JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 22 அக்டோபர், 2020
ஜோதிடம் எப்படி?
சில சமயம் நாம் கடந்து போக நினைத்தாலும் முடிவதில்லை... இந்த உலக ஜோதிடம் சொல்லறேன்னு பேஸ்புக்கில் பதிவு போடறவங்கள நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது...
சமீபத்தில் ஒரு பதிவு பார்த்தேன். சில ஜோதிடர்கள் சொன்ன பதிவு
உலகில் அங்காங்கே நிலநடுக்கம் வரும். ஆயுத சண்டை நடைபெற வாய்ப்பு உள்ளது. தீ விபத்தும், மழையும் ஆங்காங்கே பெய்யும்.
இப்படி போட்டுட்டு... ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தத போட்டு... நான் சொன்னது நடந்துதான்னு கமெண்ட் போட அதுக்கு ஒரு 50-60 லைக் வேற 🤩🤩🤩 ஏப்பா ! ஆப்கானிஸ்தான்ல என்னைக்கு சண்டை நடைபெறாம இருந்தது...
உட்டா ! ஊட்டியில் குளிர் அடிக்கும், சிரபுஞ்சியில் மழை பெய்யும், சகாரா பாலைவனம் வரண்டு காணப்படும், அண்டார்டிக்காவில் பனி பொழிவு உண்டு, ஜப்பானில் நிலநடுக்கம் வரும் என்று பதிவு போடுவீங்க போல!!!.... இதுல பெருமை வேற.... இதெல்லாம் எப்போதும் நட்க்கறது தானே பா!.... மிடிலடாப்பா உங்க ஒலக ஆர்வம்...
மொதலில் உலக ஜோதிடம் அப்படிங்கற mundane astrologyக்கு என்னென்ன விஷ்யம் தெரியனுமுன்னு தெரியுமா?..
மொதலில் உலக அறிவு வேணும்.. அதாவது உலகத்தை பற்றிய அறிவு. உலகத்தில் சேதன அசேதன பொருட்கள் என்ன? அதுக்கு ஆதாரம் என்ன? உலக இயக்கத்துக்கு ஆதரமான சூரிய சந்திர நிலை என்ன? இப்படி geographical knowledge வேணும்... முதலில் முக்குண சேர்க்கை என்னென்னான்னு கண்டு பிடிக்க தெரியனும்....
உதாரணமாக மஹாத்மா பராசரர் இந்த ஜோதிடத்துக்கு 7 மலை, 40 முக்கிய ஆறுகள், 4 கடல், 6000 குட்டி நதிகள் (கடலில் கலப்பவை மட்டும்), 99 நாடுகள், 80 தீவுகள், 8 பாலைவனம்....etc என்ற reference கணக்கு சொல்லறார். இதை வெச்சி தான் நாட்டின் நிலவரத்தை தன் நூல்களில் பதிவு செய்யறார்... இதெல்லாம் என்னென்னனச்சும் யாராவதுக்கு தெரியுமா? இதை கூர்ம விபாகம்ன்னு சொல்லி படிக்கனும்.........
கூகுல் மட்டும் இல்லைன்னா நம்ம பொழப்பு தம்படிக்கு பிரயோஜனம் இல்லை... இது போக சூரிய சந்திர நகர்வு, ருது, கிரகண கணக்கு முக்கியம். உதாரணமாக கடைசி சூரிய கிரகணம் மிருகசீரிட நட்சத்திரத்தில் வந்தது... அதற்கான பலன், பசு, ஆடு போன்ற கால் நடைகளில் மாற்றமும், பாதிப்பும் நல்லவர்களுக்கு தீமையும் சில எதிர்பாராத மரணமும் நிகழும்ன்னு சொல்லுவாங்க.... இந்த 2020 ல் எத்தனை பிரபலங்கள் மேல் லோகத்துக்கு போனாங்கன்னு கணக்கு போட்டுக்கோங்க?
அப்போது சனி இருந்த நட்சத்திரம் uttra ashada நட்சத்திரம். அதனால் யவனர் பாதிக்கபடுவாங்கன்னு சொல்லுவாங்க.. யவனர்கள் அப்படின்னு இப்ப இருக்கற roman emperors சுத்தி இருக்கும் நாட்டை சொல்லலாம்... Covid ல இத்தாலி பாதிக்கப்பட்ட நெலவரம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.... அதுமட்டும் இல்லாமல் , கிரகணம் நிகழ்ந்தது ஹேமந்தருது காலம். அந்த காலத்தில் எப்போதும் சூரியன் சிவந்த நிலையில் தன்னுடைய ரச்மையை வைத்திருப்ப்பார். அப்போது தான் மனிதர்கள் நன்மையடைவார்கள். உதாரணமாக அப்போது சாம்பல் கலரில் இருந்தால் மழை இருக்கும் ஆனால் மனிதர்கள் திருடர்களால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லலாம்.
மேலும் வர்ஷ ருது காலத்தில் சூரியன் வெளிர் கலர்ல இல்லாமல் peacock plume colour ல இருந்தா 12 வருடம் மழை தட்டுபாடு உண்டு...
இப்ப நடக்கறது சரத் ருது காலம் இதில் சூரியனின் ரச்மை தாமரை நுனி இதழ் கலரில் இருக்கனும்.... உலக ஜோதிடம் சொல்லற ஜோதிடப்புலிகளில் ஒருத்தராவது சூரியனை காலையில் முத்திரை போட்டு பார்க்கற வழக்கம் இருக்கான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்??? ஏன்னா உலக ஆதாரமான சூரிய பகவானையே பார்க்கற வழக்கம் இல்லைன்னா உலக ஜோதிடம் எப்படி வரும் என்று தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு???....
இதே போல சந்திர கிரகண காலத்தில் சந்திரனின் இரு கொம்புகளில் வலது பக்கம் ஏறி இருந்தா ஒரு பலனும் இடது பக்கம் ஏறி இருந்தா ஒரு பலனும் உலகத்திற்க்கு இருக்கும்ன்னு தெரியுமா???
இதில்... ராகு, கேது வெச்சு தான் பல பேர் வாழ்க்கையே ஓடுது... 😁😁😁 நான் பல வருசம் முன்னாடி கேதுன்னா என்னான்னு ஜோசியர் கிட்ட கேட்டா சாயா கிரகம்ன்னு சொல்லிட்டு ஓடிட்டார்!!! ஆன அவிக சாயா கிரகம் மட்டும் இல்லைன்னு சொல்லி விளக்கம் கொடுத்தா விழி பிதிங்கி நிக்கறாங்க.... என்னாத்த சொல்ல?...
உதாரணமாக, கேதுங்கறத மூன்று விதமா பெரியவங்க சொல்லு வாங்க celestial, terrestrial, etheriat பிரிப்பாங்க... மேலும் ராகு, கேதுக்களை சாயாகிரகமாக மட்டுமில்லாமல் வால்மீன், விண்கல், falling stars, lunar spots, ஒளிரும் பொருளாகவும் கன்சிடர் பண்ணனும்... ஏன்னா அசிதர், தோவலர், கர்கர் போன்ற ரிஷிகள் கிட்டத்தட்ட 100 - 1000 variants கேது இருக்கறதாவும் சொல்லுவாங்க.... ஆனா மஹரிஷி நாரதர் சொல்லும் போது ஒரே கேது தான் ஆனா பல shape ல various time ல தெரியும் என்று பதிவு பண்ணினார்.
உதாரணமாக வாசகேதுன்னு ஒன்னு இருக்கு... அதன் தலை வடக்கு பக்கமாக நீண்டு பெரிதாக மேற்கு பக்கத்தில் தெரியும். மேலும், ருத்திர கேது, ஸ்வேத கேது, பவ கேது, சம்வஸ்திர கேது, ஜல கேது, பத்ம கேது, ரஸ்மி கேது, மணி கேது, ஹஸ்தி கேது, கபால கேது இப்படி நிறைய இருக்கு... கனக கேதுன்னு ஒன்னு இருக்கு எட்டு வால் மீன் கூட்டத்தில் நீள்வட்டமா தெரியும்ன்னு பராசரர் பதிவு செய்கிறார்கள். இதே கனக கேது முக்கோண வடிவில் மறுபக்கம் தெரியும்ன்னு கர்கர் பதிவு செய்யறார்... இன்னொரு கேதுவை கங்ககேதுன்னு சொல்வாங்க... அது உத்திரபல்குனி நட்சத்திரத்தில் தன்னுடைய வால் பகுதியை சம்பந்தபடுத்தும் போது சோழ, அவங்க, சீன ரஜ்ஜியத்தில் மழையும் பயிர் சேதமும் இருக்கும்ன்னு கருத்தை சொல்கிறார்...
இதெல்லாம் லட்சத்தில் சில துளிகளே...
ஆனா இம்புட்டு விஷயமும் யாராவது யோசிச்சி உலகஜாதக பலனை சொல்லறாங்களானுதான் என் கேள்வி?...
சும்மா IPL prediction, celebrity prediction சொல்லி சொல்லி ஜோதிடத்தை எதுக்கு சொல்லனுமுன்னு இல்லாமல் போச்சு...
உண்மையான ஜோதிடர்கள் பலபேர் கணிக்கிறார்கள். அவர்களுக்கு சிரம் தாழ்ந்து வணக்கம் செய்கிறேன். அதே சமயம் மேலே சொன்னது 1st paragraph ல சொன்னது மாதிரி பதிவு போடறவங்களை கண்டாத்தான் கடுப்பாகுது மக்களே.....
இதெல்லாம் சொல்லறதுனால எனக்கு உலக ஜோதிடம் தெரியும்ன்னு சொல்லவரலை... ஆனா சொல்லறவங்க முடிஞ்சவரை உண்மைய சொல்லுங்கன்னு சொல்லறேன்.... இந்த இன்ஸ்டண்ட் ஜோசியர்களை கண்டா இம்சை அரசன் படத்தில் வடிவேல் சொல்லற டயலாக்தான் ஞாபகம் வருது....
4 ஆன் லைன் கிளாஸும், 3 ரெபரென்ஸ் புக்கும் படிக்க வேண்டியது. Facebook ல் 150 லைக் வாங்க வேண்டியது, 3 வாட்ஸ் அப் குரூப்புக்கு அட்மினா இருக்க வேண்டியது. கேட்டால் astrologer என பீற்றி கொள்வது... போதாகுறைக்கு ஜோதிட வள்ளல், கலாநதி, உதயநிதி, பூஷணம், ரத்னா, காலகணிதன், கணக்கு சூறாவளி என பட்டம் வேறு"
பராசரர், நாரதர், கர்கர் போன்ற ரிஷிகளே பேருக்கு முன்னாடி எங்கப்பா பட்டம் போட்டுட்டு சுத்துனாங்க... இவிங்க கூட copyright கேட்டதில்லைப்பா!!!! ஆனா கொடுமை என்னான்னா.... இதெல்லாம் தெரிஞ்சிக்க கூட யாரும் விரும்பற்தில்லைங்கறது தான்... சில சமயம் ரிஷிகளையே மிஞ்சினவிங்களா நினைச்சுக்கறது தான்.
முடிலடாப்பா முடியல....
கோவில் எதற்கு என்று கேட்கும் அறிவு ஜிவிகளுக்கு இந்த பதிவு
கோவில் எதற்கு என்று கேட்கும் அறிவு ஜிவிகளுக்கு இந்த பதிவு
பெங்களுர் அருகே *ஹாசன்* என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த ஸ்வாமியின் பெயர் *ஹாசன அம்மாள்* என்று அழைக்கப்படுகிறது. மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். ஸ்வாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அனையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. அது மட்டுமா? இன்னும் நிறைய அதிசயங்கள் இருக்கிறது. பூக்கள் வாடாமல் அப்படியே இருக்கும். முதலில் சொன்னது போல் ஸ்வாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே ஸ்வாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் எப்படி சுட சுட கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. அவ்வளவு தானா என்றால் இல்லை. மேலும் ஒரு அதிசயம் நடை பெருகிறது. ஸ்வாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஆமாம் அதிசயம் தான் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெரும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று ஸ்வாமிகள் {கற்கள்} மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்பவர்களே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு சொல்லுங்கள் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று.
*~```*இவன் பா. ஹரிஹரன்*```~*
புதன், 21 அக்டோபர், 2020
சஷ்டியப்தபூர்த்தி
அறுபது வயதில் என்ன விசேஷம்?
ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.
“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”
என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.
இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.
ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.
ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).
முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.
ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||
இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.
எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:
சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.
சாஸ்த்ரக் கணக்கு:
விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.
“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”
ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.
“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||
மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).
விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.
துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.
(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)
சதாபிஷேகச் சிறப்பு:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.
தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.
பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.
இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.
சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:
1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.
கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:
81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.
சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||
ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||
சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||
நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்
இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
திங்கள், 19 அக்டோபர், 2020
கும்பாபிஷேகத்தின் சிறப்பு
*கும்பாபிஷேகத்தின் வகைகள்..!*
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே
கும்பாபிஷேகத்தின் வகைகள்..
