திங்கள், 18 ஜனவரி, 2021

அருள் மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோவில்
 
மூலவர்:அபிமுகேஸ்வரர்
அம்மன்:அமிர்தவள்ளி
தல விருட்சம்:நெல்லிமரம்
தீர்த்தம்:மகாமக குளம்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு  
 
திருவிழா:மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.
 

சிறப்பு:இந்த கோயிலில்தான் மிக உயரமான பைரவர் சிலைஉள்ளது. நவக்கிரக சன்னதியில் இதுமிகவும் வித்தியாசமானது. எட்டு கிரகங்கள் ஒரே உயரத்தில் இருக்க சனி கிரகம் மட்டும் உயரம் கூடுதாக இருக்கிறது.
 
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
 
முகவரி:அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.போன்:+91 435-2420187
 
பொது தகவல்:இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை நீக்கும் சக்தி உண்டு. இக்கோயிலில் நெல்லிக்காய் படைத்து தானம் செய்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம்.
 
பிரார்த்தனை:சனி தோஷம் மற்றம் பிற தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்:சனி கிழமைகளில் இங்கு நெய் தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
 
தலபெருமை:கும்பகோணம் மகாமகத்தின் போது குளக்கரையில் காட்சி தரும் 12 தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர்.
 
சிறப்பம்சம்: இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார்.. சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
 
தல வரலாறு:முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார் , சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார்.
 
இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: