பட்டாபிஷேகம் எப்படி செய்வார்கள்
ஸாம்ராஜ்ய லக்ஷ்மீபீடிகை என்றொரு நூல். ஆகாச பைரவ தந்த்ரத்தின் பகுதியாகக் கருதப்பெறுகிறது. இந்த நூலில் அரசனின் செயல்கள், அரசு வகுத்தல் முதலிய பல்வேறு செய்திகள் தரப்பெற்றிருக்கின்றன. இந்த நூலின் ஐம்பதாவது படலம் அரசனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது எப்படி என்ற தகவலைத் தருகிறது. ஆசார்யனாக இருக்கு அரசகுரு தகுந்த முஹூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து அதற்காக ஒரு மண்டபத்தை அமைக்க வேண்டும். அதில் நான்கு திசைகளிலும் நான்கு கும்பங்களை வைக்க வேண்டும். கிழக்கு கும்பத்தில் தயிரும் தெற்கில் தேனும் மேற்கில் நெய்யும் வடக்கில் புனித நீரையும் நிரப்ப வேண்டும். பிறகு அத்தி மரத்தால் பீடம் அமைத்து அதன் மீது புலித்தோலைப் பரப்ப வேண்டும். எட்டுக் கன்னிப் பெண்களை மண்டபத்தில் அமர்விக்க வேண்டும். பட்டத்து யானையைத் தங்க முகப்படாம், கழுத்தணி முதலியவற்றை வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு கங்கை முதலிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை நடுவில் ஒரு கலசத்தில் நிரப்ப வேண்டும். நான்கு திசைக் கடங்களிலும் நான்கு திக் பாலகர்களின் ப்ரதிமைகளை அமைக்க வேண்டும். அவர்களைப் பூஜிக்க வேண்டும். பிறகு அரசனின் கோத்ரம் முதலியவற்றைக் கூறி ரிக்வேதிகளையும் யஜுர்வேதிகளையும் வைத்து இந்த்ரனையும் யமனையும் பூஜிக்க வைத்து ஸாமவேதியைக் கொண்டு வருணனையும், அதர்வவேதியைக் கொண்டு ஸோமனையும் பூஜிக்க வேண்டும். அதன் பிறகு விஷ்ணோர் நுகம் என்ற மந்த்ரத்தைக் கூறி 108 முறை ஆஹுதி கொடுத்து ஹோமத்தைச் செய்ய வேண்டும். அதற்கு மறுநாள் பட்டாபிஷேகத்தை நிகழ்த்த வேண்டும். மறுநாள் அரசன் புனித நீராடி வெண்பட்டு உடுத்தி மண்டபத்திற்கு வர வேண்டும். அங்கே முன்பு போல திக் பாலகர்களைப் பூஜித்து வாத்யங்கள் முழங்க ஸங்கல்பம் செய்து பிறகு எல்லா ப்ரஜைகளையும் காப்பேன் என்று ஸங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு பல ஸூக்தங்களைக் கூறிய படியே கையில் தங்கக் காப்பிட்டு அத்திமரப் பீடத்தில் கிழக்கு நோக்கி அமர்வித்து இந்த்ரனாக பாவித்து முதலில் வலம்புரி சங்கினால் தயிரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு தெற்கு நோக்கி அமர்வித்து அவனை யமனாகப் பாவித்து காளைக் கொம்பால் தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு மேற்கு நோக்கி அமர்வித்து வருணனாக பாவித்து கோமுகத்தால் நெய்யால் அபிஷேம் செய்ய வேண்டும். அதன் பிறகு வடக்கு நோக்கி அமர்வித்து ஸோமனாக நினைந்து அத்திக் கிளை வைத்து நீரால் அபிஷேகம் சய்ய வேண்டும். அதன் பிறகு தங்கத்தினால் ஒன்றரை அங்குல அகலமும் ஆறங்குல நீளமும் உடைய பட்டம் செய்து அதில் அரசன் குறைவின்றி காக்கட்டும் என்னும் பொருள்படும் சாஸன ச்லோகத்தை எழுத வேண்டும். அதனை அவனுடைய நெற்றியில் கட்ட வேண்டும். இதனால்தான் பட்டாபிஷேகம் என்ற பெயர். அதன் பிறகு வாத்யங்கள் முழங்க அவனுக்கு தீர்த்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு அவனுக்கு முடிசூட்ட வேண்டும். பல்வேறு மந்த்ரங்களைக் கூறி ஒரு கன்னிப்பெண்ணிடத்தில் பாத்திரமும், மற்றொரு கன்னிப் பெண் பிரம்பு, வாள் ஏந்த, மற்றொருவள் கண்ணாடி, மற்றொருவவள் கமண்டலம் முதலியவற்றை ஏந்தி நிற்க வேண்டும். பிறகு அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். இதுதான் பட்டாபிஷேக முறை.
இப்படித்தான் அபிஷேகம் செய்வார்கள்.
இனியும் வீராபிஷேகம்னு பெரிசா பேசுங்க. நாலையும் கலந்து தலையில கொட்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக