ஞாயிறு, 6 ஜூலை, 2014

அருள் மிகு ஞீலிவனேஸ்வரர்
திருப்பைஞ்ஞீலி;மண்ணச்சநல்லூர்
திருச்சி
பூதங்களாள் கட்டப்பட்ட கோவில்.
எமதற்மராஜாவுக்கு தனி சன்னதி இருக்கும் ஒரே கோவில்.
தற்போது கோவிலின் பின் பகுதியில் ஐந்து சிவலிங்க பானம்மட்டும் கடைக்ப்பெற்று ஐந்திற்க்கும் ஆவுடை செய்து தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை செய்துள்ளனர்.அவ்வாறு கிடைக்கப் பெற்ற சிவ லிங்க பானத்திற்கு நடுவே ஏறாலமான ஓலை சுவடிகள் கிடைத்துள்ளது.கிட்டத்தட்ட பத்தாயிரம் ஓலைசுவடிகள் கிரந்தம் மற்றும் தமிழ் கலந்த ஆகமத்தை பற்றி எழுதியிருக்கார்கள்.இவை அனைத்தும் கிரதயுகத்தில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள்.கலியுகத்தில் மற்ற ஐந்து லிங்கங்களும் தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை ஆகும் என்று அந்த ஓலைசுவடியில் கூறியள்ளார்கள்.அதே போல் கலியுகத்தில் இப்போது கிடைத்துள்ளது மிகவும் அறிதான ஒன்று.மேலும் இக்கோவிலில் சப்தகண்ணிகள் மற்றும் ஐந்து விநாயகர் சன்னிதி கட்டபட வேண்டும் என்று அந்த ஓலை சுவடியில் கூறியுள்ளது.அதற்க்கு போதிய நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் ஆகாமல் இருப்பது மிக மிக வேதனையான விஷயம்.கோவில் குருக்களிடம் பேசிய போது இன்னும் சுமார் இருபத்தி ஐந்து லட்ஷம் செலவு ஆகும் என்று கூறினார்.
இன்னும் ஆறு சன்னிநி கட்டவேண்டும்.நல்ல உள்ளமும் இறைபக்தி கொண்டவர்கள் தங்களாள் ஆன பொருள் உதவியோ,பண உதவியோ செய்து இந்த கும்பாபிஷேகம் நல்லமுறையில் நடக்க உதவுங்கள் நன்பர்களே.

சிவாய நம
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,
அம்மன் :காந்திமதியம்மை.
தல விருட்சம் :வில்வம்.
தீர்த்தம் :சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :முக்கீச்சுரம்
ஊர் :உறையூர்
மாவட்டம் :திருச்சி
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் , அப்பர்

தேவாரப்பதிகம்:நீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம்.

திருவிழா:சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.போன்:+91- 431-276 8546, 94439-19091, 97918 06457

பொது தகவல்:வழிபட்டோர்: கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.

பிரார்த்தனை:கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

நேர்த்திக்கடன்:சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை:ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்: உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.

உதங்க முனிவர்: இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார். ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

தோஷ நிவர்த்தி: பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. <<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல வரலாறு: சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.
  
உபநிஷதம் ஒரு கண்ணோட்டம்!

வேதங்கள்:உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப்புதல்வர்களாகிய ரிஷிகள், இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய: பந்தா வித்யதே யனாய -சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.)
அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள். (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா: -சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5.)
என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாராம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந் தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழயை நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது. என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்றுநிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்..... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அவற்றை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

உபநிஷதங்கள்:உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை <உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹதநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவை கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.

உபநிஷதம் வேதம்

ஐதரேய, கௌசீதகி ரிக்

ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,
மைத்ராயணீ, மஹாநாராயண யஜுர்

கேன, சாந்தோக்கிய சாம

ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண

வித்யைகள்:மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம், உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் உயர்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷத்தில் நாம் காண்பது ஈசவித்யை. 15-16 மந்திரங்கள் (1. இன்றைய வழக்கில், மீண்டும்மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம் (மனனாத் த்ராயதே இதி மந்த்ர:) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன.இதனைக் கூறுகின்றன. சூரிய தேவனிடம் ஒளியை விலக்கிக் கொள்ளுமாறு பிரார்த்திக்கின்றன இந்த மந்திரங்கள். இதனை ஒரு தியானமாக, ஒரு வித்யையாக எவ்வாறு செய்வது,ஒரு பாதையாக எப்படி பின்பற்றுவது என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷதம்: ஈசாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்றது. ஈச உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகின்ற இது 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சுக்ல யஜுர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் அமைந்துள்ளது இந்த உபநிஷதம். இந்த சம்ஹிதையின் 40 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார். அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷத்தை உபதேசித்தார்.

உபநிஷதக் கரு:இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன் என்று ஆனந்த மிகுதியில் முனிவர் ஒருவர் கூறுவதை சுவேதாஸ்வதர உபநிஷத்தில் காண்கிறோம். ஆனால் அந்த ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடுகின்ற முயற்சியை இங்கே (15-16 மந்திரங்கள்) பார்க்கிறோம். ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுகின்ற இந்தக் கருத்தே ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.

ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சிøயும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

மொழிபெயர்ப்பு:ஸ்ரீசங்கரரைத் தவிர இந்த <உபநிஷதத்திற்குப் பலர் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றுள் ஸ்ரீமத்வரும் ஸ்ரீவேதாந்த தேசிகரும் எழுதிய உரைகள் முக்கியமானவை.

ஸ்ரீசங்கரரின் உரையைத் தழுவி ஆங்கிலத்தில் சுவாமி சர்வானந்தர் எழுதிய விளக்கவுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு 1987-இல் எமது மடத்திலிருந்து வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்தவர் சுவாமி அஜராத்மானந்தர்.

தற்போதைய மொழிபெயர்ப்பு, ஈசாவாஸ்ய உபநிஷத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:

1. தத்துவ நுட்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்த்துள்ளோம்.

2. இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

எமது மடத்தின் மூத்தத் தவமிகு துறவியருள் ஒருவரான சுவாமி பஜனானந்தர் எமது ஆங்கிலப் பத்திரிகையான பிரபுத்தா பாரட்டா-வில் (1979-1986) எழுதிய தி இண்டர்கள் விசியன் ஆப் தி வெடிக் சீர்ச் என்ற பகுதியும் அவரது தலையங்கக் கட்டுரைகளும் இந்த மொழிபெயர்ப்பில் மிகவும் துணையாக அமைந்தன.

அமைப்பு:முதலில் சம்ஸ்கிருத மூலம், பிறகு தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

பாராயணம் செய்வதற்கு வசதியாக மந்திரங்களில் குறியீடுகளையும் குறித்துள்ளோம்.

ஒரு வார்த்தை:உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் <<<<உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

காலங்கள் பல கடந்துவிட்டதால் பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

பாராயண வழிகாட்டி:வேத மந்திரங்களின் நாதமே மனத்தை அகமுகமாக்க வல்லது. வேத மந்திரங்கள் ஒலிக்கின்ற இடங்களாகிய தீயசக்திகள் விலகுகின்றன; மங்கல தேவதையாகிய மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.

வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபுமுறை உள்ளது. வேத விற்பன்னர்களிடமிருந்து அதனை அறிந்து ஓதுவது நல்லது. தாமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

க, க, க என்று குறியீடுகள் பாராயணத்தில் கையாளப்படுகின்றன. இவை முறையே அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் எனப்படும். சாதாரண நிலை உதாத்தம் எனப்படுகிறது.

க (க)ண்ணன்)- உதாத்தம்: சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும்.

க- (மைய(க்க)ரு)- அனுதாத்தம்; ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

க- (க)ணபதி)- ஸ்வரிதம்; ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

க- ( உத்யோ(க)ம்)- தீர்க்க ஸ்வரிதம்; இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

பாரம்பரிய இசை தெரிந்தவர்கள் இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். சாதாரண ஸ்வரத்தை அதாவது உதாத்த நிலையை "ப என்று வைத்துக்கொண்டால் அனுதாத்தம்- சுத்த ம. ஸ்வரிதம்:- சுத்த த அல்லது கோமள "த.

முறைப்படி ஓதப்படுகின்ற வேத த்வனிக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. ஆனால் அந்த ஏற்ற இறக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்காக வேதங்களையே படிக்காமல் இருக்கத் தேவையில்லை. நமக்குச் சுலபமான ஒரு முறையில் ஓதலாம். மனத்தின் ஈடுபாடும் உணர்ச்சியுமே முக்கியமானது.

சாந்தி மந்திரம்:எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் <புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

அத: இறைவன்; பூர்ணம்- முழுமையானவர்; இதம்- இந்த உலகம்; பூர்ணம்- முழுமையானது; பூர்ணாத்- முழுமையான இறைவனிலிருந்தே; பூர்ணம்- முழுமையான உலகம்; <உதச்யதே- தோன்றியுள்ளது; பூர்ணஸ்ய- முழுமையிலிருந்து; பூர்ணம்- முழுமையை; ஆதாய- எடுத்த பின்பும்; பூர்ணம் ஏவ- முழுமையே; அவசிஷ்யதே- எஞ்சியுள்ளது.

இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது!

ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.

1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்மிடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு, மலரின் முழுமை வேறு. அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான <உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒரு போதும் குறைவதில்லை.

இறைவனின் முழுமை <<உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்க்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைத் தடைகள் வருமாறு-

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.
 
Photo: உபநிஷதம் ஒரு கண்ணோட்டம்!

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)

சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதுதான் அது. விஞ்ஞானம், கலை என்று பல விஷயங்களை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நம்மைப்பற்றிய அறிவே <உண்மையறிவு.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப் போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது. அதனால்தான் <உபநிஷத ரிஷி, இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் (1. தமஸோ மா ஜ்யோதிர் கமய-அப்யாரோஹ மந்திரம், பிருஹதாரண்யக உபநிஷதம், 1.3.28.)என்று பிரார்த்தனை செய்கிறார்.

அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி <உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்- ஒளி, துன்பம்-இன்பம், தீமை- நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது. எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிரார்த்திக்கிறார்.

ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஒளிக்கு அப்பால் தம்மையே காண்பதற்காக உபநிஷத முனிவர் கூறுகிறார். அறுதிநிலை அனுபூதி இது. இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.

1. நூறாண்டுகள் வாழ்க:அறுதி உண்மையான பரம்பொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும். அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த <உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறையனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது. உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.

தியாகத்துடன் அனுபவி:ஓம் ஈசாவாஸ்யமிதக்ம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் (1)

ஜகத்- மாறுகின்ற இயல்புடைய; ஜகத்யாம்- <உலகின்; யத் கிம் ச- எவை உள்ளனவோ; இதம் ஸர்வம்- அவை அனைத்தும்; ஈசா- இறைவனால்; வாஸ்யம்- நிறைக்கப்பட வேண்டும்; தேன- அந்த; த்யக்தேன- தியாகத்தினால்; புஞ்ஜீதா- அனுபவி; தனம்- பணம்; கஸ்ய ஸ்வித்- யாருடையது; மா க்ருத- ஆசைப்படாதே.

1. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள
அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும்.
அத்தகைய தியாக சிந்தனையுடன் உலகை அனுபவி.
பணம் யாருடையது? அதற்காக ஆசைப்படாதே.

உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும்தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம். அதனைப் பெற என்ன வழி?

அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும். இதன் பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகாந்தர்:

அனைத்தையும் இறைவனால் நிறைக்க வேண்டும்; ஒருவகை போலியான இன்ப நோக்காகவோ, இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. <உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.... இதன் பொருள் என்ன? நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்... உங்கள் குழந்தை

களில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள்.

நாம் நமது கற்பணையால், நமது அனுமானத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவரில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார். (1. இதம் என்பதே வார்த்தை. பாõரயண முறைக்காக "க் சேர்க்கப்பட்டு, இதக்ம் என்று ஓதப்படுகிறது.)

எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.

தியாகத்தால் பற்றின்மை:எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.

குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதக்ம் ஸமா:
ஏவம் த்வயி நான்யதேதோஸஸ்தி ந கர்ம லிப்யதே நரே (2)

இஹ- உலகில்; கர்மாணி- கடமைகளை; குர்வன் ஏவ- செய்தபடி மட்டுமே; சதம்- நூறு; ஸமா:- ஆண்டுகள்; ஜிஜீவிஷேத்- வாழ விரும்பு; த்வயி நரே- உன்னைப் போன்ற மனிதனுக்கு; ஏவம் இத:- இதைத் தவிர; அன்யதா- வேறு வழி; ந அஸ்தி- இல்லை; கர்ம- கடமைகள்; ந லிப்யதே- பற்றுவதில்லை.

2. கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள்
வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்பு
கின்ற) உன்னைப் போன்றவர்களுக்கு இதைத்தவிர
வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்)
கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.

உலகில் வாழ வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தா<லும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம்; ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும். விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது, தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது.

