கள் :  ச ரி க ம ப த நி
9. இசைகள் : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம்
10. நகர்கள் : அயோத்தி, மதுரா, காசி, காஞ்சி, மாயா, அவந்தி, துவாரகா
11. அகத்திணைகள் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
12. தலை வள்ளல்கள் : சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
13. இடை வள்ளல்கள் : அக்குலன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்
14. கடை வள்ளல்கள் : பாரி, ஆய், எழினி, நள்ளி, மலையன், பேகன், ஓரி.
15. ரிஷிகள் : அகத்தியர், அங்கீரசர், கவுதமர், காசிபர், புலத்தியர், வசிட்டர், மார்க்கண்டேயர்
16. சிரஞ்சீவிகள் : அசுவத்தாமன், விபீஷணன், மாபலி, அனுமன், வியாசர், பரசுராமர், கிருபாசாரியன்
இந்த பத்தை தவிர்த்தால் உற்சாகமாக வாழலாம்!

மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள் என்ன என்று பட்டியலிடுகிறார் வாரியார்.

1. காலை உணவைத் தவிர்த்தல்
2. அளவுக்கு மீறிச் சாப்பிடுதல்
3. புகை பிடித்தல்
4. நிறைய இனிப்பு சாப்பிடுதல்
5. மாசு மிக்க காற்றை சுவாசித்தல்
6. தூக்கமின்மை
7. முகத்தை மூடி தூங்குதல்
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுத்தல்
9. சிந்தனையின்றி இருத்தல்
10.யாருடனும் பேசாமல் இருத்தல்-இவற்றை தவிர்த்தால்,உற்சாகம் உங்களை ஒட்டிக் கொள்ளும்.
வீட்டு பூஜையில் எப்போது மணி ஒலிக்க வேண்டும்?

பூஜை பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.""ஸ்நாநே தூபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததாகண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிச என்கிறது அதற்கான ஸ்லோகம். அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும் போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும். வீட்டு பூஜையில், கற்பூர ஆரத்தியின் போது மணியடிப்பது அவசியம்.

ஜயேந்திர பெரியவா
____________________________________________________________________________________________
பட்டாபிஷேகம் எப்படி செய்வார்கள்

ஸாம்ராஜ்ய லக்ஷ்மீபீடிகை என்றொரு நூல். ஆகாச பைரவ தந்த்ரத்தின் பகுதியாகக் கருதப்பெறுகிறது. இந்த நூலில் அரசனின் செயல்கள், அரசு வகுத்தல் முதலிய பல்வேறு செய்திகள் தரப்பெற்றிருக்கின்றன. இந்த நூலின் ஐம்பதாவது படலம் அரசனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது எப்படி என்ற தகவலைத் தருகிறது. ஆசார்யனாக இருக்கு அரசகுரு தகுந்த முஹூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து அதற்காக ஒரு மண்டபத்தை அமைக்க வேண்டும். அதில் நான்கு திசைகளிலும் நான்கு கும்பங்களை வைக்க வேண்டும். கிழக்கு கும்பத்தில் தயிரும் தெற்கில் தேனும் மேற்கில் நெய்யும் வடக்கில் புனித நீரையும் நிரப்ப வேண்டும். பிறகு அத்தி மரத்தால் பீடம் அமைத்து அதன் மீது புலித்தோலைப் பரப்ப வேண்டும். எட்டுக் கன்னிப் பெண்களை மண்டபத்தில் அமர்விக்க வேண்டும். பட்டத்து யானையைத் தங்க முகப்படாம், கழுத்தணி முதலியவற்றை வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு கங்கை முதலிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை நடுவில் ஒரு கலசத்தில் நிரப்ப வேண்டும். நான்கு திசைக் கடங்களிலும் நான்கு திக் பாலகர்களின் ப்ரதிமைகளை அமைக்க வேண்டும். அவர்களைப் பூஜிக்க வேண்டும். பிறகு அரசனின் கோத்ரம் முதலியவற்றைக் கூறி ரிக்வேதிகளையும் யஜுர்வேதிகளையும் வைத்து இந்த்ரனையும் யமனையும் பூஜிக்க வைத்து ஸாமவேதியைக் கொண்டு வருணனையும், அதர்வவேதியைக் கொண்டு ஸோமனையும் பூஜிக்க வேண்டும். அதன் பிறகு விஷ்ணோர் நுகம் என்ற மந்த்ரத்தைக் கூறி 108 முறை ஆஹுதி கொடுத்து ஹோமத்தைச் செய்ய வேண்டும். அதற்கு மறுநாள் பட்டாபிஷேகத்தை நிகழ்த்த வேண்டும். மறுநாள் அரசன் புனித நீராடி வெண்பட்டு உடுத்தி மண்டபத்திற்கு வர வேண்டும். அங்கே முன்பு போல திக் பாலகர்களைப் பூஜித்து வாத்யங்கள் முழங்க ஸங்கல்பம் செய்து பிறகு எல்லா ப்ரஜைகளையும் காப்பேன் என்று ஸங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு பல ஸூக்தங்களைக் கூறிய படியே கையில் தங்கக் காப்பிட்டு அத்திமரப் பீடத்தில் கிழக்கு நோக்கி அமர்வித்து இந்த்ரனாக பாவித்து முதலில் வலம்புரி சங்கினால் தயிரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு தெற்கு நோக்கி அமர்வித்து அவனை யமனாகப் பாவித்து காளைக் கொம்பால் தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு மேற்கு நோக்கி அமர்வித்து வருணனாக பாவித்து கோமுகத்தால் நெய்யால் அபிஷேம் செய்ய வேண்டும். அதன் பிறகு வடக்கு நோக்கி அமர்வித்து ஸோமனாக நினைந்து அத்திக் கிளை வைத்து நீரால் அபிஷேகம் சய்ய வேண்டும். அதன் பிறகு தங்கத்தினால் ஒன்றரை அங்குல அகலமும் ஆறங்குல நீளமும் உடைய பட்டம் செய்து அதில் அரசன் குறைவின்றி காக்கட்டும் என்னும் பொருள்படும் சாஸன ச்லோகத்தை எழுத வேண்டும். அதனை அவனுடைய நெற்றியில் கட்ட வேண்டும். இதனால்தான் பட்டாபிஷேகம் என்ற பெயர். அதன் பிறகு வாத்யங்கள் முழங்க அவனுக்கு தீர்த்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு அவனுக்கு முடிசூட்ட வேண்டும். பல்வேறு மந்த்ரங்களைக் கூறி ஒரு கன்னிப்பெண்ணிடத்தில் பாத்திரமும், மற்றொரு கன்னிப் பெண் பிரம்பு, வாள் ஏந்த, மற்றொருவள் கண்ணாடி, மற்றொருவவள் கமண்டலம் முதலியவற்றை ஏந்தி நிற்க வேண்டும். பிறகு அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.  இதுதான் பட்டாபிஷேக முறை.

இப்படித்தான் அபிஷேகம் செய்வார்கள்.
இனியும் வீராபிஷேகம்னு பெரிசா பேசுங்க. நாலையும் கலந்து தலையில கொட்றேன்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

*உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.*

அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: ||                  1

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச ||           2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம:   ||             3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:  ||                4

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: ||                     5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: ||   6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||                  7

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: ||              8

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்||                9

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: ||      10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: ||               11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||           12

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: ||   13

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: ||         14

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: ||            15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: ||              16

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||        17

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||       18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் ||          19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: ||         20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||                  21

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா ||    22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||               23

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: ||              25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: ||      26

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: ||   27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: ||          28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: ||             29

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: ||              31

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: ||                 32

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்||        33

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: ||        34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: ||                     35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: ||                36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: ||                37

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||      38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: ||         39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: ||                   40

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: ||             41

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: ||          42

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: ||        43

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: ||     44

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: ||   45

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: ||     46

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: ||             47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||       48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: ||              49

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: ||          50

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: ||         51

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: ||        52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||                 53

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: ||  54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: ||                55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||              56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்||    57

மஹாவராஹோ கோவிந்தஸ்  ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: ||                58

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: ||        59

பகவாந் பகஹா நந்தி  வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: ||      60

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: ||       61

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்||      62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: ||     63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: ||             64

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: ||          65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: ||          66

உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: ||             67

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: ||                68

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர  ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: ||        69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: ||             70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||     71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||          72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: ||                    73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: ||            74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: ||         75

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: ||             76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: ||              77

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: ||              78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: ||             79

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: ||               80

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: ||      81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்||                  82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா||             83

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: ||                 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ||         85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி||           86

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: ||       87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: ||       88

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: ||                  89

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: ||       91

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: ||               92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: ||            93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: ||              94

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: ||            95

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: ||               97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: ||                98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: ||                99

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: ||            100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | |                     101

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: ||              102

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: ||             103

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: ||      104

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச ||              105

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: ||               106

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: ||             107

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| ................108