ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க
இன்று உலகையே ஆட்டி வைக்கும் தொற்று பரவல் நோய் *"கொரோனா வைரஸ் நோய்"*
பழைய காலங்களில் மிகப் பெரிய தொற்று நோய்காளாக *"பெரியம்மை, சின்னம்மை, காலரா - கழிச்சல் முதலியவை இருந்தன இந்நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க மக்கள் "மாரியம்மனையும் காளியம்மனையும்" வழிபட்டனர்"*
"எவ்வளவோ அறிவார்ந்து இருந்த நம் தமிழ் சமூகத்திற்கு "மேற்கண்ட நோய்கள் வைரஸ் போன்ற விஷக்கிருமிகளால் பரவுகிறது" என்பது தெரியாமலா இருக்கும்??!
"ஆனாலும் வெப்பமயமான தேஜஸை உடைய மாரியம்மனை வேப்பிலை, மஞ்சள் முதலிய பொருட்களால் வழிபாடு செய்தனர்" ஆனாலும் பின்னால் வந்த ஆங்கிலேயே வைத்தியர்கள் "பெரியம்மை முதலியவற்றுக்கு காரணம் வைரஸ் என்று கண்டு பிடித்து மருந்தும் கண்டு பிடித்தனர்"
இந்த விபரங்கள் தெரியும் முன்னமே மக்கள் நோயாளிகளை வேப்பிலை மஞ்சள் முதலியவற்றால் குணப்படுத்த முயற்சித்தல், தனிமை படுத்தல், தொடாமை முதலியவற்றை "மாரியம்மன் வழிபாட்டால் செய்து கொண்டு இருந்தனர்"
பின்னாள் அம்மை நோய் அம்மனை வழிபடாமையால் பரவும் என்றவாறு இது தவறாக கற்பிக்க பட்டு மூடநம்பிக்கை என்று ஒதுக்கப் பெற்றது!! காலக்கொடுமை!! ஆதலால் "இன்றும் "கொரோனா முதலிய விஷக்கிருமிகள் பரவாமல் இருக்க அதன் பாதிப்பில் இருந்து விலக நம் ஊர்களிலேயே கிராமங்களிலேயே, தெரு முனைகளிலேயே கருணா சாகரமாக வீராசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகையாம் மகாமாரியை வழிபாடு செய்யுங்கள்"
"ஸ்ரீ பரமேஸ்வரனின் பாரியாகிய பார்வதியே வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீமாரியின் வெப்பத்தல் கொடும்பரவல் நோய்கள் நிச்சயம் பொடிப்பொடியாக மறையும்"
அவள் அக்னிமயமானவள், பரமேஸ்வரனுயை அடையாளங்களை தன்னகத்தே கொண்டவள், அக்னிமயமான கேசங்களையும், சடாமகுடத்தையும், பாசாங்குசமும் திரிசூலமும் கபாலமும் கத்தியும் உடுக்கையும் கொண்டு சூர்யகோடி தேஜோ மயமாக வீராசனத்தில் வீற்றிருந்து வெப்பமாயமாக இருந்து தன்னை அடைபவர்களுக்கு குளிர்ச்சியை தரும் சீதளாதேவி என்று அவளது தியான ஸ்லோகம் குறிக்கிறது
"அக்நி ஜ்வாலா சிகாம் அக்னி நேத்ராம் அக்னி ஸ்வரூபிணீம்; கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்; வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம் வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரண பூஷிதாம்" என்பது அவளது ஸ்வரூபத்தை குறிக்கும் தியான ஸ்தோத்திரம்
இவ்வம்மையை அவ்வங்கே எப்படி பாரம்பரியமாக வழிபட்டனரோ அவ்வந்த படியே மாற்றமில்லாமல் அவள் உள்ளங் குளிரும்படி "ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும்" விழா எடுத்து வேப்பிலை தோரணம் மஞ்சள் நீராட்டு என்று விழா எடுத்து நம் பாரம்பரியத்தை கைவிடாது அவ்வம்மைக்கு ப்ரீத்தியை உண்டாக்குங்கள்
கொரோனா என்ன அதுனுடைய அப்பன் வந்தாலும் "பாரெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனின் பாரியாம் ஸ்ரீமாரி பார்த்து கொள்வாள்"
இவ்வம்மையோடு கூட அவ்வந்த ஊர்களின் கிராம தேவதைகளையும் தக்க வகையில் ப்ரீத்தி செய்து வழிபாடு செய்யுங்கள்
"எல்லோரும் ஸ்ரீ தில்லை கூத்தர் திருவருளால் அவ்வந்த பகுதியின் கிராம, நகர காவல் தெய்வங்களால் ரக்ஷிகப் படுவோம் ஆகுக!!
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 10 பிப்ரவரி, 2021
ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபடுங்கள்
நரகத்திற்கு செல்ல எளிய வழி
நரகத்திற்கு செல்ல எளிய வழி!!
நரகத்திற்கு செல்ல யாருக்குதான் ஆசை இருக்கும்?? ஆனாலும் என்னை போல யாராவது நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு எளிய வழியை திருமுறை பாடல் ஒன்று காட்டுகின்றது!!
திருமுறைகளில் உலக வாழ்க்கை பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கின்றது, அதேசமயம் சிவலோகத்திற்கு செல்லவும் திருமுறைகள் வழிகட்டுகின்றன ஆனால் இதில், "நரகத்திற்கு செல்லவும் வழி காட்டப்படுவது ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா??" இதுநிற்க, இந்த நரக வழியை காட்டும் திருமுறை ஆசிரியரோ ஒரு அரசர், அவருக்கு ஒரு திறமை உண்டு அவரது முன்பு நின்று யார் எதனை நினைத்தாலும் அவருக்கு எதிர் நிற்பவர் என்ன நினைக்கின்றார் என்று அவருக்கு தெரிந்து விடும்!! அதனால் தான் அவரை கழறிற்று அறிவார் நாயனார் என்பார்கள். இவருக்கு இந்த ஆற்றலை திருவஞ்சைக்களத்து மகாதேவர் அருளியதாக சேக்கிழார் பெருமான், யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும்" என்று பாடுகின்றார்கள்!!
ஆக இந்நாயனாருக்கு உயிர்கள் யாவும் மனதில் நினைப்பது எதுவானாரும் அதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மனிதர்கள் பலரின் மனதில் உள்ள விசித்திர ஆசைகளும் தெரிந்திருக்கும்தானே!?
இதன்படி யாரோ ஒரு விசித்திர நபருக்கு "நரகத்திற்கு செல்ல வேண்டும், அந்த சூழல் எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழுந்திருப்பதனை இந்நாயனார் கண்டறிந்து இருக்க கூடும்!!",
ஏன் நமக்கே கூடத்தான் அந்த "எண்ணெய் கொப்பரை எப்படி இருக்கும்?? என்று பாத்திடனும்" என்ற ஆசை அடிமனதில் இருக்கும்!! கொடிய இடம் என்றாலும் அங்கு போய் ஒருமுறை பார்த்துவிட விரும்புவதானே மனித மனத்தின் விசித்திரங்களுள் ஒன்று??