ஆனால் உலகை இறைவனுக்கு <உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப் போல் வாழ்ந்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காதலால் அத்தகைய வேலை அக வளர்ச்சிக்கான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது.
 
Photo: ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)

 நால்வர் வந்த வழி
நால்வர் வந்த வழி: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள். சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார். மாணிக்கவாசகர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார். சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர். அப்பர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

மூலவர் : வரசித்தி விநாயகர்
உற்சவர்:விநாயகர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : காணிப்பாக்கம்
மாவட்டம் : சித்தூர்
மாநிலம் : ஆந்திரா
திருவிழா:விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு.

தல சிறப்பு:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .போன்:+91-8573-281540,281640, 281747.

பொது தகவல்:பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை:இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

தலபெருமை:சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.

சிறப்பம்சம்:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.

கல்கி அவதாரம்
கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும் ? கலியுக முடிவில் உலகம் அழியுமா ? ஒரு தெளிவான பார்வை:
*
'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம்.
*
கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.
*
'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்).
*
ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல.
*
பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).
*
தற்பொழுது நடைபெறுவது வைவசுவத (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.
*
தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் மரபு உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் அளவுக்கு கலிக் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது.
*
தற்காலத்தில் தங்களையே 'கல்கி அவதாரம்' என்று அறிவித்துக் கொண்டு சில மூடாத்மாக்கள் களம் இறங்கியுள்ளனர். ஆணவத்தின் உச்சத்தில் செயல்பட்டு வரும் இத்தகு சுயநலவாதிகளிடம் அறியாமையால் மக்களும் சென்று சிக்கிக் கொள்கின்றனர். இதுவும் கலியின் கொடுமைகளுள் ஒன்று.
*
நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலியின் மீது பழியை ஏற்றி வைத்து கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

திங்கள், 12 மே, 2014

கட உபநிஷதம்

மனிதன் என்றால் யார்?

1.3 விழித்தெழு!

உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று இதயக்குகையில் உள்ளது. அதை அறிய வேண்டும். பிரித்தறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை அதற்குரிய சாதனைகள் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். ஆனால் இந்தச் சாதனைகள் சிறந்த பலனளிக்க வேண்டுமானால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.

வாழ்க்கையை ஒரு தேர்ப் பயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறுவதன்மூலம் புத்தியின் விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

1. ரிதம் பிபந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே
குஹாம் ப்ரவிஷ்ட்டௌ பரமே பரார்தே
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி
பஞ்சாக்னயோ யே ச த்ரிணாசிகேதா

ஸுக்ருதஸ்ய-செயல்களின்; ரிதம்-பலனை; பிபந்தௌ-அனுபவிக்கின்ற இருவர்; லோகே-உடம்பில் பரமே-மேலான; பரார்தே-நுண்ணியதான; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிஷ்ட்டௌ-புகுந்தவர்கள்; சாயா தபௌ-நிழலும் வெயிலும் போன்றவர்கள்; ப்ரஹ்மவித-மகான்கள்; பஞ்சாக்னய-ஐந்து அக்கினி உடையவர்கள்; த்ரிணாசிகேதா; மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்கள், யே-யாரோ; வதந்தி-சொல்கின்றனர்.

பொருள் : செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்; இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக் குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால் ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் விளக்குகிறார் (தௌ ச சாயாதபாவிவ விலக்ஷணௌ ஸம்ஸாரித்வ அஸம்ஸாரித்வத்வேன ப்ரஹ்மவிதோ வதந்தி)

ஸ்ரீராமகிருஷ்ணரின் அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. தமது கையில் அடிப்பட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை....இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குத்தான் கை உடைந்தது. இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?

முண்டக உபநிஷதம் ஒரு கதையின்மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்கிறது.; அதன் காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் திண்ணாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கிறது( த்வாஸுபர்ணாஸபுஜாஸகாயாமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வாஜாதே தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்யனச்னன் அன்யோ அபிசாகசீதி)

செயல்களின் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணனின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் உலகியலில், குழப்பங்களில் அழுந்துவோம்.

மேலே கண்ட உண்மையை மகான்களிடமிருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். மூன்று வகையான மகான்களைப்பற்றி அவர் கூறுகிறார்

1. மகான்கள் : இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள்படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஐந்து அக்கினி உடையவர்கள்: கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம், ஆவஸத்யம் என்பவை ஐந்து அக்கினிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம்-குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

ஆஹவனீயம்-ஆஹுதி அளிப்பதற்கான அக்கினி

தக்ஷிணாக்னி-தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி. இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம்-சாட்சி ரூபமாக விளங்குகிறது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம்-ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தைத் தருகின்ற அக்கினி.

3. மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்; நசிகேத யாகம்பற்றி ஏற்கனவே(1.1.15-19) கண்டோம்.

ஒரு சுயத் தூண்டுதல்

2. ய: ஸேதுரீஜானானாம் அக்ஷரம் ப்ரஹ்ம யத் பரம்
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி

ய-எந்த வித்யை; ஈஜானானாம்-பின்பற்றுபவர்களுக்கு; ஸேது-பாலம் ஆகிறதோ; தம்-அந்த; நாசிகேதம்-நசிகேத வித்யையை; சகேமஹி-செய்ய வல்லவர்கள் ஆவோம்; அபயம்-பயமற்ற; பாரம்-கரையை; திதீர்ஷதாம்-அடைய விரும்புபவர்களுக்கு; யத் அக்ஷரம்-அழிவற்ற எந்த; ப்ரஹ்ம-இறைவன்; பரம்-அடைக்கலமானவரோ; தத்-அந்த இறைவனை.

பொருள் : பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்யை பாலமாக அமைகிறதோ அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற எந்த இறைவன் அடைக்கலமானவரோ அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் லட்சியத்தை மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுயத் தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. உபநிஷதங்களைப் படிக்கும்போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும். அத்தகைய தொரு மந்திரம் இது.

வாழ்கையும் தேர்ப் பயணமும் (3-9)

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.

3. ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச

ஆத்மானம்-ஆன்மாவை; ரதினம்-சுவாரி செய்பவனாக; வித்தி-அறிந்துகொள்; சரீரம் து-புத்தி; ஸாரதிம்-தேரோட்டி; மன-மனம்; ப்ரக்ரஹம் ஏவ-கடிவாளம்; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : ஆன்மா பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4. இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத்யாஹுர் மனீஷிண

இந்த்ரியாணி-புலன்கள்; ஹயான்-குதிரைகள்; தேஷு-அவற்றிற்கு; விஷயான்-உலகப் பொருட்கள்; கோசரான்-பாதைகள்; ஆஹு-சொல்கின்றனர்; ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்-உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன்; போக்தா-அனுபவிப்பவன்; மனீஷிண-மகான்கள்; ஆஹு-சொல்கின்றனர்.

பொருள் : புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள்; உடம்பு புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவச்யானி துஷ்ட்டாச்வா இவ ஸாரதே

ய: து-யார்; அவிஜ்ஞானவன்-வழிப்புறாத வனோ; ஸதா-எப்போதும்; அயுக்தேன-பிளவுபட்ட; மனஸா-மனத்தினனாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; துஷ்ட்ட அச்வா; இவ-அடங்காத குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; அவச்யானி-வசப்படாமல் போகின்றன.

பொருள் : யார் விழிப்புறாதவனோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள்போல் வசப்படாமல் போகின்றன.

6. யஸ்து விஜ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி வச்யானி ஸதச்வா இவ ஸாரதே

ய:து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனோ; ஸதா-எப்போதும்; யுக்தேன-பொருந்திய; மனஸை-மனத்தினமாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; ஸத் அச்வா: இவ-அடங்கிய குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; வச்யானி-வசப்பட்டவை ஆகின்றன.

பொருள் : யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள்போல் வசப்படுகின்றன.

7. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அமனஸ்க: ஸதாசுசி
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் சாதிகச்சதி

ய:து-யார்; அவிஜ்ஞானவான்-விழிப்புறாதவனாக; அமனஸ்க-அடங்காத மனத்துடன்; ஸதா-எப்போதும்; அசுசி-தூய்மை அற்றவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ-அவன்; தத்-அந்த; பதம்-இறைநிலையை; ந ஆப்னோதி-அடைய மாட்டான்; ஸம்ஸாரம் ச-உலகியலிலும் அதிகச்சதி-ஆழ்கிறான்.

பொருள் : யார் விழிப்புறாதவனாக, அடங்காத மனத்தை உடையவனாக தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ அவன் இறைநிலையை அடைய மாட்டான்; உலகியலிலும் ஆழ்கிறான்.