1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3, புனராவர்த்தம் –
கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.
கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.
1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.
4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}
8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}
9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான
வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும்எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.
15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.
19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தல்.
21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.
மற்றும் சில.
ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.
யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.
ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி...
*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*
*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*
திங்கள், 12 அக்டோபர், 2020
துவாரபாலகர்
துவாரபாலகர்
துவார என்பது "வாயில்" என்றும், பால என்பது "காப்போன்" என்றும் பொருள்படும்.
துவாரபாலகர்
மூலவருக்கு முன்பு இருபுறமும் காணப்படும் வாயிற்காவலர்கள் ஆவர்.
முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர்.
அவை:
1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல். ...
2. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.
3. சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.
4. சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல்.
இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.
துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனதை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர்.
சிவாலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் .
சண்டி - முண்டி,
சண்டன் - பிரசண்டன்,
திரிசூலநாதர் - மழுவுடையார்,
நந்தி- மகாகாளர்
உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்
ஆகியோர் இணை துவாரபாலகர்கள் ஆவர்.
திண்டி தனியான துவாரபாலகர்.
மகா விஷ்ணுவின் ஆலயங்களில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்கள்
ஜயன், விஜயன்.
அம்மன் கோயிலின் வாயிலில் காக்கும் துவார பாலகிகள்
ஹரபத்ரா, சுபத்ரா
ஜெயந்தி வைஜெயந்தி ஆவர்
மகாலெட்சுமிக்கு துவார பாலகிகள்
ஜெயா,விஜயா
முருகனின் துவாரபாலகர்கள்
சுமூகர், சுதேகர்
கோயிலின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்களின் சிலை கீழ் கண்ட விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.
ஒன்று, சங்கு, சக்கர, கதாயுதத்துடன் ஆயுத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.
இன்னொன்று, நிராயுதபாணியாக, தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவார பாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.
இன்னொரு பாலகர், தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனைத் தவிர வேறெதுவுமில்லை என்பதே இதன் தத்துவம்.
கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.
சண்டி - முண்டி,
தாரகாட்சன், கமலாட்சன்,
வித்யுன்மாலி
அரக்கர்கள் வசித்த முப்புரங்களை சிவபெருமான் தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார்.
அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது
அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.
சண்டன் - பிரசண்டன்,
இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்
இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்
திரிசூலநாதர் - மழுவுடையார்,
திரிசூலநாதர் சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது.
மழுவுடையார் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார்.
இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவேப் போன்ற புடைப்பு உள்ளது.
நந்தி- மகாகாளர்
நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள்.
உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்
துவாரபாலகர்களுக்கு உரிய கதையுடனும், பின்னிரு கைகளில் ஆயுதங்களையும் தாங்கியபடி உள்ளார்கள்.
திருவையாறு தெற்கு வீதியில்
கோவிலின் நுழைவு வாயிலில் இருக்கின்றனர்.
இவர்களில் ஆட்கொண்டார்
யம பயம் நீக்குபவர்...
இவருக்கு முன்பாக நந்தி விளங்குகின்றது..
இந்த ஆட்கொண்டார் முன்பு
குங்கிலியக் கலயர் அமைத்த குண்டம் இன்றும் இருக்கிறது.
1300 ஆண்டுகளுக்கு மேலாக - திருநாவுக்கரசர் காலத்திலிருந்து புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தில் குங்கிலியம் இட்டு கோவிலுக்குள் செல்வது மரபு ஆகும்.
குண்டத்தில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும்.
பக்தர்கள் அருகில் உள்ள கடையில் குங்கிலியம் பொட்டலம் வாங்கி
இங்குள்ள குண்டத்தில்
அர்ப்பணிக்கிறார்கள்..
இதனால் விஷ ஜந்து கடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்
குங்குலியத்தின் பயன்கள்
வெள்ளை குங்கிலியம் தூபம்:
வீட்டில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் துஷ்ட ஆவிகள் வீட்டில் இருந்து விலக வெள்ளை குங்கிலியம் தூபம் சிறந்ததாகும்.
இதனால் அந்த ஆவிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்..
கண்திருஷ்டியை அழிக்கும்.
வெண் குங்கிலியம், வேப்பிலை கலந்த புகை போடுதல் ஆரோக்கியத்தை உருவாக்கும். இதனை தொடர்ந்து கடைபிடித்தால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசும் நம்மை அண்டாது,
ஆட்கொண்டாரின் சிறப்பு
கௌதமி நதி பாயும் நாட்டிலிருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் யாத்திரை மேற்கொண்டான்.
அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி ""இன்றைக்கு ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்'' என்றார்.
அதுகேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர
முதலியன
ஜபம் செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார்.
யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார்.
அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர்.
பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, யமனிடமும் சிறுவனை எம பயம் நெருங்காதிருக்குமாறு பணித்து மறைந்தார்.
இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும்.
கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும் இரவு எம வாகனத்தில் ஆட்கொண்டார் உற்ஸவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
திண்டி
தமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது.
ஜெயன் & விஜயன்
வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.
மகாதேவ் திரு கோவில்
முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!
சிவனின் வாகனமான நந்தி பொதுவாக சிவன் கோயிலில் சிவனுக்கு முன் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அவர் காளை ரூபத்தில் இருப்பதைத் தான் பார்த்திருப்போம். படங்களில் வேண்டுமானால் நாம் மனித உடல் அமைப்பும், தலை மட்டும் காளை போன்ற உருவத்தில் இருக்கும் நந்தியை பார்த்திருப்போம்.
சில சிவ தலங்களில், நந்தி அதே போன்று நின்ற வடிவத்தில், கும்பிடுவது போன்ற அமைப்பையும் பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா பாடேஸ்வர மகாதேவ் திருக்கோயிலில் வித்தியாசமான நந்தி சிலை அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
பாடேஸ்வர் மகாதேவ் கோயில்:
மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்தில் உள்ள பாடேஸ்கிராமத்தில் அருள் மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு பல குகைகளுடன் உள்ள பெரிய வளாகம் உள்ளது. இதில் 8 பெரிய குகைகளும், பல சிறிய அளவிலான குகைகளும் உள்ளன. 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிற்ப வேலைப்பாடு;
நம் தமிழ்நாட்டிலேயே பல சிவ தலங்களில் 1000க்கும் அதிகமான நந்தி சிலைகளுடன் கூடிய கோயில்கள் உள்ளன. அந்த வகையில் 1000 சிவ லிங்கங்களை கொண்ட ஒரு அற்புத தலமாக இந்த பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் விளங்குகின்றது.
இந்த கோயிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்
*அதியசய நந்தி:*
இங்குள்ள ஒரு சிறிய குகையில் அமைந்துள்ள நந்தி முன் புறம் பார்க்க மனித வடிவில் யோக நிலையில் அமைர்ந்திருப்பது போன்றும், அதன் பின்புறம் பார்த்தால், நாம் சாதாரணமாக சிவ தலங்களில் பார்க்கக்கூடிய நந்தி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையும் கொடுக்கும் அளவிற்கு வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
பக்கவாட்டில் பார்த்தால் நந்தியின் முன்னங்கால், மனித முன்னங்கால் இரண்டும் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நந்தி சிலையின் சிறப்பம்சங்கள்:
இந்த நந்தி சிலை 7 கரங்களுடன் காணப்படுகின்றது. வலது பககத்தில் நான்கு கைகளும், இடது பக்கத்தில் மூன்று கைகளுடன் காணப்படுகின்றது.
வலது மேல் கையில் மழுவும், நடு கையில் அம்பு, கீழே உள்ள அருள்வது போலவும், நடுவில் மற்றொரு கை சிவ லிங்கத்தை தன் கையில் வை
திருப்பனந்தாள் சிவன்கோயில்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் சிவன்கோயில்
கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.
கொள்ளிடம் , மண்ணியாறு நதிக்கரையோரம் உள்ள தலம் திருப்பனந்தாள்..கும்பகோணம்- சென்னை சாலையில் கும்பகோணத்தில் இருந்து ௨௦கிமி தூரத்தில் உள்ளது.
திருக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது தேரோடும் பெரு வீதிகள் நான்கும் அமைந்துள்ளன. நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. மேலவீதி ‘இராசகம்பீரன் திருவீதி’ எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
,
மேற்கு நோக்கிய இறைவன் மேற்கில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. இறைவனுக்கு வலது புறம் இறைவி கிழக்கு நோக்கியுள்ளார்
ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் இறைவன் அருள் கிடைப்பது நிச்சயம்.
இறைவன்- அருணஜடேசுவர சுவாமி (தாலவனேஸ்வரர், செஞ்சடையப்பர், ஜடாதரர்).
இறைவி- பெரிய நாயகி.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்.
தலவிருட்சம் : பனை.
இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர். இத்தலத்தில் தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது மேலாடை நெகிழ அதனை இருமுழங்கைகளாலும் பற்றிக் கொண்டு மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார்
சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.
தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். மனதுடைந்துபோனான்.
யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. மன்னன். துவண்டு திரும்பினான்.
தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகார பலத்திற்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது.
இதே காலத்தில் குங்கிலியக்கலயநாயனார் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார்.
திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்து குங்கிலியத் புகையினை இட்டு தொண்டு செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு இணங்கும் அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.
நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு சரமாலையை சிவனுக்கு அணிவித்தார். எதிர்ப்புறத்தில் நின்று மறுமுனையை தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.
நிமிராவிட்டால் கயிறு இறுகி குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். அவருடைய அன்பு சிவனை அசைய வைத்தது. அடியவருக்காக மெல்ல நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் கூடி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு கண்டபோதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
- என்பது பெரிய புராணம்.
அன்புக்காக எதையும் செய்வார் சிவன் அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.
இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது.
. முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்றப் போட்டி எழுந்தது. அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார். ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை.
மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார். பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார். பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.
அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது. பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.
சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.
. இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும். இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தல மரமாக பனை உள்ளது. பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன.
இக்கோயிலுக்கு நன்செய் புன்செய் என ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
இத்திருக்கோயிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது
சிவபெருமானை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. அதில் திருப்பனந்தாளும் ஒன்று
திருப்பனந்தாளில் காசி மடம் அமைத்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு பகுதியில் இம்மடம் உள்ளது. பல சிறப்புகள் கொண்டகாசி அதிபரையும் தரிசித்து செல்லலாம்.
மஹா பெரியவா
மஹா பெரியவாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பல. இன்றைய இளைஞர்கள் ,
பெரியவர், வயதில் முதிர்ந்தவர்களுடன் பேசும் விதம்,
அவரது பாவனை நம்மை சிந்திக்க வைக்கும்.
அந்த பாவனை எல்லோரிடமும் இருந்தால், முதியோர் இல்லத்திற்கு தேவையே இருந்து இருக்காது.
ஒரு சமயம், சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரி , பெரியவா அவர்களை பார்க்க வந்திருந்தார்கள்.
அந்த அரசாங்க அதிகாரி திரு.நரசிம்ஹ ராவ் அவர்கள் கீழ் பணி புரிந்து நாட்டிற்கு நல்ல சேவை செய்தவர்.
அவர் உடல் நலக் குறைவின் காரணமாக, (wheel chair)சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெரியவா அவர்களை தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவா பூஜை முடிக்கும் வரை காத்துக் கொண்டு இருந்தார்கள்.
பெரியவா அவர்களைப் பார்த்தவுடன், அரசாங்க அதிகாரி இருக்கும் wheel chair (சக்கர நாற்காலி)யை நோக்கி நடந்து சென்றார்.
அவரின் வெகு அருகாமையில் சென்று நின்று கொண்டார். அதிகாரி எழுந்து மரியாதை செய்ய முயன்றார்.
பெரியவா அவர்களை அமர்ந்து கொள்ளும் படி கூறினார்.
அந்த அதிகாரி நாட்டிற்காக நீண்ட காலம் ஆற்றிய தொண்டையும், கல்வித்துறையில் அவரின் சேவையை பட்டியல் செய்து பாராட்டினார்.
சுமார் முப்பது நிமிடங்கள் அவர் அருகில் பெரியவா நின்று கொண்டே பேசிக் கொண்டு இருந்தார்.
பெரியவா, வயதில் முதிர்ந்த மூத்தவருக்கு கொடுத்த மரியாதை அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறன்.
பெரியவா அவர்களின் நிதானமான பேச்சு,
சிரித்த முகம்,
அனைவருடன் பேசிப் பழகும் குணம்,
யாரையும் குறை சொல்லாத ஸ்வபாவம்,
மற்றவர்களுக்காக தன் நேரத்தை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு அனுக்ரகம் செய்தல் போன்றவை நாம் கற்றுக் கொள்ளவேண்டியது.