இப்படி பட்ட விந்தை உளவியல்களுக்கு விடைதர நினைந்த எம்பிரான் "சேரமான் பெருமாள் என்னும் கழறிற்று அறிவார் நாயனார் தாம் பாடிய பொன்வண்ணத்து அந்தாதி என்னும் நூலில் நரகத்திற்கு செல்லும் வழியினையும் காட்டுகின்றார்"
பதினோறாம் திருமுறையில் உள்ள இந்த பொன்வண்ணத்து அந்தாதியின் பதினான்காம் பாடல் இப்படி அமைந்திருக்கிறது,
"உலகு ஆளுறுவீர் தொழுமின்; விண்ணாள்வீர் பணிமின்; நித்தம் பலகாமுறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றல் உற்றீர்
நல கா மலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே"
என்பது அந்த பாடல் அஃதாவது மனித மனங்களில் எழும் விசித்திரமான பல ஆசைகளை தாமாகவே அறிந்த நாயனார் ஒவ்வொருவராக அழைத்து தீர்வு கூறுகிறார் அதில் நிறைவாக "நரகத்திற்கு செல்ல விருப்ப பட்டவர்களையும் அழைத்து கூறுகிறார்", அதனை காணும் முன்னம் மனிதர்களின் மற்றைய ஆசைகளையும் அதற்கான தீர்வுகளையும் கண்டுவிடுவோம்
நாயனார் அழைக்கிறார்:
உலகத்தை ஆளும் விருப்பத்தை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவபெருமானை தொழுங்கள் (உலகு ஆளுறுவீர் தொழுமின்), என்றார். அடுத்து,
வான உலகங்களை இந்திர பதவி முதலானவை மூலம் ஆள விரும்புபவர்களே!! நீங்கள் சிவபெருமானை பணிமின்கள் (விண்ணாள்வீர் பணிமின்) என்றார். அடுத்து,
தினமும் உலகியலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, மக்களாசை முதலிய பல ஆசைகளை கொண்டவர்களே!! நீங்கள் சிவபெருமானை நினைத்து போற்றுங்கள் அத்தனை ஆசைகளும் உங்களுக்கு நிறைவேறும் (நித்தம் பல காமுறுவீர் நினைமின்) என்றார். அடுத்து,
"முக்தி இன்பமாகிய வீடு பேறும் சிவபெருமானொடு கூடிய வாழ்வும் வேண்டும் பிறப்பினை வெறுக்கும் அடியார்களே!! நீங்கள் நல்ல பூங்காவில் விளைந்த புது மலர்களால் இறைவனை தினமும் அருச்சனை செய்யுங்கள் (பரமனொடு ஒன்றல் உற்றீர் நல கா(பூங்கா) மலரால் அருச்சுமின்) என்றார்". அடுத்து, என்னை போன்ற விசித்திர உளவியல் உடைய "நரகத்தையும் பாத்திடுறது என்ற ஆசை உடையவர்களுக்கு தீர்வு சொல்ல அழைக்கிறார்" நாயனார்,
"நாளும் நரகத்தில் நின்று அல்லல் படும் ஆசையை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவனடியார்களை துன்புறுத்துங்கள், (நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே!!) என்றார்" நாயனார்,
"அஃதாவது உங்களுக்கு நரகத்துக்கு செல்ல விருப்பமாக இருக்கிறதா!? அதற்காக ரொம்ப சிரமப் படாதீர்கள் யாராவது "திருநீறு பூசி", "உத்ராக்கம் போட்டுகொண்டு" "சிவநாமம்" பேசும் அடியார்கள் உங்களை ஏதேனும் தேவை கருதி தேடிவந்தால் இன்று, நாளை என்று அவர்களை அலைக்கழியுங்கள், கஷ்டப் படுத்துங்கள், அவர்களுக்கு பசிக்கு உணவளிக்காதீர்கள், உங்கள் வீட்டிற்கோ வாசலுக்கோ வந்தால் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிடுங்கள், மறந்தும் சிவனடியார்களை வணங்கி விடாதீர்கள், இதில் எதாவது ஒன்றை செய்தால் கூட போதும் நரகத்திற்கு நேரடியாக சென்றுவிடலாம்" என்று எளிய வழியை காட்டுகின்றார் நாயனார்
இந்த வழியை பின்பற்றி நரகத்திற்கு சென்றால் போதும் அதன் பிறகு, அங்கு நடக்கும் எண்ணெய் சட்டி பொரியல், வறுவல், சாட்டையடி, உலக்கையடி, கும்பிபாகம், கிருமிபோஜனம் முதலிய கவனிப்புகளை எமனும் அவரது பணியாட்களும் பார்த்து கொள்வர்கள்!! என்று நயமாக கூறுகிறார் எம்பிரான் சேரமான் பெருமாள் நாயனார்
அஃதாவது தமிழில் முரண்தொடை என்றொரு இலக்கிய நயம் உண்டு, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் முரணாக திரித்து கூறுவது என்று அதற்கு பொருள்,
அதன்படி சிவனடியாரை துன்புறுத்தினால் நரகம் உறுதி என்பதனை முரணாக அழகாக இப்பாடலில் தொகுத்து அளித்து உள்ளார் நாயனார் என்பது அறிந்து இன்புறத் தக்க செய்தியாம்🙏🏻🙏🏻😌
திருச்சிற்றம்பலம்🙏🏻
அமாவாசை தர்பணம்
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ ------- ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ------- சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ------- ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் ------- சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ ------- சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து ------- ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ------- ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ------- சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாத்ரூ வர்க்கம்:
------- கோத்ராஹா ------- தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
------- கோத்ராஹா ------- சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.