8. யஸ்து விஜ்ஞானவான், பவதி ஸமனஸ்க: ஸதா சுசி
ஸ து தத் பதமாப்னோதி யஸ்மாத் பூயோ ந ஜாயதே

ய: து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனாக; ஸமனஸ்க-அடங்கிய மனத்துடன்; ஸதா-எப்போதும்; சுசி-தூயவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ: து-அவன்; யஸ்மாத்-எங்கிருந்து; பூய: மீண்டும்; ந ஜாயதே-பிறக்கமாட்டானோ; தத்-அந்த; பதம்-இறைநிலையை ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : யார் விழிப்புற்றவனாக, அடங்கிய மனத்தை உடைவனாக, எப்போதும் தூயவனாக இருக்கிறானோ அவன், எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை; ஆப்னோதி-அடைகிறான்.

9. விஜ்ஞானஸாரதிர் யஸ்து மன: ப்ரக்ரஹவான் நர
ஸோத்வன பாரமாப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்

ய: நர-எந்த மனிதன்; விஜ்ஞான ஸாரதி-விழிப்புற்ற தேரோட்டியுடனுன்; ப்ரக்ரஹவான் மன-கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும்; ஸ: து-அவனே; அத்வன: பாரம்-பாதையின் முடிவை; ஆப்னோதி-அடைகிறான்; தத்-அது; விஷ்ணோ-இறைவனின்; பரமம்-மேலான; பதம்-இருப்பிடம்.

பொருள் : யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும் இருக்கிறானோ அவனே பாதையின் முடிவை அடைகிறான். அது இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம்: ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கைப் பயணம் ஒரு தேர்ப் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையைக் காண்போம், பிறகு அது தரும் செய்தியைப் பார்ப்போம்.

தேர்ப் பயணமும் வாழ்க்கையும்

தேரில் ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்திருக்கிறான். ஐந்து குதிரைகள் தேரை இழுக்கின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்ப் பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா- பயணம் செய்பவன்
புத்தி- தேரோட்டி
மனம்- கடிவாளம்
புலன்கள்- குதிரைகள்
உலகப் பொருட்கள்- பாதை

தேர்ப் பயணம் தரும் செய்தி

1. பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்க வேண்டும்.

2. பயணத்தின் வேகமும் வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டுப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியைப் பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களைச் செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்று நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்? இதுவே சாதாரணமாக நம் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை எழுப்புவதே நாம் செய்ய வேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3. புத்தியை எழுப்புதல் அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன?

சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது-1. இயல்புணர்ச்சி , 2. அறிவு, 3. உள்ளுணர்வு.

1. இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்ற உணர்ச்சி, வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக்கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகின்ற இயற்கையான மனப்போக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக, இதற்கேற்பவை ஒருவன் வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனைப் பயன்படுத்த முடிவதில்லை.

2. அறிவு: புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பெறுகின்ற அறிவு, புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.

3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்தப் புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒரு போதும் பொய்ப்பதில்லை, இந்த உள்ளுணர்வு விழிக்கப் பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. கல்வி, விஞ்ஞானம், கலை, மதம் என்று எந்த துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாகத் திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பது. இதை புத்தியோகம் என்று கீதை(2.49-58) கூறுகிறது.

இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

பயண லட்சியம் 10-11

இந்தப் பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதைப் படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; அர்த்தா-உலகப் பொருட்கள்; பரா: ஹி-வலிமை வாய்ந்தவை; அர்த்தேப்ய ச-பொருட்களைவிட; மன-மனம்; பரம்-வலிமை வாய்ந்தது; மனஸ: து-மனத்தைவிட; புத்தி:-புத்தி; பரா-வலிமை வாய்ந்தது; மஹான் ஆத்மா-மகிமை வாய்ந்ததான ஆன்மா; புத்தே-புத்தியைவிட; பர-வலிமை வாய்ந்தது.

பொருள் : புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.

11. மஹத: பரமவ்யக்தம் அவயக்தாத் புருஷ: பர
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி

மஹத-மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; பரம்-வலிமை வாய்ந்தது; அவ்யக்தாத்-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-வலிமை வாய்ந்தவர்; புருஷாத்-இறைவனைவிட; பரம்-வலிமை வாய்ந்தது; ந கிஞ்சித்-எதுவும் இல்லை; ஸா-அவரே; காஷ்ட்டா-அறுதிப் பொருள்; ஸா-அவரே; பரா கதி-கடைசிப் புகலிடம்.

