ஆவணி
ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்.. அப்படியென்ன சிறப்பு ஆவணி மாதத்தில்?
🌟 ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனை தரும்.
ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் :
🌟 தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
🌟 'ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்" என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்யமாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.
🌟 ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை :
🌟 ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.
விநாயகர் சதுர்த்தி :
🌟 விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு ஆவணி மாதம் 06ஆம் தேதி (22.08.2020) சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.
ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு :
🌟 ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
🌟 விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.
🌟 இத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகி பூஜித்து அனைத்து நலன்களையும் பெறுவோம்.
🌹🙏🌹🙏
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020
ஆவணி மாதம்
சகாதேவன்
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக அதை பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறார்... பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார்.
மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்று விடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டு விரலை மட்டும் உடைத்து தின்று விடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது. விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அது மற்றவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டு விட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன், கண்ணா! எல்லோரும் விறகை சுமந்துவந்தார்கள். அவர்கள் களைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்? என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கி விடுகிறது.
சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கின்றான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்போதும் எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விட்டது. துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும் படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக்
குறித்து கொடுக்கின்றான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில் தான் கர்ணன் தன் உடன் பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடிய வில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கின்றான்.
18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா! ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா? என்று கேட்கிறார்.. ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன் பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால்
ஜோதிடம் பொய் தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னா பதிலை பாருங்கள்.
அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு
நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு
தூக்கிவாரிப் போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்க முடியும். மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே! இந்த ரகசியமானது காஞ்சி மஹா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது...
கணேச கவசம் பாடல் வரிகள்
கணேச கவசம் பாடல் வரிகள்
ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ
அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம 1
தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ
அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி 2
த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகே
த்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் ஈ
த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யே
து த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா 3
வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ
அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ 4
லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ
னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ 5
ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ
வாசம் வினாயகஃ பாது தம்தான் ரக்ஷது துர்முகஃ 6
ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ
கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ 7
ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ
ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் 8
தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ
லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ 9
கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான்
ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது 10
க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ
அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ 11
ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது
அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது 12
ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது
ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ 13
தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ
ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ 14
கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ
திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் 15
ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ
பாஶாம்கு
ஓம் வள்ளி தேவஸேனா ஸமேத சுப்பிரமணியனே போற்றி
ஓம் வள்ளி தேவஸேனா ஸமேத சுப்பிரமணியனே போற்றி
சகல சௌபாக்கியங்களும் தரும் முருகபெருமானின் 16 நாமங்கள்.
அனைத்தையும் அறிந்தவனும், எங்கும் நிறைந்தவனுமான ஓம் ஸுப்ரஹ்மண்யனை எப்போதும் அவர் திருபாதரவிந்தங்களை மனசில் நிறுத்தி நமஸ்கரித்து அவரை 16 நாமங்களால் துதிக்கின்றேன்.
1.ஜ்ஞானச'க்த்யாத்மா
( ஜ்ஞானம் என்னும் சக்தியை ஆன்மாவாக கொண்டவர்)
2. ஸ்கந்த:
( சத்தருக்களை அழிப்பவன்)
3. அக்னிபூ:
( அக்னியில் தோன்றியவர்)
4. பாஹுலேய:
( விரிந்த தோள்களை உடையவர்.)
5.காங்கேய:
( கங்கை நதியில் விடப்பட்டவர்)
6.ச'ரவணோத்பவ:
(சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டவர்)
7.கார்த்திகேய:
( கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்)
8. குமார:
( குழந்தையாய் இருப்பவர்)
9.ஷண்முக:
( ஆறுமுகம் உடையவர்)
10.குக்குடத்வஜ:
( சேவலை கொடியாக கொண்டவர்)
11.ச'க்திதர:
( சக்தியின் வேலை கரங்களில் ஏந்தியவர்)
12.குஹ:
( பக்தர்களின் இதயமென்னும் குகையில் வாழ்வர்)
13.ப்ரஹ்மசாரி:
( வேதஸ்வரூபன்)
14. ஷாண்மாதுர:
( ஆறு கார்த்திகை பெண்களைத் தாயாக அடைந்தவர்)
15. க்ரௌஞ்சபித்:
( கிரௌஞ்ச மலையாக நின்ற அசுரனை வேல் கொண்டு அழித்தவர்)
16. சி'கிவாஹன:
( மயிலை வாஹனமாக உடையவர்)
இந்த 16 நாமங்களிலேயே ( வள்ளி தேவஸேனா கல்யாணம் தவிர) ஸ்கந்த புராணத்திலுள்ள அனைத்து லீலைகளும் வந்துவிட்டதாகப் புரிகிறது. ஆக இந்த 16 நாமங்களை குட்டி கந்தபுராணம் என்று சொல்லலாம்.
இந்ந 16 நாமங்களை பக்தியுடன் கந்தனின் திருபாதரவிந்தங்களை மனசார நினைத்து பாராயணம் செய்தால் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்த சகலபலன்களும் கிடைக்கும்.
ஓம் சுப்பரமண்ணியம்
என் இனிய சிவகாலை வணக்கம்🙏
ஓம் மஹாசாஸ்தா தாஸன்
பா. சிவகணேசன்
ஓம் மஹாசாஸ்த்ரு பரபிர்ம்ம ஸ்தானம்
காடந்தேத்தி
க்ருஷ்ணாங்காரக சதுர்தசீ
க்ருஷ்ண பக்ஷம், செவ்வாய், சதுர்தசீ !!
புமான்கள் தர்ச தர்பணம் முடிந்த மேல், ஆயுஸ்ஸை ப்ரார்தித்து, யம ப்ரீதியாய் "யம தர்பணம் "
செய்ய வேண்டும் !!
ஸங்கல்பம் !!
க்ருஷ்ணாங்காரக சதுர்தசீ புண்ய காலே யம ப்ரீத்யர்த்தம் யம தர்பணம் கரிஷ்யே !!
1 ) யமாய நம :
யமம் தர்பயாமி !
2 ) தர்ம ராஜாய நம :
தர்ம ராஜம் தர்பயாமி !
3 ) ம்ருத்யவே நம:
ம்ருத்யும் தர்பயாமி
4 ) அந்தகாய நம :
அந்தகம் தர்பயாமி
5 ) வைவஸ்வதாய நம :
வைவஸ்வதம் தர்பயாமி
6 ) காலாய நம :
காலம் தர்பயாமி
7 ) ஸர்வ பூத க்ஷயாய நம :
ஸர்வ பூத க்ஷயம் தர்பயாமி
8 ) ஔதும்பராய நம :
ஔதும்பரம் தர்பயாமி
9 ) தத்னாய நம :
தத்னம் தர்பயாமி.
10 ) நீலாய நம :
நீலம் தர்பயாமி
11 )பரமேஷ்டினே நம :
பரமேஷ்டினம் தர்பயாமி
12 ) வ்ருகோதராய நம :
வ்ருகோதரம் தர்பயாமி
13 ) சித்ராய நம :
சித்ரம் தர்பயாமி
14 ) சித்ர குப்தாய நம :
சித்ர குப்தம் தர்பயாமி !!
அனேன தர்பணேன யம: ப்ரீயதாம் !!
இந்த அர்க்யத்தை,
உபநயனம் ஆன (ஜீவத் பித்ருகன்)
யாவரும், ஆயுஸ்ஸை உத்தேசித்து அனுஷ்டிக்கலாம் !
கிருஷ்ணாங்கார சதுர்தஶி
धर्मराज नमस्तेऽस्तु साक्षाद्धर्मस्वरूपिणे।
धर्मिष्ठ शान्तरूपाय सत्यरूप नमो नमः ।।
க்ருஷ்ணபக்ஷ சதுர்தஶியும் செவ்வாய் கிழமையும் ஒன்றாக சேரக்கூடிய நாளே க்ருஷ்ண-அங்கார- சதுர்தஶி என்பது.
க்ருஷ்ணாங்கார- சதுர்தஶி அன்று யமதர்ம ராஜாவுக்கு யம தர்பணம் செய்ய வேண்டும் இன்று யதாவிதியாக ஸ்னானம் முதற்கொண்டு ஸந்த்யாவந்தனாதி கார்யங்களை முடித்துக் கொண்டு
*கிருஷ்ணாங்கார சதுர்தஶீ மஹாபுண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே* என்று ஸங்கல்பம் செய்து கொண்டு யமாய தர்மராஜாய ம்ருத்யவே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி தர்பணம் செய்ய வேண்டும்.
*ஜீவத் பிதாபி குர்வீத தர்ப்பணம் யம பீஷ்மயோ:* என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்,
*ஶ்ரீ ஹரயேநம:
கிருஷ்ணா அங்காரக சதுர்தசி
கிருஷ்ணா அங்காரக சதுர்தசி இது கிருஷ்ண பக்ஷம், சதுர்தசி திதி செவ்வாய் =அங்காரகன். ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நாள்.
இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது. இன்று சமுத்ர ஸ்நானம் செய்வது
அனைத்து பாபங்களையும் போக்கும். வீட்டிலாவது காலையில் ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுக்லாம்பரதரம்+ஓம்பூஹு: மமோபாத்த ஸமஸ்த துரிதயக்க்ஷயத்வார ஶ்ரீ
பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் க்ருஷ்ண அங்காரக புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட 14 தர்பணங்கள் செய்வதால் அனைத்து பாபங்களும் யம பயமும் விலகி நன்மை உண்டாகும்.
உபவீதி. பூணல் எப்போதும் போல் அப்படியே இருக்கட்டும். எள்ளு அக்ஷதை எதுவும் வேண்டாம். பஞ்சாத்ர உத்ரிணியால் தண்ணீர் எடுத்து அர்க்யம் விட்டால் போதும்.விரல் நுனி வழியாக தண்ணிர் தாம்பாளத்தில் விட்டால் போதும்.
1. யமம் தர்பயாமி.
2. தர்மராஜம் தர்பயாமி.
3. ம்ருத்யும் தர்பயாமி.
4. அந்தகம் தர்பயாமி.
5. வைவஸ்வதம் தர்பயாமி.
6. காலம் தர்பயாமி.
7. சர்வபூத க்ஷயம் தர்பயாமி.
8. ஒளதும்பரம் தர்பயாமி. 9. தத்நம் தர்பயாமி.10.நீலம்
தர்பயாமி.
11. பரமேஷ்டிநம் தர்பயாமி.
12. வ்ருகோதரம் தர்பயாமி.
13. சித்ரம் தர்பயாமி.
14 சித்ர குப்தம் தர்பயாமி.
பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி தெற்கு திசை நோக்கி நின்று கொண்டு யம தர்ம ராஜாவை ப்ரார்தித்து கொள்ள வேண்டும்..
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால;
ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரீ க்ருதாந்த ஏதத் தசக்ருஜ் ஜபந்தி.
நீல பர்வத ஸங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே.
கருப்பு மலை போன்ற உருவத்துடன் காக்ஷி அளிப்பவரும், சிவனின் கோபத்தால் தோன்றியவரும், கால தண்டத்தை கையில் தரித்திருப்பவரும் வைவஸ்வதனின்=(ஸூரியனின்) புத்ரருமான ஹே ஶ்ரீ மன் யம தர்ம ராஜ உனக்கு நமஸ்காரம்…
இதனால் அகால மரணம் சம்பவிக்காது. பாபங்கள் விலகும். யம பயம் விலகும். அனைத்து வியாதிகளும் விலகும்.
கிருஷ்ணா அங்காரக சதுற்தசி இந்த நாள் சூர்ய கிரஹணத்திற்கு சமமானது.
பகலில் கணபதி, பஞ்சாக்ஷரம்,
அஷ்டாக்ஷரம் முதலிய ஜபங்களும்,
அஸ்தமித்த பிறகு சாக்த ஜபங்கள் மிகவும் விசேஷம்.
ஸ்ரீவித்யா உபாஸகர்களுக்கு இந்த தினம் வரப்ரஸாதம்.மந்தர ஸித்திக்கு உகந்த நாள் சூர்ய க்ரஹண்திற்கு சமம்.
தர்ம ரக்ஷண சமிதியின் தர்ம நெறி
யமனை வேண்டி யாராவது தவம் இருப்பார்களா இருந்தான் ஒருவன்.
யமனுடைய வாகனமான எருமை மாட்டை நோக்கி தன் தவத்தினைத் தொடங்கி னான் அவன்.
1508-ஆம் ஆண்டு பீரப்பா என்னும் இடையருக் கும் பச்சம்மா என்கிற பெண்மணிக்கும் பிறந்த குழந்தையான திம்மப்பாதான் யமனை வணங்கி முக்தி பெற்றவன்.
இடையர் குலத்தில் பிறந்து மாடு மேய்க் கும் தொழிலைச் செய்து வந்தாலும் இறை பக்தி மிகுந்தவனாக விளங்கி வந்தான் திம்மப் பன்.
அவன் பிறந்த ஊரில் மிகப் பிரசித்தமான ஒரு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருந்தது.
தினமும் ஆதிகேசவப் பெருமாளை காலையும் மாலையும் தரிசிக்காவிட்டால் தூக்கம் வராது திம்மப்பனுக்கு.
ஒரு நாள் பெருமாள் அவன் கனவில் தோன்றி, ""திம்மப்பா... நீ எப்போது என்னுடைய அடிமையாகப் போகிறாய்?'' என்று கேட்டார்.
""நான் இப்போதே உங்கள் அடிமைதானே சுவாமி'' என்றான் திம்மப்பன்.
""போதாது திம்மப்பா. நீ எனக்கு அடியவ னாகி நிறைய பக்திப் பாடல்கள் பாட வேண்டும்'' என்றார் பெருமாள்.
திடுக்கிட்டு எழுந்தான் திம்மப்பன்.
"என்ன இது... சாதாரண இடையர் குலத்தில் பிறந்த நான் பாட்டெழுதுவதா? அது எப்படி சாத்தியம்' என்று யோசித்தான்.
மற்றொரு நாளும் கனவில் வந்த கடவுள், ""என்ன திம்மப்பா... எப்போது பாடப் போகிறாய்?'' என்றார்.
சுவாமி ஏதாவது ஒரு குருவிடம் மந்திரோபதேசம் கிடைக்காமல் நான் பாட்டெழுதி தங்கள் தாசனாக முடியுமா?''
முடியும். மதனபள்ளி அருகே ஸ்ரீ வியாச ராஜர் வந்திருக்கிறார். அவரைப் போய் தரிசனம் செய். அவர் உனக்கு மந்திரோபதேசம் செய்வார்'' என்றார் பெருமாள்.
மறுநாளே மதனபள்ளி சென்று ஸ்ரீ வியாச ராஜரின் முன் நின்றான் திம்மப்பன்.
""யாரப்பா நீ?'' -வியாசராஜர் கேட்டார்.
""சுவாமி! என் பெயர் திம்மப்பன். ஒரு சமயம் பூமியைத் தோண்டும்போது எனக்கு நிறைய பொன் கிடைத்தது.
அதை அப்படியே எங்கள் ஊர் கோவிலுக்குக் கொடுத்து விட்டேன்.
அதனால் என்னை கனகன் (கனகம்-பொன்) என்றும் அழைப்பார்கள்.''
""என்ன வேண்டும் உனக்கு?''
""தாங்கள் எனக்கு மந்திரோபதேசம் செய்ய வேண்டும் சுவாமி.''
""என்ன தொழில் செய்கிறாய் கனகா?''
""மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி.''