நமஸ்கார ஸ்லோகம்
நமஸ்கார ஸ்லோகங்கள்!
இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும் சொல்லலாம்.
1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.
2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.
3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
4. யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
இங்கே தூங்குவதைக் குறித்துக் கூடத் தேவியா என எண்ணினால் ஆம், தேவியே தான். அநேகமாய் நித்திராதேவி ஆக்கிரமித்துக் கொண்டாள் என பல எழுத்தாளர்களும் தூங்குவதைக் குறிப்பிட்டு எழுதுவதைக் கண்டிருக்கின்றோம் அல்லவா?? அந்த நித்திரையும் சாமானியமாய் மனிதருக்கு வந்து விடுகின்றதா என்ன??? எல்லாருமேவா நன்றாய்த் தூங்கி விழிக்கின்றார்கள்?? இல்லையே! பலருக்குத் தூக்கமே வருவதில்லை அல்லவா?? அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக உறையும் தேவியை தினமும் இரவில் நினைத்து நமஸ்கரித்து அனைத்தையும் அவள் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்துப் படுத்தால் தேவி தூக்க வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
5. யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம!
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும், ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா?? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருக்க வேண்டும் அல்லவா? பஞ்ச பட்ச பரமான்னமாகவே இருந்தாலும் பசி இல்லை எனில் சாப்பிட மாட்டோம். இந்த உலகில் எதுவும் போதும் என்றே நாம் சொல்ல மாட்டோம். உடையா, இன்னும் வேண்டும். ஒரு நேரத்துக்கு நாம் உடுத்துவது என்னமோ ஒரு உடைதான். நகையா இன்னும் வேண்டும், வீடா, இன்னும் பெரியதாய், பணம், காசா, எத்தனை இருந்தாலும் போதலை. ஆனால் ஒருவரைக் கூப்பிட்டு சாப்பாடு மட்டும் போட்டுவிட்டால் அவர் இன்னும் வேண்டும் என்று சொல்ல மாட்டார். வயிறு நிறைந்துவிட்டது போதும் என்றே சொல்லுவார். ஆகவே போதும் என மனிதரைச் சொல்ல வைக்கும் அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி இருத்தலே நல்லது. அந்தப் பசி வடிவான தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
6. யா தேவி ஸர்வ பூதேஷூ ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
7. யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
8. யா தேவி ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை, அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசை மட்டுமே. ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளாகவே இங்கே வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
9. யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
10. யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 29
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 29
திருக்கைத்தல சேவையுடன் பெரிய பெருமாள், இராமானுஜரை எதிர்கொள்வதும், இராமானுஜர் பெரியபெருமாளைக் கண்டு தரிசிக்கும் நிகழ்வையும் இன்று அறியலாம்.
வாழி எதிராஜன்!..
வாழி எம்பெருமானார்!..
சொல்லுவோம் அவன் நாமங்களே..
திருக்கைத்தல சேவை
ஸ்ரீமந்நாராயணனான நம்பெருமாள் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்தருளுவது போல திருக்கைத்தல சேவையில் எழுந்தருளி புறப்பட்டு இராமானுஜர் எதிரே வந்தார். யாருக்கும், எந்த ஜென்மத்திலும் அவ்வளவு எளிதில் கிட்டாத பாக்கியம் இராமானுஜருக்குக் கிடைத்திருக்கிறது. இராமானுஜர் உள்ளே வருகிறார். இராமானுஜர் உள்ளே வரும் பொழுது மூன்று அர்ச்சகர்களை நம்பெருமாள் பெரிய பெருமாள் அழைத்தார்.
'எப்பொழுது இராமானுஜர் நம் இராஜ்யத்தினை ஏற்றுக்கொள்ள வந்தாரோ, நாம் அவரை முன்னின்று வரவேற்க வேண்டும்' என்று தான் திருக்கைத்தலத்திலிருந்து வெளியே புறப்பட்டருளினார்.
திருக்கைத்தல சேவை என்பது மூன்று அர்ச்சகர்கள் உற்சவர் அழகியமணவாளனை கைகளால் தாங்குவதாகும். ஒருவர் தன் மார்பில் பிடித்துக்கொள்ள, வலதுபக்கம் ஒருவரும், இடதுபக்கம் ஒருவருமாக பெருமாளைத் தாங்குவார்கள்.
தோளுக்கிணியானும் கிடையாது. பல்லக்கும் கிடையாது. இன்றும் திருக்கைத்தல சேவை சில நாட்கள் நாம் சேவிக்கலாம். வைகுண்ட ஏகாதசி அன்று இராப்பத்து கடைசி நாள் சேவையில் நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும் பொழுது திருக்கைத்தல சேவை நடைபெறும். இங்கே தேவ தேவனான எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வருவதை நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. இராமானுஜருக்காக எம்பெருமான் பல்லக்கு முதலியவற்றைத் துறந்து, தானே எதிர்கொள்ள வந்தார்.
இப்போது நடக்கும் நிகழ்வினால் தான் இராமானுஜர் உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சாரியானாகி, ஜகத்திலுள்ள அத்துனை பேருக்கும் மோட்சம் கொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
🌺🌹 தரிசனம்
எத்தனையோ ஆச்சாரியார்கள் இருந்திருக்கலாம். ஆனால், யாரும் மோட்சம் கொடுக்கப் போவதில்லை. இப்பொழுது அப்பேர்பட்ட பாக்கியம் நடக்கப்போகிறது.
பெரிய பெருமாளை இராமானுஜர் தரிசிக்க, திருப்பாணாழ்வாருக்கு எப்படி தன் திவ்வியத் திருமேனியைக் காட்டினாரோ பெரிய பெருமாள், அதேபோல் இராமானுஜருக்கும் காட்டினார். இராமானுஜரும் பாதகமலங்கள் முதல், எம்பெருமானின் ஆடை, நான்முகன், பகவானின் திருமார்பில் அமர்ந்திருக்கக்கூடிய பிராட்டியாரைச் சேவித்தார், கழுத்தினைச் சேவித்தார், உலகத்திற்கே சர்வ ஸ்லோகங்களை அளித்த திருவாயினைச் சேவித்துக் கொண்டார். தன் ஈரப்பார்வையால் உலகத்தையே இரட்சிக்கக்கூடிய திருக்கண்களைச் சேவித்துக் கொண்டார், பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சேவித்துக் கொண்டார்.
இராமானுஜர் பெரிய பெருமாளைச் சேவிக்கவும், பெரிய பெருமாளுக்கும் ஆசை ஏற்பட்டு சடகோப பிரசாத மரியாதை எல்லாவற்றையும் இராமானுருஜக்குக் கொடுத்தார். "இதோ நம் திருவடித் தாமரைகளை உமது தலைக்கு அணிய அணிவிக்கிறோம்" என்று ஸ்ரீசடகோப பிரசாத மரியாதையைக் கொடுத்து, மாலைப் பரிவட்டங்களையும் கொடுத்த பின்பு பெரிய பெருமாளான அரங்கநாதப் பெருமாள் சொல்கிறார்.
🌺🍁 அரங்கன் திருவாய் மலர்ந்தருளியது
"நமக்கு இரண்டு விபூதி சொத்தாக இருக்கிறது". அது என்ன என்றால், ஸ்ரீரங்கநாதன் எப்போ புறப்பாடு என்றாலும் அவருக்குப் பின் எப்பொழுதும் செங்கோல் இருக்கும். செங்கோல் என்றால் நீளமான தங்கக் கோல். அதைக் கையில் பிடித்துத்தான் சக்கரவர்த்தித் திருமகன் போலே, உலகம் அத்துணையும் பெருமாள் ஆள்கிறார். ஆண்டாள் நாச்சியார் கூட ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார். 'பூலோகம், விண்ணுலகம் அத்துணையும் ஆளும் எம்பெருமான் செங்கோலுடைய திருவளர்செல்வன் அரங்கன்'. செங்கோலானது சுவாமி புறப்பாட்டின் பொழுது உற்சவரிடம் இருக்கும். புறப்பாடு முடிந்ததும் உற்சவர் உள்ளே வந்துவிட்டால், செங்கோல் பெரிய பெருமாளுடைய மூலஸ்தானத்தில் வைத்து விடுவார்கள். மூலவர் அரங்கநாதப் பெருமாளின் கீழ் செங்கோலை வைத்து விடுவார்கள்.
அதனால்தான் அரங்கநாதப்பெருமாளை "ரங்கராஜா, ரங்கராஜா" என்று அழைக்கிறோம். இந்த செங்கோலுக்குப் பெயர்தான் 'உடைய விபூதி'. "'லீலா விபூதி'யும் 'உடைய விபூதி'யும் பெரிய பெருமாளுடையது. இப்பொழுது இந்த இரண்டையும் கொடுத்து உமக்கு ஒரு பெருமை சேர்க்கப் போகிறோம். இந்தாரும், பெற்றுக்கொள்ளும்" என்று இரண்டு விபூதியையும் எடுத்து இராமானுஜரின் கையில் கொடுத்து இனி, "உடைய விபூதியும், லீலா விபூதியும் உம்சொத்து. நீர் பார்த்து யாருக்கு மோட்சம் கொடுக்கின்றீரோ, அவருக்கு அவசியம் ஸ்ரீ வைகுண்டத்திலேயே இடத்தைக் கொடுத்து விடுவோம்".
"நீர் இரண்டு விபூதியையும் உடையவராய் இருப்பதனால் உமக்கு "உடையவர்" என்கிற பெயரைச் சூட்டினோம்!" என்று பெரிய பெருமாள் அறிவித்தார்.
1. இராமானுஜரின் முதல் பெயரான 'இளையாழ்வான்' பெரிய திருமலை நம்பிகள் சாற்றியது என்று பார்த்தோம்.
2. இரண்டாவது பெயரான 'இராமானுஜ முனி' தேவப்பெருமாள் சாற்றியது என்று பார்த்தோம்.
3. மூன்றாவதான "உடையவர்" என்னும் திருநாமம் பெரிய பெருமாளான அரங்கநாதப் பெருமாளே கொடுக்கிறார்.
நம் அத்துணை பேரையும் உடையவர் பெருமாளையே உடையவர். உடைய விபூதியையும் உடையவர். அவரை விரும்புவருக்கு தன்னையே உடையவராக ஆக்கக்கூடியவர் இராமானுஜர். இராமானுஜர் பெரிய பெருமாளிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டார்.
"இவை அத்தனையையும் இராமானுஜரான உமக்கு மட்டும் கொடுக்கவில்லை. உமக்கும், உம் உடையாருக்கும் கொடுத்தோம்" என்றார் பெரிய பெருமாள். நாம் யாரெல்லாம் இராமானுஜர் சம்பந்தம் பெற்றோம் என்று சொல்லிக் கொள்கிறோமோ, நம் அனைவருக்கும் மோட்ச சாம்பிராஜ்யத்தைக் கொடுப்பார் 'உடையவர்' இராமானுஜர்.
#திருவாழத் #திருவாழி
#சங்கம் வாழத்
#திருவனந்தன் #கருடன்
#சேனையர்கோன் வாழ
#அருள்மாறன் முதலா
#மாழ்வார்கள் வாழ
அளவில்குணத் #தெதிராசன்
#அடியார் வாழ
இருநாலு #திருவெழுத்தின்
ஏற்றம் வாழ
#ஏழுலகும் #நான்மறையும்
இனிது வாழப்
பெருவாழ்வு தந்தருள்
#நம்பெருமாள் எங்கள்
பெரியபெருமாள்
#அரங்கர் ஆடிர் #ஊசல்
#அஷ்டப்பிரபந்தம்
#பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 28
ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 28
இராமானுஜர் திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளின் திருக்கோவிலிலுள்ள பிரகாரங்களைத் தரிசிக்கும் நிகழ்வு பற்றி இன்றைய பதிவில் அறியலாம்.
வாழி எதிராஜன்!..
வாழி எம்பெருமானார்!..
சொல்லுவோம் அவன் நாமங்களே..
🌺🍁 திருவரங்கம் வருகை
இராமானுஜர் திருவரங்கம் நோக்கி காவிரியாற்றின் அருகில் வந்து கொண்டிருக்கிறார். அவர் வரும் செய்தி திருவரங்கத்தில் இருக்கும் பெரிய நம்பிகள் மற்றும் பல அடியார்களுக்கு தெரியவருகிறது.
அவர்கள் அனைவரும் பெரிய பெருமாளின் மூலஸ்தானத்திற்குள் போனார்கள். பெரிய பெருமாளிடம் அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள். "ஆளவந்தாரின் எண்ணம் ஈடேறப்போகிறது. இராமானுஜர் திருவரங்கத்திற்கு வருகிறார். ஊருக்காக, ஸ்ரீ வைஷ்ணவத்திற்காக ஜகத் ஆச்சாரியனைப் பெறப் போகிறோம்" என்று ஆசையோடு பெரிய பெருமாளிடம் விண்ணப்பம் வைத்தார்கள்.
உடனே, பெரிய பெருமாள் தன் திருக்கண் மலர்ந்து பார்த்தார். சேனை முதலியாருக்கு (விஷ்வக்சேனர்) அருள்பாலித்து "நீர் போய் இராமானுஜரை எதிர்கொண்டு அழைத்து வாரும்" என்று பெருமாள் சொல்ல, விஷ்வக்சேனரும் புறப்பட்டுச் சென்றார்.
இராமானுஜரும் முதல் முதலில் திருவரங்கம் வருகிறார் அல்லவா? ஆகாயத்தைப் பார்த்து, அங்கங்கு வளர்ந்திருக்கும் கோபுரங்கள், மாட மாளிகைகள் அனைத்தையும் பார்த்து பிரதட்சிணமாக வலம் வந்தார். அடுத்து உள்ளே இருக்கும் சித்திரைத் திருவீதி (ஏழாவது பிரகாரம்) அது தான் கடைசி பிரகாரம். திருவரங்கத்தில் மொத்தம் ஏழு பிரகாரங்கள். அந்த ஏழாவது பிரகாரத்திலுள்ள மாட மாளிகைகள், கோபுரங்களை சுவாமி இராமானுஜர் சேவித்துக் கொண்டார்.
திருமாலை கண்ட பெருமாளான தொண்டரடிப் பொடியாழ்வாரை தரிசித்து பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு சன்னிதியிலும் பிரதட்சிணம் செய்து வருகிறார் இராமானுஜர்.
இரண்டு பலிபீடம் திருவரங்கத்தில் சேவிக்கலாம். ஒன்று ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருக்கும் பலிபீடம். மற்றொன்று ஆரியபடால் வாசலுக்குள்ளே ஆஞ்சநேயர் சன்னதிக்கு கீழ் இருக்கும் பலிபீடம். அவற்றை எல்லாம் சேவித்துக் கொண்டார்.
மேட்டழகிய சிங்கப்பெருமாளை சேவித்துக் கொண்டு, ஸ்ரீரங்க நாச்சியாரைச் சேவித்துக் கொண்டு, ஸ்ரீ சந்திர புஷ்கரணியிலே தீர்த்த சுவீகரணம் பண்ணி, 'இங்கன்றோ பெரிய பெருமாளும், பிராட்டியும் பல நாட்களில் நீர் விளையாட்டு விளையாடியிருப்பார்கள்' என்று நினைத்து அதை சேவித்துக் கொண்டு, நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களை சேவித்துக் கொண்டு (சந்திர புஷ்கரணி அருகில் தான் ஆழ்வார்களின் மொத்தப் பிரதிஷ்டையும் உண்டு), அடுத்தாற்போலே கோதண்டராமர் சன்னிதி, அதற்கடுத்தாற்போலே ஆண்டாள், பரமபதநாதன், ஆழ்வார்கள் பதின்மர் அனைவரையும் சேவித்தார்.
அதன் பின் பிரணவாகாரமான திவ்ய விமானத்தையும் சேவித்தார்.
பிரணவாகார விமானம்தான் ஸ்ரீரங்கத்திற்கே உண்டான தனிச்சிறப்பு. பராசரபட்டர் இந்த பிரணவாகர விமானத்தைப் பற்றி சொல்கிறார், 'இந்த விமானத்திலிருந்து வரக்கூடிய ஒளி நம் கண்களில் இருக்கும் அழுக்கு அத்தனையும் போக்கிவிடும்'. இதிலுள்ளே தான் பெரிய பெருமாள் சயனித்திருக்கிறார். இந்த மண்டபத்திற்கே காயத்ரி மண்டபம் என்று பெயர். இந்த விமானத்திற்கு 'பிரணவாகார விமானம்' என்று பெயர்.
அதுவே ஸ்ரீ வைகுண்டம். இது ஸ்ரீரங்கம். வைகுண்டத்தில் ஓடுவது விரஜா நதி. இங்கே ஓடுவது காவிரி. வைகுண்டத்தில் இருப்பது பரவாசுதேவன். இங்கே ஸ்ரீரங்கத்தில் இருப்பது பெரிய பெருமாள். வைகுண்டத்தில் இருப்பது ஆயிரங்கால் மண்டபம். ஸ்ரீரங்கத்தில் இருப்பதும் ஆயிரங்கால் மண்டபம். இது எல்லாமே பூலோகத்திலும் இருப்பதால் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வைகுண்டமாக இருக்கிறது.
பிரணவத்தின் அர்த்தத்தை எல்லாருக்கும் தெரியும்படியாக பெரிய பெருமாள் உள்ளுக்குள்ளே எழுந்தருளியிருக்கிறார். பிரணவாகார விமானம் மேலே இருக்கிறது. ஓம் என்கிற அட்ஷர வடிவத்திலே இருக்கிற விமானம், அந்த விமானத்தை சேவித்துக் கொண்டார் இராமானுஜர். சேனை முதலியார், உற்சவர் அழகியமணவாளனையும் சேவித்துக் கொண்டார்.
திருக்கைத்தல சேவையுடன் பெரிய பெருமாள் இராமானுஜரை எதிர்கொள்வதும், இராமானுஜர் பெரிய பெருமாளைக் கண்டு தரிசிக்கும் நிகழ்வையும் நாளை அறியலாம்.
கே.355:− நம் உடையவருக்குப் பெரிய பெருமாளின் சேவையைப் பண்ணி வைத்தது யார்?
விடை:− நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளன்.
கே.356:− உடையவர் பெரிய பெருமாளை எவ்வாறு சேவித்தார்?
விடை:− நம்பெருமாள் பரிவுடன் அழைத்துச் சென்று சேவை பண்ணி வைக்க, நம்பெருமாளுடன் சென்று, கருவறையின் முன்புள்ள "ஆமோத ஸ்தம்பம்" என்னும் திருமணத் தூண்களின் அருகில் நின்று,
"தெண்ணீர்ப் பொன்னி தனது அலைக்கரங்களால் அடிவருட,
வன்பெரு வானகமுய்ய, அமரர் உய்ய, மண்ணுய்ய, மண்ணுலகில் மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றிலாத சுகம் வளர, அகமகிழும் தொண்டர் வாழ, அன்பொடு தென்திசையை நோக்கி அரவரசாம் ஆதிசேஷன் மீது ஆயுதமின்றித் திருப்பள்ளி கொண்டு, அறிதுயிலில் இருக்கும்" பெரிய பெருமாளாம், அணி அரங்கனாம், திருவரங்கனின்,
"திருக்கமல பாதம், அரைச் சிவந்த ஆடை, அயனைப் படைத்ததோர் எழில் உந்தி, திருவயிற்று உதரபந்தம், திருவார மார்பு, திருக்கண்டம், செய்யவாய், நீண்ட அப்பெரியவாய கண்கள், திருநீல மேனி" என்று திருவரங்கனைத் திருவடி முதல் திருமுடிவரை கண்குளிரத் திருப்பாணாழ்வாரைப் போலவே, "அமலனாதிபிரான்" படி சேவித்துப் பருகி,
"கடல் விளங்கு கருமேனியம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டுகந்து" கண்களில் நீர் பெருக்கினார்.