பொருள் : மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுதிப் பொருள். அவரே கடைசிப் புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதை விட உயர்ந்த ஒன்றை நாட வேண்டும். மேற்கிலிருந்து விலக வேண்டுமானால் விலக வேண்டும், விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்ற போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு நோக்கி நடப்பதே. கிழக்கு நோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அது போலவே மனத்தை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது. இதையே கீதை, அடக்குவதால் என்ன பயன்?(நிக்ரஹ: கிம் கரிஷ்யதி?) என்று கேட்கிறது எனவே கீழானதை வசப்படுத்த மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின்மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது. புலன்களைத் தூண்டுபவை உலகப் பொருட்கள். அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலேயே நாம் உலகை அனுபவக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்பட்டது.

புலன்களின் கவனத்தைக் கவரக்கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்தப் பொருட்கள் புலன்களைத் தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர் ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான். அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்கமாட்டோம். பிறகு கேட்டால், நான் பார்க்கவில்லையே என்போம். சாதாரண வேளையில் நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது. ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களைக் கவர அந்த மலரால் முடியவில்லை. எனவே புறப் பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம்: புற உலகம் நமக்குத் தெரியும், புலன்களை நாம் அறிவோம் மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதாரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது. புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம். அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால் இந்தப் பயணம் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல் ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தனம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தத்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசிப் புகலிடம்.

புத்தி விழிப்புற வேண்டும்

12. ஏஷ ஸர்வேஷு புதேஷு
கூடோத்மா ந ப்ரகாசதே
த்ருச்யதே த்வக்ர்யயா புத்த்யா
ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்சிபி

ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஸர்வேஷுபூதேஷு-எல்லா உயிர்களிலும்; கூட-மறைவாக உள்ளது; ந ப்ரகாசதே-வெளிப்பட்டுத்  தெரிவதில்லை; து-ஆனால்; அக்ர்யயா-ஒருமைப்படுத்தப்பட்ட; ஸூக்ஷ்மயா-நுண்ணிய; புத்த்யா-புத்தியால்; ஸூக்ஷ்ம தர்சிபி-மகான்களால்; த்ருச்யதே-காணப்படுகிறது.

பொருள் : இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த: கரண வ்ருத்தி வேதாந்த சாரம், 66, 65) ஆனால் இந்த புத்தியால் புற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும்; அக உண்மைகளைக் காணும் ஆற்றல் இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறாத நிலையில் உள்ள புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால்தான் ஆன்மாவை உணர முடியும்.

புத்தி விழிப்புற என்ன செய்ய வேண்டும்?

13. யச்சேத்வாங்மனஸீ ப்ராஜ்ஞ
தத் யச்சேத் ஜ்ஞான ஆத்மனி
ஜ்ஞானமாத்மனி மஹதி நியச்சேத்
தத் யச்சேத் சாந்த ஆத்மனி

ப்ராஜ்ஞ-அக நாட்டம் உடையவன்; வாக்-பேச்சை; மனஸீ-மனத்தில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த மனத்தை; ஜ்ஞானே-விழிப்புற்ற; ஆத்மனி-புத்தியில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; ஜ்ஞானம்-புத்தியை; மஹதி-மகிமை வாய்ந்த; ஆத்மனி-ஆன்மாவில்; நியச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த ஆன்மாவை; சாந்தே-அமைதியின் இருப்பிடமான; ஆத்மனி-இறைவனில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்.

பொருள் : அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்.

சாதனைமுறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும்-இது முதற்படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சுக் கட்டுப்பாடு. (யோகஸ்ய ப்ரதம த்வாரம் நிரோத) என்கிறார் ஸ்ரீசங்கரர். தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கியப் பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த முடியும்.

பேச்சு இரண்டு வகை-புறப் பேச்சு, அகப் பேச்சு; அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும் எண்ணங்கள் ஆர்ப்பரித்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சைப் பயிற்சியின்மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படித் தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதைக் கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன் சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றைக் காண்பதற்குப் பழக வேண்டும். பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்துப் புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழக வேண்டும்.