வியாசராஜர் பெரிதாகச் சிரித்தார்.
""இடையனுக்கு என்ன மந்திரம் சொல்லித் தருவது. உனக்கு எருமை மாடுதான் மந்திரம்'' என்று அவர் கிண்டலாகச் சொல்ல,
"எருமை மாடுதான் மந்திரம்' என்று நினைத்துச் சென்றுவிட்டான் திம்மப்பன்.
ஒரு மரத்தடியில் அமர்ந்து, "எருமை... எருமை' என்று ஜபம் செய்ய ஆரம்பித்தான் கனகன்.
பல நாட்கள் கழித்து, அவன் எதிரே வந்து நின்ற பிரம்மாண்டமான எருமை ஒன்று பெருங் குரலெடுத்து, "கனகா' என்று கூப்பிட்டது.
யமனின் வாகனம் அது.
வியப்படைந்த கனகன் நேராக வியாசராஜரிடம் சென்று சொல்ல, அவரும் வியப்புற்றார்.
"இவன் ஏதோ விளையாட்டுத் தனமாகப் பேசுகிறான்' என்று நினைத்தார்.
""கனகா... மிகவும் சந்தோஷம். நான் ஊருக்கு வெளியே மக்களுக்காக ஒரு பெரிய ஏரியை உருவாக்கி கரையை உயர்த்திக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதன் ஒரு மூலை பள்ளமாக இருக்கிறது. அதன் அருகிலேயே நூறு மனிதர்கள் சேர்ந்தாலும் தள்ள முடியாத சில பாறைகள் இருக்கின்றன.
உன் எருமை மாட்டால் அந்தப் பாறைகளைத் தள்ளிப் பள்ளத்தை மூட முடியுமா என்று கேள்'' என்று சொல்லி கனகனை அனுப்பி விட்டார் வியாசராஜர்.
ஒருசில மணி நேரங்களில் மீண்டும் ஓடி வந்த கனகன் பள்ளத்தை மூடிவிட்டதாக வியாச ராஜரிடம் சொன்னான்.
ஸ்ரீசுவாமிகள் திடுக்கிட்டார். "என்ன இது... இவன் புதுக் கரடி விடுகிறானே' என்று சந்தேகித்து, ஏரிக்கரையை அடைந்த வியாசராஜர் பிரமித்து நின்றார்.
""இவன் சாதாரண இடைக்குல கனகன் இல்லை; இவன் ஒரு மகத்தான மனிதன்; தேவ புருஷன்'' என்று சொல்லி, கனகனை ஆசீர் வதித்து தன்னுடைய சீடனாக்கிக் கொண்டார் வியாசராஜர்.
அன்று முதல் அவனுக்கு கனகதாசர் என்று பெயரிட்டு, அரசவையில் தன் பக்கத்தில் வைத் துக் கொண்டார்.
அவருடைய இன்னொரு பக்கத்தில் கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று சொல்லப்பட்ட புரந்தரதாசரையும் அமர வைத்து, கிருஷ்ண தேவராயரிடம் கனக தாசரின் பெருமையையும் கூறினார்.
ஆனால் அவையிலிருந்த பல வேத பண்டிதர் களும் அறிஞர்களும் வல்லுநர்களும் வியாசரா ஜர் தன் பக்கத்தில் இடைக் குலத்தவனான கனக தாசரை அமர வைத்துக் கொண்டதில் பொறா மைப்பட்டனர்.
ஆனால் ஸ்ரீ வியாசராஜரோ கனகதாசரின் அறிவை வெளியே கொண்டு வரவும், அவர் புகழைப் பரப்பவும் பல விந்தை களைச் செய்து காட்டினார்.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரச வையில் ஒரு விவாதம் நடந்தது.
"யார் மோட்சத் திற்குச் செல்வார்கள்?' என்னும் கேள்வியே அது.
வியாசராஜர் பண்டிதர்களைப் பார்த்து, ""உங்கள் தகுதியை நன்றாகக் கணித்து உங்களில் யார் மோட்சம் செல்வீர்கள் என்று சொல்லுங்கள்'' என்றார்.