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என ஆழ்வார் சொன்னது எத்தனை உண்மை என உணர்ந்து அரங்கனை அணுஅணுவாகப் பருகினார்.
அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு
மணியே! மணிமா ணிக்கமே!மதுசூதா!
பணியா யெனக்குய் யும்வகை பரஞ்சோதீ!
...போன்ற ஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களையும், ஶ்ரீஆளவந்தாரின் திவ்ய ஸ்லோகங்களையும் சொல்லி நெகிழ்ந்துருகினார்.
பெரிய பெருமாளின் தீர்த்தம், திருப்பரிவட்டம், திருமாலை, சந்தனம், ஶ்ரீசடகோபம் எனப் பிரஸாதங்கள் பெற்று மகிழ்ந்தார்.
கே.357:− அதன்பின் பெரிய நம்பிகளிடம் உடையவர் இராமானுஜர் விண்ணப்பித்ததென்ன? அதற்குப் பெரிய நம்பிகள் கூறியதென்ன?
விடை:− அதன்பின் பெரிய நம்பிகளிடம் உடையவர் இராமானுஜர், "தேவரீரின் திருவடிகளே பொருளில்லா அடியேனையும் ஒரு பொருளாக்கி, இந்த ஐஸ்வர்யங்களைத் தந்தன" என வினயத்துடன் விண்ணப்பித்தார்.
அதற்குப் பெரிய நம்பிகள், "கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வாரால் "பவிஷ்யதாசார்ய"ராக அடையாளம் காட்டப் பெற்றவர் நீரே என்பது உறுதியாயிற்று.
"வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும்" என்பர். அதுபோலவே உலகை உய்விக்க வந்தவர் நீரே என அறிந்து கொண்டோம்" என்று கூறி மகிழ்ந்தார்.
கே.358:− திருவரங்கனின் நியமனப்படியும், வைணவ முதலிகள் அனைவரின் விருப்பப்படியும், ஶ்ரீஆளவந்தாருக்குப் பின்னர் உடையவர் இராமானுஜர் வைணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டபோது, அவருக்கு வயது என்ன?
விடை:− 33 வயது. (1050ம் ஆண்டு).
கே.359:− உடையவர் இராமானுஜர் திருவரங்கத் திருக்கோயில் நிர்வாகத்தை எங்கிருந்து மேற்கொண்டார்?
விடை:− திருவரங்கனின் நியமனப்படி, திருவிக்கிரமன் திருவீதியில் (உள்துறை வீதி என்னும் உத்திர வீதியில்) வடக்குப் பகுதியில், வடக்குக் கோபுரத்திற்கு எதிரே உள்ள சாலையை ஒட்டிக் கிழக்குப் பக்கம் உள்ள முதல் மனையான குலசேகராழ்வாரால் கட்டப்பெற்ற சேரன் மடத்திலிருந்து, திருவரங்கத் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொண்டார்.
கே.360:− உடையவர் திருவரங்கம் திருக்கோயிலை எவ்வாறு நிர்வாகம் செய்தார்?
விடை:− திருமாலை, சாத்துப்படி, அமுதுபடி, திருவிளக்கு, திருமதிள் திருப்பணி, திருநந்தவனம் போன்ற திருக்கோயில் பணிகளை எல்லாம் ஆராய்ந்து, உரிய திருத்தங்கள் செய்தார். உரிய பணிகளுக்கு, உரியவர்களை நியமித்தார்.
நிர்வாகிகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். திட்டமிட்டுச் செயலாற்றினார்.
ஆகமங்களில் உத்ஸவங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும், அவற்றை ஏற்படுத்தித் திருவரங்கனின் நித்ய, பட்ச, மாத, பிரம்ம, வஸந்த, பவித்ரோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி மகிழ்ந்தார்.
அன்று முதல் இன்று வரை, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக, உடையவர் நியமித்தபடியே, திருவரங்கத்தில் அனைத்து வழிபாட்டு முறைகளும் நடைபெற்று வருகின்றன என்பதே நம் உடையவரின் ஏற்றத்தைப் பறைசாற்றும்.
கே.361:− கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு எதிராசர் காஞ்சியிலிருந்து தமக்கு அனுப்பிய திருமுகம் (ஓலை) பெற்ற பெரிய திருமலை நம்பி என்ன செய்தார்?
விடை:− தாமே அக்காரியத்தைச் செய்ய எண்ணியிருந்த அவர், கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளல் அவ்வளவு எளிதான காரியமல்ல என அறிவார்.
ஆயினும், இராமானுஜர் திருவுள்ளம் பற்றிய செயல்கள் சித்திக்காது போகாது என்ற நம்பிக்கையோடு, திருமலையிலிருந்து காளஹஸ்தி வந்தார்.
கே.362:− அப்போது கோவிந்தன் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்?
விடை:− காளஹஸ்தியில் சிவபூஜைகள் செய்து அகமகிழ்ந்து கொண்டிருந்த கோவிந்தன், நீறு துலங்கும் நெற்றியோடு, கழுத்தில் ருத்ராட்ச மாலை தரித்து, சிவப்பழமாக, அதிகாலைப் பொழுதில் சில சிவனடியார்களோடு சிவ பூஜைக்கு வேண்டிய மலர்களைக் கொய்யும் பொருட்டு, பூக்குடலையுடன் ஸ்வர்ணமுகி நதிக்கரைக்கு வந்து கொண்டிருந்தார்.
கே.363:− அவர் வரும் வழியினை அறிந்த தாய்மாமன் பெரிய திருமலை நம்பிகள் செய்ததென்ன?
விடை:− அவர் வரும் வழியினை அறிந்த பெரிய திருமலை நம்பிகள், ஶ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு ஓலைச் சுவடியை கோவிந்தனின் கண்களில் படுமாறு நழுவ விட்டு, சற்றே ஒதுங்கிச் சென்றுவிட்டார்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