இதுவே பேச்சை மனத்தில் ஒடுக்குவது என்ற முதற்படி. இந்தப் பயிற்சி மனத்திற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.
தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நாம் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும் போதுதான் மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே. எனவே பேச்சைக் கட்டுப்படுத்தி பயிற்சியைத் தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சைக் குறைத்து அமைதியைக் கடைப்பிடிப்பதன்மூலம் அமைதியின் உறை விடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை

14. உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராப்ய வாரன் நிபோதத
க்ஷúரஸ்ய தாரா நிசிதா துரத்யயா ஆர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி

உத்திஷ்ட்டத-எழுங்கள்; ஜாக்ரத-விழியுங்கள்; வரான்-தகுந்த குருவை; ப்ராப்ய-அடைந்து; நிபோதத-அனுபூதி பெறுங்கள்; நிசிதா-கூரான;க்ஷúரஸ்ய-கத்தியின்; தாரா-முனை; துரத்யயா-நடக்க இயலாதது; தத்-அது; துர்கம்-கடினமானது; கவய;-சான்றோர்கள் வதந்தி-கூறுகின்றனர்.

பொருள் : எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பதுபோன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குரு ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியைக் காட்டுவார். இந்த மூன்று படிகளையும் அப்யாரோஹ மந்திரம் (ஓம் அஸதோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய) விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிரார்த்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல். உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி. இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போது தான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன? நாம் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அகவளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கின்ற இரண்டாம்படி. அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவையை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன் தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும்போது இறையனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை

15. அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம்
ததாரஸம் நித்யமகந்தவச்ச யத்
அனாத்யனந்தம் மஹத: பரம் த்ருவம்
நிசாய்ய தன்ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே

யத்-எது; அசப்தம்-ஒலியைக் கடந்தது; அஸ்பர்சம்-தொடு உணர்ச்சியைக் கடந்தது; அரூபம்-காட்சியைக் கடந்தது; அரஸம்-சுவையைக் கடந்தது; அந்தவத் ச-மணத்தைக் கடந்தது; ததா-அதுபோல்; அவ்யயம்-அழிவற்றது; நித்யம்-என்றென்றும் இருப்பது; அனாதி-ஆரம்பம் இல்லாதது-அனந்தம்-முடிவற்றது; மஹத-புத்தியைவிட; பரம்-மேலானது; த்ருவம்-நிலையானது; தத்-அதை; நிசாய்ய-அனுபூதியில் உணர்ந்து; ம்ருத்யுமுகாத்-மரணத்தின் பிடியிலிருந்து; ப்ரமுச்யதே-விடுபடுகிறான்.

பொருள் : ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

உபநிஷத மகிமை 16-17

பொதுவாக ஒரு நூலின் முடிவில்தான் உபநிஷத மகிமை சொல்லப்படும். தொடரும் இரண்டு மந்திரங்களுடன் கட உபநிஷதத்தின் முதல் பகுதி நிறைவுறுவதால் இங்கும் கூறப்படுகிறது.

16. நாசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்
உக்த்வா ச்ருத்வா மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே

நாசிகேதம்-நசிகேதன் கேட்ட; ம்ருத்யு ப்ரோக்தம்-எமதர்மன் கூறிய; ஸனாதனம்-பழமையான; உபாக்யானம்-விஷயத்தை; உக்த்வா-சொல்லி; ச்ருத்வா ச- கேட்கின்ற; மேதாவீ-புத்தி வழிக்கப் பெற்றவன்; ப்ரஹ்மலோகே-உயர் உலகங்களில்; மஹீயதே-போற்றப்படுகிறான்.

பொருள் : நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான்.

17. ய இமம் பரமம் குஹ்யம்
ச்ராவயேத் ப்ரஹ்ம ஸம்ஸதி
ப்ரயத: ச்ராத்தகாலே வா ததானந்த்யாய கல்பதே
ததானந்த்யாய கல்பத இதி

ய-யார்; ப்ரயத-தூயவனாக இருந்து; பரமம்-மேலான; குஹ்யம்-பொருளாழம் மிக்க; இமம்-இதனை; ப்ரஹ்ம ஸம்ஸதி-சான்றோர்களின் சபையிலோ; ச்ராத்தகாலே வா-சிராத்த காலத்திலோ; ச்ராவயேத்-கேட்கச் செய்கிறானோ; தத்-அது; அனந்த்யாய-எல்லையற்ற பலனை; கல்பதே-தருகிறது.

பொருள் : மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றைப் படிப்பது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப் பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம் என்பதை இந்த 16 மற்றும் 17 ஆம் மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷங்களின் உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியும்; அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கே பலன், வெறுமனே கிளிப்பிள்ளைபோல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்ப்பார்க்கக் கூடாது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்ருதீயா வல்லீ