யாராலும் பதில் சொல்ல முடிய வில்லை.
உடனே, ""கனகா. யாருமே மோட்சம் போக மாட்டார்கள் போலிருக்கிறதே? இவ்வளவு தான தருமம் செய்த மன்னரே பதில் சொல்ல வில்லையே. நீயாவது மோட்சம் போவாயா?'' என்று கேட்டார்.
உடனே கனகதாசர், ""நான் போனால் போவேன்'' என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட மன்னர் உட்பட அனைவருமே கோபப்பட்டனர்.
""என்ன திமிர் இவனுக்கு?'' என்று சத்தம் போட்டார்கள்.
ஆனால் வியாசராஜரோ, ""அதெப்படி கனகா? இந்த அவையினர் அனைவரும் இந்த வினாவிற்கு விடை சொல்லாமல் அமைதியாக இருக்க, நீ மட்டும் "நான் போனால் போவேன்' என்கிறாயே? என்றார்.
கனகதாசர் சற்றும் தாமதிக்காமல்,
நான் என்கிற அகந்தை போனால் அனைவருமே மோட்சம் போகலாமே சுவாமி?
அந்த நான் எனும் அகங்காரம்தானே மனிதனை நரகத்திற் குத் தள்ளுகிறது?'' என்றார்.
அவை கனகதாசரைப் பாராட்டியது.
இப்படிப் பல பரீட்சைகளில் தேறிய கனக தாசர், கடைசியாக உடுப்பி சென்றார்.
அங்கே உள்ள பட்டர்கள் இவர் இடைக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலினுள் விட மறுத்தனர்.
உடனே மேற்குப்புறம் சென்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனின்மீது ஒரு பாடலைப் பாட,
கோவிலின் மேற்குப்புறச் சுவர் உடைந்து, கிழக்கே சிலையாக நின்று கொண்டிருந்த பரமாத்மா மேற்குப் புறமாகத் திரும்பி நின்று கனகதாசருக்குக் காட்சியளித்தார்.
உடுப்பியில் பல காலம் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களை கிருஷ்ணனின்மீதும் தனது ஊர் ஆதிகேசவப் பெருமாள்மீதும் பாடிப் புகழ் பெற்றார் கனகதாசர்.
இன்றும் அவர் சாகித்தியங்கள் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.
கடைசியில் திருப்பதி வேங்கடாசலபதியையும் தரிசித்து தன் சொந்த ஊரான காகிநெலெ சென்று 98 ஆண்டுகள் வாழ்ந்து, பாகவதோத்த மராகத் திகழ்ந்து பரமபதம் அடைந்தார். (கி.பி. 1606-ல்).
யமனின் வாகனம்மீது அவர் செய்த தவம், யமனைக் குறித்தே செய்த தவமாகி அவருக்கு நீண்ட ஆயுளையும் புகழையும் கொடுத்தது.
மீண்டும் நல்லதொரு தகவலுடன் உங்களை சந்திக்க வரும் *தர்ம ரக்ஷண ஸமிதியின் தர்ம நெறி 142*
ஸ்ரீமத் பாகவதம் என்றால் என்ன
ஸ்ரீமத் பாகவதம் என்றால் என்ன?
ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள்.
எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம் ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும்போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அதுபோலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
அருமையான கதை
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில்., பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர்., "எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை..!" என்றபடியே இருப்பார்.
ஒருநாள்..! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும்., ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' கேட்டார் சந்நியாசி.
''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா., வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப., எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்..!'' என்றார் ஆசாமி.
சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.
ஆண்டுகள் ஓடின..!
ஒருநாள்... மீண்டும் கோயிலுக்கு வந்தார் சந்நியாசி..! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி..!
''எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா., இன்னும் அதற்கான வேளை வரலை'' அதே புலம்பல்... சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி., ''சரி... இப்பவாவது புறப்படேன்..!'' என்றார். ''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. என் கவலையெல்லாம் தீர்ந்துடும்..!'' என்று விவரித்தார் நம்ம ஆள்..!
மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு., சந்நியாசி வந்தார். ''எனக்கு ஆசையே இல்லை.....'' வழக்கம்போல் கேட்டது குரல்..!
''இப்போதாவது வருகிறாயா..?'' இது சந்நியாசி.
''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்'' பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.
மேலும் ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால்., அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.
கடையில் இருந்தவர்., ''சாமி... எங்க அப்பாதான் அவரு. "எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு., போன வருஷம் ஒருநாள்..... நெஞ்சு வலின்னவரு., பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா., நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...'' கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.
இதைக் கேட்ட சந்நியாசி., ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன..?''
''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு..!''
''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.
அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார். உடனே அது., ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது. ''அடேய்... என்னோட வந்துடறியா..?'' சந்நியாசி கேட்டார்.
''சாமி..! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க. கடையை சரியா பூட்டாமே போயிடறாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்..!'' இப்படி நாய் சொன்னதும்., 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி. பிறகு அவர் சொன்னார் ''அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்..?''
இன்றைக்கு ஆலயங்களைத் தேடிப் போகிற அன்பர்கள்., முதலில்... அறியாமை சுகத்திலிருந்து விடுபட வேண்டும்...
பிறகு, "ஆன்மிக" சுகத்தை அடையாளம் காண வேண்டும்..!!
ஆலயதரிசனம்
ஆலயதரிசனம்..
மதுரகாளி திருக்கோயில் சிறுவாச்சூர்...
1. வீர பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.
2. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
3. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் கோயில் திறக்கப்படுகிறது; மற்ற நாட்களில் கோயில் திறக்க மாட்டார்கள்.
4. .சிறுவாச்சூரின் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும், மந்திரவாதி ஒருவன் தனது மந்திர வலிமையால் அம்மனைக் கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்தான்
5. மதுரை காளியம்மன் ஸ்தலத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மன் தன்னை மந்திர வலிமையால் தொல்லை தரும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.
6. மதுரை காளியம்மன் அதற்கு தக்க வழி செய்வதாக கூறி தங்குகிறாள். இரவு மந்திரவாதியை அழித்து, செல்லியம்மனை மந்திர வலிமையில் இருந்து விடுவிக்கிறாள்.
7. செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அன்னையே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள்.
8. தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும்
வரம் கேட்கிறாள்.
9. மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்ந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
10. செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை முதலில் மலை நோக்கி மேலே காட்டி விட்ட பிறகு மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
11. சிறுவாச்சூருக்கு வெள்ளிக் கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவே திங்கள், வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும்.
12. மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
13. இத்தலத்தில் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்பது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும்.
14. வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று வேண்டிக் கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
15. வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்கிறார்கள்.
16. பின்பு அதனுடன் நெய்விளக்கு ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.
17. இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர்.
18. இவை தவிர அங்கபிரதட்ணம் செய்வதும், பாலாபிசேகம், அன்னதானம் ஆகியவற்றையும் பக்தர்கள் செய்கிறார்கள்.
19. மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.
20. அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.
21. நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த இருக்கிறாள்.
22. அம்மன் திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை, பக்தர்களுக்கு அருளும் நிலையில்காட்சி தருகிறாள்.
23. தீராத நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.
24. ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், பின் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.
25. இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிகுதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
26. குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையில் திருக்கோயில் அமைந்துள்ளது.
27. எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது. அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், தலத்தின் காவல் தெய்வாமாக அய்யனார் உள்ளார்.
28. குலதெய்வமாக வழிபடுவோ பக்தர்கள் பொங்கள் வைத்து வேண்டிக் கொள்கின்றனர்.
29. திங்கள் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.
30. ஆலய முகவரி அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.