------- கோத்ராஹா ------- தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம் + ஹவேஷு ------- கோத்ரா னு ------- ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.2 ------- கோத்ரான் ------- சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3 ------- கோத்ரான் ------- ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
2.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
3.1,2,3: ------- கோத்ராஹா ------- தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
பூணல் வலம் : தேவதாப்பிய: ______
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.
கணு பொங்கல்
கணு பொங்கல் !!
கணு அன்று நம்மை விட வயதில் மூத்த பெண் மணிகளை நமஸ்கரித்து அவர்களிடம் நெற்றியில் மஞ்சள் கீறி விட சொல்லி கையில் கொண்டு போகும் பசு மஞ்சளை கொடுத்து அவர்களும் நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே நெற்றியில் மஞ்சளை கீற்றி விடுவார்கள்.
அவை:--- தாயோடும், தந்தையோடும், சீரோடும், சிறப்போடும்,
பேரோடும், புகழோடும், பெருமையோடும், கீர்த்தியோடும், சிறு வயதில், தாலிகட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி போலத் தொங்கத் தொங்கத்தாலிகட்டித் தொட்டிலும், பிள்ளையுமாக, மாமியார், மாமனார் மெச்ச, நாத்தியும் மாமியும் போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள், ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை, புது மலர் சூடி புது மாப்பிள்ளை, மருமகளோடு, புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து, அருகுப்போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும் என்று சொல்லி, வாழ்த்துவர். பிறகு வீட்டிற்கு வந்து காக்காய் பொடி வைத்து,
அதை ஜலம் தெளித்து, நீர் சுற்றி மணி அடித்து சூடன், காண்பித்து, பிரார்த்திக்க வேண்டும். காக்காய் பொடி வைத்தேன், கனுப்பொடி வைத்தேன், காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் காக்காய் கூட்டம்
பிரிந்தாலும், என் கூட்டம் பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம் பண்ணிவிட்டு குளித்து கலந்த சாதங்கள் செய்து, ஸ்வாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம்.
கணுப் பண்டிகை பாடல் :
{அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம்}
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்
கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்
பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்
மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்
வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்
எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்
கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்
தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்
கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்
கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்
கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்
காக்கைக் கூட்டம் போல எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
வியாழன், 21 ஜனவரி, 2021
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன் : பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள் மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலை தான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?
அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அது போக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல் தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென் மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரி தான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும் போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம். அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான் நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
_____________________________________________________________________
புதன், 20 ஜனவரி, 2021
ஸ்ரீபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்
ஸ்ரீபுரம் அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்
வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும் அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது.
இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும்,இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது
மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்கள் தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன
100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில்,ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது.அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது.
மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா,
தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.
கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும்சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்து,வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது.
இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாடகல்
விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன.
கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள்பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கின்றன.தென்றல் காற்று இதமாக
வீசுகிறது.மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது.
கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும்
தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.
அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆனபிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில்ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம்.
கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும்,புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை,லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன.
கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக பொற்கோயில்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், வேலூர் ஸ்ரீபுரம் “லட்சுமி நாராயணி கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
சுயம்பு லட்சுமி நாராயணி:தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் பிள்ளையாரும், நந்தியும் சுயம்புமூர்த்தியாக உள்ளனர். மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் சிவன் சுயம்புவாகவும், கோயமுத்தூர் மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆகிய இடங்களில் பெருமாள் சுயம்புவாகவும், சென்னை திருவேற்காடு போன்ற பல தலங்களில் மாரியம்மன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் ஆகியோர் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதை தரிசித்திக்கிறோம்.
வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள்
லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, ..இத்தகைய சுயம்பு கோலத்தைக் காண்பது அரிதிலும் அரிது.
ஏழுமலையானின்பார்வையில்திருமகள்வேலூர்மகாலட்சுமி,திருமலையில்அருளும்திருப்பதிவெங்கடாசலபதியின்கடைக்கண்பார்வைபடும்படியாகஅமைக்கப்பட்டிருக்கிறாள்.ஆரம்பகாலத்தில்,இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது.
மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு “ஸ்ரீபுரம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீ’ என்பது மகாலட்சுமியை குறிக்கும்.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள்,அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.
மக்களை மகிழ்விக்கும் மகாலட்சுமி : மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அருளுகிறாள்.
தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
தங்கக் கோயிலைச் சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது, “”மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம்.இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள்.
அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச்செல்வார்கள்,”என்றார்.
சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக்கோயிலை “நாராயணி பீடம்’ என்கின்றனர்.
இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான “சக்திஅம்மா’ இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.
எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில் ஸ்ரீபுரம் தங்ககோவிலுக்கு, பசுமைக்கோவில் விருது மற்றும் இந்தியாவின் தலைசிறந்த சுற்றுச்சூழல் வளாகம் ஆகிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்
அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில்
மூலவர்:லட்சுமிநாராயணி
பழமை:100 வருடங்களுக்குள்
ஊர்:ஸ்ரீபுரம் திருமலைக்கோடி
மாவட்டம்:வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு:இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம்:காலை 7 முதல் இரவு 8 மணிவரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம் - திருமலைக்கோடி,வேலூர் மாவட்டம்.போன்:+91- 416 - 227 1855, 227 1202
பொது தகவல்:வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கின்றன.
தென்றல் காற்று இதமாக வீசுகிறது. மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.
அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம். கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை:மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:தமிழக பொற்கோயில்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வேலூர் ஸ்ரீபுரம் "லட்சுமி நாராயணி' கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
சுயம்பு லட்சுமி நாராயணி : தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் பிள்ளையாரும், நந்தியும் சுயம்புமூர்த்தியாக உள்ளனர். மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் சிவன் சுயம்புவாகவும், கோயமுத்தூர் மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆகிய இடங்களில் பெருமாள் சுயம்புவாகவும், சென்னை திருவேற்காடு போன்ற பல தலங்களில் மாரியம்மன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் ஆகியோர் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதை தரிசித்திருப்பீர்கள்.
வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது. ஏழுமலையானின் பார்வையில் திருமகள்வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண்பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு "ஸ்ரீபுரம்' என்று பெயர் மாற்றப்பட்டது. "ஸ்ரீ' என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.
மக்களை மகிழ்விக்கும் மகாலட்சுமி : மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள். தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
தல வரலாறு:தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது, ""மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம். இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும்மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள்,''என்றார்.
சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை "நாராயணி பீடம்' என்கின்றனர். இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான "சக்திஅம்மா' இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.
சிதம்பரம் கோவிலின் சில அற்புதங்கள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
திங்கள், 18 ஜனவரி, 2021
தியான சுலோகங்கள்!
தியான சுலோகங்கள்!
1. ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா
நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராணமுநிநா
மத்யே மஹாபாரதம்
அத்வைதாம்ருதவர்ஷிணீம் பகவதீ
மஷ்டாதஸா த்யாயிநீமம்
த்வாமநுஸந்ததாமி பகவத் கீதே
பவத்வேஷிணீம்
ஓம்-ஓம், அம்ப-தாயே, பகவத்கீதே-பகவத்கீதே, ஸ்வயம்-சாக்ஷõத், பகவதா-பகவானான, நாராயணேன- நாராயணனால், பார்த்தாய- பார்த்தனுக்கு, ப்ரதிபோதிதாம்- உபதேசிக்கப்பெற்றவள், புராண முனினா வ்யாஸேன-புராண முனிவரான வியாசரால், மத்யே மஹாபாரதம்-மஹாபாரதத்தின்கண், க்ரதிதாம்-அமைக்கப்பெற்றவள், அத்வைத அம்ருத வர்ஷிணீம்-அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பவத்வேஷிணீம்-பிறவிப்பிணியைப் போக்குபவள், அஷ்டாதச அத்யாயினீம்-பதினெட்டு அத்தியாயங்களையுடையவள், பகவதீம்-பகவதி த்வாம், உன்னை அனுஸந்ததாமி-தியானிக்கிறேன்.
பொருள் : ஓம். தாயே, பகவத்கீதே ,சாக்ஷõத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மஹாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள். அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியைப் போக்குபவள், பதினெட்டு அத்தியாயங்களை யுடையவள் ஆகிய பகவதீ, உன்னைத் தியானிக்கிறேன்.
2. நமோ ஸ்துதே வ்யாஸ விஸாலபுத்தே
புல்லாரவிந்தாயத பத்ரநேத்ர
யேந த்வயா பாரததைலபூர்ண:
ப்ரஜ்வாலிதோ ஞாநமய: ப்ரதீப:
விசாலபுத்தே-விசால புத்தியுடையவரே, புல்ல அரவிந்த ஆயத பத்ர நேத்ர-நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரே, வ்யாஸ-வியாசரே, யேன த்வயா-உம்மால், பாரத தைல பூர்ண-மஹாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த, ஞானமய ப்ரதீப-ஞானதீபம், ப்ரஜ்வாலித-ஏற்றிவைக்கப்பட்டது, தே-உமக்கு, நம-நமஸ்காரம், அஸ்து-இருக்கட்டும்.
பொருள் : விசால புத்தியுடையவரும், நன்கு அலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்களையுடையவரும் ஆகிய வியாசரே, மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞான தீபத்தை ஏற்றிவைத்த உமக்கு நமஸ்காரம்.
3. ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே
ஞாநமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம:
ப்ரபன்ன பாரிஜாதாய-சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனுக்கு, தோத்ர வேத்ர ஏக பாணயே-பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்தவனுக்கு, கீதா அம்ருத துஹே-கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனுக்கு, ஞான முத்ராய-சின்முத்திரையுடையவனுக்கு, க்ருஷ்ணாய-கிருஷ்ணனுக்கு, நம-நமஸ்காரம்.
பொருள் : சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.
4. ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
ஸர்வ உபநிஷத-எல்லா உபநிஷதங்களும், காவ-பசுக்கள், கோபால நந்தன-கோபாலனுடைய மகன்(கிருஷ்ணன்), தோக்தா-பால் கறப்பவன், பார்த்த-பார்த்தன், வத்ஸ-கன்று, ஸுதீ-பேரறிவாளர், போக்தா-அருந்துபவர்கள், கீதா அம்ருதம்-கீதை என்னும் அமிர்தம், மஹத்-மேலான, துக்தம்-பால்.
பொருள் : உபநிஷதங்கள் யாவும் பசுக்கள்; கிருஷ்ணன் பால் கறப்பவன்; பார்த்தன் கன்று; அருந்துபவர் பேரறிஞர்; கீதை என்னும் அமிர்தம் ஒப்பற்ற பால் ஆகிறது.
5. வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்
தேவகீபரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
வஸுதேவ ஸுதம்-வசுதேவருடைய மகனை, கம்ஸ சாணூர மர்தனம்-கம்ஸனையும் சாணூரனையும் கொன்றவனை, தேவகீ பரம ஆனந்தம்-(தாய்) தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவனை, ஜகத் குரும்-ஜகத் குருவை, தேவம் க்ருஷ்ணம்-தேவனாகிய கிருஷ்ணனை, வந்தே-வணங்குகிறேன்.
பொருள் : வசுதேவருடைய மகன், கம்சனையும் சாணூரனையும் கொன்றவன், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவன், ஜகத்குரு, தேவன் ஆகிய கிருஷ்ணனை வணங்குகிறேன்.
6. பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா
ஸல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா
அஸ்வத்தாமவிகர்ணகோரமகரா துர்யோதநாவர்திநீ
ஸோத்தீர்ணா கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேஸவ:
பீஷ்ம த்ரோண தடா-பீஷ்மரும் துரோணரும் கரைகள், ஜயத்ரத ஜலா-ஜயத்ரதன் ஜலம், காந்தார நீல உத்பலா-காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம், சல்ய க்ராஹவதீ-சல்யன் என்பவன் சுறாமீன், க்ருபேண வஹனீ-கிருபன் என்பவன் பிரவாகம், கர்ணேன வேலா ஆகுலா-கர்ணன் பேரலைகள், அச்வத்தாம விகர்ண கோர மகரா-அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள், துர்யோதன ஆவர்தினீ-துர்யோதனன் நீர்ச் சுழல், ஸா-அந்த, ரண நதீ-ரண நதியானது, கலு-உண்மையாகவே, பாண்டவை-பாண்டவர்களால், உத்தீர்ணா-கடக்கப்பட்டது, கேசவ-கேசவன், கைவர்தக-படகோட்டி.
பொருள் : குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் இருந்த ரண நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜயத்ரதன் ஜலம்; காந்தார மன்னன் நீலோத்பலம் என்னும் புஷ்பம்; சல்யன் சுறாமீன்; கிருபன் என்பவன் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அச்வத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துர்யோதனன் நீர்ச்சுழல், கிருஷ்ணனைப் படகோட்டியாகக் கொண்டு அது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.
7. பாராஸர்யவச: ஸரோஜமமலம் கீதார்தகந்தோத்கடம்
நாநாக்யாநககேஸரம் ஹரிகதாஸம்போதநாபோதிதம்
லோகே ஸஜ்ஜநஷட்பதைரஹரஹ: பேபீயமாநம் முதா
பூயாத்பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்ஸிந: ஸ்ரேயஸே
பாராசர்ய வச ஸரோஜம்-பராசரர் புதல்வராகிய வியாசர் வாக்கு என்னும் நீரில் உதித்த, நா நா ஆக்யானக கேஸரம்-பல கதைகளை மகரந்தமாயுடைய, ஹரிகதா ஸம்போ தன ஆபோதிதம்-ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்தது, லோகே-உலகத்தில், ஸத்ஜன ஷட்பதை-ஸத் ஜனம் என்னும் தேன் வண்டுகளால், அஹ அஹ-நாள்தோறும், முதா-ஆனந்தமாக, பேபீயமானம்-அருந்தப் பெற்றது, கலிமல ப்ரத்வம்ஸின-கலியின் தோஷத்தை நீக்க விரும்புபவனுக்கு, கீதா அர்த்த கந்த உத்கடம்-கீதையின் மூலம் சுகந்தத்தையுடைய, அமலம்-குற்றமற்ற, பாரத பங்கஜம்- மகாபாரதம் என்னும் தாமரைப்பூ, ச்ரேயஸே-நலத்தின் பொருட்டு, பூயாத்-இருக்கட்டும்.
பொருள் : பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, ஹரிகதா பிரசங்கத்தால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் என்னும் தேன் வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக அருந்தப்பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தையுடைய, குற்றமற்ற மகாபாரதம் என்னும் தாமரைப் பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.
8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்
யத்க்ருபா-யாருடைய கிருபையானது, மூகம்-ஊமையை, வாசாலம்-பேசவல்லவனாய், கரோதி-செய்கிறது, பங்கும்-முடவனை, கிரிம் லங்கயதே-மலையைத் தாண்டச் செய்கிறது, தம்-அந்த, பரமானந்தமாதவம்-பரமானந்த மாதவனை, அஹம்-நான், வந்தே-வணங்குகிறேன்.
பொருள் : யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.
9. யம் ப்ரஹ்மா வருணேந்த்ரருத்ரமருத: ஸ்துந்வந்தி திவ்யை: ஸ்தவை:
வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷதைர்காயந்தி யம் ஸாமகா:
த்யாநாவஸ்திததத் கதேந மநஸா பஸ்யந்தி யம் யோகிநோ
யஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா தேவாய தஸ்மை நம:
ப்ரஹ்மா வருண இந்த்ர ருத்ர மருத-பிரம்மா வருணன் இந்திரன் ருத்திரன் மருத் தேவதைகள், யம்-யாரை, திவ்யை ஸ்தவை-திவ்யமான ஸ்துதிகளால், ஸ்துன்வந்தி-ஸ்துதிக்கிறார்கள், ஸாமகா-சாமகானம் செய்கின்றவர்கள், யம்-யாரை, ஸ அங்க பதக்ரம உபநிஷதை-அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய, வேதை-வேதங்களால், காயந்தி-பாடுகிறார்கள், யோகின-யோகிகள், யம்-யாரை, த்யான அவஸ்தித தத்கதேன மனஸா-தியான முதிர்ச்சியால் மனதை அவன்பால் வைத்து, பச்யந்தி-பார்க்கிறார்கள், ஸுர அஸுர கணா-சுர அசுரக் கூட்டங்கள், யஸ்ய-யாருடைய, அந்தம்-முடிவை, நவிது-அறிகிறார்களில்லை, தஸ்மை தேவாய-அந்த தேவனுக்கு, நம-நமஸ்காரம்.
பொருள் : பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத்தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ, அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.
அருள் மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோவில்
மூலவர்:அபிமுகேஸ்வரர்
அம்மன்:அமிர்தவள்ளி
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.
சிறப்பு:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.போன்:+91 435-2420187
பொது தகவல்:இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை நீக்கும் சக்தி உண்டு. இக்கோயிலில் நெல்லிக்காய் படைத்து தானம் செய்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம்.
பிரார்த்தனை:சனி தோஷம் மற்றம் பிற தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:சனி கிழமைகளில் இங்கு நெய் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:கும்பகோணம் மகாமகத்தின் போது குளக்கரையில் காட்சி தரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர்.
சிறப்பம்சம்: இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார்.. சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
தல வரலாறு:முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார் , சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.
இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.
அருள் மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில்
அருள் மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில்
மூலவர்:காசி விஸ்வநாதர்
அம்மன்:விசாலாட்சி
தல விருட்சம்:வேப்பமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்: கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.
தல சிறப்பு:வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.
பொது தகவல்:சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள் பைரவர், சூரியன் சந்திரன் , ஜேஷ்டாதேவி லிங்கோத்பவர் ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சிளிக்கின்றனர்.
பிரார்த்தனை:பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:சில பெண்கள்வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும் சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும் . இப்படி பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
நவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.
இத்தலத்தில் உள்ள க்ஷத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும் .ஒரு வேப்ப மரத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார் அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.
தல வரலாறு:அயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார் ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றார் எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
நவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா சரஸ்வதி காவேரி கொதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர் மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனிதநீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகா மக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கும் அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.